அரசு இயந்திரம்!

நான் ஒரு கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன்னு வச்சிக்கோங்க!
அதுக்கு 5 லட்சம் முதல் போட்டு சரக்கு(அந்த சரக்கு இல்ல) வாங்கி வச்சிருக்கேன். ஒரு இடத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து கடய போட்டாச்சு!. எல்லா வேலையும் நாமளே செய்ய முடியுமா,அதனால நாலு பேர்த்த வேலைக்கு சேர்த்தாச்சு! வியாபாரம் ஆனாலும் ஆகாட்டியும் மாசமாசம் வாடகையும், சம்பளமும் கொடுத்தாகனும். அப்படி இப்படி அதுக்கே மாசம் 20000 ஆகுதுன்னு வச்சிகோங்க. மாசம் ஒரு லட்சத்துக்கு வியாபாரம் ஆனாத்தான் அதை எடுக்க முடியும். மேல நான் போட்டிருக்கும் முதல் 5 லட்சத்துக்கு வட்டி கட்ட இன்னொரு பத்தாயிரம் வேணும்.

ஆக மொத்தம் முப்பதாயிரம். அதுக்கு ஒன்னரை லட்சத்துக்கு வியாபாரம் ஆகனும். முதல் மாசம் என்பதாயிரத்துக்கு ஆச்சு. இரண்டாவது மாசம் ஒரு லட்சத்துக்கு, ஆனாலும் பாருங்க மாசம் 30 ஆயிரம் எனக்கு கட்டாய செலவு இருக்கு. அதனால மேலும் கைகாசு போட்டு சமாளிச்சாச்சு. ஒரு ஆறு மாசமோ, ஒரு வருசமோ கழிச்சு வியாபாரம் சூடு பிடிக்கும்னு நம்பிக்கையில மேலும் மேலும் காசு போட்டு முதலே 6 லட்சமாச்சு.

இதுல எனக்கு மாதம் ரெண்டு லட்சம் வியாபாரம் ஆச்சுன்னு லாபமும் கிடைக்கும்,கடனும் அடைக்கலாம். ஒருவேளை வியாபாரம் படுத்துடுச்சுனா கம்பேனிய இழுத்து சாத்திட்டு தலையில துண்ட போட்டுகிட்டு இருக்குற சரக்க வச்சு கொஞ்சம் கடனையும் அடைச்சிகிட்டு, மேலும் இருக்குற கடனை அடைக்க மம்பட்டிய தூக்கிகிட்டு வயகாட்டுக்கு போக வேண்டியது தான். இத முதல்லயே செஞ்சிருக்கலாம்னு சொல்றிங்கள! எப்பவும் நமக்கு பட்டா தானே புத்தி வரும்.
**********************

இது அடுத்த மேட்டர்.

ஒரு வங்கி ஒன்னு ஆரம்பிக்கலாம். கொஞ்சம் பெருசா பிஸ்னஸ் பண்ண பெருசா ஒரு இடத்த பிடிச்சு, நல்லா அலங்காரம் பண்ணி நிறைய படிச்சவங்களை வேலைக்கு வச்சி கடய நடத்தனும். மக்கள் தர்ர பணத்துக்கு கொஞ்சமா வட்டி கொடுத்து, நம்மகிட்ட மக்கள் வாங்குற பணத்துக்கு அதை விட அதிகமா வட்டி வாங்கி தான் கடய நடத்த முடியும். இதுவும் அதே மாதிரி தான். என்னா தான் லாபம் குறைவா வந்தாலும் மாசாமாசம் இருக்குற செலவு இருந்துகிட்டே இருக்கும்.

இப்ப நாம கடன் கொடுதவங்க திரும்ப பணம் தரலைன்னா கம்பேனி திவால் தான்.
நம்மகிட்ட பணம் கொடுத்தவங்களுக்கு பணத்துக்கு பதிலா அல்வா கொடுத்துட்டு வடநாட்டு பக்கம் ஓடிட வேண்டியது(அவனுங்க அங்க அல்வா கொடுத்துட்டு இங்க வர்ர மாதிரி).
இங்கவே இம்புட்டு பிரச்சனை இருக்கும் போது, நாம கொடுத்த கடனை தள்ளுபடி பண்ணினா என்ன செய்வது. அந்த பணத்தையாவது கொடுங்கடான்னு அரசை கேட்டா அஞ்சா பிரிச்சு தருவாங்களாம். அதுவும் அவங்க நினைக்கும் போது தான். அது வரைக்கும் வேலை செய்யுறவங்களுக்கு சம்பளம் கடன் வாங்கி தான் தரணும். இத இன்னும் விலாவரியா சொல்ல ஒரு ப்ளாக்கர் இருக்காரு, ஆனா வெளியே சொன்ன அவரு டவுசர உருவீருவாங்கன்னு கெட்டியா புடிச்சிகிட்டு இருக்காரு.
**********************

இது இன்னோரு மேட்டர். ஆனா இது தான் மெயின்.

அரசுன்னு ஒன்னு இருக்கு. இல்லைன்னு சொன்னிங்கன்னா இறையாண்மை,சொறியாண்மைன்னு சொல்லி உள்ளே தூக்கி போட்டுவாங்க அதனால ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு போயிருவோம்.
அரசும் ஒரு கம்பேனி மாதிரி தான்.(உதாரணம்:தமிழ்நாடு). அதுல என்ன பண்ணுவாங்கன்னா பலனடைபவர்கள், அடையாதவர்கள்னு பாகுபாடு பாக்காம எல்லாரிடத்திலும் வரி வசூல் பண்ணுவாங்க.

பல வகையில! நாம கஷ்டபட்டு வேலை செஞ்சு வாங்குற சம்பளத்துல ஒரு பங்கு வரி கொடுக்கணும், வாய கட்டி வயத்த கட்டி ஒரு கடய வச்சு பத்து வட்டிக்கு கடன வாங்கி போட்டு கஷ்டப்பட்டு எதோ நாலு காசு பார்த்தோம்னா அதுலையும் ஒரு பங்கு வரி. வண்டி வாங்குனா ரோட்டு வரி ஆனா பாருங்க இப்போ போட்டுகிட்டு இருக்குற ரோட்டுகெல்லாம் டோல்கேட் போட்டு வரி வசூல் பண்ணுவாங்களாம். நாம கட்டின ரோட்டு வரி எங்கே போச்சுன்னு கேள்வி கேட்டால் நாடு கடத்தபடலாம்.

இந்த நாட்டுல வரி கட்டாத மனிதர்களே கிடையாது. நாம வாங்குற தீப்பெட்டி வரைக்கும் நம்ம வரி அரசுக்கு போகுது. என்னை மாதிரி ஆளுங்க டாஸ்மார்க் மூலியமா ஆயிரகணக்குல வரி கட்டுறோம்.(60%வரி சரக்குக்கு). நம்ம பணம் தொலைக்காட்சி ஆகுதோ, சுவீஸ் பேங்கு போகுதோ அத பத்தி நினைக்க நமக்கு நேரமும் இல்லை,சொரணையும் இல்லை.
சரி அத விடுங்க மேட்டருக்கு போவோம்.

எந்த ஒரு நிறுவனமும் லாபம் வரலைன்னா திவால் ஆகிறும்னு படிக்காத எனக்கே தெரியுது,
ஆனா ஆண்டு கணக்கா துண்டு விழாத பட்ஜெட் போட முடியாத நம்ம நாடு உண்மையில திவாலாயிருச்சா? இல்லை மேல துண்ட போட்டு கீழ நம்ம பணத்தை லவட்டிட்டு போறானுங்களா?

ஒன்னுமே புரியலையே!

74 வாங்கிகட்டி கொண்டது:

Thamiz Priyan said...

வாங்கிக் கடிக்க ஆசைப்படுறீங்க... ஆனா தூரமா இருக்கனால முடியல..

Kumky said...

என்னய்யா உசாரா கீறாங்க..

Anonymous said...

நாங்களும் முதல் போட்டு தாம்பா இங்கே இருக்கோம்.லாபம் பார்க்க வேணாமா!

Anonymous said...

பல ஆண்டுகளாக உழைத்த் உருவாக்கியது எங்கள் தி.மு.க நிறுவனம். அதனால் உங்கள் பணத்தை எங்கள் பெயரில் வங்கியில் போட எங்களுக்கு உரிமையுண்டு

மங்களூர் சிவா said...

/
1.
எப்பவும் நமக்கு பட்டா தானே புத்தி வரும்.
/
well said

மங்களூர் சிவா said...

2. அட அந்த ப்ளாகர் கமெண்ட் போட்டிருக்காரே!!

Anonymous said...

சொன்ற முறை சரியாக லாபம் பார்க்கமுடியவில்லை. அதனால் இம்முறை எனக்கு ஓட்டு போட்டு நிறைய சம்பாரிக்க உதவி செய்யுங்கள்
என்று கேட்டு கொள்கிறேன்.

மங்களூர் சிவா said...

/
ஆனா ஆண்டு கணக்கா துண்டு விழாத பட்ஜெட் போட முடியாத நம்ம நாடு உண்மையில திவாலாயிருச்சா? இல்லை மேல துண்ட போட்டு கீழ நம்ம பணத்தை லவட்டிட்டு போறானுங்களா?
/

இரண்டாவது பாதிதான் பதில்னு நினைக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

ஹம்ம்ம்ம் நோ கமெண்ட்ஸ்....

Anonymous said...

அஞ்சு வருசம் காத்து கெடந்து கண்மனிகளையெல்லாம் காப்பாத்தி ஆட்சிய புடிக்கறது எதுக்குப்பா தம்பி..?
கம்பேனிக்கு ஒரு கத கட்சிக்கு ஒரு கய்தயா சே கதயா..?

Kumky said...
This comment has been removed by the author.
Maximum India said...

//எந்த ஒரு நிறுவனமும் லாபம் வரலைன்னா திவால் ஆகிறும்னு படிக்காத எனக்கே தெரியுது,
ஆனா ஆண்டு கணக்கா துண்டு விழாத பட்ஜெட் போட முடியாத நம்ம நாடு உண்மையில திவாலாயிருச்சா? இல்லை மேல துண்ட போட்டு கீழ நம்ம பணத்தை லவட்டிட்டு போறானுங்களா?//

வருடா வருடம் துண்டு பட்ஜெட் போடும் நமது ௦மத்திய அரசின் மொத்த கடன் தொகை, 2007 ஆம் ஆண்டு நிலவரப் படி, சுமார் இருபத்தைந்து லட்சம் கோடி. இதில் வெளிநாட்டு கடன் மட்டும் சுமார் ஏழரை லட்சம் கோடி. மாநில அரசுகளையும் சேர்த்தால், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 75 சதவீதம் கடன் தொகையாக உள்ளது. ஒவ்வொரு இந்தியனின் தலை மேலும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் கடன் தொகை இருக்கிறது.

ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கடன்தான் (அல்லது அந்நிய செலவாணி பற்றாக்குறை) அந்த நாட்டை திவாலாக்கும். ஒரு நாட்டின் தேசிய செலவாணி தன் மதிப்பை இழந்தால் அந்த நாடு திவாலான நாடு என அழைக்கப் படும். சமீப காலத்தில் ஐஸ்லாந்து "திவால் ஆன நாடு" என்று அழைக்கப் பட்டது நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அந்த வகையில் உடனடியாக இந்தியா திவால் ஆக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இதே (பொறுப்பற்ற) ரீதியில் தொடர்ந்து போனால், ஒரு நாள், நம் நாடும் திவால் என்று அழைக்கப் படலாம்.

பணப் பற்றாக்குறையை ஒரு அரசு கடன் வாங்கியோ அல்லது கரன்சி நோட்டுக்கள் அடித்தோ சரி செய்து கொள்கிறது. இந்த வகை "துண்டுகள்" மக்களின் மீது சாத்தப் படும் "துண்டுகள்தான்" என்று ஒரு தனிப் பதிவே போட்டிருக்கிறேன். பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். (மக்களின் மீது மறைமுக வரி விதிப்பு ? - http://sandhainilavaram.blogspot.com/2009/02/blog-post_17.ஹ்த்ம்ல்)

நன்றி.

Anonymous said...

ம்.. இப்ப என்னாங்குர நீயி...
கம்பேனி வச்சவனெல்லாம் கணக்கு வழக்கெல்லாம் பாத்து நன்னா சம்பாதிச்சுண்டுடலாம்.
ஆனா கட்சி நடத்தறவா எல்லாம் தலைலே துண்டு போட்டுண்டு போயிடனும்றேளா..?

Anonymous said...

இந்தியா கேள்வி பட்டுருக்கேன்.
அதென்ன மேக்ஸிமம் இந்தியா...
அப்டின்னா மினிமம் இந்தியா
லார்ஜ் இந்தியாவெல்லாம் கீதா வாழ்ழு..?
பாவம் புள்ளிவிபரமெல்லாம் கஷ்டப்பட்டு சொல்லிகீறாரு...
அய்ஸ்லாந்து திவாலாகிருச்சாமே தெரியலயே..ஷேர் போட்டு வாங்கி வுடலாமா..வாழு..

Anonymous said...

பருணாநிதி said...

பல ஆண்டுகளாக உழைத்த் உருவாக்கியது எங்கள் தி.மு.க நிறுவனம். அதனால் உங்கள் பணத்தை எங்கள் பெயரில் வங்கியில் போட எங்களுக்கு உரிமையுண்டு.

அதெப்பிடி ஒருத்தர் பேர்லயே போடலாம்...திரும்ப ராசா ஸ்பெக்ட் ரம் வித்த கதய எடுத்து உட்டு போடுவோம். கைல டி வி கீது பேப்பர் கீது ..என்னவோனா காமிப்போம் என்னவோனா எலுதுவோம் அல்லா டமில் பீப்பிலையும் கொழப்பிவுட்ருவோம் சாக்கிறத...எலீசன் வேற வர்து கண்டுக்க தாத்தோவ்..

Anonymous said...

ஏய் வால் பையா..இதுக்கோசரம் ரொம்ப பீல் பன்னபோற நீயி..
உண்மைய சொல்லி அல்லார் கிட்டேயும் நல்ல பேர் எடுக்க முயற்ச்சி பண்றயா...வுடமாட்டேன் உன்னிய..

அப்துல்மாலிக் said...

//ஒன்னுமே புரியலையே!
//

அதாங்க நானும் கேக்குறேன் ஒன்னுமே புரியல இந்த நாட்டுலே இன்னா நடக்குதுனு

அப்துல்மாலிக் said...

//நம்ம பணம் தொலைக்காட்சி ஆகுதோ, சுவீஸ் பேங்கு போகுதோ அத பத்தி நினைக்க நமக்கு நேரமும் இல்லை,சொரணையும் இல்லை.
//

யோசிக்கவேண்டியது
கலக்கல் தல‌

Maximum India said...

அண்ணே மொம்பானின்னே!

//இந்தியா கேள்வி பட்டுருக்கேன்.
அதென்ன மேக்ஸிமம் இந்தியா...
அப்டின்னா மினிமம் இந்தியா
லார்ஜ் இந்தியாவெல்லாம் கீதா வாழ்ழு..?//

நான் நிறைய யோசிக்கரவனல்லாம் இல்ல. ஏதோ தோணிச்சு. பேரா வச்சுக்கிட்டேன். உங்க ஆட்டத்துக்குள்ளே என்ன இழுக்காதீங்கன்னே!

//பாவம் புள்ளிவிபரமெல்லாம் கஷ்டப்பட்டு சொல்லிகீறாரு...//

புள்ளி விவரம் சொல்லியிருக்கேன். சரிதான். ஆனா இதுக்கெல்லாம் எந்த கஷ்டமும் (தமிழ்ல டைப் அடிக்க வேண்டிய கஷ்டத்தைத் தவிர) படலீங்கண்ணே! தூக்கத்துல எழுப்பி விட்டாலும் இதெல்லாம் சொல்ல வேண்டிய வேலையிலதான் இருக்கண்ணே!

//அய்ஸ்லாந்து திவாலாகிருச்சாமே தெரியலயே.ஷேர் போட்டு வாங்கி வுடலாமா..வாழு.. //

நீங்க கொலையன்ஸ் பவர்ன்னு ஒரு ஷேர ஏற்கனவே உட்டு அந்த வலியில இருந்து மக்கள்ளெல்லாம் இன்னும் விடுபடல. அதுக்குல்லாரே நீங்க வேற ஐஸ்லாந்து அப்படி இப்படின்னு புது ஷேரல்லாம் உடாதீங்கன்னே. :)

kishore said...

அட விடுங்கபா சின்ன பையன் எதோ ஆதங்கத்துல எழுதிட்டாரு அதுக்கு போய் அவர திட்டிக்கிட்டு.. அட அடிக்காதிங்க விடுங்க சார்... வால்பையன் இங்க வாங்க என்ன பிரச்சனை உங்களுக்கு? ஆபீஸ்ல தொழில் வரி நிறைய பிடிசிடாங்கள? சரக்கு பிளாக்ல தான் கிடைக்குதா? இல்ல வில்லு, ஏகன், 1977, தீ மாதிரி படங்கள பிளாக்ல டிக்கெட் வாங்கி பாத்திங்கள? விடுங்க இத போய் ஒரு பிரச்சனைய நெனச்சிகிட்டு... take it easy man.

வெற்றி said...

மூளையப்போட்டு இப்படிக் கசக்கலாமா?

சின்னப் பையன் said...

நல்ல கேள்வி...

கணினி தேசம் said...

//நான் ஒரு கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன்னு வச்சிக்கோங்க!//
நீங்க ஆரம்பிச்சா நீங்க வைச்சுக்கணும். அத நாங்க ஏன் வைச்சுக்கணும்?

கணினி தேசம் said...

//எப்பவும் நமக்கு பட்டா தானே புத்தி வரும்.//

அதான் எங்களுக்கு தெரியுமே
.
.
.
பட்டதுக்கப்புறம்.

கணினி தேசம் said...

//ஒரு வங்கி ஒன்னு ஆரம்பிக்கலாம். //

பாட்னர்ஷிப் போட்டுக்க நான் ரெடி.. நீங்க ரெடியா?

கணினி தேசம் said...

//அரசுன்னு ஒன்னு இருக்கு. இல்லைன்னு சொன்னிங்கன்னா இறையாண்மை,சொறியாண்மைன்னு சொல்லி உள்ளே தூக்கி போட்டுவாங்க //

நல்ல வேலை எச்சரிக்கை கொடுத்தீங்க. இல்லாட்டி கண்ணா பின்னானு பின்னூட்டம் போட்டிருப்பேன்.

கணினி தேசம் said...

//எந்த ஒரு நிறுவனமும் லாபம் வரலைன்னா திவால் ஆகிறும்னு படிக்காத எனக்கே தெரியுது,
ஆனா ஆண்டு கணக்கா துண்டு விழாத பட்ஜெட் போட முடியாத நம்ம நாடு உண்மையில திவாலாயிருச்சா? //

பதில் இதோ..

முதல்ல சொன்ன ரெண்டு மேட்டர்லையும் நிறுவனம் மற்றும் நிர்வாகம் ( சொந்தக்காரர்) தெளிவாக இருக்கிறது.

மூன்றாவது மேட்டர்ல "அரசு" வெறும் இயந்திரம் மட்டுமே "கட்சி" என்பதுதான் நிறுவனம்.
இதுல, இன்னொரு முக்கியமான விடயம் என்னன்னா "லாபம்" அனைத்தும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். "நஷ்டம்" வந்தாலோ இயந்திரத்தின் மீது திணிக்கப்படும் (அதாவது மக்கள்).

கணக்கு சரியா?

Prabhu said...

என்ன பாஸ் திடீர்னு நாட்டுப் பற்று.... நல்ல மேட்ட்ர்... அதாவது லாஜிக்கா யோசிச்சா எல்லாத்துக்கும் புரியிற விஷயம்... ஏந்தான் அரசியல்வாதிகளுக்கு புரியலையோ...

Anonymous said...

அறுமையான பதிவு. அதிள எவ்வலவு அலகாக் நகைச்சுவையைக் கழந்திருக்கிராய். ரியளி சூப்பர் தளைவா. உண்ணாள மட்டும் தான் இப்படி ஆலமா சிந்திக்க முடியும் தள. நள்ளா எலுதியிருக்கே.

தாரணி பிரியா said...

நாமதான் திவால் ஆகிட்டு இருக்கோம். நமக்காக உழைக்க வர்றவங்க நமக்கு முதலாளி ஆகிட்டு இருக்காங்க :)

Mahesh said...

பட்ஜெட்ல துண்டா? பெட்சீட் ஜமுக்காளம்னு வுழ ஆரம்பிச்சு வருசமாச்சுங்கோவ் !!!

- இரவீ - said...

சந்துல சிந்து :)
இது சிந்திக்க வேண்டிய விஷயம் ...
அசால்டா ... எளிமையா புட்டு புட்டு வச்சிருக்கீங்க .
வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்கண்ணன் said...

நல்ல சிந்தனை

அ.மு.செய்யது said...

//ஆனா ஆண்டு கணக்கா துண்டு விழாத பட்ஜெட் போட முடியாத நம்ம நாடு உண்மையில திவாலாயிருச்சா? இல்லை மேல துண்ட போட்டு கீழ நம்ம பணத்தை லவட்டிட்டு போறானுங்களா?
//

ஒரே கொயிப்பா கீது தல..என்னாத்த பண்ரது..

ராம்.CM said...

அத பத்தி நினைக்க நமக்கு நேரமும் இல்லை,சொரணையும் இல்லை.///


என்ன‌ங்க‌ இப்ப‌டி சொல்லிப்புட்டீங்க‌!?...

Anonymous said...

தள இன்னைக்கு ஒன்னும் எலுதலையா தள !!. நள்ள நகைசுவைப் பதிவு ஒன்னு போடு தளைவா ! நீ மெய்யாழுமே பெரிய ஆலு தான். வால் தளைவா வெலியவா சீக்கிரம்.

Tech Shankar said...

அடடா. இவ்வளவு அருமையா எழுதி இருக்கீங்க. நல்ல பதிவு தல.

உங்களைப் பத்தித் தப்புத்தப்பா எனக்கு சில பின்னூட்டங்கள் வந்தது.

நான் அதை ரிஜக்ட் பண்ணிட்டேன்.

அனானிமஸா பின்னூட்டம் போட்டுத் திட்டுராங்க. என்னைத் திட்டியிருந்தால் கூடப் பரவாயில்லை தல. உங்களப் போகித் திட்டி இருந்தாங்க. துக்கம் தாங்கள. பின்னூட்டத்தைப் பரணியில போட்டுட்டேன்.

இந்தப் பதிவைப் படிச்சதுக்குப்பிறகு அடடா நானெல்லாம் என்னத்துக்காகப் பதிவெழுதுறேன். இங்கே பார். சூப்பரா ஒருத்தர் பதிவெழுதியிருக்கார்னு மனசு சொல்லுது.

அவனவன் தமிழில் இருந்து தமிழுக்குக் காப்பியடிக்கிறான். நான் இங்குலூசு மன்னிக்கவும் இங்கிலீசில் இருந்து தமிழுக்குக் காப்பியடிக்கிறேன்.

மனசில இருக்கும் வார்த்தைகளை எழுத்தில் வார்க்கும் வித்தகம் கைகூடி வரவில்லை - உங்களுக்கு அந்தப் பழக்கம் அருமையாகக் கைகூடி வந்துள்ளது.

உங்களுக்கு மிக்க நன்றி
உங்களை இனிமேல் வால்பையன்னு கூப்பிட மாட்டேன்.

தல என்றுதான் கூப்பிடுவேன்.

என்றும் அன்புடன்
வாழ்க வளமுடன்
த.நெ.

Unknown said...

// அரசு இயந்திரம்! //





என்னையா இது ....???? ரஜினியோட அடுத்த பட டைட்டிலா .........??





// நான் ஒரு கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன்னு வச்சிக்கோங்க! //





அட நக்கி நாராயணா......!!!!! கொசுத்தொல்ல தாங்க முடியலப்பா.....!! நீயெல்லாம் கம்பெனி ஆரம்பிச்சைன்னு வெச்சுக்கோ.......!!!!!!!! நாட்டுல இருக்குற எல்லா தொழிலதிபர்களும் நாண்டுகிட்டு செத்துருவாங்க.....!!!!





இது ....... உங்க அர்னால்டு மொதலாளிக்குத் தெரியுமா.......?????





// அதுக்கு 5 லட்சம் முதல் போட்டு சரக்கு(அந்த சரக்கு இல்ல) வாங்கி வச்சிருக்கேன். //




அடேய் ஹை- சாய்ஸ் மண்டையா......!!! போன பதிவுல ஒரு கோட்டார் வாங்க பக்கதூட்டுல பிச்சையெடுக்க சொன்ன..... !!! இப்ப என்னடானா .... 5 லட்சம் முதல் போட்டு சரக்கு வாங்குவேங்குற......!!!!




// (அந்த சரக்கு இல்ல) //




இதுல மொக்க காமடி வேற உனக்கு..........!!!!!!





// ஒரு இடத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து கடய போட்டாச்சு!. //





அதென்ன டீசன்ட்டா கட...... பட்டறைய போட்டாச்சின்னு சொல்லு தம்பி.....!!!! இப்போ நீ இருக்குற கம்பெனியே அப்படித்தான்னு நெனைக்குறேன்......????!!!!!!?????




//எல்லா வேலையும் நாமளே செய்ய முடியுமா, //





ஆமா...... ஆமா.....!!! நீ அம்பானியோட க்ளோஸ் பிரென்டாச்சே .....!!! நீ எப்புடி எல்லா வேலையையும் சிங்குளா செய்வ........!!!???!!!!




// அதனால நாலு பேர்த்த வேலைக்கு சேர்த்தாச்சு! //




நெம்ப சந்தோசம்.......!!!! மொதல்ல அந்த நாலு பேருக்கும் சம்பளம் குடு.......!!!!





// வியாபாரம் ஆனாலும் ஆகாட்டியும் மாசமாசம் வாடகையும், சம்பளமும் கொடுத்தாகனும். //




ஆமா... ஆமா... !! நெம்ப கரக்ட்....!!




இது ஏதோ ....... நீ இப்ப வேல செய்யுற கம்பனியோட கரண்ட் ஸ்டேடஸ் மாதிரி தெயரியுதே......????!!!!!?????





// அப்படி இப்படி அதுக்கே மாசம் 20000 ஆகுதுன்னு வச்சிகோங்க. //




அப்பறம் அடிக்கடி .... கம்பெனி டீம் வீக்கெண்டு பார்டி வேற .......!!!! அப்பறம் தெனமும் பஜ்ஜி...... போண்டா ..... டீ..... காப்பி ....... !!! அப்பறம்..... வாராவாரம் ஒருநாள் கம்பெனி செலவுல வான்கோழி பிரியாணி வேற......!!!!!



மாசம் ஒரு ஒன்ற லச்சம் போட்டுக்கோ வாலு......!!!!!!!!!





// மாசம் ஒரு லட்சத்துக்கு வியாபாரம் ஆனாத்தான் அதை எடுக்க முடியும். //





அட போண்டா வாயா.......!!! நா செலவே ஒன்ற லச்ச்சமுன்னு கணக்கு சொல்றேன் ....... நீ லாவமே ஒரு லட்சத்துக்கு சொல்ற ........!!!!!!!!!!!





// மேல நான் போட்டிருக்கும் முதல் 5 லட்சத்துக்கு வட்டி கட்ட இன்னொரு பத்தாயிரம் வேணும். //





அதுக்குத்தான் உங்க லூசு மொதலாளி இருக்குரானே.......!!! அந்த கருமாண்டிபய எல்லாத்தையும் பாத்துக்குவான் ........!!!!! நீ எப்பவுமே ப்ரீ பேர்டு வாலு........!!!





// ஆனாலும் பாருங்க மாசம் 30 ஆயிரம் எனக்கு கட்டாய செலவு இருக்கு. //




ஆமா..... ஆமா....!!! அதுல முக்காவாசி பணம் டாஸ்மார்குக்கே சப்பளை ஆகுது.....!!!!





// அதனால மேலும் கைகாசு போட்டு சமாளிச்சாச்சு. //




அடங்கொன்னியா..........!!! யோவ்....... யாகிட்ட உடுற உன் டகால்டி கதையெல்லாம்......!!!!! நீ.... கைகாசு போட்டு சமாளிக்குற.......????????




உம் மொதலாளி கருமாண்டி பயகோட 5 பைசா கைகாசு போட்டு ஒரு கடல முட்டாய் வாங்கமாட்டான்........ இதுல அல்லகையி நீ கைகாசு போட்டு சமாளிக்கிரியா......!!!!!!




/// ஒரு ஆறு மாசமோ, ஒரு வருசமோ கழிச்சு வியாபாரம் சூடு பிடிக்கும்னு நம்பிக்கையில மேலும் மேலும் காசு போட்டு முதலே 6 லட்சமாச்சு. //



ம்ம்... ம்ம்ம்........!!! உங்க ஆபீஸ் பக்கத்துல இருக்குற இரும்பு வெல்டிங் பட்டறையில போய்... கேஸ் வேல்டற வாங்கி சூடு வெச்சீனா வேணா நல்லா சூடு புடிக்கும்........!!!!




//இதுல எனக்கு மாதம் ரெண்டு லட்சம் வியாபாரம் ஆச்சுன்னு லாபமும் கிடைக்கும்,கடனும் அடைக்கலாம். //



எங்க தம்பி கடன்.......???? சாக்கனாங்கடயிலையா.......????




// மேலும் இருக்குற கடனை அடைக்க மம்பட்டிய தூக்கிகிட்டு வயகாட்டுக்கு போக வேண்டியது தான். //




அடேய் ஹிப்போபோடமஸ் வாயா.....!! வயகாட்டுல போய் வேல செய்யுறது உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா ....????? வந்து வேல செஞ்சு பாருடா மண்டையா....!! அது எவ்வளவு தூய்மையான தொழில்னு ........



அடேய் ஆப்ரிக்கா மண்டையா....!! இதுக்கு மேல உனக்கு நோ கமண்ட்ஸ்...........

முகமூடி said...

லவ்டேல் மேடி :- ROFTL... முடியல :)))))))))))))))))))))))))))))))))

Unknown said...

// முகமூடி said...

லவ்டேல் மேடி :- ROFTL... முடியல :))))))))))))))))))))))))))))))))) ///





வாங்க முகமூடித் தம்பி.....!!!!! எண்ணுங்க தம்பி முடியல.....!!!! ( ROFTL.... ) புல் பார்ம் எண்ணுங்க தம்பி.......?

ஏதாவது அசிங்கமா திட்டீராதிங்க தம்பி......!!! அப்பறம் நெம்ப பப்பி சேம் '' ஆயிரும் எனக்கு .........!!!!!!!

முகமூடி said...

அது ஒண்ணுமில்லீங்கணா.. வுளுந்து வுளுந்து சிரிச்சதுல ஒண்ணும் முடியில அப்டீன்னு சொன்னேன்.. ROFTL = Rolling On The Floor Laughing (ROTFL தான் - ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா அடிச்சே பளக்கமாயிருச்சி)

Anonymous said...

இல்லை மேல துண்ட போட்டு கீழ நம்ம பணத்தை லவட்டிட்டு போறானுங்களா?///

ஹா!ஹா!

உங்க ஆதங்கம் புரியுது... இதுல பார்த்தீங்கனா இந்த நடுத்தர மக்கள்தான் எல்லாத்துலயுமே அதிகம் வரி கட்டறான்...

மேட்டர் ஹீட்டர் கணக்கா இருக்குபா...

நந்து f/o நிலா said...

வால் உங்க போஸ்ட்ட படிக்க வரோமோ இல்லையோ. லவ்டேல் மேடி கமெண்ட் வந்தாச்சான்னும் இன்னைக்கு உங்க டேமேஜ் லெவல் என்னன்னு தெரிஞ்சுக்கவும் அடிக்கடி உங்க போஸ்ட்ட ஓப்பன் பண்ணி பாக்க வேண்டி இருக்கு.

நீங்க போடும் போஸ்ட்ட ஒரே கமெண்ட்ல கவர் பண்ணிடறார் மேடி.

//முகமூடி said...
லவ்டேல் மேடி :- ROFTL... முடியல :)))))))))))))))))))))))))))))))))//

பாருங்க பெரிய ஆளுங்கள்ளாம் மேடி ரசிகரா இருப்பதை.

Poornima Saravana kumar said...

// வாய கட்டி வயத்த கட்டி ஒரு கடய வச்சு பத்து வட்டிக்கு கடன வாங்கி போட்டு கஷ்டப்பட்டு எதோ நாலு காசு பார்த்தோம்னா அதுலையும் ஒரு பங்கு வரி//

யாரைக் கேட்கிறாய் வரி, நானென்ன வேலைக்குப் போனேனா? இல்லை வால் சொன்ன மாதிரி கடை கிடை வைத்தேனா? சும்மா தேமேன்னு வீட்டில பொட்டிய தட்டினா கூடவா????

என்ன அநியாயம்பா இது:(((

Unknown said...

வாங்க நந்து தம்பி.....!!!

ஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்....!!!!

நா இப்போ உங்கள என்ன சொல்லீட்டேன்னு ு இப்படி கொலவெறியோட கும்மிஎடுத்திருக்கீங்க .........!!!


இப்புடி .... உசுப்பேத்தி ...... உசுப்பேத்தியே ..... ஒடம்ப ரனகளம் ஆக்குறீங்க.....!!!!!


உங்குளுக்கு தெரியுமா......?? நானும் வால்பையனும் நல்ல நண்பர்கள்......!! நீங்க இப்படி பின்னூட்டம் போட்டா .... அவரு மனசு எவ்வளவு கஷ்ட்டப்படும்....!!!


ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்..........!!!! எங்கள் நட்பில்.......!!! ஆஆவ்வ்வ்வ்.......!!! விரிசல் ஏற்பட்டால் அதற்க்கு நீங்கள்தான் காரணம்........!!!!! ஆஆவ்வ்வ்வ்......!!!!!


இப்படிக்கு .....

கடும் ஆவேசத்துடன்.....

லவ்டேல் மேடி ......

வால்பையன் said...

//தமிழ் பிரியன் said...

வாங்கிக் கடிக்க ஆசைப்படுறீங்க... ஆனா தூரமா இருக்கனால முடியல../

ஏங்கண்ணே எதாவது தப்பா சொல்லிட்டேனா

வால்பையன் said...

//கும்க்கி said...

என்னய்யா உசாரா கீறாங்க..//

உஷாரா இல்லைனா நிஜார உருவீருவாங்களாம்

வால்பையன் said...

//பன்மோகன் சிங் said...

நாங்களும் முதல் போட்டு தாம்பா இங்கே இருக்கோம்.லாபம் பார்க்க வேணாமா!//

நீங்க உங்க கட்சி வருமானத்துல வரி கட்டுனா மாதிரி தெரியலையே

வால்பையன் said...

//பருணாநிதி said...

பல ஆண்டுகளாக உழைத்த் உருவாக்கியது எங்கள் தி.மு.க நிறுவனம். அதனால் உங்கள் பணத்தை எங்கள் பெயரில் வங்கியில் போட எங்களுக்கு உரிமையுண்டு//

ரொம்ப சந்தோசம்!
இப்போ வர்ற தேர்தலில் அப்படியே திரும்ப கொடுங்க! உங்களுக்கு பட்ட நாமம் ரெடியா இருக்கு

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...

/
1.
எப்பவும் நமக்கு பட்டா தானே புத்தி வரும்.
/
well said//

ஆமாம்ணே

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...

2. அட அந்த ப்ளாகர் கமெண்ட் போட்டிருக்காரே!!//

யார சொல்றிங்க

வால்பையன் said...

//சொறிலலிதா said...
சொன்ற முறை சரியாக லாபம் பார்க்கமுடியவில்லை. அதனால் இம்முறை எனக்கு ஓட்டு போட்டு நிறைய சம்பாரிக்க உதவி செய்யுங்கள்
என்று கேட்டு கொள்கிறேன்.//

பாருங்கப்பா
உண்மைய சொல்லி ஓட்டு கேட்கிறாங்க!

வால்பையன் said...

VIKNESHWARAN said...

ஹம்ம்ம்ம் நோ கமெண்ட்ஸ்....//

ஏன்? புரியலையா?

வால்பையன் said...

//இத்தாலிக்கா. said...

அஞ்சு வருசம் காத்து கெடந்து கண்மனிகளையெல்லாம் காப்பாத்தி ஆட்சிய புடிக்கறது எதுக்குப்பா தம்பி..?
கம்பேனிக்கு ஒரு கத கட்சிக்கு ஒரு கய்தயா சே கதயா..?//


மேலே உனக்கு!
கீழே எனக்கு!

டீல் ஒக்கேவா?

வால்பையன் said...

Maximum India said...
ஒவ்வொரு இந்தியனின் தலை மேலும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் கடன் தொகை இருக்கிறது. //

இருந்தும் எப்படிங்க, ஆக்கபூர்வமான காரியத்துக்கு பயன்படுத்தாம நம்மளால இலவசங்களை அள்ளி வீச முடியுது!

வால்பையன் said...

//உடனடியாக இந்தியா திவால் ஆக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.//

இந்தியா தான் இந்த உலகிலேயே பணக்கார நாடுன்னு நான் சொல்றேன்!
ஆனா எல்லா பணமும் வெளிநாட்டு வங்கியில கிடக்கு

வால்பையன் said...

//சோதா சுசாமி. said...

ம்.. இப்ப என்னாங்குர நீயி...
கம்பேனி வச்சவனெல்லாம் கணக்கு வழக்கெல்லாம் பாத்து நன்னா சம்பாதிச்சுண்டுடலாம்.
ஆனா கட்சி நடத்தறவா எல்லாம் தலைலே துண்டு போட்டுண்டு போயிடனும்றேளா..?//

துண்ட எங்க வேணும்னாலும் போட்டுகோங்க!
எங்களை விட்டிடுங்கோ

வால்பையன் said...

//கொராப் பகாமா said...

ஏய் வால் பையா..இதுக்கோசரம் ரொம்ப பீல் பன்னபோற நீயி..
உண்மைய சொல்லி அல்லார் கிட்டேயும் நல்ல பேர் எடுக்க முயற்ச்சி பண்றயா...வுடமாட்டேன் உன்னிய..//

நல்ல பேர் எடுத்து நான் என்ன பண்ணபோறேன்.
எவ்வளோ நல்லவனா இருந்தாலும் காசு கொடுத்தா தான் பார்ல ஆம்லெட்டு

வால்பையன் said...

//அபுஅஃப்ஸர் said...

//ஒன்னுமே புரியலையே!
//
அதாங்க நானும் கேக்குறேன் ஒன்னுமே புரியல இந்த நாட்டுலே இன்னா நடக்குதுனு//

தகவல் அறியும் சட்டத்துல கேட்டா சொல்லுவாங்களா

வால்பையன் said...

//kishore said...

அட விடுங்கபா சின்ன பையன் எதோ ஆதங்கத்துல எழுதிட்டாரு அதுக்கு போய் அவர திட்டிக்கிட்டு.. அட அடிக்காதிங்க விடுங்க சார்... வால்பையன் இங்க வாங்க என்ன பிரச்சனை உங்களுக்கு? ஆபீஸ்ல தொழில் வரி நிறைய பிடிசிடாங்கள? சரக்கு பிளாக்ல தான் கிடைக்குதா? இல்ல வில்லு, ஏகன், 1977, தீ மாதிரி படங்கள பிளாக்ல டிக்கெட் வாங்கி பாத்திங்கள? விடுங்க இத போய் ஒரு பிரச்சனைய நெனச்சிகிட்டு... take it easy man.//

அது சரி!
இப்படி எல்லாத்தையும் விட்டுட்டா
எதை தான் கேட்கிறது!

வால்பையன் said...

//தேனியார் said...

மூளையப்போட்டு இப்படிக் கசக்கலாமா?//

வாரத்துல ஒருநாள் தானே!
வேலை செய்யட்டும்

வால்பையன் said...

ச்சின்னப் பையன் said...

நல்ல கேள்வி...//

நன்றி நண்பரே

வால்பையன் said...

//கணினி தேசம் said...

//நான் ஒரு கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன்னு வச்சிக்கோங்க!//
நீங்க ஆரம்பிச்சா நீங்க வைச்சுக்கணும். அத நாங்க ஏன் வைச்சுக்கணும்?//

ஹா ஹா ஹா

நல்லா இருக்குதுங்க தமாஸு

வால்பையன் said...

முதல்ல சொன்ன ரெண்டு மேட்டர்லையும் நிறுவனம் மற்றும் நிர்வாகம் ( சொந்தக்காரர்) தெளிவாக இருக்கிறது.

மூன்றாவது மேட்டர்ல "அரசு" வெறும் இயந்திரம் மட்டுமே "கட்சி" என்பதுதான் நிறுவனம்.
இதுல, இன்னொரு முக்கியமான விடயம் என்னன்னா "லாபம்" அனைத்தும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். "நஷ்டம்" வந்தாலோ இயந்திரத்தின் மீது திணிக்கப்படும் (அதாவது மக்கள்).

கணக்கு சரியா?//

மொத்த கணிணிதேசம் சொன்னா சரியா தான் இருக்கும்

வால்பையன் said...

முதல்ல சொன்ன ரெண்டு மேட்டர்லையும் நிறுவனம் மற்றும் நிர்வாகம் ( சொந்தக்காரர்) தெளிவாக இருக்கிறது.

மூன்றாவது மேட்டர்ல "அரசு" வெறும் இயந்திரம் மட்டுமே "கட்சி" என்பதுதான் நிறுவனம்.
இதுல, இன்னொரு முக்கியமான விடயம் என்னன்னா "லாபம்" அனைத்தும் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். "நஷ்டம்" வந்தாலோ இயந்திரத்தின் மீது திணிக்கப்படும் (அதாவது மக்கள்).

கணக்கு சரியா?//

மொத்த கணிணிதேசம் சொன்னா சரியா தான் இருக்கும்

வால்பையன் said...

//pappu said...

என்ன பாஸ் திடீர்னு நாட்டுப் பற்று.... நல்ல மேட்ட்ர்... அதாவது லாஜிக்கா யோசிச்சா எல்லாத்துக்கும் புரியிற விஷயம்... ஏந்தான் அரசியல்வாதிகளுக்கு புரியலையோ...//

மக்களை முட்டாள்னு நினைக்கிறாங்க

வால்பையன் said...

//Anonymous said...

அறுமையான பதிவு. அதிள எவ்வலவு அலகாக் நகைச்சுவையைக் கழந்திருக்கிராய். ரியளி சூப்பர் தளைவா. உண்ணாள மட்டும் தான் இப்படி ஆலமா சிந்திக்க முடியும் தள. நள்ளா எலுதியிருக்கே.//

அண்ணே எனது மெயில் ஐடியில் தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்க!
இல்லாட்டி கொல்லுங்க

arunero@gmail.com

வால்பையன் said...

//தாரணி பிரியா said...

நாமதான் திவால் ஆகிட்டு இருக்கோம். நமக்காக உழைக்க வர்றவங்க நமக்கு முதலாளி ஆகிட்டு இருக்காங்க :)//

சரியா சொன்னிங்க!

வால்பையன் said...

//Mahesh said...

பட்ஜெட்ல துண்டா? பெட்சீட் ஜமுக்காளம்னு வுழ ஆரம்பிச்சு வருசமாச்சுங்கோவ் !!!//

ஆமாம்ணே!
ஆனா சலுகைகள் மட்டும் குறையவேயில்லை
எப்படின்னு தெரியலையே

வால்பையன் said...

Ravee (இரவீ ) said...

சந்துல சிந்து :)
இது சிந்திக்க வேண்டிய விஷயம் ...
அசால்டா ... எளிமையா புட்டு புட்டு வச்சிருக்கீங்க .
வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே!

வால்பையன் said...

ஸ்ரீதர்கண்ணன் said...

நல்ல சிந்தனை//

நன்றி நண்பரே!

வால்பையன் said...

அ.மு.செய்யது said...
ஒரே கொயிப்பா கீது தல..என்னாத்த பண்ரது..//

குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்க வேண்டியது தான்

வால்பையன் said...

//ராம்.CM said...

அத பத்தி நினைக்க நமக்கு நேரமும் இல்லை,சொரணையும் இல்லை.///


என்ன‌ங்க‌ இப்ப‌டி சொல்லிப்புட்டீங்க‌!?...//

உண்மைய தாங்க சொல்றேன்

வால்பையன் said...

நன்றி தமிழ்நெஞ்சம்

சிலர் அம்மாதிரி முன்முடிவுகளுடன் பழுகுவாங்க!
கண்டுக்காதிங்க

நன்றி எனதெருமை ஸாரி எனதருமை லவ்டேல் மேடி

!

Blog Widget by LinkWithin