வழக்கொழிந்த சொற்கள்!

இப்போது சந்தோசமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்ற சொல்லிய பிறகும் மாற்றி மாற்றி என் பெயரையும் இழுத்து விட்டு மகிழ்ச்சி அடைந்த நண்பர்களுக்கு நன்றி.
இதோ என் பங்குக்கு வழகொழிந்த சொற்கள்.

******************

இதுவரை எழுதியவர்கள் பெரும்பாலும் என்னை அயர்ச்சிகுள்ளாக்கி விட்டார்கள்.
வழகொழிந்த சொற்கள் என்று அவர்கள் சொன்னது எதுவுமே நான் கேள்விப்பட்டது கூட இல்லை.
பெரும்பாலும் சங்க கால தமிழ் சொற்கள். அவைகளெல்லாம் வழகொழிந்த சொற்கள் என்று எழுதலாம் என்றால், கம்பராமாயணத்தை அப்படியே எழுதி இதிலுள்ள சொற்கள் வழகொழிந்து போய்விட்டது என சொல்லலாம்.

சிலர் எழுதியிருந்தது கிராம வட்டார சொற்கள், அதை கூட ஏற்று கொள்ளலாம். நகரம் பெருக கிராமம் அழிய, கிராமிய வட்டார மொழி சொற்களும் அழிந்து விட்டது என்பது உண்மை. ஒரே ஒரு பிரச்சனை பக்கத்து பக்கத்து கிராமத்தில் கூட ஒரே சொல்லுக்கு வேறு அர்த்தம் தருமாறு இருக்கும். அதாவது உங்கள் சொல் எங்களுக்கு வேறு அர்த்தம் தரும் அது மாதிரி. எது எப்படியோ பழயதை நினைவு கூறுவதற்கு இது ஒரு நல்ல வடிகால்.

*************************************
என்னை பொறுத்தவரை வழகொழிந்த சொற்கள் என்பது என் காலத்தில் பயன்பாட்டில் இருந்து நம் கண் முன்னே அதன் பயன்பாடு குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிவது. அதை தான் நான் குறிப்பிட விரும்புகிறேன். அதில் சில இன்றும் பயன்பாட்டில் இருக்கலாம், ஆனால் எந்த அளவு நாம் உபயோகிக்கிறோம் என யோசித்து பார்க்க இது வாய்ப்பாக அமையட்டும்.

முதன் முதல் என்னை இந்த தொடர் பதிவெழுத அழைத்த போது, வழகொழிந்த சொற்களை தேட நான் கண்டுபிடித்த வழி பழைய சினிமாக்கள் பார்ப்பது. நேரமின்மை காரணமாக அதையும் முழுதாக பார்க்க முடியவில்லை. இன்னும் எழுதாமல் இருப்பவர்கள் இம்முறையை பயன்படுத்தலாம், ராயல்டி எல்லாம் கேட்க மாட்டேன்.

பலே பலே- ரங்காராவ் அடிக்கடி உபயோகிக்கும் சொல். ஒருவரை பாராட்ட பயன்படுத்துவது.
தூய தமிழா என்றெல்லாம் தெரியாது. நான் கேட்டது பழைய தமிழ்படத்தில்.

கெட்டிக்காரபைய- கெட்டிக்காரன் என்று பெயர் சொல்லால் அழைக்கப்படுவது, இதுவும் ஒருவரை பாராட்டுவது தான், ஆனால் தற்சமயம் யாரும் இந்த வார்த்தையை உபயோகிப்பது போல் தெரியவில்லை. யாரையாவது பாராட்டுவது என்றால் “பையன் ரொம்ப பிரில்லியண்டு” என்று தான் சொல்கிறார்கள். கெட்டிகாரனுக்கு எதிர்சொல்லாக கோட்டிகாரன் என்ற வார்த்தையும் உண்டு.

வண்ணம்-நம் கண் முன்னே காணாமல் போவதில் முதல் இடம் பிடிப்பது வண்ணம்.
எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கேட்டாலும் சொல்லும் ”கலர்” என்பது தமிழ் சொல் என்று அந்த அளவுக்கு கலர் நம்மிடையே கமீட் ஆகிவிட்டது.

இடுக்கு-இதன் அர்த்தம் தெரியாமல் உபயோகிப்பதால் இதுவும் சில நாட்களில் காணாமல் போகும். இடுக்கு என்றாலே சந்து என்று தான் அர்த்தம் ஆனால் நம் மக்கள் எப்போதுமே இடுக்குசந்து என்று சேர்த்து தான் அழைப்பார்கள்.

சர்ப்பம்- இது பாம்பை குறிக்கும் சொல்

இதுபோல் நிறைய சிறு விலங்குகள் ஒவ்வொரு வட்டாரதிற்கும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கப்படும். பல்லி போன்று வண்ணத்துடன் வீடுகளுக்கு அருகில் அழையும். சிலர் அரணை என்பார்கள். சிலர் அரணா என்பார்கள், சிலர் சாம்புராணி என்பார்கள்.

ஒணான் என்பதையே சிலர் ஒடக்கான் என்பார்கள், சிலர் கரட்டான்வண்டி என்பார்கள்.
இன்னும் தட்டான்,தும்பி என்று ஒவ்வோரு வட்டாரதிற்கும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களுடன் சிறு சிறு விலங்குகள் இருகின்றன.

நகரமாக்களின் தாக்கத்தால் வேலி முட்கள் அகற்றபடும் பொழுது இவைகளுக்கு புகலிடம் இல்லாமல் அழிந்து விடும். அப்போது இந்த சொற்களும் வழகொழிந்து போய்விடும்.


இந்த தொடரை எழுத நானும் சிலரை அழைக்கவேண்டும்.

1.மேக்சிமம் இந்தியா

2.பரிசல்காரன்

3.நர்சிம்

மூவருமே மிகுந்த தமிழ் ஆர்வம் மிக்கவர்கள். இது பற்றி நம்மைவிட இவர்களுக்கு நிறையவே தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இன்னொருவர் இருக்கிறார் ரமேஷ் வைத்யா என்று, அவர் பல்கலைகழகம் அவரிடம் கேட்டால் நமக்கு தாவூ தீர்ந்துவிடும். அதனால் அப்போ அப்போ அவரே இது பற்றி பதிவு போர சொல்லாம்.

*********************************************

இது சின்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்.

நட்சத்திரபதிவு ஆரம்பத்திலிருந்து எந்த பின்னூட்டதிருக்கும் நான் பதில் சொல்லவில்லை.
யாரும் தவறாக நினைக்கவேண்டாம். சாதாரணமாக வாரம் ஒரு பதிவு தான் எழுதுவேன்.
மற்ற நேரங்களில் எனது நண்பர்களுக்கு பின்னூட்டம் போடுவது தான் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு என்பது உங்களுக்கே தெரியும். நட்சத்திர வாரத்தில் முகப்பில் எனது பெயர் இருப்பதால் தினம் ஒரு பதிவு எழுதி, நேரம் கிடைக்கும் பொழுது மற்ற நண்பர்களின் பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம் இட்டு, சாப்பிட்டு, தூங்கி இடையே கொஞ்சம் வேலையும் பார்க்கிறேன்

அதனால் யாரும் தவறாக எடுத்து கொள்ளாதீர்கள், இந்த நட்சத்திரவாரம் முடிந்தது முதல் வேலையே உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்வது தான்.

53 வாங்கிகட்டி கொண்டது:

Rajeswari said...

"அரணை" பாம்புராணி என்றும் சொல்வார்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவுக்கு நன்றி வால்!
தமிழ் வா(ல்)ழ்த்துகள்!

Machi said...

சர்ப்பம் தமிழ் அல்ல, பாம்பு என்பது தான் தமிழ் பெயர். அர்த்தம் தமிழ் அல்ல அதை பொருள் என சொல்ல வேண்டும். வார்த்தை தமிழ் அல்ல, அதற்குரிய தமிழ் சொல் "சொல்". 'உபயோகிக்கிறோம்' தமிழ் அல்ல அதற்குரிய தமிழ் "பயன்படுத்துகிறோம்". நமக்குள்ள பெரிய இடர் எது தமிழ்ச்சொல் என தெரியாததே. பிரச்சனை தமிழ் அல்ல. இடர், சிக்கல், தொந்தரவு என இடத்திற்கு தகுந்தவாறு பயன்படுத்தலாம். :-))

இராகவன் நைஜிரியா said...

// இப்போது சந்தோசமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்ற சொல்லிய பிறகும் மாற்றி மாற்றி என் பெயரையும் இழுத்து விட்டு மகிழ்ச்சி அடைந்த நண்பர்களுக்கு நன்றி.
இதோ என் பங்குக்கு வழகொழிந்த சொற்கள்.//

இப்பத்தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்படி இப்படின்னு ரொ..ம்..ப... நாள் கழிச்சு பதிவ போட்டுட்டீங்க.

Mahesh said...

பாம்புக்கு அரவம் னு ஒரு சொல் கூட இருக்கு...

//பலே பலே// - பலே பலே !!

Anonymous said...

வண்ணம்
பலே பலே
இது போன்ற வார்த்தைகளை உண்மையிலேயே கேட்க முடிவதில்லை. அதிலும் கலர் என்ற சொல்லின் ஆதிக்கம் மிகவும் அதிகம்.

கெட்டிக்காரப்பய – நம்ம ஊருப் பக்கம் கேட்க முடியும்.

இடுக்கு, முடுக்கு, சந்து – நம்ம சைடு இன்னும் இருக்கு, அதிலும் மோத்திர முடுக்கு கொஞ்சம் பேமஸ்.

ஓணான், தும்பி, தட்டான், பாம்புராணி, பாம்பு – இவையெல்லாம் அடுத்த தலைமுறையில் கண்டிப்பாக இருக்காது, வார்த்தைகளில் மட்டும் அல்ல.
சின்ன வயதில் ஓணான் வேட்டை சிறுவர்களின் முக்கிய பொழுதுபொக்கு. அதன் கழுத்தில் சுருக்கு மாட்டி, பிடித்து, மூக்கு பொடி போட்டு, மோண்டு, கொன்று புதைத்து விடுவோம். ராமர் தண்ணி கேட்ட போது ஓணான் மோண்டு கொடுத்ததாம். இப்படி நடந்த ஞாபகம். ஆனால் இன்று, ஊருக்குள் ஒரு முள் புதர் கூட பார்க்க முடியவில்லை, எங்கு பார்த்தாலும் சிமெண்ட் ரோடு. முன்பு பாம்புராணி, பாம்பு, பூரான், தேள் எல்லாம் அடிக்கடி பார்க்கப்படும், பேசப்படும். இன்று, அவற்றையெல்லாம் பார்ப்பதே பெரிதாய் இருக்கிறது, அப்புறம் எங்கிட்டு பேச.
ஆனால் தட்டான் பூச்சி மட்டும் தான் இன்றும் பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் என் குழந்தைகள் டிஸ்கவரி சானலில் மட்டும்தான் பார்ப்பார்கள் என நினைக்கிறேன், வார்த்தைகள் கண்டிப்பாக மறந்துவிடும் என்றே தோன்றுகிறது.

தேவன் மாயம் said...

கெட்டிக்காரபைய- கெட்டிக்காரன் என்று பெயர் சொல்லால் அழைக்கப்படுவது, இதுவும் ஒருவரை பாராட்டுவது தான், ஆனால் தற்சமயம் யாரும் இந்த வார்த்தையை உபயோகிப்பது போல் தெரியவில்லை. யாரையாவது பாராட்டுவது என்றால் “பையன் ரொம்ப பிரில்லியண்டு” என்று தான் சொல்கிறார்கள். கெட்டிகாரனுக்கு எதிர்சொல்லாக கோட்டிகாரன் என்ற வார்த்தையும் உண்டு.///

தமிழில் ஒரு ஆராய்ச்சியே நடக்குதே!!
நீங்க கெட்டிக்காரன்தான்!!!

தேவன் மாயம் said...

ஒணான் என்பதையே சிலர் ஒடக்கான் என்பார்கள், சிலர் கரட்டான்வண்டி என்பார்கள்.///

ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொருமாதிரி போல் இருக்கிறது.

தேவன் மாயம் said...

நகரமாக்களின் தாக்கத்தால் வேலி முட்கள் அகற்றபடும் பொழுது இவைகளுக்கு புகலிடம் இல்லாமல் அழிந்து விடும். அப்போது இந்த சொற்களும் வழகொழிந்து போய்விடும்.///

உண்மைதான்!!!

தேவன் மாயம் said...

இடுக்கு-இதன் அர்த்தம் தெரியாமல் உபயோகிப்பதால் இதுவும் சில நாட்களில் காணாமல் போகும். இடுக்கு என்றாலே சந்து என்று தான் அர்த்தம் ஆனால் நம் மக்கள் எப்போதுமே இடுக்குசந்து என்று சேர்த்து தான் அழைப்பார்கள்.///
முடுக்குச்சந்து என்று இங்கும் ஒரு சந்து உள்ளது..

தேவன் மாயம் said...

பலே பலே- ரங்காராவ் அடிக்கடி உபயோகிக்கும் சொல். //

பலே! பலே!!

தேவன் மாயம் said...

இதுவரை எழுதியவர்கள் பெரும்பாலும் என்னை அயர்ச்சிகுள்ளாக்கி விட்டார்கள்.
வழகொழிந்த சொற்கள் என்று அவர்கள் சொன்னது எதுவுமே நான் கேள்விப்பட்டது கூட இல்லை.///

நல்ல கோணம்!!! உங்களுடையது!!

RAMYA said...

ஆறாவது நாள் நட்ச்சத்திர வால்ஸ்
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

RAMYA said...

// இப்போது சந்தோசமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்ற சொல்லிய பிறகும் மாற்றி மாற்றி என் பெயரையும் இழுத்து விட்டு மகிழ்ச்சி அடைந்த நண்பர்களுக்கு நன்றி.

இதோ என் பங்குக்கு வழகொழிந்த சொற்கள்.//

ஹா ஹா ரொம்ப சந்தோஷமா இருக்கு.

சந்தோஷப் படுத்துவதே ஒரு சந்தோசம்தானே வால்ஸ்??

RAMYA said...

//
ஒணான் என்பதையே சிலர் ஒடக்கான் என்பார்கள், சிலர் கரட்டான்வண்டி என்பார்கள்.
//

பச்சோந்தி அதுவும் மறந்துப் போச்சு இல்லே??

இப்படி எடுத்தால் இன்னும் நிறிய சொற்கள் இருக்கு போல இருக்கே!!

சரி சரி பின்னால் எழுதுபவர்களுக்கு நிறைய சொற்கள் இருக்கின்றது !!

RAMYA said...

எல்லா சொற்களையும் மறுபடியும் நினைவு படுத்தி விட்டீங்க.

ம்ம்ம்.. எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள் வால்ஸ்!!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

கபீஷ் said...

வாலு தலைப்பை சரிபண்ணுங்க தயவுசெஞ்சு

ஆ.ஞானசேகரன் said...

மிகுதியான மொழிக்கலப்பு சொற்கள் தமிழில் இருக்கின்றது, முதலிடத்தில் சமஸ்கிருதமும் அடுத்து ஆங்கிலமும் இருக்கின்றது. இவற்றை முழுவதும் கழைய வேண்டும் என்றால் நூற்றாண்டுகள் ஆகலாம். இருப்பினும் முயற்சி செய்ய வேண்டும். இதற்க்கு அரசும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியம். ஒரு சிலரின் முயற்சியால் ஒன்றும் செய்ய முடியாது. அவர் மட்டுமே பயன்படுத்திவிட்டு சென்றுவிடுவார், பிறகு மக்கள் அவரை தமிழ் பைத்தியம் என்று சொல்லி மறந்துவிடும்... புரட்சி தலைவர் MGR அவர்கள் பெரியாரின் சீர்திருத்த எழுத்துகளை (ணா,னா) பயன்படுத்த ஆவன செய்தார். தற்போழுது நாம் பழைய ணா, னா வை மறந்தேவிட்டோம்... அதுபொல அரசு ஊக்கப்படுத்துதல் மூலம்தான் முழுமையான தமிழை காண முடியும் என்பது என் எண்ணங்கள்....
என்னுடைய பழைய எண்ணங்களின் சுட்டி.....

http://aammaappa.blogspot.com/2008/11/blog-post_24.html

http://aammaappa.blogspot.com/2008/11/2.html

ஆ.ஞானசேகரன் said...

வண்ணம் என்பதை நிறம் என்றும் சொல்லில் உள்ளது. நிறம் மிகுதியாக பயன்பாட்டில்தான் உள்ளது... மேலும் முக்கியமாக நாம் எழுதும்போது பயன்படுத்தும் சொல்லை பேசும்போது பயன்படுத்துவதே இல்லை என்பதுதான்... தமிழுக்கு வேதனையான விடயம்...... கனனி, மின்சாரம், தட்டச்சு, தாள்.. இன்னும் பல நாம் பேச கூச்சப்படுகின்றோம் என்பதுதான் என்னவென்று சொல்ல.. முயற்சித்தால் முடியும்தான் ஆனால் எப்படி என்றுதான் இன்னும் தெரியவில்லை...

கணினி தேசம் said...

வாலு பலே பலே !!

பேச்சு வழக்கில் இருந்து ..தற்போது நாம் மறந்த சொற்களைத்தான் "வழக் கொழிந்த" சொற்களாக கருதமுடியும் என்ற உங்கள் கருத்தை ...வழிமொழிகிறேன்.

KARTHIK said...

// வாலு தலைப்பை சரிபண்ணுங்க தயவுசெஞ்சு.//

Yes boss

தமிழ் அமுதன் said...

அரணை பாம்பரணை என சொல்ல படுவது உண்டு!

கோட்டிக்காரன் என்பது கெட்டிக்காரனுக்கு எதிர் சொல்லா?
இப்போதுதான் கேள்வி படுகிறேன்!

நல்ல பதிவு பலே பலே!

ராம்.CM said...

தமிழில் ஒரு ஆராய்ச்சியே நடக்குதே!!
நடக்கட்டும்...நடக்கட்டும்...வாழ்த்துக்கள்!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

இன்னுமொரு நட்சத்திர பதிவுக்கு வாழ்த்துக்கள்! இப்போதெல்லாம், பெரிய எழுத்தாளர்களின் சரளமான நடை உங்களுக்கும் வந்து கொண்டிருக்கிறதை உணர முடிகிறது.

//இந்த தொடரை எழுத நானும் சிலரை அழைக்கவேண்டும்.

1.மேக்சிமம் இந்தியா

2.பரிசல்காரன்

3.நர்சிம்

மூவருமே மிகுந்த தமிழ் ஆர்வம் மிக்கவர்கள். இது பற்றி நம்மைவிட இவர்களுக்கு நிறையவே தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.//

இந்த பதிவுக்கான அடிப்படை எதுவென்று எனக்கு புரிய வில்லை. பரிசல் காரன், நரசிம் போன்ற பெரிய பதிவர்கள் மத்தியில் என்னையும் வைத்தது பெருமையாக இருந்தாலும், "தமிழ்" விஷயத்தில் என் மீது நீங்கள் அளவுக்கு அதிகமாகவே நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

தமிழ் மீது எனக்கு மிகுந்த பற்று இருந்த போதிலும், அதன் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் எனக்கு அதிக பரிச்சயமில்லை. என்னுடைய பதிவுகளையே, குறிப்பாக பொருளாதாரம், உளவியல் போன்ற தொழிற்நுட்ப பொருட்களில், நல்ல தமிழில் இட சற்று சிரமப் பட்டிருக்கிறேன்.

இப்போது, "வழக்கொழிந்த சொற்கள்" பற்றிய என் கருத்து இங்கே.

தமிழையும் ஆங்கிலத்தையும் கூட்டுக் கொலை செய்யும் இப்போதைய போக்கு தொடர்ந்தால், வழக்கில் இருந்த மற்றும் இருக்கும் பல நல்ல தமிழ் சொற்கள் வழக்கொழிந்து போவதுடன், தமிழருக்கு இரண்டு மொழியிலும் சரியான சொல்லாட்சி இல்லாமல் போய் விடும். தமிழருடன் உரையாடும் போது, நல்ல தமிழில் பேசுவோம். வேறு வேறு தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம். மற்ற மொழியினருடன் பேசும் போது (அவரது சொந்த மொழி தெரியாத பட்சத்தில்) நல்ல ஆங்கிலத்தில் விவாதிப்போம். அரைகுறை ஆங்கிலமும் அரைகுறை தமிழும் பேசுபவர்கள் மீது மற்றவர்களுக்கு ஒரு கீழான அபிப்ராயமே உருவாகும் என்பதை அவ்வாறு பேசுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி.

அன்புடன் அருணா said...

//இன்னும் எழுதாமல் இருப்பவர்கள் இம்முறையை பயன்படுத்தலாம், ராயல்டி எல்லாம் கேட்க மாட்டேன்.//

அப்பாடா....ஒரு வழி கிடைத்தது...பரவாயில்லை ராயல்டி கொடுத்து விடுகிறேன்...
அன்புடன் அருணா

- இரவீ - said...

பலே பலே

நட்புடன் ஜமால் said...

வித்தியாசமான முறையில்

அருமை நண்பா ...

Anonymous said...

வித்தியாசமான நச்சோ நச்சுப் பதிவு தள!. எப்படி தான் இத்தனை விஷயத்தை சிந்தித்து உங்கலால் எளுத முடியுததோ. கிழப்புற தள ! வால்த்துக்கள்.

kuma36 said...

//அதில் சில இன்றும் பயன்பாட்டில் இருக்கலாம், ஆனால் எந்த அளவு நாம் உபயோகிக்கிறோம் என யோசித்து பார்க்க இது வாய்ப்பாக அமையட்டும்.//

கெட்டிக்காரன் என்ற சொல்லை இன்னும் நாம் உபயோகின்றோம் சார்

Prabhu said...

இது கொஞசம் பிராக்டிகலா பண்ணிருக்கீங்க. பாத்தீங்களா இத சொல்லவே நாம ஆங்கில உதவிய நாட வேண்டியிருக்கு. நான் மொக்கைன்ற வார்த்தையோட மூலம் பத்தி சில பதிவுகளுக்கு முன்ன எழுதிருக்கேன். நேரம் கிடைக்கும்போது முயன்று பாருங்களேன்.http://prabhu-pappu.blogspot.com/2009/02/blog-post_27.html

அ.மு.செய்யது said...

கெட்டிகார பய...

பலே பலே ....

Kumky said...

கோட்டிக்காரப்பய...ஹூம்.

வால்பையன் said...

//Rajeswari said...

"அரணை" பாம்புராணி என்றும் சொல்வார்கள்//

ஆமாங்க! அப்படியும் சொல்ல பார்த்திருக்கிறேன்.

வால்பையன் said...

//ஜோதிபாரதி said...
பதிவுக்கு நன்றி வால்!
தமிழ் வா(ல்)ழ்த்துகள்!//

இதுக்கு உங்களுக்கு
நான்தாங்க நன்றி சொல்லனும்!
நீங்க கூப்பிடலைன்னா நான் பதிவு எழுதிருக்க முடியுமா?

வால்பையன் said...

//குறும்பன் said...

சர்ப்பம் தமிழ் அல்ல, பாம்பு என்பது தான் தமிழ் பெயர். அர்த்தம் தமிழ் அல்ல அதை பொருள் என சொல்ல வேண்டும். வார்த்தை தமிழ் அல்ல, அதற்குரிய தமிழ் சொல் "சொல்". 'உபயோகிக்கிறோம்' தமிழ் அல்ல அதற்குரிய தமிழ் "பயன்படுத்துகிறோம்". நமக்குள்ள பெரிய இடர் எது தமிழ்ச்சொல் என தெரியாததே. பிரச்சனை தமிழ் அல்ல. இடர், சிக்கல், தொந்தரவு என இடத்திற்கு தகுந்தவாறு பயன்படுத்தலாம். :-))//

நன்றி அண்ணே தகவலுக்கு

வால்பையன் said...

//Mahesh said...

பாம்புக்கு அரவம் னு ஒரு சொல் கூட இருக்கு...
//பலே பலே// - பலே பலே !!//


ஆள் அரவற்ற என்ற சொல்லையும் வைத்திருந்தேன் கடைசி நேரம் மறந்து தொலைத்து விட்டேன்!

அரவம் என்றால் ஊர்ந்து செல்லும் அனைத்து பூச்சி இனங்களையும் குறிக்கிறது.

வால்பையன் said...

//Beschi said...

வண்ணம்
பலே பலே
இது போன்ற வார்த்தைகளை உண்மையிலேயே கேட்க முடிவதில்லை. அதிலும் கலர் என்ற சொல்லின் ஆதிக்கம் மிகவும் அதிகம்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல!
நீங்கள் சொலவது போல் டிஸ்கவரி சேனலில் பார்க்கலாம், ஆனால் தமிழ் பெயர் தெரியாதே!

வால்பையன் said...

//thevanmayam said...
தமிழில் ஒரு ஆராய்ச்சியே நடக்குதே!!
நீங்க கெட்டிக்காரன்தான்!!!//

நீங்கள் போட்டு வைத்த பாதையில் தான் நான் நடந்து வந்தேன், பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை தல!

வால்பையன் said...

//RAMYA said...
ஆறாவது நாள் நட்ச்சத்திர வால்ஸ்
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
//

உங்களது அன்பும் ஆதரவுமே எனது ஊக்கம்.

வால்பையன் said...

//RAMYA said...

//
ஒணான் என்பதையே சிலர் ஒடக்கான் என்பார்கள், சிலர் கரட்டான்வண்டி என்பார்கள்.
//

பச்சோந்தி அதுவும் மறந்துப் போச்சு இல்லே??//

பச்சோந்தி ஓணான் வகையை சேராது!

நினைத்த மாத்திரத்தில் நிறம் மாறும் தன்மை ஓணானுக்கு இல்லை.

பச்சோந்தி ஸ்பெஷல்

வால்பையன் said...

//கபீஷ் said...

வாலு தலைப்பை சரிபண்ணுங்க தயவுசெஞ்சு//

பண்ணிட்டேன்.

தலைப்பில் தப்பு பண்ணா தான் என் கடை பக்கம் வருவிங்கன்னா! ஒவ்வொரு தலைப்பிலும் எழுத்துபிழை விடத்தயார்

வால்பையன் said...

//ஆ.ஞானசேகரன் said...

வண்ணம் என்பதை நிறம் என்றும் சொல்லில் உள்ளது. நிறம் மிகுதியாக பயன்பாட்டில்தான் உள்ளது... மேலும் முக்கியமாக நாம் எழுதும்போது பயன்படுத்தும் சொல்லை பேசும்போது பயன்படுத்துவதே இல்லை என்பதுதான்... தமிழுக்கு வேதனையான விடயம்...... கனனி, மின்சாரம், தட்டச்சு, தாள்.. இன்னும் பல நாம் பேச கூச்சப்படுகின்றோம் என்பதுதான் என்னவென்று சொல்ல.. முயற்சித்தால் முடியும்தான் ஆனால் எப்படி என்றுதான் இன்னும் தெரியவில்லை...//

உண்மை தான் நீங்கள் குறிபிட்ட அனைத்தும் என்னால் பயன்படுத்தப்படவைகளே! ஆனால் இப்பொழுது!

வால்பையன் said...

கணினி தேசம் said...

வாலு பலே பலே !!//

நன்றி தல

வால்பையன் said...

//கார்த்திக் said...

// வாலு தலைப்பை சரிபண்ணுங்க தயவுசெஞ்சு.//

Yes boss//

ok boss

வால்பையன் said...

//ஜீவன் said...
அரணை பாம்பரணை என சொல்ல படுவது உண்டு!
கோட்டிக்காரன் என்பது கெட்டிக்காரனுக்கு எதிர் சொல்லா?
இப்போதுதான் கேள்வி படுகிறேன்!//

சொல்பேச்சு கேளாமல் திரிபவர்களை அவ்வாறு சொல்வார்கள்

வால்பையன் said...

//ராம்.CM said...
தமிழில் ஒரு ஆராய்ச்சியே நடக்குதே!!
நடக்கட்டும்...நடக்கட்டும்...வாழ்த்துக்கள்!
//

எல்லாம் உங்கள் ஆசி தான்

வால்பையன் said...

Maximum India said...
"தமிழ்" விஷயத்தில் என் மீது நீங்கள் அளவுக்கு அதிகமாகவே நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.//

வட்டார வழக்கு மொழி சொற்கள்!
கிராமிய பயன்பாடுகள் பற்றி நினைவு கூறுவதே இந்த பதிவின் நோக்கம்.
நாம் மறந்த பொருள் எதாவது ஒன்று உங்களால் நினைவு கூறப்படலாம் இல்லையா!

வால்பையன் said...

//அன்புடன் அருணா said...
//இன்னும் எழுதாமல் இருப்பவர்கள் இம்முறையை பயன்படுத்தலாம், ராயல்டி எல்லாம் கேட்க மாட்டேன்.//
அப்பாடா....ஒரு வழி கிடைத்தது...பரவாயில்லை ராயல்டி கொடுத்து விடுகிறேன்...
அன்புடன் அருணா//

பரவாயில்லைங்க!
அப்படி ராயல்டி கொடுத்து தான் ஆகனும்னா அதற்கு பதிலா ரெண்டு வார்த்தைய சேர்த்து போடுங்க!

வால்பையன் said...

Ravee (இரவீ ) said...
பலே பலே//

நன்றி :)

**************
நட்புடன் ஜமால் said...
வித்தியாசமான முறையில்
அருமை நண்பா ...//

நன்றி தல :)
*****************

Anonymous said...

வித்தியாசமான நச்சோ நச்சுப் பதிவு தள!. எப்படி தான் இத்தனை விஷயத்தை சிந்தித்து உங்கலால் எளுத முடியுததோ. கிழப்புற தள ! வால்த்துக்கள்.//

அண்ணே நீங்க யாருன்னே தெரியலையே! ஒரே குழப்பமா இருக்குண்ணே!

வால்பையன் said...

//கலை - இராகலை said...

//அதில் சில இன்றும் பயன்பாட்டில் இருக்கலாம், ஆனால் எந்த அளவு நாம் உபயோகிக்கிறோம் என யோசித்து பார்க்க இது வாய்ப்பாக அமையட்டும்.//

கெட்டிக்காரன் என்ற சொல்லை இன்னும் நாம் உபயோகின்றோம் சார்//

பயன்பாட்டில் இருந்தால் சந்தோசமே!
நாளைடைவில் மறையாமல் இருந்தால் சரி

வால்பையன் said...

pappu said...

இது கொஞசம் பிராக்டிகலா பண்ணிருக்கீங்க. பாத்தீங்களா இத சொல்லவே நாம ஆங்கில உதவிய நாட வேண்டியிருக்கு. நான் மொக்கைன்ற வார்த்தையோட மூலம் பத்தி சில பதிவுகளுக்கு முன்ன எழுதிருக்கேன். நேரம் கிடைக்கும்போது முயன்று பாருங்களேன்.http://prabhu-pappu.blogspot.com/2009/02/blog-post_27.html//

நன்றி தல வருகைக்கு!
உங்கள் ப்ளாக்கிலும் பார்க்கிறோம்.

வால்பையன் said...

//அ.மு.செய்யது said...
கெட்டிகார பய...
பலே பலே ....//

நன்றி தல :)

************

கும்க்கி said...
கோட்டிக்காரப்பய...ஹூம்.//

எனக்கு தெரியும் கெட்டிகாரரே :)

**********************
நன்றி இராகவன் நைஜீரியா
அண்ணே மேல உங்க பேரு விட்டு போச்சு!

!

Blog Widget by LinkWithin