ஜே.ஜே.: சில குறிப்புகள்

தயவு செய்து இதை யாரும் ஒரு அரசியல் தலைவரின் குறிப்புகள் என்று நினைத்து கொள்ள வேண்டாம்,
இது ஜோசப் ஜேம்ஸ் என்ற ஒரு மலையாள இலக்கியவாதியின் வாழ்க்கை குறிப்புகள்,
அவரின் சிந்தனை குறிப்புகள், அவரின் கோபங்கள், அவரின் ஆசைகள், அடங்கிய ஒரு புத்தகம்.
நண்பர் கார்த்திக் எனக்கு படிக்க கொடுத்தார்

சுந்தரம் ராமசாமி அவர்களால் எழுதப்பட்டது
ஆசிரியர் குறிப்பு

முழு வாழ்கையும் தெரிந்து கொள்வதை விட அவரது இளமை பருவத்தை பற்றி இப்புத்தகத்தில் மிக அழகாக கூறப்பட்டுள்ளது, ஒரு கலைஞனக்கு அழகு வறுமை தானே அதுவும் அலசி ஆராயப்பட்டு இருக்கிறது,
1981-இல் முதற் பதிப்பாக வெளி வந்த இந்த நாவல் கண்டிப்பாக பல பேரால் படிக்க பட்டிருக்கும், இனி வரும் தலை முறை அதை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதே என் அவா,

அவரது கல்லூரி பருவத்தில் முனைவரகவும் அவரது நெருங்கிய நண்பராகவும் இருந்த அரவிந்தாட்சன மேனன் போல் ஒவ்வொருவர் வாழ்கையிலும் ஒருவர் இருப்பார்,
முல்லை கல் மாதவன் நாயர் என்ற நண்பரிடம் அவரது வாதம் இலக்கிய தரம் வாய்ந்தது,
விவாதம் எப்படி இருக்க வேண்டும் என்று, எல்லா காலத்திற்கும் பொருந்த கூடிய ஒரு அழகான விளக்கத்தை கொடுக்கிறார்
பின்வருமாறு
நான் உன்னிடம் வாதமாக கொண்டுவரும் என் சந்தேகம் அல்லது என் நம்பிக்கை என்பது ஒரு கயிறில் கட்டபட்ட முடிச்சு, அதை அவிழ்க்க இலகுவாக்க வேண்டுமே தவிர மேலும் அதில் நீ உன் பங்குக்கு முடிச்சுகள் போட கூடாது,
கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டு யோசித்தால் இது எவ்வளவு உண்மை என்று தெரியும்,
சுதந்திரத்திற்கு முன் வாழ்ந்த இவர், கம்யுனிசம் என்ற பெயரில் தொழில் சங்க தலைவர்கள், முதலாளிகளோடு சமரசம் என்ற பெயரில் தன் வயிற்றை மட்டும் நிரப்பி கொள்வதை கடுமையாக சாடியிருக்கிறார்,
தொழில் சங்க தலைவர் என்ற பெயரில் வசதியோடு மாடமாளிகையிலும், மோட்டார் வாகன வசதியோடும் இருப்பவர்கள் ஒரு தொழிலாளி அல்ல, அவன் ஒரு முதல் போடாத முதலாளி என்கிறார்,

அவரது இளமை பருவத்தில் அவருக்கு இருந்த ஒரே பெண் நண்பியான ஒமன குட்டியிடம் கூட அவர் தனது இலக்கியத்தை சமரசம் செய்து கொள்ள வில்லை,
ஒமன குட்டியின் "அரபி கடலில் சூர்யாஸ்தமனம்" என்ற கவிதை தொகுப்பை படித்து விட்டு ரயிலின் சன்னல் வழியே வெளியே வீசி எறிந்தார்,
அதன் பின் அந்த நட்பு தொடர்திருக்குமா என்று நீங்களே சொல்லுங்கள்

கவனம்



படிக்கும் போதும் வேலை செய்யும் போதும் கவனம் சிதறுவது மிக மோசமான ஒன்று,
சிதறடிக்கும் கவனத்தை ஒரு முக படுத்த பல வகையான முறை இருக்கிறது,
என்னுடய வழி கொஞ்சம் சுலபம்,
ஆங்கிலத்தில் ஒண்ணு, ரெண்டு, இருபது வரை தெரிந்தால் போதும்,
ஒன்று என்று தமிழிலும் two என்று ஆங்கிலத்திலும் மாறி மாறி இருபது வரை சொல்லுங்கள், நான் இந்த மாதிரியான நேரங்களில் ஐம்பது வரை சொல்வேன்,
A,B,C,D ஐ தலைகிழாக சொல்வதும் நல்ல ஒரு முயற்சி,
யாரிடமாவது பேசி கொண்டு இருக்கும் போது இதை முயற்சி செய்யாதிர்கள்,
இன்னும் நிறைய இருக்கிறது, விரிவாக பிறகு பேசலாம்

நிழல் நிஐமாகிறது

இயக்குனர் சிகரம் k.பாலசந்தர் இயக்கிய படம் இன்று K.TV-யில் மதியம் பார்த்தேன்,
சில படங்களை பார்க்கும் போது மனம் அமைதியாகிறது,

என் விருப்பம் போலவே இருந்தது இந்த படம், படத்தில் ரெண்டே பாட்டு தான், அதிலும் ஒரு பாட்டு மட்டும் தான் தேவையில்லாத பாட்டு போல் தெரிகிறது,
கம்பன் ஏமாந்தான் பாட்டு, சூழ்நிலைக்கு ஏற்ற அருமையான பாட்டு,
மேலும் இந்த படத்தில் மிக குறைந்த கதா பாத்திரங்களே நடித்துள்ளார்கள்,

இன்றைய சூழ்நிலையில் மூன்று கலர் படம் பார்த்த திருப்பதி எனக்கு, கமலுக்கும், கதா நாயகிக்கும் இருக்கும் உறவு, குஷி படத்தில் S.J.சூர்யா எடுத்தது, இன்னொருவனை விரும்பும் பெண்ணை அடைகலம் கொடுத்து காப்பாற்றி கடைசில் அவளுக்கே வாழ்வு கொடுப்பது, ஸ்ரீகாந்த், பூமிகா நடித்த ரோஜா கூட்டம் படத்தில் எடுத்தார்கள், தன்னை கெடுத்தவனை ஊர் முன்னிலையில் தவறை ஒற்று கொள்ள வைத்து பிறகு அவனை நிராகரிப்பதும் வேற சில படங்களில் எடுத்தார்கள்,




ஆக மொத்தம் மூலம் இது தான் இதை வைத்து என்னும் எத்தனை படம் எடுப்பர்களோ,

படத்திற்குள் வருவோம், செலவே கிடையாது படத்தில், படத்தில் வரும் மொத்த வாகனங்கள் ஒரு பஸ், ஒரு ஜீப், ஒரு ஸ்கூட்டர், ஒரு சைக்கிள் அவ்வளவு தான்,
வெளிநாடு போகும் செலவும் கிடையாது, ஒரு நல்ல படம் ஜெயிக்க கதை ஒன்றே போதும் என்பதற்கு இது ஒன்றே ஆதாரம்,

படத்தில் கம்யுனிசத்தை பற்றி நாயகனின் பார்வை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, அதாவது கம்யுனிஷம் என்பது முதலாளிகளை எதிர்ப்பது அல்ல, தொழிலாளிகளுக்கு உதவி செய்வது,
நல்ல படம், பார்க்காதவர்கள் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கவும்.

i am legend

தமிழ் மக்களுக்கு ஆங்கிலம் சொல்லி தர சினிமா ரொம்பவே சிரத்தை எடுத்து கொள்கிறது.
I am legend அப்படி என்றால் தமிழில் என்னவென்று கேட்டால் நரன் என்று சொல்வார்கள்,


Resistent evil படத்தில் will smith நடித்திருந்தால் என்ன வித்தியாசம், அது தான் இந்த படம்
காப்பி அடிக்கிற உரிமை நமக்கு மட்டும் தான் இருக்குதா என்ன

நியூ இயர்

நியூ இயர் வருதுல்ல அதுக்கு தான்! வேனுகிறவங்க அட்வான்ஸ் புக் பண்ணிடுங்க,


ஸ்டாக் தீந்து போச்சுனா என்ன கேட்க கூடாது

சினிமா

வரும் 2008 ஆங்கில பட ரசிகர்களுக்கு சரியான விருந்து
இது என்ன படம் தெரிகிறதா!


ஆங்கில படம் பெரிய டுபாக்கூரக இருந்தாலும் அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டியே ஆகவேண்டும்,
இரண்டு வெளி கிரகவாசிகள் பூமியில் வந்து சண்டை போடுவதை என்னவென்று சொல்ல!

வீடு கட்டலாம் வாங்க

சில வீட்டோட பிளான் இங்க இருக்கு, புதுசா வீடு கட்ட போறவங்க தாராளமா பயன்படுத்திக்கலாம்







புது படம்

பில்லா பதிவு போடும் போது தன் சொன்னேன், star movies- ல எனக்கு புடிச்ச ஆங்கில படம் ஓடுதுன்னு, இன்னைக்கு அந்த டைரக்டர் எடுக்க போற புது படத்த பத்தி நீயுஸ் வந்தது,



படத்து பேர பாத்தவுனே சும்மா அதிருதுள்ள!

நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்



நண்பரிடமிருந்து ஒரு மெயில் வந்தது,
படிச்சி பார்த்து சிரிப்பு அடக்க முடியல,
நீங்களும் கொஞ்சம் சிரிங்க

நேத்து பில்லா படத்துக்கு போயிருந்தேன்

எல்லோரும் ஓடுராங்கன்னு ஆமை atidos ஷூ வாங்க ஓடுச்சாமா, அந்த மாதிரி என் கதையும் ஆகிருச்சு,எல்லோரும் நல்ல எழுதுராங்கலேன்னு நானும் எழுத வந்தேன்,
வந்த பிறகு தான் தெரியுது, அது எவ்வளவு கஷ்டம்னு,

அதனால நான் என் style-ஐ மாத்திகிலாம்னு இருக்கேன், யாரும் படிகிறின்களோ இல்லையோ, இதை நான் மாத்த போறதில்லை,
வந்துட்டேன் எதாவது எழுதனும்ம்ல நேத்து பில்லா படத்துக்கு போயிருந்தேன்,
பில்லா படம் என் வாழ்கையில மறக்க முடியாத ஒன்னு, நான் நாலாவது படிக்கும் போது ஸ்கூல் கட்டு அடிச்சி பார்த்த முதல் படம்(நாங்கல்லாம் பிஞ்சிலேயே பழுத்துடம்ல!),
அப்பா நான் மதுரை பசுமலயில படிச்சிகிட்டு இருந்தேன்,
எங்க வீடு மேஜுரா காலேஜ் பக்கத்துல, அங்க இருந்து ஜெகதா தியேட்டேர் (இப்ப ஹரி விக்னேஷ் ) காலையில 11 மணி காட்சி,
பிளாஷ் பேக் முடிஞ்சது,
இப்ப நான் ஈரோடுல இருக்கேன், பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல அபிராமி தியேட்டர், பசங்க முன்னாடியே டிக்கெட் ரெடி பண்ணிடாங்கா, ஐயா ஒரு கஷ்டமும் படாம படம் பார்த்தேன்,
இப்ப படத்துக்கு வருவோம், தமிழ் சினிமாவின் சாபக்கேடு பாட்டு, இங்கேயும் அது நிரூபிக்க பட்டது,ஏற்கனவே நான் பழைய பில்லா பார்த்துட்டதால சஸ்பென்ஸ் கொஞ்சம் கூட இல்ல, மேஜர் கேரக்டர் மட்டும் கொஞ்சம் சஸ்பென்ஸ் அப்புறம் அதுவும் தெரிந்து விட்டது, ஆங்கில பட ரேஞ்சுக்கு முயற்சி செய்திருக்கிறார்கள், வழக்கம் போல சுய தம்பட்டம் (தல மேட்டர் ), தம் அடிக்க ஞாபக படுத்தும் பாட்டு, தமிழ் படம் தான் பார்க்கிறோம் என்று ஞாபக படுத்துகிறது, ஆனாலும் படம் எப்படியும் 100 நாள் ஓடும் அஜித் ரசிகர்கள் கவலை பட வேண்டாம்,
இந்த படத்தோட டைரக்டர் விஷ்ணு வின் "பட்டியல்" எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது, மேலும் வேறு நல்ல படங்கள் குடுப்பார்னு நம்புவோம்,
star movies-ல roland emmrich எடுத்த independence day படம் ஓடுது,

பின் நவினத்துவம்

நிறைய இருக்கு இத பத்தி சொல்ல, முதலில் அப்படி என்றால் என்ன என்பதை என் கண்ணோட்டத்தில் சொல்கிறேன், புரிய வில்லை என்றால் என் பொறுப்பல்ல,
பின் நவினத்துவம் என்றாலே அதுதான்,
உதாரணத்திற்கு அய்யனாரின் கட்டுரைகளை படிக்கவும்
அய்யனார்
இது போகும் போக்கில் ஒரு தன் பெருக்கி கட்டுரையை போல் தோன்றலாம் அதுவும்
பின் நவினத்துவம் தான்,
தண்ணி அடிக்காமல் தலை சுற்ற வேண்டுமா,
ரமேஷ் பிரபா வின் "கனவில் பெய்த மழையை பற்றிய சில இசை குறிப்புகள்" படியுங்கள்,

ஆனால் சில சமயம் நல்ல கதைகளும் வரும், M.G.சுரேஷ் அவர்களின் "அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்" ஒரு நல்ல பின் நவினத்துவ நாவல்,
மிக்கியமாக பின் நவினதுவதை மற்றவர்கள் போலில்லாமல் மிக நன்றாக பயன்படுதிகிறார், மற்றவர்கள் பார்வையில் பின் நவினத்துவம் என்றால் என்ன என்பதை அவர்கள் கட்டுரையில் வரும் ஒரு வரியில்!? சொல்கிறேன்

"ஒரு நீண்ட வரிசையில் பத்தவதாக நிற்கும் நீல சட்டைகாரனின் காலுக்கு அடியில் சில சித்தேரும்ம்புகள் வரிசையாக அணிவெருத்து செல்வதை மிக முக்கியமாக சொல்வதற்கு காரணம் என்னவென்றால்"

எதாவது வித்தியாசம் தெரிகிறதா உங்களுக்கு,
மிக முக்கியம் அந்த வரிகளின் இடையில் கமாவோ, நிறுத்தர்குறிகளோ இல்லை,
இதை விட மிக நீண்டு செல்லும் மிக பெரிய வரிகளை படித்து பல முறை கலைப்படைந்து இருக்கிறேன்.

M.G.சுரேஷ் அவர்கள் இந்த வகை நாவல்களை மிகவும் அற்புதமாக படைத்திருக்கிறார்,
"அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்" நாவலில் இறுதியில் கம்யுனிசத்தை பற்றி அவரின் கண்ணோட்டம் மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்,
மற்றபடி பல விசயங்களை ஒன்றாக இணைப்பதில், ஒரு திரை கதை அமைக்கும் தகுதி உடைய டைரக்டர் போல் தெரிகிறார்,

"அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்" என்ற கதையில் தத்துவுங்களை அவர் அலசியிருக்கும் விதம் அனைவருக்கும் பிடிக்கும்
தத்துவும் என்றவுடன் ஞாபகத்திற்கு வருகிறது, ஒரு முறை ஒஷோவிடம் கேட்டார்களாம்
மேலை நாட்டு தத்துவுங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று, அவர் சொன்னாராம்
"உங்கள் தத்துவுமே பெரிய பேத்தல், இதில் மேலே என்ன கீழே என்ன என்று",
பார்த்திர்களா எங்கோ போய் விட்டோம், இதை தான் தன் பெருக்கி என்று சொன்னேன்.

புது புனல் பதிபகத்தை தொடர்பு கொண்டால் அவருடைய புத்தகங்கள் கிடைக்கும்,
நன்றி

என் கேள்விக்கு என்ன பதில்?

சமீபத்தில் செய்திதாள்களிலும், தொலை காட்சிகளிலும் வந்த செய்தி,
சிம்பன்சி குரங்கு ஒன்று, மனிதனின் நினைவு திறனை மிஞ்சி விட்டது,
அதை படித்தவுடன் எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,
எனது பால்ய கால நண்பன் முருகன், பின் நாளில் தன் செய்த தவறை சரி என்று நினைத்து கொண்டு அடுத்தவர்களையும் தவறு செய்ய தூண்டும் கும்பலின் உதவியுடன் கிறிஸ்டோபர் என்று தனது பெயரை மாற்றி வைத்து கொண்டான்,
அவனுடன் நடந்த உரையாடல் இங்கே!

இது நான் காதால் கேட்டது மட்டுமே, படித்து தெரிந்தது அல்ல

ஆதியில் இறைவன் ஆதம் மற்றும் ஏவலை படைத்தார் அதுவல்ல விஷயம் இங்கே
அவர் தின்ன கூடாது என்று சொன்ன ஒரு கனியை ஏவாள் தின்றதால் அவர்களுக்கு வெட்கம் (அறிவு) வந்ததாக கூறினான், அதை தின்ன சொன்னது ஒரு சர்ப்பம் என்றும் கூறினான்,
அதில் அவனுடைய கண்டுபிடிப்பு என்னவென்றால், அவர்களது இறை புத்தகத்தில் அந்த ஜந்துவிற்கு கால்கள் இருந்ததாக சொல்லி இருக்கிறதாம், அதை அவன் ஒரு குரங்கென்று வாதிடுகிறான்,
இன்று மனிதனுக்கும், சிம்பன்சி வகை குரங்கிற்கும் 99% ஒற்றுமை இருப்பதாக அறிவியல் சொல்கிறது, ஆனால் மனிதன் தனியாக படைக்க பட்டான் என்று மதம் சொல்கிறது,
என்னுடைய கேள்வி
விலங்குகளின் வாழும் தகுதிக்கும் மனிதனின் வாழும் தகுதிக்கும உள்ள ஒற்றுமைகளை சொல்லுங்கள் கீழே clue உள்ளது

விலங்குகளின் வாழும் தகுதி:
உணவிற்காக வேட்டையாடுதல்
மறைந்திருந்து தாக்குதல்
எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ளுதல்
தன் இனத்திற்கு பாதுகாப்பு அளிப்பது

மனிதனின் வாழும் தகுதி:
உணவிற்காக வேட்டையாடுதல்
மறைந்திருந்து தாக்குதல்
எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ளுதல்
என்று இவை தானே இருந்திருக்க வேண்டும்
ஆனால் ஏன் தகுதி இவ்வாறாக மாறியது

பொய் சொல்வது
ஏமாற்றுவது
திருடுவது
நம்பிக்கை துரோகம் செய்வது
காக்க வேண்டிய தன் இனத்தையே அழிப்பது

தயவு செய்து என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

நானும், எனது ஒரு நாள் மதுரை பயணமும்.

வலை பக்கங்களுக்கு புதிதாக அறிமுகம் ஆகியுள்ள நான்,
முதலில் வாங்கியது தருமி சாரின் போன் நம்பர் தான்,
பிறகு மதுரை செல்ல வேண்டி ஒரு வேலையும் இருந்தது,
தருமி சாரை அழைத்து அவரிடம், நான் வரும் தகவலை தெரிவித்தேன்,
இருவரும் மதியம் சந்திப்பது என்று முடிவாயிற்று,

மதியம் 3.30 மணியளவில் கருப்பு கலர் ஹோண்டா ஆக்டிவாவில் வந்தார்,
அவரது வலை பக்கங்களில் என்ன மாதிரி T-shirt அணிந்த்திருப்பரோ அதே மாதிரி T-ஷர்ட்-ல் வந்தார் (அடையாளத்திற்கு இருக்குமோ!?).
மதுரை அமெரிக்கன் காலேஜில் இருவரும் அமர்ந்து கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் பேசினோம்,
பரஸ்பரம் அறிமுகத்திற்கு பிறகு தான் விவாதம் ஆரம்பித்தது,
மனிதர் வயதான இளைஞர் என்பதை நிருபித்து விட்டார்,
ஒரு சிறுவனுக்கே உள்ள குணங்கள் போல் அவர் பேசும்போது அடிக்கடி நான் உள்ளே நுழைந்து வேறு ஏதும் பேசினாலும்,பொறுமையாக கேட்டு அதற்கும் பதில் சொல்லி விட்டு மிண்டும் பழைய விவாதத்தை தொடர்கிறார்,

அவரது பொறுமை, விசயத்தை விளக்கும் விதம்.
அவரிடம் நான் படிக்காதது வாழ்கையில் எதையோ இழந்தது போல் இருந்தது, கண்டிப்பாக அவர் ஒரு சிறந்த ஆசிரியராக தான் இருந்திருப்பார்,
அவரிடம் பேசிய விசயங்களை ஒவ்வொன்றும் தனி தனி தொகுப்பாக எழுதலாம் என்று இருக்கிறேன்,
உண்மையில் அவரை நான் மிகவும் தொந்தரவு செய்து விட்டேன் அதற்காக அவர் என்னை மன்னிக்க வேண்டும்.

நான் எதை எழுதலாம் என்று யோசிக்கும் போது அதை நண்பர்களிடம் கேட்கலாம் என்று தோன்றியது,
கிழே உள்ள தலைப்புகளில் முதலில் எதை எழுதலாம் என்று உங்கள் விருப்பத்தை வைத்தே முடிவு செய்ய போகிறேன்

1.பரிணாம வளர்ச்சியின் நன்மைகளும், தீமைகளும்.

2.நான் ஏன் கவிஞனாகவில்லை.

3.கொஞ்சம் தாமதமாய் ஒரு சினிமா விமர்சனம்.

4.பணம் உண்மையில் மதிப்புடயதா?

இதில் எதை முதலில் ஆரம்பிக்கலாம் என்று சொன்னிர்கலேயானால் மிகவும் வசதியாக இருக்கும்

மீண்டும் ஒரு முறை தருமி அவர்களுக்கு நன்றி சொல்லி என் முதல் பதிப்பை முடிக்கிறேன்

நன்றி

ஆதங்கம்

வலையில் இவ்வளவு நாட்களாக இது போன்று ஒரு கடல் இருப்பதையே தெரியாமல் விட்டதற்கு வெட்க படுகிறேன், ஆ . வி யில் வலை பக்கங்களை பற்றி படித்த பிறகு தான், புதிதாக எனக்காக ஒரு பக்கத்தை ஆரம்பித்தேன்,நான் மிகவும் புதியவன் இதற்கு தயவு செய்து என்னை மேலும் மெருகேற்ற உதவுங்கள்.


அனைவரிடமும் என்னை அறிமுகம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்,

வால்பையன்

அறிமுகம்

என் பெயர் அருண், வசிப்பது ஈரோடில்,தொழில் கமாடிடி மார்க்கெட் அனல்ய்செர்
இனி நானும் உங்களுடன் சேர்ந்து வலை பக்கங்களில் கலாய்க்கலாம் என்று இருக்கிறேன்.
புதிது என்பதால் ரேக்கிங் செய்யாமல்
வலை எழுதுவது எப்படி என்று சொல்லி கொடுக்கவும்

!

Blog Widget by LinkWithin