மூளையின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி?

எளிய அறிமுகம் மட்டும். எல்லா மூளையும் கொழுப்பால் ஆனது தான். அதன் வளார்ச்சிக்கு புரதமும், செயல்பாட்டுக்கு பிராணவாயுவும் தேவை. நம் வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அது போக கலை சார்ந்த கிரியேட்டிவ் வேலையும் அந்த பக்கம் தான் கவனித்துக்கொள்கிறது. இசை, ஓவியம், சிற்பம் வகையறா, இடதுபக்க மூளை லாஜிக்கல் வேலையை செய்கிறது. ஒப்பிடுதல், முன் அனுபவம் ஆகியவற்றை கணக்கிட்டு முடிவு எடுக்கும் வேலை. மனிதர்களில் 85% பேர் இடது பக்க மூளை செயல்பாட்டில் உள்ளவர்கள் தான்.

மனித மூளையை பயோ கம்பியூட்டர் என்பார்கள். அதாவது உயிருள்ள கணிணி. அதன் உண்மையான செயல்திறன். ஒரு லட்சம் சூப்பர் கம்பியூட்டரை விட அதிகம். மூளையை சூப்பர் பிராஸஸர்னு சொல்லலாம். ஆனா பிரச்சனை என்னான்னா நம் மக்கள் அந்த பிராஸஸரை அப்டேட் பண்றதேயில்ல. மூளை தான் ஹார்ட் டிஸ்கும், உங்கள் ஞாபக அடுக்குகளும் அங்கே தான் இருக்கு. பிராஸஸர் அப்டேட்டா இல்லைனா அதனால் ஞாபக அடுக்கில் இருந்து சரியான பதிலை எடுத்துத்தர இயலாது போய் விடும்.இந்த கட்டுரையின் புரிதல் முழுக்க முழுக்க என்னுடையது மட்டுமே, என் பயிற்சி மட்டுமே. மூளையின் செயல் திறனை குறைக்கக்கூடியது ஆல்கஹால். நான் இரண்டு முறை டீஅடிக்சன் போயும் பிராஸஸர் நல்லா இருக்குன்னா அதற்கு நான் செய்து வரும் பயிற்சிகளே காரணம். மூளையின் செயல்திறனை கூட்ட ஆதி பால பாடம் கணிதம் மட்டுமே. கணிதத்தை மனப்பாடம் செய்ய இயலாது. சிந்திக்கனும். சிந்தனை மட்டுமே மூளையை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.குறுகிய சிந்தனை என்பார்கள், அதை பொதுபுத்தியுடன் வகைப்படுத்தலாம்.,  குறுகிய சிந்தனை என்பது மாற்று சிந்தனை இல்லாமல் இதுவரை எல்லாரும் என்ன பண்ணாங்களோ அதையே தானும் செய்வது. இதற்கான பயிற்சி புதிர்கள் விடுவிப்பது. கணித புதிர்கள், எழுத்து புதிர்கள், அடுத்து என்ன என்னும் லாஜிக்கல் புதிர்கள் உங்களுக்கு மாற்று சிந்தனைக்கு வழி வகுக்கும்.
பதில் தெரியாத புதிர்களை ஒதுக்கி விடாமல் பதிலை அறிந்து கொள்ளுதல் நல்லது. அப்படி ஒரு கோணம் இருப்பதை உணராமல் உங்களால் மாற்று சிந்தனைக்கு செல்ல முடியாது

ஞாபக சக்தி என்பது தான் இன்றைய தலையாய பிரச்சனை. நம் கல்வி முறை 80% மனப்பாடம் செய்து அதை ஞாபகம் வைத்து கொள்ளவதை மட்டுமே செய்கிறது. ஞாபகசக்தியின் பாலபாடம் ஆர்வம். ஒன்றை கடமைக்கு படிக்கனும்னு படிக்கக்கூடாது, மதிப்பெண்ணுக்காக படிக்கக்கூடாது. இதில் எதோ இருக்கு, அது என்னான்னு நான் தெரிஞ்சிக்கனும் என்ற ஆர்வத்தை மையப்படுத்தனும். சினிமா, கதை படிப்பதில் போல் ஆர்வம் இல்லாமையே அது நம் மனதில் தங்காமல் இருப்பது. மறக்காதீர்கள், ஞாபக சக்தியின் சூத்திரம். :இதில் எதோ இருக்கு, அது என்னான்னு நான் தெரிஞ்சிக்கனும்”

கணிதம், கணித புதிர்கள் விளையாட்டாய் செய்யலாம், அதே போல் உள்ள இன்னொரு எளிய பயிற்சி. எண்கள்.
ஒன்னு, டூ, மூணு, ஃபோர், அஞ்சு, சிக்ஸ் இப்படி 50 வரை தவறில்லாமல் சொல்லிபழகுங்கள், பழக பழக வேகம் கூட்டுங்கள், 100 வரை சொல்லுங்கள், உங்களுக்கு மூன்றாவதாக வேறு மொழி தெரியும் என்றால் அம்மொழியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தினம் காலையில் இப்பயிற்சி செய்வது கவனமுடன் வேலை செய்யவும், ஒருநிலை மனதில் எதையும் கவனிக்கவும் வழி செய்யும்.

வலதுகை பழக்கக்காரர்கள், இடது கையில் எழுதி பழகுங்கள். ஆரம்ப இடத்தில் சரியாக முடிக்கும் முட்டை(ரவுண்டு) போட்டு பழகுங்கள்(வேடிக்கையா இருக்கும், அழகான கையெழுத்துக்காக பயிற்சி இது) இசை கேளுங்கள். கூடவே பாடுங்கள். இல்லையென்றால் இசை ஒருபக்கம் ஒலிக்கும், உங்கள் சிந்தனை வேறு பக்கம் இருக்கும். நடனமாடுங்கள்.

இதை 3 வயசு குழந்தையில் இருந்து 113 வயசு குழந்தை வரை செய்து பார்க்கலாம்

மகிழ்ச்சியாக இருங்கள் எல்லாம் உங்கள் வசப்படும்

நான் ஏன் எந்த கட்சியிலும் இல்லை?

கேள்வி: நீங்கள் ஏன் எந்த கட்சியிலும் உங்களை இணைத்துக்கொள்ள வில்லை?

பதில்: ஒரு இடத்தில் இரண்டு பொருள் இருந்தாலே அங்கே ஒப்பீடு(compare) அரசியல் வந்து விடும். இரண்டு பொருளும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒன்னு வலபக்கம் இருக்கு, ஒன்னு இடப்பக்கம் இருக்கு. வலம் பெருசா, இடம் பெருசா என்றோ. ஒன்னு மேலே இருக்கு, ஒன்னு கீழே இருக்கு. மேல் பெருசா, கீழ் பெருசா என்றோ எதாவது ஒன்றிற்கு சிறப்பமைப்பு கொடுத்து அதனுடன் தன்னை இணைத்துக்கொள்வதே பொதுபுத்தி என்பதாகும்.

ஒப்பீடு என்ன அவ்ளோ பெரிய குற்றமா என்பவர்களுக்கு.
அனைத்து பிரச்சனைகளின் அடிநாதமே அங்கே தான் ஆரம்பிக்கிறது.
இது சரி என்று ஒன்றை ஏற்றுக்கொள்வதை விட, எது நமக்கு வசதி என்று ஏற்றுக்கொள்ள தெடங்கியது இந்த ஒப்பிட்டளவில் தான். ஒருவர் இரண்டு விதங்களாக இஸங்களில் சிக்கிக்கொள்கிறார். ஒன்று திணிக்கப்படுதல், இன்னொன்று மற்றவைகளை விட இது பரவாயில்ல என்ற மதிப்பீடு

ஒரு இஸத்தை ஏற்றுக்கொண்டு விட்டால் நீங்கள் அந்த வட்டத்திற்குள் நுழைந்துவிட்டீர்கள். இப்பொழுது உங்களால் அந்த வட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடியும். அதில் இருக்கும் தவறுகள் உங்களுக்கு மறைக்கப்படும் அல்லது பார்க்க விரும்ப மாட்டீர்கள். ஒவ்வொரு கட்சி தொண்டனுக்கும், ஒவ்வொரு மதவாதிக்கும் இது பொருந்தும்.

தவறுக்கு நியாயம் கற்பிப்பது, சிறப்பானது என்று நினைத்தவுடன் இருப்பதால் நானும் சிறப்பானவன் என்ற மமதை கொள்வது. நான் சிறப்பானவன் என்பதை நிரூப்பிக்க பிற இஸங்களை சிறுமைக்குள்ளாக்குவது இவைகள் உங்கள் இயல்பாகிவிடும். உங்கள் இஸத்தின் தவறுக்கெல்லாம் வக்கிலாகி நிற்பீர்கள், பிற இஸத்தின் தவறுக்கு நீதிபதி ஆகிவிடுவீர்கள்.

அதே நேரம் பிறர் என் மீது போர்த்தும் அடையாள போர்வை மீது எனக்கு எந்த அக்கறையும் இல்லை. பார்பனியத்தை விமர்சித்தால் தலித் என்பது, தலித் தவறுகளை சுட்டிக்காட்டினால் உயர்சாதிய திமிர் என்பது. இஸ்லாத்தை விமர்சித்தால் காவி என்பது, காவியை விமர்சித்தால் பச்சைகளிடன் காசு வாங்கிட்டான் என்பது. இது போன்ற உங்கள் இயலாமைகள் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தியதில்லை.

அதிமுகவை கேள்வி கேட்டால், திமுக ஒழுங்கா என்பார்கள்.
பாஜகவை கேள்வி கேட்டால் காங்கிரஸ் ஒழுங்கா என்பார்கள்
இதுவே மதவாததிற்கும். தன்னை நியாயபடுத்திக்க பிறர் மீது குற்றங்களை சுமத்துவது ஒருபோதும் பதில் ஆகாது. அவ்வாறு செய்பவர்கள் தன் தவறுகளை மறைப்பதோடு, அவர்கள் ஒருபொழுதும் திருந்தப்போவதில்லை என்பதை ஆணித்தரமாக பறைசாட்டுகிறார்கள்.என்னுடம் பேசும் நண்பர்கள், நான் உங்கள் ரசிகன் என்றால் நான் மிகவும் வருத்தப்படுவேன். என் ரசிகன் என்றால் என்னை கொண்டாடுகிறீர்கள். பின் என் தவறுகளுக்கும் நியாயம் கற்பிக்க ஆரம்பிப்பீர்கள். என் தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டாமல் எனக்கு ஒருபொழுதும் அது தெரியப்போவதில்லை. எனக்கு வாசகர்களை விட நண்பர்களே நெருக்கமாக உணர்கிறேன். நீங்கள் அனைவரும் என் நண்பர்கள் தான்.

டீ.ராஜேந்தரை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பகாலங்களில் கதை, திரைகதை மொக்கையா இருந்தாலும் இசையும், பாடல் வரிகளும் உலகதரம் வாய்ந்தவை. அவரை ஏத்தி விட்டு மேலே கொண்டு போய் சிதறு தேங்காய் போல் உடைத்துவிட்டார்கள். ஆனால் இன்றும் அந்த புகழ் போதையில் இருந்து வெளியே வர முடியாமல் வாய்லயே வடை சுட்டுகிட்டு இருக்கார்.

சசிகலாவை பார்க்க போன கம்யூனிஸ்டுகளையும் விமர்சிக்க முடியுது என்றால் கட்சி சாராமல் அவர்களை வட்டத்திற்கு வெளியே இருந்து பார்ப்பதால் தான் முடிகிறது. எழுத்தை கொண்டாடுங்கள். எழுத்தாளனுடன் நண்பனாக இருங்கள், நடிப்பை கொண்டாடுங்கள், நடிகனுடன் நண்பனாக இருங்கள்.#வாலியிஸம்

நீங்களும் உங்க புண்ணாக்கு சடங்குகளும்!

ஒரு ஊர்ல ஒரு மடம் இருந்தது. அங்கே நிறைய மாணவர்களும் ஒரு குருவின் இருந்தார். அந்த மாணவர்களுக்கு தினம் பாடம் சொல்லிக்கொடுப்பது அந்த குருவோட வேலை.

நல்லா போய்கிட்டு இருந்தா அந்த மடத்துகுள்ள திடீர்னு ஒரு பூனை வந்தது. குறுக்கும் மறுக்குமா ஓடிகிட்டு மாணவர்களை படிக்க விடாமல் தொந்தரவு பண்ணிகிட்டே இருந்தது.

என்ன பண்ணலாம்னு யோசிச்ச குரு, அந்த பூனைய பிடிசசு தூண்ல கட்டுங்கடான்னு உத்தரவு போட்டாரு, மாணவர்களும் அந்த பூனைய பிடிச்சு தூண்ல கட்டுனாங்க. வகுப்பு முடிந்ததும் அவுத்து விட்ருவாங்க. ஆனா அந்த கிறுக்கு பூனை மறுநாளும் மடத்திற்கு வந்தது. மாணவர்கள் பிடிச்சு கட்டி போடுவாங்க. இது அப்படியே தொடர்ந்தது.

ஒரு நாள் அந்த பூனை செத்து போச்சு. வகுப்புக்கு வந்த மாணவர்கள் பூனைய தேடுறாங்க எங்கேயும் கிடைக்கல. உடனே எல்லாரும் கூடி, குரு வந்தா பூனை எங்கன்னு கேட்பாரு. நாம ஊருகுள்ள போய் எதாவது பூனைய பிடிச்சிட்டு வந்து கட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணி அப்படியே பண்ணாங்க.ஒருநாள் அந்த குருவும் செத்து போய்ட்டாரு, பின் அந்த மடத்துக்கு புதுசா ஒரு குரு வந்தாரு. அவரு வரும் போது தூண்ல பூனை கட்டப்பட்டு இருந்தது. இது என்னப்பான்னு கேட்டாரு. எங்க பழைய குரு சொல்லியிருக்காரு. வகுப்பு நடக்கும் போது தூண்ல பூனைய கட்டிப்போடச்சொல்லி. அதான் நாங்களும் பண்றோம்னு சொன்னாங்க. புது குருவும் எதோ காரணம் இருக்கும் போல. சரி இருக்கட்டும்னு விட்டுட்டாரு.இதை ஏன் சொல்றேன்னா. கலாச்சாரம்,, பண்பாடு, மயிரு, மட்டைன்னு ஏன்னு காரணமே தெரியாம நீங்க பண்ற சடங்கு, சம்ருதாயங்கள் எல்லாமே இப்படி பூனைய தூண்ல கட்டுன கதை தான். தாத்தன் பண்ணான் அதான் நானும் பண்றேன்னு சொல்ல தெரியுமே தவிர அதை ஏன் பண்ணான்னு சொல்லத்தெரியாது.அதெல்லாம் முட்டாள்தனம்னு சொன்னா என்னை பைத்தியகாரன்னு சொல்விங்க. சரி சொல்லிட்டு போங்க. அதானே உங்களுக்கு தெரியும்

ரசிகன் - தொண்டன் - பக்தன் பாகம் 2

அடிப்படையில் இந்த மூணுபேருமே ஒரே கேட்டகிரி தான். தன் ரசனையும், கொள்கையும், நம்பிக்கையும் தான் பெருசு என அதிகபட்சமாக கொலை செய்யும் அளவுக்குக்கூட போவாங்க. இந்த மூணு பேருமே பொதுபுத்தி அடிப்படையில் பெரும்பான்மை பக்கம் தான் இருப்பதாக காட்டிக்கொள்வதில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள். இவர்களுக்கு செலிபிரட்டி வொர்ஷிப் கண்டிப்பா செய்யனும். தன்னம்பிக்கை குறைந்தவர்கள். தம்மை யாரிடமாவது ஒப்புக்கொடுத்தே ஆகவேண்டும் இவர்களுக்கு.

இந்த லிஸ்ட்டை பற்றி நிறைய அலசலாம். ஆனாலும் இன்னைக்கு பார்க்கப்போறது தொண்டர்கள் பற்றி. குறிப்பாக அதிமுக தொண்டர்கள் பற்றி.

புரட்சிதலைவி அம்மா வழியில் ஆட்சி நடத்தப்படும் என்பதே இந்திய அரசியலைப்புசட்டபடி கோர்ட் தீர்ப்பை அவமதிப்பது. மக்களை முட்டாள் ஆக்குவது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட, மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஒருவரை இன்னும் தம் தலைமையாக கொள்வது நாங்களும் அதே தான் செய்வோம் என்பதை தவிர வேறென்ன கொள்கையாக இருக்கமுடியும்இந்த மூணு பேரிடமும் இருக்கும் தவறான, அதை விசமானன்னு கூட சொல்லலாம். எல்லா தில்லுமுல்லுகளையும் ஆதாரத்தோடு நிரூப்பித்தாலும் யார் சார் தப்பு பண்ணலன்னு வந்து நிற்பார்கள். இவர்களின் கொள்கை பிடிப்பு என்பது அவனை பிடிக்கல அதுனால இவனை பிடிச்சிருக்கு என்பதாகவே இருக்கு. அதிமுகவின் முதன்மை கொள்கை திமுக எதிர்ப்பு மட்டுமே.மன்னார்குடி குடும்பம் கையில் கட்சி போனதும் முகநூலில் பலர் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்கள். அதில் ஒருவர் இரட்டை இலை சின்னம் யாருக்கு போகுதோ அவர்களை ஆதரிப்பேன்னு பதிவு போட்ருக்கார். செலிபிரட்டி மோகம், சின்னம் என்ற ப்ராண்ட் மோகம் தான் இவர்கள் கொள்கை போல. அதனால் தான் கட்சிகள் மக்களை அனைவரையும் முட்டாளாக நினைத்து அந்த சின்னத்தில் கழுதை நின்னாலும் ஜெயிக்கும்னு சொல்றாங்க. அப்படினா ஓட்டு போடும் உங்கள் அனைவரையும் கழுதைன்னு சொல்றாங்கன்னு அர்த்தம். அது தெரியாம குட்டிசுவற்றில் பேப்பர் பொறுக்குவதில் பிஸியா இருக்காங்க இந்த தொண்டர்கள்.செயல்படாத அரசுன்னு போன ஆட்சியிலே சொன்னேன். ஜெயலலிதாவிற்கு பிறகு அரசியல் பழகாமல் யோகாசனம் பழகிய அமைச்சர்கள் மக்கள் நலதிட்ட பணிகளை யோசிப்பதை விட கட்சியை காப்பாற்றுவது, தன் பதவியை காப்பாற்றுவது என தியானநிலையில் பிஸியா இருக்காங்க

மோடி அரசு மன்னார்குடி குடும்பத்தின் மீது வன்மம் வைத்தே தாக்குதுன்னு வச்சிகுவோம். அது கூடாதுன்னா அடுத்து திமுக ஆட்சிகள் அவர்கள் ஊழலை வெளிகொண்டுவர மாட்டோம்னு சொல்றிங்களா உபிஸ்? நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு நீங்களே ஒத்துகிறிங்க. அதிமுகவை காப்பாத்தி நீங்க என்ன பண்ண போறிங்கன்னு எனக்கு புரியவேயில்ல. உங்க கட்சியில் இருப்பவனும் அதிமுக நல்ல கட்சி போலன்னு ஓடிபோயிருவான்

ஹேப்பி பர்த்டே டு மீ

பார்ன் இன் சில்வர் ஸ்பூன்னா வசதியான குடும்பத்தில் பிறப்பது தானே, ஆனா நான் அப்படி தான் வாழ்ந்தேன் என் பால்யத்தில்.

மதுரை தங்கரீகல் தியேட்டர் முன்னாடி பிரேமாவிலாஸ்னு ஒரு அல்வா கடை இருக்கும். அங்க தான் எங்கப்பா வேலை பார்த்தார். ரீகல் தியேட்டரில் ப்ரூஸ்லி படம் போட்டா ஒரு ஆட்டோகாரர்ட்ட பணம் கொடுத்து என்னை வீட்ல வந்து கூட்டிகிட்டு, அவரும் என் கூட படம் பார்த்து, இண்டர்வெல்லில் முத ஒரு ஐஸ்கிரீம், படம் போடப்போகும் சமயம் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து படம் முடிந்ததும் வீட்ல கொண்டு போய் விடனும்.

ஏழு வயசில் என் பிறந்தநாளுக்கு திருப்பரங்குன்றம் போற வழி ரெண்டாவது பாலத்துக்கு கீழ ஒரு பிள்ளையார் கோயிலில் அன்னதானம் பொட்டார். புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்த மாதிரி எனக்கு அந்த கோவிலில் தான் ஞானம் வந்தது. எல்லாம் சரி, இந்த கல்லு எப்படி சாமியாகும்னு அப்ப தான் கேட்டனாம்.

எங்கப்பா என்னை அடிச்சதில்ல, கேள்வி கேட்டாதன்னு சொன்னதில்ல. மொத பையன்னு செம செல்லம். ரெண்டாவது படிக்கும் போது என் பாக்கெட் மணி ரெண்டு ரூபாய். அப்ப பால் ஐஸே 15 பைசா தான்னா பார்த்துக்கோங்க. என் கிளாஸுக்கே வாங்கி தருவேன். அப்ப பழகியது இப்ப ஃப்ரென்ஸ்க்கு சரக்கு வாங்கி கொடுத்து நாசமா போனேன்.

ப்ரேக்கிங் பாயிண்ட்ன்னு பார்த்தா அப்பா, அம்மா பிரிஞ்சு நான் ஈரோடு வந்தது. கேட்க ஆளில்லாமன்னு சொல்றதை விட கத்து கொடுக்க ஆளில்லாமன்னு சொல்லலாம். 14 வயசிலயே தண்ணி, தம்மு எல்லாம் கத்துகிட்டேன். கூடவே மனிதன் என்ற கெட்ட பழக்கமும். இன்று வரை என்னுடன் பழகும் யார்ட்டயும் சாதி கேட்டதும் இல்ல, பார்ப்பதும் இல்ல. என்னை வாழ வைத்த மனிதத்தை பிரிச்சி பார்க்க எனக்கு பிடிக்கல

ஊனமுற்ற பெண்ணை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன். டைவர்ஸ் ஆன பொண்ணு ஒன்னு பிடிச்சு கல்யாணம் பண்ணேன். வர்ஷா பிறந்தப்ப கண்ணுல தண்ணி வந்துருச்சு. என்னடா பொண்ணுன்னு அழுகிறியான்னு அம்மா கேட்டாங்க,. இல்லம்மா அவளுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்னு நினைச்சேன்னு சொன்னேன். ஒன்னே போதும்னு நினைச்சேன். அவ விருப்பம் போல வருணாவும் எட்டு வருசம் கழிச்சி பிறந்தா.

ஆயிரம் முரண்பாடு இருந்தாலும் ஒன்னா தான் இருந்தோம். முதல் கண்ணம்மா வந்தா பிரச்சனை ஆச்சு. 4 வருசம் தனியா போய்ட்டா, திரும்ப வரப்போறா. இன்னைக்கு இப்ப பேசினோம். வர்ஷாவும், வருணாவும் பேசினாங்க. கண்ணம்மா, கன்னுகுட்டியெல்லாம் தூக்கி போட்டு நான் பெத்த ரெண்டு செல்லகுட்டிகளை நல்லா வளர்க்கனும்.

நல்ல வேளை ரெண்டும் பொண்ணா பெத்தேன். இல்லைனா அவனுக்கு நல்லது சொல்லி கொடுத்தே என் வாழ்க்கை போயிருக்கும்
இந்த பிறந்தநாளும் எனக்கொடு ப்ரேக்கிங் பாயிண்ட்
எவளாவது லவ் பண்ண மாட்டாளான்னு தொங்கிட்டு திரியிறதை விட என் பொண்ணுங்களை நல்லா வளர்க்க கவனம் செலுத்தலாம்

நான் வாழ்த்து என்ன கிழிச்சேனு நான் சொல்ல வேண்டியதில்ல, என் பொண்ணுங்க காட்டுவாங்க அதைஹேப்பி பர்த்டே டு மீ

திராவிடமும் நீர்த்துப்போன கொள்கைகளும்!

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஒரு கோவிலில் கும்பிட்டு கொண்டு இருப்பதை கிண்டல் செய்து போஸ்ட் போட்ருந்தேன். ஏன் திமுகவில் இருந்தா சாமி கும்பிடக்கூடாதா என்ற கேள்வி கமெண்டாக வந்தது. அதை இன்னொரு திமுக அனுதாபி கேட்ருந்தா எப்படியோ நாசமா போங்கன்னு போயிருப்பேன். ஆனா கேட்டது ஒரு இந்துத்துவாவாதி. திராவிட கொள்கைகள் நீர்த்து நாசமாய் போவதில் வேற யார் அவ்வளவு மகிழ்வடைய முடியும்.

ஒரு கட்சியில் உறுப்பினர் ஆக அடிப்படை கட்டுமானமே கொள்கைகள் தான். பாஜகவிற்கு இந்துத்துவா கொள்கை, பாமகவிற்கு பாட்டாளி மக்கள் எழுச்சி கொள்கை(அப்படின்னு சொல்லிகிறாங்க) திராவிர கட்சிகளுக்கு சமூகநீதி கொள்கை பொதுவா இருந்தாலும் திராவிட கட்சிகளின் வேர் பெரியாரின் கொள்கை கடவுள் மறுப்பு, அதை அதிமுக தண்ணீரில் கரைத்தது. இப்ப திமுக காற்றில் கரைக்குது.

நான் பெரியாரிஸ்ட், இப்பொழுது தமிழ்தேசியவாதி. என் கடவுள் முருகன் என்று தன் கொள்கைகளை மாற்றிகொண்ட ஒருவரை மற்ற பெரியாரிஸ்டுகளால் ஏற்றமுடியவில்லை. இருக்காது எங்கிறார்கள்/. பெரியார் அடிமை அதாவது பெரியார்தாசன் என்று பெயர் வைத்துக்கொண்ட சேஷாசலம்  அப்துல்லாவாக மாறியது மறந்துபோய்விட்டது போல. இந்த கொள்கை முரணுக்கு அடிப்படை சிக்கல் என்ன என்பதை பெரியாரிஸ்டுகள் யோசிக்கவேயில்லை

பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றது சுற்றி நடந்த அவலங்களால். அவரின் அடிப்படை கேள்விக்கு பதில் இல்லாத காரணத்தால் ஆனால் அவருக்கு அறிவியல் பூர்வமாக கடவுள் மறுப்புக்கு ஆதாரம் எதுவும் இருந்திருக்காது. பெருவெடிப்பு கொள்கையே 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே காலத்தில் வாழ்ந்த பெரியாருக்கு உலகம் எப்படி தோற்றியது என்று அதிக பட்ச சாத்தியகூறுகளாக விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று  இருக்கு என்பதே தெரியுமா தெரியாதா என தெரியவில்லை.மக்கள் பெரும்பாலும் பொதுபுத்தி கொண்டவர்கள். என்னிடம் கடவுள் இருப்பை நிரூபிக்கமுடியாத சிலர். அந்த ஜட்ஜ் சாமி கும்பிடுறார், அந்த டாக்டர் சாமி கும்பிடுறார் அவர்களெல்லாம் முட்டாளா என்பார்கள். திராவிட இயக்கத்தில் மட்டுமல்ல, இடதுசாரிகளில் இருப்பவர்களுக்கு கூட பிரிவினை வாதத்திற்கு எதிர்பாகதான் கடவுள் மறுப்பு உள்ளது. கடவுள் மறுப்பு என்ற பதத்தை உடைக்க சில சலுகைகளும், சில தேவைகளும், சில தேற்றல்களும் போதுமானதாய் இருக்கிறது.

உங்களால் ஆணிதரமாக கடவுள் மறுப்பு கொள்கையில் நிலைக்கமுடியவில்லை என்றால் நீங்கள் நாத்திகன் என்ற மதத்தை உருவாக்கி வருகிறீர்கள் என்ற உண்மையை திராவிர கட்சிகள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக திகவும், திமுகவும். ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்றது, கிறிஸ்துமஸ்க்கு கேக் வெட்றது சிறுபான்மையினர் நலன்னா ஆவணி அவிட்டத்திற்கு பூணூல் சப்பி கோர்த்து கொடுக்கலாம். ஏன்னா பார்ப்பானும் சிறுபான்மையினர் தான் இந்தியாவில்.

ஓட்டை காசுக்கு விற்பதும், கொள்கையை ஓட்டுக்கு விற்பதும் ஒன்று தான். தமிழகத்தில் இருக்கும் திராவிர கட்சிகளை அழிக்க வெளியே இருந்து ஆள் தேவையில்லை. உள்ளிருக்கும் நீங்களே போதும்..

தோற்றம் - பரிணாமம்

அண்ணே, இந்த உலகம் எப்படி உருவாச்சுன்னு சொல்லுங்கண்ணே

மண்டைகுள்ள ஏற்கனவே இருப்பதையெல்லாம் கழட்டி அக்கட்ட வச்சிட்டு கேளு. இல்லைனா எல்லாத்தையும் எது கூடவாவது கம்பேர் பண்ணிட்டு இருப்ப

சரி சொல்லுங்க.

ஒண்ணுமேயில்ல

என்னாண்னே பொசுக்குன்னு முடிச்சிட்டுங்க

அடேய், இப்ப தான் ஆரம்பிச்சிகிறேன். எதுவுமேயில்ல அதாவது nothing. சரியா ஒண்ணுமேயில்ல என்பது ப்ளாங்க். அதற்கு கற்பனை கூட தேவையில்ல. ஒரு விபத்து ஏற்பட்டது. அதாவது ஒரு எனர்ஜி உருவாச்சு

இந்தா மாட்டிகிட்டிங்க

என்னடா.

நீங்க சொல்ற எனர்ஜி தான் நாங்க சொல்ற கடவுள்

சரி வச்சிக்கோ

அப்ப கடவுள் இருக்குன்னு ஒத்துகிறிங்களா

நீ தான் கடவுள் இல்லைன்னு ஒத்துகிட்ட

என்ன சொல்றிங்க

நான் nothingனு சொன்னேன். நீ godனு சொன்ன. அப்படினா nothing is god, god is nothing.

திரும்பவும் கடவுள் இல்லைன்னு சொல்றிங்களா

நான் ஆரம்பத்தில் இருந்தே அதை தானடா சொல்லிகிட்டு இருக்கேன்

சரி மேல சொல்லுங்க

உருவான எனர்ஜி ஒரு அழுத்தம் உருவாக்குச்சு, அழுத்தம் இருந்தால் நகர்வு இருக்கும், நகரனும்னா அதற்கு இடம் வேணும். அங்க தான் ஒன்னுமேயில்லயே. ஆக அந்த எனர்ஜி நகரமுடியாமல் வெடிச்சது. அது தான் பெருவெடிப்பு எனப்படும் பிக்பேங்க்.அதுகுள்ள இருந்து இத்தனையும் வந்துச்சா?

அதென்ன ஃப்ரிஜ்ட் பொட்டியாடா உள்ள இருந்து வர்றதுக்கு. அந்த வெடிப்பு கொடுத்த அழுத்தம் வெப்பத்தை உண்டாச்சு, வெப்பம் மின்னோட்டத்தை உருவாக்குச்சு. அதுக்கு அளவுன்னு எதும் கிடையாது. ஆனா “இடத்தை உருவாக்கியது” அந்த மின்னோட்டம் தான் முதல் பொருள்னு சொல்லலாம்.மின்னோட்டம்னா அலை தானே, அது எப்படி பொருளாகும்.

அந்த மின்னோட்டம் ஒரு பந்து மாதிரி வேகமாக சுற்றிகொண்டே இருந்தது. இதை புரிய வைக்கனும்னா சைக்கிள் டயர் எடுத்துக்கோ அது சுற்றாம இருக்கும் போது உன்னால் ஒரு பொருளை அதன் இடையில் வீச முடியும். அதுவே வேகமா சுற்றும் போது அது ஒரு தடுப்பா செயல்பட்டு தடுக்கும்ல.

அங்க போக்ஸ் கம்பி இருக்கும்ல.

பாயிண்ட் பிடிச்சிட்ட, அங்க போங்க்ஸ் கம்பி இருக்கு தடுத்தது. ஆனா வேகமான காத்து எப்படி பொருளை தடுக்குது. உன்னால் ஒரு பலூனை மேல் நோக்கி ஊதியே தள்ளி முடியும், அந்த இடத்தில் பொருளா இல்லாத காற்று தடுப்பா இருக்குதுல்ல. அது மாதிரி அந்த மின்னோட்டத்தின் வேகம் தடுப்பா செயல் பட்டு உலகின் முதல் பொருளாக உருவெடுத்தது. அங்கே தான் இடமும், காலமும் உருவாச்சுஅந்த பொருளுக்கு எதும் பேரு இல்லையா?

இதெல்லாம் நான் படிச்சு சொல்லல, அதுக்கு அவங்க எதாவது பேர் வச்சிருப்பாங்க. நீ அந்த கற்பனையில் அந்த பொருளை மட்டும் நினைச்சிக்கோ

அந்த ஒரு பொருளில் உலகம் எப்படி உருவாச்சு

அந்த பெருவெடிப்பு அங்கேயே நிற்கல. அதன் அழுத்தம் தந்த விசை அது இடத்தை உருவாக்கிக்கொண்டே போனது. அந்த அழுத்தம் எவ்ளோன்னு உனக்கு புரியும் படி சொல்லனும்னா இந்த மொத்த பிரபஞ்சத்தையும் அந்த ஒன்றை புள்ளியில் இருந்து வெளிபட்டதுன்னா அதோட அழுத்தத்தையும், வேகத்தையும் பார்த்துக்கோ

மொத்த பிரபஞ்சமுமா, முதல்ல அதென்ன ஃபிர்ட்ஜ் பொட்டியான்னு கேட்டிங்க

முதல் பொருள் உருவாச்சுன்னு சொன்னேன்ல, அதில் இருந்து பரிணாமம் பெற்று மாறியது தான் இந்த பிரபஞ்சம். இடம் விரிவடையும் போது அந்த மின்னோட்ட பொருள் மேலும் மேலும் உருவாகிக்கொண்டே இருந்தது. அது ஒன்றை ஒன்றை ஈர்த்து மேலும் வெப்பத்தை உண்டாக்கி மின்னோட்டம் அதிகமாகிக்கொண்டே போனது. பொருள் அதிகமாக ஆக மேலும் அழுத்தம் ஏற்பட்டு அது ஒன்றுடன் ஒன்று இணைந்தது. உருவம் பெற்றது. அந்த உருவத்தை சுற்றி மின்னோட்டங்கள் சுற்றி வந்தன.

ரைட்டு, எலைக்ட்ரான், புரோட்டான் பற்றி சொல்றிங்க

அதான் இந்த உலகமும்.எலைக்ட்ரானும், புரோட்டனும் போட்டுகொண்ட போட்டியில் அல்லது அழுத்தத்தில் ஏகப்பட்ட தனிமங்கள் உருவாகின. தனிமங்கள் இணைந்து உலோகங்கள் உருவாகின. உலோகங்கள் இணைந்து கோள்களாக மாறின. இப்படி தான் உலகம் உருவாச்சு.

இதான் உண்மைன்னு எதை வச்சு சொல்றிங்க.

முதல் காரணம், அந்த பெருவெடிப்பின் தாக்கம் இன்னும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்துக்கொண்டே இருக்கு. இரண்டாவது காரணம் அந்த மின்னோட்டங்கள் இன்னும் இணைந்தும் பிரிந்தும் புது கோள்களை உருவாக்கியது. இருக்கும் கோள்கள் அழித்தும் மீண்டும் உருவாகுது

அதற்கு ஏன் கடவுளை மறுக்கனும்

கடவுள் தோற்றம் நோக்கம் கொண்டது. ஆனால் பெருவெடிப்பு எந்த நோக்கமும் கொண்டதல்ல, அதற்கு நீ நன்றி சொல்லவும் தேவையில்ல. ஏன்னா அது ஒரு விபத்து.

கடவுளுக்கும் உங்க அறிவியல் கோட்பாடும் எந்த இடத்தில் வேறுபடுது

உலகம் கடவுளால் படைக்கபட்டது என்றால் அதற்கு நிலைதன்மை இருக்கும். அணுக்கள் மாறி மாறி பிரிந்தும், சேர்ந்தும் நிலையற்ற தன்மை இருக்காது. கடவுள் தான் உலகத்தை படைத்தார் என்றால் கடவுளை படைத்தது யார் என்ற கேள்வியும் வரும்

அதான் முதல்ல நீங்க சொன்ன எனர்ஜி

அதை நான் திரும்பவும் சொல்றென். நத்திங் இஸ் காட், காட் இஸ் நத்திங்


நான் ஒரு முட்டாள்!

பிறப்பால் ஒருவர் அறிவாளி என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனக்கு நாலு விசயம் தெரியும்னா அதுக்கு இரண்டு காரணங்கள் இருக்கு
ஒன்று 3 வயதிலேயே எனக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்கு போட சொல்லிக்கொடுத்து யோசிக்க வைத்தது. இரண்டு சும்மா சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்காதன்னு என்னை மொன்னையாக்காமல் விட்டது. பகுத்தறிவின் பாலபாடமே இது இரண்டும் தான் என்பது என் புரிதல்.

அதிகபட்ச சாத்தியகூறுகள் இல்லாத எதையும் நம்பிக்கை அடிப்படையில் நான் ஏற்பதில்லை. அதன் சாத்தியகூறுகளை அறிய பகுத்தறிவு வேண்டும். மதம் சார்ந்த கேள்விகளையும், புரிதலையும் பயபடாமல் எழுது என எனக்கு கையை பிடித்து ஆனா போட கத்து கொடுத்தது தருமி அய்யா, ஆனால் அவர் மதம்/கடவுள் சார்ந்த விவாதங்களுக்கு மட்டும்  அறிவியலை துணைக்கழைப்பார். ஒருவேளை அரசியல் பேராசியராய் இருந்ததால் அதன் மேல் அதிக ஆர்வம் காட்டவில்லை போல.

முகநூலில் பாபு மற்றும் ராஜ்சிவா நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதுவாங்க. எனக்கும் அறிவியல் மேல் தீராத காதல் உண்டு. அரசியல்/மதம் சார்ந்த விசயங்கள் அப்போதைய பிரச்சனை குறித்து தான் எழுதுவேன். அறிவியல் மட்டும் தான் இறந்த காலத்தில் தொடங்கி எதிர்காலத்தை நோக்கி பயணத்திக்கொண்டே இருக்கும்.

ஆனால் முகநூல் நண்பர்கள் இரண்டு வரி பதிவுகளையே விரும்புகின்றனர். ஒரு கமெண்டை படிக்கும் போதே அதற்கு பதில் அளிக்க எனக்குள் பல விவாதங்கள் நடக்கும். ஒரு கமெண்டுக்கே அப்படினா ஒரு பதிவு எழுத எவ்ளோ யோசிக்கனும். ஆனாலும் படிக்கும் நாற்பது நண்பர்களோ போதும்னு திருப்தி அடைஞ்சிட்டேன். அதில் சந்தேகம் கேட்பவர்களையும், புரிதல் கொண்டவர்களையும் என்னை கண்ணாடியில் பார்ப்பது போல் உணர்கிறேன்.

ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று பலர் ஆர்வம் இல்லாமல் இருப்பது வருத்தம் தான். ஒரு நண்பர் வானவியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதுவார். நாசா கண்டுபிடித்த புதிய கோள்கள். அதன் தன்மை என பல சுட்டிகளோடு. ஆனா கடைசியில் தென்னாட்டுடைய சிவனே போற்றின்னு முடிச்சிருவார். பதிவை விட்டுட்டு அந்த ஒரு வரிக்காக அவருடன் விவாதிப்பேன். கடைசி வரை கடவுள் இருக்குன்னு அவரால் நிரூப்பிக்கமுடியவில்லை ஆனால் எனக்கு கடவுள் வேணும்னு முடிச்சிட்டார். ஒருவருக்கு என்ன வேணும், வேண்டாம் என்பது அவர்களது தனிபட்ட உரிமை. கஷ்டப்பட்டு எழுதியிருக்கேன் ஏன் படிக்கலன்னு யார் சட்டையையும் நான் பிடிக்கமுடியாது.

அதை படிக்காமல் போகின்றவர்கள் அறிவாளியாகக்கூட இருக்கலாம். என்னை போன்ற கற்றும் ஆர்வமுள்ளவர்கள் சிறிதேனும் நாமும் அறிவாளி என நினைக்கத் தொடங்கினால் அன்றோடு கற்கும் ஆர்வம் போய்விடும். கற்றல் இல்லாத மனிதம் ஒரே இடத்தில் தேங்கிய குட்டை போன்று. நான் நதியாக இருக்க விரும்புகிறேன். அதனால் என்னை முட்டாள் என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.எழுத்தாளர் ஆகனும்னு நான் சின்னவயதில் நினைத்ததில்லை. கற்றலும், எழுத்தும் சிறந்த ஆர்த்துபடுத்தனராக அறிந்தபொழுது எனது அறிவியல் கட்டுரைகளை அச்சில் ஏற்றவேண்டும் என்று ஆசை வந்தது. அதனால் சில தகவல்கள் என்ற ஹேஷ்டேக்கில் அறிவியல் துணுக்குகள் எழுதினேன். இனி அந்த அறிவியல் செய்தியில் இருக்கும் சாத்தியகூறுகளையும் சேர்த்து புரியும்படி எழுத வேண்டும் என நினைக்கிறேன்.

நான் கேள்வி-பதில் பகுதி எழுதியது எனக்கு எல்லாம் தெரியும் என்று அல்ல. உங்கள் கேள்வி ஒரு புது விசயத்தை படிக்க என்னை தூண்டும் என்ற ஆவலினால் தான். அதே போல் தான் விவாவத்தையும் விரும்புவேன். இவையெல்லாமே என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பவை.

சாத்தியகூறுகளுடன் எழுத இருக்கும் சில விசயங்கள்

எந்திரன் பட ரோபோ போல் அவ்வளவு வேகமாக படித்து ஞாபகம் வைத்திருப்பது சாத்தியமா?

காலபயணம் சாத்தியமா?

மேலும் உங்கள் கேள்விகளுக்கும் சாத்தியகூறுகளுடன் எழுத முயற்சிக்கிறேன்

சர்வாதிகாரம்!

மிடில்கிளாஸ் வர்க்கத்தின் வருமானத்தில் பெரும்பகுதியை பிடிங்கிகொள்வது கல்வி கட்டணம் தான். அந்த ஆதங்கதில் தான் யாராவது அனைவருக்குமான கல்வியை இலவசமா தர மாட்டாங்களான்னு எதிர்பார்க்க வேண்டியிருக்கு.

பாஜக போன்ற வலதுசாரி ஆதரவாளர்கள் முதலாளித்துவ சிந்தனையில் ஊறி போனவர்கள். அவர்கள் தொழ அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பெரும்முதலாளி வேண்டும். யாரும் இல்லையென்றால் அவர்களே யாரையாவது உருவாக்குவார்கள். 5 வருசம் முன்னால் அதானி யாருனே எனக்கு தெரியாது.இன்னைக்கு அதானியை தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணிரலாம்.

வலசு சாரிகள் வர்க்க சிந்தனையில் ஊறிபோனவர்கள். ஏழ்மைக்கு விதியே காரணம் என்பார்கள். பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பார்கள். அவர்களின் தற்போதைய ஆயுதம் தேச பக்தி. அதை உங்கள் கழுத்தி வைத்து மிரட்டுகிறார்கள். மதவாதத்திற்கும், அதிகாரமையத்திற்கு எதிராக பேசுபவர்களையும் தேச துரோகிகள் என்று குற்றம் சாட்டுவது அவர்களின் வர்க்க சிந்தனையை மறைமுகமாக பயன்படுத்துவது தான்.

நானும் இந்தியாவில் வரி கட்டும் இந்தியன் தான் என்ற பத்திரிக்கையளரை நீ எவ்ளோ வரி கட்ற, அந்த பணத்தை நான் தர்றேன்னு ஒரு தேசிய தலைவர் சொல்கிறார் என்றால் இங்கே கேள்வி கேட்கவே மறுக்கப்படுகிறது என்று அர்த்தம்.தனிமனித உரிமைக்காக போராடுவதை ஒடுக்குவதும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதும், கேள்வி கேட்கவே மறுக்கப்படுவதற்கும் இன்னொரு பெயர் உள்ளது. அதனை சர்வாதிரிகாரம் என்பார்கள். ஆனால் வரலாறு நமக்கு சொல்லிகொடுத்த பாடம் சர்வாதிரிகாரிகள் கடைசி காலத்தில் உயிர்பிச்சை கேட்டு அழைவார்கள்.

வாலிஸம்!

இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம்.

நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் மாற்ற முடியாது. அதை அனுபவமா எடுத்துக்கமே தவிர அதை நினைத்து புலம்புறது வேஸ்ட்.(இது ஏன் முதல்ல வருதுன்னா அதை கடைபிடிக்கத்தான் படாதபாடு படுறேன்)

என்னை நியாயபடுத்திக்க யாரையும் குற்றம் சாட்டக்கூடாது

பிச்சை, உதவி என்ற வார்த்தையே இல்ல, இல்லாதவங்களுக்கு செய்யுறது நம் கடமை

குற்ற உணர்ச்சி இல்லாம வாழ ஓப்பனா இருக்கனும் அதுக்கான முடிந்தவரை உண்மை பேசனும்.

வாழ்க்கை ஒரு முறை தான். அதை நம்பனும். நான் வாழ்ந்த தடத்தை பதிக்கனும். அட்லீஸ்ட் வாழ்ந்தேன்னு காட்டனும்

என் சந்தோசத்துக்கு யாருக்கும் செலவு வைக்கக்கூடாது. அதை கடனா நினைத்து அடுத்த முறை கொடுத்தரனும்

ஆலோசனைகும் அட்வைஸ்க்கும் வித்தியாசம் தெரியாவங்க நிறைய பேரு இருக்காங்க, அதுனால உரிமை எடுத்துக்கக்கூடாது

எனக்கு இழப்பே ஏற்பட்டாலும் தனி மனித உரிமைக்காக மட்டுமே பேசனும். யாரையும் குற்றம் சாட்டக்கூடாது

எதிர்காலம் குறித்த திட்டமிடல் வேஸ்ட். அது அந்த நொடியில் என்ன தேவையோ அதை எடுத்துக்குது, இப்பவே திட்ட்மிட்டு ஒன்னு ஆகபோறதில்ல

சக மனிதர்களின் அடையாளம் பார்க்கக்கூடாது.

பிடிக்கலைன்னு சொன்னா பொண்டாட்டியா இருந்தாலும் தொடக்கூடாது

அழுகை வந்தா அழனும், சிரிப்பு வந்தா சிரிக்கனும்

என் குழுந்தைங்க பூமிக்கு வர நான் ஒரு கருவி தாம், நான் அவங்களுக்கு ஓனர் இல்ல

இறப்பு என்பது மனிதத்தின் விடுதலை. விட்டு போறோம் அவ்ளோ தான். நாம இருக்கனும்னா இங்கேயே எதாவது பண்ணிட்டு போகனும். மறுபிறவின்னு ஒன்னு இல்ல

#வாலிஸம்

வாங்க பேசலாம்!

நான் ஏன் நாத்திகனானேன்!
******************************************

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை முட்டாள்கள் என்றோ, வாழ தகுதியற்றவர்கள் என்றோ நான் எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை, நான் ஏற்கனவே பொதுபுத்தி பதிவில் சொன்னது போல் “உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது” என சொல்ல எனக்கு எப்படி உரிமை இல்லையோ, அதே போல் கடவுள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என சொல்லவும் உரிமை இல்லை!

ஒரு செயலின் விளைவை பொறுத்தே அது சமூகத்திற்கு நன்மை அளிப்பதா அல்லது தீமை அளிப்பதா என தீர்மானிக்கப்படுகிறது, அந்தளவில் கடவுளை மறுப்பதோ அல்லது ஏற்றுக்கொள்ளுதலோ குற்றம் அல்ல, பொருள் சார்ந்த சமூகத்திலிருந்து அறிவு சார்ந்த சமூகத்திற்கு மாறிய நாகரீக காலம் முதல்.. நம்பிக்கை, அதன் செயல் மற்றும் விளைவு அனைத்தும் விவாதத்துக்குள்ளாக்கப்படுகிறது, அவையனைத்தும் எண்களின் முடிவைப்போல முடிவிலியாக தான் இழுத்து கொண்டிருக்கிறது என்பது உண்மை!

சிறிய உதாரணத்துடம் சொல்ல முயல்கிறேன் -

ஒரு அறை, முழுவதும் இருள் சூழ்ந்து இருக்கிறது, நம்பிக்கையாளன் அதன் உள்ளே உயரிய எதோ ஒன்று இருக்கிறது என்கிறான், அதனை கடவுளாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம், மறுப்பாளான்(இல்லை என்ற நம்பிக்கை, நம்பிக்கையே இல்லை என்று பொருள் தராது, ஆகையால் அவநம்பிக்கையாளன் என்ற சொல்லாடலை தவிர்க்கிறேன்), அவை வெறும் இருள் மட்டுமே அல்லது நீ நினைப்பது போல் அது ஒன்றும் உயரிய பொருள் அல்ல அதை தெளிவுறாமல் குருட்டு(இருட்டு) நம்பிக்கை கொள்ளாதே என்கிறான்! இவையே கடவுள் நம்பிக்கையாளனுக்கும், கடவுள் மறுப்பாளனுக்கும் உள்ள ஆரம்ப விவாதப்புள்ளி.

நம்பிக்கையாளர்களின் மிக சொற்பமே அதை ஆராய்ந்து தெளிவுற விரும்புகிறார்கள், அவ்வாறு ஆராய்ந்தவர்களும் கடவுளும் இல்லை, கண்றாவியும் இல்லை என புதியதோர் ஆன்மீகபாதையை காட்டி சென்று விடுகிறார்கள், பின்னால் வருபவர்கள் அதை வைத்து கல்லா கட்டுவது வேறு விசயம்! கடவுள் இல்லை என்று நம்பிக்கையாளனே தெளிவுற்றாலும் அவனால் தீர்க்கமாக வெளியே சொல்ல முடிவதில்லை, சமூகம் என்னும் விளக்கமாறு அதன் பயன்பாட்டை பூர்த்தியடைய செய்ய மேல் முனையில் குஞ்சத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். குழுமமாக செயல்படுத்தல், தனிமனித ஒழுக்கம், பிறப்பின் பயனை மெய்பித்துவிட்டு செல்லுதல் போன்ற சமூக காரணிகளை கட்டுக்குள் வைத்திருக்க கடவுள்/மதம் என்ற குஞ்சம் தேவைப்படுகிறது அல்லது பட்டது!

ஆனால் இங்கே நடப்பது என்ன? விளக்கமாறு முழுவதும் குஞ்சம் கட்டப்பட்டிருக்கிறது, கடவுளின்/மதத்தை தேவை மறந்து என் கடவுள் பெருசு, என் மதம் சிறந்தது என்ற ஈகோ ஆரம்பித்து விட்டது, எல்லா முனைகளிம் குஞ்சம் கட்டபட்ட விளக்கமாறு இன்று தடித்த ஆயுதமாக காட்சியளிக்கிறது, என் மதம் அமைதியே உருவானது, அது அன்பை மட்டுமே போதிக்கிறது என்பவனை, இவன் அந்த மதத்தின் சிறப்பான பகுதிகளை மட்டும் பார்த்து பேசுகிறான் என நேர்மறையாக சிந்தித்தாலும் அவன் சொன்ன மதத்தின் செயல்பாடுகள் ஒருவேளை முதுகுபுறம் ஆயுதம் வைத்திருப்பானோ என எதிர்மறையாக சிந்திக்க் வைக்கிறது.மதம், சடங்குகள் அதன் பயன்கள் இப்படியான இத்யாதிகளை ஒதுக்கி வைத்து ஏன் கடவுள், எப்படி கடவுள் என சிந்திக்க தொடங்கினாலே போதுமானது, நான் ஏற்கனவே சொன்னது போல் இருட்டறைக்குள் ஆராய்ந்து தெளிவுற நம்பிக்கையாளர்களுக்கு தைரியமோ அல்லது ஆர்வமோ இல்லை. முதலில் தோல்வி பயம் இரண்டாவது இத்தனை பேர் சொல்றாங்க, அது எப்படி இல்லாம இருக்கும் என்ற பொதுபுத்தி!

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இருட்டறைக்குள் எதோ உள்ளது என்ற நம்பிக்கையை, அதன் மறுப்பாளன் விஞ்ஞானம், தத்துவ ஆராய்ச்சி, உளவியல் பகுப்பு என பல வழிகளில் வெளிச்சத்தை உருவாக்கி அறையில் இருளை போக்கி கொண்டிருக்கிறான், இதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே முடியும் என சொல்லப்பட்ட பல செயல்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு விட்டது, கடந்த 500 வருடங்கள் அறிவு சார்ந்த சமூகம் அதன் வீச்சை முழுவதுமாக செயல்படுத்த தொடங்கிவிட்டது, ஆனாலும் பிற்போக்கு பழமைவாதிகளால் உண்மையை ஏற்று கொள்ள முடியவில்லை.

இந்த விவாதம் சண்டைக்காக அல்ல, நீங்கள் எனது எதிரியோ விரோதியோ அல்ல. கடவுளை நீங்களும் பார்த்ததில்லை, நானும் பார்த்ததில்லை. ஆனால் உங்களை விட ஆர்வமாக இருட்டறைக்குள் வெளிச்சம் கொடுக்கும் வேலையை கடவுள் மறுப்பாளனே செய்து கொண்டிருக்கிறான் என்பதை நீங்களே அறிவீர்கள், நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான், வாருங்கள் இருவரும் தேடுவோம், விவாததின் தெளிவில் அறிவு சுடர் ஏற்றி இருளை போக்குவோம்!
அங்கே நீங்கள் சொன்னது போல் உயரிய பொருள் இருந்தால் அப்போதிலிருந்து நானும் கடவுள் நம்பிக்கையாளன், அது வரை நான் கடவுள் மறுப்பாளனாகவே இருக்க விரும்புகிறேன்!

இருட்டுக்கு டார்ச் அடிக்கும் முயற்சியில்!............

#வால்பையன்

குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல!?

பரிணாமம் குறித்தான புரிதல் இல்லாதவர்கள் கேட்கும் பொதுவான கேள்வி “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல” குரங்கிலிருந்து மனுசன் வந்த மாதிரி ஒரு படத்தை காட்டி, மேலும் படிக்கும் போது எங்களுக்கு அப்படி தான் சொல்லி கொடுத்தாங்கன்னு சொல்லி. இப்ப இருக்குற குரங்கு ஏன் இன்னும் மனுசனாகல, அல்லது எப்ப மனுசன் ஆகும்னு கேக்குறாங்க.அறிவியல் வகுப்பில் சொல்லி கொடுக்கும் ஏன் பரிணாமம் குறித்தான புரிதல் பரவலா போய் சேரலன்னு யோசிச்சேன். பள்ளி முடிந்ததும் யாரும் யாரிடமும் பரிணாமம் குறித்தோ, அறிவியல் குறித்தோ பேசுறதில்ல. அதில் பெரும்பாலோனோர்க்கு ஆர்வமும் இல்ல. தினம் அவர்கள் சந்திக்கும் வார்த்தைகள். சாமி கும்பிட்டியா?, இன்னைக்கு புரட்டாசி விரதம், இன்னைக்கு சஷ்டின்னு எல்லாமே ஆன்மீகம் சம்பந்தமா தான். அம்மணகட்டையா சுத்துற ஊருல நாம மட்டும் எப்படி துணி உடுத்தி சுத்துறதுன்னு அறிவியல் படிச்ச பயபுள்ளைங்கலும் பெரும்பான்மை பொதுபுத்தியில் பக்தி பழமா சுத்திகிட்டு இருக்காங்க. இது தான் மத வெறியா மாறுது.

பரிணாமம் என்பது நம் கண்களால் பார்த்து உணர கூடிய மாற்றமல்ல, அதற்கு பல நூற்றாண்டுகள் எடுத்துக்கொள்ளும். அவைகள் விட்டுசென்ற சுவடுகள் தான் பரிணாமத்திற்கான ஆதாரம். அவைகளை கூட அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். விவாதித்து அதில் இருக்கும் அதிக பட்ச சாத்தியகூறுகளை ஆராய்ந்தால் போதும். பரிணாமம் எந்த அளவு உண்மை என்பது உங்களுக்கு புரியும்.

குரங்கிலிருந்து மனிதன் என்பதில் உள்ள குரங்கு ஒரு பொது பெயர். குரங்கிற்கும் நமக்கும் மூதாதையர் ஒன்றே என்பதன் சுருக்கம் அது. அந்த இனத்திலிருந்து வேவ்வேறு பாதையில் பிரிந்த உயிர்கள் தங்கள் வாழும் சூழலுக்கேற்ப தம்மை தகவமைத்து கொண்டன. அதனால் குரங்கில் கூட இத்தனை வகையில் உள்ளன. அத்தனை வகை குரங்குகளும் பரிணாமம் குறித்து நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடும். மாற்றம் என்பது என் தேவையை பொறுத்து என்பதே.

காங்கோ ஏரியாக இருந்து நதியாக மாறியபொழுது இரு பக்கமும் பிரிந்த சிம்பன்சி வகையில் ஒன்று இன்று போனோபோ வகை சின்பன்சியாக மாற்றம் அடைந்துள்ளது. கற்றலில் சின்பன்சியை விட வேகமாக உள்ளது. குரங்குகள் குரல்,,முக பாவனை,, உடல்மொழி மூலம் தகவல் தொடர்பு கொள்கிறன்றது. மனிதனின் இவ்வளவு வேக வளர்ச்சிக்கு காரணம் நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்கு புரியவைக்க மொழியை கண்டுபிடித்ததே. மொழி இல்லையென்றால் நாம் இன்னும் கற்கால மனிதர்களாக தான் இருந்திருப்போம்.

மனிதர்களில் சீனா பகுதிகளில் குளிர் அதிகம் என்பதால் வேர்வையில் இருந்து கண்ணை பாதுகாக்க வேண்டிய புருவ அடர்த்தி தேவையில்லாமல் போயிற்று, ஆப்பிரிக்க பகுதிகள் அதிக வெயில் காரணமான தோலில் மெலனின் அதிகமானது. நான் குத்தும் பச்சை என்னோடு அழிந்து போனால் முடிந்து போனது. அது என் சந்ததினர்கும் தொடர்ந்தால் அது தான் ஜெனடிக்கல் மியூட்டேசன். பலர் ஜெனடிக்கல் மியூட்டேசனை ஏற்றுக்கொள்வதில்லை. அது செயற்கையாக நடப்பதாக அவர்கள் வாதம். அணு கதிர் வீச்சும், ஜி.டிநாயுடுவின் ஊசி போட்டு பழசுவையும் மாற்றும் கடந்த நூறு ஆண்டுகளில் நடந்தது. ஆனால் ஜெனிடிக்கல் மியூட்டேசன் காலம் காலமாக உள்ளது. அது பரிணாமத்தின் ஒரு அங்கம்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆரஞ்சு, சாத்துகுடி, எலுமிச்சை சுவையிலும் உருவத்திலும் மாற காரணம் ஜெனிடிக்கல் மியூட்டேசன்.  ஒரு உறுப்பின் பயன்பாடும் பரிணாமத்தில் முக்கியமானது. குரங்குகள் முன்னங்காலை, காலாகவும் பயன்படுத்துகிறது, கையாகவும் பயன்படுத்துகிறது. மனிதனுக்கு அடுத்து குரங்கு, குரங்குக்கு அடுத்து முன்னங்காலை கையாகவும் பயன்படுத்தும் விலங்கு கரடி. இந்த பயன்பாடு அவற்றின் தோற்றத்தையும், வாழ்க்கை முறையையும் மாற்றும். அதுவே பரிணாம மாற்றம்.

உருவம் சிறுத்தல் அல்லது பெருத்தல், உறுப்பு இழத்தல் அல்லது பெறுதல் என்று நிகழும் மாற்றங்கள் நம்மால் உணர முடியாது.  அந்த மாற்றங்களுக்கு அவை பல நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்/. அதே நேரம் அந்த மாற்றம் கண்டாயமல்ல என்பதையும் உணருங்கள். இந்த மாற்றங்கள் உடல் மற்றும் உயிர் வாழ தேவையை பொறுத்து அமைகிறது. எந்த மெனக்கெடுலும் இல்லாமல் இந்த அமைப்பிலேயே எல்லாம் கிடைக்கும் போது மாற்றத்திற்கான அவசியம் இல்லாமல் போயிகிறது. பல லட்சம் வருடங்களாக ஜெல்லி மீன் அப்படியே தான் இருக்கு. சுறா மீன் அளவில் மட்டும் சுருங்கியுள்ளது.

கூர்ந்து கவனித்தால் நம் கண் முன் காணப்படும் பரிணாம சுவடுகளை பலவற்றை காணலாம். முட்டையிட்டு பால் கொடுக்கும் ப்ளாட்டிபஸ் ஒரு பரிணாம எச்சம். பார்வை இழந்த வெளவால். கால்களை இழந்த சாலமெண்டர்கள் எல்லாமே பரிணாமத்தின் எச்சம் தான்.

மனிதனிம் அடுத்த பரிணாம மாற்றம் என்ன என்பதும் பலரின் கேள்வியாக இருக்கு. முன்னரே சொன்னேன். பரிணாம மாற்றம் என்பது கட்டாயமல்ல. அது தேவையை பொறுத்து அமையும். அறிவியலை புரிந்துகொள்ள அறிவியலை பேசுங்கள், படியுங்கள், விவாதியுங்கள் முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு அறிவியலை பயன்பாட்டிற்கு மட்டும் வைத்துக்கொள்வேன் என்பது அந்த கண்டுபிடிப்பாளருக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

அறிவியல் ஒன்றே மனிதம் வளர்க்கும். அறிவியல் ஒன்றே பிரிவினை போக்கும், அறிவியல் ஒன்றே மனிதத்தை மேம்படுத்தும்.

திமுக-காங்கிரஸ்

ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு அமைதிபடை என்ற பெயரில் அராஜக படையை அனுப்பியதே இது இரு நாட்டு பிரச்சனையாக மாற இருந்த ஆதார புள்ளி.

ஆனால் அதற்கு பிறகும் திமுக காங்கிரஸும் கூட்டு வைத்தது. அமைதிபடையை அனுப்பியது இலங்கை ராணுவத்துக்கே பிடிக்கல, ஒரு இலங்கை ராணுவ வீரன் ரைபிளை தூக்கி ராஜிவ் நடுமண்டையில் போட தெரிந்தான்., மயிரிழையில் தப்பியது ராஜிவ் உயிர். ஒருவேளை அப்ப போயிருந்தா விடுதலை புலிகள் பற்றி இன்னைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக நிலைபாடு என்னவா இருக்கும் என்று ஐயப்பாடு எனக்கு பல ஆண்டுகளா இருக்கு

ராஜிவ் கொலையில் கூட்டு சதி செய்ததாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஏழுபேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றிய பொழுது அதை எதிர்த்து மனு செய்தது திமுக தலைமையிலான மாநில அரசு. தமிழர் உணர்வை விட காங்கிரஸ் தயவு மட்டுமே போதும் என திமுக எடுத்த நிலைப்பாடு அது.

இறுதி யுத்தத்தின் பொழுது கருணாநிதியின் ஒரு மணி நேர உண்ணாவிரத நாடகம் எல்லாருக்கும் தெரியும். ஆனா அந்த சமயம் கூட காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளிவரவில்லை. ஆ.ராசா, கனிமொழி மீதான 2ஜி வழக்கு அழுத்தம் கொடுத்த காரணம் தான் திமுக கூட்டணியில் இருந்து வெளி வந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் களம் கண்டது.அந்த சமயத்தில் எந்த உளந்தம் பருப்புகளும் விடுதலைபுலிகள் பற்றியோ, பிரபாகரன் பற்றி எந்த விமர்சனமும் வைக்க வில்லை. அதிமுக அரசு பிரபாகரன் படம் பயன்படுத்தக்கூடாது என்று சொன்னபொழுது கூட திமுக அதை ஆதரித்து அறிக்கை விட வில்லை. ஆனால் 2016 காங்கிரஸ் கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்த பொழுது பிரபாகரன் தான் மொத்த போருக்கும் காரணம் என்று சராமாரியாக புகார் எழுப்பினர். காங்கிரஸிடம் இருந்து என்ன ஆதாயம் கிடைத்ததோ.

சமீபமா உளுந்தம் பருப்புகள் காமராஜரையும், கக்கனையும் விமர்சித்து வருகின்றனர். ஓட்டு வாங்க ஆளும் கட்சியான அதிமுகவை விமர்ச்சிக்கனுமா இல்ல கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை விமர்ச்சிக்கனுமா?

இப்ப என் கேள்வி என்னான்னா?
அதிமுகவின் பி டீம் மதிமுகவா இல்ல திமுகவா?

#வால்பையன்

parenting without pressure

நம் எல்லோர் வாழ்க்கையுமே ப்ராக்டீஷ் தான். ஒன்னு வாழ பழகுறோம், இல்லைனா வளர்க்க பழகுறோம்.

மூணு வருச இடைவெளி இருந்தும் என்னை என் பொண்ணுக்கு இன்னும் நண்பனா தான் வச்சிருக்கு. அவள் எனக்கு இன்னும் சிறு குழந்தையா தான் தெரியிறா. எதையும் அனுபவத்தில் கற்றுகொள்வதே சிறந்ததுன்னு கொள்கை இருந்தாலும் அவள் சொல்லும் சில விசயங்களில் இந்த அனுபவத்திற்கு நாம் கொடுக்கும் விலையை நினைத்தால் வயிற்றில் புளியை கரைப்பதை தடுக்க முடியல.

”ஹவ் டு பேரண்டிங் வித் அவுட் பிரஸ்ஸர்” என்ற தலைப்பில் நண்பர்களுடன் உரையாடுவேன். பல பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வை என்னால் அப்ப சொல்ல முடிந்தது ஏன்னா அப்ப நான் பிரச்சனை என்னும் வட்டத்திற்கு வெளியில் இருந்து வட்டத்தை முழுதாக பார்க்கிறேன். வாதி, பிரதிவாதி இரு தரப்பு நியாயங்களும் புரியும்.ஆனா எனக்கே ஒரு பிரச்சனைன்னு வந்தா நான் வட்டத்திற்கு உள்ளே நிற்கிறேன். என்னால் வட்டத்தின் பாதியை தான் பார்க்க முடிகிறது. என்னை நியாயபடுத்திக்கொள்ளவும், தீர்வு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றே ஈகோ செயல்படுது. சில சயமங்களில் இயலாமை தரும் கோவம் ந்ம் இன்னொரு முகத்தை காட்டுகிறது.

அந்த இயலாமை தான் குழந்தையை அடிப்பதில் தொடங்கி., காதலியை கொலை செய்வது வரை செல்கிறது. நம் உள்ளார்ந்த சுய மதிப்பீடுகள் தாண்டி பிறர் தரப்பு நியாயங்களும் கருத்தில் கொள்ளாமல் மனிதம் பிழைக்காது!

திருந்தாத திமுக!

உத்திர பிரதேசத்தில் பாஜக பெற்றது 35% வாக்குகள் தான். 65% மக்கள் பாஜகவிற்கு எதிராக உள்ளனர். இது ஜனநாயகத்தின் தோல்வி என்று நீங்களோ நானோ சொன்னா பரவாயில்ல. திமுகவின் மனுஷ்யபுத்திரன் சொல்றார். திமுக 50 வருசமா இருக்கு. இதுவரை எத்தனை எம்.எல்,ஏ. மற்றும் எம்.பிக்கள் மொத்த வாக்கில் 51% பெற்று வெற்றி அடைந்துள்ளனர். அல்லது குறைவாய் வாங்கிட்டோம்னு எத்தனை பேர் ராஜினாமா பண்ணி ஜனநாயகத்தை நட்டு காப்பாத்தினர். கேட்க ஆள் இல்லைனா எது வேணும்னாலும் பேசிட்டு போலாம்னு போறதே இந்த உளந்தம் பருப்புகளுக்கு வேலையா போச்சு.

திராவிட கட்சிகளை அழிக்க முடியாது ஒகே, கருணாஸை கூட உங்களால் ஜெயிக்க முடியலன்னு சவுடால் வேற. அதிமுக கட்சி பேரில் திராவிடம் இருப்பதால் கூட்டு சேர்த்துகிட்டாங்க போல. அதிமுக திராவிட கட்சியே அல்ல எனபதற்கு சொல காரணங்கள் சொல்றேன்.

பொதுவா திராவிட நாட்டில் பார்பனர்களை தவிர எல்லாருக்கும் குல தெய்வம் இருக்கும்.(பார்பனர்களும் இருக்குன்னு ஒருத்தர் சொல்றார்) அந்த நாட்டார் தெய்வ வழிபாட்டு முறை தான் திராவிடர்களையது. அங்கே பார்பன பூசாரி இருக்க மாட்டார். வேண்டிதலில் அலகு குத்துதல், தீ மிதித்தல் இருக்கும். அதில் எனக்கு முரண்பாடு இருந்தாலும் அந்த பழக்கம் வட மாநிலங்களில் இல்லைன்னு சொல்வதற்காக சொல்றேன்.

இன்னொரு பொதுவான வேண்டுதல் மொட்டை அடித்தல். திருப்பதில் இருப்பது வைணவ கடவுள் பெருமாள் இல்ல. அது முருகன்னு சர்ச்சை எழுந்த பொழுதே அதை பத்தி ஆராய்ச்சி பண்ணேன். நாமளே கடவுள் மறுப்பாளன். நமக்கு எதுக்கு அதுன்னு விட்டுட்டேன். திருப்பதி தவிர வேறு பெருமாள் கோவிலில் மொட்டை அடிச்சு பார்த்ததுண்டா? சைவ கடவுள் சிவன் கோவிலில் மொட்டை அடிச்சு பார்த்ததுண்டா. அதே மாதிரி அந்த ஆரிய கடவுள்கள் கோவில்களில் ஆடு, கோழி வெட்டி பார்த்ததுண்டா?

ஜெயலலிதா கோவில்களில் பழி கொடுக்கக்கூடாதுன்னு சட்டம் கொண்டு வந்ததற்கு காரணம் ஜீவ காருண்யம்னு நினைச்சிங்களா? அது முழுக்க முழுக்க ஆரிய திணிப்பு. ஜீவகாருண்யம் பேசுற எல்லாம் நல்லவங்கன்னு பார்ப்பான் சொல்லிட்டு திரிவான். ஹிட்லர் சுத்த சைவம். அந்தாள் பண்ண வேலைகள் எல்லாமே நமக்கு தெரியுமே

மக்கள் எதிர்ப்பின் பேரில் அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டாலும் அந்த அறிக்கையின் மூலம் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளை அழிக்க அதிமுக நினைத்தது அம்பலமானது. இது திமுகற்கு தெரியாதா? இல்ல தெரிந்தும் நடிக்கிறாங்களா?

ஜெயலலிதா முழுக்க மன்னார்குடி கைக்கு போன பின்னாடி தான் பரமகுடி துப்பாக்கி சூடு நடந்தது. அந்த தலித் விரோத போக்கு திராவிட கட்சிகளிடம் இருக்குமா? இருந்தா அது திராவிட கட்சியா? அதிமுக ஜெயலலிதா காலத்திலும் திராவிட கட்சியில்ல, சசிகலா காலத்தில் அது கட்சியே இல்ல

மகளிர் தின வாழ்த்துகள்!நான் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களில் நம்பிக்கைக்கு அர்த்தம் இதுதான் என வாழ்ந்து காட்டியது தோழர் ரம்யா தான். அவுங்களுக்கு ஏற்பட்ட சூழல் பிறருக்கு ஏற்பட்டால் அவர்களால் அதை தாண்டி வந்துருக்க முடியுமான்னு யோசிக்க கூட முடியல. இந்த மகளிர் தினத்தில் மகளிர் முன்னேற்றத்தை விரும்பும் ரம்யாவிடம் ஒரு பேட்டி.

வாழ்க்கைக்கு நம்பிக்கை வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம்பிக்கையான ஆட்கள் நம்மை சுற்றி இருக்கனும் என்பது அதைவிட மிகவும் முக்கியம். 
 
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!! 

மகளிர்தின வாழ்த்து 

1857ஆம் ஆண்டு அமெரிக்காவில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் உரிமைப்போராட்டமே, பின்னர் கிளர்ச்சிக்கு வித்திட்டது. 1909 ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்காவின் சோசலிசக் கட்சியால், உழைக்கும் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட தினம் தொடர்ச்சியாக  மாற்றமடைந்து, 1975ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டாடப்பட்டதோடு, அந்த வருடத்தில் இருந்து மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச பெண்கள் தினமாக மாறியிருந்தது. இவ்வாறாக ஏறத்தாழ நூறு வருடங்களை கடந்த வரலாற்றைக் கொண்டது நமது இனிய மகளிர் தினமாகும், என்ற விளக்கத்தோடு இந்த பதிவில் அனைத்து மகளிருக்கும் எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்!!


1. உங்களுக்கு நேர்ந்த விபத்தை பகிர்ந்த கொள்ள விருப்பம் இருந்தால் பகிரலாம். அல்லது உங்களை நகர்த்திய அந்த நம்பிக்கை தந்த சம்பவம் மற்றும் நம்பிக்கையான ஆட்கள் பற்றிய உங்கள் பகிர்வு?

அறிமுகம்
 
கண்டிப்பாக பகிரலாம் நண்பரே... இணையத்தில் நிறைய பகிர்ந்திருக்கின்றேன். ஓரளவிற்கு என்னை நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. ஆனாலும் மறுபடியும் சிறிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கின்றேன். முதன் முதலில் தேவதை என்ற பத்திரிகை எனது பேட்டியை வெளியிட்டது.. அதற்குப் பிறகு பல பத்திரிகைகள் என்னை பேட்டி எடுத்து வெளியிட்டனர். 

அதன் பலனாக பல இடத்தில் இருந்தும் என்னை தொடர்பு கொண்டு, ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவர்களின் குறைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களின் குறைகளைய நான் கூறிய அறிவுரைகளை ஏற்றுக்கொண்டும், அதன்படி நடந்து கொண்டும், இன்று அருமையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டும், தங்களை நோக்கி வரும் அனைத்து சோதனைகளையும் எதிர் கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதில் எனக்கு சிறு மகிழ்ச்சியும் உண்டு.. 

கடந்துவந்த பாதை திரும்பிப் பார்க்கிறேன்  

அரைகுறை விவரம் தெரிந்த வயதில் கடுமையான தீ விபத்தில் சிக்கி, அதில் நாற்பத்தி எட்டு நாட்கள் நினைவை இழந்து, முடிந்துவிட்டது என்று முடித்த நேரத்தில் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கின்றேன் என்றால் அது மிகையாகாது. 

இரண்டு வருடங்கள் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை மேற்கொண்டேன். அதற்கு மேல் வீட்டில் இருந்து கொண்டு அவ்வப்போது சிகிச்சைக்கு வரலாம் என்று மருத்துவமனையில்  அறிவுறுத்தினார்கள். ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.,  

அடுத்து மனதில் எழுந்த கேள்வி எங்கு செல்வது? யாரிடம் செல்வது? நம்மை யார் பாசமாக ஏற்றுக் கொள்வார்கள்.? பாசம் அது எனக்கு கிட்டியது என்னை வளர்த்த பாட்டியிடம் மட்டும்தான்.. அவர்களும் எனக்கு நேர்ந்த விபத்தை கேட்ட அடுத்த இரண்டு நாட்களில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். பாட்டியை தொடர்ந்து தந்தையும்...அனைத்து நிகழ்வுகளும் மிகவும் தாமதமாகவே எனக்கு அறிவிக்கப்பட்டது. 

தாமதமாக அறிவிக்கப்பட்ட உண்மைகளை என்னால் ஜீரணிக்க முடியாமல் இதயம் வெடித்து உள்ளேயே தத்தளித்து நொறுங்கிப்போனேன்.. எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிந்திக்க தொடங்கினேன்.. நான் என்ன செய்ய வேண்டும் என்று நான்தானே முடிவெடுக்க வேண்டும்? வயது சிறிதானாலும் சிந்தனை என்னவோ தெளிவாக மிக தெளிவாக இருக்க வேண்டும் என்று கடுமையாக யோசித்தேன். 

யாருடைய உதவியும் இல்லாமல் என்ன செய்வது ?. சவாலான வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது ? அமைதியான வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது ? இப்படி டன் கணக்கிலான கேள்விகள்  மனதை துளைத்தெடுத்தன.

சுற்றங்களால் எடுக்கப்பட்ட முடிவு

இதற்கிடையே என் சுற்றங்களோ!!  வெளியே சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர்களே உறுதி செய்து கொண்டு, அவர்களுக்குள்ளேயே குழப்பிக்கொண்டு, முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு அடுத்து என்ன செய்வது என்று கூடி யோசித்திருக்கிறார்கள், அந்த யோசனையின் முடிவு,  நான் யாரிடம் இருக்க வேண்டும், யாரிடம் இருந்தால் சரியாக வரும் என்பவைகள்தான். இறுதியாக எனது இளைய சகோதரன் அழைத்துச் செல்ல தயாராக இருந்தார். 

அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்
 
மகளாக என்னை பாவித்து எனக்கு சிகிச்சை அளித்த அந்த தெய்வத்துடன் கலந்து ஆலோசித்தேன். எனது வயதை மனதில் வைத்து அவரும் எனக்கு சில அறிவுரைகளை கூறினார், அவர் கூறிய பல அறிவுரைகளில் உறவினர்களுடன் செல்வதும் ஒன்று. உறவினர்களிடம் செல்வது என்பது என் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. சகோதர, சகோதரிகள் இருந்த போதிலும் அவர்களின் சுதந்திரத்தில் பங்கு கொள்ள விருப்பம் இல்லை. அந்த நாள் கடுமையான - மிகவும் சவாலான நாள் என்றே என் மனதிற்கு தோன்றியது. 

நகர்த்திய அந்த நம்பிக்கை தந்த சம்பவம்  -  

மனதில் தோன்றிய சிறிய ஆராய்ச்சி, அப்படியே சென்றாலும், பத்து நாட்கள் மருந்து என் கைகளில் கிடைக்கும், ஒரு மாதத்தில் நான் அறிவுறுத்தினால்தான் மருந்துகள் எனக்கு கிடைக்கும். அதற்குப்பிறகு நான் காணாமல் போயிடுவேன், என் துயரம் தாழ்வு மனப்பான்மையாக மாறி என்னை கீழே போட்டு அழுத்தி அது சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடும். இந்த எண்ணம் மனதில் தோன்றியவுடன்.  அனைவரையும் ஒதுக்கிவிட்டு,  எத்துணை துன்பங்கள் வந்தாலும் எதிர்கொள்ளவது என்ற திடமான மனதுடன் ஒரு முடிவிற்கு வந்தேன் 

முதலில் உறவினர்களிடம்தான் கூறினேன். அவர்கள் எனது இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை போலும்..  பிறகென்ன சொந்தங்களால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.  கடும் சொற்களாலும், சுடு சொற்களாலும் தாக்கப்பட்டேன். அங்கேயே எனக்கு முதல் சோதனை ஆரம்பமாகிவிட்டது எனலாம்  

தனித்து வாழ்ந்து எல்லாவற்றையும் எதிர்கொள்ள துணிந்து விட்டதை மருத்தவரிடம் கூறினேன். என்னை மிகவும் ஆச்சர்யமாக பார்த்தார்,  அருமையான யோசனைதான் என்றதோடு மட்டுமில்லாமல், என்  கைகளை பிடித்து "மகளே உன்னை வணங்க வேண்டும் என்ற எண்ணம் தீர்க்கமாக என் மனதில் எழுகின்றது.. உனக்கு இன்னமும் முழு அறுவைச் சிகிச்சையும் முடியவில்லை இந்த கோலத்தில் எங்கு  செல்வாய்? என்ன செய்வாய்? வாழ்வே சவாலாக அமையுமே! " என்று கேட்ட கேள்விகளில் அன்று கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். ஆனாலும் தைரியத்துடன் என்னால் முடியும் என்று கிளம்பி விட்டேன். 

எனது தந்தைக்கு நிகரான அந்த மருத்துவர் என்னை வாழ்த்தி அனுப்பிய வரிகள் இதோ.. "புறப்படு உன் புது வாழ்க்கையை நோக்கி! என் குடும்பம் அது இனி உன் குடும்பமானது. நாங்கள் அனைவரும் உனக்கு துணை நிற்போம்" என்று சந்தோஷம் கலந்த கண்ணீரை துணையாக்கி என்னை அனுப்பி வைத்தார்கள் மருத்துவரும் அவரின் குடும்பத்தினரும்.

நம்பிக்கையான ஆட்கள் பற்றிய உங்கள் பகிர்வு

முதன் முதலில் என்னைக் கவனித்துக்கொண்ட ஸ்டாப் நர்ஸ் பிரிஸ்க்கா அக்கா அன்றும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். ஆரம்பகால கட்டத்தில் அவர்கள் அரவணைப்போடு மட்டுமல்லாது பண உதவிகளும் செய்திருக்கிறார்கள்.. என் உயிர் மூச்சு இருக்கும் வரை இந்த நன்றி மறவேன். மருத்துவமும் பார்த்துக் கொண்டு மேலே மேலே படித்தேன். வேலை தேடும் நேரமும் வந்தது.. எதையும் யோசிக்காமல் முயற்சித்தேன். பெரிய கம்பெனியில் கணினித்துறையில் வேலையில் அமர்ந்தேன். முதல் வேலை, அருமையான மனிதர்கள். எனக்கு அந்த அலுவலகம் தேவதைகள் வாழும் இல்லமாக காட்சி  அளித்தது என்றால் அது மிகையாகாது. இப்படியாக நாட்கள் நகர்ந்தன..

அறுவை சிகிச்சை பல மேற்கொண்டதால் மெலிந்த தேகம்தான், ஆனால் கண்களில் எப்போதும் குறும்பு இதுதான் என் அப்போதைய சொத்து.. அதில் கிடைத்த நட்புகள்தான் இப்போது எனது மிகப் பெரிய சொத்துக்கள்.

பெண்கள் விடுதியில் கிடைத்த என் தாய்க்கு நிகரான கலைச்செல்வி அவர்களின் நட்பு.. அதை நட்பு என்று சொல்ல முடியாது. அவர்களை எனது அம்மா என்றுதான் அன்றும், இன்றும், என்றும் கூறுவேன். அவர்கள் அரசுத்துரையில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார்கள். எனக்கு ஒவ்வொரு முறை உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் அவர்கள் உடலால் மட்டுமின்றி, பணத்தாலும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்களின்பால் எனக்கு உள்ள நன்றி கடன் தீர்க்கமுடியாத ஒன்று.. அதே போல் அலுவலகத்தில் அறிமுகமான நண்பர்களும் பல உதவிகள் செய்திருக்கின்றார்கள். எதையும் என்றும் என்னால் மறக்க இயலாது. 

இதுவரை நான் கண்டது நாற்பத்தியெட்டு அறுவை சிகிச்சைகள். இன்னமும் ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்தால் போதும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஆனால் என் அறிவோ உன்னோட மருத்துவத்திற்கு முடிவே இல்லை என்றுது.. ஏற்றுக் கொண்டேன் துன்பங்களை புன்முறுவலுடன்.  

மட்டமாக நினைத்தவர்கள் முன்னே உயர்ந்தேன் உயர்ந்து கொண்டுதான் உள்ளேன் எனபதில் கொஞ்சம் மகிழ்ச்சியே.. இன்று எனது உயர்வை அனைவரும் பிரிமிப்பாகப் பார்ப்பதில் இருக்கின்றது எனது வெற்றி...
*********

2. பெண்கள் முன்னேற்றத்துக்கு கல்வி அவசியம் என்பது என் கருத்து. அது சமகாலத்தில் அனைவருக்கும் கிடைக்கின்றதா? பெண்கள் முன்னேற்றத்திற்கு வேறு அடிப்படை தேவைகள் உள்ளனவா?

பெண்கள் முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் அவசியமானதே.. அதில் எனக்கு மாற்றுக கருத்தே இருந்தது இல்லை. 

நகரம் மட்டுமின்றி, கிராமத்திலும் படித்த மற்றும் படிக்காத பெற்றோர்கள் கஷ்டப்பட்டாவது அவர்களின் பெண்களை படிக்க வைத்து விடுகிறார்கள். இது நடுத்தர மக்களின் செயல்பாடு. மேல் படிப்பு  படித்தால்தான் அவளின் வாழ்க்கை நல்ல முறையில் அமையும் என்பது அவர்களின் கனவு அது உண்மையும் கூட, ஆனால் அதே கிராமத்திலும், நகரத்திலும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் பெற்றோர்கள் தங்களது பெண்களை பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள். திருமணம் முடிந்து செல்பவளுக்கு படிப்பு தேவை  இல்லை என்கிறார்கள். அதற்கும் பல விழிப்புணர்வு முகாம் அமைத்து பெண் குழந்தைகளுக்கு ஏன் கல்வி தேவை என்பதை பல முறை உணர்த்தியும், ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்களின்  பெண்கள் தப்பித்து விடுகிறார்கள்.. ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெற்றோர்கள் நம்மிடையே தோற்றுப் போகிறார்கள். இதில் தோல்வி அவர்களுக்கா இல்லை நமக்கா என்ற பெரும் கேள்வி நம் முன்னே எழுகின்றது. கல்வியறிவு இல்லாத பெண்கள் எந்த விதத்தில் வாழ்க்கையில் முன்னேற முடியும்.? ஒரு வட்டம் போட்டு அதற்குள் அடங்கிவிடுவதா வாழ்க்கை. இதை உடைத்து அனைத்து நிலை பெண்களுக்கும் கல்வி தேவை என்பதை கட்டாயமாக்க வேண்டும் இது இயலுமா??


கல்வி பெற்ற, ஆளுமைபெற்ற, சுதந்திர உணர்வுடைய, அச்சமற்ற, ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வீறுகொண்டு வெற்றி உலாவரும் புதுமைப் பெண்களை போற்றி பாதுகாக்க இந்த சமுதாயம்  என்றும் தவறியதில்லை.. பெண்கள் முன்னேற்றத்திற்கு திறமையும், மன உறுதியும் கண்டிப்பாக வேண்டும். இறுதியாக, கல்வியும் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும்.  


3. 2000 த்திற்கு பிறகு உலகை இணைய புரட்சி உலகம் என்றே அழைக்கலாம். நாம் அறிமுகமான 2008/2009 காலங்களில் பரவலாக பெண்கள் இணையத்தில் இல்லை. நீங்கள் வந்த காலத்தில் இருந்து 

ஆமாம் 2000 மேல் புரட்சி உலகம்தான் ஒத்துக்கொள்கின்றேன். நான் 2008 மே மாதத்தில்தான் என் வலையை தொடங்கினேன்.. அப்போது இணையத்தில் ஓரளவிற்கு பெண்கள் இருந்தார்கள். 

அதே போல் முகநூலில்கூட இப்போது இருக்கும் அளவிற்கு அப்போது பெண்களின் எண்ணிக்கை சற்றே குறைவுதான். இப்போதுதான் உள்ளங்கையில் உலகைப் பார்க்கின்றோம்.. 

அறிவியல் சார்ந்த வளர்ச்சியே. இந்த வளர்ச்சி தேவையானதாக இருந்தாலும் சற்றே ஆபத்தான வளர்ச்சியாகவும் உணர்கின்றேன்.

இணையத்தில் பெண்களின் பாதுகாப்பு

பெண்களின் பாதுகாப்பு என்பது பெண்களிடம்தான் உள்ளது. எந்த ஒரு செயலும் அளவிற்கு மேல் போகக்கூடாது. இணையத்தில் மட்டும் அல்ல எங்கும் பெண்கள் தனது ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். தன்னை பாதுகாத்துக் கொள்ள தவறினால் அந்த பெண்ணின் வாழ்வே ஒரு கேள்விக்குறியாக மாறிவிடும்  அபாயமும் இருக்கின்றது.. கவனம் என்ற ஒரு ஆயுதத்தில் எல்லாமே அடங்கிவிடும், பட்டியலிட தேவை இல்லை என்று எண்ணுகின்றேன். எங்கும் எப்போதும் கண்ணியம், கவுரவம் குறையாத தன்மை நம்மிடம் இருந்தால் மதிப்பும் மரியாதையும் நம்மைத் தேடி தானாக வரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 

ஆணோ பெண்ணோ அவர்தம் கண்ணியத்தை காத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளும் வரை அவர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித தீங்கும் ஏற்படப் போவதில்லை. தன் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் பெண்கள், தன் கவுரத்தை காப்பாற்றிக் கொள்ளும் காரணிகளையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இணையம் மட்டும் அல்ல எல்லா துறையில் இருக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும். 
******************

4. நீங்க அரசியல் பேசி, எழுதி நான் பார்த்ததில்ல, ஆனா சல்லிகட்டி போராட்டத்திற்கு பிறகு அரசியல் விமர்சனம், ஆதங்கம் உங்களிடம் வெளிபட்டது. ஓட்டு போடுவது மட்டுமே சாமான்ய பெண்ணின் கடமையா இருக்கு. அதை தாண்டி அரசியலில் ஒரு பெண்ணின் பங்களிப்பு எந்த அளவு இருக்கனும்னு நினைக்கிறிங்க?

ஆமாம் நான் அரசியல் பேசியதுமில்லை, அரசியல் செய்ததும் இல்லை..

ஆனால் அந்த அரசியல் மீது எப்போதுமே தீராத காதல் உண்டு. ஆமாம் வேலைக்கு ஏற்ற பட்டங்கள் பெற்றதோடு நிற்காமல், அரசியலிலும் முதுகலை பட்டம் பெற்றேன். படித்த அரசியலைவிட நான் கண்ட கனவு அரசியல் மிகவும் யதார்த்தமானது. ஒரே ஒரு வார்த்தை மக்களுக்காக மக்களின் நலன் மட்டுமே சிந்தையில் வைத்து பாடு படவேண்டும் என்பது எனது கருத்து. விடியலில் கழனிக்குச்   செல்லும் கணவன் மாலையில் நிதானத்தில் வீட்டுக்கு வந்தால் அன்றுதான் அந்த இல்லத்தில் தீபாவளி.. தினமும் அதே நிலைமை நீடித்தால்...  இந்த இடத்தில் இருந்து ஆட்ச்சி பயணிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு 
 
" ஏர் இருந்தால் ஜனனம் இல்லையேல் மரணம்..."   இதுதான் நமது பாரம்பர்யம், ஜல்லிக்கட்டில் நாங்கள் முழக்கிய வீர முழக்கத்தில் இந்த வரிகள்தான் என்னை மிகவும் கவர்ந்தவை.. 

ஆயிரம் கோவில்களுக்குச் சென்றாலும் நம் குலதெய்வ வழிபாட்டை மிகச் சிறப்பாக செய்வதில்லையா? அதே போல்தான் ஆயிரம் விளையாட்டுக்கள் இருந்த போதிலும் ஜல்லிக்கட்டில் இருக்கின்றது தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளம்.   அந்த விளையாட்டை நிறுத்தியதில் ஏற்பட்ட நம் மக்களின் எழுச்சிதான் தை புரட்சியாக வெடித்தது, என் மனதில் இருந்த அரசியல் உத்வேகம் அப்போது விழித்திட சில அரசியல் பதிவுகளும் என்னிடம் இருந்து வெளிப்பட்டன. 

ஓட்டு போடுவது மட்டும் நமது கடமை இல்லைங்க. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு அவர்களின் கடமைகளை சரியாகச் செய்யாவிடில் தட்டிக் கேட்கவேண்டும் என்பது எனது கருத்து, அவ்வாறு செய்ய தவறியதால் வந்த விபரீதம்தான் இன்று நம்மக்கள் படும் வேதனைகளும், கஷ்டங்களும், துயரங்களும், துன்பங்களும் எண்ணிலடங்காதது  என்பதை யாரால் மறுக்க இயலும்?    . . 

தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தண்ணீர் பஞ்சம், குடிக்க மட்டும் இல்லீங்க எதுக்குமே தண்ணீர் இல்லை, அண்டை மாநிலத்திலும் தண்ணீர் பிச்சை எடுக்கும் நிலை இன்று நமக்கு எழுந்துள்ளது. ஆனால் அவர்களோ சிறுபிள்ளைத்தனமாக தண்ணீர் தர மறுக்கிறார்கள்..உச்சநீதிமன்றம் எத்தனை தீர்ப்பு வழங்கினாலும் ஏமாந்து நிற்பவர்கள் நம் மக்களே!! 

மக்கள் தொகையை மனதில் வைத்து வீணாகிப் போகும் மழை நீரை அதிகமாக தேக்கி வைக்க முயற்சி, நதி நீர் இணைப்பு இவைகள் மேற்கொள்ளப் படவில்லை. என்பது எனது கருத்து. ஆட்சியாளர்கள் இதை எப்படி மறந்தார்கள்? மக்களுக்கு மிக அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற தவறியதை எப்படி நம்மால் மட்டும் ஏற்றுக்     கொள்ளமுடியும் ?? அடுத்து நமது நலனில் பங்கேற்கப் போவது யார் மக்களே?? 

நம் மக்கள் என்று தம் மனம்விட்டு சிரித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்? 

விடியலை காணமுடியுமா அல்லது ஒவ்வொரு விடியலிலும் புரட்சி, புரட்சி இது மட்டும்தான் அன்றாட வாழ்க்கையாகிப் போகுமா? இது போல் தினம் தினம் ஓராயிரம் முறை எனக்கு நானே யோசித்து  எனக்குள்ளேயே பல முறை கோபப்பட்டுக் கொள்வேன். ஒரு சாமானியவளாக இதைத்தான் செய்ய முடியும் என்பது எனது ஆழ் மனதின் ஆதங்கமே !!  
இதுபோல் பலவித எண்ணக் கலவைகள் மனதை தாக்கியதால் ஏற்பட்ட விளைவு வருத்தம்தான் மிஞ்சியது. அதன் தாக்கம்தான், என்னோட மனதில் கணன்று கொண்டிருந்த அரசியல் ஈர்ப்பு, ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் போராட்டம்தான் என்னை அரசியல் பேச பிள்ளையார் சுழி போட்டது எனலாம். 

வன்மம் இல்லாத, நன்மை பயக்கும் திட்டங்களை மட்டுமே செல்படுத்த வேண்டும். தவறு செய்பவர்களின் தவறுகள் நிரூபிக்கப் பட்டால் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும். தன்னலம்  இல்லாத, அரசியல் ஞானியாக நல்ல மனம் படைத்த ஒருவரே ஆட்சியாளர்களுக்கு அறிவுரை செய்ய வேண்டும். அந்த அறிவுரையை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது அவசியம் ஆகாது. அதையும் பல மட்டத்திலும் விவாத்தித்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாக, நன்மை பயப்பதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளலாம். ஆட்சியாளர்களுக்கு தன்னலம் அறவே இருக்கக் கூடாது. இன்னமும் ஒரு கோடி ஆசைகள் மனதில் இருக்கின்றது...

இது போல ஆட்சி அமைந்தால் கனவில் கண்ட நன்மைகள் அனைத்தும்   நம்மக்களுக்கு போய் சேரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இது என்னோட கருத்து, இதே போல ஒத்தக்கருத்துள்ள எத்தனை பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும்.   

வாய்ப்பு கிடைத்தால் பெண்களாலும் நல்ல முறையில் அரசியலில் பரிமளிக்க முடியும் என்று என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்
******************

5. பெண்ணிடம் எடுக்கும் பேட்டியில் பெண்ணியம் பற்றி கேட்கலைனா இணைய சமூகம் நம்மை தள்ளி வச்சிரும். சமகாலத்தில் பெண்ணியம் என்பது பெண் சுதந்திரம் என்பதை தாண்டி இவ்ளோ நாள் நாங்க உங்களுக்கு அடிமையா இருந்தோம்ல, இனி நீங்க இருங்கன்னு சிலரால் பெண்ணியம் பரப்பப்படுது. இதற்கு உங்கள் கருத்தும், பெண்ணியம் பற்றிய உங்கள் பார்வையும்.

பெண்ணியம்: என்பதை தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற சொற்களின் வரிசையில் சேர்ந்து விட்டதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. அதிக அச்சத்தை ஏற்படுத்தும் சொற்களாகவும் சமீபத்திய வாதங்கள் நிரூபிக்கின்றன. பெண்ணியம் தொடர்பான கேள்விக்கு தேவையான விளக்கமின்மைதான் இந்த அச்சத்திற்கு காரணம் என்பது எனது தாழ்மையான கருத்து.  

பெண்ணியமென்றால் என்ன?  சமூக, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் ஆண்களுக்குச் சமமான உரிமைகளைப் பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோட்பாடு'  என்பதைக் கூறலாம். அதாவது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டுமென்பதே, அதன் அர்த்தமாகும். பெண்ணியம் என்ற சொல்லில், அச்சப்படவோ அல்லது வெறுக்கவோ வைக்கும் எந்த அர்த்தமும் கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை இருக்க வேண்டும் அவ்வளவுதாங்க...ஆனாலும் எங்கே 50 / 50 ஆக உள்ளது? விடை இல்லா கேள்விக்குறியே அனைத்து மட்டத்திலும். 

பெண் என்பவள் திருமணத்திற்கு முன் பெற்றோர்களை சார்ந்திருக்கின்றாள், திருமணம் ஆனவுடன் கணவனை சார்த்திருக்கின்றாள். தனிமையில் வாழும் பெண்களை இன்னமும் இந்த சமுதாயம் சரியான கோணத்தில் பார்ப்பதில்லை. இதுதான் உண்மை. இதனால் சார்ந்திருக்க வேண்டியது என்பது கட்டாயமாகிப் போனது.  அதனால் 
சொந்தங்களிடம் தஞ்சம் தொடர் அவமானங்கள் எல்லாம் சாத்தியமே!  

அந்த காலத்தில் ஒரு பெண் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தாள். அவளுக்கு கணவனின் அரவணைப்பும், உறவுகளின் அரவணைப்பும், சேர்ந்தே கிடைத்தது. விட்டுக் கொடுத்து வாழ்ந்து, கணவனுக்கு எல்லாமாக இருந்து கணவனின் முன்னேற்றத்திற்கும் அவளின் பங்களிப்பு இருக்கும். "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாள்" என்று கூறுவார்கள். இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனைவி இருக்கிறாள். அதில் எந்தவித மாற்றுக கருத்தும் இல்லை.. 

இன்னமும் சில நாட்டில் ஒரே விதமான வேலையாக இருந்தாலும் அதில் ஆணிற்கும் / பெண்ணிற்குமான சம்பளம் மாறுபட்டிருக்கும்.. இதற்கும் வரலாறு இருக்கின்றது. பெண்கள். சில இடங்களில் மட்டம் தட்டித்தான் வைக்கப் படுகிறார்கள்.. இதை யாராலும் மறுக்கவோ / மறக்கவோ முடியாது.

பல குடும்பங்களில் நான் நேரில் பார்த்திருக்கின்றேன், ஏதாவது காரணங்கள் கூறி அவளின் எண்ணங்களும், விருப்பங்களும் ஒடுக்கப்படுகின்றன. இதை நான் விளம்பரத்திற்காக எழுதவில்லை. சாட்சியாகி,  வருந்திய நிகழ்வே. அப்பட்டமாக தெரிகிறது அந்த பெண் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று, ஆனாலும் அந்த பெண்ணாலும் சரி நம்மாலும் சரி எதுவும் செய்ய இயலவில்லை. என்பதுதான் நிதர்சனம்  இது போல் ஏற்படும் அசாதாரண நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனம் தடுமாறுகிறது. நிதர்சனத்தில் சற்றே விலகினால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறாள். அதன் விளைவு...     

1. ஆண்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டு பெண்ணீயவாதியாக மாறி விடுகிறார்கள்.

2. சில பெண்கள் ஆணாதிக்கத்தில் இருந்து சற்றே விலகி தன்னிச்சையாக அதாவது மனம் போன வழியில் வாழ்வதைத்தான் பெண்ணீயம் என்கிறார்கள்.

சிலர் ஆண்களின் மேல் உள்ள வெறுப்பின் காரணத்திற்க்காக பெண்ணியம் பேசினால் அது தவறான கருத்தாகும். அதற்காக பெண்ணீய இயக்கத்தை முற்றிலும் தவறு என்றும் கூறிவிட முடியாது.
அவர்கள் எதிர்பார்க்கும் நியாமான கோரிக்கைகளை ( 50 / 50 ) நிறைவேற்றினால் இந்த இயக்கம் தன்னிறைவை பெற்றிடும். 

******
6. ப்ளாக் காலத்தில் ஒரு விசயத்தை ஆழ்ந்த புரிதலோடு எழுதும் பழக்கம் இருந்தது. முகநூலில் லைக் மோகம் எதையாவது எழுதினா போதும்னு ஆகிருச்சு. எந்த மாற்றத்தால் நீங்க ரொம்ப மிஸ் பண்ணும் பதிவர்கள் யார் யார்?

கண்டிப்பாக அருண், 

மற்ற நண்பர்களின் பதிவை அடிக்கடி படிக்க முடிவதில்லை என்றாலும் நேரம் கிட்டிய போதெல்லாம் பதிவை படிக்கும் பாக்கியம் இருக்கின்றது

பழமைபேசி அண்ணா -->அவரின் எழுத்து பழமையாக இருந்தாலும் ரசிக்கும்படியாக  இருக்கும். இப்போது பொட்டி தட்டி சித்தராக வலம் வருகிறார்.  

நான் மிஸ் பண்ணும் எனது ப்ளாக் நண்பர்கள் 
 
ஜீவன் (தமிழ் அமுதன்), ஈரோடு கதிர், ச்சின்னபையன் அண்ணா, கார்க்கி, கேபிள் ஷங்கர், நசரேயன், குடுகுடுப்பை, உருப்புடாத அணிமா, ஸ்ரீனிவாசன் ராகவன் அண்ணா, அமு.செய்யது, 

அமிர்தவர்ஷினி அம்மா, கபீஷ், சந்தனமுல்லை, விதூஷ், விக்னேஸ்வரிகண்ணா, வித்யா, தமிழரசி, ரசனைக்காரி ராஜேஸ்வரி, இயற்கை ராஜி 


7. இணையத்தில் பெண்கள் தங்களையும், தங்கள் அடையாளங்களையும் முழுமையாக வெளிபடுத்திக்கொள்ளும் சுதந்திரம் அடைந்துவிட்டோமா? அதை பற்றிய உங்கள் கருத்து?


கண்டிப்பாக இல்லை!!!

இணையத்தில் பெண்கள் தங்களின் அடையாளத்தைக் காட்டிக் கொளவதில் தற்போதைய நிலைப்பாட்டை பார்க்கும் போது ஆபத்து கண்டிப்பாக இருக்கின்றது. அதனால் நட்புகளை தெரிவு செய்யும் போது கவனம் தேவை. நம்மை நன்றாக தெரிந்தவர்களிடம் நம் அடையாளம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எல்லாவற்றிக்கும் மேலாக தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள சுதந்திரம் இருக்கின்றது என்றால் அதில் ஆபத்தும் கூடவே வருகின்றது. அதனால் பெண்கள் தனது அறிவு சார்ந்து,  கொள்கைகள் பல கொண்டு, தனிமனிதக் கட்டுப்பாட்டுடன் தம்மை வெளிப்படுத்துவதில் முழு சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் தேடிக் கொள்ளமுடியும் என்பது எனது ஆணித்தரமான கருத்து..
    
 
இறுதியாக வால்பயன் என்ற அருணுக்கு 
=====================================

!

Blog Widget by LinkWithin