பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழ்த்து சொல்றதும் ஒரு கலைன்னு எனக்கு நிருபிச்ச மனிதர்!
அவருக்கு நான் வாழ்த்து சொல்லலைன்னா நான் மனுசனே இல்ல!

தினமும் இரண்டு மணி நேரம் இறகுபந்தை வறுத்தெடுப்பதால், மிலிட்டரி உடம்புக்கு சொந்தகாரர்,
இவருக்கு வயசு இன்ன ஆவுதுன்னு அவரு சொன்னா தான் நமக்கே தெரியும்!

காதலியை விட புத்தகத்தை நான்கு மடங்கு காதலிப்பவர், மற்றவர்களுக்கும் காதலிக்க சொல்லி கொடுப்பவர், இலக்கியத்தில் இசங்கள் பார்க்காமல் அனைத்து தரப்பு புத்தகங்களும் இவருக்கு அத்துபடி, மேற்படி விசயமாக பேசவதென்றால் சோறு தண்ணி வேண்டாம் இவருக்கு. பொருள் சார்ந்த சமூகம், அறிவு சார்ந்த சமூகம் பற்றி பற்றி பேச ஆரம்பித்தால் நயாகரா அருவி போல இடைவிடாமல் பொழிந்து தள்ளுவார்!, பேச்சால் மனிதர்களை கட்டிப்போடும் வல்லமை மிக்கவர்!

பதிவர்களை உபசரிப்பதில் தற்சமயம் இவருக்கும், அப்துல்லாவுக்கும் தான் போட்டியாம்,

சமூக சிந்தனைகளை மூச்சு விடாமல் பேசக்கூடியவர்! எதிரில் இருப்பவருக்கு தக்க சமயம் வாய்ப்பு கொடுபவர், அளவில்லா நட்பைவிட அன்பான நட்புகளை சம்பாரித்து வைத்திருப்பவர்!

சக பதிவர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மரியாதையே அதற்கு சான்று!

இவ்வளவு பெருமைகளுக்கும் உரிய மனிதர் வேறு யாருமல்ல!

பின்னூட்ட புயல்,
கருத்து கனல்,

மதம் பிடித்த யானைகளுக்கு அல்வா கொடுக்கும் இவர்,
வலையுலகில் பலருடய கடிவாளமாகவும் இருக்க கூடியவர்

the one and only

கும்க்கி(காந்த்) (காந்தம் மாதிரி இருக்குறதால சும்மா சேர்த்துகிறது)

அண்ணாருக்கு இன்று பிறந்த நாள்! வாழ்த்த வயதில்லையென்றாலும் ஆசிர்வாதம் வாங்குவது போல் செலவுக்கு துட்டு ரெடி பண்ணிட்டு எதாவது கடைக்கு போயிருக்கலாம், முடியலையே!

எல்லோரும் வந்து கோரஸா வாழ்த்திட்டு போங்க மக்களே!

நாவலும், திரைப்படமும் (eyes wide shut)

டிஸ்கி:டுவிட்டரில் ஏற்பட்ட விவாதத்தின் பொருட்டு இந்த பதிவு, பொதுவாக விமர்சனம் என்ற பெயரில் கதை சொல்வது எனக்கு பிடிக்காது, அதற்கு பலர் இருக்கிறார்கள், நான் என்ன உணர்ந்தேன் என்பதே என்மையை(என் தனிதன்மையை) காட்டும், மன்னிக்க இந்த நீண்ட பதிவுக்கு!

*******************


stanly kubrick ன் திரைபடங்கள் வித்தியாசமான குறியீடுகள் அடங்கியவை என வேற்றுமொழி திரைப்பட ரசிகர்களுக்கு தெரியும், உண்மையில் அவைகளெல்லாம் நாவலில் சாத்தியபடுத்தபட்டு மீண்டும் திரைக்கு கொண்டுவரப்பட்டது, பெரும்பாலானவை குழப்பமில்லாமல் நேர்த்தியான திரைக்கதையில், கதையில் ஒன்ற வைத்தாலும் நிமிட முள்ளைப்போல் வெகு மெதுவாக காட்சியை நகர்த்துவார் என்பதும் அனைவருக்கும் தெரியும், அதுவே என்னை போன்ற மாற்று(கோண)பார்வையாளர்களுக்கு வசதியாக அமைகிறது!

eyes wide shut
என்ற படம் 1999 இல் டாம்குரூஸ் மற்றும் நிக்கோல் கிட்மேன் நடித்து குப்ரிக் இயக்கத்தில் வெளிவந்த படம்(டாம்குருஸும், நிக்கோலும் சில ஆண்டுகள் கணவன், மனைவியாக வாழ்ந்ததாக நினைவு), அதன் ஆதாரக்கதை Arthur Schnitzler எழுதிய "Traumnovelle" என்ற நாவலிலிருந்து எடுக்கபட்டது!, நாவலில் பல விசயங்கள் சாத்தியமாகும் வர்ணனை என்ற பெயரில் நம்மை சுற்றி இருக்கும் குறியீடுகளை வார்த்தை வடிவத்தில் விளக்கிவிடலாம்! ஆனால் காட்சியமைப்பு அதை முழுமையாக சாத்தியபடுத்த முடியாது. இந்த படத்தின் கதையை பொறுத்தவரை அது நிஜமா அல்லது கனவா என்ற மாயதோற்றத்தை கதையின் ஆசிரியர் நிறுவ முயன்றிருக்கிறார்!, அது நாவலினாலே சாத்தியபட்டது, அது திரையில் முடியவில்லை, சான்றாக நண்பர் ஜெய் எழுதிய ஸ்டேன்லி குப்ரிக்கின் புதிர்கள் என்ற பதிவை காண தருகிறேன்!


அடுத்து இந்த படத்தில் என்னை பாதித்தது காட்சியமைப்பு, ஒரு நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வைக்கும் பகீர் திருப்பங்கள் திரைக்கு சிறிதும் ஒத்துவரவில்லை, டுவாண்டினின் பல்ப் பிக்‌ஷன் போன்ற படங்கள் இந்த விசயத்தில் மார்தட்டி கொள்ளலாம்!, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வைக்கும் டுவிஸ்ட் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்க போகின்றதோ என்ற ஆர்வத்தை தூண்டலாம், ஆனால் காட்சியமைப்பில் ஏன் இந்த தேவையில்லாத கேரக்டர் என்ற எரிச்சலே வருகிறது., கதையின் போக்கை மாற்றக்கூடிய கேரக்டர் என்றால் ஏற்றுகொள்ளலாம், ஒரு பாட்டுக்கு ஆடும் மார்கெட் போன நடிகையை போல் வரும் கேரக்டர் யாருக்கு தான் எரிச்சல் தராது!

இது படத்தின் முழுக்கதை, நான் அத்தியாயம் அத்தியாயமாக பிரிக்கிறேன்!


வீட்டில் பேசி கிளம்பி பார்ட்டிக்கு செல்வதோட முதல் அத்தியாயம் முடியும்!

பார்டியில் சிலருடன் பேசி கொண்டே பழைய நண்பனை சந்திப்பது, அதே நேரம் மாற்றான் ஒருவன் நாயகியை நடனமாட அழைப்பதோட இரண்டாம் அத்தியாயம்


மாற்றானுக்கும், நாயகிக்கும் நடக்கும் உரையாடல் இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது(இந்த காட்சியில்), ஆகவே இதுவே முழுமையாக வரும், இரண்டு மாடல்களுடன் பேசும் நாயகனை பார்ட்டி அமைப்பாளர் அழைத்துவர சொல்லி அங்கே ஒரு பெண் மயக்க நிலையில் கிடப்பதோடு மூன்றாம் அத்தியாயம் முடியும்(இங்கே தான் நாவல் சூடு பிடிக்கும்)


நாயகி-மாற்றான் உரையடல் மற்றும் பிரிவு, நாயகனின் மருத்துவம் மற்றும் அறிவுறை ஒரு பக்கத்தில் முடிந்து இரவு இருவருக்கும் நடக்கும் படத்தின் முக்கியமான உரையாடல் நடக்கும்!, அவை முழுக்க முழுக்க கதையாசிரியரின் திறமையை வெளிபடுத்தும் வசனம்

Alice Harford: Millions of years of evolution, right? Right? Men have to stick it in every place they can, but for women... women it is just about security and commitment and whatever the fuck else!
Dr. Bill Harford: A little oversimplified, Alice, but yes, something like that.
Alice Harford: If you men only knew...

இது சாம்பிள் தான், மணமானவர்கள் மாற்றானுடன் செக்ஸ் ஏன் வைத்து கொள்வதில்லை என்ற உளவியல் பிரச்சனையை இருவரும் ஐந்து நிமிடம் பேசுவார்கள்!

முடிவில் நாயகிக்கு வேறொருவனிடம் ஏற்பட்ட crush ஐ சொல்வதுடன் நான்காம் அத்தியாயம்!

அப்போது வரும் போன், தனது நோயாளியின் வீட்டுக்கு பயணம், அவளுக்கு சொல்லும் ஆறுதல், அவள் தன்னை பற்றி சொல்லுதல் தீடிரென்று நாயகனை காதலிப்பதாக சொல்லி முத்தமிடல் நாவலுக்கே உரிய திருப்பத்தை தர இணைக்கபெற்றது, படிப்பவன் penthouse புத்தக ரேஞ்சுக்கு உடலுறவை ஆசிரியர் விளக்கக்கூடும் என எதிர்பார்க்க வைக்கும் டுவிஸ்டுகள்! இத்துடன் ஐந்தாம் அத்தியாயம்

திரும்பும் நாயகனுக்கு நாயகி சொன்னதே திரும்ப திரும்ப ஞாபகம் வருவது போன்றவை காட்சியமைப்பில் மட்டுமே சாத்தியமான ஒன்று, அது நாவலில் ஒரே வரியில் முடிந்து விடும்!, தனியாக நடந்து வருதல் வழியில் ஒரு விலைமாது குறிக்கிடுதல், அறைக்கு அழைத்து செல்லுதல் முக்கியமான கட்டத்தில் நாயகன் அலைபேசி அடித்தல், ஆறாம் அத்தியாயம்

நாயகன் கிளம்பி மீண்டும் நடத்தல், வழியில் நண்பன் வேலை செய்யும் உணவகத்தை அடைதல், அவனுடன் பேசுதல் அவனுக்கு வரும் போனில் இவன் பாஸ்வேர்டு அறிதல் ஏழாம் அத்தியாயம்


படத்தில் இடம் சொல்லும் வசனம் வரவில்லையென்றாலும், அங்கே வராதே என்று இடம் சொல்லும் வசனம் நாவலில் வரும், நாயகன் உடை வாங்க இரவு ஒரு கடையை அடைதல் அங்கே ஒரு சின்ன பெண் செக்ஸில் ஈடுபடுவதை அவளது தந்தை கண்டித்தல், அவள் இவன் பின்னால் வந்து ஒளிதல், மற்றும் அவனுக்கு இந்த உடை போடு என்று காதில் கிசுகிசுத்தல் எட்டாம் அத்தியாயம்


நண்பன் குறிபிட்ட இடத்தை அடைதல், பாஸ்வேர்டு சொல்லுதல் உள்ளே சென்று அதிர்ச்சியடைதல், சடங்கு முடிந்து ஒவ்வொரு பெண்ணும் ஆட்களை தேர்வு செய்து செல்லும் பொழுது ஒருத்தி நாயகனை தேர்வு செய்து, இங்கிருந்து போய்விடு என எச்சரிக்கை செய்தல் ஒன்பதாம் அத்தியாயம்!

சலுப்பா இருக்கு, இப்படி நாவலில் கொடுத்த தேவையில்லாத டுவிஸ்டுகளை திரையில் காட்டி எரிச்சலடய செய்தது குப்ரிக்குக்கு இது தான் முதன் முறை! நாவலை அப்படியே காட்சியாக மாற்றுதல் 100% சாத்தியபடாது என்பதை அனைவரும் அறிவோம், பின் ஏன் குப்ரிக் இந்த விபரீத முடிவை எடுத்தார் என தெரியவில்லை!, நான் இதுவரை குறிப்பிட்ட அத்தியாயத்தில் மூன்றாம் அத்தியாயத்திலிருந்து ஒரு டுவிஸ்டுடன் முடியும் விதம் காட்சி அமைந்திருக்கிறது, இதுதான் நாவலா என பார்க்கும் போது நான் கூட எழுதலாம் போலயே என அதே விபரீத ஆசை தோன்றுகிறது!


பெருசா போச்சு, ஸாரி!

பரிணாமம் - தொடர்சி

டிஸ்கி: இந்த தொடரில் வரும் அனைத்தும் எனது புரிதல்களே! எனது புரிதலை இங்கே விவாத பொருளாக வைக்கிறேன்! அவற்றில் உள்ள அதிகபட்ச சாத்தியகூறுகளை ஆராய வேண்டுமென்பதே எனது அவா!

*************

பலதரபட்ட உயிரனங்கள் கண் முன் இருந்தாலும் அவைகளின் உணவு மற்றும் பழக்க வழக்கங்களை அறிந்து அவற்றை ஒரு குடும்பத்தின் கீழ் வகைபடுத்துகிறார்கள்! உதாரணமாக புலி, சிங்கம், சிறுத்தை ஆகியவை பூனை குடும்பத்தை சேர்ந்தது!, அவைகளுக்குள் இருக்கும் உருவ ஒற்றுமை, முக்கியமாக தலை அமைப்பு, எழும்புகூட்டின் ஒற்றுமை, வேட்டையாடும் தன்மை இவற்றை உறுதி படுத்துகிறது! இந்த குடும்பத்தில் உடல் வலிமை வாய்ந்தது சிங்கம் என்றாலும் புத்திசாலி விலங்கு எதுவென்றால் அது சிறிய இனமான பூனை தான் எனலாம்!, ஒரு விலங்கு தான் உயிர்வாழ தேவையான உணவை எப்படி பெறுகிறது, அதற்காக அது வகுக்கும் வியூகம் என்ன என்பதிலேயே அதன் புத்திசாலி தனம் தெரிந்துவிடும்!, காட்டில் பூனைகுடும்பத்தில் புத்திசாலி சிறுத்தை!


பூனையாகட்டும், நாயாக்கட்டும் நமக்கு செல்லபிராணிகளாக இருப்பது இன்று தான்! என்னுடய கணிப்பில் மனித உணவின் எச்சங்களை சாப்பிட ஊர் எல்லையில் குழுமியிருந்த நாய் மற்றும் பூனை இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகருக்குள் வந்தன, அதிக ஆபத்தில்லாத விலங்குகளாக மனிதர்களுக்கு தோன்றியதால் அவர்கள் அதை விரட்டவில்லை, ஆம் என்னுடய கணிப்பில் ஆரம்பத்தில் அதை வளர்க்க அவர்கள் ஆசை பட்டிருக்க முடியாது, அதே நேரம் தொரத்தவும் மனமில்லாமல் விட்டதால் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு பின் அந்த விலங்குகள் அவர்கள் குடும்பத்தோடு ஒட்டியிருக்க வேண்டும்!, இன்னொரு விசயம் எந்த விலங்காக இருந்தாலும் குட்டியாக இருக்கும் போது அதை எடுத்து கொஞ்ச வேண்டும் என்று தோன்றும்!


ஏற்கனவே சொன்னது போல் விலங்கின் முக அமைப்பை கொண்டு இது இன்ன குடும்பம் என வகைபடுத்துகிறார்கள்!, குடும்பம் என்றால் படைப்புவாத கொள்கையின் படி குடும்பம் குடும்பமாக படைப்பட்டதல்ல, ஊர்வன, பறப்பன போல் பாலூட்டிகளில் ஏற்பட்ட கிளைகளை ஒரு குடும்பம் என்கிறோம்!, ஒரு குடும்பத்திற்கும், மற்றொரு குடும்பத்திற்கும் இருக்கும் இணைப்பே பரிணாமத்தின் ஆதாரபுள்ளிகள்!, அதே நேரம் ஒரே குடும்பத்தில் இருந்து அதன் பழக்கவழக்கங்களை மாற்றி புதிய குடும்பமாக அல்லது மேம்படுத்தபட்ட உயிரினமாக மாறுவது சமகாலத்தில் கண் முன் இருக்கும் பரிணாமத்தின் பேராதாரங்கள்.


ஒநாய், நரி என்ன குடும்பம் என்றால் பெரும்பாலோர் பட்டென்று சொல்லிவிடுவார்கள் அது நாய் குடும்பத்தை சேர்ந்தது என்று, ஆனால் கரடி என்ன குடும்பம் என்றால் பலர் யோசிக்க நான் பார்த்திருக்கேன்!, அதன் தலை அமைப்பு, மற்றும் எலும்பு உள்கட்டமைப்பு சொல்லிவிடும் அதுவும் நாய் குடும்பம் தான் என்று, ஆனால் பெரும்பாலோர் யோசிக்க காரணம் கரடி தன் குடும்ப உணவு பழக்க முறையிலிருந்து மாறி கொண்டிருப்பது தான்!, நாய் இன்று அனைத்துண்ணியாக தெரிந்தாலும் உண்மையில் அவை அசைவ பட்சினிகளே!, நாய்களால் பச்சை/வேகவைத்த காய்கறிகளை சாப்பிடமுடியாது! அசைவபட்சிணிகளுக்கு கோரை பற்கள் உண்டு என்பது நாய் ஒரு அசைவ பட்சிணி தான் என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் விசயம்!




கரடி இனங்களில் தற்பொழுது பல வகைகள் காணபட்டாலும் முழுமையான அசைவபட்சிணிகளாக வாழ்வது துருவ கரடிகளே! மேலும் அங்கு காய்கறிகளுக்கு வழியில்லை என்பது கவனிக்கபட வேண்டிய ஒன்று!, கரடிகளில் பல அனைத்துண்ணிகளாக மாறி சில நாட்கள் மூங்கில் குருத்து மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் என சாப்பிட்டு, சில நேரங்களில் சா(ல)மன் மீன்களை சாப்பிட கூட்டமாக வேட்டைக்கு கிளம்பும்!, இது வரை அனைத்துண்ணிகளக அறிய பட்டவைகள் என்னவென்று அறிந்தால் கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கும்! ஆம் குரங்கு/மனித இனங்களே இதுவரை முழுமையாக அறியபட்ட அணைத்துண்ணிகள்!, மனிதன் அசைவபட்சிணியாக இருந்து தற்பொழது மாறியிருக்கிறான் என்பதற்கு நம்பிடம் பல உதாரணங்கள் இருக்கிறது, முதலாவதாக நமது பல்லில் எஞ்சியிருக்கும் கோரைபற்கலின் நீட்சி! இரண்டாவதாக முப்பரிணாம தோற்றத்தில் உணவு விலங்கை பார்க்க வேட்டையாடும் மிருகங்களுக்கு இருப்பது போல் கண் அமைப்பு!,(சொன்னா நம்பவா போறாங்க) கரடி இனங்கள் கடைசி பத்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வருடத்திற்குள் உணவு முறை மாற்றத்தை ஏற்படித்தி கொண்டிருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகள் கருத்து!

இந்த பதிவில் நான் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது ஒன்று மிச்சம் இருக்கு!, ஒரு விலங்கு தேவையின் பொறுத்து அனைத்துண்ணியாக மாறுவது ஆச்சர்ய பட ஒன்றுமில்லை, கண் முன்னே நாயையும், பூனையும் இதன் இயல்பு வாழ்விலிருந்து விலக்கி கெடுத்து வைத்திருக்கிறோம், அதனால் அவைகளின் வாழ்நாளில் குறைவும், மரபணு மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது என்கிறது விஞ்ஞானம்! ஆனால் இயற்கையாகவே ஒரு விலங்கு, அசைவ பட்சிணியாக இருந்து முழுக்க முழுக்க சைவ பட்சிணியாக மாறியிருக்கிறது! எதிரிகளிடமிருந்து தப்பிக்க மூங்கில் மரமேறிய பாண்டா கரடி இன்று முழுக்க முழுக்க அதை மட்டுமே உணவாக எடுத்து கொள்கிறது!, அவைகளில் பழைய வாழ்க்கையின் சாட்சியாக கோரைபற்றுகளும், தாவரபட்சிணிக்கு இருப்பது போல் வலுவான கடவாய் பற்கள் இல்லாமல் வலுவான தாடைகளும், வலுவற்ற கடவாய் பற்களும் உள்ளன!, இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்த உடலமைப்பு மாறி அவைகள் வேறு வடிவமான உடலமைப்பு பெறலாம்! ஏற்கனவே குரங்கிற்கு அடுத்து கரடிகள் தான் புத்திசாலி விலங்குகள் என கண்டறிந்துள்ளார்கள்!


மரமேறுவது, திறமையாக வேட்டையாடுவது என அனைத்து துறைகளிலும் திறையை வெளிபடுத்தும் கரடிகள் கூட்டுகுடும்ப வாழ்க்கையில் தற்சயமம் அதிக கவனம் செலுத்துவதாக கண்டறித்துள்ளார்கள், ஒரு இனம் தழைக்க இனபெருக்கம் மிக முக்கியம், அதை விட முக்கியம் அதன் குட்டிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி முழுமையாக வளர்ப்பது!, குரங்குகளை விட கரடிகள் இவ்விசயத்தில் மிகுந்த திறமையுடன் நடத்து கொள்வதாக ஆராய்ச்சி சொல்கிறது, வலுவான உடலமைப்பு, மரம் ஏறும் திறமை கைகொடுத்தாலும், எதிரிகளை பயமுறுத்த மிக முக்கியமாக முன்னங்கால்களை தூக்கி எழுந்து நிற்கும் திறமையையே வெகுவாக விஞ்ஞானிகள் சிலாகிக்கிறார்கள்! ஆம் மனித நாகரிகம் அவன் எழுந்து நின்ற பிறகே ஆரம்பித்தது!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

படத்தில் இருப்பது போலவே இளமையை கொண்டாடும் அன்பு அண்ணன், அருமை கண்ணண் லவ்டேல் மேடி அவர்களுக்கு நேற்று(18.05.10) பிறந்தநாள். அண்ணாரின் பின்னூட்டம் இல்லாமல் சமீபகாலமாக எனது வலைப்பூ வாடி வதங்கி போனது நண்பர்கள் அறிவார்கள், அண்னாரை வாழ்த்தி அப்படியே ப்ளாக்குக்கு தூக்கிட்டு வருமாறு கேட்டு கொள்கிறேன்!


திருச்சியில் பிறந்து சென்னையில் குப்பை கொட்டி கொண்டிருக்கும் ஸாரி பொழப்பு நடத்தி கொண்டிருக்கும் குட்டி அஜித் நம்ம டம்பி மேவிக்கு இன்று(19.05.10) பிறந்த நாள்!, தினசரி வாழ்க்கை என்று ஆரம்பித்து வாரம் ஒரு மொக்கை போடக்கூட முடியாமல் பிஸியாக உள்ளார்! அந்த அழகு சிங்கத்தையும்(நல்லா படிங்கப்பா) வாழ்த்தி கொள்வோம்!



மா”நக்கல்” சிபி என்று பலரால் அன்பாகவும், சிலரால் கடுப்பாகும் அழைக்கபடும் வலையுலக சுனாமி நாமக்கல் சிபி அவர்களுக்கு நாளை(20.05.10) பிறந்த நாள், ஒன்றிரண்டு இருந்தால் இவரது ப்ளாக் இதுவென காட்டிவிடலாம்!, ப்ளாக்கர் செர்வரே ஸ்தம்பிக்கும் அளவுக்கு தனியாக சொந்தமாக ப்ளாக்குகள் வைத்திருக்கிறார்!, உங்களுக்கு பெண் பெயரில் வரும் கமெண்டுகள் அவராக கூட இருக்கலாம்!,

கீழ இருக்குற போட்டோவுல யாரு சிபின்னு கேட்டா அடிவிழும் சொல்லிட்டேன்!



தன்னம்பிக்கை சிகரம், வலையுலக பெண் சூறாவளி(அது ஏன் சூறாவளிக்கு பெண்கள் பெயர் மட்டும்), அன்பு தோழி ரம்யாவிற்கும் நாளை(20.05.10) பிறந்த நாள்!


நால்வருக்கும் நமது வாழ்த்துக்களை சொல்லி, நமது அன்பையும், நட்பையும் வெளிபடுத்துவோம் நண்பர்களே!

பின்நவீனம்!

எந்த ஒரு செயலிக்கும் தனிமனிதனின் அரசியல் பார்வை மிக முக்கியமாகிறது, அந்த செயலின் உயர்விற்கும், மறு சீரமைப்பிற்கும், மீண்டும் மீண்டும் அதை சோதனைகுள்ளாக்குவது மிக அவசியமாகிறது, எந்த ஒரு அரசியல்தன்மையும் இல்லாத மனிதர்கள் தங்களை சமகாலத்திற்கு தயார் படுத்தி கொள்வதில்லை, உரையாடலிலோ, சாடலிலோ ஒருவரை பொதுபுத்தி உள்ளவர் என குற்றஞ்சாட்டபடுதல் இம்மாதிரியான மனிதர்களே!, சரியோ தவறோ முதலில் உங்கள் புரிதல் அவசியமாகிறது, அதற்குண்டான மாற்று கருத்துகளை நேர்மையுடன் எதிர்கொள்ளுதல் சமகாலத்தில் உங்களை தங்க வைத்திருக்கும், பொதுபுத்தியுடனே எதையும் மறுத்து பிற்போக்கான எண்ணத்துடன் இருத்தல் உங்களை பின் தள்ளி உலகம் முன்னேறி கொண்டே இருக்கும்!

புதுமுன்னேற்றம் அல்லது சீரமைப்பு கலை மற்றும் அறிவியலுக்கு மிகவும் தொடர்புடயது, தற்கால அறிவியல் வளர்ச்சி மிக வேகமானது என்றாலும் அவைகளின் முன்னோடி கலை தான்!, பல மாற்றங்களை பெற்று இன்றும் மாறி கொண்டிருப்பதில் கலை மிக முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது, கலை மட்டுமே தத்துவங்களாலும் மாற்றம் பெறும் அல்லது கலைக்கு தத்துவ விளக்கங்கள் மாற்றம் கொடுக்கும்!

புரிதல் என்பதே பன்முகதன்மை கொண்டவை என்பதற்கு முதல் வித்திட்டவர் பிக்காஸோ!, கியூபிஸம் என்ற புது தத்துவத்தில் ஒரே ஓவியம் பன்முகதன்மை கொண்ட புரிதல்களை கொடுத்தது, இது சரி, இது தவறு என எந்த விளக்கத்தையும் பிக்காஸோ கொடுக்கவில்லை, உனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே எடுத்து கொள் என்றார், வாசகன்/ரசிகனுக்கு இது முழு சுதந்திரம் கொடுத்தாலும் ஓவியம் தவிர மற்ற விசயங்களுக்கு கியூபிஸம் ஒத்துவரவில்லை, சமகாலத்தில் சிலரது கவிதைகள் அந்த தன்மை பெற்றிருந்தாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான முயற்சி தட்டையான சிந்தனைகளையே தக்க வைத்து கொள்கிறது!



காலம்காலமாக காப்பாற்றி வந்த மரபை உடைத்தல், பழமைக்கு எதிரான எழுச்சி, பொதுபுத்திக்கு எதிரான நிர்வாணநிலை சமூகத்தில் பின்நவீனமாக பார்க்கப்படுகிறது, இல்லை பின்நவீனம் என்பது வேறு என்பவர்களும் உண்டு, ஏற்கனவே சொன்னது போல் நமது புரிதலில் சில சிக்கல்கள் இருக்கலாம், ஆனால் எதையும் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் இருப்பது ஜடநிலைக்கு சமம்!, என்னுடய புரிதல் முழுவதும் கூட தவறாக இருக்கலாம், ஒருவேளை இங்க நடக்கப்போகும் உரையாடல் எனக்கும், என்னை போன்ற தவறான புரிதலில் இருப்பவர்களுக்கும் தெளிவு ஏற்படுத்தலாம்!, அதற்காக தானே நான் இருக்கிறேன்!


தொடர்புடய பழைய பதிவுகள்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வலையுலகில் புது புரட்சியை ஏற்படுத்தியவர், முதன் முதல் அதிக பாலோயர் பெற்ற ஜனரஞ்சக எழுத்தாளர், சிறந்த சமூக ஆர்வலர்!, எங்கள் அண்ணன்

வலையுலக மார்க்கண்டேயன்!

அண்ணன் பரிசல்காரனுக்கு இன்று பிறந்த நாள்!



அண்ணாரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!



இப்பெல்லாம் தம்பிகளும் வாழ்த்துவது தான் லேட்டஸ் ட்ரெண்ட்

குறுந்தகவல் நகைச்சுவைகள் 4

மின்னஞ்சலில் அனுப்பிய தமிழரசிக்கு நன்றி!(அவங்களுக்கு யார் அனுப்பினாங்களோ)


1)

“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....

2)
ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3)
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

4)
மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

5)
மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

6)
தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

7)
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..



8)
முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

9)
லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்படி?


10)
கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

11)
சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

12)
நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

13)
நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

14)
வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே போயிருமே...!

கமாக்கதைகள்(இடம் மாறிய கால்) 3(69)

கணிணிதிரையை வெறித்து பார்த்து கொண்டிருந்த சஞ்சயையின் கவனத்தை அலைபேசியின் ”நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம்” என்ற ரிங்டோன் கலைத்தது, திரையில் தெரிந்தது புதுஎண்ணாக இருந்தாலும் பிஸ்னஸ் காலாக இருக்கலாம் என பொத்தானை அழுத்தி காதில் வைத்தான், ஹலோ என்ற புல்லா”குரல்” காதில் பாய்ந்தது, சில நொடிகள் சுதாரிப்புக்கு பின்னே தான் அவனால் பதில் ஹலோ சொல்ல முடிந்தது, மறுமுனையில் தயங்கிய குரல் ”ஸாரி, ராங்நம்பர்” என்று போனை துண்டித்தது!


பிஸ்னஸ்மேன் சஞ்சயை யாரும் அவ்வளவு சுலபமாக டிஸ்டர்ப் பண்ணமுடியாது, ஆனால் இந்த குரலில் ஏகத்துக்கும் டிஸ்டர்ப் ஆனான், யோசனையில் இருந்தவன் சட்டென்று அந்த நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினான்! "thank you for calling me, i hope you enjoy with this conversation"(copyrighted by வால்) என்று, எதிர்பார்த்த மாதிரியே சில நிமிடங்களில் அதே நம்பரில் இருந்து அழைப்பு வந்தது, மீண்டும் அதே புல்லாங்”குரல்”, ”என்ன மெசேஜ் அது” ஸாரிங்க, அது டிஃபால்ட் மெசேஜ், யார் எங்கிட்ட பேசினாலும் அந்த நம்பருக்கு போயிரும், எனிவே உங்களுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, உங்ககிட்ட பேசினதுல எனக்கு ரொம்ப சந்தோசம் என்றான் சஞ்சய்! ஏன் என்றாள், உங்கள் குரலை சோறு தண்ணி இல்லாம கேட்க சொன்னாலும் கேட்பேன் என்றான்! பொய் சொல்லாதிங்க என்றது மறுமுனை! உங்க குரல் பொய்யினா இந்த உலகமே பொய், நான் சூடம் அணைச்சு சத்தியம் பண்ண தயார் என்றுதும் மறுமுனையில் கேட்ட சிரிப்பு சத்தத்தில் நாமே சிதறிய முத்துக்களை தேட குனிவோம்!

என்னங்க இது இப்பதான் பேச ஆரம்பிச்ச மாதிரி இருக்கு அதுகுள்ள நாலு மாசம் ஓடிபோச்சு!

உங்ககிட்ட பேசுனா எனக்கு எனக்கு வருசம் கூட நிமிடம் தான்!

இப்படி பேசி பேசி தான், நல்லா இருந்த என்னை கெடுத்துபுட்டிங்க, மாசாமாசம் பில்லுக்கு புருசங்கிட்ட ஆயிரதெட்டு பொய் சொல்ல வேண்டியிருக்கு!

நான் பண்றேன்னேனு சொன்னாலும் வேண்டாங்கிற

வேணாங்க, அவரு எப்பவேணும்னாலும் வருவாரு, இப்பெல்லாம் போனை எடுத்து பாக்குறாரு, அதான் லேண்ட்லைன்ல இருந்து கூப்பிடுறேன், சரி திடிர்னு இந்த நம்பர்ல இருந்து யாராவது கூப்பிட்டு நீங்க யாருன்னு கேட்டா என்ன சொல்விங்க!

எனக்கு தெரியாது, நீயே சொல்லு என்ன சொல்றது!

அவ்வளவு அறிவு இருந்தா நான் ஏன் இங்க இருக்கேன்!

சரி நானே சொல்றேன், ஹோம் அப்ளையன்ஸ் கன்சல்டிங்னு சொல்வேன்!, நீ எங்கிட்ட என்ன பொருள் வாங்கலாம்னு ஐடியா கேட்டதா சொல்வேன்!, என்ன பொருள்னு கேட்டா, பர்டிகுலரா எதுவும் கேக்கல, எதாவது புதுசா வந்துருக்கான்னு கேட்டாங்கன்னு சொல்வேன்!

அதெப்படிங்க, கேட்டவுடனே ஒரு ஐடியா சொல்றிங்க!

அப்படியில்லாமலா சவுத் இண்டியா முழுதும் பிஸ்னஸ் பண்ணமுடியுது! ஒகேடா செல்லம், நான் கிளம்புறேன், நாளைக்கு போன் பண்ணு!


வீட்டின் முன் பைக்கை நிறுத்தி அதீத மகிழ்ச்சியின் துள்ளலுடன் ஓட்டமும் நடையுமாக சென்று கதவை திறந்தான், நொடிபொழுதில் போனின் ரீசிவரை டக்கென்று அவனது மனைவி வைத்தது அவன் கண்ணில் இருந்து மறையவில்லை! அவளும் வைத்த வேகத்தில் இவனை பார்க்காமலே உள்ளே சென்றாள், ஒருவித குற்ற உணர்வுடன் தலையை குனிந்து கொண்டே சென்றது சஞ்சய்க்கு கொஞ்சம் நெருடியது! உள்ளே சென்று விட்டாளா என எட்டி பார்த்து போனை கையிலெடுத்து ரீடெயில் பட்டனை தட்டினான்!

ஹலோ, யார் நீங்க!

(சில நொடி மெளனத்திற்கு பின்) இது லெண்டிங் லைப்ரேரிங்க!

இப்போ இந்த நம்பர்லருந்து போன் வந்ததே!

ஆமாங்க, நாவல் படிக்க வாடகைக்கு கொடுப்போம், படிச்சவுடன் போன் பண்ணி கேப்பாங்க, புதுசு கொடுத்துட்டு பழசை வாங்கிட்டு போவோம்.

இப்போ என்ன கேட்டாங்க

பர்டிகுலரா எதுவும் கேக்கல, எதாவது புதுசா வந்துருக்கான்னு கேட்டாங்க

சஞ்சய்க்கு முதுகுதண்டில் மின்னல் வெட்டியது!


குவியல்!..(06.05.10)

அன்பு தம்பி சத்யனுக்கு 04.05.10 அன்று பிறந்த நாள், இது அவரது ஆர்குட் தள முகவரி, பெங்களூரில் தொழில்நுட்ப துறையில் இருக்கிறார்! இயந்திர வாழ்க்கை வெறுத்து, விரைவில் தன்னை ஒரு இயற்கை விவசாயியாக காட்டிகொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பம், அவரது விருப்பம் நிறைவேற வாழ்த்துவோம்!


********************

பாஸின் திருமண வேலை மற்றும் தொடர்ச்சியான ஆணியால் இந்த மாதம் அவ்வளவாக எழுத முடியாது, உடல்நிலை எதுவும் சரியில்லையா என கேட்கும் நண்பர்களுக்கு நன்றி! உண்மையில் நான் எதுவும் பதிவு போடலங்கறதுக்காக பூமி எதிர் திசையில் சுத்தப்போவதில்லை!, பதிவுகலம் மிகுதியான் போதை கொண்டது, எதையாவது எழுதி ஆகவேண்டும் என்ற வெறி உங்களை வாழ்வில் எதையுமே ரசிக்க விடாது, காணும் விசயங்களிலெல்லாம் பதிவெழுத மேட்டர் கிடைக்குமா என தேடச்சொல்லும், சினிமாவுக்கு போனாலும் படத்தை பார்க்காமல் குறிப்பெடுத்து கொண்டிருப்பீர்கள், எதுவுமே கிடைக்கலையா ”கக்கூஸில் தண்ணி வரல” ரேஞ்சுக்கு ஒரு பதிவு போடத்தோணும்!

பதிவுகலில் நம் சுய எண்ணங்கள், மாற்று கருத்துகள், தேடிய அரிய தகவல்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வது ஆரோக்கியமானது, இதில் சுய எண்ணங்கள் பெரும்பாலும் சுயசொறிதலே வால்பையன் உட்பட, ரொம்ப சொறிஞ்சா நமக்கும் ஆகாது படிக்கிறவங்களுக்கும் ஆகாது, அதற்காக எதுவுமே எழுத வேண்டாம் என்றில்லை, எழுத்து கலை எழுத, எழுத தான் வரும், அது பதிவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, நண்பர்களின் பதிவுகளில் பின்னூட்டங்களில் விவாதிக்கலாம், பலரது பின்னூட்டங்களை பார்க்கையில் எனக்கு இன்னும் சுருக்க சொல்லுதல், எளிமையாக விளக்குதல் போன்ற கலை கைக்கூடவில்லை என்று தெரிகிறது, அதற்கான பயிற்சி களமாக பின்னூட்ட பெட்டி இருக்கும் என நம்புகிறேன்!

நீங்கள் எனக்கு நண்பர்களாகவே இருங்கள், உங்களுக்கு நீங்களே வாசகர் பட்டம் கொடுத்து என்னை கெடுத்து விடாதீர்கள், தயவுசெய்து உங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பொழுது எனக்கு வாசகர் என்று சொல்ல வேண்டாம், நண்பனாக இருப்பதே எனக்கு பிடித்திருக்கிறது!


***************************


ஜாக்கிசேகர் பார்த்தே ஆகவேண்டிய படங்கள் என்று ஒரு லிஸ்ட் வைத்திருப்பார், என்னிடம் அப்படி ஒரு லிஸ்ட் கேட்டால் அதில் நிச்சயம் மெலினா இருக்கும், எனக்கு முழுக்கதையும் விமர்சனாக எழுத பிடிக்காததால் எனக்கு அதில் பிடித்தவகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன், முழு விமர்சனம் படிக்க தோழி உமாஷக்தியின் இந்த விமர்சனம் உதவலாம்!


இந்த படம் எனக்கு பிடிக்க எனது பதின்மத்தை ஞாபகபடுத்தியே முதல் காரணம்!, யாராக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் பொருத்திக் கொள்ளலாம், நமது ஆசைகளும், நிராசைகளும் சற்றே பின்னோக்கி பார்க்க இப்படம் வழி செய்யும்!, உன் மகனுக்கு துஷ்டாஆவி பிடிக்கவில்லை அவன் வயதுக்கு வந்துவிட்டான் எனும் போது எனக்கு என் தந்தையின் ஞாபகமும் வரும், 15 வயதில் செக்ஸை பற்றி பல மணிநேரம் விவாதம் செய்திருக்கிறேன் அவரிடம். போர், போரின் கொடுமைகள், சுயசமாதானங்கள் என்று மெல்லிய நூலிழை போல் படம் முழுவதும் நம்மை அறியாமல் ஒரு சோகம் இழையோடியிருக்கும்! போர் முடிவிற்கு பின் மெலினாவை அந்த ஊர் பெண்கள் அவமானபடுத்தி ஊரை விட்டு துரத்தும் போது, சிரித்து பேசுவதெல்லாம் நம்புவதற்கல்ல, நம் காலும் ஒருநாள் வாரப்படலாம் என்னும் வாழ்க்கை தத்துவம் தெரிகிறது!, நிச்சயமாக இது ஒவ்வொரு பெற்றொரும் பார்க்க வேண்டிய படம், காரணம் நீங்களும் பதின்மத்தை தாண்டி தான் வந்தீர்கள் என்பதை மறந்து விட்டதனால்!

************************

தம்பி பிலால் நேற்று ஈரான் பணம் 2000 த்தை கொண்டு வந்து இதை மாற்ற முடியுமா என்றான், “தம்பி ஏற்கனவே நமக்கும் அவுங்களுக்கும் வாய்க்கா தகராறு” இதை கொண்டு போய் கொடுத்தால் “பொண்ண கைய புடிச்சி இழுத்தியா”ன்னு கேப்பாய்ங்க, அரபு நாடுகளில் இருக்கும் நண்பர்கள் யாராவது மாற்றக்கூடும் என்றேன், அதான் வழியா, இல்லை அப்பணம் மாற்ற வேண்டிய அளவுக்கு மதிப்பில்லாததா, யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்!


*****************

ஆரம்பத்தில் டுவிட்டரை பற்றி ஒன்றும் தெரியாமல் விலகியே இருந்தேன், இப்போ மொக்கைவிரைட்டர் என்ற பெயருடுன் பயங்கர மொக்கை, எப்படியாவது கார்க்கியை பீட் பண்ணிரனும்!

சில சாம்பிள்ஸ்

காரணமில்லாமல்
ஏற்படும் கோபத்திற்கு
ஒருவர் காரணம்
கேட்கும் போது
ஏற்படும் கோபத்திற்கு
நிச்சயமாக காரணம்
உண்டு!

0*0

வரண்டதொரு பூமியில்
வாழும் மிருகத்தை போல்
உன் நினைவில்லாத பொழுது
என் கண்கள் எரிகிறது!

0*0

ரிங்டோனை மாற்றினேன்,
காதல் தோல்வியா என்கிறான்,
அடிக்கடி ரிங்டோனை
மாற்றும் நண்பனொருவன்.


0*0


”க”டைசியில்
ஆரம்பித்து
முத”ல்”லில்
முடிகிறது
பாரேன் (நம்) காதல்!

!

Blog Widget by LinkWithin