குற்றம் நடந்தது என்ன!? 1

மேலை நாடுகளில் மிக கடினப்பட்டு கண்டுபிடித்த குற்றங்களை தொகுக்கும் பொருட்டு இந்த பதிவு ஆரம்பமாகிறது, நான் ஏற்கனவே சொன்னது போல் எல்லோருக்குள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தூங்கி கொண்டிருக்கிறான், அவனை உசுப்பிவிடும் ஒரு முயற்சியாகவும் இதை எடுத்து கொள்ளலாம்!

**

கலிபோர்னியாவின் வடக்கு மாகானத்தில் ஒரு பெண், அவளது அம்மா, அந்த பெண்ணின் மூன்று குழந்தைகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள், ஊருக்கு ஒதுக்கு புறமான வீடு என்பதால் அவர்களை துப்பாக்கியால் கொலைகாரன் சுடும்போது யாருக்கு தெரிந்திருக்கவில்லை, ஆனாலும் தடவியல் நிபுணர்கள் அவர்கள் இறந்தது ஒரு ஞாயிற்றுகிழமை மத்தியான நேரம் என கண்டுப்பிடித்தார்கள், ஆனாலும் கொலைக்கான காரணம் கண்டுபிடிக்க வெகு சிரமமாய் இருந்தது, காரணம் அங்கு எந்த விலையுயர்ந்த பொருளும் காணாமல் போகவில்லை.

இருந்தாலும் கொலைக்கான காரணங்களை கண்டுபிடித்தால் மட்டுமே கொலைகாரனை கண்டுபிடிக்க முடியும், விசாரணையில் அந்த பெண்(பெயர் ஜோன் என்று வைத்து கொள்வோம்) மணமாகி விவாகரத்தானவள், அதுவும் விவாகரத்தாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை என்பது தெரிந்தது. கணவன்(வின்செண்ட் என அழைப்போம்) ஒஹியோ மாகானத்தில் குழந்தைகளுக்கான பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக வேலைப்பார்ப்பவர், அவருக்கு ஒரு தம்பியும் உண்டு, மேலும் அவரது உறவினர்கள் அனைவருமே அந்த இடத்தை சேர்ந்தவர்கள் தான், அவரது தாய் மட்டும் அங்கிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறார்!

கணவனின் நடத்தையை சோதித்ததில் எந்த சந்தேகமும் இல்லை, குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருப்பவர் நிச்சயமாக பண்புள்ளவராக இருப்பார் என நம்பினர், மற்ற அனைத்து கோணங்களில் விசாரித்து பார்த்தும் எல்லா பக்கமும் அடைத்தே இருந்தது, ஒரு வார காலம் கழித்து மீண்டும் வின்செண்டிடம் இருந்து பழைய படி விசாரணையை ஆரம்பித்தனர், கொலை நடந்த சமயம் வின்செண்ட் எங்கிருந்தார் என நிறுபிக்க வேண்டியது அவரது கடமை, அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் கொலைநடந்த முதல் நாளிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வின்செண்ட் சொந்த ஊரில் இல்லை என்பது தெரிந்தது! ஆகையால் மற்ற கோண விசாரணைகளை தள்ளி வைத்து முழுமையாக வின்செண்டின் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்!

விசாரணையில் தான் வெளியூருக்கு சென்றதாகவும், அங்கிருந்து தனது தாயை பார்க்க சென்றதாகவும் கூறினார்!, வெளியூருக்கு செல்ல அவரிடம் விமான பயணசீட்டும் இருந்தது, பின் அங்கிருந்து வாடகை கார் மூலம் தனது தாயாரை பார்க்க சென்றதாக கூறினார், மேலும் சாட்சிக்கு அவரிடம் அன்றைய தேதியில் வேறொரு இடத்தில் தனது கடனட்டை மூலம் பொருள்கள் வாங்கிருந்ததற்கு ரசீதுகள் வைத்திருந்தார், மற்ற காவல் துறையினர் நம்பிக்கை இழந்திருந்தாலும் முக்கியமான ஒரு புலனாய்வுதுறை அதிகாரிக்கு வின்செண்டின் மேல் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது!,



கடனட்டை மூலம் அவர் பொருள் வாங்கியிருந்த பகுதிக்கு சென்று கண்காணிப்பு கேமராக்கள் எதாவது இருக்கிறதா என ஆராய்ந்தார், அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு இடத்தில் இருந்தது, அதை சோதித்ததில் பொருள் வாங்கியது வின்செண்ட் அல்ல, அவரது தம்பி என தெரிந்தது, மீண்டும் அவரது தம்பியை விசாரித்ததில் மற்றவர் கடனட்டையை அனுமதியில்லாமல் உபயோகித்ததால் அதை மறைத்ததாக கூறினார், ஆயினும் வின்செண்ட் சொன்னது பொய்யென்று ஆனதால் அவர்களது விசாரணை மேலும் இறுகியது, தன் தாய் வீட்டிற்கு சென்றதாக கூறினார் என்பதால் அங்கேயும் சென்று விசாரித்தனர், வின்செண்ட் அவரது தாய் வீட்டிற்கு ஞாயிறு நள்ளிரவு தான் சென்றிருக்கிறார்!

வின்செண்ட் அப்போதும் தான் வாடகை காரில் ஊர் சுற்றி கொண்டிருந்ததாகவே கூறினார்! மேலை நாடுகளை பொறுத்தவரை வெறும் யூகத்தின் பேரில் ஒருவருக்கு தண்டனை அளிக்கமுடியாது! இந்தியாவில் இருப்பது போன்றே ”ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது” என்பது உலகளாவிய சட்டமாகவே இருக்கிறது!, புலனாய்வு அதிகாரி, வின்செண்ட் வாடகைக்கு கார் எடுத்த இடத்திற்கு சென்று விசாரித்தார், அது புது வகையான,விலையுயர்ந்த கார் என்பதால் மிகக்குறைவாகவே வாடகைக்கு செல்லும் எனும் விசயம் அவர்களுக்கு சாதகமாக இருந்தது, அந்த காரில் எதாவது தடயம் கிடைக்குமா என ஆராய, அந்த காரை காவல்துறை தனது பொறுப்பில் எடுத்தது!

சம்பவம் நடந்து ஒருவார காலம் ஆகியதால் காரில் இருந்து பெரிதாக எந்த தடயமும் கிடைக்க வாய்ப்பில்லை!, ஆனாலும் ஒரு தடவியல் நிபுணரின் ஆலோசனையின் பேரில் காரில் இருந்த ரேடியேட்டரும், ஏர்பில்டரும் சோதனைக்கு உட்படுத்தபட்டது, பூச்சிகள் ஆராய்ச்சி செய்யும் குழுவிடம் ஒப்படைத்து ரேடியேட்டரில் மாட்டி செத்து கிடக்கும் துண்டு, துண்டு பூச்சிகளின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன! முழு பூச்சிகளை மட்டுமே வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஆராய்ச்சிகுழுவிற்கு அது பெரும் சவாலாக இருந்தது, ஆராய்ச்சியின் முடிவில் அந்த கார் கலிபோர்னியாவின் வடக்கு மாகானத்தில் பயணம் செய்தது நிறுபணமானது, ”ரெட் போர்ன்” எனும் பெயருடய சிகப்பு கால்களையுடய வெட்டுகிளிகள் வடக்கு மாகாணத்தில் மட்டுமே காணப்படும் பூச்சியினம், அதே போன்று மொத்தம் மூன்று பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது!

அந்த ஆதாரத்துடன் வின்செண்ட் கோர்டில் ஒப்படைக்கப்பட்டான், வின்செண்ட் சொல்வது அனைத்தும் பொய் என நிறுபிக்கப்பட்டாலும், நீதிபதிகள் வின்செண்ட் கொலைசெய்ய வலுவான காரணம் என்ன என கேட்டனர்!, விவாகரத்தான வின்செண்ட் தனது முன்னாள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சமாக பெரும்தொகை கொடுக்க வேண்டியிருக்கும் என பயந்தான், அந்த பயமே அவனை கொலை செய்ய தூண்யிருக்கும் என ஒரு உளவியல் நிபுணர் விளக்கினார், ஆனாலும் கடைசி அஸ்திரமாக விஞ்செண்ட் ஒரு குண்டை தூக்கி போட்டான், கொலை நடந்த அன்று தான் ஒரு விபத்தில் சிக்கி தான் ஒரு போலிஸ் நிலையத்தில் ஆஜரானதாக கூறியது உண்மையிலேயே அனைவரையும் குழப்பியது.

ஆனாலும் புலனாய்வு அதிகாரி மீண்டும் ஒஹோயோ மாகானம் சென்று காவல் நிலையத்தில் வின்செண்ட் பதிவு செய்த கைரேகையை சோதித்தார், அது ஒரு பழைய குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்திருந்தது, வின்செண்டின் தண்டனையை உறுதி செய்தது! ஐந்து பேரை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக வின்செண்டிற்கு நீதுமன்றம் மரணதண்டனை விதித்தது, குற்றம் வாசிக்கப்படும் போது வின்செண்ட் கதறி கண்ணீர் விட்டு அழுதான்!

**

டிஸ்கி:இந்த வழக்கை பொறுத்தவரை வின்செண்ட் வடக்கு மாகானம் சென்றதற்கு ஒரே சாட்சி,வண்டியில் மாட்டி செத்த போன பூச்சியினங்கள் தான்!, ஒரு சிறு துரும்பையும் வைத்து புலனாய்ட்வுதுறையினரால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்!

அகம் புகுதல்! 2

சென்ற பதிவில் ”அவலாஞ்ச்” சென்றதோடு தொடரும் போட்டாச்சு!, அவலாஞ்சில் நாங்கள் செல்லும் பொழுது நல்ல மழை, அதனால் பெரிதாக போட்டோ எடுக்க முடியவில்லை!, மேலும் மிக முக்கிய உயர் அதிகாரி வந்திருந்ததால் லதானந்த் சார் எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு கிளம்பிவிட்டார், மீண்டும் இரவில் தான் வந்தார்!

“அவலாஞ்ச்” என்பது ஒரு காரணப்பெயர், ”அவலாஞ்ச்” என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொள்வோம், ஆல்ப்ஸ் மலைத்தொடர், இமயமலைத் தொடரில் முழுவதுமாக பனி படர்ந்து ஐஸ் கட்டியால் மூடப்பட்டிருக்கும் அல்லவா, அது சிறு அதிர்வு ஏற்பட்டாலோ, வேறு எதாவது அசம்பாவத்தினாலோ அந்த ஐஸ் படர்வு அப்படியே கீழ்நோக்கி நகரும், ஒரு வெள்ளை போர்வை அப்படியே நகர்ந்து வருவது போல் இருக்கும்!, எதாவது ஆக்‌ஷன் ஆங்கில படத்தில் அதை பார்த்திருக்கலாம்!



அம்மாதிரியான ஒரு நிகழ்வு அந்த இடத்தில் வெள்ளைக்காரன் இருந்த காலத்தில் நடந்ததாம், அதனால் அந்த பெயர் வந்திருக்கலாம் என பேசப்படுகிறது! அது அங்கே சாத்தியமா என பார்த்தால் அங்கிருக்கும் ஏரி அது நடந்திருக்கலாம் என்கிறது! மிகுந்த குளிர் இருக்கும் நேரத்தில் அணையிலிருக்கும் நீர் மொத்தமும் உறைந்திருக்கலாம், மீண்டும் அது உருக ஆரம்பிக்கும் போது ஐஸ்கட்டிகள் தரை நோக்கி நகர்ந்திருக்கலாம், அல்லது அடர்த்தியான மேக கூட்டங்கள் நகர்ந்து செல்வது யாராவது ஒரு வெள்ளைகாரனுக்கு அவலாஞ்ச் போல் தெரிந்திருக்கலாம்!

“அவலாஞ்ச்” சுற்றுலாக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி, தகுந்த அனுமதியில்லாமல் செல்ல முடியாது, சாதாரண பாதையிலிருந்து விலகி ஒற்றையடி பாதை போலுள்ள வழியில் செல்ல வேண்டும், காட்டு விலங்குகளின் தொந்தரவுகள் வரலாம், யானை கூட்டங்கள் உங்களை வழிமறிக்கலாம், ஆகையால் காட்டிலாக்காவின் ஆலோசனையின் பேரில் தான் பயணம் செய்ய வேண்டும், அங்கே தங்குவதற்கு இடம் இருக்கிறது, அங்கேயே சமைப்பார்கள், முன் கூட்டியே சொல்லிவிட்டால் எல்லாம் கிடைக்கும், அருமையான சமையல்!

அங்கிருக்கும் சூழ்நிலை குடியை விட்டிருந்தாலும் கொஞ்சமாவது குடிக்கலாம் என தோன்றவைக்கும், சாரல் விழுண்டு கொண்டேயிருக்கிறது! அங்கு மழை பெய்யாத நாளே கிடையாது என்கிறார் எங்களை வழிநடத்தியவர், ஒருவேளை அது அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரின் சாரலாக இருக்கலாம்! தங்கியிருந்த இடத்தில் இருந்து அடுத்த பத்தாவது அடி கிடுகிடு பள்ளம் தான், இரவு நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!



அடுத்த பகுதி:மசினி என்ற யானை குட்டியுடன் வால்பையன்!

செல்ல விருப்பமுள்ளவர்கள் லாதனந்த அவர்களின் ப்ளாக்கில் தொடர்பு கொள்ளவும்!

குவியல்!..(20.10.09)

தமிழ் வலைப்பதிவுலகில் நகைச்சுவைகென்றே இருக்கும் முடிசூடா மன்னன் குசும்பனுக்கு வயசாகி போச்சு, இன்றிலிருந்து அவர் அங்கிள் ஆகிவிட்டார்! அவரை அங்கிள் ஆக்கிய எனது மாப்பிள்ளைக்கு நன்றி!, அதாங்க குசும்பன் அப்பாவாகி விட்டார்!, குசும்பனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்!

இது சுயசொறிதல், என்னை மாதிரி டம்மிபீஸிக்கும் 400 பாலோயர்ஸ் வந்து பெருமை படுத்திவிட்டார்கள். உங்களுக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை!, எனக்கு பாலோயராக இருப்பவர்களுக்கு வலைப்பூ இருப்பின் தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள், குறைந்த பட்ச பதில் மரியாதையாவது செய்ய எனக்கு வாய்ப்பளியுங்கள்!,
ஒரு லட்சம் ஹிட்ஸ் தாண்டியதை பற்றி நான் பெரிதாக அலட்டி கொள்வதற்கில்லை!, ஹிட்ஸ் வேண்டுமென்றால் தினம் ரெண்டு பதிவெழுதி பல லட்சங்களை பெறலாம்! ஆனால் அது உங்களுக்கு திருப்தி அளிக்காத பட்சத்தில் என்னாத்த கிறுக்கி என்ன பண்றது!

***

சாட்டில் லிங்க் கொடுக்கும் நண்பர்களுக்கு, நான் உங்களுக்கு பாலோயராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பதிவு எக்காரணம் கொண்டும் மிஸ்ஸாகாது, அதான் மிஸ்ஸாகுதுல நாங்க கொடுக்கும் போது படிக்க வேண்டியது தானேன்னு நீங்க கேட்பது தெரிகிறது!, நீங்கள் அனுப்பும் நேரம் நான் எதாவது வேலையாக இருந்து(ஆணிய புடுங்க வேணாம்) என்னாடா நாம எம்மாபெரிய பிரபலம் இவனையும் மனுசனா மதிச்சி லிங்க் கொடுத்தா படிக்காக இருக்குறானேன்னு நீங்க நினைச்சிறக்கூடாதுன்னு தான் எனக்கு வருத்தம்!

எனக்கு பாலோயர்களாக இருப்பவர்களுக்கும், தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்களுக்கும் தான் என் முதல் பார்வை, அதன் பின் தான் தமிழ்மணம், தமிழிஷ், மற்ற பதிவர் நண்பர்களெல்லாம்!, ஒருவேளை உங்கள் பதிவில் என்னை கலாய்த்து எழுதியிருப்பீர்களேயானால் தாராளமாக லிங்க் கொடுங்கள், முன்னரே பின்னூட்டம் போட்டு எனக்கு அதில் எந்த வருத்தமுமில்லைன்னு தெரியபடுத்தி விடுகிறேன், இல்லையென்றால் யாராவது வால் கோவிச்சிக்க போறார்ன்னு உங்களை குழப்பக்கூடும்!

***

வாமு.கோமுவின் இந்த கதை சென்ற மாத உயிர்மையில் வந்திருந்தது, அதற்கு இந்த மாதம் வந்திருந்த இரண்டு விமர்சனக்கள் சிறுபிள்ளைதனத்தையும் விட கேவலமாக இருந்தது!, கதையின் உட்கரு கூட தெரியாத இவர்களெல்லாம் எப்படி விமர்சனம் எழுதுகிறார்கள் என்று தெரியிவில்லை, அதையும் வாசகர் கடிதத்தில் வெளியிடுவது இன்னும் காமெடி, அந்த சிறுகதையை பொறுத்தவரை அவர் மையப்படுத்தி எழுதியிருப்பது ”குழந்தை பாலியல் வன்முறை”, அதற்காக அவர் எடுத்து கொண்ட கதைக்களம் ஒரு கிராமம், அங்கு வாழும் பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கை முறை, மையத்தை அணுகாமல், இப்போதெல்லாம் எங்க இப்படி நடக்குதுன்னு இரண்டு விமர்சனக்கள், ஒருத்தருக்கு அது ரொம்ப கேவலமா இருக்காம்!

எதற்காக பதிவர்கள் சில மாதங்களுக்கு முன் டாக்டர் ஷாலினி மற்றும் ருத்ரனை அழைத்து ”குட் டச்” பேட் டச்” என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள், இரண்டு மாதத்திற்கு முன் கோவையில் இதே போல் நடத்தலாம் என பேசினார்கள், போன மாதம் மதுரையில் கூட தருமி ஐயா தலையில் அதே நிகழ்ச்சியை நடத்தலாம் என பேசினார்கள்!, நாம் ஆயிரம் தான் ஒன்றுமே நடக்காதது போல் இருந்தாலும் வாழ்க்கையின் எதார்த்தம் இது தான்!, குழந்தை பாலியல் என்பது சில நிமிட நேர பாலியல் வடிகால், ஆனால் அது அந்த குழந்தைக்கு வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும் விபத்து, அதனால் தான் நாம் இதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என முனைகிறோம்! மாறிவரும் சமூகசூழல் இக்கல்வியை கட்டாயமாக்குகிறது!

***

கிம் கி டுக்கின் the isle என்ற படம் தரவிரக்கி ரொம்ப நாளாக மடிக்கணிணியில் உறங்கி கொண்டிருந்தது, ஒரு வழியாக பார்த்து முடித்தேன்!, இவரது படத்தை பொறுத்தவரை சமூகத்துக்கு கருத்து சொல்லும் வேலையெல்லாம் கிடையாது! இருவரின் உணர்வு போராட்டங்கள் தான் கதைக்களம், நாயகி அவ்வபோது பாலியல் தொழிலும் செய்து வந்தாலும் நாயகனின் மீது அவளுக்கு அக்கறை இருந்தது, அவன் இவள் மீது கட்டும் அக்கறை பிடித்திருந்தது! அதற்காக இரண்டு கொலைகள் செய்கிறாள், இது கதையின் எதார்த்தம் மட்டுமே! அவ்விடத்தில் அவளுக்கு இருந்த அதிகப்படியான காதலை மட்டுமே நான் பார்க்க வேண்டும்!



உயிரோடிருக்கும் தவளையை தோலை உறிப்பது, உயிரோடு இருக்கும் மீனை வெட்டி பச்சையாக சாப்பிடுவது போன்றவை அதிகப்படியான வன்முறை அல்ல, அவர்களது உணவு பழக்கமுறையே அது தான்!, நாமும் ஆட்டையும், கோழியையும் கழுத்தை அறுத்து தானே கொலை செய்கிறோம்!

***

தமிழ்நாட்டில் இருப்பவர்களில் தமிழில் ஒளிப்பரப்பாகும் டிஸ்கவரி சேனலை தவற விடாதீர்கள், மிக அரிய தகவல்களை நான் அங்கிருந்து பெறுகிறேன்!, உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படலாம்! ஆரம்பத்தில் இந்தியாவில் மிளகாய் கிடையாது மிளகு தான் காரத்திற்கு, இன்று உலகம் முழுவதும் முக்கிய உணவாக இருக்கும் வாழைப்பழம் கிழக்காசிய நாட்டில் தோன்றியது, ”கோஸ்டோ ரி கா” என்ற நாட்டில் வாழைப்பழத்திற்கு பெரிய பெரிய விதைகள் உள்ளன!, ஆபத்தான விலங்குகளை அணுகுவது எப்படி, மனிதர்கள் எப்படி சுற்றுசூழலுக்கு எதிரியாக இருக்கின்றனர் என பல விசயங்கள்! நம்மை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பாகவும் எடுத்து கொள்ளலாம், மறக்காமல் பாருங்கள்.

***

கவிதை போரடிச்சி போச்சி அதனால ஒரு புதிர் போட்டி!

இரு வாகனங்கள் ஒரே இடத்திலிருந்து இரு நேர்எதிர் திசையில் கிளம்பின, ஆறு மைல்களுக்கு பிறகு இரண்டுமே அதன் இடப்பக்கத்தில் திரும்பின. அவ்வழியே எட்டு மைல் பயணம் செய்த பின் நின்றது. தற்பொழுது இரண்டு வாகனங்களுக்கும் உள்ள இடைவெளி தூரம் என்ன?

அ) 2 மைல்கள்
ஆ) 11 மைல்கள்
இ) 14 மைல்கள்
ஈ) 20 மைல்கள்
உ) 26 மைல்கள்

தனியார் புலனாய்வுத்துறை!

ஆணோ, பொண்ணோ நாம் அனைவருகுள்ளும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் இருக்கான்!, புலனாய்வு துறையில் இருந்தால் தான் அது முழுமை அடையும் என்பதில்லை!, ஒவ்வொரு செயலும் உளவியலும், தடவியலும் சம்பந்தபட்டது! ஏ.எக்ஸ்.என் டீவீயில் சி.எஸ்.ஐ மியாமின்னு ஒரு நிகழ்ச்சி வரும், அதுக்கு கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்னு அர்த்தம்!, இந்த மாதிரி பல பிரிவுகள் இருக்கு, இந்தியாவில் கூட அத்தனை பிரிவுகளும் இருக்கு ஆனாலும் ரொம்ப பேமஸா இருக்குறது தனியார் புலனாய்த்துறை அதற்கு பிரைவேட் டிடெக்டீவ்ன்னு ஆங்கிலத்தில் சொல்வாங்க.

சிறுவயதில் சிறுவர்மலர், அம்புலிமாமா, பாலமித்ரா படிக்கும் போதே நமக்குள் தூங்கி கொண்டிருக்கும் டிடெக்டீவ் விழிந்து கொள்வான்! பதின்மவயதில் ராஜேஸ்குமார் கிரைம் நாவல்கள் அதற்கு ஒரு உருவமே கொடுத்திருக்கும். இன்றும் யாராவது நான் ராஜேஸ்குமார் நாவல்கள் எதையுமே படித்ததில்லை என்று சொன்னால் ஆச்சர்யமாக பார்ப்பேன்!, தொடர்ச்சியாக அவரது நாவல்களை படிப்பவர்களுக்கு குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறன் ஓரளவுக்கு வந்திருக்கும், அதிகம் இல்லையென்றாலும் பத்துக்கு மூணு நானும் கண்டுபிடித்து விடுவேன்!, முதல் மூன்று அத்தியாயத்திலேயே அனைத்து கதாபாத்திரங்களும் வந்துவிடுவதால், குற்றம் நடந்த பின் குற்றவாளி யாராக இருக்கலாம் என்ற யூகம் நமக்குள் இருக்கும் டிடெக்டிவுக்கு வேலை கொடுத்து கொண்டே இருக்கும்!

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் அதிக டிடெக்டீவ் ஏஜென்சிகள் இருக்கின்றன!, இன்வெஸ்டிகேட் ஜர்னலிசமும் கிட்டதட்ட இதே முறைதான்! தற்போதெல்லாம் பெரும்பாலும் மணமகன் அல்லது மணமகள் குணம் மற்றும் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளவே இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள், குற்ற புலணாய்வு குறைந்து விட்டது, நான் சென்னையில் இருக்கும் சமயத்தில் பெரும்புள்ளிகளின் அந்தரங்கங்களை தெரிந்து கொண்டு ப்ளாக்மெயில் பண்ணுவதாக கேள்விபட்டேன், அதனால் சென்னையில் இருக்கும் டிடெக்டீவ் ஏஜென்சிகள் மீது எனக்கு பெரிய மரியாதை ஏற்படவில்லை!

புலனாய்வு பெரிய கம்பசூத்திரமெல்லாம் இல்லை, அடிப்படை உளவியல் கொஞ்சம் குற்றவியல் தெரிந்தால் போதுமானது, இதற்காக டில்லியில் பயிற்சி வகுப்புகள் உண்டு, பல புத்தகங்களும் உண்டு, இவையல்லாது அனுபவித்திலேயே இந்துறைக்கு வந்தவர்கள் பலர் எனக்கு தெரியும், பெரும்பான்மையான ஏஜென்சியில் உடனே வேலைக்கு சேர்த்துவிட மாட்டார்கள், தொடர்பு எண் மட்டும் வாங்கி கொள்வார்கள், நமக்கு எதாவது அசைண்மெண்ட் தருவார்கள் சரியாக செய்தால் தான் வேலை, அதுவும் நாம் அங்கு தான் வேலை செய்கிறோம் என்று யாரிடமும் சொல்லக்கூடாது, ஒரு நபரின் நடவடிக்கைகள் மற்றும் குணாதிசயங்களை உற்று கவனிக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்!



இத்துறையில் நிறைய காமெடிகளும் நடந்துள்ளது, ஒரு முறை ஒரு பெண்ணை பின்பற்றி சென்ற நண்பர் தர்ம அடி வாங்க தெரிந்தார்! நல்லவேளையாக அந்த வழியில் ஒரு நண்பரின் அலுவலகம் இருந்ததால் இங்கே தான் வந்தேன் என சமாளித்தார், பின்பொரு சமயம் அவசரத்துக்கு இரு சக்கர வாகனம் இல்லாமல் ஒரு ஆட்டோவில் ஏறி ஒருவரை பின் தொடர ஆட்டோகாரர் விவரம் தெரியாமல் அந்த நபரின் முன் போய் ஆட்டோவை நிறுத்திவிட்டார்! தெரிந்த நண்பர் போல் இருந்தது என்று சமாளித்து வந்தார் நண்பர், நல்லவேளையாக ஆட்டோகாரர் எதுவும் வாய் திறக்காமல் இருந்ததால் அங்கு விழுந்திருக்க வேண்டிய தர்ம அடியில் இருந்து தப்பித்தார் நண்பர்!

அனுமானங்களாக இருந்தாலும் அதிகப்படியான சாத்தியகூறுகள் இருக்கின்றன என லாஜிக்கோடு நிறுபிக்க வேண்டியது ஒரு நல்ல டிடெக்டீவின் கடமை!, இன்னும் நிறைய சொல்லலாம் ஆனால் பல விசயங்கள் தொழில் சார்ந்த ரகசிங்கள் என்பதால் வெளியிட எனக்கு உரிமையில்லை, டிடெக்டீவாக ஆக அனைத்து தொழில் நுட்பத்திலும் குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும், முக்கியமாக ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும்!
உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் உண்டா!?

டிஸ்கி:பதிவில் புலனாய்ந்த நண்பர் நானென்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

கமாக்கதைகள்!(இடம் மாறிய கால்) 2(69)

டிஸ்கி:பெண்கள் பின்னூட்டம் போட வேண்டாம், திட்டுவதென்றாலும் கூட!


இவனுங்களை மாதிரி நண்பர்கள் எவனுமே ஊருகுள்ள இல்லடான்னு சொல்ற மாதிரி நண்பர்கள் அவுங்க மூணு பேரும், டவுசர் போடாத காலத்திலிருந்து, சிலேட்டு பல்பத்துடன் பள்ளி போன காலத்திலும், இறுதியாக கல்லூரி படிப்பை முடிக்கும் போது கூட அவர்கள் தினம் சந்திக்காத நாளே கிடையாது! அதிர்ஷ்டவசமாக அவர்களது பெறோர்களுக்கு சொந்த தொழில் என்பதால் ஊர் மாற்றலாகி செல்லும் நெருக்கடி வரவில்லை, உள்ளூருகுள்ளே எங்கே வீடு மாறினாலும் கூட இவர்களுக்காகவே அருகிலேயே பார்த்து கொண்டனர் அவர்களது பெற்றோர்!

அவுங்க பேரை நீங்க தெரிஞ்சிக்கனுமே, ஸ்ரீதர், பாண்டியன், முஜிப் என்பதே அவர்களது பெயர்கள். அவுங்ககிட்ட போய் என்ன சாதி,மதம்னு கேட்டா தெரிஞ்சவங்களா இருந்தா தப்பிச்சிங்க இல்லைனா அடிவாங்காம வரமாட்டிங்க, அந்த அளவுக்கு மனிதத்துவம் போற்றும் மாமனிதர்கள், ஒரு ஆஃபை ஒரே டம்பளரில் மூன்று பேரும் மாற்றி மாற்றி குடிப்பார்கள், ஒரே ஒரு விசயத்தில் மட்டும் அவர்களுக்குள் கட்டுபாடு, எக்காரணம் கொண்டும் நமக்குள் பணம் மற்றும் பெண்ணால் பிரச்சனை வரக்கூடாது என்பதே அது!

அப்பேர்பட்ட நண்பர்களுக்குள் பேரடியாய் வந்தது முஜிப்பின் பிரிவு, மும்பையில் நல்ல சம்பளத்தில் வேலை, வீட்டில் போயே ஆகவேண்டும் என கட்டாயம், நண்பர்களுக்கோ தாளமுடியாத வேதனை, கடைசியில் முஜிப்பின் அப்பா தான் இருவரையும் சமாதனாபடுத்தினார், ஒரு வருடம் வேலை செய்தால் போதும் அந்த அனுபவத்தை வைத்து இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிவிடலாம்! உங்கள் நண்பனுக்காக ஒரு வருடம் பொறுத்து கொள்ளுங்கள் என்றார்!, கண்ணீர் மற்றும் மெளனத்தின் சாட்சியாக பிரியும் போது முஜிப்பின் அப்பாவுக்கே கண்களில் நீர் திரண்டு விட்டது!

ஒரு வருடம் தானே என நினைத்தது, முஜிபின் பதவி உயர்வு மேலும் சில வருடங்களை விழுங்கியது, நாட்கள் ஓடியது ஆரம்பத்தில் கடித தொடர்பில் இருந்தார்கள், பின் தொலைபேசியில் குசலங்களை பரிமாறி கொண்டனர், நாளைடைவில் அதுவும் படிப்படியாக குறைந்தது ஆயினும் ஸ்ரீதரும், பாண்டியனும் தினமும் சந்தித்து முஜிப்பை பற்றி பேசி கொண்டிருப்பார்கள், பண்டியனின் பக்கத்து வீட்டுகாரர் அதிக குடியால் இறந்ததால் பாண்டியன் குடியை அடியோடு நிறுத்தினான், ஆனாலும் ஸ்ரீதருக்கு கம்பெனி கொடுப்பது தவறாமல் நடந்தது, கொஞ்ச நாளில் ஸ்ரீதர் தனியாகவே குடிக்க பழகி கொண்டதால் பாண்டியன் வருவதில்லை!

தீடிரென்று ஒருநாள் முஜிபின் வருகை செய்தி இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, பழைய நினைவுகளை அசைப்போட்ட படி மூவரும் ஊரை சுற்றி வந்தனர்! என்ன தான் மும்பையில் வாழ்ந்திருந்தாலும் சொந்த ஊரின் சிறு மாற்றமும் முஜிபிற்கு ஆச்சர்யத்தை அளித்தது, மாலையில் வழக்கமான பாருக்கு அழைத்து சென்றான் ஸ்ரீதர், சில பெக்குகளுக்கு நடுவே ஸ்ரீதர் தான் முதலில் ஆரம்பித்தான், அங்க போயிருக்கிறியா மச்சி என்று!, அங்கே என்றால் எங்கே என்றான் முஜிப்!, அதாண்டா மும்பையின் சொர்க்கவாசல் என்றான் ஸ்ரீதர், முஜிபிற்கு புரிந்து விட்டது நண்பன் கேட்பது எதையென்று, இல்லடா நான் பாக்குறது ஆபிஸர் வேலை, அங்கெல்லாம் போனா மானம் போயிரும், அதனால அது எங்க இருக்குதுன்னு கூட தெரிஞ்சிக்கலடா என்றான்!

அதிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஸ்ரீதருக்கு கொஞ்சம் ஏமாற்றமே! ஆனாலும் நண்பன் பீச்சுக்கு போய் சுண்டல் திங்காம வந்திருக்கானேன்னு ஒரு வருத்தம், சரி இங்க இருக்கு போறியாடா மச்சி என்றான், முஜிபிற்கு தூக்கி வாரி போட்டது, நம்ம ஊர்லயா இடுஹ் எப்ப இருந்துடா என்றான், நீ தாண்டா இன்னும் நம்ம ஊரை கேவலமா நினைச்சிகிட்டு இருக்க, இப்பல்லாம் சிட்டியில வேலை செய்யுறவனே இங்க தான் வந்து வீடு கட்டுறான்! வர்றியா சொல்லு என்றான் ஸ்ரீதர்!, முஜிபிற்கும் ஆசை இருந்ததால் தயங்கியபடி ஒத்து கொண்டான்!,

மூவரும் சென்றனர், ரொம்ப நாள் கழித்து வந்திருக்கும் நண்பனுக்கு தான் முதலிடம் என்று முஜிபை முதலில் அனுப்பி வைத்தனர்! ஐந்து நிமிடம் கழித்து பாண்டியன், பாண்டியன் வெகு சீக்கிரத்திலேயே திரும்பி வந்துவிட்டான்! கடைசியாக ஸ்ரீதர் உள்ளே சென்றான், வெளியே முஜிப் யாரும் வருகிறார்களா என அக்கம்பக்கம் பார்த்து ஒரு சிகரெட் பத்த வைக்க அருகில் வந்து நின்றான் பாண்டியன், முழு சிகரெட்டும் தீர்ந்தும் வரவில்லை ஸ்ரீதர், என்னாடா மச்சான் ஆளையே காணோம் ஒருவேளை தூங்கிட்டானா என சிரித்தான் முஜிப், மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகியது பாண்டியனுக்கோ இருப்பு கொள்ளவில்லை, டே என்னாடா இது என்று பதறினான் மச்சான் நான் உண்மையை சொல்டுறேண்டா, நான் உல்ள போனேனே தவிர ஒண்ணுமே செய்யல, எனக்கு பயமா இருந்ததால வந்துட்டேன் என்றான், முஜிபிற்கு சிரிப்பை அடிக்கமுடியவில்லை, எதாவது அவளுக்கு அட்வைஸ் பண்ணிருப்ப அதான் அவுங்ககிட்ட சொல்லி அழுவுறா போல என்றான், இல்லையேடே நான் தான் எதுவுமே பேசக்கூட இல்லையே என்றான்! ஒருவழியாக அரைமணி நேரம் கழித்து வெளியே வந்தான் ஸ்ரீதர், ஏண்டா இவ்வளவு நேரம் என்று கோரஸாக கேட்டார்கள்

ஒண்ணுமில்ல மச்சான் ரொம்ப நாள் ஆச்சா! அதான் ஊற வச்சு தொவச்சேன் என்றான் ஸ்ரீதர்!



டிஸ்கி:காதாபாத்திரங்களின் பெயர்கள் கற்பனையே! அந்த பெயருள்ளவர்கள் அப்படி செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

அகம் புகுதல்!...

சுற்றுலா என்றாலே ஒரு சிறுவனின் சுதூகலத்துடன் துள்ளி குதித்தி கொண்டாடும் வாலிபர்களில் நானும் ஒருவன், அதுவும் அகம் புகுதல் என்றால் சொல்லவே வேண்டாம்!
அகம் என்றால் வீடு என்று கூட ஒரு அர்த்தம் உண்டு!, என்னை பொறுத்தவரை அந்த சுற்றுலா என் வீட்டுக்கு போய் வந்த மாதிரி தான்!, மற்றவர்களுக்கு காடு என்பது வனம், வாலுக்கு வனம் தானே அகம்!, என் நெருங்கிய உறவினர்களையும், மற்றும் என் மூதாதயர்களையும் காணும் ஆவலில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தயாராகி விட்டேன்!

அக்டோபர் இரண்டு, காந்தி ஜெயந்தி என்பதால் அரசாங்க விடுமுறை தொடர்ந்து சனி, ஞாயிறு வருவதால் மூன்று நாள் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார் லதானந்த், ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே போகும் வழி, எடுத்து செல்லும் பொருட்கள், மற்றும் யார் யார்க்கு என்ன பிடிக்கும் என அமர்களமாக பெரிய லிஸ்ட் தயாரித்திருந்தார்!, வருகிறேன் என்று சொன்னவர்களில் ஒரு சிலர் கடைசி நேரத்தில் சொந்த விசயங்களுக்காக வராமல் போனது அவருடன் சேர்ந்து எங்களுக்கும் ஏமாற்றமே!



ஜ்யோவ்ராம் சென்னையிலிருந்து அப்படியே கோவை வந்துவிடுவது, சீனா ஐயா(வலைச்சரம்) மதுரையிலிருந்து கோவை, நான் ஈரோட்டிலிருந்து, காசி சார்(தமிழ்மணம் உருவாக்கியவர்) கோவையில் எங்களை வரவேற்பது என்று நிகழ்ச்சி! ஒவ்வோருவரும் ஒவ்வோரு இடத்திலிருந்து வருவதால் சில நேர நெருடல்கள், சீனா ஐயா காலை நான்கு மணிக்கே கோவை வந்துவிட்டார்! நான் சரியாக ஏழு மணிக்கு கோவை சேர்ந்தேன்! காசி சார் எங்களை வரவேற்று காலை சிற்றுண்டியை முடிக்க செய்தார்! வெளிவந்து ஒரு சிகரட்டை நான் முடிக்கும் தறுவாயில் ஜ்யோவும் வந்தடைந்தார்!

முதலில் அனைவரும் மேட்டுபாளையம் சென்று அங்கிருந்து வனதுறைக்கு சொந்தமான ஜீப்பில் குன்னூர் செல்வதாக தான் திட்டம், காசி சார் அவரது வண்டியிலேயே குன்னூருக்கு சென்று விடலாம் என்றார், ஒருவேளை ஆட்கள் அதிகமாயிருந்தால் சிக்கலாயிருக்கும், நான்கே பேர் ஆதலால் அனைவரின் இசைவுடன் குன்னூர் கிளம்பினோம்!, மிதமான பனியுடன், காலை நேரமாதலால் எதிர் வரும் வண்டிகள் குறைவாக, மிக நேர்த்தியான காசி சாரின் ட்ரைவிங் அனுபவத்துடன் ஒவ்வோரு கொண்டை ஊசி வளைவுகளையும் ரசித்து ரசித்து கடந்தோம்!

குன்னூரில் எங்களுக்காக ஒரு பெரிய அறை, கவனிக்க இரண்டு பேர், மறுபடியும் சிற்றுண்டி, கூடவே உற்சாக பானம் அனைத்தும் காத்து கொண்டிருந்தது!, அங்கே சிறிது இளைப்பாறிவிட்டு அங்கிருந்து ”அவலாஞ்சி” என்ற இடம் செல்வதாக உத்தேசம், இவ்விடத்தை தொடும் முன் சில விசயங்கள், ”எழுத்தாளார் ஜெயமோகன்” இவ்விடத்தை பற்றி அவரது பதிவுகளில் சிலாகித்து எழுதியுள்ளார், யாராவது சுட்டி தருவீர்களேயானால் பதிவில் இணைத்து விடலாம்!, மீண்டும் எங்கள் அறைக்கு வருவோம்!, குன்னூர் குளிர் எனக்குள் சுணக்கத்தை ஏற்படுத்தியது, பெட்ரோல் போடாமல் வண்டி நகராது, சரக்கு போடாமல் வால் நகர மாட்டான் என்று சொல்லிவிட்டேன்! அனைவரின் சம்மத்ததுடன் முதல் ரவுண்டை அங்கே ஆரம்பித்து அவலாஞ்ச் கிளம்பினோம்!



இன்னும் அவலாஞ்ச் போனது, மறுநாள் முதுமலை போனதென்று நிறையா இருக்கு!

குவியல்!..(06.10.09)

பெயரிலேயே அன்பு வைத்திருப்பவர், நேரில் எப்படியிருப்பார் சொல்லவா வேணும்! அன்பை ஜூஸாக பிழியும் அன்பு அண்ணணுக்கு இன்று பிறந்த நாள்! இந்த வாரத்தில் அவர் வலைச்சர ஆசியராக இருப்பது மேலும் சிறப்பு!, இன்னோரு ஆச்சர்யமும் உண்டு இவரது நண்பர் டக்ளஸுக்கு நாளை பிறந்தநாள்! கார்த்திகை பாண்டியன் சொன்னது போல் நமிதா பிறந்த ஊரில் இருப்பது தனது பெருமை என்று அங்கிருந்தாலும் தினமும் தமிழ்பணி ஆற்றுகிறார்!(டீ இல்ல)!
இந்த இருவருமே தங்களை யூத்தாக காட்டி கொள்ள இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்!, இருவருக்கும் விரும்பிய பெண்ணே மனைவியாக அமைந்து விரைவில் பூரிகட்டையில் பூசை பெற அனைவரும் வாழ்த்துவோம்!

**

எனது பழைய 6600 மாடல் நோக்கியா அலைபேசி பல்லிளித்துவிட்டது! ஓரிரு நாட்கள் அலைபேசி இல்லாமல் நிம்மதியாக இருந்தாலும், எனது வாடிக்கையாளர்களுக்கு அந்த எண்ணை மட்டுமே கொடுத்துள்ளதால் மீண்டும் புது போன் வாங்கிவிட்டேன்! அதே நோக்கியாவிலேயே 5130 என்னும் மியூசிக் ஸ்பெஷல் மாடல், ரேடியோவும் உண்டு! இல்லையென்றால் பதிவு செய்து வைத்துள்ள பாடல்களை கேட்டு கொண்டு இருக்கலாம்! மேட்டர் என்னான்னா உங்களது தொடர்பு எண்கள் அனைத்தும் இழந்து விட்டேன்! அதனால் உங்களால் முடிந்தால் தொடர்பு கொண்டோ, குறுந்தகவல் அனுப்பியோ, அல்லது மின்னஞ்சலோ செய்தால் உதவியாக இருக்கும்!
எனது அதே எண்:9994500540
மெயில்:arunero@gmail.com



**

இரண்டாம் உலகபோர் பற்றி பல படங்கள் வந்துவிட்டது, அல்லது அதன் பாதிப்புகள் பற்றி வரும், அதன் பிறகு போர் பற்றிய படமென்றால் அது வளைகுடா போர் தான், போன வருடம் வரை கூட வந்து கொண்டு இருக்கிறது! அந்த வரிசையில் three kings என்ற படமும் பார்க்க வேண்டிய ஒன்று!, ”பேட்மேன்” புகழ் ஜார்ஜ் க்ளூனி நேர்த்தியான நடிகர் கூடவே ”ப்ளானட் ஆஃப் த ஏப்ஸ்” புகழ் மார்க் வில்ம்பெர்க்கும், ”ட்ரிபிள் எக்ஸ்” புகழ் ஐஸ்க்யூபும், ஆக்ஸனுக்கு பஞ்சமில்லை, இருப்பினும் அங்கிருந்த மக்களின் வாழ்க்கை முறையும் நிம்மதிக்காக அவர்களின் ஏக்கமும் ஒவ்வோரு யுத்தபூமியும் இவ்வாறு தான் இருக்கும் என நமக்கு காட்டுகிறது!



**

சென்ற வாரத்தில் சில மூத்த பதிவர்களோடு நான் வனாந்திரம் சுற்றி வந்தது பற்றி அறிந்திருப்பீர்கள்! அது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது! புகைப்படங்கள் மிக பெரிய அளவில் இருப்பதால் பிக்காஸாவில் சில ஜிமிக்ஸ் வேலை செய்ய வேண்டியிருக்கிறது! மேலும் பல செய்திகளுடன் விரைவில் ”தெப்பக்காடு பயணக்கட்டுரை” வரும்!

**

பதிவுலகை விட்டு சற்றே விலகி இருக்கும் மூத்த, பிரபல, சர்ச்சைகுறிய ஒரு பதிவரின் கவிதை இது! கிட்டதட்ட எதிர்கவுஜ மாதிரி தான்!, யாருக்கு எதிர் கவுஜ என்பது உங்கள் சிந்தனைக்கு!

சந்திப்புகளின் போது
சிரித்த முகத்தோடு
அருகில் வந்து முகமன்
கூறினார் ,
முன்வந்து கைகுலுக்கியபோது
சிரித்தபடி அணைத்துக்
கொண்டார்,
அணைக்கையில் முதுகு தடவி
இறுக்கினார்
பாராட்டினால் மென்முருவலோடு
மறுதலித்தார்
தேசிய ஒருமைப்பாடு பேசினார்
சாதிகள் இல்லையடி பாப்பா
என்றான் பாரதி என்றார்
இப்ப எல்லாம் எங்கே சாதி பார்க்கிறார்கள்
என்று அங்கலாய்த்தார்
மனிதம் ஓங்க
ஒன்றுபடுவோம் என்றார்
சக்தி வாய்ந்த கடவுள் என்றார்
கூட்டுப்பிரார்த்தனை பலிக்குமென்றார்
வணங்கும் போது
அவர் உள்ளே
நான் வெளியே

!

Blog Widget by LinkWithin