காதல் பிசாசு!

உன் முகம் பார்த்திட ஆசை
உச்சி முகர்ந்திட ஆசை
உதடுகள் ரெண்டும் கடித்திட ஆசை
உள்ளங்கால் கூச உரசிட ஆசை
விரல்கள் இறுக்கி வெளிப்பட ஆசை
விசையாய் உன் மேல் விழுந்திட ஆசை
விருப்பம் கொண்டு விழுங்கிட ஆசை
விலகாது விடியும் வரை இருந்திட ஆசை
உன் முன்...முழங்கால் தெரிய உடுத்திட ஆசை
முயலாய் ஓடி ஒளிந்திட ஆசை
முரட்டு பிடியில் அகப்பட ஆசை
முடியாதென்று முரண்பட ஆசை
விடியும் முன் குளித்திட ஆசை
விரல் நீவி எழுப்பிட ஆசை
வியக்கும் விழியை ரசித்திட ஆசை
விலகா இருளினில் வாழ்ந்திட ஆசை
விரும்பும் வண்ணம் இசைந்திட ஆசை
விளக்கம் கேட்டு வியந்திட ஆசை
வியர்வை மழையில் நனைந்திட ஆசை
- இப்படி ஒரு காதல் பிசாசால் காதலிப்படுவதெல்லாம் வரம் 😍😍😍😍😍




சந்திர கிரகணம்

இன்று பூமி ஒரு நீண்ட சந்திரகிரணத்தை சந்திக்கப்போகிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்

சந்திர கிரகணம் பெளர்ணமி அன்றுதான் வரும், சூரியகிரகணம் அம்மாவாசை அன்று தான் வரும்.

அப்பாகலிப்டோ என்ற படத்தில் மாயன் இனத்தார் கதாநாயகனை கொல்ல முற்படும் பொழுது சூரியகிரகணம் ஏற்பட்டு அவனை கொல்லாமல் விடுவர். ஆனால் அவன் தப்பித்து காட்டுக்குள் ஓடும் பொழுது முழுநிலவு காட்டப்படும், மெல் கிப்சனின் கவனசிதறல் அது

சந்திர கிரகணம் என்றால் எவ்வாறு ஏற்படுகிறது என அறிவியல் விளக்கி சொன்னாலும் இன்னும் ராகு சந்திரனை விழுங்குகிறது என நம்பும் அதி புத்திசாலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்

சந்திரன் உட்பட எந்த கோளுக்குமே சொந்தமாக ஒளி இல்லை, சூரிய ஒளியை பிரதிபலிப்பது மட்டுமே அதன் வேலை. பகலில் சூரிய ஒளியின் காரணமாக சந்திரன் நமக்கு தெரிவதில்லை. இரவில் பூமிக்கு பின் பக்கத்தில் அதாவது நாம் இருக்கும் பக்கத்துக்கு பின் பக்கத்தில் இருந்து சூரிய ஒளியை பெற்று சந்திரன் ஒளிர்கிறது



அவ்வாறு பின் பக்கத்தில் இருந்து பெறப்படும் ஒளி, சந்திர மற்றும் சூரிய நகர்தலில் பிறையை உண்டாக்கும், ஒளி முழுமையாக பெறும் போது பெளர்ணமியாகவும், முழுமையாக பூமி சூரியனை மறைக்கும் அன்று அம்மாவாசையாகவும் அறியப்படுகிறது, ஆனால் சந்திரனிலோ, சூரியனிலோ என்ற மாற்றமும் இருக்காது, நாம் காணும் பிறை பூமியின் நிழல் மட்டுமே, பூமி உருண்டை என்பதற்கு அந்த பிறையும் ஒரு சாட்சி



பூமியோ, சந்திரனோ ஒரே இடத்தில் நிற்பதில்லை. இடைவிடாது சூரியனை சுற்றிக்கொண்டே தான் இருக்கும், இன்று பகலில் அதாவது அமெரிக்க இரவில் சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி நகர உள்ளது, அச்சயத்தில் பெளர்ணமி நிலவில் பூமியின் நிழல் முழுமையாக ஆக்ரமிக்கு கிரகணத்தை உண்டாக்கும்.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும் பொழ்து சூரிய கிரகணம் உண்டாகும். ஒரு வேளை நாம் சந்திரனில் வாழ நேர்ந்தால் நம்மால் பூமி கிரகணத்தை பார்க்க முடியும், மேலும் சூரிய குடும்பத்தில் உள்ள எல்லா கோள்களும் கிரகணம் பார்கும்,  இது முழுக்க முழுக்க அறிவியல் மட்டுமே, பரிகாரங்கள் செய்வது ஒரு கூட்டத்தார் ஏமாற்றி சம்பாரிக்க செய்த தந்திரம் மட்டுமே

!

Blog Widget by LinkWithin