இட்லிவடையும் குள்ளநரித்தனமும்!

CBSC பாடத்திடத்தில் மாமிச உணவு உண்பவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தட்டையான பார்வை கொண்ட சிலர் அது இருந்தால் நமகென்ன, நாம் அதை ஸ்கிப் பண்ணிட்டு போலாமே என்கிறார்கள்.. பார்பனீய தந்திரமோ இந்துமதத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கு என நம்மை மூளைச்சலவை செய்யப்பார்க்கிறது. இட்லிவடையின் இந்த பதிவில் வீரமணியின் கருத்தை இடைசொருக்கலாக போட்டு நடுநிலையில் நிறபதாக காட்டிகொள்ள நினைத்த இட்லிவடை. அவர்களது மஞ்சள் கமெண்டில் பார்பனீய தந்திரத்தை காட்டியிருக்கிறார்கள். மாற்று ஊடகமான இட்லிவடையின் நிறுவனர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அதன் தலைமை எடிட்டர்கள் பா.ரா. பத்ரி சேஷாத்ரி, என்றென்றும் வம்புடம் ஸாரி அன்புடம் பாலா போன்றவர்கள் தான். இதுமட்டுமல்ல அவர்கள் பதிவில் எப்போதுமே இந்துத்துவா நாற்றம் அல்லது வாடை அடித்து கொண்டே தான் இருக்கும்.

விசயத்திற்கு வருவோம்!

இன்று உலகபிரசித்த பெற்ற முகநூலில் முக்குலத்தோர், வன்னியர்கள், நாடார்கள் தம்மை ஆண்ட பரம்பரை என சொல்லிகொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஏத்திவிட்டு அழகு பார்ப்பது சந்தேகமில்லாமல் பார்பனர்கள் தாம். பிரித்தாளும் சூழ்ச்சியில் பெயர்பெற்று ஆதிமுதல் வீரம் என்றால் என்னவென்றே தெரியாமல் அரசனை முட்டாளாக வைத்திருந்து அவனுக்கு கூஜாவும் தூக்கி அண்டிபிழைத்த பார்பனர்கள் இன்று வேறு மாதிரியான பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்திருக்கிறார்கள். 

அவர்கள் உருவாக்கிய வர்ணாசிரம படிகட்டும், தொழில்ரீதியாக வைக்கிறோம் என்று சாதி என்னும் பெரும்பேயை ஏவிவிட்டும் இன்று அவர்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். சிந்திக்க வேண்டும் நண்பர்களே தீண்டாமை எனும் பெரும்பாவச்செயல் இந்தியாவில் உருவாக காரணமே அந்த பார்பனர்கள் தானே, இந்திய அளவில் அம்பேத்காரிலிருந்து தென்னிந்திய அளவில் பெரியார் வரை எதிர்த்து போராடிய தீண்டாமையை கடைபிடித்தது யார். நாமா அல்லது பார்பனீயர்களா? ஆனால் இன்று அவர்கள் விதைத்த நச்சு சிலரை உயர்சாதியாகவும் மற்றவர்களை தாழ்ந்த சாதியாகவும் எண்ண செய்த்து, நீ என் தெருவிற்குள் வரக்கூடாது, என் முன் செருப்பு போடக்கூடாது, தோளில் துண்டுபோடக்கூடாது என சகோதர்களிடையே பகையை மூட்டி விட்டிருக்கிறது.

நான்கு ஆடுகள் ஒன்றாக இருந்த மந்தையை வேட்டையாட முடியாத குள்ளநரி, அவைகளிடம் தனித்தனியாக வேட்டையாடினால் நிறைய புல் கிடைக்குமே என அவர்கள் ஒற்றுமையை கலைத்தது. முடிவு உங்களுக்கே தெரிந்திருக்கும். நாம் சாதியரீதியாக பிரிந்து கிடப்பது நம் சமூகத்தை உயர்த்துவதற்காக என்னும் நஞ்சை விதைத்து நாமே அடித்து சாகும்படி செய்து வைத்திருக்கிறது இந்த பார்பனீய தந்திரம். சாதி என்ன பொருளாதாரமா அது வளர்ச்சியடையவோ? தாழ்த்தியடையவோ? .
அதுனால் நமக்கு பயன் கிடைத்திருக்கிறது, சற்றும் சிந்திக்காமல் ஆட்டைபோல் வாழ நினைப்பது பார்பன குள்ளநரிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகுமே!

மாமிசம் உண்பதால் மனிதன் மிருகமாவான் என்ற பார்பனீய தந்திரத்தின் மூலம் மீண்டுமொருமுறை உலகின் 90% மக்களை குற்றபரம்பரை ஆக்கும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது பார்பனீயம்.

பிள்ளைகறி கேட்ட சிவன் என்ன மதம், இரணியனின் குடலை உருவிய நரசிம்மன் என்ன மதம், அர்ஜுனனிடம் கொலை செய்வது உன் கடமை என சொன்ன கிருஷ்னன் என்ன மதம், முனிவரின் வடிவில் போய் அவரது மனைவியை கெடுத்த இந்திரன் என்ன மதம். இவையெல்லாம் கற்பனையாக அவர்களே(பார்பனர்களே) கட்டிவிட்ட கதையாகினும் அதற்கு ஒரு நியாய விளக்கம் சொல்லி சப்பை கட்டு கட்டுவார்கள், அதே நேரம் உண்மையில் வாழ்ந்த அசோகனிடம் ஒரு புத்தபிச்சு அரசனின் கடமை மக்களை வாழவைப்பதே, போர் என்ற பெயரில் கொன்று குவிப்பது அல்ல என்றுரைத்த போதனையினால் மனிதனாக மாறி மக்களுக்காக வாழவில்லையா? , அவர் அன்று சாலை ஓரத்தில் நடத்தொடங்கிய மரம் இன்று வரை தொடரவில்லையா?




எந்த விலங்கும் தனது உணவை வளர்ந்து அதற்கு பாதுகாப்பளித்து, உணவிட்டு அதன் முதிர்சி காலத்தில் உண்பதில்லை, அவ்வளவு ஏன் எந்த பார்பனனுமே தனக்கான உணவை தாமே உருவாக்குவதில்லை(ஒரு சிலர் இருக்கலாம், அவர்கள் பார்பனியத்தை துறந்திருப்பார்கள்). மனிதன் மட்டுமே அவைகளை வளர்த்து பின்  உண்கிறான். அவைகளின் எண்ணிக்கை குறையாமல் பூமியில் பாதுகாத்தும் கொண்டிருக்கிறான். தாவரங்களுக்கும் உயிருண்டு அதிலும் தாவரங்களில் மாமிசம் உண்ணும் தாவரமும் உண்டு என நிரூபிக்கபட்ட பின்னும் நம்மை ஏமாற்றிபிழைக்க நினைக்கும் பார்பனீய தந்திரத்தை என்னவென்று சொல்வது!

பரிணாமத்தில் கோரைபற்களை இழந்த மனிதன் அப்பட்டமான மாமிசபட்சினியே, தாவர உணவிற்கும் மாறியதால் அவனுக்கு பச்சை மாமிசத்தை சொறிக்கும் தன்மை குறைந்து விட்டதே தவிர நாம் பார்பனர்கள் சொல்வது போல் தாவரபட்சிணிகள் அல்ல. டிஸ்கவரி சேனலில் மேன் vs வைல்டு நிகழ்சியில் பியேர் கிரில் பச்சையாக மாமிசம் சாப்பிடுவதை அவர்களும் பார்த்து கொண்டுதான் இருப்பார்கள், சாப்பிட்டதால் அவர் செத்தா போய்விட்டார் அல்லது தெருக்களில் செல்லும் பெண்களை கையை பிடித்து இழுத்தாரா? எங்கேயும் திருடினாரா? அல்லது பார்பனர்களை போல் எவன் பொழப்பிலும் மண் அள்ளி போட்டாரா?




அன்று இதே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களை தான் குற்றபரம்பரை என அறிவித்து வெள்ளையன் அரசு அவர்கள் தினம் காவல்நிலையம் வந்து செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டது, எங்கு குற்றம் நடந்தாலும் அவர்களை எந்தவித ஆதாரமுமின்றி கைது செய்தது. அதற்காக அன்று போராடினோம் இன்று ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றபரம்பரை ஆக்கும் பார்பனீயதந்திரம் தொடங்கியிருக்கிறது, பார்பனசூழ்ச்சியை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் தனது சாதி, மத பேதங்களை மறந்து பார்பனர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். அன்று பிரித்து சூழ்ச்சி செய்த அதே பார்பனன் இன்று புத்தி மழுங்கி நம்மை ஒற்றுமையடைய செய்யும் வழியை அவனுக்கு தெரியாமலே உருவாக்கிவிட்டான். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்.

என்ன செய்ய போகிறீர்கள்

குற்றபரம்பரை என்ற பெயரில் தினம் காவல்நிலையம் செல்லப்போகிறீர்களா?

அல்லது

நமது சந்ததியினருக்கு சமதர்ம நீதியையும், மனிதநேயத்தையும் கற்றுதரபோகிறீர்களா?


ட்வீட்டர் கைதுகள்! தூண்டும் விவாதங்கள்!

இன்று மாலை 5 மணியளவில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற இருக்கும் கருத்தரங்கத்தில் சென்னை நண்பர்கள் தவறாது கலந்து கொண்டு உங்களது கருத்துகளையும் பதிவுசெய்ய வேண்டுகிறேன்!


என் கருத்து என் உரிமை!




*






ஒண்ணுமே புரியலே உலகத்திலே .....

சின்மயி பற்றி எல்லோரும் எழுதி .. நாம அதை வாசிச்சி .. ஒண்ணும் பண்ணாம எல்லோரும் தூங்கியாச்சி. தூக்கத்திலிருந்து எழுப்புறது மாதிரி அடுத்த ஒரு ‘குண்டு’ விழுந்திருக்கு பதிவர்கள் மேல்.

http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece 

பாவம் ... சீனிவாசன் அப்டின்னு ஒரு சின்ன பதிவர் .. ட்விட்டரில் வெறும் 16 followers மட்டுமே வச்சிருக்கிற இவரு மகாத்மா கார்த்திக் சிதம்பரத்தைப் பற்றி ஒரு டிவிட் போட்டிருக்கார். கார்த்தி இதைப் பத்தி e-mail-ல் ஒரு பிராது கொடுத்திருக்கிறார். நம்ம சுறுசுறுப்பான CBCID காலங்காத்தால அஞ்சு மணிக்கு இந்த சீனிவாசனைக் கைது செஞ்சிட்டாங்க. சீனிவாசன் பத்திரமாக காவல் துறையின் ‘பாதுகாப்பில்’ இருக்கிறார்.

சீனிவாசன் வேறும் ஒன்றும் செய்யவில்லை... ஒரே ஒரு ட்விட் கொடுத்திருக்கிறார்: ”கார்த்திக் சிதம்பரம் ராபர்ட் வாத்ராவை விட நிறைய சொத்து சேர்த்துட்டார் என்று செய்திகள் வருகின்றன”.

சீனிவாசன் கெஜ்ரிவாலின் ’ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பில் ஆர்வமுள்ளவர். ’பத்திரிகைகளில் வந்த செய்தியை நான் டிவிட்டினேன். இதில் அவமதிப்பு எங்கே என்று தெரியவில்லை’ என்று சொல்லியுள்ளார்.

இச்செய்தியைப் பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

IT Act Section 66-A என்ற இந்தச் சட்டம் பேச்சு சுதந்திரத்திற்குக் கடுமையான தடைகளைத் தருகிறது. 

 நாம் எங்கே போகிறோம்?

பதிவர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்??

பதிவுகளில் என்ன எழுதினாலும்  சிறைத் தண்டனை என்பது சின்மயி விஷயத்திலும், கார்த்திக் விஷயத்திலும் மேடையேறி விட்டன.

விழிப்போமா?

பிறந்தநாள் வாழ்த்துகள்!

 எங்கள் வீட்டில் நான் தான் முத்தவன்,எனக்கு பிறகு இரண்டு தம்பிகள். அதில் இரண்டாவது தம்பிக்காக தான் இந்த பதிவு.


வீட்டில் கடைசி என்று முடிவு செய்து விட்டதால்,செல்வ செழிப்போடு இருக்கட்டும் என்று செல்வம் என்று பெயர் வைத்தார்கள். எங்கள் குடும்ப பெயர் ராஜ், அதனால் அதுவும் கூடவே. ரொம்பவே செல்லம். அதனால் ஒன்பதாவது பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு குடுத்தார்கள். ஆனால் என்ன சாபமோ தெரியவில்லை.யாருமே எங்கள் வீட்டில் ஒன்பதாவது தாண்டவில்லை.

கவனித்தலை விட புரிதலே பெரிது என்று எங்கள் குடும்பத்தில் அனைவரும் புரிந்து வைத்திருந்தனர். அதனால் படிப்பு இல்லை என்பது எங்களுக்கு ஒரு குறைவாகவே தெரியவில்லை. வாழ்வதற்க்கு எதாவது செய்ய வேண்டும்.அதிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.





வருணாவுடன் செல்வம். மொபைலில் எடுத்தது!

அதை நிரூபிக்கும் வகையில் படித்தவர்களுக்கே சவால் விடும் வகையில் சிறந்த வெல்டராக இருக்கிறார் ஈரோட்டில். புத்தகங்களில் அவரது ஆர்வம் எனக்கே ஆச்சரியம் தரும். ஒஷோவின் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறார். தத்துவங்களை பற்றிய தர்க்கம் எனக்கும் அவருக்கும் விடிய விடிய நடக்கும்.

இதெல்லாம் இப்போ ஏழு வருடத்திற்க்கு முன் எழுதிய டைரியில் என் பெயரை போட்டு அவன் ஒரு கிறுக்கன் என்று எழுதியிருந்தார். சிறு வயதாக இருந்தாலும் எப்படி தான் இப்படி சரியாக புரிந்து கொள்ள முடிகிறதோ.

சகோதர்களாக இருந்தாலும் நாங்கள் பழகுவது நண்பர்கள் போல தான். கரும்பிலிருந்து காமம் வரை விவாதிக்காத விசயங்கள் இல்லை.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற சொல்லுகேற்ப நான் எவ்வளவு பிரச்சனையில் இருந்தாலும் நம்பிக்கையும் அவ்வபோது உதவியும் செய்து வருபவர்.

அந்த தம்பிக்கு தான் இன்று(7-11-2012) பிறந்த நாள்.

இது நடிகர் கமலுக்காக எழுதியது என்று வந்தவர்களுக்கு ஸாரி.

!

Blog Widget by LinkWithin