ஒரிஜினல் ப்ளாக்கர்!

படத்தை கிளிக்கி பெரிதாக மறக்காமல் அனைத்தையும் படிக்கவும்!























இந்த பேப்பரை எழுதியவன் மட்டும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சான், நாமெல்லாம் இழுத்து மூடிகிட்டு போக வேண்டியது தான்!

பிடித்த பாடல்கள்!...

நண்பர் பாலமுருகன் மார்ச் 24 ஆம் தேதி என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார், ஆறு மாதம் கழித்து அதை நான் தொடர்கிறேன், அவ்ளோ பிஸியா சீன் போடுறேன் அவ்ளோ தான், உண்மையில் நான் வெட்டியா தான் இருக்கேன், ரியல் மேட்டர் என்னான்னா, யூடியூப்பில் ஒரு பாட்டு கடைசி வரை கிடைக்காமல் சதி செய்து விட்டது, தற்பொழுது அதற்கான டெக்ஸ்ட் மட்டும் தருகிறேன்!

சக்கரவர்த்தி திருமகள் என்ற படத்தில் வரும் பாட்டு இது, கலைவாணரும், எம்.ஜி.ஆரும் கலக்கி இருப்பார்கள், ரொம்பப் பிடிக்கும் இந்த பாட்டு, எப்போதாவது கேட்கனும் போல இருக்கும், சரியா சன் மியூசிக்கில் போடுவாங்க. :)




எனக்கு எம்.ஆர்.ராதாவை கொள்கை ரீதியாக எனக்கு பிடிக்கும், அவரது சேட்டைக்காக இந்த பாட்டு பிடிக்கும், செம வேகம் இந்த பாட்டு!, உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்!




ஆர்பாட்டமில்லாத அருமையான இசை, மனதை வருடும் வரிகள், அனைவருக்கும் பிடிக்கும் பாடல்!




வர்ணிப்பு பாட்டில் பல பாடல்கள் இருந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமானது, அப்பாவித்தனமான நடிப்பு விசுவலாகவும் நல்லாயிருக்கும்





பர்சனலா எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்!

படம்:அமர்களம்

என் செய்தாயோ விதியே
இனி என் செய்வாயோ விதியே
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை
பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே


ஒரு சொந்தம் இல்லாத தந்தை
சுய பந்தம் இல்லாத அன்னை
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே
விதை மண்ணில் முளைகொண்ட போதே
அதன் தலையில் இடி வீழ்ந்ததென்ன
இனி வாழ்ந்து பயனென்ன என்ன விதியே

*****************

நாமளும் யாரையாவது சிக்க வைக்கனுமுல்ல!

எனக்கு ஏன் இந்த பாட்டு பிடிக்கும்னு சுருக்கமா சொல்லியிருப்பதால் நீங்களும் அப்படியே தான் பண்ணனும் என்றோ யூடியூப் லிங்கெல்லாம் கொடுக்கனும் என்றோ அவசியமில்லை!, பாட்டை குறிப்பிட்டு ஏன் பிடிக்கும்னு சொன்னால் கூட போதும்!

டோண்டு (நிச்சயம், மச்ச மச்சினியே பிடிக்கும் என்பார் பாருங்கள்)

தமிழரசி

தமிழ் அமுதன்

விந்தை மனிதன் (இவர் ரசனை தெரிந்து கொள்ள ஆவல்)

பங்காளி ராஜன் (குசும்புக்கு ஒரு ஆள் வேணாமா)

கமாக்கதைகள்(இடம் மாறிய கால்) 4(69)

எச்சரிக்கை: கதையில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சில வார்த்தைகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்! பிடிக்காத பட்சத்தில் முதல் பேராவிலேயே விலகி செல்க!

******



இல்ல, நீ என்னை ஏமாத்திட்ட, உன்னை போல் ஒரு தேவிடியா கூட குடும்பம் நடத்தியதுக்காக நான் வெட்க்கப்படுறேன் என்று கத்தி கொண்டிருந்தான் பவிழன், எப்படியும் சண்டை ஆரம்பித்து வெகு நேரம் ஆகியிருக்கும் போல, அழுது அழுது வீங்கிய கண்களுடன் நான்கு போல் வளைந்து கட்டிலில் படுத்திருந்தாள் வசந்தி!, இன்னும் விசும்பல் சத்தம் அவளிடம் இருந்து வந்து கொண்டிருந்தது, சூனியத்தை வெறித்த பார்வையுடன் படுத்திருந்தாள், பவிழன் எச்சில் சாரல் தெரிக்க இன்னும் கத்தி கொண்டு தான் இருந்தான்!

சிங்கப்பூரில் ஒரு கஸ்டமருக்கு, வசந்தி வேலை செய்த நிறுவனம் செய்து கொடுத்த மென்பொருள் மொத்தமாக செயலிழக்க, அதை சரி செய்யும் பொருட்டு வசந்தி அங்கே செல்ல வேண்டியிருந்தது, வேலை அதிகம் இழுத்ததால் திரும்பி வர மூன்று நாள் ஆகிவிட்டது! வந்த இரவே நடக்கும் சண்டை தான் இது!, வசந்தியை சிங்கப்பூரில் பவிழனின் நண்பன் பார்த்திருக்கான், எதேட்சையாக அவன் பவிழனுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டான்! இதில் பவிழனுக்கு கோவம் என்னவென்றால் வசந்தியுடன் அவளது பாஸும் இருந்தது தான்!

வசந்தியின் முதலாளி கோவர்த்தனை பவிழனுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆகாது!, அவனை பற்றி வசந்தி பேசும் பொழுதெல்லாம் எரிந்து விழுந்து கொண்டே தான் இருப்பான்!, இப்பொழுது அவனுடன் தனியாக மூன்று நாட்கள் சிங்கப்பூரில் இருந்து விட்டு வந்திருக்கிறாள், போகும் போது கூட சொல்லவில்லை கோவர்த்தனும் உடன் வருகிறான் என்று! கேட்டால் தீடிரென்று உடன் வரும் பெண் வரமுடியாமல் போய் விட்டதால் கோவர்த்தன் வர வேண்டியதாயிற்று என்று கதை விடுகிறாள்!

வார்த்தைக்கு வார்த்தை தேவிடியா தேவிடியா என்று திட்டி கொண்டே இருந்தான் பவிழன்,ஏண்டி இப்படி கொழுப்பெடுத்து அழையுற, உனகெல்லாம் எதுக்கு புருஷன், அப்படியே ஊர்மேயப்போக வேண்டியது தானே!, சிரிச்சி சிரிச்சு கம்பெனியில் எவனையும் விட்டு வச்சிருக்க மாட்ட! ஓவர்டைம்னு சொல்றதெல்லாம் எவன் கூட போய் படுக்குறதுக்கோ, அதுனால தான் வீட்ல நீ பொண்டாட்டியாவே நடந்துகிறதில்ல என்று கத்தி கொண்டே இருந்தான்!.

ஒரு புருஷனா உனக்கு என்னாடி குறை வச்சேன் என்றதும் வசந்தி சட்டென்று எழுந்தாள், கலைந்திருந்த தலைமுடியை அள்ளி முடித்து!

புருசனா, அதை சொல்ல உனக்கு வெட்கமாயில்ல, நைட்டு வீட்டை பாத்துகிறவன் தான் புருஷன்னா அதுக்கு வாட்ச்மேனே போதுமே!, நீ மட்டுமா சம்பாதிக்கிற , நானும் தான் சம்பாதிக்கிறேன்!, உடம்பு சுகத்துக்கு அடிமையாகி பொம்பளை ஊர்மேய போயுறவான்னு நினைச்சியா!, வெளியே போரவ மட்டும் தேவிடியா இல்ல, நேரம், காலம் பார்க்காமல் உனக்காக கூப்பிட்ட நேரமெல்லாம் படுத்து, உணர்ச்சிகளை மழுங்கடித்து, சரி புருஷன் சந்தோசமா இருந்தா போதும்னு நினைக்கிறோம் பாரு, நாங்க தேவிடியா தான்!

அஞ்சு அறிவு இருக்குற மிருகத்துக்குக்கூட காதல் இருக்கு, நீ என்னைக்காவது என்னை காதலோடு தொட்டிருக்கியா! உனக்கு என் உடம்பு தான் வேணும், என் மனசை பத்தி கவலையேயில்லை!, காதலை வெளிப்படுத்த இந்த உலகில் செக்ஸை விட சிறந்த ஒன்னு இருக்காது, ஆனா வெறும் உடம்பு உரசலா நீ செக்ஸை கொச்சை படுத்தின, அப்பல்லாம் சும்மா இருந்தேன் பாரு, நான் தேவிடியா தான்!, நீ முக்கி முக்கி மூச்சிறைக்க பண்றதை கையடக்க வைப்ரேட்டர் பண்ணிட்டு போயிரும்! அப்புறம் எதுக்கு புருஷன்னு நீ!, ஆனாலும் உனக்காக கூப்பிட்ட நேரமெல்லாம் வந்து படுத்தேன் பார்த்தியா நன் தேவிடியா தான்!

ஒரு பொண்ணு தப்பு பண்றதுக்காக சிங்கப்பூர் வரை போக வேண்டியதில்லை, அவ நினைச்சா உன்னை பக்கத்துல தூங்க வச்சிகிட்டே தப்பு பண்ணலாம்! ஆனாலும் காதலுக்குன்னு ஒரு மரியாதை கொடுத்து இருக்கோம் பாரு, நாங்க தேவிடியா தான்!, புருஷன் முழுசா சுகம் கொடுத்தா தான் அவன் கூட வாழ முடியும்னா இன்னைக்கு எவளும் அவ புருஷன் கூட வாழ மாட்டா! அவ எதிர் பாக்குறது உன் உடம்பை இல்ல, உன் மனசை! காதலை, முழு அன்பை ஆனா உங்களுக்கு எதுவும் தேவையில்ல, இந்த சதையும் தோலும் போதும்!, அதுக்கு எதுக்கு எங்களுக்கு உயிரு! செத்த பிணம் போல் வாழ்றதுக்கு நிஜமாவே செத்து போகலாமே!

ராமாயண காலத்திலிருந்து பெண்களை சந்தேகப்பட்டுகிட்டு தானே இருக்கிங்க!, நீங்க ஒருத்தி கூட படுத்து எழுந்து வந்தாலும் உங்க பேரு அதே ஆம்பளை தான், ஆனா ஒரு பொம்பளை ஒருத்தனை பார்த்து லேசா சிரிச்சிட்டாலே அவ தேவிடியா! இதுவரைக்கும் நான் உனக்கு பொண்டாட்டியா இருந்தேன்னு நினைச்சியா.... இல்ல! நீ சொன்ன மாதிரி தேவிடியாவா தான் இருந்தேன்!, காசுக்கு பதிலா புருஷன்ற பேர்ல கமீட்மெண்ட், இனிமெ எனக்கு அது தேவையில்ல! இந்த நிமிசத்துலருந்து நீ யாரோ நான் யாரோ! குட்பை!

சொல்லிவிட்டு வாசலை நோக்கி வேகமாக நடந்தாள் வசந்தி!


*****

டிஸ்கி: இது நிச்சயமாக புனைவு தான்! ஆனால் நாட்டில் இருக்கும் முக்கால்வாசி ஆண்களை குறிக்கும் என்பதால்! யாரையும் பஞ்சாயத்துக்கு கூட்டிகிட்டு வரமுடியாதே!

சுயசொறிதல்!......

ஒரு வாகனம் நிற்கும் போது அதன் வேகமுள் பூஜ்யத்தை காட்டும், இயக்கத்தின் பின் தான் அதன் வேகம் கூடிகொண்டே போகும், அதே போல் தான் மனித வாழ்க்கையும் பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து ஆர்வமும் அனுபவமும் வேகத்தை கொடுக்கும்!, ஆனாலும் சிலர் இருக்கும் இடத்தை விட்டு நகராமலே இருப்பது பெரும் ஆச்சர்யத்தை தரும் விசயம்! எப்படி தான் தன் சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த பிரக்ஞ்ஜை இல்லாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை!.


பிலாலின் நண்பன் ஒருவனுக்கு வேலை வாங்கி தரும்படி பிலால் கேட்டுக்கொண்டான், எனது மெயில் ஐடி கொடுத்து அவனது பயோடேட்டாவை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன், அவ்வளவு தான் நானும் மறந்துவிட்டேன் அவனும் என்னிடம் கேட்கவில்லை, அவனும் வருவான், போவான். எந்தவித மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல் குடியும் குடித்தனமுமாக இருந்தான், அது அவனுடய பர்சனல், மேலும் எனக்கு அறிவுரை வழங்குவதோ கேட்பதோ பிடிக்காது என்பதாலும் நான் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை!, ஒரு மாதம் கழித்து கேட்கிறான், அண்ணா வேலை என்னாச்சுன்னு!

தம்பி, இந்த ஒரு மாசத்தில் வேற எதாவது வேலைக்கு ட்ரை பண்ணியா?

இல்லைங்கண்ணா!

வேற யார்கிட்டயாவது வேலைக்கு சொல்லி வச்சியா?

இல்லையே!

என்ன தான் பண்ணிகிட்டு இருந்த!?

நீங்க சொல்விங்கன்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்!

உனது சுயதேவைக்காக எப்போதும் அடுத்தவரையே நம்பி கொண்டிருப்பவனுக்கு நான் என்ன வேலை வாங்கி தருவது, கொஞ்சம் கூட முயற்சியே எடுக்காத உனக்கு வேலை வாங்கி கொடுத்தால் அந்த வேலையையும் நான் தான் போய் செய்ய வேண்டியிருக்கும், நான் ஏற்கனவே பிஸியாக இருப்பதால் வேற யாராவது வெட்டிப்பயலிடம் உனக்கு வேலை தேடி கொடுக்கச்சொல்!

என்று சொல்லிவிட்டேன்!............. சரிதானே!

*****************



வார ஆரம்பத்தில் ஒரு நண்பர் அழைத்திருந்தார், எனது வியாபார ரீதியாக நட்பு ஏற்பட்டு பின் நண்பராக மாறியவர், தற்பொழுது வியாபாரத்தை நிறுத்தி கொண்டாலும் நட்பு மட்டும் தொடர்கிறது, என்னை அழைத்தது ஈரோடு வருவதாக சொன்னார்! முதல் வார்த்தை வாங்க தல என்று சொல்லிவிட்டு தான் என்ன விசயம் என்றேன்!, சும்மா தான் நேர்ல சொல்றேன் என்றார்!, அந்நேரத்தில் எனது நண்பரின் தங்கை திருமணமும் இருந்தது, நண்பர்களில் தங்கியிருந்த விடுதிக்கே அழைத்து சென்று விட்டேன்!

நான் நிறுத்திவிட்டதால் அந்த நண்பரை அவர்களுடன் ஒட்டவைத்து விட்டு அவர்களின் ஆட்டத்தை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன்! கூத்தும் கும்மாளமுமாக 10 பேருக்கு நாலு ஃபுல்லு ஓடிவிட்டது, அனைவரும் மட்டையாக நமது நண்பர் மட்டும் தெளிவாக இருக்கிறார்! என்னய்யா பிரச்சனை என்றால், ஊரில் கடன் அதான் சொல்லாமல் கொல்லாமல் வந்து விட்டேன் என்கிறார்!

பிரச்சனையை எதிர்கொள்ளாமல் அதை விட்டு விலகி ஓடுவதால் பிரச்சனை திர்ந்துவிடுமா?, அதன் பின் ஊருக்கு போனாலும் அது அழியாத கரும்புள்ளியாக அது இருக்குமே என்றேன்.(இது அறிவுரையா!?)

என் நிலையில் இருந்து பார்த்தா தான் கஷ்டம் புரியும் என்றார்!

நான் கடந்த வந்த பாதையை சொல்லி அவரது போதையை இறக்க விருப்பமில்லை, சரி படுங்கன்னு சொல்லிட்டு நைட்டே ஆபிஸ் வந்துட்டேன்!, மறுநாள் மீண்டும் அவர் ஒரு ரவுண்டு முடிச்சிட்டு சாப்பாடெல்லாம் சாப்பிட்டு ஊருக்கு பஸ் ஏறினார்!

மறுநாள் மீண்டும் போன் பண்றார், நான் வர்றேன், இன்னும் ஒரு வாரம் அங்கே தங்கிக்கிறேன்னு!

அய்யா, உன் பிரச்சனைக்காக என்னையும் பிரச்சனையில் சிக்க வைக்காதே!, குடும்பத்தை விட்டு நண்பனை தலையில் வைத்து ஆடும் அளவுக்கு எனக்கு இன்னும் முற்றவில்லைன்னு சொல்லிட்டேன்!

சரிதானே!


********************

டிஸ்கி:அரிச்சது, அதான் சொரிஞ்சிகிட்டேன்!

பார்க்கலாம்!...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜ் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "பாக்கலாம்!" அவரை பொறுத்தவரை அதன் அர்த்தம், அந்த செயலை முடிந்த பின் நீங்கள் வந்து பார்க்கலாம் என்பது தான், அதனால் தான் அவருக்கு அடைமொழி கர்மவீரர்(செயல்வீரர்), ஆனால் இந்த "பார்க்கலாம்" என்ற வார்த்தை எல்லா சூழ்நிலையிலும் அதே அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறதா என யோசித்து பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது!,அவரவர் சூழ்நிலை, மனநிலை என அனைத்தையையும் சார்ந்து தான் நமது வார்த்தைகள் வெளிப்படுகிறது என்றாலும் அதை உள்வாங்கி கொள்ளும் நபரின் சூழ்நிலை என்னவாக புரிந்து கொள்ளப்படும் என்பதும் மிக முக்கியமானது தான்!


பொதுவாக ”லாம்” என்று முடிந்தாலே அதில் ஒரு ஸ்திர தன்மை இல்லை என்பது நிரூபணமாகிறது, அதில் "பார்க்கலாம்" என்ற வார்த்தையும் ஒன்று. "லாம்" ஒற்றை சொல்லாக இல்லாமல் முன் சில வார்த்தைகள் இருந்தால் கூட சிலசமயம் ஒரு நம்பிக்கை கலந்த வார்த்தையாக மாறும், உதாரணமாக "நாளை சினிமா பார்க்கலாம்" என்றால், அதில் பார்க்ககூடிய சாத்தியகூறுகள் அதிகம் எனத்தெரிகிறது!, "நாளை சினிமாவுக்கு போகலாமா?" என்ற கேள்விக்கு "பார்க்கலாம்" என்றால் அங்கே நம்பிக்கை குறைந்த குழப்ப சூழ்நிலையே மிஞ்சும்!


"பார்க்கலாம்" என்ற வார்த்தை சொல்லும் தொனியில் கூட மாறலாம்! உதவி கோரி செல்பவருக்கு பார்க்கலாம் என்ற வார்த்தை சொல்பவரின் அலட்சியதன்மையை காட்டும்!, " I will try" or "I will try my level best" போன்ற வார்த்தைகளை நிச்சியமாக ”பார்க்கலாம்” என்ற வார்த்தையுடன் ஒப்பிட முடியாது, அங்கே முயற்சியாவது இருக்கிறது, ஒரு விசயம் நடக்கும் நடக்காது என்ற எந்தவித உத்திரவாதமும் இல்லாத பட்சத்திலும் முயற்சியாவது இருந்ததே என்ற சமரசமாவது இருக்கும், ஆனால் "பார்க்கலாம்" என்றாலே நம்பிக்கை இழுக்கும் சூழல் தான் உருவாகும்!


வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் அனுபவத்தால் சாத்தியகூறுகளை பற்றி ஆராய்ந்தவர்கள், பார்க்கலாம் என்ற சொல்லை வேறு மாதிரி பயன்படுத்துவர், அவர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது, எது நடந்தாலும் சரி என்ற வெற்றிடதன்மையில் இருப்பார்கள், வந்தால் நன்று இல்லையென்றால் எனகு ஒன்றும் நட்டமில்லை என்ற தன்மை! அவர்கள் அளவில் அதுசரி தான் என்றாலும் கேட்கும் நபரும் அதே போல் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பாரா என்பது சந்தேகமே!


தட்டிக்கழிக்கும் சொல்லாகவும் இந்த சொல் பயன்படும், முன்னரே சொன்னது போல் அலட்சியபோக்காகவும் இல்லாமல் எதிர்பார்ப்பும் இல்லாமல், தனது முன்முடிவுகளை மாற்ற எந்தஒரு யோசனையும் எடுக்காத பட்சத்தில் அவர்கள் உபயோகிக்கும் சொல் பார்க்கலாம்! தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் குறித்த எதிர்கால நோக்கு பார்வை ஏற்கனவே வைத்திருக்கும் திட்டத்துக்கு மாற்றாக எதையும் சட்டென்று முடிவெடுக்க முடியா நிலை என சொல்லலாம்!

எங்கேயும் யாரையும் எதிலும் குறைசொல்ல முடியாது, அவரவர் சூழ்நிலை பொறுத்த வாழ்வே அவரது மனநிலைக்கும், நிலை குறித்த திட்டத்திற்கும் சாத்தியமாகிறது, நேர்மறை சிந்தனைகள் எதையும் சமாளிக்கும் திறனை கொடுக்க மட்டுமே செய்யாது, சில சமயங்கள் வேறு பல வாய்ப்புகளை தேடிச்செல்லும் திறனையும் குறைக்கும்!



வாழ்கையை பலர் வாகனத்துடன் ஒப்பிடுவர், அவ்வாறு கொண்டால் வாகனத்தை நாமாக செலுத்துவது அல்லது அதன் போக்கில் விடுவது என்ற இருநிலை வருகிறது, அனுபவமும் அறிவும் செலுத்தும் தகுதியை தந்தாலும், சிலநேரங்களில் அதன் போக்கும் சுராஸ்யம் தரும்!, ஆனாலும் என்னார்வமெல்லாம் என்னால் என்ன செய்ய முடிகிறது என அறிவதே! நசுங்கி அடிபட்டு தகரடப்பா போல் என் வண்டி இருந்தாலும் என்னால் செலுத்தப்படும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கிறது!

"பார்க்கலாம்" என்ற வார்த்தையை எதிர்கொள்ளும் திறன், பலரைப் போலவே எனக்கும் குறைவு, "பார்க்கலாம்" என் திறன் எப்படி மாறுகிறது என்று!

டிஸ்கி: இப்படியே எத்தனை நாளைக்கு தான் மொக்கை போட்டு கொல்லுவ பார்க்கலாம் என நினைக்கும் நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க!.   "லாம்" என்பது பன்மைச் சொல் எனினும் எனது வசதிக்காக "ஸ்திரத்தன்மை இல்லாத தன்மை" குறித்து பேசுவதாக மட்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். தமிழ் பெருந்தகைகள் மன்னிக்கவும்

ஹார்ட் வொர்க்!.. ஸ்மார்ட் வொர்க்!..

நேற்று எந்திரன் பட ட்ரைய்லர் ரிலீஸுக்கான விளம்பரம் அல்லது விழா சன்டீவீயில் காண்பிக்கபட்டது!, வீட்டை பொறுத்தவரை தொலைக்காட்சி சேனலை மாற்ற பெரும்பான்மைகே உரிமை! அதனால் அதையே நானும் காண நேர்ந்தது!

ரஜினி, கலாநிதிமாறன், சங்கர் பற்றிய துதிகளையும் தாண்டி என்னை இப்பதிவை எழுத தூண்டியது விவேக் சொன்ன குட்டிக்கதை!



ஒரு முனிவர் 20 ஆண்டுகள் கடும்தவம் புரிந்து!. யோகா, தியானம் போன்ற பல கடின உடற்பயிற்சிகள் செய்து இறுதியில் தண்ணீரில் நடக்கும் வித்தையை கற்றாராம்! ஒருநாள் ஊர்மக்கள் முன்னிலையில் அந்த முனிவர் நீரில் நடந்து காட்டும் போது அவ்வழியே இன்னொரு சித்தர் வந்தாராம், இந்த முனிவரை பார்த்து அவர் சொன்னாராம் இதற்கு எதற்கு 20 வருடம், பேசாமல் பரிசலில் போயிருக்கலாமே என்று!

அரங்கத்தில் இருந்தவர்களுக்கு கதை இன்னும் முடியவில்லை என்ற நினைப்பா அல்லது விவேக்குக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை என்ற கவலையா தெரியவில்லை, யார் முகத்திலும் ஈயாடவில்லை!
இருப்பினும் விவேக்கே கேட்டு கைதட்டல் வாங்கி கொண்டார்! நாம் காசு கொடுத்து சினிமாவுக்கு போய் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்கிறோமே அது போல!

கடும்தவம் புரிந்த முனிவர் செய்தது ஹார்ட் வொர்க்காம், பரிசலில் போக சொன்னது ஸ்மார்ட் வொர்க்காம்!, எதாவது மொன்னை கதைக்கு லாஜிக் தேவையில்லை தான், ஒரு நீதிக்கதை சொல்லும் பொழுதும் லாஜிக் இல்லாமல் தான் சொல்வோம் என்று சினிமாக்காரன் புத்தியை காட்டியிருக்கிறார் விவேக். வேலை அது வேலையாகவே இருக்கிறது, அதன் தேவையை பொருட்டு தான் ஹார்ட் வொர்க்கா, ஸ்மார்ட் வொர்க்கா என்பது முடிவு செய்யப்படுகிறது! அந்த முனிவரின் தேவை தண்ணீரில் நடப்பதா அல்லது ஆற்றை கடப்பதா!. இடையில் சொம்புடன் வந்து கருத்து சொன்ன அந்த பதிவர் ஸாரி சித்தர் யாராக இருக்கக்கூடும்!


ஸ்மார்ட்ய் வொர்க்குன்னா என்ன மாதிரி இருக்கனும்!

நான் ஒரு குட்டி கதை சொல்லட்டா!

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,.. சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!.. நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்!

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை, மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!

ஸ்மார்ட் வொர்க் என்றால் என்ன?

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னது போல் முதல் நாள் செய்த வேலையை மறுநாள் அதை விட குறைந்த திறனில் முடிக்க போடும் வியூகமே ஸ்மார்ட் வொர்க்! சாத்தியமானது தான் அனைத்து துறையிலும்!.

ஹார்ட் வொர்க் உங்கள் உடல் திறனை காட்டும், ஸ்மார்ட் வொர்க் உங்கள் மூளைத்திறனை காட்டும்!, இரண்டும் சேரும் போது அது உங்களுக்கு வெற்றியை காட்டும்!

****************************

டிஸ்கி:அவசரமா கருத்து சொல்ல டீநகர் வரைக்கும் போகணும், ஆட்டோ வருமா!

தேவதை சிரிச்சா இப்படி தான் இருக்கும்!





















************************
யாரு இந்த ஹாலிவுட் ஹீரோ!?


மணமகள் தேவை!

பெயர்                         : சியாம்சுந்தர்

தந்தை பெயர்                  : ராமச்சந்திரன்

தாயார் பெயர்                  : ஆனந்தம்

சொந்த ஊர்                    : ராஜபாளையம். (தற்போது சென்னையில்)

பிறந்த தேதி                   : 23 June of 1980


படிப்பு                         : டிப்ளமோ (DEEE)
                              தற்போது பி.இ பகுதி நேரமாக (இறுதியாண்டு) அண்ணா    பல்கலைகழகத்தில் படிக்கிறேன்

வேலை                       : Hardware Design Engineer in Cornet Technology India Pvt Ltd, Chennai.

சம்பளம்                       : ஆண்டுக்கு, Rs.350000/

உயரம்                        : 180செமீ

எடை                         : 62 கிலோ

தெரிந்த மொழி                : தமிழ், ஆங்கிலம், தெலுங்கு

உடன் பிறந்தோர்              : தம்பி ஒருவர்.


திருமணத்திற்க்கு பெற்றோர் ஆதரவு : இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம், அதனால் இல்லை என்றே வைத்துகொள்வது நலம்!, அப்பா இல்லை. அம்மா மட்டும் தான்

பெண்ணிடம் எதிர்பார்ப்பது :     சொந்தக்காலில் நிற்க வேண்டும், தாலி, மத சடங்குகளின்றி (குறிப்பாக இந்து மத சடங்குகள்) சாதி மறுப்பு திருமணத்திற்க்கு சம்மதிப்பவராக இருக்கவேண்டும்.
பெண் எந்த சாதி, எந்த மதத்தை சேர்தவராகவும் இருக்கலாம்.


.
*************************


இவரது மேட்ரிமோனியல் ஐடி! அதில் கூட சாதி, மதம் முக்கியமில்லை என்றே தெரிவித்திருக்கிறார்!, அவரது புரோபைலை முதன் முதல் வெளியிடுவதில் பெருமையடைகிறேன்!

*************************

விருப்புமுள்ள நண்பர்கள் உங்களை பற்றிய தகவல்களை அனுப்பலாம்!

குவியல்!...(03.09.10)

வேகமாக வண்டி ஓட்டி கோவை சாலையை திணறடிக்கும் தாரணிபிரியாவுக்கு இன்று பிறந்தநாள்!, இவர் வண்டி ஓட்டி வருவதை பார்த்து லாரிகள் கூட பயந்து வழிவிடுமாம்!, வேகமானவருக்கு இங்கே வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!


இன்னைக்கு என்னுடய பாஸ் கார்த்திக்குக்கும் பிறந்தநாள்!
ரகசியகனவுகள் என்று ஒரு ப்ளாக் வச்சிருந்தார், அது ரகசியமாகவே இருக்கட்டும்னு ப்ளாக்கையே அழிச்சிட்டார்!, விளம்பரம் பிடிக்காத மனிதர், மகா பொறுமைசாலி!
எனக்கு மிரட்டல்கள் வரும்போதும் சிரிச்சிகிட்டே நக்கலடிப்பார்!
எனக்கு மாசாமாசம் சம்பளமும் கொடுத்து, மொக்கை போட கம்பியூட்டரும் கொடுத்து அழகு பார்க்கும் என் பாஸ் கார்த்திக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வெள்ளை பனியன் போட்டிருப்பது பூபதி, அப்போ கார்த்திக் யாரு!?


**************

பத்திரிக்கைத்துறையை ஆக்கிரமித்த வலைப்பதிவர்கள் தற்பொழுது தொலைக்காட்சித்துறையையும் ஆக்கிரமிக்க ஆரம்பத்திவிட்டனர்!.

வலைப்பதிவோ அல்லது வலைப்பதிவர் பெயரோ போடாமல் இனி ஆனந்தவிகடன் பார்க்க முடியாது போல் இருக்கு!, அவர்கள் ஆள் கிடைக்காமல் அதை செய்வதில்லை, வலைப்பதிவு என்னும் ஊடகத்தின் மூலம் நீங்கள் வெளிப்படுத்தும் திறனுக்கான பரிசு அது!

ஜெயா டீவி காலைமலரை முதலில் ஆக்கிரமிக்கத் தொடங்கிய வலைப்பதிவர்கள், விஜய்டீவியின் நீயாநானாவில் கூட்டமாக போய் அசத்திவிட்டனர்!, அப்துல்லாவிற்கும், நர்சிம்மிற்கும் நிறைய பேச வாய்ப்பு கிடைத்தது, அமுல்பேபி பட்டர்ப்ளை சூர்யா நீண்ட நேரம் க்ளோசப்பில் காட்டப்பட்டார்! பரிசு வாங்கிய நர்சிம்மிற்கு வாழ்த்துக்கள்!

வருங்காலத்தில் வலையின் வீச்சு பரவலாக இருக்கும் என்ற அப்துல்லாவின் கூற்றும், இருக்கும் டெக்னாலஜியைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என்ற மற்ற பதிவர்களின் வாதமும் ஏற்றுகொள்ளப்பட வேண்டியதே!, எந்த விசயத்தையும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நம்மால் பார்க்க முடியும்! எதிர்மறையை மட்டுமே பார்ப்பது அதை பூதாகரமாக தான் காட்டும்!, நான் கம்பியூட்டர், இணையம் என்பதை தெரிந்து கொண்டதே செக்ஸ் சைட்டுகள் மூலம் தான், அதற்காக இன்றும் அதற்குள்ளேவா உட்கார்ந்திருக்க முடியும்! அதிலிலுள்ள மற்ற பயன்தரும் விசயங்களை இப்பொழுது தேட ஆரம்பித்து விட்டோம் இல்லையா!

வரும் சந்ததியினருக்கு ஆக்கப்பூர்வமாக ஊக்கப்படுத்துவது நம் கையில் தானே இருக்கு!

*************

பெரிதாக இமேஜ் எதையும் உருவாக்கி கொள்ளாமல் வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான்! அதில் ட்ரஸ் கோடும் ஒன்று, இரண்டு நாள் முன்பு ஈரோடு கதிர், என்ன வால் தீடிர்னு சர்ட்ல வர்றிங்கன்னு கேட்கும் போது தான் எனக்கு ஒரு dress code வந்துருச்சுன்னு தெரியவந்தது! எப்போதும் கார்கோ பேண்ட், டீ ஷர்ட் அல்லது நெக் பனியன் என்றே சுற்றி கொண்டிருக்கிறேன்! வெளியே விசாரித்தபோது தான் தெரிந்தது, யூத்தெல்லாம் இப்படி தான் ட்ரெஸ் பண்ணுவாங்களாம்!


*************

என் இரண்டாவது மகளுக்கு வருணா என பெயர் வைக்க திட்டமிட்டு உள்ளோம்!
வர்ஷா பிற்க்கும் போதும் நல்ல மழை, வருணா பிறக்கும் போதும் நல்ல மழை! இருவருக்கும் ஒரே அர்த்தம் தருவது போல் பெயர் இருப்பதும் சிறப்பு தானே!, வர்ஷா பிறந்தபோது இருந்ததை விட வருணா கூட அதிக நேரம் இருக்க முடியுது! போட்டோ எடுக்கத்தான் எங்கம்மா விட மாட்டிங்கிறாங்க! கொஞ்சநாள் ஆகட்டும், எடுத்து போடுறேன்!

*************

திருமண இலவச விளம்பரங்களுக்கு நண்பர்களிடமிருந்து புரோபைல் வந்து கொண்டிருக்கிறது, நிறைய வரும்பொழுது தனி ப்ளாக் ஆரம்பிச்சு அதில் செய்யலாம், சில நண்பர்கள் உங்கள் கொள்கை கட்டுப்பாடுகளை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாமே என்கிறார்கள், நண்பர்கள் விரும்பினாலும் அவர்களது பெற்றோர்களுக்காக சில விசயங்களை அனுசரித்து போக வேண்டுமாம்!, பெற்றோர்களை குளிர்விக்க தான் திருமணம் என்றால் அதற்கு ஏகப்பட்ட மேட்ரிமோனியல் இருக்கு, நான் அந்த விளையாட்டுக்கு வரல! எந்த சூழ்நிலையிலும் தம்மை சமரசம் செய்து கொள்ளாத தைரியமான மனிதர்களுக்கு மட்டும் தான் இங்கே விளம்பரம்!

புரோபைலில் கொடுக்கும் தகவல்கள் நல்லெண்ண அடிப்படையில் எந்த மாற்றமும் எங்களால் செய்யப்படாமல் அப்படியே வெளியிடப்படுகிறது, அதிலுள்ள உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது உங்கள் கடமை என்று முன்னரே சொல்லி விடுகிறேன்!, தயவுசெய்து பயனளிக்கும் வகையில் பயன்படுத்த உதவுங்கள்!

தனி ப்ளாக்கோ அல்லது வலைத்தளமோ ஆரம்பிக்கும் பட்சத்தில் நான் ஒருவனாக பார்த்து கொள்வது கொஞ்சம் கடினம், ஆகையால் அனுபவம் மிக்க மற்றும் ஆர்வம்மிக்க நண்பர்களை உடன் இருந்து தோள் கொடுக்க அழைக்கிறேன், விருப்பமுள்ளவர்கள் மெயிலுங்கள்!

**************

புதிய பதிவர்கள் பலருக்கு வேர்டு வெரிபிகேஷனை எடுக்க தெரியவில்லை, NHM உபயோகித்து பின்னூட்டம் இடுபவர்கள் அம்மாதிரி தளங்களில் பின்னூட்டம் இட கடுப்படைவார்கள், எடுக்க மாட்டோம் அப்படியே வச்சிருப்போம், பின்னூட்டம் போட்டா போடு, இல்லாட்டி போ என்பவர்களுக்கு இது இல்லை!


dash board -> settings -> comments போய் கீழே இதை மாற்ற வேண்டும், விருப்பமுள்ளவர்கள் மாடுரேஷன் வைத்து கொள்ளவும் சுட்டிக் காட்டியுள்ளேன்!

*************

எழுத்துக் கவிதைக்கு பதிலா இன்று புகைப்படக் கவிதைகள்!
இவர்களெல்லாம் எனக்குப் பிடித்த நடிகைகள்!








ஏன் பிடிக்கும் என்ற விவாதத்தை தனி மடலில் வைத்து கொள்லலாம்!

!

Blog Widget by LinkWithin