அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்!

பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கும் அப்போது, சினிமாத்துறையில் இணைய வேண்டும் என்ற ஆசையில் சென்னையில் காலடி வைத்தேன். எனது பால்ய நண்பன் கார்த்திக்கின் மாமா சிவா அவர்கள் ஆரம்பத்தில் உதவிகள் செய்தார், அவரின் மூலமாக இயக்குனர் ராஜிவ்மேனன் அவர்களிடம் இண்டர்வியூவிற்கு போனேன், அப்பொழுது ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படம் எடுத்து கொண்டிருந்தார், அடுத்த படத்திற்கு நிச்சயமாக வாய்ப்பு தருகிறேன் என்று உறுதியளித்தார், ஆனா பாருங்க அதன் பிறகு அவர் எந்த படமும் இயக்கவில்லை!


அதன் பிறகு வேலுபிரபாகரன் போன்ற இயக்குனர்களிடம் வாய்ப்பு வந்தது, பெரிய இயக்குனர்களிடம் சேர்ந்தால் சீக்கிரமாக கற்று கொள்ளலாம் என காத்திருந்தேன், ஆனாலும் சோறு திங்காமல் இருக்க முடியாதே, அதனால் நண்பன் ராஜாவின் ஆலோசனையின் பேரில் ஹோட்டலில் வேலைக்கு சேரலாம் என முடிவு செய்தேன், அவனது சிபாரிசின் பேரில் எனக்கு தாஜ் கோரமெண்டலில் வேலை கிடைத்தது, ஒன்றரை வருடம் அங்கே வேலை செய்தேன், அதன் பிறகு சினிமாதுறையில் வாய்ப்பு தேடும் ஆர்வம் குறைந்தது, படிப்படியாக உணவகத்துறையில் ஆர்வம் அதிகமானது, ஈரோடு வந்தது லீஜார்டின் என்ற ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தேன்.


தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் அங்கே வேலை செய்தேன், ஹவுஸ்கீப்பிங்கில் 1500 ருபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து அதிலிருந்து சர்வீஸ் துறைக்கு மாறி வேலையை விட்டு நிற்கும் பொழுது கேப்டனாக வெளியே வந்தேன், வெளியே வரும்போது எனது சம்பளம் 5400 ருபாய், ஆர்வத்துடன் எதை செய்தாலும் நிச்சயம் பெரிய பலன் கிடைக்கும் என்பது அனுபவ ரீதியாக எனக்கு புரிந்தது. அப்போதே ஆரம்பத்துவிட்டது வாழ்க்கையில் கண்டிப்பாக சொந்தமாக ஒரு உணவகம் ஆரம்பிக்க வேண்டும் என்று, வாரத்தில் மூன்று முறையாவது நானும் எனது பாஸ் கார்த்திக்கும் நல்ல உணவகங்கள் தேடி சாப்பிட செல்வோம். எவையெல்லாம் மிகுதியான சுவையுடன் இருக்கிறதோ அவையெல்லாம் எனது உணவகத்தில் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என குறித்து கொள்வேன்!

சில வருடங்களாகவே ஆரம்பிக்க வேண்டும் என பேச்சு ஆரம்பித்து எனது பொருளாதார சூழ்நிலையின் காரணமாக தற்காலிகமாக திட்டம் நிறுத்தி வைக்கப்படும், சிறந்த உனவகம் அமைக்க வேண்டுமென்றால் அதற்கான செலவு தொகையும் அதிகமாக இருக்கும் என்பதால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

என்னைப்போலவே வாழ்க்கையில் உணவகம் ஒன்றை நிறுவியே தீருவது என்ற லட்சியக்கனவில் இருந்த ஒருவரை சந்தித்த போது எனக்குள் இருந்த நெருப்பின் அழுத்தம் அதிகமாயிற்று!, இரண்டு மாத திட்ட விரிவாக்க பேச்சின் முடிவில் இன்னொரு பங்குதாரரையும் சேர்த்து கொண்டு ஆரம்பிப்பது என முடிவு செய்தோம்.

கோவை ஆர்.எஸ் புரத்தில் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த ஒரு உணவகம் விலைக்கு வருகிறது என அறிந்தோம். முன்னர் நடத்தி கொண்டிருந்தவர் அசைவம் சாப்பிடாதவர் மட்டுமல்ல, சமைக்கவும் கூடாது என நினைப்பவர், ஆனால் உணவகமோ 25 குளிர்வசதி செய்யபட்ட அறைகளும், chill out என்ற உயர்தர வசதியான பாரும் அருகில் கொண்டது, அங்கே சைவ உணவை மட்டும் கொடுத்து உணவகம் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்பதால் அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றோம்!, கிச்சனில் சில மாற்றங்கள் தேவைப்பட்டது, நாங்கள் எதிர்பார்த்த நாட்களை விட அதிக நாட்கள் அந்த வேலைக்கு எடுத்து கொண்டதால் விளம்பரத்திற்கு பெரிதாக நேரம் ஒதுக்க முடியவில்லை, முதலில் ஆரம்பித்து பின்னர் பார்த்து கொள்ளலாம் என முடிவு செய்து ஆரம்பித்து விட்டோம்.

நண்பர்கள் பலருக்கு சொல்ல முடியாமல் போனது எங்களுக்கும் வருத்தமே! தயைகூர்ந்து உங்கள் தமயனின் இந்த சிறு தவறை மன்னிக்க வேண்டுகிறேன்!, நீங்கள் இல்லாமல் எனது வளர்ச்சி சாத்தியமாகாது, உங்கள் ஆலோசனைகள் ஒவ்வொன்றும் எங்களை செம்மைப்படுத்தும், ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நண்பர்களே!


ஆர்.எஸ் புரத்திலிருந்து சுற்றுவட்டாரம் 4 கிலோ மீட்டர் வரை டோர் டெலிவரி உண்டு! 11 மணி வரை டோர் டெலிவரிக்கு ஆர்டர் செய்யலாம்!, அதற்கென்று தனியாக எந்த கட்டணமும் தற்பொழுது வசூலிப்பதில்லை. பார்ட்டி ஆர்டர்களும் எடுத்துக்கொள்ளப்படும்.

இணையத்தளம் கட்டுமான பணியில் இருக்கிறது, விரைவில் முகவரி தருகிறேன்!

நண்பர்கள் இத்தகவலை உங்களது தளத்திலும் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன், உங்கள் நண்பர்கள் கோவையில் இருக்கும் பட்சத்தில் ஒருமுறை உணவருந்த வரச்சொல்லுங்கள், மறுமுறை அவர்களை வரவைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு!



எனது எண்:9994500540
உணவக தொலைபேசி எண்: 0422- 437 6 437

நம்பிக்கை நகர்த்தும்............ சங்கமம் 201

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களின் தொடர் உழைப்பில், பதிவுலக நட்புகளின் ஆலோசனைகளோடு சங்கமம் 2010 நிகழ்ச்சிகளின் திட்டமிடல் கிட்டத்தட்ட நிறைவடைந்து பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.


இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.






வெளியூரில் இருந்து வரும் பதிவர்கள் தங்குவதற்கு அறை எடுக்க வேண்டுமாயின் அது குறித்த உதவிகளுக்கு பதிவர்.ஜாபர் (98658-39393) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

இடம்:
டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.




பதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ் வணக்கம்
*வரவேற்புரை
*பதிவர்கள் அறிமுகம்
*கூட்ட துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
*சிறுகதைகளை உருவாக்குவோம் -
எழுத்தாளர். பெருமாள் முருகன்
*உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள் -
எழுத்தாளர். பாமரன்
*குறும்படம் எடுக்கலாம் வாங்க -
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
*நிழற்படங்களில் நேர்த்தி -
’கருவாயன்’ - சுரேஷ்பாபு
*உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை -
சிதம்பரன்.கி

மதியம் 01-30 – 02.30 மதிய உணவு
இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் -
ஓசை செல்லா
* நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் -
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)
மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)
*பதிவர்கள் கலந்துரையாடல் -
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை
மாலை 05.00 மணி நிகழ்ச்சி நிறைவு



குழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

சங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.

சுட்டியோடு சங்கமம் இலச்சினையை வெளியிட்டுள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம், இன்ட்லி திரட்டிகளுக்கு மிகுந்த நன்றிகள்.

நிகழ்ச்சியை நடத்துவது மட்டும்தான் நாங்கள்…. இது நமக்கானதொரு பொதுக்கூடல்… இதன் வெற்றி முழுக்கமுழுக்க உங்களின் பங்கேற்பில் மட்டுமே! உங்கள் வருகை மட்டுமே இப்போதை அவசரமான அவசியம்! இது வரை பயண ஏற்பாடு செய்யாதவர்கள் கூட இப்போது நினைத்தாலும் திட்டமிட்டு ஈரோட்டிற்குப் பயணப்பட முடியும்..

உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்களின் கதகதப்பிற்கு ஏங்கி எங்கள் கைகளும் காத்திருக்கின்றன…

ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறோம், நம்பிக்கைதானே எல்லாவற்றையும் நடத்திச்செல்கிறது.
-0-

அஞ்சலி!

நாம் பார்த்திராத காந்தி, நேரு, படேல் என பல தலைவர்களை ரோல் மாடல் என்கிறோம், ஆனால் உண்மையில் நமது ரோல் மாடல் நமது தந்தை தான். நாம் உலகம் கற்று கொள்வதும் அவர்களிடம் இருந்து தான். அப்பேர்பட்ட தந்தையின் மறைவு என்பது மாபெரும் இழப்பு தான்.

மோனியின் தந்தை இறந்த செய்தியை கேள்விபட்ட போது என்னாலயே அந்த இழப்பை தாங்க முடியவில்லை, மோனிக்கு எப்படி இருந்திருக்கும். அவரது தந்தை வக்கீலாக இருக்கிறார், அதற்கு முன் ஆசிரியர் பணியில் இருந்திருக்கிறார், அவரிடம் படித்த ஒரு மாணவர் தற்பொது வக்கீலாக இருப்பவர், உடல்நிலை சரியில்லாத அவரை பார்க்க வந்த பொழுது தாங்க முடியால் வாய் விட்டு அழுதியிருக்கிறார். எப்படி அவர் வாழ்ந்திருப்பார் என்பதற்கு இது உதாரணம் மட்டுமே.

வெறும் சமாதானங்கள் இந்த இழப்பிற்கு ஈடாகாது, அண்ணாரின் மறைவுக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்!

*********************

செந்தழல் ரவியின் தங்கை கணவர் இறந்தாக கேள்வி பட்டேன்! அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்!

வேலைக்கு ஆட்கள் தேவை!

We required MALE / FEMALE experienced Tally accountant for our Chennai Branch.
Capable to handle Tally accounts independently.
Salary Rs.6500.00 PF,ESIC,Bonus,Yearly increment as applicable.
Working hours 10.30 AM to 6.30 PM.
We are stationery distributor, having H.O. in Mumbai.
Interested candidates please mail your resume immediately to

sanghvichennai108@gmail.com

Contact info.
SANGHVI CORPORATION
Door No.2F, Second Floor, 6, Umpherson Street,
(Opp.Hotel Saravana Bhavan), N.S.C.Bose Road,
Chennai - 600 108.

Mr.K.Ramachandran
Manager
Mobile - 93835 12521.





சென்னை நண்பர்கள் உங்களது தளங்களில் பகிருமாறு கேட்டு கொள்கிறேன்!, ரீடரில் பகிருதலும் தேவைப்படுபவர்களுக்கு உதவலாம்!

மனிதன், மிருகம், கலாச்சாரம்!

சென்ற பதிவின் தொடர்ச்சியாகவும், வலைப்பதிவுகளில் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் கலாச்சாரத்தை உள்நோக்கும் பார்வையாகவும் இதை வைத்து கொள்ளலாம்!

சென்ற பதிவில் மனிதனுக்குள் மிருகம் என்று தலைப்பிட்டதற்கு சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள், அது மிருகத்தை கேவலப்படுத்துவது என்று, விலங்குகளை விட மனிதன் பல மடங்கு மேல் தான் ஆனால் ஒருசில மனிதர்களால் தான் நாம் மிருககுணத்தை இன்னும் விட வில்லை என்பது தெரிகிறது!, மிருகங்களின் வாழ்க்கையை உண்ணிப்பாக கவனித்திருக்கிறீர்களா? பரிணாமம் பற்றி ஆராய பல நாள், பல விலங்குகளின் வாழ்க்கையை கவனித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், மனிதன் விலங்குகளை விட மேல் தான்!

அனைத்து உயிரினத்திடமும் இருக்கும் இயற்கை உந்துதல் தன் சந்ததியினரை உருவாக்குதல், உயிர் வாழ்வதற்கு நடக்கும் போராட்டத்திற்கு இணையாக நடக்கும் அது என்பது டிஸ்கவரி போன்ற சேனல்களை பார்ப்பவர்களுக்கு தெரியும், இன்னும் அதிகமாக கவனித்தவர்களுக்கு தெரியும் விலங்குகளின் பெரும்பாலான புணர்ச்சி வன்முறையில் தான் நடக்கும் என்பது!. விலங்களுக்கும், மனிதர்களுக்கும் உள்ளது வித்தியாசம், விலங்குகள் அடங்கிப்போய் விடும், மனிதஇனப்பெண்கள் கடைசி வரை போராடுவார்கள்!

உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்றுப்படி எல்லா குற்றங்களுக்கும் செக்ஸ் வறட்சி ஒரு காரணம் என்கிறார். கலாசாரம், பண்பாடு என பழமைப்பேசி(அவரில்லையப்பா) மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை தூண்டி விடும் பொறுப்பு சமூகத்தை சார்ந்த நம் அனைவரையும் சேரும்., குழந்தைகள் பாலியல் வன்முறையை பொறுத்தவரை பெரும்பாலும் சற்று வயது முதிர்ந்தவர்களே ஈடுபடுவார்கள், வயதானவுடன் கோவில், குளம் என சுற்றத்தொடங்கும் மனைவி, அருகில் சென்றாலே இந்த வயசில கிழவனுக்கு நினைப்பை பாரு எனும் பொழுது இமேஜ் கருதி விலகி விடுவார்கள், ஆனால் இயற்கை உந்துதல் அவர்களை விடாது, பெண்களுக்கு மோனாபாஸ் ஆனவுடன் கருமுட்டை உருவாகுவது நின்றுவிடும், ஆண்களால் சாகும் வரை இனப்பெருக்கம் செய்ய முடியும்!.



விவாதத்தில் மீதியை தொடரலாம்!
*********************

இன்று திருமணம் என்றாலே நீண்ட கால மகிழ்ச்சி தரும் என்ற விசயத்தை விட, பயங்கரமாக செலவு வைத்து நீண்ட காலம் கடனுக்காக உழைக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்றே பார்க்கப்படுகிறது, நிம்மதியில்லாத மணவாழ்க்கை, மற்ற விசயங்களிலும் கவனத்தை கெடுக்கும். இதற்காகவே மேலை நாடுகளில் லிவிங் டுகெதர் முறையை பின்பற்றுகிறார்கள்.

லிவிங் டுகெதர் என்றால் என்னவென்று சரியாக புரியாமல் அது கலாச்சார சீர்கேடு, மனிதஇன அழிவு என்ற ரேஞ்சுக்கு சிலர் பேசி கொண்டிருக்கிறார்கள்!, தம்மை தாமே நன்றாக கவனித்து கொள்ள முடிந்த சுந்திர சிந்தனையுடய பெண்களுக்கு சாதகமானதே லிவிங்டுகெதர் கலாச்சாரம்! ஆணாதிக்க சமூகம் அதை எதிர்ப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை தான்!, அந்த தம்பதிகள் மற்ற மணமான தம்பதிகளை போல் தான் வாழ்கிறார்கள், விருப்பப்பட்டால் குழந்தையும் கூட பெற்று கொள்கிறார்கள் மற்றும் அவர்கள் எதை செய்தாலும் அறிந்தே செய்கிறார்கள், அய்யய்யோ தப்பு பண்ணிட்டோமே என மற்ற தம்பதியினர் புலம்புவது போல் அவர்கள் புலம்புவதாக தெரியவில்லை!

5 வருடமாக எனக்கு ஒரு லிவிங் டு கெதர் தம்பதியினரை தெரியும்! அந்த ஆண் அதற்கு முன் மனைவியை அடிக்கும் பழக்கம் உள்ளவர், அந்த பெண்ணின் கணவரும் அதே போல் தான்!, அவர்களுடய பழைய பார்ட்னர் இறந்து சில நாட்கள் கழிந்து சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள், அவர்களுக்குள் சின்ன சண்டை வந்து கூட நான் பார்க்கவில்லை, இருவருக்கும் நன்றாக தெரிந்த ஒரே விசயம், நாம் ஒருவரை நம்பி ஒருவர் இல்லை, நீ இல்லாமலும் என்னால் வாழ முடியும், அதனால் உனது ஆதிக்கத்தை என் மேல் செலுத்த நினைக்காதே!



அதற்காகவே நான் லிவிங் டு கெதர் கலாச்சாரத்தை நான் ஆதரிக்கிறேன்!

மனிதனுக்குள் மிருகம்!

பொது சமூகப்பார்வையில் சில செயல்கள் குற்றங்களாக பார்க்கப்பட்டாலும், நான் எல்லாம் செயல்களுக்குக்கும் எதாவது ஒரு தூண்டுகாரணி இருக்கும் என நம்பி கொண்டிருந்தேன்! அப்படியும் ஆதியிலிருந்து என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயம் ”குழந்தை பாலியல் வன்முறை”, சென்னையில் நடந்த "good touch, bad touch" நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், நண்பர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை சொல்லி போக சொல்லியிருந்தேன், மதுரையில் நடந்த பொழுது கொஞ்சமேனும் அதன் பொருட்டு விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்த முடிந்ததே என்ற மகிழ்ச்சியும் இருந்தது!

ஆனால்!..........


நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள், அவையெல்லாம் போதாது என நமக்கு சொல்லி கொண்டே தான் இருக்கின்றன!, கோவை சம்பவம் பற்றி தான் பேச வருகிறேன் என்று நினைக்கலாம், இருங்கள் அதற்கு முன் இன்னொரு கொடுர சம்பவத்தை சொல்ல வேண்டியிருக்கிறது!, நண்பர் அனுப்பிய அந்த மெயிலை பார்த்த போது எனக்கு உடம்பெல்லாம் பதறிவிட்டது, மூன்று மாத குழந்தைக்கு தகப்பன் என்று மட்டும் இல்லாமல் ஒரு மனிதனாக கூட என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை, அந்த சம்பவம்!...



பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் மிகவும் அதிகரித்து விட்டது,கொடுமையிலும் கொடுமை. கோவையில் கடத்திக் கொல்லப்பட்ட இரு குழந்தைகளில் மாணவியின் உடல் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், அவளும் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததுள்ளார் என்பது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்திருக்கிறது.
உடல் நடுங்கிப் போகிற இன்னொரு விஷயம். இது நாளிதழ்களில் வராதது. எனக்குத் தெரிந்தவரின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார்கள். அவருக்கு அருகாமை பெட்டில் உள்ள அம்மா இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார். இவர் குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று கேட்க அவர் சொன்னது அதிர்ச்சியின் உச்சம்.
அவரின் பெண் குழந்தை, ஒன்றிரண்டு நாளாக வாந்தி, பேதி என்று அவதிப்பட்டிருக்கிறது. பயந்து போய் மருத்துவமனைக்கு கொண்டு வந்து, பரிசோதனைகள் செய்தபோது,குழந்தையின் உணவுக்குழாய்க்குள் ஆணின் விந்தணு இருந்திருக்கிறது. எவனோ ஒரு கிராதகன் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் வாய்க்குள்.....
******************************************
அந்தக் குழந்தைக்கு மூணு மாசம்! மூணு வயசில்ல.. மூணு மாசம்தான்!
வாய்லயே எவனோ அவன் உறுப்பை திணிச்சு....
அவனும் மனுஷ ஜென்மம், நானும் மனுஷ ஜென்மன்னு நெனைக்கவே கூசுது..


 *****************************

எனக்கு மட்டும் அவன் யாரென்று தெரிந்தால் அடித்தே கொன்னு போட்ருவேன்!, கோவை என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக சில நண்பர்கள் பதிவிட்டிருப்பதாகவும், அது தவறு என சிலர் சொல்லியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்!, மனிதநேயம் காக்க அவர்கள் பேசியிருக்கலாம், ஆனால் அது தான் உண்மையில் மனித நேயமா!?

பொருள் சார்ந்த சமூகம் ஒருவனை தவறான வழியில் பொருள் சேர்க்க உந்தியிருக்கலாம், முடிவில் மாட்டிக்கொள்வோமோ என கொலையும் செய்திருக்கலாம், ஆனால் ஏன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தான், அவன் விசாரணையின் போது ஜாமினில் வந்து மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்!

மொத்த குழந்தைகளின் நலன் கருதி அவனை கொன்றதே என்னை பொறுத்தவரை சரியான மனித நேயம்!, அம்மாதிரியான மனிதர்களால் இச்சமூகத்திற்கு ஒரு நன்மையும் இல்லை. நானாக இருந்தாலும் அதை தான் செய்திருப்பேன்!, அவர்களாவது சுட்டு கொன்றார்கள், நானாக இருந்தால் அடித்தே கொன்றிருப்பேன்!

எங்கே போச்சு போக்குவரத்துத்துறை!

ஒரு வேலையா மதுரைக்கு போனேன், எல்லாத்தையும் முடிச்சிட்டு ஸ்ரீதரை பார்த்துட்டு 10 மணிக்கா பஸ் ஏறலாம்னு ஆரப்பாளையம் பஸ் ஸ்டேண்டு போனா செமக்கூட்டம், சரி நானும் ஈரோடு பஸ் வரும்னு நின்னுகிட்டே இருந்தேன், உள்ளே வரும் போதே ஒரு பஸ் பயங்கர கூட்டமா வந்தது, சரி அடுத்த பஸ்ஸில் போகலாம்னு பார்த்தா அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பஸ்ஸைக்காணோம், திரும்பவும் ஒரு பஸ் வந்தது, இப்போ அதைவிடக்கூட்டமா.

ஒருவேளை வெளியிலேயே ஏறிடுறாங்களோ, நாமளும் அங்கே போய் நிக்கலாம்னு பார்த்தா, கூட்டம் மெயின்ரோடு வரைக்கும் நிக்குது, டீரிஸ்ட் வேன்ளையும், பஸ்ஸுலயும், கோயம்புத்தூர், சேலம்னு கத்தி கத்தி ஆள் ஏத்திகிட்டு இருந்தாங்க, தலைக்கு 300 ரூபா டிக்கெட்டு. சென்னையில் ஆம்னி பஸ்ஸில் 1500 டிக்கெட்னு சொன்னப்ப நான் நம்பல, நேத்து தான் தெரிஞ்சது தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தானென்று!



நான் இன்று கோவையில் கண்டிப்பாக இருக்கனும், மிகமுக்கியமான வேலைகள் இருக்குது. ஆனாலும் அப்படியே நேரா கோவை போக முடியாத நிலை, சில முக்கியமான டாக்குமெண்டுகள் ஈரோட்டில் தான் இருக்கு, சரின்னு சேலம் போகும் ஒரு வேனில் ஏறி நாமக்கல்லில் இறங்கிக்குறேன்னு பார்கெயின் பண்ணு 250 ரூவாக்கு பேசியாச்சு!

மொத்தம் இருந்தது 21 சீட்டு தான், கடைசியா இருக்கும் சீட்டில் இரண்டு பூசணிக்காய்களுக்கு நடுவில் நசுங்கும் தக்காளி போல் ஒரு சீட்டு கிடைத்தது. அதையும் அனுசரித்து அமர்ந்தாச்சு, நல்ல டயர்டாக இருந்ததால் வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் கண்ணசர ஆரம்பித்தேன். ஒரு பத்து நிமிசம் தூங்கியிருப்பேன், உடல் வேர்த்து முழிப்பு வந்தது, பார்த்தா வண்டி ஓரமா நிக்குது, ட்ரைவர் அருகில் இருந்த ஒரு கோவிலில் வெகு தீவிரமாக மணி ஆட்டிகொண்டு இருந்தார், சரி முடிச்சிட்டு வரட்டும்னு இருந்தேன்!

ஒருவழியாக வந்து வண்டி நகர ஆரம்பித்தது, இந்த தடவை அரைமணி நேரம் தூங்கியிருப்பேன், திரும்பவும் வேர்த்து வழிந்து எழுந்தேன். சுத்தியுலும் பார்த்து ஒரு கோவிலும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தியாச்சு, எங்கேயா போனாரு ட்ரைவருன்னு கேட்டா, ”இந்தா தூங்குறாரு பாருங்கன்னு” பானட் மேல தூங்கிட்டு இருந்த ஒருத்தரை காட்டுறாங்க, சீக்கிரம் போகனுமேன்னு காசு அதிகமா கொடுத்து வேன்ல ஏறினா அவரு தூங்கிகிட்டு இருக்காரு.

டென்ஷன் ஆகி பிரயோசனமில்லை, அவரை எழுப்பி சண்டை போடுறதால எழுந்து வண்டி ஓட்டுவார், ஆனா உசுருக்கு உத்திரவாதம் இல்லையே!, காத்தாட கீழே இறங்கி ஒரு சிகரெட்டை எடுத்து பத்த வைச்சிகிட்டேன், கொஞ்ச நேரத்தில் மொத்த வேனுக்குள்ளும் சலசலப்பு ஆரம்பித்தது, எல்லாரும் சேர்ந்து ட்ரைவரை எழுப்பிட்டாங்க, அவரும் வண்டி எடுக்க ரெடியாகிட்டாரு, முகம் கழுவச்சொன்னா, கழுவக்கூடாதுங்கக்கிறார், என்ன லாஜிக்கோ!.

எனக்கு ஒருபக்கம் தூக்கம் வந்தாலும், வண்டி ஒருதினுசா ஓடுறது மாதிரியே ஒரு ஃபீலிங், மாத்தி மாத்தி ட்ரைவர்கிட்ட பேச்சு கொடுத்துகிட்டே கரூர் வந்து சேர்ந்தோம், சரியா மணி 5 அப்போ.
இதுக்கு மேல ஆவாதுன்னு பைப்பாஸ்ல இருந்து ஒரு ஆட்டோ எடுத்து கரூர் பஸ் ஸ்டேண்டு போய் ஈரோடு பஸ் பிடிச்சு வந்தேன்!.

பயணிகள் வாகனம் தனியார் இயக்க தனி பர்மிசன் வேணும், சென்னையிலாவது ஓடும் ஆம்னி பஸ் அதிக கட்டணம் கேட்டது, அழகிரியார் நகரில் மீன்பாடி வண்டி கூட பயணிகள் வண்டியா ஓடுதே, போக்குவரத்துத்துறைன்னு ஒன்னு அங்கே இல்லையா!?, தீபாவளி சமயம் எல்லா ஊர்லயும் ஸ்பெஷல் சர்வீஸ் விடுவாங்க, மதுரை மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு. தம்மக்கள் சம்பாரிக்கட்டும்னு தலைவன் நினைக்கும் அதே பாணியை அழகிரியாரும் பின்பற்றுகிறாரோ!?

என்னவோ போங்க், வந்து சேர்றதுக்குள்ள எனக்கு தாவூ தீர்ந்துருச்சு!

தமிழ் படிக்கச் சொல்லும் ஆசிரியர்கள் கெட்டவர்களா?

இன்று விஜய் டீவி, நீயா நானாவில்(இப்போ ஓடிகிட்டு இருக்கு) தமிழ் ஆசிரியர்களால் தொல்லையா போன்ற ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது!, தமிழனை தவிர வேறு எவனும் இந்த அவமானத்திற்குள்ளாக மாட்டான்!, என்னாய்யா பாண்ணிட்டாங்க பார்த்தா, தமிழ் படிக்க சொன்னாங்களாம், தமிழில் பேசலாமே என்றார்களாம், தமிழ் நிகழ்ச்சி பார்க்க சொன்னார்களாம், என்ன குறை இதில் கண்டார்கள் என தெரியவில்லை!

எனது தமிழ் ஆசிரியர் பெயர் பன்னீர்செல்வம், இன்று வரை ஞாபகத்தில் வைத்திருக்கிறேன், ம.பொ.சி. யின் மீசை வைத்திருப்பார். யாரையும் அதிர்ந்து பேசியதில்லை. இதை விட உயர்வாக சொல்ல ஒன்றும் இருக்கிறது, நான் அவரிடம் படித்த வரை அவர் யாரையும் பரிட்சையில் தோல்வியடைய வைத்ததில்லை, அது எப்படி சாத்தியம் என கேள்வி வரலாம்!ஆம் அவரை பொருத்தவரை எல்லாரும் நல்லவர்களாகவே பிறந்தார்கள், பிரபஞ்சனுக்கு(எழுத்தாளர்-சித்தன் போக்கு) முன்னரே அனைவரையும் நல்லவர்களாகவே பார்க்கும் பார்வை கொடுத்தது எனக்கு பன்னீர்செல்லம் ஐயா தான்!

தமிழில் பேச சொல்வதால் என்ன தவறு கண்டார்கள் என தெரியவில்லை, அம்மாவை அம்மா என்று கூப்பிடச் சொல்வது தவறாய்யா! அதானே அவர்கள் சொல்வதின் அடிப்படை, உங்கள் வீடு புகுந்தா நீங்கள் எல்லாவற்றிலும் தமிழை பயன்படுத்துகிறார்களா என பார்க்கிறார்கள்!?.

இலக்கியம் என்பதற்கான அர்த்தம் தெரியுமா?, நம் முன்னோர்களின் பண்பாடு, கலாச்சாரம் அவர்களின் வாழ்க்கை முறைகளை எழுத்தாக வடித்தது தானே அது!, அவற்றை தெரிந்து கொண்டார்களா என ஒரு ஆசிரியர் ஆர்வம் காட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்!

என் வகுப்பில் பட்டதை போல் என் தமிழ் ஆசிரியர் வேறெங்கும் அனுபவப்பட்டிருக்கமாட்டார்!, நான் ஏன் திருக்குறள் படிக்கனும் என்ற ஒரே கேள்வியில் மட்டும் அவரிடம் இரண்டு வகுப்புகள் விவாதித்திருக்கிறேன்!, உச்சி முகர்ந்து வாழ்த்து சொல்லும் நிலையைப்போல் ஒரு நெகிழ்ச்சியான நிலையில் தனிமையில் என்னை பார்த்து நீ பெரியாளா வருவடா என்றார்!, நான் வர்றேனோ இல்லையோ! மற்ற வகுப்பு ஆசிரியர்கள் போல் அல்லாமல் ”போய் சொன்னதை செய்” என்று சொல்லாமல் விட்டதே எனக்கு அப்பொழுது பெரிய விசயம்!

தமிழ் பேராசியர்கள் கணிணிதுறையினர் மீது பொறாமையில் உள்ளார்கள் என்ற பேச்சு உள்ளது, நிச்சயமாக அப்படி இல்லை, கணிணிதுறையில் உள்ள உங்களுக்கு தான் தெரியும் அதிலுள்ள பொருள்கள் பற்றி, அதற்குறிய தமிழ் பெயர்கள் சூட்டுவது, துறை சார்ந்த கலைச்சொற்கள் தேடுவது என்று எல்லாவற்றிற்கும் ஏன் தமிழ் ஆசிரியர்களையே தேடுகிறீர்கள் என்ற ஆதங்கம் அவர்களுக்கு.

இயலும், இலக்கியமும் கற்று கொடுத்த தமிழ் ஆசிரியன் இன்று மாற்று மொழிப்பாடம் தவிர அனைத்தையும் தமிழிலேயே கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறான்! நாம் தானே அதை உணராமல் இருக்கிறோம்!, ஆங்கில உச்சரிப்புக்கு நாம் காட்டும் முனைப்பை தமிழ் உச்சரிப்பு காட்டியிருக்கிறோமா!?

என் உடையை அணிந்து நான் பெருமைப்படுவது எப்படி!? மாற்றான்(நண்பன் என்றே வைத்து கொள்ளலாம்) உடையை அணிந்து பெருமைக்கொள்வது எப்படி? அப்படியானால் நம் உடையை அணிவதில் நாம் சிறுமை கொள்கிறோமா? நமக்கு அதனால் தாழ்வுமனப்பான்மை ஏற்படுகிறது என்றால் தவறு யார் மேல்!

இங்கே தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை தமிழ்நாட்டில் இருக்குமானால் தமிழநாட்டில், தமிழுக்கு, தமிழர்களுக்கு என்ன மரியாதை!. உலகம் கற்றுக்கொடுத்த பெற்றோர்கள் மேல் இருக்க வேண்டிய மரியாதை. பண்பாடும், கலாச்சாரமும் கற்றுக்கொடுத்த தமிழ் மேலும் இருக்க வேண்டியது தானே முறை!

டிஸ்கி:கலாச்சாரம் மீதான விமர்சனத்தை அடுத்தொரு பதிவில் வைத்து கொள்ளலாம்!

தம்பிடா!............

எனக்கு ரெண்டு தம்பி, ரெண்டாவது தம்பி வயசு, பிலாலுக்கு. பிலாலும் என் தம்பியும் ஸ்கூலில் ஒரே செட்டு, எனக்கு பழக்கமாகி இருபது வருசம் இருக்கும்னு நினைக்கிறேன், அதே தான், நீங்க நினைக்கிற மாதிரியே அப்ப எனக்கு அஞ்சு வயசு தான்! :-)

பிலால் வீட்டுக்கு ஒரே பையன், அவுங்கப்பா ஏரியா கமலஹாசன், அவரை தெரியாதவர்கள் அங்கே யாருமில்லை, பிலாலுக்கு முதல் அடையாளம் அவுங்கப்பான்னு கூட சொல்லலாம், ஆனா பாருங்க, ஒரு கேஸில் விசாரிக்க கூட்டிகிட்டு போகும் போது, ஏண்டா பையனை பெத்தோம்னு வருத்துப்படுறேன்னு சொல்லிட்டார், நாங்க விடுவோமா! சிகரெட், பிரட்டுன்னு ஸ்டேஷனையே அமர்களப்படுத்திட்டோம்ல!

நான் சின்ன வயசுலயே வேலைக்கு போயிட்டேன்னு உங்களுக்கு தெரியும், இதில ஒற்றுமை என்னான்னா நான் ஒன்பதாவது முழுசாய் முடிச்சேன், பிலால் அதைக்கூட முடிக்கல! ஆனா நாங்க ரெண்டு பேரும் பேசுறதை பார்த்தா இவனுங்க ஃபாரின் ரிட்டனா இருப்பானுங்களோன்னு உங்களுக்கு சந்தேகம் வரும்! நிஜமா தாங்க நாங்க ரெண்டு பேருமே சரளமா ஆங்கிலம் பேசுவோம், ஆனா அது எங்க ரெண்டு பேருக்கு மட்டுமே புரியும்!, உங்களுக்கு அது வேற எதோ மொழியா கூட தெரியலாம், அது உங்க கஷ்டம்!

பொதுவா வீட்டில் என்ன நினைப்பாங்கன்னு பசங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை, பசங்க கெட்டு போறது அவுனுங்க ஃப்ரெண்ட்ஸால தான், அதில் நானோ பிலாலோ விதிவிலக்கல்ல, ஏன்னா நைட்டு மூணு மணிக்கு பிலாலை எழுப்பி சரக்கடிக்க கூட்டிகிட்டு போகும் மிக முக்கியமான ஒரே ஃப்ரெண்டு நான் தான், அன்னைக்கு மட்டுமல்ல, இதுவரைக்குமே நான் கூப்பிட்டு பிலால் வரமாட்டேன்னோ, நான் சொல்லி பிலால் மறுத்தோ நான் பார்த்ததில்ல, ரெண்டு தம்பியோட பிலால் எனக்கு ஒரு தம்பியா பிறந்திருக்கலாம்!, முரண்பாடா வாழ்கையை அனுவிக்கும் வாய்ப்பளிக்கும் வலையில் பிலால் வேற குடும்பத்தில் பிறந்துட்டான் போல!

பிலாலுக்கு சின்ன வயசிலிருந்தே ராயலா வாழத்தான் பிடிக்கும், ஒரே பையன்னு வீட்டில் செல்லம் கொடுத்ததா இருக்கலாம், நல்லா ட்ரெஸ் பண்ணுவான், நான் பிச்சைக்காரன் மாதிரி அவன் வீட்டுக்கு போகும் போதெல்லாம் அவனது சட்டை, பேண்ட் என்னை அலங்கரிக்கும், என்னை போலவே அவனுக்கும் நண்பர்கள் அதிகம், நாங்கள் எப்படி இருந்தாலும் நண்பனை நண்பனாகவே பார்ப்பதில் பிலால் மேல் எனக்கு பிரியம் ஏற்ப்பட பெரிய ஆச்சர்ய காரணம் ஒன்றுமில்லை, அப்துல்லா அண்ணன் சொல்லுவார், என் நம்பிக்கை என் நாலு சுவற்றிக்குள் தான்ணே, அதன் பொருட்டு நான் வெளியே விவாதித்ததில்லைன்னு!, நம்புங்க! பிலால் என்னுடம் மத ரீதியான விவாதத்திற்கு வந்ததேயில்லை, நான் எதாவது சொன்னால் அவனது பதில் ஒரு அழகிய புன்னகையாக தான் இருக்கும்!.

மத்திம வயதில் நாங்கள் கேங்ஸ்டாரா(வெட்டி ஆபிஸர்ன்னு அர்த்தம்) இருக்கும் போதும் பிலால் என் கூடவே இருந்தான், எந்த பிரச்சனைக்கும் முதலில் பேச்சுக்கு நான் தான் போவேன், அதில் உடன்பாடில்லா விட்டால் தான் வீச்சுக்கு வேலை, ஆச்சர்யமாக பிலாலும் பேச்சில் பிரச்சனையை முடிக்கும் என் போலவே இருந்தான், என்னை விட அவனுக்கு நல்ல அரசியல் செல்வாக்கு உண்டு என்பதில் பெருமை தான் எனக்கு! நாம நாசமாய் போனாலும் கூட இருக்கிறவன் நல்லா இருக்கட்டுமே என்ற நினைப்பு தான், ஆனாலும் நட்பு ரீதியில் பிரச்சனை வரும் பொழுது அத்தனை செல்வாக்குகளையும் தூக்கி போட்டு எனக்கு அருண் அண்ணன் தான் வேண்டுமென்று சொல்லும் பொழுது பிலால் நீ என் தம்பிடா என சொல்லத் தோன்றும்! வாய் திறந்து சொல்லாவிட்டாலும் அது அவனுக்கே தெரியும்!

வலையுலகில் மட்டுமல்ல, அதை தாண்டியும் எனது நண்பர்கள் அனைவருக்கும் பிலாலை தெரியும் எனும் பொழ்தே தெரிந்து கொள்ளலாம், பிலால் எந்த அளவு என் வாழ்க்கையில் கூடவே பயணிக்கிறான் என்று!, என் அன்பு தம்பிக்கு பிலாலுக்கு அக்டோபர் 30 பிறந்தநாள், அவனது பிறந்தாளுடன் அவனுடம் கழித்த எனது பழைய நினைவுகளை தோண்டி எடுக்கும் பொழுது கொஞ்சம் சிலிர்க்க தான் செய்கிறது. உங்களது வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

அவனுக்கு எத்தனை வயசுக்கு கேட்டிங்கன்னா, என்னை மாதிரியே அவனுக்கும் கோவம் வரும், அதனால நானே சொல்லிடுறேன், அவனுக்கு 19 வயது!

நான் ஏன் நாத்திகனானேன்! - மறுஆய்வு

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை முட்டாள்கள் என்றோ, வாழ தகுதியற்றவர்கள் என்றோ நான் எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை, நான் ஏற்கனவே பொதுபுத்தி பதிவில் சொன்னது போல் “உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது” என சொல்ல எனக்கு எப்படி உரிமை இல்லையோ, அதே போல் கடவுள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என சொல்லவும் உரிமை இல்லை!

ஒரு செயலின் விளைவை பொறுத்தே அது சமூகத்திற்கு நன்மை அளிப்பதா அல்லது தீமை அளிப்பதா என தீர்மானிக்கப்படுகிறது, அந்தளவில் கடவுளை மறுப்பதோ அல்லது ஏற்றுக்கொள்ளுதலோ குற்றம் அல்ல, பொருள் சார்ந்த சமூகத்திலிருந்து அறிவு சார்ந்த சமூகத்திற்கு மாறிய நாகரீக காலம் முதல் நம்பிக்கை, அதன் செயல் மற்றும் விளைவு அனைத்தும் விவாதத்துக்குள்ளாக்கப்படுகிறது, அவையனைத்தும் எண்களின் முடிவைப்போல முடிவிலியாக தான் இழுத்து கொண்டிருக்கிறது என்பது உண்மை!

சிறிய உதாரணத்துடம் சொல்ல முயல்கிறேன் -

ஒரு அறை, முழுவதும் இருள் சூழ்ந்து இருக்கிறது, நம்பிக்கையாளன் அதன் உள்ளே உயரிய எதோ ஒன்று இருக்கிறது என்கிறான், அதனை கடவுளாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம், மறுப்பாளான்(இல்லை என்ற நம்பிக்கை, நம்பிக்கையே இல்லை என்று பொருள் தராது, ஆகையால் அவநம்பிக்கையாளன் என்ற சொல்லாடலை தவிர்க்கிறேன்), அவை வெறும் இருள் மட்டுமே அல்லது நீ நினைப்பது போல் அது ஒன்றும் உயரிய பொருள் அல்ல அதை தெளிவுறாமல் குருட்டு(இருட்டு) நம்பிக்கை கொள்ளாதே என்கிறான்! இவையே கடவுள் நம்பிக்கையாளனுக்கும், கடவுள் மறுப்பாளனுக்கும் உள்ள ஆரம்ப விவாதப்புள்ளி.

நம்பிக்கையாளர்களின் மிக சொற்பமே அதை ஆராய்ந்து தெளிவுற விரும்புகிறார்கள், அவ்வாறு ஆராய்ந்தவர்களும் கடவுளும் இல்லை, கண்றாவியும் இல்லை என புதியதோர் ஆன்மீகபாதையை காட்டி சென்று விடுகிறார்கள், பின்னால் வருபவர்கள் அதை வைத்து கல்லா கட்டுவது வேறு விசயம்! கடவுள் இல்லை என்று நம்பிக்கையாளனே தெளிவுற்றாலும் அவனால் தீர்க்கமாக வெளியே சொல்ல முடிவதில்லை, சமூகம் என்னும் விளக்கமாறு அதன் பயன்பாட்டை பூர்த்தியடைய செய்ய மேல் முனையில் குஞ்சத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். குழுமமாக செயல்படுத்தல், தனிமனித ஒழுக்கம், பிறப்பின் பயனை மெய்பித்துவிட்டு செல்லுதல் போன்ற சமூக காரணிகளை கட்டுக்குள் வைத்திருக்க கடவுள்/மதம் என்ற குஞ்சம் தேவைப்படுகிறது அல்லது பட்டது!

ஆனால் இங்கே நடப்பது என்ன? விள்க்கமாறு முழுவதும் குஞ்சம் கட்டப்பட்டிருக்கிறது, கடவுளின்/மதத்தை தேவை மறந்து என் கடவுள் பெருசு, என் மதம் சிறந்தது என்ற ஈகோ ஆரம்பித்து விட்டது, எல்லா முனைகளிம் குஞ்சம் கட்டபட்ட விளக்கமாறு இன்று தடித்த ஆயுதமாக காட்சியளிக்கிறது, என் மதம் அமைதியே உருவானது, அது அன்பை மட்டுமே போதிக்கிறது என்பவனை, இவன் அந்த மதத்தின் சிறப்பான பகுதிகளை மட்டும் பார்த்து பேசுகிறான் என நேர்மறையாக சிந்தித்தாலும் அவன் சொன்ன மதத்தின் செயல்பாடுகள் ஒருவேளை முதுகுபுறம் ஆயுதம் வைத்திருப்பானோ என எதிர்மறையாக சிந்திக்க் வைக்கிறது.



மதம், சடங்குகள் அதன் பயன்கள் இப்படியான இத்யாதிகளை ஒதுக்கி வைத்து ஏன் கடவுள், எப்படி கடவுள் என சிந்திக்க தொடங்கினாலே போதுமானது, நான் ஏற்கனவே சொன்னது போல் இருட்டறைக்குள் ஆராய்ந்து தெளிவுற நம்பிக்கையாளர்களுக்கு தைரியமோ அல்லது ஆர்வமோ இல்லை. முதலில் தோல்வி பயம் இரண்டாவது இத்தனை பேர் சொல்றாங்க, அது எப்படி இல்லாம இருக்கும் என்ற பொதுபுத்தி!


கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இருட்டறைக்குள் எதோ உள்ளது என்ற நம்பிக்கையை, அதன் மறுப்பாளன் விஞ்ஞானம், தத்துவ ஆராய்ச்சி, உளவியல் பகுப்பு என பல வழிகளில் வெளிச்சத்தை உருவாக்கி அறையில் இருளை போக்கி கொண்டிருக்கிறான், இதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே முடியும் என சொல்லப்பட்ட பல செயல்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு விட்டது, கடந்த 500 வருடங்கள் அறிவு சார்ந்த சமூகம் அதன் வீச்சை முழுவதுமாக செயல்படுத்த தொடங்கிவிட்டது, ஆனாலும் பிற்போக்கு பழமைவாதிகளால் உண்மையை ஏற்று கொள்ள முடியவில்லை.

இந்த விவாதம் சண்டைக்காக அல்ல, நீங்கள் எனது எதிரியோ விரோதியோ அல்ல. கடவுளை நீங்களும் பார்த்ததில்லை, நானும் பார்த்ததில்லை. ஆனால் உங்களை விட ஆர்வமாக இருட்டறைக்குள் வெளிச்சம் கொடுக்கும் வேலையை கடவுள் மறுப்பாளனே செய்து கொண்டிருக்கிறான் என்பதை நீங்களே அறிவீர்கள், நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான், வாருங்கள் இருவரும் தேடுவோம், விவாததின் தெளிவில் அறிவு சுடர் ஏற்றி இருளை போக்குவோம்!
அங்கே நீங்கள் சொன்னது போல் உயரிய பொருள் இருந்தால் அப்போதிலிருந்து நானும் கடவுள் நம்பிக்கையாளன், அது வரை நான் கடவுள் மறுப்பாளனாகவே இருக்க விரும்புகிறேன்!

இருட்டுக்கு டார்ச் அடிக்கும் முயற்சியில்!..........................

பயப்படுதல் அல்லது பயங்காட்டுதல்!....

முஸ்கி: என் வாழ்வில் நடந்த இந்த அனுபவத்தை பகிரலாமா வேண்டாமா என பல நாட்கள் யோசித்திருக்கிறேன், இது போல் மற்றொரு முறை நடக்க வாய்ப்பேயில்லை அதே போல் மற்றவர்களுக்கு நடக்குமா என்பதும் சந்தேகமே!. படிச்சிட்டு வெளியே யார்கிட்டயும் சொல்லிறாதிங்க ப்ளீஸ்!

******



எங்களது அலுவலகத்திற்கு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள், தமிழ்நாடு தவிர்த்து உள்ளவர்கள், வங்கி மூலமாக கணக்கு தொடர்பும், தமிழ்நாட்டில் உள்ளவர்களை நேரில் பார்த்தும் பேசிக்கொள்வேம்! ஒரு வெள்ளி இரவு மதுரையில் நடக்க இருக்கும் வாடிக்கையாளர் சந்திப்பிற்கு செல்ல ஆயத்தமாகி, நிலையம் சென்று பேருந்தில் அமர்ந்தேன், மணி ஒன்றுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன், எனக்கு கடிகாரம் கட்டும் பழக்கம் இல்லாததாலும், அந்த நேரம் அலைபேசியை எடுத்து மணி பார்க்க சலிப்பாக இருந்ததாலும் சரியாக தெரியவில்லை, ஆச்சர்யமாக அன்று கூட்டமே இல்லை. என்னையும் சேர்ந்து மொத்தமே பேருந்தில் 8 பேர் தான் அமர்ந்திருந்தோம், நான் முன்வாசலுக்கு சற்றே பின்னே மூன்று பேர் அமரும் சீட்டில் சன்னல் ஓர இடத்தில் அமர்ந்திருந்தேன்!, இரவு பயணம் என்பதால் தூங்குவதற்கு வசதியாக, இருபது நிமிட காத்திருப்புக்கு பின் ஓட்டுனர் வண்டியை எடுக்க, நடத்துனர் தோள்பையை குலுக்க எனது மதுரை பயணம் இனிதே ஆரம்பித்தது!

அன்னைக்குன்னு பார்த்து எனக்கு பயங்கர அசதியா இருந்தது, சன்னலில் தலை சாய்ந்து லேசாக கண்ணயர்ந்தேன், பேருந்து என்னை குலுக்கி குலுக்கி தாலாட்டுப் பாடி கொண்டிருந்தது, தீடிரென்று தாலாட்டு நின்று விட்ட உணர்வு, வழியில் எங்கேயோ நிற்கிறோம், ஆனால் கிளம்பி வெகுநேரமும் ஆகவில்லை.. வாசல் பக்கம் அப்படியே நோட்டம் விட்டேன், இருபது வயது மதிக்கதக்க சுடிதார் அணிந்த ஒரு பெண் ஏறினாள், மங்கலான ஒளியில் அது வெளீர்நிற சுடிதார் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது, துப்பட்டாவை தலையோடு மூடியிருந்தாள், ஏறியவள் சுற்றும் முற்றும் பார்த்து நேராக என்னை நோக்கி வந்தாள், என்னை கடந்து செல்லப்போகும் அவளை தொடர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என சின்ன மனப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது, அதற்கு வேலையே இல்லாமல் அவள் நான் இருந்த இருக்கைக்கு முன் வந்து நின்றாள்.

இங்க உட்கார்ந்துக்கலாமா!...

உண்மையில் அவள் என்னுடம் தான் பேசிகிறாளா என சந்தேகம் எனக்கு, சுற்றும் முற்றும் பார்த்த போது தான் கவனித்தேன், மீதி இருந்தவர்கள் சீட்டில் கால் நீட்டி படுத்திருந்தார்கள், ஒரு தலையும் தெரியவில்லை, ஒருவேளை தனிமை விரும்பாமல் கேட்கிறாளோ இல்லை கதைகளில் வருமே மோகினிப்பேய், கன்னி!?ஆண்களை ஆசை காட்டி மயக்கி கொண்டு போய் என்னன்னமோ செய்யுமாம். குமார்மாமா, அது உண்மை எனவும் ஒருமுறை சைக்கிளில் ஒரு பெண்ணுக்கு லிஃப்ட் கொடுத்து மயிரிழையில் உயிர்தப்பியதாகவும் சொல்வார்!. சைக்கிள், மோகினி,லிஃப்ட் தவிர அவர் சொல்லும் பொழுது திரைக்கதை அடிக்கடி மாறும், பயத்தில் உளருகிராரோ என நினைத்து கொள்வேன்!

அவள் இன்னும் என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாள்.

ம்ம்!.... உட்காருங்க... என்றேன்.

அவளிடம் எந்த உபகரணமும் இல்லை, பெண்கள் சின்ன தோள்பை வைத்து கொள்வார்களே அது கூட இல்லை, ஒருவேளை முன்போகும் பஸ்ஸில் அதை தொலைத்திருப்பாளோ என யோசித்து கொண்டிருந்தேன்.

நீங்க மதுரைக்கா போறிங்க..... என்றாள்.

ஆமாங்க,.. நீங்க? உரையாடல் நாகரிகத்திற்காக கேட்டு வைத்தேன்.

அங்க போயிட்டு அப்புறம் ஊருக்கு போகனும்... என்றாள்.

ஓஓஓ.. என அமைதியானேன். நானே பேச்சை தொடர சங்கட்டமாய் இருந்தது. ப்ளீஸ் நம்புங்க எனக்கு அவ்வளவா பொண்ணுங்க கிட்ட பேசி பழக்கமில்ல, உங்களுக்கே தெரியும் எனக்கு ரெண்டு தம்பிங்க மட்டும் தான். படிச்சது கூட பசங்க மட்டும் படிக்கிற பள்ளின்னு! தீடிர்னு ஒரு பொண்ணு பக்கத்துல உட்கார்ந்து பேசினால் நான் எப்படி பேசுறது, விசாரனை கைதி மாதிரி தொண்டை வறண்டு கொண்டிருந்தது, ஒரு உண்மைய சொல்லட்டுமா, அவ இன்னும் பேசமாட்டாளான்னு எனக்குள் ஒரு ஆர்வம் இருந்தது!

என்பக்கமாய் திரும்பி, என் கண்ணை பார்த்து கேட்டாள்!

ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா!?

தொடரும்!.........................................

கல்யாண ஆல்பம்!

ராஜனின் திருமணதிற்கு முதல் நாள் இரவு வரவேற்பு நடந்தது, பதிவர்கள் அனைவரும் அதுக்கு தான் வந்திருந்தார்கள், திருமணத்தின் போது யாரும் கலந்து கொள்ளவில்லை ஏன் நானே லேட்டாதான் போனேன், நண்பர்களில் கும்மி மட்டுமே இருந்தார், இருப்பினும் நேர்மையாக நடந்ததை ஒப்பு கொண்டோம்(டோண்டுவின் பின்னூட்டத்தில் காண்க), எதனால் நடந்தது என விளக்கமும் கொடுத்தோம். பொய் சொல்லி, மறைத்து எங்களை கொள்கைவாதியாக காட்டிகொள்ள வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை, அந்த அளவு அடிப்படை நேர்மையற்ற மூடர்களும் நாங்கள் இல்லை!

”நாங்கள் கொள்கைக்காக உயிரைக்கூட விடுவோம்” என உதார் விடும் அளவுக்கு எங்கள் மூளை மழுங்கிவிட வில்லை(உளவியல் ரீதியாக அப்படி தான் சொல்றாங்க) , ஒரே மகளின் திருமணத்தை தன் ஆசைப்படி நடந்த ஆசைப்பட்ட ஒரு மாற்றுதிறனாளி(இதை சொல்ல வேண்டாம் என அவர்கள் கேட்டு கொண்டார்கள்- ஸாரி பங்கு) தந்தையின் சந்தோசத்திற்காக தன் விருப்பத்திற்கு மாறாக, கொள்கைக்கு மாறாக அந்த செயலை செய்ய ஒப்பு கொண்டார்!, இதை அவர் ரேவதிக்காக செய்திருந்தால் கூட நாங்களே முரண்பட்டிருப்போம், அட்லீஸ்ட் பார்பனிய மந்திரத்துக்கு!

நண்பர்களிடமேக்கூட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மனிதத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை, தனிபட்ட முறையில் அனைத்து நண்பர்களிடமும் ஒரே மாதிரி தான் நடந்து வருகிறோம்!

சூழ்நிலையை புரிந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி!


உண்மைத்தமிழன்,மணமக்கள், லக்கிலுக்,சிரிப்புபோலிஸ் ரமேஷ்,அப்துல்லா, ஜீவன், மங்குணிஅமைச்சர்.
(இந்த போட்டோ எடுத்தது நானு, எல்லாரும் பிரேமுக்குள் சிக்காததால் ரெண்டா எடுத்தேன்)


பலாபட்டறை சங்கர், என் தம்பி பிலால்(ப்ளாக்கர் அல்ல), ஜாக்கிசேகர், உண்மைத்தமிழன், மணமக்கள், லக்குலுக்.


நான், டாக்டர் ருத்ரன், மணமக்கள், டோண்டு



நான், டாக்டர் ருத்ரன், மணமக்கள், டோண்டு




மணமக்கள், கேபிள் சங்கர், பக்கத்துல இருக்குறவர் பெயர் தெரியல, அவர் ப்ளாக்கரா? (கே.ஆர்.பி.செந்தில்-நான் இன்னும் நேரில் பார்த்ததில்லை)



மாப்பிள்ளையை கடைசியா சிரிக்க வச்சு ஒரு போட்டோ :-)

உலகின் அழகிய மணமகன்!

ராஜன் திருமணம் குறித்து டோண்டு பதிவில் புகைப்படத்துடன் எழுதியிருந்தார், எதிர்பார்த்தது போலவே எங்களது கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திராணியற்று எங்கேயாவது வாய்ப்பு கிடைக்குமா என தேடியலைந்த மதவாதிகளுக்கு உச்சியில் ஏறி கொண்டது, புதிதாக திருமணமானரை தொந்தரவு செய்ய வேண்டாமே என நானும் கும்மியும் காத்து கொண்டிருந்தோம்! இந்த இடைவெளிக்குள் அவர்களை போலவே பதில் சொல்ல முடியாமல் அசிங்க கமெண்டுகளும், போன் மிரட்டல்களும் விடும் கோழைகள் என்று நினைத்து விட்டார்கள் போல, ஸ்டேட்டஸ் வச்சு பதிவு எழுத கும்பலே ரெடியாகிகிட்டு இருக்கு!

முக்கியமாக மனைவிமார்களை பர்தாவுக்குள் அடைத்து வைக்கும் ஆணாதிக்க சமூகம் ராஜனை கேள்வி கேட்க துடித்து கொண்டிருக்கிறார்கள், காரணம் உங்களுக்கே தெரியும் நமது கேள்விகளால் மூக்குடைபட்டவர்களில் அவர்கள் தான் அதிகம், அவர்களை போலவே ராஜனையும் ஆணாதிக்கவாதி என நினைத்து விட்டார்கள் போல, ”தேவையென்றால் மனைவியை அடி” என்று வேதத்தில் சொன்ன மதத்தில் பிறந்த கும்மி கூட ஒப்பு கொள்ள மாட்டார் ராஜனுக்கு ஆணாதிக்கம் இருக்கு என்றால்!

ராஜன் கடவுள் மறுப்பாளனாக இருந்தால் அவரது காதலியும் கடவுள் மறுப்பாளராக தான் இருக்க வேண்டும் என சட்டம் இருக்குதா அய்யா, இல்லை ”நான் கவுண்டன் அதுனால கவுண்டச்சியை தான் கட்டுவேன்” நான் கம்யூனிஸ்டு அதனால் ஒரு கம்யூனிஸ்டை தான் கட்டுவேன்” என உதார் விட ராஜன் என்ன இயந்திரமா, யாரை திருமணம் செய்ய வேண்டும் அப்பெண்ணுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என உத்தரவிட நீங்கள் யார்!?

இப்பிரச்சனை குறித்து நாங்கள் பத்திரிக்கை வந்த போதே பேசிவிட்டோம்.

உங்களது கொள்கையையும், காதலையும் விட தாயில்லாமல் இருபது வருடங்களுக்கு மேல் ஒரே பெண்ணை வளர்த்த தந்தைக்கு மகளின் வாழ்கையின் மேல் ஆயிரம் கனவுகள் இருக்கும், மேலும் விவாதங்களின் மூலம் புரியவைக்க நமக்கு நேர அவகாசமும் கிடையாது, நிச்சயம் மதவாதிகளுக்கு இது அவுல் தான், இருக்கட்டும் நண்பா, உன்னை நாங்களறிவோம், ஒரு வயதான தந்தைக்காக சில நிமிடங்கள் கொள்கையை விட்டுக்கொடுப்பதால் யார் உயிரும் போய்விடாது என அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்ததே நானும் கும்மியும் தான், வந்து கேளுங்க நாங்க பதில் சொல்றோம் உங்கள் கேள்விகளுக்கு, உங்களை போல் நூறு பேரை வரிசையாக நிற்க வைத்து விவாதிக்க எங்களிடம் திறமையும் இருக்கு, தூக்கி வாயில் போட்டு ஏப்பமிட தெம்பும் இருக்கு, நாங்கள் ஒன்றும் ஒழிந்து இந்த கல்யாணத்தை நடத்தவில்லை, ஊரறிய ப்ளாக்கில் எழுதி வருவபர்கள் யாரையும் மனங்கோணாதபடி நடந்து தான் அனுப்பினோம்!

இறைமறுப்பு என்பது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முதல்வாதம், பார்பணியம் தீண்டாமைகெதிரான வாதம், அதை வெகு தீவிரமாக செய்து வரும் நாங்கள் எங்கேயும் தனிப்பட்ட முறையில் தனிநபரை தாக்கியோ அல்லது விரோதம் பாராட்டியோ நடந்து கொண்டதில்லை, பதில் சொல்ல முடியாமல் அனானியாக வந்து சீண்டிய மொள்ளமாறிகளுக்கு தான் ராஜனும் காட்டமாக பதிலளித்திருக்கிறார், எந்த விவாதத்த்திற்கும் முன்முடிவுகளோடு மனிதர்களை அணுகும் பழக்கம் எங்களுக்கில்லை!

நாங்கள் எந்த கட்சியையோ, எந்த இயக்கத்தையோ, எந்த சங்கத்தையோ சாராதவர்கள் அதே போல் நாங்கள் இதுவரை கூட்டம் சேர்த்ததும் கிடையாது, எங்களது நண்பர்களுக்குள்ளும் பலதரபட்ட விவாதங்களை முன்வைத்து அனைவரும் தத்தம் தனித்தன்மையுடன் இருக்கவே முன்மொழிகிறோம், எவனுக்கும் கூழைகும்பிடு போடுவதோ, யார் தோளிலும் ஏறி அமர வேண்டிய அவசியமோ எங்களுக்கில்லை/தேவையுமில்லை.

ராஜனை பற்றி எங்களுக்கு தெரியும், எங்களை விட நன்கறிந்த ரேவதிக்கு தெரியும், முரண்பாடில்லாத மற்றொரு சகமனிதனை உலகில் பார்க்க முடியாது, என் தாய், தந்தை ஆத்திகர்களாக இருப்பதால் நான் அவர்களை கவனிக்க மாட்டேன் என்றோ, உங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை என சொல்லும் அளவுக்கு கொள்கை வெறிபிடித்த மிருகமோ நாங்கள் அல்ல!, நாங்கள் முன்வைப்பது மதத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் இருக்கும் மனித விரோதங்களை, அவை என்றென்றும் தொடரும்!

உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நான் இருக்கிறேன்.

பங்காளி இன் ஹேப்பி மூட், சிங்கத்தை சீண்டாதிங்க.


*************
இது ராஜன் திருமணம் குறித்து கேள்விகள் கேட்டவர்களுக்கு விளக்கப் பதிவு மட்டுமே, எனது பயண கட்டுரையும், புகைப்படங்களும் தனியாக வரும்!

பங்காளி ராஜனுக்குக் கண்ணாலமுங்கோ!

இதனால் சகல நண்பர்களுக்கும் சொல்ல வருவது என்னவென்றால்!...

கதாநாயகன்: ப்ரொபைல் போட்டோ மஞ்சள் நிறத்தில் இருப்பதால், மஞ்சள் மூஞ்சி ராஜன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் எங்கள் தளத்தின் பங்காளி ராஜன்
.

கதாநாயகி: கனவுகளை கவிதைகளாக்கி, கனவுகளின் முகவரியில் கவிதை வழங்கும் ரேவதி

முன்கதைச் சுருக்கம்: ஜில்லுன்னு ஒரு காதல் அப்படின்னு சொல்லிக்கிட்டு இந்த ஜாக்கும் ஜில்லும் அடிச்ச கூத்து இருக்குதே, இங்க போயி பாத்துத் தெரிஞ்சிக்கிங்க
.

அடுத்தது?: டும் டும் டும் தான்.   

எங்கே?: காமாட்சி மீனாட்சி மஹால், சுவாமி நாயக்கன் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை. விக்கிமேப்பியாவுல மண்டபத்தை அழகாக் குறிச்சி
 வச்சிருக்காங்க. எப்படி வர்றதுன்னு தெரியணும்னா எக்மோரிலேர்ந்து வர்ற வழியும், சிம்ப்ஸனிலிருந்து வர்ற வழியும் கூகிளாண்டவர் சொல்லுறாரு.
எப்போ?: வர்ற வியாழன் (21/10/2010) காலை 7:30 மணிக்கு 

வரவேற்பு கிடையாதா?: ஏன் இல்லாம? வர்ற புதன் (20/10/2010) மாலை 7 மணிக்கு!

E-invite-1.JPG

இதனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், நம் பதிவுலக நண்பர்கள் ராஜனும், ரேவதியும் மணவாழ்வில் இணையும் விழாவிலும், வரவேற்பிலும், பதிவுலக நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

வால்பையன்: அவ்வளவுதானா?

கும்மி: வேற என்ன?

வால்பையன்: வாழ்த்து சொல்லலே.

கும்மி: சொல்லிட்டாப் போச்சு. 
கலைஞரும் பாராட்டு விழாக்களும் போல, 
ஜெயலலிதாவும் மிரட்டல் கடிதங்களும் போல,
கேப்டனும் புள்ளி விபரங்களும் போல
மணமக்கள் இணைந்து வாழ 
வாழ்த்துகிறோம்!

வால்பையன்: பதிவுலகும் நட்பும் போல,
கூகிளும் புதுமையும் போல, 
அறிவியலும் ஆராய்ச்சியும் போல 
மணமக்கள் சிறந்து வாழ
வாழ்த்துகிறோம்! 

நட்புடன் அழைப்பது,
வால்பையன் & கும்மி 

----
புதன் மதியத்திலிருந்தே நாங்கள் திருமண மண்டபத்தில்தான் இருப்போம். மாலையில், வரவேற்புக்கு முன்னர்,  ஒரு பதிவர் சந்திப்பை வைத்துக்கொள்வோமா?

----
தொடர்புக்கு: வால்பையன் - 99945 00540

எந்திரன்!...................

ரசிகன் = தொண்டன் = பக்தன்

நான் ஒன்றும் உலகைத்திருத்த வந்த ஞானப்பிறவி அல்ல, எனது விவாதங்களை எனது கருத்துகளுடனான சுயபரிசோதனையாகத் தான் எடுத்து கொள்கிறேன், ஆரம்பத்தில் இருந்தே பொதுபுத்திகெதிரான எனது விவாதங்கள் அனைத்தும் அப்படியே, ஆயினும் அயர்ச்சி தரும் விசயம் என்னவென்றால் நாம் ரஜினிக்கு எதிராக பேசினால் கமல் ரசிகன் என்று முத்திரை குத்தப்படுவோம், தி.மு.க விற்கு எதிராக பேசினால் அ.தி.மு.க காரன் என முத்திரை குத்தப்படுவோம், இஸ்லாத்துக்கு எதிராக பேசினால் ஆர்.எஸ்.எஸ் என முத்திரை குத்தப்படுவோம்!, விவாதத்தின் மையத்தை தொட்டு விவாதிப்பவர்கள் மிக குறைவாக இருப்பது ஆரோக்கியமான சூழல் இல்லை, விவாதிப்பவர்கள் சற்றே அதை கவனத்தில் கொள்க!

நான் தியேட்டருக்கு செல்வது அரிது என்பது சினிமா மீதான வெறுப்பினால் அல்ல, அந்த பொழுதுபோக்கு சாதனத்தில் பொழுதை போக்க எனக்கு போதுமான பொழுது இல்லாததே காரணம். செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு வரை எனக்கு தெரியாது, நாளை நான் எந்திரன் படத்துக்கு போவேன் என்று. 10 மணி காட்சிக்கு ஒன்பது மணிக்கு சொல்கிறான் பிலால் ”டிக்கெட் இருக்கு வாங்க”ன்னு, வரலைன்னு சொல்லி பார்த்தேன், அப்படின்னா டிக்கெட்டை கிழித்து போடுவதை தவிர வேறு வழியில்லை என்கிறான், சரி போய் தான் பார்ப்போமே என்று கிளம்பி தியேட்டருக்குள் உள்ளே சென்று அமரும் போது வசீகரன், சிட்டியை அறிமுகப்படுத்தும் காட்சி ஓடி கொண்டிருக்கிறது.



முன் சென்ற காட்சிகளை இழந்தது குறித்து எனக்கு எந்த வருத்தமுமில்லை, தமிழ் சினிமாவை கடைசியில் பார்த்தாலும் புரியும் என்ன நடந்திருக்குமென்று, ஒருமுறை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன், நான் சினிமா பார்க்கும் நேரம் இரவு ஒரு மணிக்கு மேல் தான், எந்த தொந்தரவும் இல்லாமல் முழு ஈடுபாட்டுடன் எதையும் செய்ய எனக்கு பிடிக்கும். ஆனால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில் சினிமா பார்ப்பது விருப்பமில்லாத இடத்தில் வழுக்கட்டாயமாக அமர்ந்திருப்பது போல் உணர்வை தந்தது, அருகில் இருந்த குடிமகன் காலையிலே சுதி ஏற்றி கொண்டு வந்து என் காதை பஞ்சராக்கினார், கவனிக்க இவையெல்லாம் சாதாரணமான விசயமாக இருக்கலாம், எனக்கு வித்தியாசமாக தோன்றக்காரணம் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது இதுவே முதல் முறை எனக்கு!



படத்தை பற்றிய என்னுடய கருத்தை கிரியின் பதிவில் சொல்லிவிட்டேன், பொழுது போக்கு சித்திரம் பொழுதை போக்க உதவியது என்று, ஆனால் நல்லதொரு விவாதம் அமையும் பொருட்டு அங்கே ஏன் நமக்கு தலைவன் தேவை என்றால் ஒருவர் கிரிக்கெட்டுக்கு கேப்டன் மாதிரி எங்களுக்கு ரஜினி என்கிறார்!, தலைவன் என்று ஒருவன் தனியாக இல்லை என்பதே என் கருத்து, இரண்டு நபர்களில் ஒருவர் அதிக எடையுடன் இருக்கிறார், அவரால் மற்றொருவரை விட அதிக எடை தூக்க முடியும் என்றால் அதுவே அவரது கடமையும் ஆகிறது, தன்னால் செய்ய முடிந்ததை ஒருவர் செய்வது நிச்சயமாக கடமை தான், மற்றொருவர் தூக்க வேண்டியதையும் சேர்த்து அவரே தூக்கினால் சொல்லலாம், தலைவண்டா நீன்னு! அப்படி ஒரு தலைவனாவது காட்டுங்களேன் நான் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்!

புரட்சிகர கருத்தை சொல்லிவிட்டார் என்பதற்காக ஒருவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவது, புணர்ச்சிக்கும், விழிப்புணர்ச்சிக்கும் வித்தியாசமில்லாத செயலாக தான் எனக்கு படுகிறது. பிறக்கும் போதே யாரும் எதையும் கற்று கொண்டு பிறப்பதில்லை, வாழ்க்கை கற்று தருவதை தான் நாம் பயன்படுத்தி கொள்கிறோம், சில நேரங்களில் சிலரது அனுபவங்களையும் பயன்படுத்தி கொள்கிறோம். அவையும் கற்றலில் தான் சேரும், ஆனால் தொண்டனாக தான் இருப்பேன் என அடம்பிடிப்பது உண்மையில் கொள்கைரீதியாகவா அல்லது கூட்டத்துடன் தம்மையும் இணைத்து கொள்ளும் உளவியல் பிரச்சனையா என தெரியவில்லை!



மனிதனுகென்று அடிப்படை நேர்மை இருக்கிறது, அதில் முக்கியமானது தான் செய்தது தவறு என்று உணரும் பட்சத்தில் அதை ஒப்பு கொள்வது அடுத்து மற்றவர் செய்தது தவறு என உணரும் பட்சத்தில் அதற்கு கண்டனம் தெரிவிப்பது, தொண்டைமான்களிடம் அடிப்படை நேர்மையை ஒருபொழுதும் எதிர்பார்க்க முடியாது, நாங்கள் அப்படியில்லை என்று சில இயக்க தோழர்கள் சொன்னாலும் அவர்கள் மனசாட்சிக்கும் தெரியும் அவர்களும் சில நேரங்களில் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று. மாவோ, ஸ்டாலின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தும் ஒருவர் ராமன் படத்துக்கு மரியாதை செலுத்துவதை ஏன் என்று கேட்கும் தகுதியை இழக்கிறார்!, நாங்கள் ஒன்றும் அவர்களை கடவுளாக வணங்கவில்லையே என ஒரு இயக்கத்தோழர் சொல்கிறார், இயக்கத்”தலைவர்கள்” புகழ் பாடுவதும், கடவுளுக்கு ”போற்றி” பாடுவதும் ஒன்று தான் என்று அவர்களுக்கு எப்படி புரியவைப்பது!..



நான் ஏன் சாதியை மறுக்கிறேன், அது பிரிவினையை தூண்டுவதால்

அதே தான் மதத்திற்கும், அதே வேலையை தான் செய்கிறது கட்சியும், ரசிகர் மன்றங்களும்.

பக்தனுக்கு கடவுள்

தொண்டனுக்கு தலைவன்

ரசிகனுக்கு நடிகன்

அவர்களது ஆதர்ஷநாயகர்களை பற்றி ஏதேனும் கேள்வி கேட்டுவிட்டால் அவர்களது பதில் திரும்ப கேள்வி கேட்பதாகவே இருக்கிறது, அதுவும் ”நீ என்னாத்த புடிங்கின” என்ற கேள்வியெல்லாம் பக்தகோடிகளின் பொதுபுத்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது!

மனிதனை கசட்டு அடையாளங்கள் இல்லாமல் மனிதனாக பார்க்கும் ஆவல் இப்படியெல்லாம் என்னை எழுத வைக்கிறது!

*************
கிழட்டுபய, சின்ன பொண்ணோடு ஆடுறான் போன்ற விமர்சனங்களை இவ்விடத்தில் நான் வன்மையாக கண்டிக்கிறேன், தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் கழிப்பறை வாசகங்கள் போன்றது அது. ரஜினி ஒரு நடிகர், நடிப்பு அவரது தொழில் அதை அவர் செவ்வனே செய்யும் பொழுது அது நாட்டுக்கு தேவையா, சமுதாயத்திற்கு நீ என்ன செய்தாய் போன்ற கேள்விகள் விளம்பரபிரியத்தனமாக தெரியுது!, மேலும் அது கொள்கைரீதியான விமர்சனமா அல்லது மற்றொரு நடிகரின் பால் இருக்கும் பிரியமா என்னுடமிடத்தில் பொதுபுத்தி வருகிறது!

விவாதிக்கலாமா!

ஒரிஜினல் ப்ளாக்கர்!

படத்தை கிளிக்கி பெரிதாக மறக்காமல் அனைத்தையும் படிக்கவும்!























இந்த பேப்பரை எழுதியவன் மட்டும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சான், நாமெல்லாம் இழுத்து மூடிகிட்டு போக வேண்டியது தான்!

பிடித்த பாடல்கள்!...

நண்பர் பாலமுருகன் மார்ச் 24 ஆம் தேதி என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார், ஆறு மாதம் கழித்து அதை நான் தொடர்கிறேன், அவ்ளோ பிஸியா சீன் போடுறேன் அவ்ளோ தான், உண்மையில் நான் வெட்டியா தான் இருக்கேன், ரியல் மேட்டர் என்னான்னா, யூடியூப்பில் ஒரு பாட்டு கடைசி வரை கிடைக்காமல் சதி செய்து விட்டது, தற்பொழுது அதற்கான டெக்ஸ்ட் மட்டும் தருகிறேன்!

சக்கரவர்த்தி திருமகள் என்ற படத்தில் வரும் பாட்டு இது, கலைவாணரும், எம்.ஜி.ஆரும் கலக்கி இருப்பார்கள், ரொம்பப் பிடிக்கும் இந்த பாட்டு, எப்போதாவது கேட்கனும் போல இருக்கும், சரியா சன் மியூசிக்கில் போடுவாங்க. :)




எனக்கு எம்.ஆர்.ராதாவை கொள்கை ரீதியாக எனக்கு பிடிக்கும், அவரது சேட்டைக்காக இந்த பாட்டு பிடிக்கும், செம வேகம் இந்த பாட்டு!, உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்!




ஆர்பாட்டமில்லாத அருமையான இசை, மனதை வருடும் வரிகள், அனைவருக்கும் பிடிக்கும் பாடல்!




வர்ணிப்பு பாட்டில் பல பாடல்கள் இருந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமானது, அப்பாவித்தனமான நடிப்பு விசுவலாகவும் நல்லாயிருக்கும்





பர்சனலா எனக்கு இந்த பாட்டு பிடிக்கும்!

படம்:அமர்களம்

என் செய்தாயோ விதியே
இனி என் செய்வாயோ விதியே
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை
பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே


ஒரு சொந்தம் இல்லாத தந்தை
சுய பந்தம் இல்லாத அன்னை
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே
விதை மண்ணில் முளைகொண்ட போதே
அதன் தலையில் இடி வீழ்ந்ததென்ன
இனி வாழ்ந்து பயனென்ன என்ன விதியே

*****************

நாமளும் யாரையாவது சிக்க வைக்கனுமுல்ல!

எனக்கு ஏன் இந்த பாட்டு பிடிக்கும்னு சுருக்கமா சொல்லியிருப்பதால் நீங்களும் அப்படியே தான் பண்ணனும் என்றோ யூடியூப் லிங்கெல்லாம் கொடுக்கனும் என்றோ அவசியமில்லை!, பாட்டை குறிப்பிட்டு ஏன் பிடிக்கும்னு சொன்னால் கூட போதும்!

டோண்டு (நிச்சயம், மச்ச மச்சினியே பிடிக்கும் என்பார் பாருங்கள்)

தமிழரசி

தமிழ் அமுதன்

விந்தை மனிதன் (இவர் ரசனை தெரிந்து கொள்ள ஆவல்)

பங்காளி ராஜன் (குசும்புக்கு ஒரு ஆள் வேணாமா)

கமாக்கதைகள்(இடம் மாறிய கால்) 4(69)

எச்சரிக்கை: கதையில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சில வார்த்தைகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்! பிடிக்காத பட்சத்தில் முதல் பேராவிலேயே விலகி செல்க!

******



இல்ல, நீ என்னை ஏமாத்திட்ட, உன்னை போல் ஒரு தேவிடியா கூட குடும்பம் நடத்தியதுக்காக நான் வெட்க்கப்படுறேன் என்று கத்தி கொண்டிருந்தான் பவிழன், எப்படியும் சண்டை ஆரம்பித்து வெகு நேரம் ஆகியிருக்கும் போல, அழுது அழுது வீங்கிய கண்களுடன் நான்கு போல் வளைந்து கட்டிலில் படுத்திருந்தாள் வசந்தி!, இன்னும் விசும்பல் சத்தம் அவளிடம் இருந்து வந்து கொண்டிருந்தது, சூனியத்தை வெறித்த பார்வையுடன் படுத்திருந்தாள், பவிழன் எச்சில் சாரல் தெரிக்க இன்னும் கத்தி கொண்டு தான் இருந்தான்!

சிங்கப்பூரில் ஒரு கஸ்டமருக்கு, வசந்தி வேலை செய்த நிறுவனம் செய்து கொடுத்த மென்பொருள் மொத்தமாக செயலிழக்க, அதை சரி செய்யும் பொருட்டு வசந்தி அங்கே செல்ல வேண்டியிருந்தது, வேலை அதிகம் இழுத்ததால் திரும்பி வர மூன்று நாள் ஆகிவிட்டது! வந்த இரவே நடக்கும் சண்டை தான் இது!, வசந்தியை சிங்கப்பூரில் பவிழனின் நண்பன் பார்த்திருக்கான், எதேட்சையாக அவன் பவிழனுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டான்! இதில் பவிழனுக்கு கோவம் என்னவென்றால் வசந்தியுடன் அவளது பாஸும் இருந்தது தான்!

வசந்தியின் முதலாளி கோவர்த்தனை பவிழனுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆகாது!, அவனை பற்றி வசந்தி பேசும் பொழுதெல்லாம் எரிந்து விழுந்து கொண்டே தான் இருப்பான்!, இப்பொழுது அவனுடன் தனியாக மூன்று நாட்கள் சிங்கப்பூரில் இருந்து விட்டு வந்திருக்கிறாள், போகும் போது கூட சொல்லவில்லை கோவர்த்தனும் உடன் வருகிறான் என்று! கேட்டால் தீடிரென்று உடன் வரும் பெண் வரமுடியாமல் போய் விட்டதால் கோவர்த்தன் வர வேண்டியதாயிற்று என்று கதை விடுகிறாள்!

வார்த்தைக்கு வார்த்தை தேவிடியா தேவிடியா என்று திட்டி கொண்டே இருந்தான் பவிழன்,ஏண்டி இப்படி கொழுப்பெடுத்து அழையுற, உனகெல்லாம் எதுக்கு புருஷன், அப்படியே ஊர்மேயப்போக வேண்டியது தானே!, சிரிச்சி சிரிச்சு கம்பெனியில் எவனையும் விட்டு வச்சிருக்க மாட்ட! ஓவர்டைம்னு சொல்றதெல்லாம் எவன் கூட போய் படுக்குறதுக்கோ, அதுனால தான் வீட்ல நீ பொண்டாட்டியாவே நடந்துகிறதில்ல என்று கத்தி கொண்டே இருந்தான்!.

ஒரு புருஷனா உனக்கு என்னாடி குறை வச்சேன் என்றதும் வசந்தி சட்டென்று எழுந்தாள், கலைந்திருந்த தலைமுடியை அள்ளி முடித்து!

புருசனா, அதை சொல்ல உனக்கு வெட்கமாயில்ல, நைட்டு வீட்டை பாத்துகிறவன் தான் புருஷன்னா அதுக்கு வாட்ச்மேனே போதுமே!, நீ மட்டுமா சம்பாதிக்கிற , நானும் தான் சம்பாதிக்கிறேன்!, உடம்பு சுகத்துக்கு அடிமையாகி பொம்பளை ஊர்மேய போயுறவான்னு நினைச்சியா!, வெளியே போரவ மட்டும் தேவிடியா இல்ல, நேரம், காலம் பார்க்காமல் உனக்காக கூப்பிட்ட நேரமெல்லாம் படுத்து, உணர்ச்சிகளை மழுங்கடித்து, சரி புருஷன் சந்தோசமா இருந்தா போதும்னு நினைக்கிறோம் பாரு, நாங்க தேவிடியா தான்!

அஞ்சு அறிவு இருக்குற மிருகத்துக்குக்கூட காதல் இருக்கு, நீ என்னைக்காவது என்னை காதலோடு தொட்டிருக்கியா! உனக்கு என் உடம்பு தான் வேணும், என் மனசை பத்தி கவலையேயில்லை!, காதலை வெளிப்படுத்த இந்த உலகில் செக்ஸை விட சிறந்த ஒன்னு இருக்காது, ஆனா வெறும் உடம்பு உரசலா நீ செக்ஸை கொச்சை படுத்தின, அப்பல்லாம் சும்மா இருந்தேன் பாரு, நான் தேவிடியா தான்!, நீ முக்கி முக்கி மூச்சிறைக்க பண்றதை கையடக்க வைப்ரேட்டர் பண்ணிட்டு போயிரும்! அப்புறம் எதுக்கு புருஷன்னு நீ!, ஆனாலும் உனக்காக கூப்பிட்ட நேரமெல்லாம் வந்து படுத்தேன் பார்த்தியா நன் தேவிடியா தான்!

ஒரு பொண்ணு தப்பு பண்றதுக்காக சிங்கப்பூர் வரை போக வேண்டியதில்லை, அவ நினைச்சா உன்னை பக்கத்துல தூங்க வச்சிகிட்டே தப்பு பண்ணலாம்! ஆனாலும் காதலுக்குன்னு ஒரு மரியாதை கொடுத்து இருக்கோம் பாரு, நாங்க தேவிடியா தான்!, புருஷன் முழுசா சுகம் கொடுத்தா தான் அவன் கூட வாழ முடியும்னா இன்னைக்கு எவளும் அவ புருஷன் கூட வாழ மாட்டா! அவ எதிர் பாக்குறது உன் உடம்பை இல்ல, உன் மனசை! காதலை, முழு அன்பை ஆனா உங்களுக்கு எதுவும் தேவையில்ல, இந்த சதையும் தோலும் போதும்!, அதுக்கு எதுக்கு எங்களுக்கு உயிரு! செத்த பிணம் போல் வாழ்றதுக்கு நிஜமாவே செத்து போகலாமே!

ராமாயண காலத்திலிருந்து பெண்களை சந்தேகப்பட்டுகிட்டு தானே இருக்கிங்க!, நீங்க ஒருத்தி கூட படுத்து எழுந்து வந்தாலும் உங்க பேரு அதே ஆம்பளை தான், ஆனா ஒரு பொம்பளை ஒருத்தனை பார்த்து லேசா சிரிச்சிட்டாலே அவ தேவிடியா! இதுவரைக்கும் நான் உனக்கு பொண்டாட்டியா இருந்தேன்னு நினைச்சியா.... இல்ல! நீ சொன்ன மாதிரி தேவிடியாவா தான் இருந்தேன்!, காசுக்கு பதிலா புருஷன்ற பேர்ல கமீட்மெண்ட், இனிமெ எனக்கு அது தேவையில்ல! இந்த நிமிசத்துலருந்து நீ யாரோ நான் யாரோ! குட்பை!

சொல்லிவிட்டு வாசலை நோக்கி வேகமாக நடந்தாள் வசந்தி!


*****

டிஸ்கி: இது நிச்சயமாக புனைவு தான்! ஆனால் நாட்டில் இருக்கும் முக்கால்வாசி ஆண்களை குறிக்கும் என்பதால்! யாரையும் பஞ்சாயத்துக்கு கூட்டிகிட்டு வரமுடியாதே!

சுயசொறிதல்!......

ஒரு வாகனம் நிற்கும் போது அதன் வேகமுள் பூஜ்யத்தை காட்டும், இயக்கத்தின் பின் தான் அதன் வேகம் கூடிகொண்டே போகும், அதே போல் தான் மனித வாழ்க்கையும் பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து ஆர்வமும் அனுபவமும் வேகத்தை கொடுக்கும்!, ஆனாலும் சிலர் இருக்கும் இடத்தை விட்டு நகராமலே இருப்பது பெரும் ஆச்சர்யத்தை தரும் விசயம்! எப்படி தான் தன் சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த பிரக்ஞ்ஜை இல்லாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை!.


பிலாலின் நண்பன் ஒருவனுக்கு வேலை வாங்கி தரும்படி பிலால் கேட்டுக்கொண்டான், எனது மெயில் ஐடி கொடுத்து அவனது பயோடேட்டாவை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன், அவ்வளவு தான் நானும் மறந்துவிட்டேன் அவனும் என்னிடம் கேட்கவில்லை, அவனும் வருவான், போவான். எந்தவித மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல் குடியும் குடித்தனமுமாக இருந்தான், அது அவனுடய பர்சனல், மேலும் எனக்கு அறிவுரை வழங்குவதோ கேட்பதோ பிடிக்காது என்பதாலும் நான் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை!, ஒரு மாதம் கழித்து கேட்கிறான், அண்ணா வேலை என்னாச்சுன்னு!

தம்பி, இந்த ஒரு மாசத்தில் வேற எதாவது வேலைக்கு ட்ரை பண்ணியா?

இல்லைங்கண்ணா!

வேற யார்கிட்டயாவது வேலைக்கு சொல்லி வச்சியா?

இல்லையே!

என்ன தான் பண்ணிகிட்டு இருந்த!?

நீங்க சொல்விங்கன்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்!

உனது சுயதேவைக்காக எப்போதும் அடுத்தவரையே நம்பி கொண்டிருப்பவனுக்கு நான் என்ன வேலை வாங்கி தருவது, கொஞ்சம் கூட முயற்சியே எடுக்காத உனக்கு வேலை வாங்கி கொடுத்தால் அந்த வேலையையும் நான் தான் போய் செய்ய வேண்டியிருக்கும், நான் ஏற்கனவே பிஸியாக இருப்பதால் வேற யாராவது வெட்டிப்பயலிடம் உனக்கு வேலை தேடி கொடுக்கச்சொல்!

என்று சொல்லிவிட்டேன்!............. சரிதானே!

*****************



வார ஆரம்பத்தில் ஒரு நண்பர் அழைத்திருந்தார், எனது வியாபார ரீதியாக நட்பு ஏற்பட்டு பின் நண்பராக மாறியவர், தற்பொழுது வியாபாரத்தை நிறுத்தி கொண்டாலும் நட்பு மட்டும் தொடர்கிறது, என்னை அழைத்தது ஈரோடு வருவதாக சொன்னார்! முதல் வார்த்தை வாங்க தல என்று சொல்லிவிட்டு தான் என்ன விசயம் என்றேன்!, சும்மா தான் நேர்ல சொல்றேன் என்றார்!, அந்நேரத்தில் எனது நண்பரின் தங்கை திருமணமும் இருந்தது, நண்பர்களில் தங்கியிருந்த விடுதிக்கே அழைத்து சென்று விட்டேன்!

நான் நிறுத்திவிட்டதால் அந்த நண்பரை அவர்களுடன் ஒட்டவைத்து விட்டு அவர்களின் ஆட்டத்தை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன்! கூத்தும் கும்மாளமுமாக 10 பேருக்கு நாலு ஃபுல்லு ஓடிவிட்டது, அனைவரும் மட்டையாக நமது நண்பர் மட்டும் தெளிவாக இருக்கிறார்! என்னய்யா பிரச்சனை என்றால், ஊரில் கடன் அதான் சொல்லாமல் கொல்லாமல் வந்து விட்டேன் என்கிறார்!

பிரச்சனையை எதிர்கொள்ளாமல் அதை விட்டு விலகி ஓடுவதால் பிரச்சனை திர்ந்துவிடுமா?, அதன் பின் ஊருக்கு போனாலும் அது அழியாத கரும்புள்ளியாக அது இருக்குமே என்றேன்.(இது அறிவுரையா!?)

என் நிலையில் இருந்து பார்த்தா தான் கஷ்டம் புரியும் என்றார்!

நான் கடந்த வந்த பாதையை சொல்லி அவரது போதையை இறக்க விருப்பமில்லை, சரி படுங்கன்னு சொல்லிட்டு நைட்டே ஆபிஸ் வந்துட்டேன்!, மறுநாள் மீண்டும் அவர் ஒரு ரவுண்டு முடிச்சிட்டு சாப்பாடெல்லாம் சாப்பிட்டு ஊருக்கு பஸ் ஏறினார்!

மறுநாள் மீண்டும் போன் பண்றார், நான் வர்றேன், இன்னும் ஒரு வாரம் அங்கே தங்கிக்கிறேன்னு!

அய்யா, உன் பிரச்சனைக்காக என்னையும் பிரச்சனையில் சிக்க வைக்காதே!, குடும்பத்தை விட்டு நண்பனை தலையில் வைத்து ஆடும் அளவுக்கு எனக்கு இன்னும் முற்றவில்லைன்னு சொல்லிட்டேன்!

சரிதானே!


********************

டிஸ்கி:அரிச்சது, அதான் சொரிஞ்சிகிட்டேன்!

பார்க்கலாம்!...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜ் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "பாக்கலாம்!" அவரை பொறுத்தவரை அதன் அர்த்தம், அந்த செயலை முடிந்த பின் நீங்கள் வந்து பார்க்கலாம் என்பது தான், அதனால் தான் அவருக்கு அடைமொழி கர்மவீரர்(செயல்வீரர்), ஆனால் இந்த "பார்க்கலாம்" என்ற வார்த்தை எல்லா சூழ்நிலையிலும் அதே அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறதா என யோசித்து பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது!,அவரவர் சூழ்நிலை, மனநிலை என அனைத்தையையும் சார்ந்து தான் நமது வார்த்தைகள் வெளிப்படுகிறது என்றாலும் அதை உள்வாங்கி கொள்ளும் நபரின் சூழ்நிலை என்னவாக புரிந்து கொள்ளப்படும் என்பதும் மிக முக்கியமானது தான்!


பொதுவாக ”லாம்” என்று முடிந்தாலே அதில் ஒரு ஸ்திர தன்மை இல்லை என்பது நிரூபணமாகிறது, அதில் "பார்க்கலாம்" என்ற வார்த்தையும் ஒன்று. "லாம்" ஒற்றை சொல்லாக இல்லாமல் முன் சில வார்த்தைகள் இருந்தால் கூட சிலசமயம் ஒரு நம்பிக்கை கலந்த வார்த்தையாக மாறும், உதாரணமாக "நாளை சினிமா பார்க்கலாம்" என்றால், அதில் பார்க்ககூடிய சாத்தியகூறுகள் அதிகம் எனத்தெரிகிறது!, "நாளை சினிமாவுக்கு போகலாமா?" என்ற கேள்விக்கு "பார்க்கலாம்" என்றால் அங்கே நம்பிக்கை குறைந்த குழப்ப சூழ்நிலையே மிஞ்சும்!


"பார்க்கலாம்" என்ற வார்த்தை சொல்லும் தொனியில் கூட மாறலாம்! உதவி கோரி செல்பவருக்கு பார்க்கலாம் என்ற வார்த்தை சொல்பவரின் அலட்சியதன்மையை காட்டும்!, " I will try" or "I will try my level best" போன்ற வார்த்தைகளை நிச்சியமாக ”பார்க்கலாம்” என்ற வார்த்தையுடன் ஒப்பிட முடியாது, அங்கே முயற்சியாவது இருக்கிறது, ஒரு விசயம் நடக்கும் நடக்காது என்ற எந்தவித உத்திரவாதமும் இல்லாத பட்சத்திலும் முயற்சியாவது இருந்ததே என்ற சமரசமாவது இருக்கும், ஆனால் "பார்க்கலாம்" என்றாலே நம்பிக்கை இழுக்கும் சூழல் தான் உருவாகும்!


வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் அனுபவத்தால் சாத்தியகூறுகளை பற்றி ஆராய்ந்தவர்கள், பார்க்கலாம் என்ற சொல்லை வேறு மாதிரி பயன்படுத்துவர், அவர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது, எது நடந்தாலும் சரி என்ற வெற்றிடதன்மையில் இருப்பார்கள், வந்தால் நன்று இல்லையென்றால் எனகு ஒன்றும் நட்டமில்லை என்ற தன்மை! அவர்கள் அளவில் அதுசரி தான் என்றாலும் கேட்கும் நபரும் அதே போல் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பாரா என்பது சந்தேகமே!


தட்டிக்கழிக்கும் சொல்லாகவும் இந்த சொல் பயன்படும், முன்னரே சொன்னது போல் அலட்சியபோக்காகவும் இல்லாமல் எதிர்பார்ப்பும் இல்லாமல், தனது முன்முடிவுகளை மாற்ற எந்தஒரு யோசனையும் எடுக்காத பட்சத்தில் அவர்கள் உபயோகிக்கும் சொல் பார்க்கலாம்! தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் குறித்த எதிர்கால நோக்கு பார்வை ஏற்கனவே வைத்திருக்கும் திட்டத்துக்கு மாற்றாக எதையும் சட்டென்று முடிவெடுக்க முடியா நிலை என சொல்லலாம்!

எங்கேயும் யாரையும் எதிலும் குறைசொல்ல முடியாது, அவரவர் சூழ்நிலை பொறுத்த வாழ்வே அவரது மனநிலைக்கும், நிலை குறித்த திட்டத்திற்கும் சாத்தியமாகிறது, நேர்மறை சிந்தனைகள் எதையும் சமாளிக்கும் திறனை கொடுக்க மட்டுமே செய்யாது, சில சமயங்கள் வேறு பல வாய்ப்புகளை தேடிச்செல்லும் திறனையும் குறைக்கும்!



வாழ்கையை பலர் வாகனத்துடன் ஒப்பிடுவர், அவ்வாறு கொண்டால் வாகனத்தை நாமாக செலுத்துவது அல்லது அதன் போக்கில் விடுவது என்ற இருநிலை வருகிறது, அனுபவமும் அறிவும் செலுத்தும் தகுதியை தந்தாலும், சிலநேரங்களில் அதன் போக்கும் சுராஸ்யம் தரும்!, ஆனாலும் என்னார்வமெல்லாம் என்னால் என்ன செய்ய முடிகிறது என அறிவதே! நசுங்கி அடிபட்டு தகரடப்பா போல் என் வண்டி இருந்தாலும் என்னால் செலுத்தப்படும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கிறது!

"பார்க்கலாம்" என்ற வார்த்தையை எதிர்கொள்ளும் திறன், பலரைப் போலவே எனக்கும் குறைவு, "பார்க்கலாம்" என் திறன் எப்படி மாறுகிறது என்று!

டிஸ்கி: இப்படியே எத்தனை நாளைக்கு தான் மொக்கை போட்டு கொல்லுவ பார்க்கலாம் என நினைக்கும் நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க!.   "லாம்" என்பது பன்மைச் சொல் எனினும் எனது வசதிக்காக "ஸ்திரத்தன்மை இல்லாத தன்மை" குறித்து பேசுவதாக மட்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். தமிழ் பெருந்தகைகள் மன்னிக்கவும்

ஹார்ட் வொர்க்!.. ஸ்மார்ட் வொர்க்!..

நேற்று எந்திரன் பட ட்ரைய்லர் ரிலீஸுக்கான விளம்பரம் அல்லது விழா சன்டீவீயில் காண்பிக்கபட்டது!, வீட்டை பொறுத்தவரை தொலைக்காட்சி சேனலை மாற்ற பெரும்பான்மைகே உரிமை! அதனால் அதையே நானும் காண நேர்ந்தது!

ரஜினி, கலாநிதிமாறன், சங்கர் பற்றிய துதிகளையும் தாண்டி என்னை இப்பதிவை எழுத தூண்டியது விவேக் சொன்ன குட்டிக்கதை!



ஒரு முனிவர் 20 ஆண்டுகள் கடும்தவம் புரிந்து!. யோகா, தியானம் போன்ற பல கடின உடற்பயிற்சிகள் செய்து இறுதியில் தண்ணீரில் நடக்கும் வித்தையை கற்றாராம்! ஒருநாள் ஊர்மக்கள் முன்னிலையில் அந்த முனிவர் நீரில் நடந்து காட்டும் போது அவ்வழியே இன்னொரு சித்தர் வந்தாராம், இந்த முனிவரை பார்த்து அவர் சொன்னாராம் இதற்கு எதற்கு 20 வருடம், பேசாமல் பரிசலில் போயிருக்கலாமே என்று!

அரங்கத்தில் இருந்தவர்களுக்கு கதை இன்னும் முடியவில்லை என்ற நினைப்பா அல்லது விவேக்குக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை என்ற கவலையா தெரியவில்லை, யார் முகத்திலும் ஈயாடவில்லை!
இருப்பினும் விவேக்கே கேட்டு கைதட்டல் வாங்கி கொண்டார்! நாம் காசு கொடுத்து சினிமாவுக்கு போய் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்கிறோமே அது போல!

கடும்தவம் புரிந்த முனிவர் செய்தது ஹார்ட் வொர்க்காம், பரிசலில் போக சொன்னது ஸ்மார்ட் வொர்க்காம்!, எதாவது மொன்னை கதைக்கு லாஜிக் தேவையில்லை தான், ஒரு நீதிக்கதை சொல்லும் பொழுதும் லாஜிக் இல்லாமல் தான் சொல்வோம் என்று சினிமாக்காரன் புத்தியை காட்டியிருக்கிறார் விவேக். வேலை அது வேலையாகவே இருக்கிறது, அதன் தேவையை பொருட்டு தான் ஹார்ட் வொர்க்கா, ஸ்மார்ட் வொர்க்கா என்பது முடிவு செய்யப்படுகிறது! அந்த முனிவரின் தேவை தண்ணீரில் நடப்பதா அல்லது ஆற்றை கடப்பதா!. இடையில் சொம்புடன் வந்து கருத்து சொன்ன அந்த பதிவர் ஸாரி சித்தர் யாராக இருக்கக்கூடும்!


ஸ்மார்ட்ய் வொர்க்குன்னா என்ன மாதிரி இருக்கனும்!

நான் ஒரு குட்டி கதை சொல்லட்டா!

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,.. சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி என்று கேட்டான்!.. நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்!

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை, மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான், மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான், ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்!

ஸ்மார்ட் வொர்க் என்றால் என்ன?

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னது போல் முதல் நாள் செய்த வேலையை மறுநாள் அதை விட குறைந்த திறனில் முடிக்க போடும் வியூகமே ஸ்மார்ட் வொர்க்! சாத்தியமானது தான் அனைத்து துறையிலும்!.

ஹார்ட் வொர்க் உங்கள் உடல் திறனை காட்டும், ஸ்மார்ட் வொர்க் உங்கள் மூளைத்திறனை காட்டும்!, இரண்டும் சேரும் போது அது உங்களுக்கு வெற்றியை காட்டும்!

****************************

டிஸ்கி:அவசரமா கருத்து சொல்ல டீநகர் வரைக்கும் போகணும், ஆட்டோ வருமா!

தேவதை சிரிச்சா இப்படி தான் இருக்கும்!





















************************
யாரு இந்த ஹாலிவுட் ஹீரோ!?


மணமகள் தேவை!

பெயர்                         : சியாம்சுந்தர்

தந்தை பெயர்                  : ராமச்சந்திரன்

தாயார் பெயர்                  : ஆனந்தம்

சொந்த ஊர்                    : ராஜபாளையம். (தற்போது சென்னையில்)

பிறந்த தேதி                   : 23 June of 1980


படிப்பு                         : டிப்ளமோ (DEEE)
                              தற்போது பி.இ பகுதி நேரமாக (இறுதியாண்டு) அண்ணா    பல்கலைகழகத்தில் படிக்கிறேன்

வேலை                       : Hardware Design Engineer in Cornet Technology India Pvt Ltd, Chennai.

சம்பளம்                       : ஆண்டுக்கு, Rs.350000/

உயரம்                        : 180செமீ

எடை                         : 62 கிலோ

தெரிந்த மொழி                : தமிழ், ஆங்கிலம், தெலுங்கு

உடன் பிறந்தோர்              : தம்பி ஒருவர்.


திருமணத்திற்க்கு பெற்றோர் ஆதரவு : இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம், அதனால் இல்லை என்றே வைத்துகொள்வது நலம்!, அப்பா இல்லை. அம்மா மட்டும் தான்

பெண்ணிடம் எதிர்பார்ப்பது :     சொந்தக்காலில் நிற்க வேண்டும், தாலி, மத சடங்குகளின்றி (குறிப்பாக இந்து மத சடங்குகள்) சாதி மறுப்பு திருமணத்திற்க்கு சம்மதிப்பவராக இருக்கவேண்டும்.
பெண் எந்த சாதி, எந்த மதத்தை சேர்தவராகவும் இருக்கலாம்.


.
*************************


இவரது மேட்ரிமோனியல் ஐடி! அதில் கூட சாதி, மதம் முக்கியமில்லை என்றே தெரிவித்திருக்கிறார்!, அவரது புரோபைலை முதன் முதல் வெளியிடுவதில் பெருமையடைகிறேன்!

*************************

விருப்புமுள்ள நண்பர்கள் உங்களை பற்றிய தகவல்களை அனுப்பலாம்!

!

Blog Widget by LinkWithin