லாக்அப் அறை
உன் பேரென்ன?
பிலால், முகமது பிலால்
என்ன ஜேம்ஸ்பாண்டுன்னு மனசுல நினைப்பா?
அப்படியா! ஜேம்ஸ் பாண்டும் இப்படி தான் சொல்லுவாரா?
நக்கலா? உண்மையான பேர் என்ன?
பேரு பிலால் தாங்க! ப்ரென்ஸ்செல்லாம் பெல்ட்டு பிலால்ன்னு கூப்பிடுவாங்க
ஓ! அந்த பெல்ட்டு பாம் பிலால் நீதானா?
பாமா? ஐய்யா நான் இடுப்புல கட்டுற பெல்ட்டு விக்கிறவன், அத சொன்னேன்.
நீ பண்ணியிருக்குற காரியத்துக்கு உனக்கு எத்தனை வருசம் கிடைக்கும் தெரியுமா?
தெரியாதுங்க! ஆனா நான் குற்றத்த ஒப்புகிறேன்.
**************************************
நீதிமன்றம்
உங்கள் மீது சுமத்தபட்டுள்ள குற்றங்களை ஒப்புகொள்கிறீர்களா?
ஆமாங்கய்யா!
உங்களுக்காக வாதாட வக்கில் இருக்காங்களா?
இல்லைங்கய்யா நானே வாதாடிக்கிறேன்!
சரி, உங்கள் தரப்பில் நீங்கள் சொல்ல விரும்புவதை சொல்லலாம்,
ஐயா! நானும் சாதாரணம ஓட்டு போட்டு இந்த அரசியல்வாதிகள் நம்ம ஊருக்கு எதாவது செய்வாங்கன்னு பார்த்துகிட்டு இருக்குற சாமன்யன் தாங்க!
கடந்த 20 வருசமா எங்க ஊர்ல அவுங்க குடும்பம் தான் மாத்தி மாத்தி சட்டசபைக்கு போறாங்க!
யாராவது நல்லது செய்வாங்கன்னு பார்த்தா, ஒருத்தருக்கும் மனசு வரல!
சரி அப்படி தான் நாசமா போங்க எங்கள தொந்தரவு பண்ணாதிங்க்கனு தாங்கய்யா எத்தனி வருசமா இருந்துட்டோம், ஆனா பாருங்க இப்போ கொஞ்ச நாள அவுங்க ஆட்டம் தாங்க முடியலைங்க! இருக்கிற சொத்த பூர அடிச்சி புடுங்குறது, தரலைன்னா ஆள கடுத்துரது, கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுரதுன்னு அராஜகம் மிஞ்சி போச்சுங்க!
நாங்களும் எம்புட்டோ பொருத்து பார்த்தோம், அவுங்க ஆட்டம் கொஞ்சம் கூட குறையல,
இதுக்கு எதாவது செய்யனும்னு நான் நினச்சிகிட்டு இருந்த போது தான் சகோதரர் முத்துகுமார் ஈழத்தமிழர்களுக்காக தன்னையே எரிச்சிகிட்டு உயிரவிட்டாருன்னு பேப்பருல படிச்சேன்.
அது மாதிரி நாமளும் செத்தா ஊருக்கு எதுவும் நடக்காது, அதுக்கு பதிலா அவனை கொன்னுபுட்டோம்னு வச்சிக்கிங்களேன், ஊருக்கு இடைத்தேர்தல் வரும், மக்களுக்கு கையில காசு புழங்கும், எப்படியும் ஜனங்க அடித்த வாட்டியிம் அவுங்களுக்கு ஓட்டு போட போறதில்லை, அடுத்து வர்ர புது ஆளுக்களாவது நம்ம ஊருக்கு எதாவது செஞ்சா போதும்னு தாங்க அந்த எம்.எல்.ஏ.வை கொலை பண்ண போனேங்க. ஆனா பாருங்க கூட்டத்துல பண்ண முடியுல, போலிஸ்காரங்க புடிச்சி இங்கவந்து நிப்பாட்டிட்டாங்க.
குற்றவாளி கூண்டில் இருக்கும் பிலாலுக்கு இ.பி.கோ. 307 வது பிரிவின் படி 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கலாம், ஆனாலும் அவரது வாதத்தின் படி இது முன் பகையினால் ஏற்பட்ட கொலை முயற்சி அல்ல என்பது தெரிகிறது, அதே நேரம் ஆயுதத்தால் தாக்க சென்றது குற்றம் தான் ஆகவே இ.பி.கோ.324 வது பிரிவின் படி அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கிறேன்.
குற்றவாளி பிலாலால் குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ பற்றிய வாதங்களையும் இந்த நீதி மன்றம் கருத்தில் கொள்கிறது, அவர் மீது சாட்டபட்ட குற்றங்களை புகாராக ஏற்று காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும், அந்த குற்றங்கள் உண்மை என்றும் அறியும் பட்சத்தில் அவரை சட்டத்தின் முன் ஆஜர் படுத்தும் படி காவல்துறைக்கு இந்த நீதிமன்றம் ஆணையிடுகிறது.
**********************************************
நீதிமன்ற வளாகம்-பத்திரிக்கை நிருபர்கள்
மிஸ்டர் பிலால்- உங்களுக்கு தண்டனை கிடைக்கும்னு தெரிஞ்சம் அந்த கூட்டத்துல ஏன் உங்க ஊரு எம்.எல்.ஏ.வ கொல்ல போனிங்க!
(புன்னகையுடன்) மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது செய்யனும் பாஸ்.
61 வாங்கிகட்டி கொண்டது:
me the 1st aa ?
//பாமா? ஐய்யா நான் இடுப்புல கட்டுற பெல்ட்டு விக்கிறவன், அத சொன்னேன்.//
ஹா..ஹா....நிச்சயமாக இந்த வரிகளை பாராட்டத் தான் வேண்டும்.
செஞ்சிடுவோம் பாஸ் ...
ஐய்யா நான் இடுப்புல கட்டுற பெல்ட்டு விக்கிறவ\\
ஹா ஹா ஹா
//பாமா? ஐய்யா நான் இடுப்புல கட்டுற பெல்ட்டு விக்கிறவன், அத சொன்னேன்.//
இத படிச்சவுடனே, கோயம்புத்தூர்ல ( தாடி வைச்சிட்டு ) பிளாட்பாரத்துல பனியன் வித்துட்டுருந்த எங்க தூரத்து சொந்தக்காரர் ஒருத்தர போலிஸ் கோவை குண்டு வெடிப்பு சந்தேக கேஸ்ல அரெஸ்ட் பண்ணிட்டு போனது தான் நினைவுக்கு வந்துச்சு...
அப்ப முயற்சி தோல்வியில முடிஞ்சிடுச்சா... ??
//(புன்னகையுடன்) மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது செய்யனும் பாஸ்.//
எல்லோரும் இப்படி யோசிக்க ஆரம்பிடுச்சுட்டா நம்ம நாடு எங்கேயோ போயிரும்.
//உங்களுக்காக வாதாட வக்கில் இருக்காங்களா?//
வாதாட வக்கு(காசு) இருந்தா வக்கில் தானா வரமாட்டாரா என்ன? அதனால் வக்கிலைத் தேடுவதற்கும் முன் வக்கு தேடிக்கொள்ள வேண்டும் என்பது விதி.(சட்டம்)
அருமை வாலு!
பிலாலின் முயற்சியை போலன்றி, வாலின் முயற்சி தோல்வியடையவில்லை.
உங்கள் சிறுகதை முயற்சி சக்ஸஸ்.
\\(புன்னகையுடன்) மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது செய்யனும் பாஸ்.\\
மிகவும் அருமையா இருக்கு
நிஜமாவே நாமளும் ஏதாவது செய்யனும் பாஸ்
அருமையா வந்திருக்கு பாஸ். வாழ்த்துகள்.
ஆமா.. ஈரோடு எம்மெல்லே யாருங்க?
செய்யனும் = செய்யணும். தலைப்புல மாத்துங்க..
அப்பறம் நர்சிம் வந்தா அஜீத் அஜீத்தா அடிச்சுக்கப்போறாரு (தல தலயான்னு சொல்லவந்தேன்!)நான் எதுக்கு ஆரம்பிச்சேன்.. எங்கடா கொண்டு போறீங்க... பதிவெழுதறது குத்தமாடா..”ன்னு கேட்கப்போறாரு!
இதுவும் நல்லாத்தான் இருக்கு.....
//மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது செய்யனும் பாஸ்.//
ஸ்டார் வார மெசேஜ்???????? இருக்கட்டும் இருக்கட்டும்!
//அதுக்கு பதிலா அவனை கொன்னுபுட்டோம்னு வச்சிக்கிங்களேன்,//
ஐ லைக் த டீல்!!!
மூன்றாம் நாள் நட்ச்சத்திர வால்பையனுக்கு ஒரு அவசர வாழ்த்துக்கள்!!!
இருங்க, மற்றவை பிறகு படிச்சுட்டு வாழ்த்தறேன்!!!
அய்யோ அய்யோ
மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது செய்யனும் பாஸ்.///
:))))
மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது செய்யனும் பாஸ்
:)))))))))))))))))))))))))))))
ஆமா பாஸ்..
வாள்த்துக்கல் நண்பறே !. நள்ள நகைச்சுவையாக எலுதியிருக்கீங்க. தூல் கிழப்பிட்டீங்க.
இந்த பதிவு தி.மு.க/வையும் அஞ்சா நெஞ்சனையும் பற்றி இல்லை என்பதை சத்தியமாக நம்புகிறேன்.
narsim said...
ஆமா பாஸ்..
ஹி..ஹி...ஆமாமுங்க பாஸ்.
சிந்திக்கவேண்டிய பதிவு இது
ஏதாவது செய்யனும்......
//அப்படியா! ஜேம்ஸ் பாண்டும் இப்படி தான் சொல்லுவாரா?
/
ஹா ஹா
//உங்களுக்காக வாதாட வக்கில் இருக்காங்களா?
இல்லைங்கய்யா நானே வாதாடிக்கிறேன்/
ஒரு ஏழையின் உண்மையை சொல்லும் வரிகள், வக்கீலுக்கு கப்பம் கட்டி.......?
//சகோதரர் முத்துகுமார் ஈழத்தமிழர்களுக்காக தன்னையே எரிச்சிகிட்டு உயிரவிட்டாருன்னு பேப்பருல படிச்சேன்.
அது மாதிரி நாமளும் செத்தா ஊருக்கு எதுவும் நடக்காது//
ரொம்ப ரொம்ப சரியான வார்த்தை பாஸ், கலக்கிருக்கீங்க
//புன்னகையுடன்) மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது செய்யனும் பாஸ்.
///
இது அந்த (ஏன் எல்லா தொகுதி) எம்.எல்.ஏ கவணிப்பாரா, இன்னோருவன் கிளம்பி வந்து அவரை போட மாட்டானு என்ன நிச்சயம் வால்...
நல்ல பதிவு
ஏதாவது செய்யனும் பாஸ்.....
நல்ல பதிவு. கண்டிப்பா நல்லதா ஏதாவது செய்வோம் பாஸ்:)
:-))))
மனுசனாப் பிறந்தா...
எல்லாரும் சொல்லாதிங்க செய்ங்க பாஸ்
சொல்லறவன் செய்ய மாட்டான். செய்யறவன் சொல்ல மாட்டான்.
நல்ல பதிவு! மனிதனா பிறந்தோம்.. மானிடம் காக்க எதாவது செய்யனும்.. செய்யலாம்....
ஆனா பாருங்க இப்போ கொஞ்ச நாள அவுங்க ஆட்டம் தாங்க முடியலைங்க! இருக்கிற சொத்த பூர அடிச்சி புடுங்குறது, தரலைன்னா ஆள கடுத்துரது, கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுரதுன்னு அராஜகம் மிஞ்சி போச்சுங்க!
இது யாருங்கறது ஈரோட்டுல இருக்கறவங்களுக்கு
நல்லா தெரியும்.
Nanba padithu kangalil kaneer vanthu vitathu serious seriya pathivu
neenga nalla irukanum
last punch line romba nalla iruku ethachum seyanum boss!
unga email id anupunga, seri serious a namma ethachum panannum boss eppadi panrathu nu utkandhu osipom
tamilish oru vote than koduthu irukanga ellaina ungaluku enoda 100 vote
ஆமாங்க ! மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது நல்லதா செய்யணுங்க...
அருமையா வந்திருக்கு பாஸ். வாழ்த்துகள்.
//மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது செய்யனும் பாஸ்.
//
எப்படி இப்படி!!
எப்படி இதெல்லாம் தோணுது.(அதுவா வருது எனக்கே மொக்க போட்றாதீங்க. நீங்க பொழப்புக்கு மொக்க, நாங்க பொறந்ததிலிருந்தே மொக்க.)
//எதாவது செய்யனும் பாஸ்.//
ஆனாலும் நான் உங்ககிட்ட கோவிச்சுக்கிறேங்க! பின்ன... நான் யோசிச்ச டைட்டில சுட்டுடீங்களே. கேசு வரும், சந்திக்க தயாரா இருங்க!
நல்லா வந்திருக்கு.. குறுநகையுடன் யோசிக்க வைத்தது.. :)
நல்லா வந்திருக்கு.. சிறுநகையுடன் யோசிக்க வைத்தது..
// கும்க்கி said...
narsim said...
ஆமா பாஸ்..
ஹி..ஹி...ஆமாமுங்க பாஸ்.//
ஹி...ஹி...ஹி...ஆமாங்க பாஸ்
ஏதாச்சும் செய்யணும் பாஸ்!
//ஓ! அந்த பெல்ட்டு பாம் பிலால் நீதானா?
பாமா? ஐய்யா நான் இடுப்புல கட்டுற பெல்ட்டு விக்கிறவன், அத சொன்னேன்.//
நான் மிகவும் ரசித்த வரிகள்...வாழ்த்துக்கள் நண்பரே...
ஏதாச்சும் செய்யணும் பாஸ்!!
வால்ஸ் கண்டிப்பா எல்லாரையும், என்ன செய்ய வேண்டும் என்பதை, சிந்திக்க வைத்து விட்டீர்கள்!!
வால்ஸ் அருமையான நகைச்சுவை சிறிதும் மாறாமல் ஸுபெரா எழுதி இருக்கீங்க, படிச்சிட்டு வாய் விட்டு சிரித்தேன். நல்ல ஹாஸ்ய உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். அருமையான கதை.
இந்த பதிவை படிக்கும்போது ஒரு உண்மைச் சம்பவம் போல் இருந்தது.
ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு எல்லாருக்கும் ஏற்படும்படி எழுதி மேலும் மேலும் நகைச்சுவை நிறைந்த பல கதைகள் கொடுக்கவும்.
அருமையா ரசித்தேன் வால்ஸ், வாழ்த்துக்கள் !!!!
//பாமா? ஐய்யா நான் இடுப்புல கட்டுற பெல்ட்டு விக்கிறவன், அத சொன்னேன்.
//
நல்ல ஹாஸ்யம் நிறைந்த சிந்தனை!!
என்னை நினைத்து நினைத்து சிரிக்க வைத்த வரிகள்!!!
//ஓ! அந்த பெல்ட்டு பாம் பிலால் நீதானா?
//
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்!!!
//
என்ன ஜேம்ஸ்பாண்டுன்னு மனசுல நினைப்பா?
அப்படியா! ஜேம்ஸ் பாண்டும் இப்படி தான் சொல்லுவாரா?
நக்கலா? உண்மையான பேர் என்ன?
பேரு பிலால் தாங்க! ப்ரென்ஸ்செல்லாம் பெல்ட்டு பிலால்ன்னு கூப்பிடுவாங்க
//
இந்த பதில் ரொம்ப வெகுளித்தனமா படிக்க இருந்திச்சி.
அதனாலே பாவமா இருந்திச்சு
அருமை நண்பரே அருமை!!
//மனுசனா பொறந்தா மக்களுக்கு எதாவது செய்யனும் பாஸ்//
:)))))))
Arumai!
Arumai!
ம்.......நகைச்சுவை எல்லாம் கலந்து பின்னி எடுக்கிறீங்கள்...
நட்சத்திரமாய் ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பா...
தொடர்ந்தும் சீரிய முறையில் நல்ல பதிவுகள் வழங்கிட வாழ்த்துகிறேன்..
நட்சத்திரமாய் ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் சார்!!!
சூப்பர்
அண்ணா... என்ன செய்யலாம்???
நம்ம ஊரு பெருந்துறைக்கு அந்த பக்கமுள்ள குன்னத்தூர் பக்கத்துல ஒரு கிராமம்னோ
Post a Comment