புரூஸ் லீ

1940 நவம்பர் 27(இன்று) அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாகாணத்தில் பிறந்தது அந்த குழந்தை. பெற்றோர் வைத்த பெயர் 
Lee Jun-fan. அந்த பெயர் வாயில் நுழையாத நர்ஸ் அந்த குழுந்தையை புரூஸ் என செல்லமாக அழைக்க ஆரம்பிக்க அப்பெயரே நிலைத்தது.
குழந்தை பருவத்தில் ஹாங்காங் வந்த புரூஸ்லீ பள்ளி படிப்பை அங்கே ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தான் இப்மேன் (yipman) என்ற மாஸ்டரிடன் குங்க்ஃபூ கற்றுக்கொள்ள ஆரம்பத்தார். அந்த மாஸ்டரை மையமாக 
வைத்து ip man என்ற படம் இரண்டு பாகங்கள் வந்தது.
புரூஸ்லீயின் அப்பா ஒரு நடிகர், அதன் மூலம் சிறு வயதிலேயே 
புரூஸ்லீக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. தனது 18 வயத்திற்குள் 20 படங்களில் நடித்துவிட்டார் புரூஸ்லீ. சிறுவயதில் பயங்கர சுட்டியாக இருந்த 
புரூஸ்லீ ஒருமுறை தெருவில் வம்பிழுத்து அடிவாங்கி வந்தார்,
அதன் பிறகு மாஸ்டர் இப்மேன் அவர் மேல் அதிக கவனம் செலுத்தி கடுமையான பயிற்சிகள் அளித்தார்.
பள்ளிபடிப்பை முடிந்த காலத்தில் ஹாங்காங் நகரின் முக்கிய தாதா
ஒருவரின் மகனை அடித்து பெரிய பிரச்சனையானது. சிறுவயதில் அவர் அடிவாங்கியதற்கு பழிதீர்த்தார் என்ற பேச்சும் உண்டு. தாதாவுடன் மோத 
பயந்த புரூஸ்லீயின் அப்பா அவரை மீண்டும் அமெரிக்கா 
அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் சியாட்டில் மகாணம் வந்த புரூஸ்லீ அங்கு ஒரு ரெஸ்டாரண்டில் சர்வராக வேலை பார்த்தார்.
the green hornet தொலைகாட்சி தொடரில் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பேட்மேன் போன்ற பேண்டசி கலந்த கதை அது. பின் கல்லூரி படிப்பையும் அமெரிக்காவிலேயே முடித்தார் புரூஸ்லீ. அவர் தத்துவம் மற்றும் 
உளவியல் பட்டதாரி. அந்த காலகட்டத்தில் சீனர்கள் அல்லாதவர்களுக்கு 
சீன தற்காப்பு கலைகள் சொல்லிகொடுப்பது கிடையாது. அதை உடைத்து புரூஸ்லீ அனைவருக்கும் குங்க்ஃபூ சொல்லிக்கொடுத்தார். எதிர்ப்பு
கிளம்பிய போது Jeet Kune Do என்ற புது கலையும் அறிமுகபடுத்தினார்.


அவரின் திறமை அறிந்து ரேமாண்ட்சா என்ற திரைப்பட தயாரிப்பாளர் அவருடன் ஒப்பத்தம் செய்துக்கொண்டார். அதன்படி புரூஸ்லீ நடித்து
”த பிக் பாஸ்” என்ற முதல் படம் வெளிவந்தது. அதன் முன்பு வரை அந்த மாதிரியான சண்டை காட்சிகளை பார்த்திராத மக்கள் கூட்டம் புரூஸ்லீக்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர்.
அவரது இளமை பருவத்திலிருந்தே சீனாவில் ஜாப்பானிய ஆதிக்கம் 
இருந்தது அதை மையமாக வைத்து the way of the dragon என்ற படத்தை
அவரே இயக்கி நடித்தார். enter the dragon என்ற படத்தில் நடித்து முடித்து
அந்த படம் வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் மர்மமான முறையில் இறந்தார். தலைவலிக்கு மாத்திரை சாப்பிட்டு படுத்த புரூஸ்லீ மூளை நரம்பு வெடித்து கோமா நிலைக்கு சென்று அப்படியே
இறந்துவிட்டார்
அவருக்கு ஒரு மகன்( Brandon Lee ) மற்றும் ஒரு மகள்( Shannon Lee )
இருவருமே நடிகர்கள். இதில் அவரது மகன் ப்ராண்டன்லீ படபிடிப்பின்
போது நடந்த விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். மகள் தற்பொழுது திரைபடங்களில் நடிப்பதில்லை.
புரூஸ்லீ கடைசியாக நடித்துக்கொண்டிருந்த படம் அதன் பின் 
சில காட்சிகளை வேறு நடிகரை வைத்து எடுத்து game of death என்ற 
பெயரில் வெளியானது. கற்பனை பாத்திரங்கள் மட்டுமே உலவி வந்த காமிக்ஸ் உலகில் முதன்முதலாக உயிரோடு வாழ்ந்த மனிதம் காமிக்ஸில் வந்தது புரூஸ்லீ மட்டுமே. சீன அரசு அவரை கெளரவிக்கும் வகையில் ஹாங்காங்கில் புருஸ்லீயின் வெங்கலசிலை ஒன்றை வைத்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் சமூகத்தை திரும்பி பார்க்க வைத்த நூறு
நபர்களில் புரூஸ்லியும் ஒருவர் என புகழ்பெற்ற பத்திரிக்கை 
கருத்துகணிப்பு வெளியிட்டது. இன்றும் புரூஸ்லீயின் தற்காப்பு கலை உலகெங்கிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.

!

Blog Widget by LinkWithin