கேரக்டர்ன்னா என்ன?

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வார்த்தை, புழக்கத்தில் உள்ள வார்த்தை இப்படி சொல்லி கொண்டே போகலாம். அந்த வார்த்தை

அவரு கேரக்டர் சரியில்லை?

சமீபத்தில் ஒரு நண்பருய பதிவில் இது தொடர்புடய ஒரு வார்த்தையை கண்டும் கேரக்டர்ன்னா என்னான்னு கேட்டிருந்தேன். ஒருவரிடமிருந்தும் பதிலில்லை. அதனால் எனது சிற்றறிவுக்கு எட்டிய அவரை யோசித்து இதுவாக தான் இருக்கலாம் என நானே ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
தவறாக இருந்தால் திருத்த வேண்டியது உங்கள் பொறுப்பு!

*************************************

கேரக்டர்ன்னா என்ன?

வேட்டி சட்டை, பேண்ட் சட்டை.
இவைகள் உடைகள், அதனால் ஏற்படுவது தோற்றம் மட்டுமே!
தோற்றதிற்கு ஆங்கிலத்தில் அப்பியரன்ஸ் என்று ஒரு சொல் இருகிறது.
ஆக ஒருவரது உடையை வைத்து அவரது கேரக்டரை முடிவு செய்ய முடியாது.
தோற்றம் என்பது கேரக்டர் அல்ல!


தம் அடித்தல், தண்ணி அடித்தல்!

இதை சேர்க்க காரணம், எனது பக்கத்து வீட்டில் இருவர் பேசி கொண்டது.
அவன் கேரக்டர் சரியில்லைப்பா!
அப்படியா என்ன பண்றான்?
தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு!

எனக்கு எந்திரிச்சி போய் வாதம் பண்ணலாம்னு தோணுச்சு!
இணையத்துலனா திட்டோட போயிரும், நேர்ல அடிவிழ வாய்ப்பிருக்கிறதுனால அந்த எண்ணத்தை விட்டுடேன்.

அவர்களுடய பதிலில் பதில் இருக்கிறது.

தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு!

அதாவது பழக்கம் இருகிறது!

பழக்கம் எப்படி கேரக்டர் ஆகும்!

சிலர் சாப்பிடும் முன் கை கழுவியே ஆக வேண்டும் என அடம்பிடிப்பர்.
சிலருக்கு சாப்பிடும் போது படிக்க புத்தகம் வேண்டும்.
சிலருக்கு தினமும் சாப்பாட்டில் அசைவம் வேண்டும்.

இவையெல்லாம் பழக்கங்கள் தானே!
பழக்கம் என்றால் ஹேபிட்ஸ் தானே, அது எப்படி கேரக்டர் ஆகும்.

ஒருவருடய பழக்கங்கள் உங்களுக்கு பிடித்தே ஆக வேண்டிய கட்டாயமில்லை தான், அதற்காக அவரது கேரக்டர் சரியில்லை என புரளியை கிளப்பக்கூடாது இல்லையா!


சரி வேறு என்னாவாக இருக்கும்,
கோபப்படுதல்?

பக்கத்துல வந்துட்டோம்!
கேரக்டர்ன்னாலே தமிழ்ல குணாதிசியம்னு அர்த்தம்.
அதனால குணங்கள் அதுல சம்பந்தப்படிருக்கு, ஆனா பாருங்க இந்த கோபத்த அதுல சேர்க்க முடியாது,

தன் மீது அனைவருக்கும் பயம் இருக்கனும்னு சில உயரதிகாரகள் எப்ப பார்த்தாலும் முகத்தை கோபமாகவே வைத்திருப்பார்கள், உள்ளூர சிரிப்பு இருக்கும். அது ஒருவகையான பழக்கம் ஆகிவிடுவதால் அது பழக்கத்தில் பாதி சேர்ந்து விடுகிறது.

இறுதியா கேரக்டர்ன்னா என்ன?

நமது தனிப்பட்ட குணம்!
கேரக்டர் சரியில்லைனா?

அதுவும் நமது குணம் தான்!

ஒரு நண்பர் என்னிடம் உதவி கேட்கிறார்!

என்னால் முடிந்தால் செய்ய வேண்டும்! அதற்காக அவருக்கு உறுதி அளிக்கிறேன் கண்டிப்பாக செய்கிறேன் என்று ஆனால் செய்யவில்லை, இதனால் அவரும் பாதிக்கபடுவார்.

இதுபோல் பல சொல்லலாம்!
வருகிறேன் என்று வராமல் போவது
தருகிறேன் என்று சொல்லி தராமல் போவது!

இம்மாதிரியான கமீட்மெண்டுகளை கொடுத்துவிட்டு அதை காற்றில் விடுவது தான் மோசமான கேரக்டர்!

ஒருவருடய தோற்றமோ, பழக்கவழக்கமோ மற்றவர்களை பாதிக்க வாய்ப்பில்லை.
ஆனால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்ற படவில்லையெனில் நம்மால் அவரும் பாதிக்கப்படுவார். அம்மாதிரியான செயல்களை செய்பவர்களே மோசமான கேரக்டர் உள்ளவர்கள்.

நமது கேரக்டர் சரியாக இருக்க!
கொடுத்த வாக்குகளை சரியாக நிறைவேற்றுவோம்.

***********************************

எங்கேயும் படிக்கல
நானா தான் எழுதியிருக்கேன், கண்டிப்பாக தப்பு இருக்கும், இருக்கும் பட்சத்தில் எனக்கு தெளிவு படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு

48 வாங்கிகட்டி கொண்டது:

கும்க்கி said...

என்னா...?

அ.மு.செய்யது said...

First pocha ????

அ.மு.செய்யது said...

உள்ளிருப்பை உறுதி செய்கிறேன்.


படிச்சிட்டு வரேன்.

ஜோதிபாரதி said...

போச்சே! போச்சே!


வால் கூட ஒரு பாத்திரம் தான்!

கும்க்கி said...

ஒருவருடய தோற்றமோ, பழக்கவழக்கமோ மற்றவர்களை பாதிக்க வாய்ப்பில்லை.
ஆனால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்ற படவில்லையெனில் நம்மால் அவரும் பாதிக்கப்படுவார். அம்மாதிரியான செயல்களை செய்பவர்களே மோசமான கேரக்டர் உள்ளவர்கள்.

ஊருக்கு உபதேசமெல்லாம் சரி..அந்த அமெரிக்கன் காண்ராக்ட் மெய்ல் வந்துதே ..அத வாங்கித்தரேன்னு சொல்லீட்டு ஏமாத்திபுட்டீங்களே ராசா...

கார்க்கி said...

குருவி படத்துல வேலு ஒரு கேரக்டர். அவங்க அப்பா சிங்கமுத்து ஒரு கேரக்டர். வில்லன் கோச்சா ஒரு கேரக்டர். அவன் நண்பன் கொண்டாரெட்டி ஒரு கேரக்டர். அவன் தம்பி ஒரு கேரக்டர். அப்புறம்...

கணினி தேசம் said...

//எனக்கு எந்திரிச்சி போய் வாதம் பண்ணலாம்னு தோணுச்சு!
இணையத்துலனா திட்டோட போயிரும், நேர்ல அடிவிழ வாய்ப்பிருக்கிறதுனால அந்த எண்ணத்தை விட்டுடேன்.//

புத்திசாலி

கணினி தேசம் said...

//கேரக்டர்ன்னா என்ன?
//

ஒரு எழுத்து


Am I right?

கணினி தேசம் said...

//
இறுதியா கேரக்டர்ன்னா என்ன?

நமது தனிப்பட்ட குணம்!
கேரக்டர் சரியில்லைனா?

அதுவும் நமது குணம் தான்!//

//நமது கேரக்டர் சரியாக இருக்க!
கொடுத்த வாக்குகளை சரியாக நிறைவேற்றுவோம்.//

அது மட்டுமல்ல....
வாக்குகள் கொடுக்காத சிலவும் சேர்ந்தது தான் கேரக்டர்

அன்பு, அக்கறை, மரியாதை, வாய்மை என இன்னும் பல சேர்ந்ததுதான் கேரக்டர் !!

நட்புடன் ஜமால் said...

நல்ல கேள்வி ...

தமிழச்சி said...

//கேரக்டர்ன்னா என்ன?//

கேரக்டர் என்பது அவரவர் சிந்தனைக்கேற்ற தன்னம்பிக்கையில் இருப்பது.

தன்னம்பிக்கை என்றால் ஒரளவு அது பகுத்தறிவில் காலூன்றி நிற்கவேண்டும். இல்லையெனில் அந்த சுயநம்பிக்கை ஓர் உயிரின் தற்காப்பு முயற்சியில் ஓர் அம்சமாகிவிடுகிறது. எந்த ஒரு உயிரை தொடர்ந்து உயிர் வாழத் துடித்து ஆவன அனைத்தும் செய்யும், Instinct of self - Preservation. அதுதான் தற்பாதுகாப்பு - இயல்பு ஊக்கம் இது இல்லையெனில் அந்த உயிர் தளர்ந்து அழிந்துவிடும்.

கே.ரவிஷங்கர் said...

பதிவு நல்லா இருக்கு. என் எண்ணங்கள்:-
காரக்டர்ன்னா குணம்(நீங்க சொன்ன மாதிரி).கொஞ்சம் யோசிச்சா நல்ல காரக்டர் உள்ள ஆளுன்னா ஒழுக்கம்னு வரும் அல்லது ஆளுமை(personality)ன்னுகூடச் சொல்லலாம்.

ஆளுமை(personality)ன்னா பழகும் விதம்,எதையும் வித்தியாசமாக உள் வாங்கும்
திறன்,ஐடியா/யோசிக்கும் விதம்,கலகலன்னு பேச்சு –இதெல்லாம்தான் உங்கள்
ஆளுமை(personality)யை உருவாக்குகிறது. நல்ல ஹைட்டோ முடியோ அல்ல.

(நம்ம ஊர்ல personalityனா ஆளு நல்ல ஹைட்டு.வாட்ட சாட்டம்,சிவப்பு கலரு., மார்ல புசு புசுன்னு சத்ய ராஜ் கணக்கா முடி.இது மகா தப்பான அர்த்தம். அசால்டான்ற மாதிரி.)

கோயம்பத்தூர்காரங்க உபசரிப்பு இருக்குதே அது அவங்க உடன் பிறந்த
காரக்டர்

காரக்டர்லெஸ்ன்னு சொல்லும் போது அர்த்தம் மாறும் வால்பையன்.எப்படி?
அவர் முஞ்சி காரக்டர்லெஸ்ஸா இருக்குன்னா “எதிலேயும் இண்ட்ரஸ்ட் இல்லாத, ஒரு ஆர்வம இல்லாத, சொன மாதிரி/மத்து அல்லது மக்குத்தனமா இருக்கிற மனிதர்கள். நடிகர் பிரதாப் போத்தன் மூஞ்சி காரகடர்லெஸ்ஸா “விளக்கென்ன குடிச்சா மாதியே இருக்கும்”

என் வீட்ட சில மாற்றங்கள் செஞ்ச ஆனா அதோட பேசிக் காரகடர மாத்தல.(அதாவது அந்த old look கான, கிணறு,வாழை மரம்,மொட்டமாடி,வாசத்திண்ண,மல்லிப் பந்தல் எல்லாத்தையும் அப்படியே வச்சுட்டேன்.)எனக்குத் தெரிஞ்சத போட்டுட்டேன்.

பாபு said...

சரியாதான் சொல்லியிருக்கீங்க

தமிழச்சி said...

கேரக்டர் பற்றி இங்கிலாந்தை சேர்ந்த தத்துவஞானி ஜேம்ஸ் ஆலன் மிக அழகாக சொல்லியிருக்கிறார். அதையும் கொஞ்சம் படிச்சிடுங்க வாலு

இணைப்பு :

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=04&article=313


http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=04&article=246

பழையபேட்டை சிவா said...

தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு!

அதாவது பழக்கம் இருகிறது!

பழக்கம் எப்படி கேரக்டர் ஆகும்!

பழக்கம் என்றால் ஹேபிட்ஸ் தானே, அது எப்படி கேரக்டர் ஆகும்.

//

இப்படித்தான்....

குடிகாரன் பேச்சி விடிஞ்சா போச்சி!!!

வருகிறேன் என்று வராமல் போவது
தருகிறேன் என்று சொல்லி தராமல் போவது!

இம்மாதிரியான கமீட்மெண்டுகளை கொடுத்துவிட்டு அதை காற்றில் விடுவது தான் மோசமான கேரக்டர்.

இதுபோல் பல சொல்லலாம்!

my Openion
பழக்கம் = கேரக்டர்

he he he..

அண்ணன் வணங்காமுடி said...

கேரக்டர்

இப்படியும் ஒன்னு இருக்கா...

நான் என்னமோ A, B, C,... Z, ன்னு நினைத்தேன்...

இப்படியும் ஒரு கேரக்டர்...

Mahesh said...

நல்ல பதிவு....

ஒருத்தரோட 'மனஇயல்பு' - attitude தான் கேரக்டரா வெளிப்படுதுங்கறது என் எண்னம்.

தமிழன்-கறுப்பி... said...

?

தமிழன்-கறுப்பி... said...

சத்தியராஜ் கிட்ட கேட்டா சூப்பரா சொல்லுவாரு.. :)

தாமிரா said...

இன்னாமேரி சிந்திக்கிற தல.. சிந்தனைச்சிப்பின்னா அது நீதான்.!

ஆ.ஞானசேகரன் said...

மன்னிக்கும் பழக்கம், நல்ல கேரக்டராக இருக்கலாம் என்பது என் எண்ணம்

ச்சின்னப் பையன் said...

நல்ல கேள்வி ...

ச்சின்னப் பையன் said...

// கார்க்கி said...
குருவி படத்துல வேலு ஒரு கேரக்டர். அவங்க அப்பா சிங்கமுத்து ஒரு கேரக்டர். வில்லன் கோச்சா ஒரு கேரக்டர். அவன் நண்பன் கொண்டாரெட்டி ஒரு கேரக்டர். அவன் தம்பி ஒரு கேரக்டர். அப்புறம்...
//

:-))))))))))))

கார்த்திக் said...

// ஊருக்கு உபதேசமெல்லாம் சரி..அந்த அமெரிக்கன் காண்ராக்ட் மெய்ல் வந்துதே //

என்ன நடக்குது இங்க.

Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா!

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே நம்ப ஆளுங்க நிறைய பேரு கேரக்டருக்கும், பிகேவியருக்கும் வித்யாசம் தெரியாம குழம்புவாங்க. அதுதான் தண்ணி, சிகிரெட் மாதிரி பிகேவியரை கேரக்ட்டர்னு சொல்றது.

ஆகாயமனிதன்.. said...

CARE'ACTOR
எது எப்படியோ ? உங்க கேரக்டர் நல்லதுங்கன்னே...

Maximum India said...

கேரக்டர் என்பதற்கு பண்பு அல்லது நடத்தை என்பது சரியான பொருளாக இருக்கும். மேலும் இது ஒரு மனிதனின் ஒரு குறிப்பிட்ட தனி பண்பினைக் குறிக்காமல் பல பண்புகளின் கூட்டுக் கலவையையே குறிக்கிறது என்று கருதுகிறேன். ஒருவர் நேர்மையானவர், மற்றவர்களுக்கு உதவக் கூடியவர், உங்கள் பதிவில் வருவது போல சொன்ன சொல்லை காப்பாற்றக் கூடியவர் என்றெல்லாம் இருந்தால் அவருடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி.

ஸ்ரீதர் said...

நான் ரொம்பல்லாம் confuse பண்ணிக்க மாட்டேன்.எனக்கு ஓசில யார் யார் தண்ணி வாங்கி தர்றாங்களோ அவுக எல்லாம் நல்லவுக.நல்ல கேரெக்டர்.ok?

அறிவன்#11802717200764379909 said...

>>அவர்களுடய பதிலில் பதில் இருக்கிறது.

தம்மு, தண்ணி எல்லா பழக்கமும் இருக்கு!

அதாவது பழக்கம் இருகிறது!

பழக்கம் எப்படி கேரக்டர் ஆகும்!

சிலர் சாப்பிடும் முன் கை கழுவியே ஆக வேண்டும் என அடம்பிடிப்பர்.
சிலருக்கு சாப்பிடும் போது படிக்க புத்தகம் வேண்டும்.
சிலருக்கு தினமும் சாப்பாட்டில் அசைவம் வேண்டும்.

இவையெல்லாம் பழக்கங்கள் தானே!>>

சூப்பரு வாலு..எப்படி இப்படி????

புல்லரிக்குது போங்க..

சிலருக்கு வாரத்துக்கு ஒரு வாட்டி தண்ணி அடிக்கற பழக்கம் இருக்கும்..

சிலருக்கு வாரத்துக்கு ஒரு வாட்டி குட்டின்னு ஒரு பழக்கம் இருக்கும்...

சிலருக்கு வாரத்துக்கு ஒரு வாட்டி புதுசா யாராவது ஒரு பொன்ன தொட்டு பாக்குற பழக்கம் இருக்கும்...

சிலருக்கு பணம் குடுத்தாக்க கடத்துற,போட்டுத் தள்ளற பழக்கம் இருக்கும்...

எல்லாம் பழக்கம்தானுங்களே...

இதப் போய் காரக்டர் கருமம்னு சொல்றது தப்புதானுங்களே..

ஜீவன் said...

ம்ம் நெறைய தோணுது உடனே வரமாட்டேங்குது
அதான் நம்ம கேரக்டர்!

kishore said...

இத படிச்சி கருத்து சொல்ற நான் என்ன கேரக்டர்...?

RAMYA said...

கார்த்திக் said...
// ஊருக்கு உபதேசமெல்லாம் சரி..அந்த அமெரிக்கன் காண்ராக்ட் மெய்ல் வந்துதே //

என்ன நடக்குது இங்க.
//

கார்த்திக் இது சூப்பர்!!
பதில் வந்ததா ?? இல்லையா ???

RAMYA said...

கேரக்டர்
=======

புத்திசாலித் தனமான விளக்கங்கள் அருமையா எழுதி இருக்கீங்க!!

பட்டாம்பூச்சி said...

ரொம்ப யோசிக்கிறீங்க தல :).

Anonymous said...

நள்ள நகைசுவை ஆனா அதீ சமயம் அர்த்தமுள்ள பதிவு. ரொம்ப ரொம்ப நள்ள பதிவு தள!. வால் எளுத்துக்கு ஒரு அடயாலமா இதைஸ் சொல்லழாம்

வால்பையன் said...

// கும்க்கி said...

என்னா...?//

என்ன என்னா?

வால்பையன் said...

அ.மு.செய்யது said...

First pocha ????//

வட போச்சே மாதிரி இருக்கு!

வால்பையன் said...

//ஜோதிபாரதி said...
போச்சே! போச்சே!
வால் கூட ஒரு பாத்திரம் தான்!//

ஆமாம் நானும் பாத்திரம் தான்!

வால்பையன் said...

//அந்த அமெரிக்கன் காண்ராக்ட் மெய்ல் வந்துதே ..அத வாங்கித்தரேன்னு சொல்லீட்டு ஏமாத்திபுட்டீங்களே ராசா...//

என்ன கொடுமை இது!
அந்த காண்ட்ராக்ட போய் கேட்கிறிங்களா

வால்பையன் said...

//கார்க்கி said...

குருவி படத்துல வேலு ஒரு கேரக்டர். அவங்க அப்பா சிங்கமுத்து ஒரு கேரக்டர். வில்லன் கோச்சா ஒரு கேரக்டர். அவன் நண்பன் கொண்டாரெட்டி ஒரு கேரக்டர். அவன் தம்பி ஒரு கேரக்டர். அப்புறம்...//

குருவி உங்கள எந்த அளவு பாதிச்சிருக்குன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது சகா!

வால்பையன் said...

நன்றி கணிணிதேசம்
//கேரக்டர்ன்னா என்ன?
//ஒரு எழுத்து
Am I right?//

புல்லரிக்குது போங்க!

//அன்பு, அக்கறை, மரியாதை, வாய்மை என இன்னும் பல சேர்ந்ததுதான் கேரக்டர் !!//

குணம் அனைத்தும் கேரக்டரில் தான் சேரும், இருந்தாலும் வாக்கு காப்பாற்ற வேண்டியது முக்கியன்னு காட்டவே அதை மின்னிலை படித்தி எழுதியுள்ளேன்

வால்பையன் said...

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி தமிழச்சி
கேரக்டர் குறித்த நீங்கள் கொடுத்த லிங்கில் முதலாவது வழக்கம் போல் படிக்கமுடியவில்லை, இரண்டாவது தெரிகிறது.
(படத்தை மாத்துங்க வெறும் இயற்கை காட்சிகளா வருது)

நன்றி ரவிஷங்கர்
அதே தான், குணங்கள் தான் கேரக்டர்.
நல்ல குணங்கள் நல்ல கேரக்டர்

வால்பையன் said...

நன்றி பாபு

நன்றி பழையபேட்டை சிவா
இதுக்கு தான் மாங்கு மாங்குன்னு அடிச்சிகிட்டு இருக்கேன், நீங்க திரும்பவும் அதாங்கிறிங்களே.

நன்றி அண்ணன் வணங்காமுடி

நன்றி மகேஷ்

நன்றி தமிழன்-கறுப்பி
ஆமாம்ல

நன்றி தாமிரா
பட்டமெல்லாம் பலமா இருக்கு!
ஆப்பு ரெடியாகுதா?

நன்றி ச்சின்னபையன்

நன்றி கார்த்திக்
உங்கள தான் கேட்கிறாரு

நன்றி அன்பு

நன்றி அப்துல்லா அண்ணே
நான் எதுக்கு பதிவு போட்டேன்னு சரியா பிடிச்சிடிங்க!

நன்றி ஆகாய மனிதன்

வால்பையன் said...

நன்றி மோகன்பிரபு
அதே தான், ஆனால் பெரும்பான்மையான குணங்களை தொட்டு காட்டாமல் ஒன்றை மட்டும் உதாரணதிற்கு தந்திருக்கிரேன்

நன்றி ஸ்ரீதர்
ஐ லைக் யுவர் கேரக்டர்

நன்றி அறிவன்
குட்டியோ, புட்டியோ அது பழக்கம் தான்.
குட்டிக்கு காசு கொடுக்காம போறது கேரக்டர்.

பழக்கம் என்பது சோசியல் கேபிட்ஸ் என்றும் கெட்ட பழக்கம் என்றும் பிரிக்கப்பட்டு விட்டது. இன்று தவறு நாளை சரியென ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் கேரக்டர் வேற. விரிவான வாததிற்கும் நான் தயார்.

வால்பையன் said...

நன்றி ஜீவன்
:)

நன்றி கிஷோர்

நன்றி ரம்யா

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி அனானி
என்னை விட கொஞ்சமே எழுத்துப்பிழைகள் அதிகம்.

சிவாஜி said...

வாழ் அண்ணா... உங்கள் பதிவிலிருந்தும் பின்னுட்டங்கலிளிருந்தும் நான் கேரக்டர் என்ற வார்த்தைக்கு அர்த்தங்களாக எடுத்துக் கொண்டவை.

கேரக்டர்,தோற்றம், பழக்கவழக்கம, ஒழுக்கம், ஆர்வம, தனிப்பட்ட குணம்!, பண்புகளின் கூட்டுக் கலவை, அழகு, அன்பு, அக்கறை, மரியாதை, வாய்மை,சிந்தனை, தன்னம்பிக்கை, சுயநம்பிக்கை,தற்காப்பு முயற்சி,எண்ணங்கள்,கோபப்படுதல்,ஆளுமை,குணாதிசியம்,பயம்,பழகும் விதம்,யோசிக்கும் விதம், பேச்சு,புத்திசாலித் தனம,உபசரிப்பு,உதவக் கூடிய, பழக்கம் எப்படி கேரக்டர் ஆகும்!, உடன் பிறந்த
காரக்டர், நீங்க,மனஇயல்பு' - attitude,கேள்வி,பண்பு,நான், சிரிப்பு,உறுதி ,வாதம்,நடத்தை,நகைசுவை,நேர்மை,மாறும்,மன்னிக்கும் பழக்கம்,கருத்து,பலமா,பொறுப்பு,வார்த்தை,நன்றி,

வால்பையன் said...

சிவாஜி!

கொன்னுட்டிங்க போங்க!

!

Blog Widget by LinkWithin