கொள்கை...

இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம்.
நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் மாற்ற முடியாது. அதை அனுபவமா எடுத்துக்கமே தவிர அதை நினைத்து புலம்புறது வேஸ்ட்.(இது ஏன் முதல்ல வருதுன்னா அதை கடைபிடிக்கத்தான் படாதபாடு படுறேன்)
என்னை நியாயபடுத்திக்க யாரையும் குற்றம் சாட்டக்கூடாது
பிச்சை, உதவி என்ற வார்த்தையே இல்ல, இல்லாதவங்களுக்கு செய்யுறது நம் கடமை
குற்ற உணர்ச்சி இல்லாம வாழ ஓப்பனா இருக்கனும் அதுக்கான முடிந்தவரை உண்மை பேசனும்.
வாழ்க்கை ஒரு முறை தான். அதை நம்பனும். நான் வாழ்ந்த தடத்தை பதிக்கனும். அட்லீஸ்ட் வாழ்ந்தேன்னு காட்டனும்
என் சந்தோசத்துக்கு யாருக்கும் செலவு வைக்கக்கூடாது. அதை கடனா நினைத்து அடுத்த முறை கொடுத்தரனும்
ஆலோசனைகும் அட்வைஸ்க்கும் வித்தியாசம் தெரியாவங்க நிறைய பேரு இருக்காங்க, அதுனால உரிமை எடுத்துக்கக்கூடாது
எனக்கு இழப்பே ஏற்பட்டாலும் தனி மனித உரிமைக்காக மட்டுமே பேசனும். யாரையும் குற்றம் சாட்டக்கூடாது
எதிர்காலம் குறித்த திட்டமிடல் வேஸ்ட். அது அந்த நொடியில் என்ன தேவையோ அதை எடுத்துக்குது, இப்பவே திட்ட்மிட்டு ஒன்னு ஆகபோறதில்ல
சக மனிதர்களின் அடையாளம் பார்க்கக்கூடாது.
பிடிக்கலைன்னு சொன்னா பொண்டாட்டியா இருந்தாலும் தொடக்கூடாது
அழுகை வந்தா அழனும், சிரிப்பு வந்தா சிரிக்கனும்
என் குழுந்தைங்க பூமிக்கு வர நான் ஒரு கருவி தாம், நான் அவங்களுக்கு ஓனர் இல்ல
இறப்பு என்பது மனிதத்தின் விடுதலை. விட்டு போறோம் அவ்ளோ தான். நாம இருக்கனும்னா இங்கேயே எதாவது பண்ணிட்டு போகனும். மறுபிறவின்னு ஒன்னு இல்ல

பரிணாமம் நின்று விட்டதா?

கேள்வி கேட்டவர் Mr GK

//Hello Mr. Raj Arun. We saw your posts involving answer to some scientifical questions. We have a below query, please clarify if possible.

As per Darvin theory, most of the researchers accept that humans came from Apes. Doubt is, why now that evolution has been stoped? Why nowadays human not evolved from monkey ? And both human & monkey two species exist parallelly. Why? Please explain in tamil or english.//

மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தான் என நேரடியாக புரிந்துக்கொள்ளக்கூடாது. குரங்களிலும் பல வகை உண்டு. பிக்மி மார்மோசெட் என்ற உலகின் மிகசிறிய வகை குரங்கும் உண்டு( மரத்தை பிடித்தது போல் நம் விரலை பிடித்துக்கொள்ளும்
 Pygmy marmoset இந்த பெயரை கூகுள் செய்யவும்) கொரில்லா வகை குரங்குகளும் உண்டு.குரங்கு வகை என்பதை ஒரு மரமாக கொண்டால் குரங்கு வகைகள் அனைத்தும் அதில் இருக்கும் கிளைகள். அந்த கிளையில் உச்சாணி கொம்பில் உயர்ந்து நிற்பது மனிதன் என்ற உயிரினம் எனலாம். அதற்கு அடுத்து போனோபோ என்ற சிம்பன்சியின் அடுத்த படிநிலை குரங்கும், அடுத்து சிம்பன்சியின் உள்ளது. இவைகள் ஆயுதத்தை பயன்படுத்துவதில் மனிதனுக்கு நெருக்கமாக உள்ளன.

பரிணாமம் நின்று விட்டது என புரிந்து கொள்வது, பூமி சுற்றவேயில்லை. சுற்றினால் நமக்கு என் தெரிவதில்லை என்ற கேள்விக்கு சமமாக பார்க்கிறேன். முன்னது மிக மெதுவாக நடைபெறக்கூடியது, பின்னது மிக வேகமாக நடைபெறக்கூடியது. பரிணாமத்தை மனிதம் நமக்கு கிடைத்த சுவடுகள் வைத்து புரிந்துக்கொண்டான். கண் முன் கிடைத்த ஆதாரங்களின் அதிக பட்ச சாத்தியகூறுகள் அறிந்து ஏற்றுக்கொண்டான்.பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதில் மனிதனுக்கு இருக்கும் பெரும் தடை அது படைப்புவாத கொள்கையை மறுக்கிறது. படைப்புவாத கொள்கை பொய் என்றால் அங்கே கடவுளுக்கு வேலை இல்லாமல் போகிறது. இது நாள் வரை தான் நம்பி வந்த கடவுள் பொய் என்பதை மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வாடிகனே பரிணாமத்தை ஏற்றுக்கொண்டாலும் இன்றும் பூமி தட்டை தான், கோள வடிவம் இல்லை என்றும், சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்றும் நம்பும் அதற்கு மாறாக பேசுபவர்கள் சாத்தானின் வாரிசுகள் என உண்மைய ஏற்றுக்கொள்ள மறுக்கும் மதவாதிகள் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

பரிணாமம் குறித்து எனது வலைபூவில் தொடர் கட்டுரை எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது படித்து கேள்விகள் கேட்கவும்

சேது சமுத்திர திட்டம்...

//சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது : மத்திய அரசு உறுதி.//

வட அமெரிக்காவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் இடையில் பனாமா என்ற நாடு இருக்கிறது. இரு அமெரிக்காவிற்கு இடையில் நீர் இல்லை. நிலபகுதி தான்.

கடல் வழி பயணத்திற்கு அந்த நிலபகுதி மட்டுமே தடையாக இருப்பதை அறிந்து 40 ஆண்டுகள் வேலை செய்து கிட்டதட்ட விபத்தில் 40000 மக்கள் இறந்து, நிலபகுதி ஏற்றம் இறக்கமாக இருப்பதால் செயற்கையாக ஒரு ஏரியை உருவாக்கி

அதும் அந்த ஏரியை கடப்பதை யூடியூப்பில் தேடிப்பாருங்கள். வாயில் ஈ போயிரும், மூன்று கட்டமாக நீரை உயர்த்தி அடுத்த உயரத்திற்கு தள்ளி கடைசியில் கடலுக்குள் தள்ளப்படும்.

இன்றைய நிலைக்கு பனமா கால்வாயால் பனாமா நாட்டுக்கு பல மில்லியன் மில்லியன் டாலர் லாபம். கடக்கும் ஒவ்வொரு கப்பலும் பணம் கொடுக்க வேண்டும், கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் சில மில்லியன் டாலர் லாபம். ஏன்னா சுற்றி போக வேண்டிய அவசியம் இல்லை என்பதால் எரிபொருளும் நேரமும் மிச்சம்சேது சமுத்திரம் வந்தால் கொழுப்பு துறைமுகத்திற்கு மாபெரும் நட்டம். இது அனைத்து அரசியல் வாதிகளூக்கும் தெரியும், இலங்கையை சுற்றிச்செல்ல தேவையில்லை என்பதால் சேது சமுத்திரத்தில் அமைக்கப்படும் டோல்கேட்டில் பணம் கட்டி செல்ல அனைத்து நாட்டு கப்பல்களூம் ஒப்புக்கொள்ளும்

மேலும் எரிபொருளுக்கும், உணவுபொருள்களுக்கும் அருகில் இருக்கும் தூத்துகுடி துறைமுகத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதால் அங்கே அதிக வேலை வாய்ப்பும், புதிய தொழிலும் பெருகும், தூத்துகுடியை நிர்மூலமாக்கும் ஸ்டெர்லைட்டை தூக்கிவிடலாம்.

உண்மையில் சேது சமுத்திர திட்டம் ராமர் பாலம் என்ற காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்படவில்லை. இலங்கை நாட்டுடன் செய்த ஒப்பத்தத்தால் எதாவது ஒரு காரணம் சொல்லப்படுகிறது. நன்றாக கவனித்துப்பாருங்கள் இலங்கையுடன் முரண்படும் அரசியல் தலைவர்கள் மட்டுமே சேது சமுத்திர திட்டத்தை தீவிரமாக ஆதரிப்பார்கள்

நியூட்ரினோ ஆய்வு!

ஒரு பக்கம் ஹாக்கிங்கை படி்கிறிங்க. இன்னொரு பக்கம் நியூட்ரினொ திட்டத்தை எதிர்க்கிறீர்கள் என்பவர்களுக்கு பதில்

1 ஹாக்கிங் கடவுள் துகள் என்ற ஹிக்ஸ்போஸான் முயற்சியை தேவையற்றதுன்னு சொன்னதா தான் எனக்கு ஞாபகம்.

2 கடலில் கொட்டிய எண்ணெயை அகற்ற வாளி பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம்முடயது. அதற்கு முறையான கருவிகள் வாங்க நிதி ஒதுக்கலாம்

3 புயல் எச்சரிக்கை புயல் வருவதற்கு முன்னர் அளிக்கப்பட வேண்டாம். ஆனால் மீனவர்கள் கடலுக்கு சென்ற பின்னர் புயல் வந்த பின்னர் புயல் எச்சரிக்கை அளிக்கப்பட்ட பெருமைமிகு தொழில்நுட்பம் நம்முடையது. அதை மேம்படுத்த நிதி ஒதுக்கலாம்

4 குரங்கிணி பகுதியில் காட்டுதீ ஏற்பட்டு 12 உயிர்கள் பலியாகியுள்ளது. வன துறையின் தாமதமே அதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. அதனை மேம்படுத்த நிதி ஒதுக்கலாம்

5 வளர்ந்த நாடுகளை விட அறிவியலில் இந்தியா 20 வருடங்கள் பின் தங்கி உள்ளது. நியூட்ரினோ ஆராய்ச்சி என்பது இதுவரை யாரும் செய்யாமல் நாம் புதிதாக செய்வதல்ல. எப்படி விமானம், அணூ உலை வெளிநாடுகளில் வாங்கினமோ அதே தான் இப்போதும் உபகரணம் வாங்க வேண்டும். அது தேவையில்லாத நிதி விரயம்6 போக மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. வளர்ந்த நாடுகளில் கரும்பு, ஆமணக்கில் இருந்து எடுக்கப்படும் எத்தனால், மெத்தனால் கொண்டு பயோ டீசல் பயன்படுத்தபடுகிறது. ஒரு பக்கம் விவசாயமும் பாதுகாக்கப்படுகிறது, மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது.

7 முன்னாடியே சொல்லியிருக்கனும்
தெர்மாகோல் போட்டு நீர் ஆவியாகமல் தடுப்பது தண்ணீர் தொட்டிக்கு தான். ஏரிக்கு அல்ல. நீரில் இருந்து மின்சாரம் எடுப்பதால் நீரின் சுவை குறைகிறதுன்னு ஒரு மத்திய அமைச்சர் சொன்னார், சோலார் மின்சாரம் பயன்படுத்துவதால் பூமியில் வெப்பம் குறையும்னு ஒரு அமைச்சர் சொல்றார். இப்படி விஞ்ஞானிகளை வச்சிகிட்டு நியூட்ரினோ ஆராய்ச்சி தேவையா?

முதல்ல கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பா இருக்கான்னே தெரியல

சந்திர கிரகணம்!....

இத்தனை அறிவியல் வளர்ச்சியிலும் சங்கராந்திக்கு விளக்கு போடு, சந்திர கிரகணத்துக்கு பரிகாரம்ட பண்ணுன்னு வாட்ஸ் அப்பில் ஃபார்வேர்ட் செய்பவர்கள் தான் மூட நம்பிக்கைகளால் மட்டுமே நிரம்பிய இந்து மதத்தை காப்பாற்றுபவர்கள்.

இந்து மதத்தின் பின்னால் அறிவியல் உள்ளது, ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உள்ளது என்பது எல்லாமே கப்சா தான். 2000 ரூபாய் நோட்டில் எலக்ட்ரானிக் சிப் இருந்ததே அப்படி பார்பனர்களால் கிளப்பி விடப்பட்ட வதந்தி.

தேங்கா ஏண்டா உடைக்கிற?
கஷ்டங்கள் சிதறி போகும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க.
இகண்ணாடிய திரும்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்னு அப்பவே கேட்ருந்தா கொஞ்சமாச்சும் அறிவு வளந்துருக்கும். இவனுங்க தான் செக்கு மாடாச்சே.

சந்திர கிரகணம் என்பது ராகு என்ற பாம்பு சந்திரனை விழுங்கும் காட்சின்னு இன்னும் நம்பும் ஒரு கூட்டம் இருக்கு. சந்திர கிரகணம் என்றால் என்ன அது ஏன் ஏற்படுகிறது என்பதை 5 ஆம் வகுப்பிலே படித்தாலும் அதெல்லாம் இவங்க மண்டையில் ஏறவே இல்லைசூரிய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கோளும், துணை கோளும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும், இரவில் பார்க்கும் சந்திரனின் ஒளி அதன் சொந்த ஒளி அல்ல, சூரிய ஒளியின் பிரதிபலிப்பு. அந்த ஒளியை சந்திரன் மேல் படாமல் பூமி குறுக்கே வரும் பொழுது சந்திரன் மேல் நிழல் படியும்

அதையே சந்திர கிரகணம் எங்கிறோம், அதே போல் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும் பொழுது சூரிய கிரகணம் ஏற்படும். பூமி உருண்டை என கண்டுபிடித்ததில் கிரகணத்திற்கு முக்கிய பங்குண்டு, சந்திரன் மேல் விழும் நிழல் பூமியின் நிழல் என்பதை அறிந்த பொழுது பூமி உருண்டை என்பதும் கண்டறியபட்டது

சொந்த செலவில் சூனியம்!

மக்களின் இந்த இன்னலுக்கு காரணம் மக்களே தான் என்பதை உணராத வரை இந்த இன்னல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

திமுக அமைச்சர்களுக்கு சுதந்திரம் இருந்தது. சிபாரிசில், வாரிசு அடிப்படையில் வந்தவர்கள் சிலரை தவிர மற்றவர்களுக்கு செயல் திறனும், மக்கள் நலனும் இருந்தது. ஆனாலும் மொத்த குடும்பமும் கட்சியை ஆக்கிரமிக்க பிறகு அவர்களால் பெரும்பான்மை வெற்றி பெற முடியவில்லை.

அதிமுக முழுக்க முழுக்க ஒன் மேன் ஆர்மியாக இருந்தது என்பதை சமீபகாலமாக நாம் பார்த்துகொண்டு தான் இருக்கிறோம். 110 அறிக்கைகள் வந்த போதே அதை எழுதினேன். மற்ற யாருக்கும் அமைச்சராக இருக்கும் தகுதி கூட இல்லையென்று.

சட்ட மன்றத்தில் அமைச்சர்கள் எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்கிறார்களே என கேட்கலாம். சட்டமன்றம் கூடும் முன்னர் கேள்வி கேட்க விரும்புபவர் கேள்வியை சபாநாயகரிடன் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு அவர் நேரம் ஒதுக்கும் கேப்பில் துறை சார்ந்த அதிகாரிகள் புள்ளி விபரங்களை எடுத்து கொடுத்து விடுவார்கள். அதை பார்த்து தான் படிப்பார்கள்.நவநீதகிருஷ்ணன்னு ஒரு அதிமுக எம்.பி. பாராளுமன்றத்தில் காஷ்மீர் பற்றி பேச அனுமதி கேட்டிருந்தார். அவரே எதிர்பார்க்காமல் அனுமதி அளிக்கப்பட்டது. மாச கணக்காக ஊரடங்கு உத்தரவு, மக்கள் மேல் பெல்லட் குண்டுகள் வீச்சு என பேச எவ்வளோ விசயங்கள் இருந்தும் அந்த எம்.பி.
காஷ்மீர் ப்யூட்டிபுல் காஷ்மீர்னு பாட்டு பாடினார்.

முதன் முதலில் அப்பொழுது பெரும்பான்மைக்கு அதிமுகவின் நிர்வாக திறன் லட்சணம் புரிந்தது. அடுத்ததாக தெர்மாக்கோல் போட்டு நீர் ஆவியாமல் தடுத்தது. நொய்யல் ஆறு மக்கள் போடும் சோப்பு நுரையால் நிரம்பி உள்ளது. கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழார் போன்றவரை அட மங்குணி அமைச்சர்களா என முனுமுனுக்க வைத்தது.ஆனாலும் அக்கட்சி ஏன் தெரியுமா வெற்றி பெறுகிறது. நம்மை போன்ற தமிழகத்தின் 1% மக்கள் தான் இதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் சீரியல் பார்ப்பதிலும் அதிக காசு கொடுப்பவர்களூக்கு ஓட்டு போடுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களை அம்பலபடுத்த வேண்டிய எதிர்கட்சிகள் அறிக்கையுடன் முடித்து கொள்கின்றன. அதிமுக ஆட்சியில் பேருந்து கட்டண உயர்வு, மின்சார உயர்வு, விலைவாசி ஏற்றம், சமீபத்தில் பெட்ரோல், டீசலுக்கு வாட் கூட போட்டார்கள். 1% நிர்வாக திறமையற்ற இவர்கள் 99% ஊழல் செய்வது எப்படி என அறிந்து வைத்துள்ளார்கள். பணத்துக்கு உங்கள் ஓட்டை விற்றால் நாளை நம் பிள்ளைகள் பிச்சை தான் எடுக்கும்

வயோஜர் 1

1977ல் பூமியில் இருந்து அனுப்பப்பட்ட வயோஜர்1 1980ல் சனிகிரகத்தை படம் பிடித்து அனுப்பியது தற்சமயம் சூரிய குடும்பத்தின் உள்வட்டத்தை தாண்டியுள்ளதுன்னு எழுதினேன்

சிலருக்கு நான் எழுதுவதெல்லாம் பொய்யாக தான் இருக்கும் என்றும், சிலருக்கு நான் எழுதுவதெல்லாம் பொய்யாக்க வேணும் என்றும் பேரவா

அதுக்கு நான் என்ன செய்யுறது

கீழே படத்தில் இருப்பது சூரிய குடும்பம் தான். சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கலர் வட்டம் நெப்டியூன் அதாவது கடைசி கிரகமாக நாம் சில வருடங்களுக்கு நம்பிக்கொண்டிருந்த ப்ளோட்டோக்கு முன் இருக்கும் கிரகம்

சரி அதன் பின் சுற்றி கொண்டிருப்பது என்ன?

அவைகளை வால் நட்சத்திரங்களாக நாம் அறிகிறோம். சுற்றி இருக்கும் கைபர் பெல்டால்  அதன் பின் எதும் கோள் இருப்பது கூட தெரியாமல் இருக்கலாம் அல்லவா

செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் இருக்கும் ஆஸ்ட்ராய்ட் பெல்ட் கூட ஒரு கோளாக உருவாக வேண்டியது, வியாழனின் ஈர்ப்பு, சூரியனின் ஈர்ர்ப்பின் இடையில் சிக்கி சிறு கற்களாக(சில டன் கணக்கில் இருக்கும்) சுத்துது

அதே போல் கைபர் பெல்ட் தாண்டி, நம் சூரியனை சுற்றி வரும் வால்நட்சந்திரங்களை தாண்டி செல்லும் வரை வயோஜர்1 முழுமையாக சூரிய குடும்பத்தை தாண்டி வரை அது சூரிய குடும்பத்தை தாண்டி சென்றதாக சொல்ல முடியாது.

நீங்கள் நிறைய படிச்சிருங்க ஆனா அதெல்லாம் மார்க் வாங்க
நான் அறிய/தெரிய படிக்கிறேன்.

நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும் என எனக்கு அவசியமில்லை, ஆனால் உங்கள் கேள்விகள் என்னை மேலும் தேட வைக்கிறது, நன்றி எதிர் கருத்துடைய நண்பர்களே


புத்தாண்டு வாழ்த்துகள்....

வருட பிறப்பு அல்லது புத்தாண்டு என்பது கால அளவீடுகள் தேவை என நாம் வகுத்து கொண்டது தான்.

காலம் எங்கே ஆரம்பித்தது என்பதே ந்மக்கு தெரியாது, பின்னாளில் நாட்களின் மணி நேரங்கள் குறையும் நேரத்தில் வருட நாட்களின் அளவுகளும் வேறுபாடுலாம்(வாய்ப்புண்டு)

சொல்லபோனால் கால அளவீடுகள் குறிப்புகளுக்கு தேவை என காலண்டர் முறையை கொண்டு வந்ததே கிமு 45 ஆம் ஆண்டு ஜூலியஸ் சீசர் என்ற அரசரால் தான்.

பின் பிப்ரவரி 24 - 1582 ஆம் ஆண்டு கிரிகோரியன் என்ற பாதரியாரால் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டது, அதாவது அதற்கு முன்பு வருடத்திற்கு பத்து மாசங்கள் தான், அதன் பின் தான் 12 மாதங்கள்

பருவநிலைகள் கொண்டு நம்மால் ஓரளவு பூமியின் சுற்று தன்மையை உணர்ந்த பிறகு 1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பத்து நாட்கள் கழிக்கப்பட்டு அந்த வருட காலண்டர் உருவானது.

ஆங்கிலேய ஆளுமைக்கு பின் தான் இந்தியாவில் கிரிகோரியன் காலண்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் முன் ஒவ்வொரு இனம் அல்லது சமூகத்திற்கும் தனியான நாட்காட்டிகள் இருந்தன.

கிரிகோரியன் காலண்டரை கடைசியாக ஏற்றுகொண்ட நாடு கிரீஸ் என்ற பண்டைய கிரேக்கம். ஏற்றுகொண்ட ஆண்டு 1923. தற்சமயம் உலகம் பரவலாக பயன்படுத்தப்படும் நாட்காட்டி கிரிகோரியன் காலண்டர் தான்.

பருவநிலை மாற்றம் குறித்து தமிழில் உருவாக்கப்பட்ட காலண்டர் படி வருட பிறப்பு சித்திரையா அல்லது தை மாதமா எனும் சர்ச்சை இருந்தாலும் இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அதுவல்ல

வாழ்த்து என்பது ஒருவர் நம் மேல் கொண்டிருக்கும் அன்பு, அக்கறை அதன் வெளிபாடு. விழாக்களும், பண்டிக்கைகளும் நம்மை ஒற்றினைத்து புத்துணர்ச்சி பெற்ற செய்யவே உருவாக்கபட்டது. உன்னது பெருசா என்னது பெருசா என சண்டை போட அல்ல

இந்த நொடியில் இருந்து உங்கள் எல்லா வருத்தக்களும் மறைந்து வாழ்வில் இனி மகிழ்ச்சி ஒன்றை மட்டுமே பெற வாழ்த்துகள். தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்


!

Blog Widget by LinkWithin