அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்!

பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கும் அப்போது, சினிமாத்துறையில் இணைய வேண்டும் என்ற ஆசையில் சென்னையில் காலடி வைத்தேன். எனது பால்ய நண்பன் கார்த்திக்கின் மாமா சிவா அவர்கள் ஆரம்பத்தில் உதவிகள் செய்தார், அவரின் மூலமாக இயக்குனர் ராஜிவ்மேனன் அவர்களிடம் இண்டர்வியூவிற்கு போனேன், அப்பொழுது ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படம் எடுத்து கொண்டிருந்தார், அடுத்த படத்திற்கு நிச்சயமாக வாய்ப்பு தருகிறேன் என்று உறுதியளித்தார், ஆனா பாருங்க அதன் பிறகு அவர் எந்த படமும் இயக்கவில்லை!


அதன் பிறகு வேலுபிரபாகரன் போன்ற இயக்குனர்களிடம் வாய்ப்பு வந்தது, பெரிய இயக்குனர்களிடம் சேர்ந்தால் சீக்கிரமாக கற்று கொள்ளலாம் என காத்திருந்தேன், ஆனாலும் சோறு திங்காமல் இருக்க முடியாதே, அதனால் நண்பன் ராஜாவின் ஆலோசனையின் பேரில் ஹோட்டலில் வேலைக்கு சேரலாம் என முடிவு செய்தேன், அவனது சிபாரிசின் பேரில் எனக்கு தாஜ் கோரமெண்டலில் வேலை கிடைத்தது, ஒன்றரை வருடம் அங்கே வேலை செய்தேன், அதன் பிறகு சினிமாதுறையில் வாய்ப்பு தேடும் ஆர்வம் குறைந்தது, படிப்படியாக உணவகத்துறையில் ஆர்வம் அதிகமானது, ஈரோடு வந்தது லீஜார்டின் என்ற ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தேன்.


தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் அங்கே வேலை செய்தேன், ஹவுஸ்கீப்பிங்கில் 1500 ருபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து அதிலிருந்து சர்வீஸ் துறைக்கு மாறி வேலையை விட்டு நிற்கும் பொழுது கேப்டனாக வெளியே வந்தேன், வெளியே வரும்போது எனது சம்பளம் 5400 ருபாய், ஆர்வத்துடன் எதை செய்தாலும் நிச்சயம் பெரிய பலன் கிடைக்கும் என்பது அனுபவ ரீதியாக எனக்கு புரிந்தது. அப்போதே ஆரம்பத்துவிட்டது வாழ்க்கையில் கண்டிப்பாக சொந்தமாக ஒரு உணவகம் ஆரம்பிக்க வேண்டும் என்று, வாரத்தில் மூன்று முறையாவது நானும் எனது பாஸ் கார்த்திக்கும் நல்ல உணவகங்கள் தேடி சாப்பிட செல்வோம். எவையெல்லாம் மிகுதியான சுவையுடன் இருக்கிறதோ அவையெல்லாம் எனது உணவகத்தில் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என குறித்து கொள்வேன்!

சில வருடங்களாகவே ஆரம்பிக்க வேண்டும் என பேச்சு ஆரம்பித்து எனது பொருளாதார சூழ்நிலையின் காரணமாக தற்காலிகமாக திட்டம் நிறுத்தி வைக்கப்படும், சிறந்த உனவகம் அமைக்க வேண்டுமென்றால் அதற்கான செலவு தொகையும் அதிகமாக இருக்கும் என்பதால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

என்னைப்போலவே வாழ்க்கையில் உணவகம் ஒன்றை நிறுவியே தீருவது என்ற லட்சியக்கனவில் இருந்த ஒருவரை சந்தித்த போது எனக்குள் இருந்த நெருப்பின் அழுத்தம் அதிகமாயிற்று!, இரண்டு மாத திட்ட விரிவாக்க பேச்சின் முடிவில் இன்னொரு பங்குதாரரையும் சேர்த்து கொண்டு ஆரம்பிப்பது என முடிவு செய்தோம்.

கோவை ஆர்.எஸ் புரத்தில் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த ஒரு உணவகம் விலைக்கு வருகிறது என அறிந்தோம். முன்னர் நடத்தி கொண்டிருந்தவர் அசைவம் சாப்பிடாதவர் மட்டுமல்ல, சமைக்கவும் கூடாது என நினைப்பவர், ஆனால் உணவகமோ 25 குளிர்வசதி செய்யபட்ட அறைகளும், chill out என்ற உயர்தர வசதியான பாரும் அருகில் கொண்டது, அங்கே சைவ உணவை மட்டும் கொடுத்து உணவகம் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்பதால் அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றோம்!, கிச்சனில் சில மாற்றங்கள் தேவைப்பட்டது, நாங்கள் எதிர்பார்த்த நாட்களை விட அதிக நாட்கள் அந்த வேலைக்கு எடுத்து கொண்டதால் விளம்பரத்திற்கு பெரிதாக நேரம் ஒதுக்க முடியவில்லை, முதலில் ஆரம்பித்து பின்னர் பார்த்து கொள்ளலாம் என முடிவு செய்து ஆரம்பித்து விட்டோம்.

நண்பர்கள் பலருக்கு சொல்ல முடியாமல் போனது எங்களுக்கும் வருத்தமே! தயைகூர்ந்து உங்கள் தமயனின் இந்த சிறு தவறை மன்னிக்க வேண்டுகிறேன்!, நீங்கள் இல்லாமல் எனது வளர்ச்சி சாத்தியமாகாது, உங்கள் ஆலோசனைகள் ஒவ்வொன்றும் எங்களை செம்மைப்படுத்தும், ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நண்பர்களே!


ஆர்.எஸ் புரத்திலிருந்து சுற்றுவட்டாரம் 4 கிலோ மீட்டர் வரை டோர் டெலிவரி உண்டு! 11 மணி வரை டோர் டெலிவரிக்கு ஆர்டர் செய்யலாம்!, அதற்கென்று தனியாக எந்த கட்டணமும் தற்பொழுது வசூலிப்பதில்லை. பார்ட்டி ஆர்டர்களும் எடுத்துக்கொள்ளப்படும்.

இணையத்தளம் கட்டுமான பணியில் இருக்கிறது, விரைவில் முகவரி தருகிறேன்!

நண்பர்கள் இத்தகவலை உங்களது தளத்திலும் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன், உங்கள் நண்பர்கள் கோவையில் இருக்கும் பட்சத்தில் ஒருமுறை உணவருந்த வரச்சொல்லுங்கள், மறுமுறை அவர்களை வரவைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு!



எனது எண்:9994500540
உணவக தொலைபேசி எண்: 0422- 437 6 437

நம்பிக்கை நகர்த்தும்............ சங்கமம் 201

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களின் தொடர் உழைப்பில், பதிவுலக நட்புகளின் ஆலோசனைகளோடு சங்கமம் 2010 நிகழ்ச்சிகளின் திட்டமிடல் கிட்டத்தட்ட நிறைவடைந்து பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.


இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.






வெளியூரில் இருந்து வரும் பதிவர்கள் தங்குவதற்கு அறை எடுக்க வேண்டுமாயின் அது குறித்த உதவிகளுக்கு பதிவர்.ஜாபர் (98658-39393) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

இடம்:
டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.




பதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ் வணக்கம்
*வரவேற்புரை
*பதிவர்கள் அறிமுகம்
*கூட்ட துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
*சிறுகதைகளை உருவாக்குவோம் -
எழுத்தாளர். பெருமாள் முருகன்
*உலக மொக்கையர்களே ஒன்று படுங்கள் -
எழுத்தாளர். பாமரன்
*குறும்படம் எடுக்கலாம் வாங்க -
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
*நிழற்படங்களில் நேர்த்தி -
’கருவாயன்’ - சுரேஷ்பாபு
*உலகத்திரைப்படங்கள் ஒரு பார்வை -
சிதம்பரன்.கி

மதியம் 01-30 – 02.30 மதிய உணவு
இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் -
ஓசை செல்லா
* நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் -
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)
மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)
*பதிவர்கள் கலந்துரையாடல் -
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை
மாலை 05.00 மணி நிகழ்ச்சி நிறைவு



குழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

சங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.

சுட்டியோடு சங்கமம் இலச்சினையை வெளியிட்டுள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம், இன்ட்லி திரட்டிகளுக்கு மிகுந்த நன்றிகள்.

நிகழ்ச்சியை நடத்துவது மட்டும்தான் நாங்கள்…. இது நமக்கானதொரு பொதுக்கூடல்… இதன் வெற்றி முழுக்கமுழுக்க உங்களின் பங்கேற்பில் மட்டுமே! உங்கள் வருகை மட்டுமே இப்போதை அவசரமான அவசியம்! இது வரை பயண ஏற்பாடு செய்யாதவர்கள் கூட இப்போது நினைத்தாலும் திட்டமிட்டு ஈரோட்டிற்குப் பயணப்பட முடியும்..

உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்களின் கதகதப்பிற்கு ஏங்கி எங்கள் கைகளும் காத்திருக்கின்றன…

ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறோம், நம்பிக்கைதானே எல்லாவற்றையும் நடத்திச்செல்கிறது.
-0-

!

Blog Widget by LinkWithin