உண்மை எல்லா நேரமும் கசப்பதில்லை! 2..

என் மாமாவிடம் சண்டை போட்டு கொண்டு வெளியே வந்த நான் நேராக ஊருக்கு வரவில்லை, அதற்கு பதிலாக இன்னொரு மாமாவை பார்க்க சென்றேன்.(அவர் என் அம்மாவின் இன்னொரு சித்தி மகன்). எனக்கு சென்னையிலேயே வேறு ஒரு வேலை வேண்டும். எனக்கு ஈரோடு செல்ல விருப்பமில்லை என்றேன். அவரும் ஒரு ஸ்டுடியோ வைக்க ஆவலாய் தான் இருந்தார். அப்போதய பொருளாதர சூழ்நிலை முடியவில்லை, அவர் ஸ்டூடியோ வைக்கும் வரைக்கும் இடைகாலமாக என்னை எதாவது ஒரு இடத்தில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன் என்றார்.

அப்போது அவர் பனகல் பார்க்கில் ஒரு பங்குவர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். சில வேலைகளை எனக்காக தேர்வு செய்து என்னை வரச்சொன்னார்.
(அதுவரை எங்கே தங்கியிருந்தேன் என்பது வேறு ஒரு பதிவில் வரும்).நானும் அவரது அலுவலகத்திற்கு சென்றேன், அங்கே தான் தெரிந்து கொண்டேன் என் மாமா என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருகிறார் என்று. என் மாமா வேலை செய்யும் அலுவலகம் மாதிரியே இருக்கும் மற்றொரு அலுவலகதிற்கு போன் செய்தார், பேசி கொண்டிருக்கும் போதே, ரீசிவரை மறைத்து உனக்கு டைப்பிங் தெரியுமா என்றார், நான் தெரியாது என்றேன்.
மீண்டும் ரிசீவரில் “டைப்பிங்க் தெரியாது ஆனா ரண்டு நாள்ல டைப் அடிப்பான் ”என்றார்”.
நான் மன்றாடி ரிஸ்க் வேண்டாம் எனக்கு வேறு வேலை பாருங்கள் என்றேன்.
அப்படி கிடைத்தது தான் இந்த கதையில் வரும் ”ஸ்வர்ணமகால் ஜுவல்லரி”
*******************************************

என் மாமா ஏற்கனவே பேசிவிட்டதால் இண்டர்வீயூ பயமுறுத்தும் அளவுக்கு இல்லை.
வேலைக்கு சேர்ந்தாயிற்று.
அங்கேயே தங்க வேண்டும். காலையில் அங்கேயே சாப்பாடு, பின் கடை, மதியம் சாப்பாடு, பின் கடை, இரவு சாப்பாடு, பின் தூக்கம், மீண்டும் காலை இவ்வாறே வாழ்க்கை சுகமாக போய் கொண்டிருந்தது. கடையில் ஏசி வேறு. அப்படியே செட்டில் ஆகிவிடலாமா என்று யோசித்தேன். நிஜமாத்தாங்க முதல்மாத சம்பளமாக 600 ரூபாய் கொடுக்கும் வரை அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்.

சம்பளம் வாங்கியதும், பகீரென்று இருந்தது. சென்னை டீ.நகரில் இருந்து செங்குன்றம் செல்லவே 10 ரூபாய் பேருந்துக்கு வேண்டும். வாரம் ஒரு நாள் ஊர் சுற்ற 250 தாவது வேணும்.
ஒண்ணும் கட்டுபடியாகுதுன்னு கூட வேலை செய்யும் உபி என்ற நண்பனுடம் சொல்லி கொண்டிருந்தேன். அவர் ஒரு ராஜ விசுவாசி முதலாளியிடம் போட்டு கொடுத்து விட்டார். கூடவே நான் மெத்த படித்த மேதாவி என்றும் சில பல பிட்டுகள் எக்ஸ்ட்ரா!?, என் மேல் என்ன காண்டோ அவனுக்கு!

முதலாளி அழைத்து பேசினார்!
மாதம் 1000 சம்பளம் , எக்ஸ்ட்ராவாக அவரது பையனுக்கு டியூசன் சொல்லிதர வேண்டும்.
பட் எனக்கு டீல் ரொம்ப பிடிச்சிருந்தது. ஒத்துகிட்டேன், அவருக்கு சொல்லி கொடுக்கும் முன்னர் நான் ஒருக்கா முழுசா படிக்கனும், தெரியாதத எழுதி வச்சு டிக்‌ஷனரியில தேடனும். எனக்கும் சவாலா இருந்ததால நான் பத்தாவது கூட படிக்காத உண்மைய மறைச்சு டியூசன் சொல்லி கொடுத்தேன். இன்னைக்கும் கேட்டு பாருங்க, அவருக்கு சொல்லி கொடுத்தது எல்லாம் மனப்பாடமா சொல்லுவேன், ஆனா கடைசி வரைக்கும் அவரை படிக்க வைக்க முடியல.

என்னன்னவோ பன்ணி பார்த்தேன். கேட்கல சில பல தண்டனைகள் கூட கொடுத்தேன், இளவரசர் கோவிச்சிகிட்டு ராசாகிட்ட சொல்லிட்டார். முதலாளியும் என்னை கூப்பீட்டார்.

”தம்பி இவரு தான் நாளைக்கு உனக்கு முதலாளியா வரப்போறாரு! அதனால அவரை ஐயான்னு கூப்பிடுங்க”ன்னாரு

இல்லைங்க சொல்லி கொடுக்கும் நானே ஐயான்னு கூப்பிட்டா அவருக்கு எப்படிங்க படிக்கனுன்னு எண்ணம் வரும்னேன்

அவருக்கு படிப்பு வராட்டியும் பரவாயில்லை, சும்மா சொல்லி கொடுங்க, ஆனா ஐயானு கூப்பிடுங்கன்னாரு

இது தான் மேட்டருன்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா எப்பவோ கம்பி நீட்டிருபேன்,
உங்க பணதிமிர உங்களோட வச்சிகோங்க, எனக்கு சம்பள பாக்கிய செட்டில் பன்ணுங்கன்னு சொன்னேன்.

யார பார்த்து பணதிமிருன்னு சொன்னன்னு தையா தக்கான்னு குதிச்சாரு!

நான் அமைதியா ஒரு பேப்பர்ல என்னோட சம்பள பாக்கி எவ்வளவுன்னு எழுதி கொடுத்தேன்.

தரமுடியாதுன்னாரு

”அப்போ உங்களுக்கு பணதிமிரு இல்லையா”ன்னு கேட்டேன்.

எடுத்து கொடுத்துட்டாரு

வந்துட்டேன்..............................

42 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

ஆம்

உண்மையே

நட்புடன் ஜமால் said...

\\”தம்பி இவரு தான் நாளைக்கு உனக்கு முதலாளியா வரப்போறாரு! அதனால அவரை ஐயான்னு கூப்பிடுங்க”ன்னாரு\\

என்ன கொடுமை சார் இது ...

pudugaithendral said...

உண்மை எல்லா நேரமும் கசப்பதில்லை//

நானும் வழிமொழிகிறேன்.

பதிவு அருமை.

அ.மு.செய்யது said...

//கூடவே நான் மெத்த படித்த மேதாவி என்றும் சில பல பிட்டுகள் எக்ஸ்ட்ரா!?, //

இதுல ஆச்சரியப்படுறதுக்கில்ல...

ஆனா இவ்ளோ சீக்கிரம் அவர் எப்படி கண்டுபுடிச்சாருன்னு நினைக்கும் போது வியப்பா இருக்கு...

அ.மு.செய்யது said...

//சென்னை டீ.நகரில் இருந்து செங்குன்றம் செல்லவே 10 ரூபாய் பேருந்துக்கு வேண்டும்//

ஓஹ்..அந்த காலத்தில ..

அ.மு.செய்யது said...

//இளவரசர் கோவிச்சிகிட்டு ராசாகிட்ட சொல்லிட்டார்//

உங்க டச் தெரிகிறது.

SK said...

இளவரசர் கோவிச்சிகிட்டு ராசாகிட்ட சொல்லிட்டார்.

நல்ல டச். பிரமாதம்

குசும்பன் said...

//அதுவரை எங்கே தங்கியிருந்தேன் என்பது வேறு ஒரு பதிவில் வரும்//

இது வேறயா? என்ன செய்வது வேற வழி?:))

குசும்பன் said...

//என் மாமா என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருகிறார் என்று.//

போன பதிவு அலமேலு மாதிரியே நிறைய பெண்கள் இருந்தார்களா?

குசும்பன் said...

//எக்ஸ்ட்ராவாக அவரது பையனுக்கு டியூசன் சொல்லிதர வேண்டும்.
பட் எனக்கு டீல் ரொம்ப பிடிச்சிருந்தது. //


ஹி ஹி சாட்டில் பெண் என்று சொன்னீங்க, பப்ளிக்கா சொல்லு பொழுது பையன் என்று மாத்திட்டீங்க:)) ரொம்ப உசார்தான்

Prapa said...

ஐயா முடியல வலிக்குது .....

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதிவு அருமை.

Anonymous said...

தளைவா, அறுமையான பதிவு. தேர்ந்தெடுத்த வாற்த்தைகல். நாலொரு மேனியும் பொளுதொறு வன்னமுமாக உங்கல் பதிவுகல் மெறுகேருவதொன்னவோ உன்மை தான். வாள்த்துக்கல். கழக்குங்க.

பரிசல்காரன் said...

யோவ்.. மண்டைல ரெண்டு குட்டு குட்டணும்யா ஒன்ன.

இவ்ளோ சுவாரஸ்யமா எழுதற நீ.. இப்போதான் செம ஃபார்முக்கு வந்திருக்க!

இதே மாதிரி எழுதுங்க...

மத்ததைக் குறைங்க!

அண்ணன் வணங்காமுடி said...

அடங்கொன்னியா...

பணக்காரராமுள்ள...

கொய்யான்னு கூப்பிடவேண்டியது தானே

கார்க்கிபவா said...

ம்ம்.. னடக்கட்டும் நாச வேலைகள்

Thamira said...

அண்ணன் வணங்காமுடி said...
அடங்கொன்னியா...
பணக்காரராமுள்ள...
கொய்யான்னு கூப்பிடவேண்டியது தானே
//

ஹஹா..

ராஜ நடராஜன் said...

வால்பையன்!தொடர்ந்து பதிவுக்கு வருவதில்லை.ஆனால் கண்ணில் படும் நேரமெல்லாம் உங்கள் பதிவு அசத்தல்.வாழ்த்துக்கள்.

narsim said...

உண்மைதான் தல,வால் (என்னய்யா தல வால்னு.. ) நண்பா..

பூமகள் said...

இப்பவும் இப்படி எல்லாம் நடக்குதா என்று ஒரு நிமிசம் அதிர்ந்தேன்..

சின்ன பையனை ஐயான்னு கூப்பிடச் சொல்வதெல்லாம் டூ டூ மச்..

வால் பையன் நல்ல பதிவு.. பாராட்டுகள்.

ஆ.ஞானசேகரன் said...

உண்மை கசப்பதும்மில்லை அழிவதும்மில்லை என்பதுதான் உண்மை... உங்களின் எதார்த்த போக்கு நன்றாக உள்ளது வால்பையன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவு நன்று!
வால் வாழ்க!

Kumky said...

வால் பதிவுதானா என டவுட்டா கீதுபா.
அப்பப்போ அன்னியன மாரி ஆகிடறே நைனா...உன்னும் கைல எத்தன இஸ்ப்ளிட் பர்சனாலிட்டி வச்சுகுனு கீரியோ யார்க்கு தெர்யும்.

Maximum India said...

வணக்கம் தல.

நீங்க இனிமேல் வால் இல்ல.

தல. ஆமா நீங்க தலதான்.

அருமையான பதிவு தல.

எழுதுவது இப்போதெல்லாம் சரளமாக வருகிறது உங்களுக்கு.

வாழ்த்துக்கள் தல.

தமிழ் அமுதன் said...

ரெட்ஹில்ல்ஸ்...லதான் இருந்தீங்களா ?

எந்த வருடம் அருண் ?

M.Rishan Shareef said...

//முதல்மாத சம்பளமாக 600 ரூபாய் கொடுக்கும் வரை அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்.

சம்பளம் வாங்கியதும், பகீரென்று இருந்தது. //

வால்பையன் ரொம்ப அப்பாவிப் பையனா இருக்கீங்களே..வேலைல சேர முன்பே எனக்கு இவ்ளோ சம்பளம் வேணும்னு பேசிக்க மாட்டீங்களா? :(

இப்ப இருக்குற முதலாளிக்கிட்டயாவது அடிக்கடி கூட்டிக் கொடுக்கச் சொல்லுங்க !

Bleachingpowder said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
இப்ப இருக்குற முதலாளிக்கிட்டயாவது அடிக்கடி கூட்டிக் கொடுக்கச் சொல்லுங்க !
//

என்னது கூட்டிக் கொடுக்கனுமா!!!! தல இங்க என்ன நடக்குது, நீங்க எங்க வேலை பாக்குறீங்க?? கொஞ்சம் விவரமா சொல்லுங்க

RAMYA said...

நான்காம் நாள் நட்ச்சத்திரத்திற்கு எனது வாழ்த்துகள்!!!

Jackiesekar said...

தமிழ் மன நட்சத்திர பதிவராக வந்ததுக்கு வாழ்த்துக்கள்

RAMYA said...

\\”தம்பி இவரு தான் நாளைக்கு உனக்கு முதலாளியா வரப்போறாரு! அதனால அவரை ஐயான்னு கூப்பிடுங்க”ன்னாரு\\


இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்
யாராலும் தாங்க முடியாது வால்ஸ்!!!

இதுவும் உணமைதான் ஆனா கசக்கவில்லை.

RAMYA said...

//இளவரசர் கோவிச்சிகிட்டு ராசாகிட்ட சொல்லிட்டார்//


படிக்க இஷ்டம் இல்லை அதுக்குதான்
இந்த மாதிரி அணுகுமுறை எல்லாம்
என்ன செய்வது காலத்தின் கோலம் வால்ஸ்!!!

RAMYA said...

ரொம்ப நல்ல பதிவு, எழுத்து நடை
உண்மை என்ற வர்ணம்
பூசிக் கொண்டு வந்துள்ளது.

அனுபவம் நிறயை இருக்குன்னு
நினைக்கின்றேன்.

எல்லாவற்றையும் எழுதுங்க
நாங்க படிக்கின்றோம்
வாழ்த்துகள் வால்ஸ்.

வால்பையன் said...

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி புதுகை தென்றல்

//அ.மு.செய்யது said...
//கூடவே நான் மெத்த படித்த மேதாவி என்றும் சில பல பிட்டுகள் எக்ஸ்ட்ரா!?, //
இதுல ஆச்சரியப்படுறதுக்கில்ல...//

டியூசன் சொல்லி கொடுக்கும் பணி அவனுக்கு ஒதுக்கப்படிருந்தது. என்னை மாட்டிவிட சொன்ன பொய்களே அது.
உண்மையில் நான் ஒன்பதாவது வரை தான் படித்திருக்கிறேன்.

நன்றி கீர்த்தி

நன்றி குசும்பன்

வால்பையன் said...

//குசும்பன் said...
//எக்ஸ்ட்ராவாக அவரது பையனுக்கு டியூசன் சொல்லிதர வேண்டும்.
பட் எனக்கு டீல் ரொம்ப பிடிச்சிருந்தது. //
ஹி ஹி சாட்டில் பெண் என்று சொன்னீங்க, பப்ளிக்கா சொல்லு பொழுது பையன் என்று மாத்திட்டீங்க ரொம்ப உசார்தான்
//

ஏன் இந்த கொலைவெறி!
அவருக்கு ஒரு பெண்ணும் இருக்கிறது என்று தானே சொன்னேன். அந்த பெண்ணுக்கு டியூசன் எடுத்தேன் என்றா சொன்னேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//பிரபா said...

ஐயா முடியல வலிக்குது .....//

ஐயோடெக்ஸ் வேணுமா நண்பரே!

வால்பையன் said...

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி அனானி
எழுத்துபிழைகள் என்னைவிட கொஞ்சம் தான் அதிகம்.

நன்றி பரிசல்
இப்படியே மொக்கை போடு, அப்ப தான் என் கடையில கல்லா கட்டும்னு தான்ன சொல்ல வர்றிங்க!

நன்றி அண்ணன் வணங்காமுடி

நன்றி கார்க்கி

நன்றி தாமிரா

நன்றி ராஜநடராஜன்

நன்றி நர்சிம்

வால்பையன் said...

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி அனானி
எழுத்துபிழைகள் என்னைவிட கொஞ்சம் தான் அதிகம்.

நன்றி பரிசல்
இப்படியே மொக்கை போடு, அப்ப தான் என் கடையில கல்லா கட்டும்னு தான்ன சொல்ல வர்றிங்க!

நன்றி அண்ணன் வணங்காமுடி

நன்றி கார்க்கி

நன்றி தாமிரா

நன்றி ராஜநடராஜன்

நன்றி நர்சிம்

வால்பையன் said...

//பூமகள் said...
இப்பவும் இப்படி எல்லாம் நடக்குதா என்று ஒரு நிமிசம் அதிர்ந்தேன்..
சின்ன பையனை ஐயான்னு கூப்பிடச் சொல்வதெல்லாம் டூ டூ மச்..//

உண்மை தான் பூமகள்,
சாதிய ரீதியில் இருந்த அதிகாரமையம்,
தற்பொழுது பொருளாதார ரீதியில் வளர்ந்து வருகிறது.
எதாவது ஒரு வகையில் இந்த அடக்குமுறை நம்மிடயே இருந்து கொண்டே தான் இருக்கிறது.

வால்பையன் said...

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி ஜோதிபாரதி

நன்றி கும்க்கி
என்ன சொல்ல வர்றிங்க

நன்றி மோகன்பிரபு

//ஜீவன் said...
ரெட்ஹில்ல்ஸ்...லதான் இருந்தீங்களா ?
எந்த வருடம் அருண் ?//

1996 லிருந்து 2001 வரை இருந்தேன்

வால்பையன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
வால்பையன் ரொம்ப அப்பாவிப் பையனா இருக்கீங்களே..வேலைல சேர முன்பே எனக்கு இவ்ளோ சம்பளம் வேணும்னு பேசிக்க மாட்டீங்களா? :(
இப்ப இருக்குற முதலாளிக்கிட்டயாவது அடிக்கடி கூட்டிக் கொடுக்கச் சொல்லுங்க!//


அப்போ என் மாமா அதை பற்றி பேசியிருப்பார்ன்னு நினைச்சேன்.

இப்போ இருக்குற முதலாளி தேவைக்கு அதிகமாகவே சம்பளம் தருகிறார்.

வால்பையன் said...

Bleachingpowder said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
இப்ப இருக்குற முதலாளிக்கிட்டயாவது அடிக்கடி கூட்டிக் கொடுக்கச் சொல்லுங்க !
//

என்னது கூட்டிக் கொடுக்கனுமா!!!! தல இங்க என்ன நடக்குது, நீங்க எங்க வேலை பாக்குறீங்க?? கொஞ்சம் விவரமா சொல்லுங்க//

அவரு சம்பளத்தை சொன்னாருங்க!
நீங்க மொத்தமா வேட்டு வச்சிருவிங்க போலிருக்கே தல

வால்பையன் said...

நன்றி ரம்யா

நன்றி ஜாக்கிசேகர்
அப்பப்ப எட்டி பார்ப்பிங்க போல

!

Blog Widget by LinkWithin