வலையுலகில் எத்தனையோ நண்பர்கள் இருகிறார்கள். நாம் அறிந்திருப்பது ஒரு சிலரைத்தான்.
ஒவ்வொருவருக்கும் விரல்ரேகை வித்தியாசம் இருப்பது போல், அவரவர் கடந்து வந்த பாதைகளும் பல வித்தியாசங்கள் நிறைந்ததே. கடினமான பாதைகள் நம்மை மேலும் செம்மைப்படுத்தும், மென்மையான பாதைகள் துன்பம் வரும் போது எதிர்த்து நிற்கும் துணிவைத்தராது. அவரவர் அனுபவம் அவரவருக்கு ஆசான்.
தோழி ரம்யா எனக்கு சில நாட்களாகத்தான் பழக்கம்.
பழுத்த அனுபவசாலிகள் சொல்லி பார்த்திருக்கிறேன், படபடவென்று பேசுபவர்கள் மனதில் எதையும் வைத்து கொள்ளமாட்டார்கள் என்று, யாருக்கு பொருந்துதோ இல்லையோ தோழி ரம்யாவிற்கு நூறு சதவிகதம் பொருந்தும்.
தோழி ரம்யா கடந்து வந்த பாதையும் கடினமான முற்களாலும், கற்களாலும் ஆனது தான், ஆனாலும் அவருடய அனுபவங்களை அவர்களே சொலவது தான் சிறந்தது, இருப்பினும் தோழியின் அனுபவம் அவருக்கு ஒரு பக்குவப்பட்ட மனநிலையை கொடுத்திருக்கும்,
முழுமையான உருவம் தெளிந்த நீரோடையில் தான் தெரியும்.
கேள்விக்கான பதில் தெளிந்த மனதில் கிடைக்கும்.
என் மனதிலும் சில கேள்விகள் இருந்தது, பதில்கள் ஒவ்வொருக்கொருவர் மாறுபட்டாலும் தோழி ரம்யாவின் பதில்களை தெரிந்து கொள்ள உங்களைப்போலவே நானும் ஆர்வமாக உள்ளேன்.
என்னுடய கேள்விகளும் தோழியின் பதிகளும்
********************************************
1. இந்த வாழ்வும், அனுபவமும் நீங்கள் ஒரு பெண்ணாக பிறந்ததற்காக பெருமையடைய செய்திருக்கிறதா?
ஆமாம் என்று தான் சொல்லுவேன். நான் ஒரு சாதரணமான வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் நான் சாதாரணத்தில் இருந்து சற்று விலகி வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். பெண்ணாகப் பிறந்தமைக்கு பெருமை அடைகின்றேன் என்று தான் சொல்லவேண்டும். இவள் என்ன செய்யப் போகிறாள் என்று என்னை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கு முன்னால், அவர்கள் எண்ணங்கள் தோற்றுக் கொண்டிருக்க நான் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருந்தேன். சில நேரங்களில் பெண்ணாக இருப்பது மிகவும் சோதனையாகவும், அதே நேரத்தில் சவாலாகவும் இருந்திருக்கின்றது. ஒரு பெண்ணாக, தனித்து நின்று, இன்று என்னை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் முன் வளர்ந்து நிற்கின்றேனே! அங்கே நான் பெண்ணாகப் பிறந்தமைக்கு பெருமை என்றுதான் கூற வேண்டும்.
2.உங்கள் பார்வையில் ஆண்கள் என்பவர்கள் யார்? அவர்களுடய பொது குணங்கள் என்ன? நீங்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
ஆண்கள், பெண்கள் என்று பாகுபாடு எப்பவுமே எனக்குள் இருந்தது கிடையாது. இந்த இரு பாலாரும் என் முன்னே மனிதப் பிறவிகளே!! மனிதம் மனிதத்தை நேசிக்கின்றது. அவ்வளவுதான்!! ஆண்களுக்கு என்று பொது குணம், ஆமாம் குடும்பச்சுமையை ஏற்கின்றார்கள், உழைக்கின்றார்கள், பிரச்சனைகள் எது வந்தாலும் தாங்கிக்கொண்டு ஒரு தூணாக இருக்கின்றார்கள், பெற்றோர்களுக்கு பாதுகாப்பை கொடுத்தல், மனைவிக்கு தேவையானவைகளை செய்து திருப்திப் படுத்துதல்கள், குழந்தைகளுக்கு இரண்டு வயதில் பள்ளியில் சேர்க்க இரவே போய் பள்ளி வாசலில் காத்திருத்தல். இதற்கு மேல் என்ன சொல்ல??
3.உங்கள் பார்வையில் நட்பு என்பது? நட்பில் பால் முக்கியமா? அல்லது ஒரு ஆணுடன் ஒரு பெண் நட்பாக இருக்கமுடியுமா?
1. கண்டிப்பாக முடியும் . நட்பிற்கு பால் முக்கியம் இல்லை. எனது பார்வையில் நட்பு கொள்ள மனம் மட்டும்தான் முக்கியம். 2. நட்பு என்பது சிரிக்கும் போது நம் அருகாமை தேவை இல்லை. அழும்போது நம் அருகாமை மிகவும் அவசியம் என்று என் நட்பு வட்டாரத்தில் நான் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். மனம் தளர்ந்து போகும்போது ஆறுதலான சொற்கள் அவசியம். தேவையான உதவிகள் அவசியமே அது நட்பால் மட்டுமே சாதிக்க முடியும். 3. ஒரு நூல் இழைதான் மனம் தடுமாறக் காரணமாக இருக்கும் என்பது என் கருத்து. நட்பாக இருக்கும் தருணத்தில், பெண்ணின் எந்த செயலும் ஆண்களின் ஈர்ப்பை திசை திருப்பக் கூடாது. அதே போல் ஆண்களும் பெண்கள் பால் நடந்து கொள்வது மிக அவசியம். இது சில சமயம் தெரிந்தும் நடக்கலாம், சில சமயம் தெரியாமலும் நடக்கலாம். ஆனால் புரிந்து கொண்டு நட்பை நட்பாக மட்டும் காப்பாறிக் கொள்ளுவது என்பது நட்பிற்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம். ஆண் பெண் இருவரிடையே நிலவும் நட்பு எப்போது முழுமை அடைகின்றது என்றால், ஒருவரின் சுக துக்கங்களில் மற்றவர் பங்கேற்று, ஒருவர் குடும்பத்தில் மற்றொருவர் ஐக்கியம் ஆகி பழகும் போதுதான்!! நட்பு என்ற உறவில் எப்போது தடுமாறத் தொடங்குகிறோம் என்று நாம் யோசித்து அந்த தடுமாற்றம் தவிர்க்கப்பட்டால், நட்பும் அங்கே கற்பை போல் மதிக்கப் படும்.
4.ஒவ்வொருவரும் எதாவது ஒரு சூழ்நிலையில் இந்த சமூகத்தால் அவமான பட்டிருப்போம், ஆனாலும் நமக்கு சமூகத்தின் மேல் ஒரு பற்று இருக்கும்! உங்களுக்கும் உண்டா? நீங்கள் இந்த சமூகத்திற்கு செய்ய விரும்புவது என்ன?
இது ரொம்ப அருமையான கேள்வி வால்பையன் அவர்களே. நான் நிறைய அவமானங்களைச் சந்தித்து இருக்கின்றேன். ஆனால் அவைகள் ஒரு நிமிடம் என்னை பாதிக்கும். இல்லை என்று சொல்ல விரும்பவில்லை, ஆனால் அடுத்த நிமிடம் இந்த அவமானம் எனக்கு இல்லை. அதை உண்டாக்கியவர்களுக்கே என்று தூக்கி போட்டு விட்டு அடுத்த வேலை குறித்து யோசிக்க ஆரம்பித்து விடுவேன். சமூகம் ===== அழகான வார்த்தை. நான் இந்த தலைப்பில் ஒரு கதை எழுதி இருக்கின்றேன். அது ஒரு வார இதழில் வெளிவந்தது. பயங்கர சர்ச்சைக்குள்ளானது என்றே சொல்லலாம். அப்போது நான் பெண்கள் விடுதியில் தங்கி இருந்தேன். இந்த "சமுதாயம் என்ற நாலு பேர் " இதுதான் அந்த கதையின் தலைப்பு. நான் எப்போதும் இந்த சமுதாயத்தைப் பற்றி நினைத்து அதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டும், முடிந்த போது சிறிய பல சமுதாயப் பணிகளைச் செய்து கொண்டும் இருக்கின்றேன். எதிர் காலத்திட்டம், முதியவர்களுக்கு அரவணைப்பு, சிறார்களுக்கு அரவணைப்பு இவைகள் அங்கீகாரத்துடன் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கு மேல் வாழ்வில் நலிந்த பெண்களுக்கு நிறைய செய்திருக்கின்றேன். இன்னமும் செய்ய என் சூழ்நிலை அமைய வேண்டும் என்பவைகள் என் மனதில் கணன்று கொண்டிருக்கும் தீராத்தாகம்.
5.(நெருங்கிய)உறவுகள் வேறு, சமூகம் வேறு என்று பார்ப்பீர்களா? அல்லது உறவுகளும் சமூகத்தில் ஒருவர்களா?
நெருங்கிய உறவுகளும் சமூகத்தில் ஒரு அங்கத்தினர்களே. சமூகம் என்ற கோட்பாட்டின் கீழ் பலவற்றை அறிவுறுத்தி இருப்பார்கள். அந்த அறிவுரைகள் நமக்கும் நன்மை பயப்பதாகவே இருக்கும். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அந்த சமுதாயத்தின் அறிவுரைகளை அடித்துக் கொண்டு செல்லுகையில் அங்கே நடக்கும் சின்ன சின்ன தவறுகள் கூட ஏற்றுக் கொள்ளப்படமாட்டது. அதனால் தான் எந்த முடிவு எடுத்தாலும் சமுதாயத்தை சார்ந்து எடுத்தால் நமக்கு அங்கீகாரம் கிடைப்பதோடல்லாமல், பாதுகாப்பும் கிடைக்க வழி உள்ளது என்று சொல்லுவேன்.
6.பெண் என்பவள் பிறப்பிலிருந்தே யாரையாவது நம்பி தான் வாழ வேண்டும் என சொல்லி கொடுக்கப்படுகிறாள்! அது பற்றி உங்கள் கருத்து!?
நல்ல கேள்வி, சரியாகச் சொன்னீர்கள். பெண்கள் எப்போதும் மற்றவர்களை சார்ந்து தான் இருக்கின்றார்கள். அப்படி நம் முன்னோர்கள் வரையறுத்து விட்டார்கள். பிறந்தவுடன் தாய், படிக்க தந்தை, ஓடி ஆடி விளையாட சகோதரம் மற்றும் நட்பு வட்டாரம், திருமணம் ஆனவுடன் கணவன், பிறகு மக்கள் இப்படி பல சார்புகள். ஆனால் இன்று இந்த சார்ந்திருக்கும் அவசியம் குறைந்து கொண்டு வருகின்றது. ஏனெனில் தன்னை காத்துக் கொள்ள எல்லாரும் முயற்சி செய்கின்றார்கள், சில சமயங்களில் அந்த முயற்சியில் ஒரு அயர்ச்சி வந்து விடுகின்றது. அப்போதுதான் சார்ந்து இருப்பது தேவையாகிப் போய் விடுகின்றது. இப்படி எவ்வளவோ அடுக்கிக் கொண்டே போகலாம். அப்பவும் இந்த தலைப்பிற்கு விடியல் இல்லை. இது ஒரு தீராத தொடர்கதை என்றே நான் சொல்லுவேன்.
7.பெண் சுதந்திரம் என்பது கிடைத்து விட்டதா? அல்லது உண்மையான சுதந்திரமாக நீங்கள் நினைப்பது?
பெண் சுதந்திரம், ம்ம்ம் அப்படி என்றால் என்ன? இதில் எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். பெண் சுதந்திரம் வேண்டும் என்று பாரதியார் கூறியது எனக்கு நினைவிற்கு வருகின்றது. பெண் சுதந்திரம் பல மட்டத்தில் இன்னும் கிடக்க வில்லை என்று என் நட்பு வட்டாரம் கூறுவார்கள். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. சுதந்திரம் நம்மிடம் தான் உள்ளது. சரியான முறையில் எண்ண வெளிப்பாடுகள் இருந்தால் அங்கே எல்லாவற்றிற்கும் சுதந்திரம் தானாக வந்து விடும். சுதந்திரம் இருக்கின்றது என்று தவறான முறையில் உபயோகப் படுத்தினால் அப்போதுதான் அது ஒரு கேலிக்கூத்தாகி விடுகின்றது. தனிமனித ஒழுக்கம் மிகவும் அவசியம். அது வேலைக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி. அதற்காக கட்டு பெட்டியாக இருக்கவேண்டும், கதவு இடுக்கில் இருந்து தான் ஆடவரிடம் பேசவேண்டும் என்றெல்லாம் நான் கூற வரவில்லை. எதிலுமே ஒரு கட்டுப்பாடு அவசியம் என்று கூறுகின்றேன். அப்போதுதான் அங்கே எந்த ஆபத்தும் வராது. ஆபத்து வெளியே இருந்து வருவதில்லை. நம்மிடம் இருந்துதான் வருகின்றது. சுதந்திரம் இருக்கின்றது என்று எல்லை கோட்டை மீறினால் நம்மால் நம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகும் ஆபத்தும் உள்ளது. இவைகள் தான் நான் பெண் சுதந்திரத்திற்கு கூறிக் கொள்வது.
8.பெண்ணிற்கு பெரிய சுமையாக இருப்பதாக எதை கருதுகிறீர்கள்?
ஒரு பெண்ணிற்கு குடும்பச் சுமையோ, குழந்தைகள் சுமையோ சுமையாகாது. தன்னம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு மிகுந்து, தன் மீதே தனக்கு நம்பிக்கை என்று குறைகின்றதோ, அன்றுதான் அவளே அவளுக்கு சுமையாகின்றாள்.
9.வேலைக்கு செல்லும் பெண்களுக்கோ, தனியாக தொழில் செய்யும் பெண்களுக்கோ முக்கியமாக இருக்கவேண்டியது எது?
வேலைக்குப் போகும் பெண்களுக்கு
=========================
எங்கு வேண்டுமானாலும் வேலைக்கு போகலாம், உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் சூழ்நிலை இந்தக்காலப் பெண்களுக்கு இருக்கின்றது.
1. கொடுத்த வேலையை திறம்படச் செய்ய மனதில் உறுதி செய்து கொள்ளவேண்டும்
2. அந்த உறுதியை காப்பாற்ற எவ்வளவு நேரம் ஆனாலும் உழைக்க தயாராக இருக்க வேண்டும்.
3. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னம்பிக்கை வேண்டும்.
4. ஒருவரையும் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது, அவர்கள் எவ்வளவு பெரியவர்கள் எனபது நேரம் வரும்போதுதான் தெரிய வரும் .
5. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் அடி மனதில் எழ வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதில் வானமே எல்லையாக இருக்க வேண்டும் 6. நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். தெரியாதது உலகளவு, தெரிந்தது கடுகளவு என்று நினைத்தாலே போதும் உன்னை எங்கோ சிகரத்திற்கு கொண்டு சென்றுவிடுமே!!
7. மேலாளர் ஆணோ , பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ பாகுபாடு இல்லாமல் மதிக்கும் திறன் கொண்டு, மேற்கொண்ட காரியத்தை செவ்வனே செய்தால் நீதான் நாளைய விடியலின் மஹாராணி.
தொழில் செய்யும் பெண்களுக்கு
======================
அதே போல் தொழில் செய்யும் பெண்களும் தொழில் நிமித்தம் பலரையும் சந்திக்க வேண்டி இருக்கும். தைரியமான முடிவெடுக்கும் தருணத்தில் நிதானம் வேண்டும். தெளிவான முடிவு, பயப்படாத தன்மை இவைகள் மிகவும் அவசியம். எந்த சூழ்நிலையிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளுவதோடு, வெற்றியையும் எட்ட வேண்டும்.
1. எந்த தொழில் செய்தாலும், அந்த தொழில் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமான ஒன்று.
2. செல்லும் நோக்கம் தெளிவாகக் இருக்க வேண்டும்.
3. போகும் பாதை சரியானதாக் இருக்க வேண்டும்
4. நேர்மை தொழில் காட்ட வேண்டும்
5. கண்டிப்பு வேலை செய்பவர்களிடம் இருக்க வேண்டும்
6. தொழில் ரகசியம் காக்க வேண்டும்
7. தொழிலில் வெற்றி பெற அயராது உழைக்க தயாராக வேண்டும்
8. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னம்பிக்கை வேண்டும்
9. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் அடி மனதில் எழ வேண்டும் இவைகள் அனைத்தும் இருந்தால் நீதான் நாளைய கனவுக்கன்னி.
10.கடவுள் என்பது இருக்கிறாரா? இல்லையா என்ற வாதம் போய், கடவுள் தேவையா, இல்லையா என்ற வாதம் வந்துவிட்டது! உங்களுடய பார்வையில் கடவுளின் தேவை!
கடவுளின் தேவை மிகவும் அவசியம். கடவுள் இருக்கா இல்லையா என்று கேட்டால். நான் இருக்கின்றது என்றுதான் கூறுவேன். உருவம் இல்லை என்றாலும் அரூவமான உருவமாக இருக்கின்ற கடவுளை நான் பல முறை உணர்ந்திருக்கின்றேன். அதனால் என்னால் கடவுளின் தேவை அதிகம் தேவை என்று கூற முடியும். நம்பிக்கை இருந்தால் வழி நடத்துதல்கள் கிடைக்கும். இது என் கருத்து. நான் நம்பிக்கை முலாம் பூசி பேசவில்லை. எனது ஒவ்வொரு முயற்சிக்கு பின்னால் "சமயபுர அம்மா" இருக்கின்றார்கள் என்று ஆணித்தரமாக இச்சபையில் கூற முடியும்.
கடைசியாக வால்பையனுக்கு
====================
என்னை நம்பி இவ்வளவு கேள்விகள் கொடுத்து இருக்கின்றீர்கள். மிக்க நன்றி நண்பா.
வலைச்சரத்தில் ஒரு அறிய வாய்ப்பு அது நண்பர் ஜமால் ஏற்படுத்திக் கொடுத்தார்
இன்று ஒரு அறிய வாய்ப்பு அது நண்பர் வால்பையன் ஏற்படுத்திக் கொடுத்தார்
உங்களுக்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாது. என்றென்றும் நான் உங்கள் அனைவருக்கும் தோழியாய், சகோதரியாய் கடைசி மூச்சு இருக்கும் வரை இருப்பேன்.
*********************************************
தோழி ரம்யா நம்மிடம் பகிர்ந்து கொண்டது அவரது சொந்த கருத்துகளே!
வழக்கமாக என்னை கும்மும் நண்பர்கள் பழக்க தோஷத்தில் தோழி ரம்யாவை கும்மி விடாதீர்கள். எதாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம்.
119 வாங்கிகட்டி கொண்டது:
மாட்டியாச்சா
ஹையோ ஹையோ ரம்யா
வலையுலகில் எத்தனையோ நண்பர்கள் இருகிறார்கள். நாம் அறிந்திருப்பது ஒரு சிலரைத்தான்.
ஒவ்வொருவருக்கும் விரல்ரேகை வித்தியாசம் இருப்பது போல், அவரவர் கடந்து வந்த பாதைகளும் பல வித்தியாசங்கள் நிறைந்ததே\\
அருமையா சொல்லியிருக்கீங்க நண்பரே
முழுமையான உருவம் தெளிந்த நீரோடையில் தான் தெரியும்.\\
அருமை.
\\ஒரு பெண்ணாக, தனித்து நின்று, இன்று என்னை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் முன் வளர்ந்து நிற்கின்றேனே\\
வாழ்த்துகள்
இன்னும் இன்னும் வளரவேண்டும்.
அப்படி போடு கொக்கிய
//தோழி ரம்யா நம்மிடம் பகிர்ந்து கொண்டது அவரது சொந்த கருத்துகளே!
வழக்கமாக என்னை கும்மும் நண்பர்கள் பழக்க தோஷத்தில் தோழி ரம்யாவை கும்மி விடாதீர்கள். எதாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம்//
அடடா.. சஙகத்த கலைங்கப்பா.. அப்ப்புறம் வரலாம்
ரம்யாவிற்கு வாழ்த்துகள்..
nan 1st illaya ?????
ennnaaa fastuuuu ?
\\நட்பு என்ற உறவில் எப்போது தடுமாறத் தொடங்குகிறோம் என்று நாம் யோசித்து அந்த தடுமாற்றம் தவிர்க்கப்பட்டால், நட்பும் அங்கே கற்பை போல் மதிக்கப் படும்.\\
மிக அழகு
சரியாக சொன்னீர்கள்
//தோழி ரம்யா எனக்கு சில நாட்களாகத்தான் பழக்கம்.
பழுத்த அனுபவசாலிகள் சொல்லி பார்த்திருக்கிறேன், படபடவென்று பேசுபவர்கள் மனதில் எதையும் வைத்து கொள்ளமாட்டார்கள் என்று, யாருக்கு பொருந்துதோ இல்லையோ தோழி ரம்யாவிற்கு நூறு சதவிகதம் பொருந்தும்.//
நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும்.
கலக்கல் வாலு. எட்டாவது கேள்வியோட பதில்ல ரம்யா க்ரேட்னு நிரூபிச்சுட்டாங்க.
இதே மாதிரி ஒரு கான்செப்டை நான் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். முந்திகிட்டீங்க! சபாஷ்!
//சில நேரங்களில் பெண்ணாக இருப்பது மிகவும் சோதனையாகவும், அதே நேரத்தில் சவாலாகவும் இருந்திருக்கின்றது. ஒரு பெண்ணாக, தனித்து நின்று, இன்று என்னை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் முன் வளர்ந்து நிற்கின்றேனே! அங்கே நான் பெண்ணாகப் பிறந்தமைக்கு பெருமை என்றுதான் கூற வேண்டும்.
//
ஆரம்பமே அசத்தலா...
//ஒரு நூல் இழைதான் மனம் தடுமாறக் காரணமாக இருக்கும் என்பது என் கருத்து. நட்பாக இருக்கும் தருணத்தில், பெண்ணின் எந்த செயலும் ஆண்களின் ஈர்ப்பை திசை திருப்பக் கூடாது. அதே போல் ஆண்களும் பெண்கள் பால் நடந்து கொள்வது மிக அவசியம். இது சில சமயம் தெரிந்தும் நடக்கலாம், சில சமயம் தெரியாமலும் நடக்கலாம். //
கலக்கீட்டீங்க டீச்சர்...கருத்துக்களின் குவியல் இங்கே தானிருக்கிறது.
\\நம்பிக்கை இருந்தால் வழி நடத்துதல்கள் கிடைக்கும்\\
அற்புதம்.
அன்புள்ள வால்பையன்
முதலில் உங்களுக்கும் ரம்யாவிற்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் மீது உள்ள மதிப்பு இன்னும் ஒரு படி மேலேறியிருக்கிறது.
ரம்யா இதுவரை எனக்கு அறிமுகம் இல்லையென்றாலும், ஒரு நல்ல தோழியிடம் சிறிது நேரம் பேசிய மனநிறைவு இந்த பேட்டியில் இருந்து கிடைத்தது. அவர் மீது மட்டுமல்ல அனைத்து பெண்களின் மதிப்பையும் உயர்த்துவதாகவே இந்த பேட்டி அமைந்துள்ளது.
மீண்டுமொருமுறை உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
நட்சத்திரம் ஆகிய நீங்கள்
இன்னும் ஒளிருகின்றீர்கள்
பேட்டி எடுக்க வேண்டும் என நினைத்தது நல்ல முயற்சி
கேள்விகளும் பதில்களும் அருமை
வாழ்த்துகள்
நண்பரே மற்றும் ரம்யா
வாலின் பழைய பதிவுகள் படித்ததில்லை.
ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இது தான் உங்களின் தலைசிறந்த பதிவாக இருக்கும்.
best of valpaiyan !!!!!
//எதிலுமே ஒரு கட்டுப்பாடு அவசியம் என்று கூறுகின்றேன். அப்போதுதான் அங்கே எந்த ஆபத்தும் வராது. ஆபத்து வெளியே இருந்து வருவதில்லை. நம்மிடம் இருந்துதான் வருகின்றது.//
சரியாகச் சொன்னீங்க சகோதரி!!
என் கருத்தும் இதுவே!!
நல்ல சீரியசான பதிவு...
ரம்யாவுக்கு வாழ்த்துகள் !!
வாழ்துக்கள் சகோதரி:)
வால் உங்ளுக்கும் என் வாழ்துக்கள்..
ரம்யா உங்க பதிள்கள் அருமை
உங்க முதல் பதிலே அருமையா இருந்தது ரம்யா
வால் உங்களுக்கும் ரம்யாவிற்கும் வாழ்த்துக்கள்.
//கடவுள் என்பது இருக்கிறாரா? இல்லையா என்ற வாதம் போய், கடவுள் தேவையா, இல்லையா என்ற வாதம் வந்துவிட்டது! உங்களுடய பார்வையில் கடவுளின் தேவை!//
To know God is to become God.
//சுதந்திரம் நம்மிடம் தான் உள்ளது. //
மிக மிக சரியான வார்த்தைகள் ரம்யா.சுதந்திரம் கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்தாலே அது ஏதோ மற்றவர் கொடுத்து நாம் பெற வேண்டியது என்பது போல தோன்றுகிறது.நாம் பிறக்கும் போதே சுதந்திரத்துடன் தான் பிறக்கிறோம் .யாரையும் கேட்டுப் பெற வேண்டியதில்லை.
கேள்விகளைக் கேட்ட வால்பையனுக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அத்தனை பதில்களும் அருமை. ரம்யாவின் ஒவ்வொரு பதிலிலும் ஒரு செய்தி அடங்கியிருக்கிறது. இதை வரும் மகளிர் தினத்துக்கான சிறப்புப் பதிவாகக் கொள்ளலாம்.
//நீதான் நாளைய விடியலின் மஹாராணி//
இன்னல்கள் பல கடந்து இலட்சியத்துடன் செயல்பட்டு
இலக்கினை அடைந்த
மஹாராணி ரம்யா!
இதை யாரேனும் மறுக்க இயலுமா?
வாழ்த்துக்கள் ரம்யா!
//சுதந்திரம் இருக்கின்றது என்று எல்லை கோட்டை மீறினால் //
ரம்யா, பரிசல்காரன் எட்டாவது பதிலையொட்டி எனச் சொன்னது போல:), இந்த ஏழாவது பதிலையொட்டி நானும் எழுதி வைத்திருக்கிறேன் ஒரு கவிதை, இரு பாலினருக்கும் குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கான செய்தியாக. வலையேற்றும் போது தெரிவிக்கிறேன்:)!
சரியான கருத்துக்கள்! ஆண்/பெண் உரிமைகள், சமூகக் கடமைகள் போன்ற அனைத்தும் மனித உரிமைகளின் அடிபடையிலேயே அமைந்திருக்க வேண்டும். மற்றவர்களது அடிப்படை உரிமையை மீறாத வரையில் ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அனுமதிக்கப் பட வேண்டும், அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி! ஆண்/பெண் உறவுகளும் அதன் அடிப்படையில் தான் இருக்க வேண்டும். ஆண் என்றாலே இப்படித்தான் என்றோ அல்லது பெண் என்றாலே இப்படித்தான் என்றோ வகைப்படுத்துவது கூடாது. இவை எனது கருத்துகள். ரம்யா அவர்களும் இக்கருத்துக்களுக்கு உடன்படுவார் என்றே எண்ணுகின்றேன்.
நன்றி!
மிகச் சிறப்பான கேள்விகள்.. அழகான பதில்கள். வால்பைனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். ரம்யாவிடம் இன்னும் கேட்டிருக்கலாம்.. அவர் ஒரு புதையல்.. :) ( அதுக்காக தங்கம் கேட்காதிங்க)
//8.பெண்ணிற்கு பெரிய சுமையாக இருப்பதாக எதை கருதுகிறீர்கள்?
ஒரு பெண்ணிற்கு குடும்பச் சுமையோ, குழந்தைகள் சுமையோ சுமையாகாது. தன்னம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு மிகுந்து, தன் மீதே தனக்கு நம்பிக்கை என்று குறைகின்றதோ, அன்றுதான் அவளே அவளுக்கு சுமையாகின்றாள்//
இதை விட சிறப்பான பதில் இருக்க முடியாது.
வாழ்த்துகள்
இன்னும் இன்னும் வளரவேண்டும்.
வாழ்த்துக்கள் வால் பையன்.
வித்யாசமான முயற்சி.
வாழ்த்துக்கள் ரம்யா. நல்ல பதில்கள்.
// ஒவ்வொருவருக்கும் விரல்ரேகை வித்தியாசம் இருப்பது போல், அவரவர் கடந்து வந்த பாதைகளும் பல வித்தியாசங்கள் நிறைந்ததே. கடினமான பாதைகள் நம்மை மேலும் செம்மைப்படுத்தும், மென்மையான பாதைகள் துன்பம் வரும் போது எதிர்த்து நிற்கும் துணிவைத்தராது. அவரவர் அனுபவம் அவரவருக்கு ஆசான்.//
அனுபவம் தான் சிறந்த ஆசான். மிகச் சரியாக சொன்னீர்கள்.
// படபடவென்று பேசுபவர்கள் மனதில் எதையும் வைத்து கொள்ளமாட்டார்கள் என்று, யாருக்கு பொருந்துதோ இல்லையோ தோழி ரம்யாவிற்கு நூறு சதவிகதம் பொருந்தும். //
பட பட வென்று பேசுவார்களா என்ன...
ஆச்சர்யமா இருக்கே..
// ஒரு பெண்ணாக, தனித்து நின்று, இன்று என்னை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் முன் வளர்ந்து நிற்கின்றேனே! அங்கே நான் பெண்ணாகப் பிறந்தமைக்கு பெருமை என்றுதான் கூற வேண்டும். //
நிச்சயமாகப் பெருமை படவேண்டிய விசயம்தான்.
// 2.உங்கள் பார்வையில் ஆண்கள் என்பவர்கள் யார்? அவர்களுடய பொது குணங்கள் என்ன? நீங்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன?
ஆண்கள், பெண்கள் என்று பாகுபாடு எப்பவுமே எனக்குள் இருந்தது கிடையாது. இந்த இரு பாலாரும் என் முன்னே மனிதப் பிறவிகளே!! மனிதம் மனிதத்தை நேசிக்கின்றது. அவ்வளவுதான்!! ஆண்களுக்கு என்று பொது குணம், ஆமாம் குடும்பச்சுமையை ஏற்கின்றார்கள், உழைக்கின்றார்கள், பிரச்சனைகள் எது வந்தாலும் தாங்கிக்கொண்டு ஒரு தூணாக இருக்கின்றார்கள், பெற்றோர்களுக்கு பாதுகாப்பை கொடுத்தல், மனைவிக்கு தேவையானவைகளை செய்து திருப்திப் படுத்துதல்கள், குழந்தைகளுக்கு இரண்டு வயதில் பள்ளியில் சேர்க்க இரவே போய் பள்ளி வாசலில் காத்திருத்தல். இதற்கு மேல் என்ன சொல்ல?? //
ஆண்களைப் பற்றிய மிக மாறுபட்ட கோணத்தில் பார்த்து இருக்கின்றார்கள். ஆண்களின் பெருமையை உணர வைத்து இருக்கின்றார்கள்.
மிக்க நன்றி ரம்யா.
// 3. ஒரு நூல் இழைதான் மனம் தடுமாறக் காரணமாக இருக்கும் என்பது என் கருத்து. நட்பாக இருக்கும் தருணத்தில், பெண்ணின் எந்த செயலும் ஆண்களின் ஈர்ப்பை திசை திருப்பக் கூடாது. அதே போல் ஆண்களும் பெண்கள் பால் நடந்து கொள்வது மிக அவசியம்.//
நட்பின் ஆண், பெண் வித்யாசம் கிடையாது. நல்ல நட்பிற்கு எல்லாமெ ஒன்றுதான். ரம்யா அவர்கள் சொன்னது போல் ஒரு நூல் இழைத்தான் மனம் தடுமாற காரணமாக அமையும்.
நட்பு என்பதே அந்தரத்தில் கயிற்றில் நடப்பது மாதிரிதான். கவனமாக கையாள வேண்டும்.
// நட்பு என்ற உறவில் எப்போது தடுமாறத் தொடங்குகிறோம் என்று நாம் யோசித்து அந்த தடுமாற்றம் தவிர்க்கப்பட்டால், நட்பும் அங்கே கற்பை போல் மதிக்கப் படும்.//
நெத்தியடி பதில்...
சூப்பர் ரம்யா... வெல் செட்..
// எதிர் காலத்திட்டம், முதியவர்களுக்கு அரவணைப்பு, சிறார்களுக்கு அரவணைப்பு இவைகள் அங்கீகாரத்துடன் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கு மேல் வாழ்வில் நலிந்த பெண்களுக்கு நிறைய செய்திருக்கின்றேன். இன்னமும் செய்ய என் சூழ்நிலை அமைய வேண்டும் என்பவைகள் என் மனதில் கணன்று கொண்டிருக்கும் தீராத்தாகம்.//
எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கு அருளுவாராக...
// அதனால் தான் எந்த முடிவு எடுத்தாலும் சமுதாயத்தை சார்ந்து எடுத்தால் நமக்கு அங்கீகாரம் கிடைப்பதோடல்லாமல், பாதுகாப்பும் கிடைக்க வழி உள்ளது என்று சொல்லுவேன்.//
சமுதாயம் என்பதே.. பல தனிப்பட்ட மனிதர்களின் கூட்டுத்தான். அதனால் எந்த முடிவுமே சமுதாயத்திற்கு சார்ந்து எடுக்கப்படவேண்டும் என்பது நல்ல கருத்து...
பெண் சுதந்திரம் பற்றிய கேள்விக்கு அருமையான பதில் கொடுத்தீர்கள்...
பின் வரும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருந்தன...
// சுதந்திரம் இருக்கின்றது என்று எல்லை கோட்டை மீறினால் நம்மால் நம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகும் ஆபத்தும் உள்ளது. //
இது பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் பொருந்தும்.
// 8.பெண்ணிற்கு பெரிய சுமையாக இருப்பதாக எதை கருதுகிறீர்கள்?
ஒரு பெண்ணிற்கு குடும்பச் சுமையோ, குழந்தைகள் சுமையோ சுமையாகாது. தன்னம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு மிகுந்து, தன் மீதே தனக்கு நம்பிக்கை என்று குறைகின்றதோ, அன்றுதான் அவளே அவளுக்கு சுமையாகின்றாள். //
என்னே ஒரு தீர்க்கமான பதில்...
தன்னம்பிக்கை குறைகின்ற போதுதான்.. அவளுக்கு அவளே சுமையாகின்றாள். வாவ்... சூப்பர்.
// மேலாளர் ஆணோ , பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ பாகுபாடு இல்லாமல் மதிக்கும் திறன் கொண்டு, மேற்கொண்ட காரியத்தை செவ்வனே செய்தால் நீதான் நாளைய விடியலின் மஹாராணி. //
சரியாக சொன்னீர்கள்
// கடைசியாக வால்பையனுக்கு
====================
என்னை நம்பி இவ்வளவு கேள்விகள் கொடுத்து இருக்கின்றீர்கள். மிக்க நன்றி நண்பா. //
உங்களை நம்பினார் கைவிடப்படார்.
முதலில் வலைச்சரத்தில் உங்களின் கைவண்ணத்தை காட்டினீர்கள்.
இப்போது இங்கு..
// வலைச்சரத்தில் ஒரு அறிய வாய்ப்பு அது நண்பர் ஜமால் ஏற்படுத்திக் கொடுத்தார்
இன்று ஒரு அறிய வாய்ப்பு அது நண்பர் வால்பையன் ஏற்படுத்திக் கொடுத்தார்
உங்களுக்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதாது. என்றென்றும் நான் உங்கள் அனைவருக்கும் தோழியாய், சகோதரியாய் கடைசி மூச்சு இருக்கும் வரை இருப்பேன். //
நன்றி ஜமால், நன்றி வால்பயன்...
ஒரு நல்ல எழுத்தாளரை உலகுக்கு அடையாளம் காட்டியதற்கு
// தோழி ரம்யா நம்மிடம் பகிர்ந்து கொண்டது அவரது சொந்த கருத்துகளே!
வழக்கமாக என்னை கும்மும் நண்பர்கள் பழக்க தோஷத்தில் தோழி ரம்யாவை கும்மி விடாதீர்கள். எதாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். //
இது போங்கு விளையாட்டு...
யாரா இருந்தாலும் நாங்க கும்மி அடிப்போம்... மற்றவங்க மனம் நோகாம...
சங்கத்தில் இருந்து இது வரைக்கு இதற்கு ஏன் எதிர்ப்பு ஒன்று வரவில்லை
// கார்க்கி said...
//தோழி ரம்யா நம்மிடம் பகிர்ந்து கொண்டது அவரது சொந்த கருத்துகளே!
வழக்கமாக என்னை கும்மும் நண்பர்கள் பழக்க தோஷத்தில் தோழி ரம்யாவை கும்மி விடாதீர்கள். எதாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம்//
அடடா.. சஙகத்த கலைங்கப்பா.. அப்ப்புறம் வரலாம் //
டென்ஷன் ஆவக்கூடாது... அதான் சொல்லியிருகாரு இல்ல பேசி தீர்த்துக்கலாம் அப்படின்னு...
// அ.மு.செய்யது said...
nan 1st illaya ?????
ennnaaa fastuuuu ? //
நிச்சயமா இல்லை...
ஜமால் முந்திகிட்டாரு...
// பரிசல்காரன் said...
கலக்கல் வாலு. எட்டாவது கேள்வியோட பதில்ல ரம்யா க்ரேட்னு நிரூபிச்சுட்டாங்க.
இதே மாதிரி ஒரு கான்செப்டை நான் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். முந்திகிட்டீங்க! சபாஷ்! //
வாலு தலைய முந்திடுச்சு... ஹி..ஹி.. சும்மா
இப்படி மாட்டிக்கிட்டீங்களே!!!!! ரம்யா
பதில்கள் மிகவும் அருமை ரம்யா
49
ஐய்யா....
நான் தான் இங்க அம்பது....
எப்படி போட்டேன் ....பாத்தீங்களா?
ராகவன் அன்ணே நான் தான் உங்கள முந்திக்கிட்டேன்...
///இவள் என்ன செய்யப் போகிறாள் என்று என்னை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கு முன்னால், அவர்கள் எண்ணங்கள் தோற்றுக் கொண்டிருக்க நான் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருந்தேன்////
நச்....
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
55
அய்யயோ போச்சு, யாரு 50 அடிகராங்களோ அவங்களுக்கு தான் அடுத்த 10 கேள்வி
யாருப்பா மாட்டினது
அப்படியே எங்களுக்கும் ஆளுக்கொரு பத்து கேள்வி கொடுதீங்கனா நாங்களும் பதில் சொல்லி பழகுவோம் ...என்ன சொல்லுறீங்க வால்பையன் அவர்களே ....அருமையான பதிவு .
ரம்யாவின் தெளிவானக் கண்ணோட்டம் என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது.
சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பதில்கள் :-)
மிகவும் ரசித்தேன் :-)
\\ நட்பு என்பது சிரிக்கும் போது நம் அருகாமை தேவை இல்லை. அழும்போது நம் அருகாமை மிகவும் அவசியம் என்று என் நட்பு வட்டாரத்தில் நான் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். \\
உண்மை :-)
\\எதிலுமே ஒரு கட்டுப்பாடு அவசியம் என்று கூறுகின்றேன். அப்போதுதான் அங்கே எந்த ஆபத்தும் வராது. ஆபத்து வெளியே இருந்து வருவதில்லை. நம்மிடம் இருந்துதான் வருகின்றது. சுதந்திரம் இருக்கின்றது என்று எல்லை கோட்டை மீறினால் நம்மால் நம்மையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகும் ஆபத்தும் உள்ளது. \\
பொட்டிலடித்தார்போல் சொன்னீர்கள் :-)
\\ அரூவமான உருவமாக இருக்கின்ற கடவுளை நான் பல முறை உணர்ந்திருக்கின்றேன். \\
ஆம் காற்று போல் கடவுளும் ஒரு உணர்ச்சி. நானும் என்னுள்ளிருக்கும் கடவுளை பல முறை உணர்ந்திருக்கிறேன். எல்லோருக்குள்ளும் கடவுள் இருக்கின்றான். அவரவர் எண்ணத்திற்கேற்ப, அவன் பிள்ளையார், முருகன், சிவன், அல்லாஹ், ஜீஸஸ் உருவில் வாழ்கின்றான். :-)
மிக நல்ல கேள்விகள்...மிக மிக அருமையான பதில்கள்!
திரு.வாள் பையன் , நள்ள பதிவு வாள்த்துக்கல். இது போன்ற புது முயற்ச்சிகழைத் தொடர்ந்து செய்யுங்கல். உங்கலுக்கு மட்டும் நள்ள பிண்ணூட்டம் கிட்டுதே !. நண்ரி.
நவகாளீஸ்வரன்
நல்ல பதிவா இருக்கிறதால கும்மி அடிக்க மனசு வரலை...:)
//என்னை கும்மும் நண்பர்கள் பழக்க தோஷத்தில் தோழி ரம்யாவை கும்மி விடாதீர்கள். எதாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம்.//
ரைட்டு அப்ப வர்டா! பை பை
கேள்விகளை பொறுத்தே பதில்கள் அமைவதால்....நல்ல கேள்விகளை கேட்ட வால் பையனுக்கு வாழ்த்துக்கள்!
ரம்யாக்கா உங்களின் மிகத்தெளிவான பார்வை வியப்பூட்டுகிறது வாழ்த்துக்கள்!
/நான் நிறைய அவமானங்களைச் சந்தித்து இருக்கின்றேன். ஆனால் அவைகள் ஒரு நிமிடம் என்னை பாதிக்கும். இல்லை என்று சொல்ல விரும்பவில்லை, ஆனால் அடுத்த நிமிடம் இந்த அவமானம் எனக்கு இல்லை. அதை உண்டாக்கியவர்களுக்கே என்று தூக்கி போட்டு விட்டு அடுத்த வேலை குறித்து யோசிக்க ஆரம்பித்து விடுவேன்./
எல்லோரும் இப்படி யோசித்தால் நன்றாகத்தான் இருக்கும்....ஆனால் நடைமுறையில் இப்படி யோசிப்பவர்கள் மிக மிகக் குறைவே....!
/ஒரு பெண்ணிற்கு குடும்பச் சுமையோ, குழந்தைகள் சுமையோ சுமையாகாது. தன்னம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு மிகுந்து, தன் மீதே தனக்கு நம்பிக்கை என்று குறைகின்றதோ, அன்றுதான் அவளே அவளுக்கு சுமையாகின்றாள்./
நல்லா சொல்லி இருக்கீங்க...!
வால் நட்சத்திரம் என்பார்களே அது இது தானா ? ரொம்ப சம்பிரதாயமான கேள்விகள் அதற்கு அதே மாதிரி பதிலகள். கூட கும்மி அடிப்பவர்கள் ரொம்ப அருமையான ப்திவு என்கிறார்கள். முதுகு சொறிவது என்பார்களே அது இது தானா ? நான் என்னத்தைக் கண்டேன்.
காதம்ப்ரி சாம்பதவே.
நிஜமா நல்லவர்
நிஜமா நல்லா கமெண்ட் போட்டு இருக்கார்.
ரம்யா அவர்களே...
கலக்கல்...
வாழ்த்துகள்...
//8.பெண்ணிற்கு பெரிய சுமையாக இருப்பதாக எதை கருதுகிறீர்கள்?
ஒரு பெண்ணிற்கு குடும்பச் சுமையோ, குழந்தைகள் சுமையோ சுமையாகாது. தன்னம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு மிகுந்து, தன் மீதே தனக்கு நம்பிக்கை என்று குறைகின்றதோ, அன்றுதான் அவளே அவளுக்கு சுமையாகின்றாள். //
மிக அற்புதமான கண்ணோட்டம்...
அருமையான கேள்விகள்...அழகான பதில்கள்...வாழ்த்துக்கள் வால்பையன்...வாழ்த்துக்கள் ரம்யா...
ரம்யா அக்கா வாழ்த்துக்கள்..
அருமை வால் பையன் அவர்களே!
உங்களுக்கு எனது பாராட்டுக்கள்..
தன்னம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு மிகுந்து, தன் மீதே தனக்கு நம்பிக்கை என்று குறைகின்றதோ, அன்றுதான் அவளே அவளுக்கு சுமையாகின்றாள்.
முற்றிலும் உண்மை..நானும் அனுபவித்த ஒன்று
தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள்
தெளிவான பதில்கள்
வாழ்த்துக்கள் ரம்யா
தேர்ந்தெடுத்து கேள்விகளை கேட்டு பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள்
////தோழி ரம்யா கடந்து வந்த பாதையும் கடினமான முற்களாலும், கற்களாலும் ஆனது தான், ஆனாலும் அவருடய அனுபவங்களை அவர்களே சொலவது தான் சிறந்தது, இருப்பினும் தோழியின் அனுபவம் அவருக்கு ஒரு பக்குவப்பட்ட மனநிலையை கொடுத்திருக்கும்,///
ஆமாம்! அருண்!! ரம்யாவின் மன உறுதி இமயத்திற்கு நிகரானது!
இந்த கேள்விகளை ரம்யாவிடம் கேட்கவேண்டும் என நீங்கள் முடிவு செய்தது
மிக சிறப்பானது!! அதற்காகவே உங்களை பாராட்ட வேண்டும்.
கேள்வி கேட்பதற்கும் ஒரு திறமை வேண்டும் என சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்.
நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளிலும் உங்கள் நுட்பமானஅறிவு, ஆழ்ந்த
அனுபவம்,சமூக பார்வை எல்லாம் வெளிப்பட்டு இருக்கிறது.அருமை!
ரம்யா...
இந்த ரம்யா!!! இன்னும் என்ன என்ன விசயங்களை தன்னுள் வைத்து இருக்கிறார்
என தெரியவில்லை!!!
அவர் கூறியுள்ள ஒவ்வொரு பதிலையும் ஒரு தனிதனி பதிவாக போடலாம்!
அவர் கூறிய எந்த கருத்தை மேற்கோள் காட்டுவது என தெரியவில்லை!
எல்லா பதிலிலும் சிகரத்தை தொட்டு இருக்கிறார்! மனமார்ந்த பாராட்டுக்கள்!
பதிவுலகத்துல பார்த்து மனசைத் தொட்ட பதிவுகள்ல இதுவும் ஒன்னு...
கேள்விகளும் அருமை.... விபரமாகவும், தெளிவாகவும் கொடுத்த விடைகளும் யதார்த்தமாகவும், நிறைவு (optimistic)மனப்பான்மைய வெளிப்படுத்துறதாகவும் இருக்கு.... ரெண்டு பேருக்கும் பழசுகள் சார்பா வாழ்த்துகள்!
மிகத்தெளிவான பதில்கள்..உறுதியான மனப்போக்கு தெரிகிறது...உங்கள் எண்ணங்கள் போலவே உங்கள் வாழ்கையும் தெளிவாக உறுதியாக இருக்க வாழ்த்துக்கள்..
பெண் சுதந்திரம் பற்றிய என் எண்ணமும் இதுவே....
வால்பையனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
// வலையுலகில் எத்தனையோ நண்பர்கள் இருகிறார்கள். நாம் அறிந்திருப்பது ஒரு சிலரைத்தான். //
என்னையும் அறிந்து கொள்ளுங்கள்..
இப்படியெல்லாம் தெளிவாயிட்டா நாட்டில எந்த பிரச்சனயுமே இருக்காதே.. இந்த மாதிரி ஒரு இடுகைய போட நினைச்சதுக்கு பாராட்டுக்கள்/.....
ரம்யா அவர்களை வலைப்பதிவுன் ஆசிரியராக இருந்தபோது நிறைய தெரிந்துக்கொண்டேன்.
//என்றென்றும் நான் உங்கள் அனைவருக்கும் தோழியாய், சகோதரியாய் கடைசி மூச்சு இருக்கும் வரை இருப்பேன்.
/
இருங்கள்.. அதற்காக வாழ்த்துக்கள்
நல்ல பதிவு வால்பையன்
//ஏனெனில் தன்னை காத்துக் கொள்ள எல்லாரும் முயற்சி செய்கின்றார்கள், சில சமயங்களில் அந்த முயற்சியில் ஒரு அயர்ச்சி வந்து விடுகின்றது. அப்போதுதான் சார்ந்து இருப்பது தேவையாகிப் போய் விடுகின்றது. //
என்னை மிகவும் கவர்ந்த உண்மையான பதில் .அனைத்து பதில்களிலும் ஒரு பக்குவத்தன்மையை உணர்கிறேன்.ஒவ்வொரு பதில்களையும் வாசிக்க ஆரம்பிக்கும்போது எதிர்பார்போடு ஆரம்பித்து, மனநிறைவாய் மகிழ்ச்சியாய் முடிக்கிறேன் . வாழ்த்துக்கள் ரம்யா ..
நல்ல பதிவு வால்
ரம்யாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.பெண்ணின் உணர்வுகள் கொட்டிச் சிதறிக் கிடக்கு.சமூகம்,நட்பு,உறவு பிரித்துப் பிரித்து நோக்கிய விதம் அருமை.பண்பட்ட மன உணர்வு.
நல்ல முயற்சி, நன்றாக வந்திருக்கிறது கேள்வி பதில்!
ரம்யா : உங்களுக்கு வாழ்த்துகள்!
வாலு : கேள்விக்கனைகளுக்கு வாழ்த்துகள்!
வால் உங்களுக்கும் ரம்யாவிற்கும் வாழ்த்துக்கள்.
//"என் கேள்விக்கென்ன பதில்?(மாட்டியவர் ரம்யா)"//
அவர் மாட்டியதில் எனக்கு மிகச் சந்தோசமே!
எவ்வளவு சிறப்பான் பதிவைக் கொடுத்திருக்கிறார்.
பாராட்டுக்கள் வல்ப்பயனுக்கும் ரம்யாவுக்கும்.!!
//அவரவர் அனுபவம் அவரவருக்கு ஆசான்.//
ஆமாங்க
//ஒரு பெண்ணாக, தனித்து நின்று, இன்று என்னை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் முன் வளர்ந்து நிற்கின்றேனே! அங்கே நான் பெண்ணாகப் பிறந்தமைக்கு பெருமை என்றுதான் கூற வேண்டும்.//
சபாஷ்!!
//ஆண்கள், பெண்கள் என்று பாகுபாடு எப்பவுமே எனக்குள் இருந்தது கிடையாது. இந்த இரு பாலாரும் என் முன்னே மனிதப் பிறவிகளே!! .... இதற்கு மேல் என்ன சொல்ல??//
அடடா இதற்க்கு மேல் ஆண்களை யாரும் பாராட்டியதில்லை. நன்றி ரம்யா
//நட்பு என்ற உறவில் எப்போது தடுமாறத் தொடங்குகிறோம் என்று நாம் யோசித்து அந்த தடுமாற்றம் தவிர்க்கப்பட்டால், நட்பும் அங்கே கற்பை போல் மதிக்கப் படும்.//
முத்தான வார்த்தைகள்
//எதிர் காலத்திட்டம், முதியவர்களுக்கு அரவணைப்பு, சிறார்களுக்கு அரவணைப்பு இவைகள் அங்கீகாரத்துடன் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கு மேல் வாழ்வில் நலிந்த பெண்களுக்கு நிறைய செய்திருக்கின்றேன். இன்னமும் செய்ய என் சூழ்நிலை அமைய வேண்டும் என்பவைகள் என் மனதில் கணன்று கொண்டிருக்கும் தீராத்தாகம்.//
தங்கள் உயர்ந்த எண்ணங்கள் உண்மையாக வாழ்த்துக்கள் .
////6.பெண் என்பவள் பிறப்பிலிருந்தே யாரையாவது நம்பி தான் வாழ வேண்டும் என சொல்லி கொடுக்கப்படுகிறாள்! அது பற்றி உங்கள் கருத்து!?//
என்னைக் கேட்டாள் ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் சார்ந்து வாழ்கிறோம் என்றே சொல்வேன்.
ஆண்களற்ற உலகத்தில் பெண்களும்,
பெண்கள் இல்ல உலகத்தில் ஆண்களும் Cannot think of that.. ( ரொம்ப யோசிக்காறேனோ?)
//எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. சுதந்திரம் நம்மிடம் தான் உள்ளது. சரியான முறையில் எண்ண வெளிப்பாடுகள் இருந்தால் அங்கே எல்லாவற்றிற்கும் சுதந்திரம் தானாக வந்து விடும்.//
நச் !!
//ஒரு பெண்ணிற்கு குடும்பச் சுமையோ, குழந்தைகள் சுமையோ சுமையாகாது. தன்னம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு மிகுந்து, தன் மீதே தனக்கு நம்பிக்கை என்று குறைகின்றதோ, அன்றுதான் அவளே அவளுக்கு சுமையாகின்றாள்.//
நெஜமாவெ அனுபவம் மிக்கவர்தான் !!
கேள்வி பதிலுக்கு நன்றி...
முடிஞ்சா பரிசல்காரனிடம் பத்துக்கேள்வி கேட்டு பதிவு போடுங்க...
வலையுலகில் எத்தனையோ நண்பர்கள் இருகிறார்கள். நாம் அறிந்திருப்பது ஒரு சிலரைத்தான்.
ஒவ்வொருவருக்கும் விரல்ரேகை வித்தியாசம் இருப்பது போல், அவரவர் கடந்து வந்த பாதைகளும் பல வித்தியாசங்கள் நிறைந்ததே///
கலக்கல் வரிகள்!!!
//சிறியவரோ, பெரியவரோ பாகுபாடு இல்லாமல் மதிக்கும் திறன் கொண்டு, மேற்கொண்ட காரியத்தை செவ்வனே செய்தால் நீதான் நாளைய விடியலின் மஹாராணி.//
//எண்ணம் அடி மனதில் எழ வேண்டும் இவைகள் அனைத்தும் இருந்தால் நீதான் நாளைய கனவுக்கன்னி.//
நிறைய விடயங்கள் சொல்கிறீர்கள் நன்றி !!
\நட்பு என்ற உறவில் எப்போது தடுமாறத் தொடங்குகிறோம் என்று நாம் யோசித்து அந்த தடுமாற்றம் தவிர்க்கப்பட்டால், நட்பும் அங்கே கற்பை போல் மதிக்கப் படும்.\\///
அருமையாக எழுதியுள்ளிர்கள்!!!
100
100 நான் தானா?
மொத்தத்தில் கலக்கல் பதிவு!!
//சுதந்திரம் நம்மிடம் தான் உள்ளது. //
மிக மிக சரியான வார்த்தைகள் ரம்யா.சுதந்திரம் கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்தாலே அது ஏதோ மற்றவர் கொடுத்து நாம் பெற வேண்டியது என்பது போல தோன்றுகிறது.நாம் பிறக்கும் போதே சுதந்திரத்துடன் தான் பிறக்கிறோம் .யாரையும் கேட்டுப் பெற வேண்டியதில்லை.///
நல்லாச்சொல்லியிருக்கீங்க!!!
// தேவன்மயம் சைட்...
100//
ஆஹா.. நாங்க கோட்டை காட்டினா நீங்க வந்து கொடி ஏத்தரீங்களே ??
நல்ல கேள்விகளும் அதற்குத் தக விடைகளும்.
சுதந்திரம் பற்றிய கருத்து மிக்கச்சரி.
கலக்குறீங்க ரம்யா.இவ்வளவு தெளிவா இருக்கீங்க
இரண்டாம் நாள் நட்சத்திர வால்பையனுக்கு வாழ்த்துக்கள்!!!
அற்புதம் வால்பையன். வித்தியாசமான பதிவு. நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள் ரம்யா. நல்ல பதில்கள்.
சில பல எழுத்துப்பிழைகளை தவிர்த்துப் பார்த்தால், நல்லதொரு பதிவு!
ரம்யா சொன்ன "தோழியாய், சகோதரியாய்" என்ற வார்த்தைகளில் எனக்கு உடன்பாடில்லை.
It would be a long discussion for another day!
ரொம்ப 'ஜல்லி' அடிச்ச மாதிரி இல்ல...?
/ தேவன்மயம் சைட்...
100//
ஆஹா.. நாங்க கோட்டை காட்டினா நீங்க வந்து கொடி ஏத்தரீங்களே ??///
சாரி!!! கணிணி!!! ஆள் இல்லயொன்னு ரெண்டு தட்டு தட்டினேன்!!!
என் அன்பு தங்கை ரம்யாவின் தெளிவான சிந்தனைகளை வெளி கொண்டு வந்த வாலுக்கு என் வணக்கங்கள்.
நான் கொஞ்சம் பிரம்மித்து நிற்கின்றேன், உங்க பதில்களை பார்த்து.
ரம்யா நல்லா இருங்கப்பா!
ரம்யாவின் தன்னம்பிக்கை போற்றவேண்டிய ஒன்று. விரைவில் இவரது கட்டுரையை பொதுஜனபத்திரிகையில் வெளியிடப்போகிறேன்
இங்கு அளித்தமைக்கு நன்றி வால்பையன்
பேட்டி ரெம்ப நல்லா இருக்கு பூலான் தேவி
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி அண்ணன் வணங்காமுடி
என்ன கொக்கி?
நன்றி கார்க்கி
வருகைக்கு
வருத்தம் கார்க்கி
சங்கத்தை கலைச்சதுக்கு
நன்றி அ.மு.செய்யது
வேகமான உலகில் கண் சிமிட்டும் நேரத்தில் கும்மி குவிந்துவிடும்
நன்றி பரிசல்
வசிஷ்டர் வாயால் பாராட்டா?
நன்றி மோகன்பிரபு
நன்றி பூர்ணிமா சரண்
லேடிஸெல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டாங்கப்பா
நன்றி மகேஷ்
நன்றி தமிழ்தோழி
நன்றி ஸ்ரீதர்
நன்றி ராமலட்சுமி
நன்றி பனங்காட்டான்
நன்றி சஞ்சய் அங்கிள்
நன்றி சதீஷ்குமார்
இந்த வளத்தி பத்தாதா?
நன்றி இராகவன் நைஜீரியா
நன்றி உருப்புடாதது_அணிமா
நன்றி ஆண்ட்ரூ சுபாசு
நன்றி தேனியார்
நன்றி விஜய்
நன்றி நிஜமாநல்லவன்
நன்றி அனானி
என்னை விட கொஞ்சம் தான் எழுத்துபிழை அதிகம்
நன்றி குசும்பன்
நன்றி அனானி
வருத்தம் புரிகிறது, அடுத்தடுது பதிவுகளில் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும்
நன்றி வேத்தியன்
நன்றி புதியவன்
நன்றி வியா
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி ஜீவன்
நன்றி பழமைபேசி
நன்றி மங்கை
நன்றி பட்டிகாட்டான்
நன்றி பாப்பு
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி ராஜேஸ்வரி
நன்றி மகா
நன்றி ஹேமா
நன்றி ஜோதிபாரதி
நன்றி ச்சின்னபையன்
நன்றி கணிணிதேசம்
நன்றி கிங்
நன்றீ தேவன்குமார்
நன்றி வடகரை வேலன்
நன்றி குடுகுடுப்பை
மீண்டும் ஒரு நன்றி ரம்யா
நன்றி பட்டாம்பூச்சி
நன்றி ஜோ
நன்றி சிவாஜி த பாஸ்
நன்றி அபிஅப்பா
நன்றி ஷைலஜா
நன்றி நசரேயன்
இந்த பதிவுக்கு கருத்து அதாவது பின்னுட்டம் வாழ்த்துக்கள் மட்டுமே...தோழியின் மேன்மையை காட்ட நட்பு ஒன்று கொண்ட முயற்சி பெரிதும் பாரட்டபட வேண்டிய ஒன்று...பிறர் அறிந்து கொள்ள கேட்கப்பட்ட கேள்விகளும் அனுபவதத்தையே அறிவுரையாய் அறிவுறித்திய வரிகளும் அருமை என்ற ஒரு வார்த்தை போதாது சொல்ல...தெளிந்த நீரோடையாய் சத்தமில்லாமல் ஒடும் நதியாய் கேள்வி பதில் நட்புக்கு இலக்கமாய் உங்கள் நட்பு கொள்ளப்படும்..உறவுகளும் சமுகத்தில் ஒரு அங்கத்தினரே என உரைக்க இங்கு எத்தனை பேருக்கு துணிவு உண்டு..ஒரு தோழியின் பெருமையை வெளியுலகுக்கு அரியவைக்க நினைக்கும் பெருந்தன்மை இங்கு எத்தனை பேருக்கு உண்டு....உணர்கிறேன் மனிதமும் மனிதரும் இருக்கின்றனர் நான் தான் சந்திக்கவில்லை என்று.. என்ன மறைந்து இருக்கின்றனர் 100ல் ஒருவராய்
1000தில் ஒருவராய் 100000இல்
ஒருவராய்...மனங்களே மனிதரை தேடுங்கள்...மனிதமாய் மாறுங்கள்....மாறலாம் வாருங்கள்...
நட்பு வாழும் வரை நல்லவைகள் வாழும் வாழட்டும் வாழவிடுவோம்....
வாலின் திறமையான கேள்விகளுக்கு ரம்யாவின் தெளிவான பதில்கள்
கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது
இருவருக்கும் நல்வாழ்த்துகள்
Post a Comment