உங்களாலே சாத்தியமானது!

இன்று மதியம் ஒரு பிஸியான நேரத்தில் நண்பர் ஜாஃபர் போன் செய்தார், அவர் போன் செய்தாலே நிச்சயம் அது முக்கியமான விசயமாக தான் இருக்கும். தமிழ்மணம் பார்த்திங்களா தல என்றார், இல்லைங்க காலையிலிருந்து இன்னும் இணையம் பக்கம் போகல என்றேன், பாருங்க, தமிழ்மணம் டாப்10 பதிவர்களில் உங்களை தேர்வு செய்திருக்காங்க என்றார், உடன் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நண்பர்களையும் கேட்டறிந்தேன், அனைவரும் மிகவும் தகுதியான பதிவர்கள் தான், அவர்களுக்கு நடுவில் நானும் என்பது உங்கள் அன்பினாலே சாத்தியமானது என உணர முடிந்தது, என்னுடன் டாப்10 ஐ பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி, இத்தருணத்தில் சென்ற வருட பதிவுகளை கொஞ்சம் மீள் பார்வை செய்கிறேன்!சென்ற வருடம் ஜனவரி மாதம் மதுரையில் தருமி ஐயா தலைமையில் டாக்டர் ஷாலினி பங்கேற்ற “குழந்தைகள் பாலியல் வன்கொடுமை” தடுப்பு பற்றிய நிகழ்ச்சி நடந்தது, கலந்து கொண்ட அனைவருக்கும் பயனுள்ள வகையில் நிகழ்ச்சி நடந்தது, சமூக பிரச்சனையை முன்வைத்து பதிவர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பிரமாண்டத்தை இதுவரை வேறு யாரும் செய்யாத காரணத்தால் அந்த பெருமையை இன்னும் மதுரையே வைத்துள்ளது!

ஒரு முக்கிய அறிவிப்பு!


2009 ஆம் வருடமே பரிணாமம் பற்றி சில பதிவுகளில் தொட்டு சென்றிருந்தாலும் 2010 பிப்ரவரி மாதம் தான் பரிணாமம் தொடரை முன்னுரையுடன் ஆரம்பித்தேன். தொடர்ச்சியான விவாதங்களும், ஆதரவும் தொடர்ந்து எழுத ஊக்கத்தை தந்தது!
பரிணாமம் - முன்னுரை
இதே மாதம் தான் நான் ஏன் நாத்திகனானேன் என்ற தொடரையும் ஆரம்பித்தேன், எனது தேடலின் அர்த்தத்தையும், அதன் தொடர்ச்சியான தூண்டுதல்களையும் எழுதினேன், இப்பதிவிற்கும் கிடைத்த ஊக்கம் தொடர்ந்து எழுத உற்சாகம் அளித்தது!
நான் ஏன் நாத்திகனானேன்!பரபரப்பு மார்ச் எனலாம், அந்தளவுக்கு மொத்த பதிவுலகத்துக்கும் தீனி போட்டது.
நித்தியானந்தன் என்ற காவி உடுத்திய கம்முனாட்டி, அறைக்குள் நடத்திய விளையாட்டுகள் அம்பலமாகியது, பெரிய காமெடி என்னவென்றால் பெரிதாக யாரும் நித்தியை கண்டிக்கவில்லை, நித்திக்கு சொம்பு தூக்கி கொண்டிருந்த சாருவின் டவசரை மொத்தமாக அனைவரும் சேர்ந்து கழட்டினர்!
நித்யா டவுசர் கிழிஞ்சு போச்சு! டும்
டும் டும்!

அடிவருடி, சொம்புதூக்கி, அல்லக்கை (charu)

இந்த மாதம் பெண்கள் தினத்திற்கு தோழி ரம்யாவிடமிருந்து பதிவு வாங்கி பதிவிட்டேன், தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் அர்த்தமான ரம்யாவின் பதிவு பெருத்த வரவேற்பை பெற்றது!
பெண்கள் தினம்!


ஏப்ரல் மாதம் பதிவர் லதானந்த் ஒரு கோக்குமாக்கு தொடர் ஒன்றை ஆரம்பித்தார், எனது தொடர்ச்சியான பணி காரணமாக எனக்கு பதிலாக தோழி மதுரைபொண்ணிடம் எழுதி வாங்கி பதிவிட்டேன், அவருக்கு பின் பல பதிவர்கள் அந்த தொடரை தொடர்ந்தனர்!
லதானந்த் VS மதுரை பொண்ணு!

2009 ல் ஒரு முறை இப்பதிவை எழுதியிருந்தாலும் சற்றே மாற்றம் செய்து மீண்டும் மீள்பதிவாக வெளியிட்டேன், வார்த்தை பிரயோகத்தில் எனக்கு சிறந்த பயிற்சியாக அமைந்தது இந்த பதிவு
உண்மை என்றால் என்ன!?மே மாதம், பல பதிவுலக நண்பர்களுக்கு பிறந்த நாளாக அமைந்திருந்தது, தொலைவில் இருந்தாலும் அனைவரையும் இணையம் வாயிலாக தினமும் மிஸ் பண்ணாமல் இருப்பது நட்பிற்கான அழகு!
இம்மாதம் பின்நவீனம் பற்றி எனது புரிந்தல்களை பகிர்ந்திருந்தேன்!
பின்நவீனம்!


ஜூன் மாதம் எனது 300 பதிவுகளை நிறைவு செய்தேன், பங்காளி ராஜன் என்னை பேட்டி எடுப்பது போல் ஒரு பதிவு தயாரித்து அனுப்பியிருந்தார், பதிவுலக அரசியல்கள் கலந்து நகைச்சுவையாக அமைந்திருந்தது அந்த பதிவு!
வால் பையனின் ”ஓப்பன் வேட்டி சாரி பேட்டி”

ஜூலை மாதம் ஈரோட்டில் புத்தக திருவிழா நடந்தது, ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலம் பேச புத்தகத்திருவிழா களை கட்டியது, எழுத்தாளர் ஞாநியை திருவிழாவின் போது சந்தித்தேன்!
அறிவை வளர்க்க ஒரு திருவிழா!
இன்னொரு விசயமாகவும் 2010 ஜூலை எனக்கு வாழ்கையில் மறக்கமுடியாத மாதம்!


2010 ஆகஸ்டும் ஒரு முக்கியமான மாதம் தான், எனது இரண்டாவது குழந்தை வருணா இம்மாதம் தான் பிறந்தாள், பூமியின் அனைத்து பகுதிகளின் வசிக்கும் நண்பர்கள் அனைவரும் அழைத்து வாழ்த்தினர்.
அடுத்த வாரிசு!


செப்டம்பர் மாதம் பதிவுலகில் வேற ஒரு பிரச்சனை போய்கொண்டிருந்தது, பதிவர்கள் தங்களுக்குள் பேசிகொண்ட இணைய உரையாடல்களை மாறி மாறி வெளியிட்டு முடிந்தவரை தம்மை தாமே கேவலப்படுத்தி கொண்டனர், சுயசொறிதல் என்ற வார்த்தையில் இப்பிரச்சனை ஆரம்பித்தது என கேள்விபட்டு, அப்பெயரிலேயே ஒரு பதிவு எழுதினேன்!
சுயசொறிதல்!.....


அக்டோபர் மாதம் பங்காளி ராஜனுக்கு திருமணம், இணையம் மூலம் பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்ட பதிவர்கள் சிலரில் பங்காளியும் இணைந்தார், திருமணம் சென்னையில் சிறப்பாக நடந்தது, இணையத்தில் பங்காளியால் டவுசர் கிழிபட்டவர்கள் அவரது திருமணத்தை சர்ச்சைக்குள்ளாக்கினர். பங்காளி இன்னும் அடிச்சி ஆடிகிட்டு தான் இருக்காரு!
கல்யாண ஆல்பம்!


நவம்பர் மாதம் உணவகம் திறக்க முழுவேகத்துடன் வேலை செய்து கொண்டிருந்தேன், அவ்வபோதே இனையத்தில் அமர முடிந்தது. சர்ர்ச்சைகுறிய குழந்தை பாலியல் வன்முறை குறித்தும், அப்போது பதிவுலகில் கனன்று கொண்டிருந்த லிவிங்டுகெதர் குறித்தும் பதிவிட்டேன், பதிவை விட பின்னூட்டங்கள் நிறைய கருத்து சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள்
மனிதன், மிருகம், கலாச்சாரம்!

2009 போலவே 2010 டிசம்பரிலும் ஈரோட்டில் சங்கமம் நடத்தினோம், சென்ற வருடம் ப்[ஓலவே இந்த வருடமும் சிறப்பாக நடந்தது, இம்முறையும் வெளியூரிலிருந்து பதிவர்நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தி கொடுத்தனர்!
எனது உணவகத்தையும் இந்த மாதம் தான் திறந்தேன்
அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்!


டாப் 10 இருக்கும் மற்ற பதிவுகளுடன் ஒப்பிடும் பொழுது, அவர்கள் எழுதியதில் பாதி கூட நான் எழுதவில்லை. மொத்தமே 2010ல் 95 பதிவு தான் எழுதியிருந்தேன். இருந்தும் நான் ஆறாம் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு உங்கள் ஊக்கமும் அதரவும் தான் காரணம்.

நன்றி நண்பர்களே!

26 வாங்கிகட்டி கொண்டது:

கலாநேசன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல..

பிரபு எம் said...

வாழ்த்துக்கள் பாஸ் :)

D.R.Ashok said...

வாழ்த்துக்கள்..வால்.. இல்ல தல :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள்

கும்மி said...

போட்டோவுல பத்து வயசு கொறைஞ்சி அம்பது வயசு மாதிரிதான் தெரியுது.

:-)

ராஜன் said...

வாழ்த்துகள்! தல!

பில்ட் அப் சாங் பாடணும் போல இருக்கு!உன்ன தடுக்கவும்’


என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல


காத்து அடிக்கையில் கையால் அத இங்கு எவனும் புடிச்சதில்ல!

ராஜன் said...

//போட்டோவுல பத்து வயசு கொறைஞ்சி அம்பது வயசு மாதிரிதான் தெரியுது.//

உங்க ஃபோட்டோ மாதிரி வருமா!

ராஜன் said...

//இல்லைங்க காலையிலிருந்து இன்னும் இணையம் பக்கம் போகல என்றேன்//


ஏன்யா இப்பிடி பச்ச பொய் பேசற! வீடியோ சாட்ல பொழுத ஓட்டுணது எங்களுக்கு தெரியாதா?

பிரதீபா said...

வாழ்த்துக்கள் !!

விக்கி உலகம் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வெறும்பய said...

வாழ்த்துக்கள்

ஜாக்கி சேகர் said...

வழ்த்துக்கள் வால் பையன் பத்துக்குள்ள ஒரு ஆளா வந்தமைக்கு....

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

புதுவருட வாழ்த்துக்கள்!

புதிய முயற்சி- கனவு நனவானதற்கும் வாழ்த்துக்கள்! இந்த பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு, டாப் எல்லாம் வெறும் ஜுஜூபி!சேக்காளி ராஜன், குடும்பஸ்தரா ஆனப்புறம் கொஞ்சம் பொறுப்போடு செயல்படுவார்னு ஏனோ இன்னமும் நம்புகிறேன்! சிச்சுவேஷன் சாங்குக்காகவும், குடும்பஸ்தரா கொஞ்சம் நிதானிச்சு செயல்பட வேண்டும் என்பதற்காகவும் அவருக்கும் என் வாழ்த்துக்கள்!

akbar said...

வாழ்த்துக்கள் வால்..
yen? vaal neenga pangusanthai thodarbana ungal tradersfirst website i niruthi vitirgal? please continue..thanks

மோனி said...

வாழ்த்த வயதில்லை
அதனால ...

காவேரி கணேஷ் said...

பத்தில் ஒன்று வால்.
மிக்க சந்தோசம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால், தூள்! வாழ்த்துகள்.

பாரத்... பாரதி... said...

இந்த ஆண்டும் வலையுலகில் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்.

உணவகத்திற்கு விரைவில் வருவோம்..

பாரத்... பாரதி... said...

//போட்டோவுல பத்து வயசு கொறைஞ்சி அம்பது வயசு மாதிரிதான் தெரியுது.
//

பாரத்... பாரதி... said...

வால்பையன் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

வாழ்த்துக்கள்..........

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said...

தல எத்தன பதிவு எழுதுனீங்க அப்படிங்கரது முக்கியம் இல்ல. எப்ப்டி எழுதி அசத்துனீங்க அப்படிங்கறதுதான் முக்கியம். நல்ல சரக்கு உள்ள ( அந்த சரக்கு அல்ல) ஆள்தான் நீங்க. ஈரோட்டுக்காரருக்கு ஒரு பெருமைன்னா எனக்கும் அது பெருமை தான் . வாழ்த்துக்கள் தல

இந்திரா said...

சென்ற வார உலகம் மாதிரி..
சென்ற வருட வால்பையனா???

டாப் பதிவர்கள் பட்டியலில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

ஹேமா said...

உங்கள் எழுத்துக்கள் உங்களைக் கௌரவித்திருக்கிறது வாலு.வாழ்த்துகள் !

cheena (சீனா) said...

10லிருந்து மேன்மேலும் முன்னேற நல்வாழ்த்துகள் வால்

!

Blog Widget by LinkWithin