நகக்கீறல் பட்ட சாருவின் தேகம் 2!

ஒரு எழுத்தாளன் என்ன எழுதவேண்டும், என்ன எழுதக்கூடாது என சொல்ல வாசகனுக்கு உரிமையில்லை, ஆனால் அதை நிராகரிக்கவும், விமர்சிக்கவும் அவனுக்கு உரிமை உண்டு!, இலக்கியம் என்பது கலாச்சாரத்தின் நிழல் என ஆகிவிட்ட பின்னர், எழுதுபவர் கலாச்சாரத்தை பதிவு செய்யும் பிரதிநிதியாக ஆகிவிடுகிறார், சங்ககால இலக்கியத்தையே கூறுபோட்டு விமர்சிக்கும் தகுதியுடைய வாசகன் சமகால எழுத்தையும், அதன் படைப்பாளியுன் கோணம் மற்றும் விடுபட்டவைகளையும் விமர்சிக்கும் தகுதிகளையும் அடைகிறான்!

சுப்ரமணியபுரம் என்ற படம் கொண்டாடப்பட்ட போது, மனிதன் துரோகமும், பழிவாங்கும் குணமும் மட்டுமே உடையவன் என்றும், அவன் வாழ்நாளில் ஒரு கொலையாவது செய்தே ஆக வேண்டும் எனபது போல் சித்தரிக்கபட்டுள்ளது என என் கருத்தை தெரிவித்திருந்தேன்!. எழுதுறதுக்கு இலவச ப்ளாக் இருக்கு, நேரமும் இருக்குன்னா என்ன வேணும்னாலும் எழுதுவியா என்ற கருத்துகள் வந்து குவிந்து கொண்டு தான் இருக்கின்றன, நமது மத, சாதி, கடவுள் எதிர்ப்பு பதிவுகளுக்கும்.

ஒரு ரோஜாவை பார்த்து ஆகா என்ன அழகு என்று வியந்து போவதற்கும், அதன் பின் இருந்த உழைப்பையும், அது வீணாய் போவதின் வருத்தமே மாற்று கோண எழுத்து, அதற்காக எதையும் முற்றிலும் நிராகரியுங்கள் என்று நாம் எங்கேயும் சொல்வதில்லை. கூரிய பார்வையும், நுண்ணறிவும் பகுத்தறிவு படைத்த மனிதனின் குணம், அதை மழுங்கடிக்காதீர்கள் என்பது நமது கருத்தாக உள்ளது. இவ்விடத்தில் சாருவை விட சாருவின் தொண்டரடிபொடிகளையே விமர்சிக்க வேண்டியுள்ளது!, தனிமனித துதியை எதிர்ப்பவன் என்ற முறையிலும் அதை செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

ழார் பத்தாய்க்கு இணையான எழுத்து என சொல்லி கொள்ள சாருவுக்கு உரிமையுண்டு, ஒருமுறை சுஜாதாவுக்கு அடுத்து எழுத்துலகில் கொண்டாடப்படும் எழுத்தாளர் நான் தான் என சாருவே ஒப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார். நான் தான் அடுத்த முதல்வர் என பலர் கூவி கொண்டிருப்பதை நாம் எப்படி சிறு புன்னகையுடன் கடந்து செல்கிறோமோ அதே போல் தான் இதையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது, ஆனால் அதை பிடித்து தொங்குபவர்களை தான் கொஞ்சும் உசுப்பிவிட வேண்டியுள்ளது. நான் வெளிப்படையானவன் என்பது தாஹூரின் அடையாளம் தாடி என்பது போல் என்னை அவமானப்படுத்துவது என்பது சாருவின் வாதம், ஆனால் சாருவின் வியாபார பொருளே நான் வெளிப்படையானவன், நிர்வாண மனநிலை உள்ளவன் என மறைமுகமாக சொல்வது என்பதை சாருவின் தொடர்ச்சியான வாசகர் கடிதத்தை படித்தால் புரிந்து கொள்வீர்கள்!

பாலியல் சார்ந்த விசயங்கள் தவிர்க்கப்பட வேண்டிய விசயமே அல்ல! ஆனால் சொல்ல வருவதில் இருக்கு அதன் திணிப்பு தன்மை, நல்ல ஒரு சினிமாவை பார்த்து கொண்டிருக்கையில் அதை வரும் கற்பழிப்பு காட்சியை எந்த மனநிலையில் மனிதன் அனுகுவான், கண்டிப்பாக இது வாழ்கையில் தவிர்க்க முடியாதது, அதனால் இது இடம்பெற்றே ஆக வேண்டும் என்றா!?. சினிமாவில் கற்பழிப்பு காட்சியை எந்த மாதிரியான வக்கிரத்தோடு ஒரு மனிதன் அணுகுவானோ அதே மனநிலை தான் சாருவின் எழுத்தை படிப்பவர்களுக்கும் உள்ளது!. சாருவின் தேகத்தை சரோஜாதேவியோட மிஸ்கின் ஒப்பிட்டதின் காரணத்தை தற்பொழுது புரிந்து கொள்ளலாம்!

ஒரு படைப்பாளிக்கென எந்த கடமையோ, சமூக அக்கறையோ தேவையில்லை. அதே எல்லா நேரமும் வெளிப்பட்டு கொண்டிருந்தால், நான் கருணாநிதியை விமர்சிக்கிறேன், கமலை விமர்சிக்கிறேன் என சொல்லிக்கொள்வது ஏன், அவர்கள் இருவரை தவிர சமூகத்தை கெடுப்பவர்கள் வேறு யாரும் இல்லையா! இருக்கிறார்கள் ஆனால் அவர்களை விமர்சித்தால் நீங்கள் கொண்டுக்கொள்ளப் போவதில்லை, இதை “அட்டென்சன் சீக்கிங் பர்சனால்டி” என்பார்கள்!.

தம்மை வெளிப்படுத்தி கொள்வதில்லை சாருவின் மனநிலையை அப்பட்டமாக அறிய முடிகிறது. ஆனாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு சாருவை ஏற்று கொள்ளும் சிலரின் மனநிலை என்ன!?

கற்பழிப்பு காட்சி இல்லைனா என்ன, எங்களுக்கு தான் சாருவின் எழுத்து இருக்கிறதே என்பது தான்!


யார் சாரு என தெரியாமல் இருப்பவர்களுகாக!, அண்ணன் கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பவர் தான் சாரு நிவேதிதா!


உரையாடலாம் வாங்க!

45 வாங்கிகட்டி கொண்டது:

ராஜன் said...

//ஒரு ரோஜாவை பார்த்து ஆகா என்ன அழகு என்று வியந்து போவதற்கும்//

ரோஜாவுக்கு வயசாயிடுச்சே பங்கு! நீங்க இன்னுமா வியந்துட்டு இருக்கீங்க!?

கும்மி said...

//யார் சாரு என தெரியாமல் இருப்பவர்களுகாக!, அண்ணன் கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பவர் தான் சாரு நிவேதிதா!//

கேபிள் சங்கர் யாரு? சாரு பக்கத்துல நிக்கிறவரா?

Baski.. said...

இந்த வருஷம் எத்தனையோ புத்தகங்கள் புதிய புதிய எழுத்தாளர்கள்...நீங்கள் இன்னும் சாரு புகழ் பாடுவதற்கு காரணமும் “அட்டென்சன் சீக்கிங் பர்சனால்டி” தானே....

ஜீ... said...

//யார் சாரு என தெரியாமல் இருப்பவர்களுகாக!, அண்ணன் கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பவர் தான் சாரு நிவேதிதா!//
:-))

Baski.. said...

//நல்ல ஒரு சினிமாவை பார்த்து கொண்டிருக்கையில் அதை வரும் கற்பழிப்பு காட்சியை எந்த மனநிலையில் மனிதன் அனுகுவான்,//

"irrversible" படம் பாத்துட்டு சொல்லுங்க.. கற்பழிப்பு காட்சிய மனிதன் எப்படி அணுகுவான்னு...

வால்பையன் said...

//இன்னும் சாரு புகழ் பாடுவதற்கு காரணமும் “அட்டென்சன் சீக்கிங் பர்சனால்டி” தானே//


அதே தான்!

ஆனா கொஞ்சம் மாற்றம்!
”அட்டென்ஷன் ஃபைண்டிங் பர்சனால்டி!”

சி.பி.செந்தில்குமார் said...

>>>>ஒரு எழுத்தாளன் என்ன எழுதவேண்டும், என்ன எழுதக்கூடாது என சொல்ல வாசகனுக்கு உரிமையில்லை, ஆனால் அதை நிராகரிக்கவும், விமர்சிக்கவும் அவனுக்கு உரிமை உண்டு!,

ஓப்பனிங்கலயே சிக்சர் அடிக்க உங்களை விட்டா யார் இருக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>கும்மி said...
//யார் சாரு என தெரியாமல் இருப்பவர்களுகாக!, அண்ணன் கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பவர் தான் சாரு நிவேதிதா!//

கேபிள் சங்கர் யாரு? சாரு பக்கத்துல நிக்கிறவரா?


கலக்கல் பதிவுக்கு வந்த நக்கல் கமெண்ட்

வால்பையன் said...

//"irrversible" படம் பாத்துட்டு சொல்லுங்க.. கற்பழிப்பு காட்சிய மனிதன் எப்படி அணுகுவான்னு... //


அந்த படம் எடுத்த நாட்டில் சென்சார் என்பதே இல்லை என்பதை முதலில் கருத்தில் கொள்க!

இப்ப மேட்டருக்கு வர்றேன்!
அப்படத்தின் முதல் காட்சி என்ன? ஒரு ஹோமோ க்ளப்பில் ஒருவன் அடித்து கொல்லப்படுவான்!, முதல் காட்சியிலேயே அது எம்மாதிரியான படம் என்பது காட்டப்பட்டுள்ளது!

வாசகனுக்கு கிளர்ச்சி தரும் எதுவும் இலக்கியம் தான் எனும் பட்சத்தில் சரோஜாதேவிக்கு இணை வைக்கப்படும் சாரு ஏன் கோவப்பட வேண்டும், ஆக சரோஜாதேவியை மட்டுமாக நினைக்கிறார் தானே!

இது குறித்து விரிவாக அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்!

Baski.. said...

//வாசகனுக்கு கிளர்ச்சி தரும் எதுவும் இலக்கியம் தான் எனும் பட்சத்தில் சரோஜாதேவிக்கு இணை வைக்கப்படும் //

மெய்யாலுமே யாருக்காச்சும் "தேகம்" படிச்சி கிளர்ச்சி வந்துச்சின்னா அவங்க மன நிலைதான் சோதிக்கணும்... நாகர்ஜுனன் அவர்களின் தளத்தில் இருக்கும் ழார் பத்தாயின் கண்ணின் கதை கொஞ்சம் படிச்சி பாருங்க...

MANO நாஞ்சில் மனோ said...

அசத்துங்க அசத்துங்க....

Baski.. said...

அதென்ன பாஸ் அடுத்தவன் பண்ணினா “அட்டென்சன் சீக்கிங் பர்சனால்டி” . அதே நாம ”அட்டென்ஷன் ஃபைண்டிங் பர்சனால்டி!” பண்ணினா .. எந்த ஊர் நியாயம் இது..

Baski.. said...

அதென்ன பாஸ் அடுத்தவன் பண்ணினா “அட்டென்சன் சீக்கிங் பர்சனால்டி” . அதே நாம பண்ணினா ”அட்டென்ஷன் ஃபைண்டிங் பர்சனால்டி!”... எந்த ஊர் நியாயம் இது..

வால்பையன் said...

//அதென்ன பாஸ் அடுத்தவன் பண்ணினா “அட்டென்சன் சீக்கிங் பர்சனால்டி” . அதே நாம ”அட்டென்ஷன் ஃபைண்டிங் பர்சனால்டி!” பண்ணினா .. எந்த ஊர் நியாயம் இது.//


சாரு பண்ணுவது ஒன்வே!

இங்கே கேள்வி கேட்க நீங்க இருக்கிங்க தல!, பதில் சொல்லும் பொழுது சாருவை பற்றிய புரிதலை பரிமாறிக்கொள்கிறோம்!

ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு!

Baski.. said...

http://nagarjunan.blogspot.com/2008/06/1_3109.html

சோழர் கொடியோன் said...

இல்லை வால் பையன் அட்டென்சன் சீக்கிங் பர்சனால்டி இல்லை..... தெருவில் அமைதியாக போவோரை பார்த்து ஒரு நாய் குரைத்துக்கொண்டிருந்தால் அது அட்டென்சன் சீக்கிங் பர்சனால்டி ஆனால் அந்த நாயின் தொந்தரவு தாங்காமல் அதை ஒருவன் கல்லால் அடித்தால் அது அட்டென்சன் சீக்கிங் பர்சனால்டி இல்லை ஆகவே வால் பையனிடம் குரைச்சலை தடுக்கும் கல் மட்டுமே உள்ளது நீங்கள் சொல்லும் "அசீப" இல்லை.

வால்பையன் said...

ழார் பத்தாய் எழுத்தை படித்திருக்கிறேன் நண்பரே!

ழார் பத்தாயுடன் சாருவை ஒப்பிடுவதை கேனத்தனமாக கருதுகிறேன்.(இதை அவரே செய்து கொள்ளும் போது இன்னும் தமாஷ்). பத்தாய் நாட்டின் கலாச்சாரம் அதன் பிண்ணனி என்ன?

டிண்டோ பிராஸையும், வேலுப்பிரபாகரனையும் ஒப்பிட முடியுமா!?

மாணவன் said...

//ஒரு எழுத்தாளன் என்ன எழுதவேண்டும், என்ன எழுதக்கூடாது என சொல்ல வாசகனுக்கு உரிமையில்லை, ஆனால் அதை நிராகரிக்கவும், விமர்சிக்கவும் அவனுக்கு உரிமை உண்டு//

சூப்பர் நச்சுன்னு சொல்லியிருக்கீங்க....

மாணவன் said...

//யார் சாரு என தெரியாமல் இருப்பவர்களுகாக!, அண்ணன் கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பவர் தான் சாரு நிவேதிதா!//

ஓ... இவர்தான் சாருவா????

மாணவன் said...

////யார் சாரு என தெரியாமல் இருப்பவர்களுகாக!, அண்ணன் கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பவர் தான் சாரு நிவேதிதா!//

கேபிள் சங்கர் யாரு? சாரு பக்கத்துல நிக்கிறவரா?//

இது செம்ம கலக்கல்... :-))

ராஜன் said...

//ழார் பத்தாயின் கண்ணின் கதை கொஞ்சம் படிச்சி பாருங்க...//

எருமைக்கண்ணின் மேல் புண்$%யை வைத்து நசுக்கி அமர்கிறேன்!

இதுல மட்டும் மூடு பிச்சுக்கிட்டு வருதா என்ன?

அதுவுமில்லாம ழார் பட்டாய்ல் இவன மாதிரி புட்டகத்த எழுதிட்டு புடுங்கற வேலை எதுவும் பண்ணலயே

sakthistudycentre-கருன் said...

விமர்சனம் பன்றஅளவிற்கு நான் பெரியஆள் இல்ல..
பதிவை படிக்கும்போது மனசு ஏதோ செய்யுது.. அதுதான் நிஜம்..

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html

sakthi said...

::)))

மோனி said...

//ழார் பத்தாய்//

இது என்ன பங்கு
ரெஸ்டாரெண்ட்ல ஏதாவது
புது அயிட்டமா ??

மோனி said...

//எழுதுறதுக்கு இலவச ப்ளாக் இருக்கு, நேரமும் இருக்குன்னா என்ன வேணும்னாலும் எழுதுவியா என்ற கருத்துகள் வந்து குவிந்து கொண்டு தான் இருக்கின்றன//

குவிந்ததையெல்லாம் என்ன பண்ணுனே?

மோனி said...

//ஆனால் சார்வின் வியாபார பொருளே நான் வெளிப்//

சார்வின் யாரு
டார்வினோட தம்பியா ?

மோனி said...

//ஒரு படைப்பாளிக்கென எந்த கடமையோ, சமூக அக்கறையோ தேவையில்லை. //

இத மட்டும் நல்லா புரிஞ்சி வெச்சிருக்குறே ;-0)

மோனி said...

//ஆனால் அவர்களை விமர்சித்தால் நீங்கள் கொண்டுக்கொள்ளப் போவதில்லை, //

அப்படீன்னா
நாங்க மொண்டுக்கிட்டு போவோம்னு சொல்றியா ?

மோனி said...

//உரையாடலாம் வாங்க!//

த்த்தோ ..
கிளம்பிட்டேன் -
வந்துட்டே இருக்கேன் :-0)

ராஜன் said...

//குவிந்ததையெல்லாம் என்ன பண்ணுனே? //


சொல்லட்டுமா!?

ராஜன் said...

//அப்படீன்னா
நாங்க மொண்டுக்கிட்டு போவோம்னு சொல்றியா ? //

மோனீ! இஸுபெல்லிங் மிச்சுட்டேக்கெல்லாம் டிக்குடேட்டு பண்ணவா நீ வந்தே!

ராஜன் said...

//சார்வின் யாரு
டார்வினோட தம்பியா ? //


டார்வின் தம்பிக்கு கூட இவ்வளவு புகழா?!

தம்பி எப்பிடிப்பா பேனா புடிச்சு எழுதறான்?

ராஜன் said...

ழார் பத்தாய்ல் சார் பத்தாய்ல் நல்லாத்தான் இருக்கு பேர் பொருத்தம்!

ராஜன் said...

யுத்தம் செய் கேஸட் ரிலீஸாயிடுச்சே! சாருவும்,மிசுகினும் கட்டிப்புடிச்சி கிஸ் அடிச்சுக்கிற காட்சியெல்லாம் படத்துல கட் பண்ணிடுவாங்களா?

ராவணன் said...

சாரு வடிவது நிக்காதா? தொடருமா?

எனக்குக் கேபிலும் தெரியாது...
பக்கத்தில் நிற்கும் லேபிலும் தெரியாது!

எழுத்தாளர்களுக்கு மூன்றாவது குறி உள்ளதா? அமுங்கிப்போன, அழுகிப்போனவர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று சாருபோல் கூவிக்கொண்டு திரிவார்கள்.

தமிழ்நதி said...

வாசித்தேன் வால்பையன்:)))

நித்யகுமாரன் said...

மனசெல்லாம் ஓடோடிக்கிட்டே இருக்கு இந்த மேட்டர். சீக்கிரம் ஒரு பதிவா போடறேன்.

சாருவிற்கு சொல்வதற்கு விஷயங்கள் இல்லை போலும். ஓரிடத்தில் சுழலும் நிற்க வைத்த சைக்கிளின் சக்கரமாகவே அவர் சுற்றுகிறார். பாவம். அவரும் அவரைப் படிக்கும் நாமும்.

அன்பு நித்யன்.

Philosophy Prabhakaran said...

//
யார் சாரு என தெரியாமல் இருப்பவர்களுகாக!, அண்ணன் கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பவர் தான் சாரு நிவேதிதா! //

ஓ இவருதானா அது... நல்ல அறிமுகம்...

பயணமும் எண்ணங்களும் said...

சாருவின் உலக ஞானத்தையோ, இலக்கிய சிறப்பையோ விமர்சிக்க நமக்கு அருகதையில்லாமலிருக்கலாம்..


ஆனால் மலத்தை மலம்னு கண்டிப்பா சொல்லணும்..அடுத்தவர் ஒதுங்கி போகலாமில்லையா?..


சரோஜாதேவி காமம் மட்டுமாயிருக்கும்.. சாரு அவரை விட மட்டம்தான்...சரோஜாதேவி கேட்டா வருந்தப்போறார்..

அட்டென்ஷன் மட்டும் அல்ல , பணம், புகழ் , அருவருப்பு, குரோதம் எல்லாம் சீக்கிங், சீக்கு (பிடிச்ச )கிங்...

Premkumar Masilamani said...

yaaru cable sankar?... yaaru saaru nivethitha?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இவருதான் சாருவா? எங்கேயோ பார்த்திருக்கிறேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ராஜன் said...
//ஒரு ரோஜாவை பார்த்து ஆகா என்ன அழகு என்று வியந்து போவதற்கும்//

ரோஜாவுக்கு வயசாயிடுச்சே பங்கு! நீங்க இன்னுமா வியந்துட்டு இருக்கீங்க!?//////

பழைய பிரிண்ட்டா இருக்குமோ?

கிருபாநந்தினி said...

இந்தப் பதிவின் மொத்தச் சாரத்தையும் கடைசி வரியில ஜூஸா கொடுத்துட்டீங்ணே! சாருவைச் சாறு பிழிஞ்சிட்டீங்க!

D.R.Ashok said...

நககீறல் பட்ட சாருவின் தேகம்... (from charuonline)
எனக்கும் பிடிக்கவில்லை அந்த பதிவு...
’சாரு இதெல்லாம் தேவையா?’ என்று இந்த பின்னூட்டத்தின் மூலம் கேட்டுகொள்கிறேன்... :)

வித்யாஷ‌ங்கர் said...

attention seeking is the major problam for him

!

Blog Widget by LinkWithin