பரிணாம வளர்ச்சி பற்றி பேசினாலே நண்பர்களின் முதல் கேள்வி இப்பொழுது ஏன் குரங்கு மனிதனாகவில்லை என்பது! இது ஆத்திகவாதிகள் மட்டும் கேட்கும் கேள்வியல்ல, கடவுள் மறுப்பாளர்களும் என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள், தவறில்லை, நமக்கு ஆரம்பம் எல்லாமே கேள்வி ஞானம் தானே, அதன் பின் தொடர்ச்சியாக அதை பற்றி அறிய முயற்சி செய்தால் தானே உண்மையின் அதிகபடியான சாத்தியகூறுகளை அறியமுடியும்! அதை செய்தவன் அறிகிறான், வேத புத்தகங்களை மட்டும் படிப்பவன் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டு கொண்டிருக்கிறான்!
இந்த தொடரை எழுத எனக்கு படிப்பறிவு தகுதியில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும், ஆனால் பரிணாமம் பற்றி பேச, எழுத படிப்பறிவு தேவையில்லை, சுற்றுசூழலை ஊன்றி கவனித்தாலே போதுமானது! நம்மை சுற்றி ஆயிரமாயிரம் பரிணாமத்தின் சுவடுகள் சிதறி கிடக்கின்றன, அலட்சியம் செய்வது மதவாதிகளின் குணம், அது ஏன், எவ்வாறு, எப்படி என்று கேள்வி கேட்பது பகுத்தறிவாளனின் குணம்!, அதையும் கூட சொன்னவுடன் நம்பவேண்டியதில்லை, அதற்க்குண்டான சாத்தியகூறுகளை ஆராயும் தனிபட்ட உரிமை தனியொரு மனிதனுக்கும் இருக்கிறது! சிந்திக்க தான் அந்த மூளை மறுக்கிறது!
பரிணாமம் என்றால் மாற்றம் என சொல்லலாம், வளர்ச்சி என்பது எல்லாவற்றிலும் உண்டு, ஆனால் உள்ளது சிறத்தல் என்பதே பரிணாம வளர்ச்சியின் முக்கிய கோட்பாடு!
பரிணாம வளர்ச்சி என்பது உயிரினத்தில் மட்டுமே உண்டு என்பது இன்னும் பலரின் நம்பிக்கை, ஆழ்ந்து நோக்கினால் எல்லாவற்றிலும் பரிணாம வளர்ச்சி உண்டு என்பதை அறியலாம், எவையெல்லாம் முன்னை விட சிறப்பான தோற்றமோ, மாற்றமோ பெருகிறதோ அவைகளின் பரிணாம வளர்ச்சி!
ஒருவேளை திருவள்ளுவர் இன்று தமிழகம் வருகிறார் என்று கற்பனை செய்து கொள்வோம்! அவரால் இன்றிருக்கும் தமிழை படிக்க முடியுமா!? இது சத்தியமாக தமிழில்லை வேறு எதோ மொழி என்பார், அதற்கு காரணம் என்ன!? மொழியின் சிறப்பு மாற்றம், அதுவே அதன் பரிணாம வளர்ச்சி!
தூரத்தில் இருக்கும் எதிரியையோ, உணவையோ தாக்க முதன் முதலில் மனிதன் கல் என்னும் ஆயுதத்தை பயன்படுத்தினான், அதை விட சரியான இலக்கை தாக்க ஈட்டி, அதைவிட வேகமாக தாக்க வில், பின் துப்பாக்கி, இயந்திரதுப்பாக்கி, ஏவுகணை இவையெல்லாம் என்ன காட்டுகிறது! கல் என்னும் ஆயுதம் சிறப்பு பெற்று பயன்படுத்த இலகுவான ஆயுதமாக மாறி ஆயுத பரிணாமத்தின் வளர்ச்சியை காட்டுகிறது!
கம்பியூட்டர் இல்லாமால் இன்று மளிகைகடை கூட இல்லை! ஆனால் ஆரம்பகால கம்பியூட்டரை வைக்கவே தனியாக ஒரு அறை வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே! இன்று அதன் வளர்ச்சியை கண் முன்னே பார்த்து கொண்டிருக்கிறோம்! நமது சட்டைப்பைக்குள் அடங்கும் கைப்பேசி இன்று ஒரு கணிணியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது, அலைபேசியின் பரிணாம வளர்ச்சியும் நாம் அறிந்ததே! இவை தான் உள்ளது சிறத்தல் என்ற பரிணாம வளர்ச்சி!
சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் தந்தை என அழைக்கபடுகிறார், அவர் பரிணாம கருத்துகளை முதன்முதல் வெளிட்டதால் அந்த பெயர், மேலும் பலர் நினைத்து கொண்டிருப்பது போல் அவர் மனிதனின் பரிணாமத்தை பற்றி மட்டுமே ஆராயவில்லை, பரிணாமம் என்ற கண்டுபிடிப்பே அவருடய வாழ்வில் தற்செயலாக நடந்தது எனவும் சொல்லலாம்! ஒவ்வோரு தீவுகளில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் வடிவ வேற்றுமைகளும், குண வேற்றுமைகளும் இருந்ததை கண்டு ஆராய்ந்து தான் அவர் புத்தகம் எழுதவே ஆரம்பித்தார்! அவருடய காலத்தில் இருந்த தொழில்நுட்பத்தில் அவரால் சொல்ல முடிந்தது மனிதனுக்கும், குரங்குக்கும் சம்பந்தம் உள்ளது, மனிதன் குரங்கின் வம்சாவழியாக இருக்கலாம் என்று, ஆனால் தற்போது பல தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன! இன்றைய கண்டுபிடிப்பில் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று ஒரே மாதிரி செல்வதல்ல, அது ஒரு மரத்தின் கிளைகளை போல ஒரே குடும்பம் பல வடிவங்களை பெற்றது கண்டு பிடித்திருக்கிறார்கள்!
அவற்றில் உள்ள உண்மையின் சாத்தியகூறுகளை அலசுவோம், எல்லோருக்கும் அவரவர் கருத்துகளையும் , சிந்தனைகளையும் சொல்ல உரிமையுண்டு! வாதம் என்பது சண்டையிட அல்ல, தெளிவு பெற மட்டுமே! அது பற்றி நண்பர்கள் அறிந்த விபரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்! சுட்டி கொடுத்தாலும் சரி!
53 வாங்கிகட்டி கொண்டது:
அண்ணா எங்கயோ போயிட்டீங்கண்ணா... ஆனா கேள்விகள் இருக்குனா... திரும்ப வர்றேன்
.
வால் மிகவும் முக்கியமான பதிவின் சுட்டி இது.
கையேடு அவர்கள் ரொம்ப நாளைக்கு முன்னாலேயே இப்ப இருக்க குரங்கே ஏன் மனுசனாகல என்று ஜெயமோகன் தனமா கேள்வி கேட்கும் மக்களுக்கு படம் போட்டு விளக்கி இருப்பார். அவரிடம் கேட்கும்போது சுலபமான விளக்கங்களால் எளிதாக விளக்குவார்.
கையேடு:
http://kaiyedu.blogspot.com/search/label/பரிணாமம்
படிக்க வேண்டியது.
.
வால், நல்ல முறையில வைக்கோல் போட்டு மொத்தென பரிணாம அடிப்படையில இருந்து புரிஞ்சிக்க ஏதுவா செஞ்ச மாதிரியான ஒரு பதிவு... இத நூல் மாதிரி பிடிச்சு இன்னும் மற்ற அறிவியல் பூர்வமான நிரூபிப்பு சார்ந்த கட்டுரைகளை வாசிக்கலாம். நன்றி!
டோன்ட் வொர்ரி, பீ ஹாப்பி தல.
வால்ஸ், ரொம்ப நல்லா எடுத்துக்காட்டுகள் சொன்னீங்க... ஆனால், இடிக்கிறதே. ஏவுகணை இல்லாத சமயத்தில் துப்பாக்கியும், அதில்லாத நேரத்தில் வில்லம்பும், அதுகிடைக்கா பொழுதில் ஈட்டியும், அதுவும் அகப்படாவிட்டால் கல்லையே இன்றும் கூட ....இப்போதும் கூட ....நீங்கள், நான், ....நாம் ஆயுதமாக உபயோகிக்கலாம். அவைஎல்லா உதாரன்களும் நம் கண்ணுக்கு எதிராக உள்ளனதானே? ஆனால், ஏவுகணைக்கு ஒப்பான மனிதன் இருக்கிறான். மற்றவற்றுக்கு ஒப்பான "....", ".....", :...." (அந்த கிராஸ் போட்டு அழிக்கப்பட்ட படத்தில் உள்ளவை) இவைகளெல்லாம் எப்போது இருந்தன? யார் பார்த்திருக்கிறார்கள்? புகைப்படம் உண்டா? ஓலைச்சுவடி, கல்வெட்டு ஆதாரம் உண்டா? கண்டவர் விண்டிலரா? பின்னெப்படி மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது வால்ஸ்? படிப்பறிவில்லாவிட்டாலும்.... அறிவியல் பூரவமாக எழுத வேண்டாம், அட்லீஸ்ட்... தர்க்க ரீதியாக வாவாது சுற்றலாமே...வால்ஸ்... என்னவோ பார்த்து செய்ங்க....
//(அந்த கிராஸ் போட்டு அழிக்கப்பட்ட படத்தில் உள்ளவை) இவைகளெல்லாம் எப்போது இருந்தன? யார் பார்த்திருக்கிறார்கள்? புகைப்படம் உண்டா? ஓலைச்சுவடி, கல்வெட்டு ஆதாரம் உண்டா? கண்டவர் விண்டிலரா?//
எலும்பு படிவங்கள் சாட்சியாக கிடைத்ததால் தான் மனிதனுக்கு முன்னோடியாக இருந்த ஹோமோஎரக்டர்ஸ், ஹோமோசேபியன்ஸ் பற்றியெல்லாம் அறியலில் கற்று தருகிறார்கள்!
நீ பார்த்தியா, நான் பார்த்தேனே என கேட்கசொல்லவில்லை!
சாத்தியமா, சாத்தியமில்லையான்னு யோசிக்க சொன்னேன்!
இது முன்னுரை மட்டுமே, இன்னும் தொடரே ஆரம்பிக்கல!
நல்ல ஆரம்பம் வால்
தொடருங்கள் ஆதரவு தர காத்திருக்கிறோம்
பல அற்புத தகவல்களைத் தொடர்ந்து தந்திட வேண்டுகிறேன், அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சார்லஸ் டார்வின் மட்டுமல்ல அவருடன் பலரும் இதே எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள். ஒரு விசயம் நிச்சயம் சொல்லியாக வேண்டும் அருண். நான் அடியார்க்கெல்லாம் அடியார் கதையில் எழுதிய சமணர் பற்றியும் உங்கள் சென்ற இடுகையில் வந்துவிட்டது, அதைப்போன்றே இந்த சார்லஸ் டார்வின் பற்றியும் வந்துவிட்டது. இருவரும் வெவ்வெறு கருத்துகள் கொண்டாலும் கொண்டாடுவது என்னவோ மனிதத்தைத்தான். தொடர்ந்து அரியத் தகவலைத் தாருங்கள், பாராட்டுகள்.
அருமையாக உள்ளது.
//மொழியின் சிறப்பு மாற்றம், அதுவே அதன் பரிணாம வளர்ச்சி!//
இதில் 'சிறப்பு' என்னும் பதம் சரியாக வருமா? என்பது எனது தாழ்மையான வினா?
//மொழியின் சிறப்பு மாற்றம், அதுவே அதன் பரிணாம வளர்ச்சி!//
இதில் 'சிறப்பு' என்னும் பதம் சரியாக வருமா? என்பது எனது தாழ்மையான வினா?//
உள்ளது சிறத்தல் எனில், தற்போது இருப்பதை விட பிற்காலத்தில் மேலும் சிறப்பாகலாம்!
நல்ல ஆரம்பத்துடன் வந்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்
interesting topic......
Best wishes!
///எலும்பு படிவங்கள் சாட்சியாக கிடைத்ததால் தான் மனிதனுக்கு முன்னோடியாக இருந்த ஹோமோஎரக்டர்ஸ், ஹோமோசேபியன்ஸ் பற்றியெல்லாம் அறியலில் கற்று தருகிறார்கள்!///
---நான்கு கால்களை, இரண்டு கைகளாகவும், இரண்டு கால்களாகவும் தவறாக கருதிக்கொண்டார்கள் என சொன்னால்,
'இல்லை.... மேலே இருந்த இரண்டு சின்னதாக இருந்தன' என்பீர்கள். சரி, இரண்டு சின்ன முன்னங்கால்கள், இரண்டு பெரிய பின்னங்கால்கள் கொண்ட ஏதோ ஒரு அழிந்து போன குரங்கு போன்ற விலங்கு என்று அதை கருதாமல் 'மனிதனின் மூதாதையர்' என்று கருத அறிவியல் காரணம் என்ன? (சிந்திக்க: ஆடு/மான், கழுதை/(வரி)குதிரை, நரி/(ஓ)நாய், பூனை/புலி, ஓணான்/பல்லி.)
---இதேபோல எலும்பு படிவங்கள் சாட்சியாக கிடைத்த.... இப்போதிருக்கும் ஒவ்வொரு விலங்குக்கும் அழிந்துபோன மூதாதையர்கள் பரிணாமத்தில் உண்டா?
---மிக பவர்புல்லான டைனோசர் ஏன் அழிந்தது? அழித்தது யார்? மிகுந்த பிரயாசப்பட்டு புகலிடம் கொடுத்து சட்டம்போட்டு காப்பாற்றப்படும் புலி இனம் அழிகிறது, தினமும் கொல்லப்படும் ஆடு வளர்கிறதே? ஏன் ?
---உயரமான கொழுந்து இலைகளை சாப்பிட்ட ஆட்டுக்குட்டி சந்ததிக்கு சம்பந்தமில்லாமல் பழுப்பு மஞ்சள் கட்டம் கட்டமாக தோல் ஏன் நிறம் மாற ஓட்டை சிவிங்கி ஆக வேண்டும்? கழுத்து நீண்ட ஆடு அல்லவா வரவேண்டும்?
---கங்காருக்கு வயிற்றில் பை வந்ததுபோல மற்ற மிருகங்களுக்கு, தேவை இருந்தும், அதேபோல செயல்பாடு இருந்தும் (குரங்கு) எதற்கு பை வரவில்லை?
----இதெல்லாம் போகட்டும், முக்கியமான வினா...
பரிணாமத்திற்கு காரணமான 'முதல் உயிர்' 'எதிலிருந்து' / 'எங்கிருந்து' பரிணாமம் பெற்றது? இதற்கு விளக்கம் சொல்லவில்லை என்றால் பரிணாம் என்பது அஸ்திவாரமற்ற ஆகாயக்கோட்டை.
குரங்கும், மனிதனும் காட்டில் ஒன்றாக வாழ்ந்து இருக்கலாம். அப்பொழுது உடை, சவர கத்தி கண்டுபிடிக்கபடாததினால் மனிதனம் குரங்கை போல் தோற்றம் அளிக்கலாம். ஒரே இடத்தில் வாழ்ந்த வெவ்வேறு இனம். மனிதனின் மூளை வளர்ச்சி அபாரம் ஆனால் குரங்க்னுடையது குறைச்சல். நானும் குளிக்காமல், சவரம் செய்யாமல் காட்டில் வாழ்ந்தால் குரங்கில் போல் தோற்றம் அளிப்பதற்கு வாய்ப்பு உண்டு. எப்படி சில சமயம் T.R. ராஜேந்திரன், கரடியாக தோன்றுகிறாரோ அப்படி.
வால்,
பரிணாம வளர்ச்சி என்பது அறிவியல் ரீதியான விசயமானதென்றாலும் அது நாத்திகர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் விசயமாக உள்ளது,
நீங்கள் சொன்ன கணிணி, மொபைல் போன்றவற்றினை அறிவியல் வளர்ச்சி என்றுதான் சொல்லமுடியும் பரிணாம வளர்ச்சி என்று சொல்லமுடியாது. பரிணாம வளர்ச்சி என்பது தானாக மாறுவது மாற்றப்படுவது அல்ல.
ஆரம்பக்கட்ட பெரிய கணிணிகள் தேவைக்கேற்ப பிற்காலத்தில் தானாக தன்னைக் சிறிதாக்கிகொள்ளவில்லையே.
இது குறித்து எனக்கும் நிறைய சந்தேகங்கள் உள்ளது. பதிவை தொடருங்கள் சந்தேகத்தற்கு விடைகிடைக்கிறதா என்று பார்ப்போம்.
///////பரிணாமம் என்றால் மாற்றம் என சொல்லலாம், வளர்ச்சி என்பது எல்லாவற்றிலும் உண்டு, ஆனால் உள்ளது சிறத்தல் என்பதே பரிணாம வளர்ச்சியின் முக்கிய கோட்பாடு!
பரிணாம வளர்ச்சி என்பது உயிரினத்தில் மட்டுமே உண்டு என்பது இன்னும் பலரின் நம்பிக்கை, ஆழ்ந்து நோக்கினால் எல்லாவற்றிலும் பரிணாம வளர்ச்சி உண்டு என்பதை அறியலாம், எவையெல்லாம் முன்னை விட சிறப்பான தோற்றமோ, மாற்றமோ பெருகிறதோ அவைகளின் பரிணாம வளர்ச்சி!////////
===மொத்தத்தில் நீங்கள் சொல்லும் பரிணாமம் என்ற புரிதலுக்கும் டார்வினின் உலகப்புகழ்பெற்ற பரிணாமம் என்ற புரிதலுக்கும் அமாவாசையையும் அப்துல் காதரையும் ஒப்புமை படுத்தலாம்.
அறிவியலை வைத்தே மொக்கை போடுவது என்பது பதிவு உலகில் ஒரு நல்ல பரிணாம வளர்ச்சிதான்(???)--உங்கள் பாணி புரிதலின்படி.
தங்கள் 'அறிவுக்கூர்மையை' காணும் போது நிஜமாலுமே 'உங்களுக்கு வால் இருக்குமோ' என்று ஐயுறுகிறேன். உங்களின் ஒரு வாலில்லா புகைப்படம் போட்டு என் ஐயத்தை போக்குவீர்களா?
நூலகத்தில் பரிணாமம் பகுதியில் உள்ள பத்து நரர்களை எடுத்தால் ஏழில் இருக்கும் அட்டைப்படத்தை.....
பரிணாமம் அல்லது டார்வின் என்று தேடினாலே கிடைக்கக்கூடிய படத்தை இன்டு அடித்து தூக்கி எறிந்து விட்டீர்கள். சரி, ஏதாவது பரபரப்பாக சொல்வீர்கள் என்றால், சம்பந்தா சம்பந்தமில்லாமல், கருவி நவீன மயமாக்கலை பரிணாமம் என்கிறீர்கள். அய்யா, அறிவிர்சிறந்தவரே... இரண்டும் ஒன்றாய்யா? இவ்வொப்புமை சரியா?
முன்பெல்லாம் மதத்தை/கடவுளை கிண்டல் செய்வீர்கள். இப்போது அறிவியலையும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். செம புரட்சிதான் போங்க... எங்க போய் முடியுமோ...
//ஒருவேளை திருவள்ளுவர் இன்று தமிழகம் வருகிறார் என்று கற்பனை செய்து கொள்வோம்! அவரால் இன்றிருக்கும் தமிழை படிக்க முடியுமா!? இது சத்தியமாக தமிழில்லை வேறு எதோ மொழி என்பார், அதற்கு காரணம் என்ன!? மொழியின் சிறப்பு மாற்றம், அதுவே அதன் பரிணாம வளர்ச்சி!//
Language change என்பது evolution-ல் வருமா என்பது எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லட்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழைவிட தற்போதைய தமிழ் என்ன அப்படி சிறப்பான வளர்ச்சியைக் கண்டுவிட்டது. வெறும் பஜனைப்பாட்டுகள் தானே எழுதிக் கொண்டிருந்தோம். கொஞ்சம் ஆண்டுகளாக அடுத்தவன் விஞ்ஞான முன்னேற்றத்தை மொழிபெயர்த்ததை தவிர்த்து இரண்டாயிரம் ஆண்டுகளாக நாம் ஒன்றும் கழட்டவில்லை.
very good beginning. keep going.
மனிதனின் ஜீனும் சிம்பன்ஸி ஜீனும் 98.4(தோராயமாக... புள்ளிக்கு பிறகு இருக்கும் எண் நினைவிலில்லை) சதவீதம் ஒற்றுமை தான். அந்த மீதி வித்தியாசத்தில் தான் நாம் மனிதன். அது நமக்கு தூரத்தும் உறவு. வேறு கிளை வழியே சென்றது.
எடுத்துக்காட்டு சொன்னா ஏன் literalலா அப்படியே எடுத்துக்குறாங்க. ஐயா யாரு பதிவலாவது போய் கொதர்க்கமா கேள்வி கேட்டுட்டு வந்துடறீங்களா? எல்லாரும் காட்டுறாங்க
//சரி, இரண்டு சின்ன முன்னங்கால்கள், இரண்டு பெரிய பின்னங்கால்கள் கொண்ட ஏதோ ஒரு அழிந்து போன குரங்கு போன்ற விலங்கு என்று அதை கருதாமல் 'மனிதனின் மூதாதையர்' என்று கருத அறிவியல் காரணம் என்ன?//
உலகின் மிகப் பழமையான மனித எலும்புக்கூடும் அதைக் குறித்த ஆராய்ச்சிகளும் உங்களுக்கு விளக்கம் கொடுக்கக்கூடும்.
http://news.nationalgeographic.com/news/2009/10/091001-oldest-human-skeleton-ardi-missing-link-chimps-ardipithecus-ramidus.html
//நண்பர்களின் முதல் கேள்வி இப்பொழுது ஏன் குரங்கு மனிதனாகவில்லை என்பது//
இதற்கு நான் அறிந்த விளக்கம் சொல்லலாமா?
செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் கையில் புடிக்க முடியாத அளவு செங்கல் சைஸில் இருந்தது. அதன் பின் பல மாறுதல்களுக்கு உட்பட்டு இன்று சிலிம் ஆக உள்ளங்கைக்குள் பொதிந்து கொள்ளும் அளவில் இருக்கிறது. அதனால் செங்கல் சைஸ் மாடல் வழக்கொழிந்து போய்விட்டது. ஆனால் இன்னும் இருக்கிறது..
குரங்கைப் பொறுத்தவரை, அதன் செல்களை அடிப்படையாக கொண்டு மனிதன் உருமாறுகிறான். அதே சமயம் ஆதி மூலக் கூறு செல்லைக் கொண்ட குரங்கு இன்னும் குரங்காகவே இருக்கிறது.
பரிணாம வளர்ச்சியில் மனிதன் வளர்ந்தாலும், குரங்கின் குணம் மட்டும் மாறவில்லை. இதற்காக வருத்தப்பட வேண்டியது குரங்குதான்...
(யாரோ சொல்லிக் கேட்டது...)
அடுத்த அத்யாயத்தையும் எழுதுங்க...
A detailed analysis is in the below link:
http://hamzatzortzis.blogspot.com/2009/10/god-debate-evolution-and-who-designed.html
apologize, for english comment.
Th author him very prominent in UK and US. a farwell to Darwin's fictional Movie "The Theory of Evolution" in the below link:
http://www.harunyahya.com/20questions01.php
இதைத்தான் எதிர்ப்பாத்தோம்.
வழக்கம்போல நீ அடிச்சியாடு நண்பா..
இருக்குற வரைக்கும் திருத்தப் பாக்கலாம்..
இல்லைனாலும் நமக்கப்புறமும் யாராவது வருவாங்க..
முக்காத பின் குறிப்பு :
ஒரு மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து
நம்ம ஜாக்கி-யோட லிங்க் ஒன்னு கொடுத்திருக்கேன்.
வால் பையனைத் தவிர - கண்டிப்பா எல்லோரும் பாத்து புரிஞ்சிக்கோங்க.
புரிஞ்சிக்கிட்டு போயி இன்னும் வளர்ற வழிய பாருங்க..
நெக்ஸ்ட் மீட்டுவோம்...
http://jackiesekar.blogspot.com/2008/09/blog-post_18.html
எளிமையான, சிறப்பான ஆரம்பம், உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
பரிணாம வளர்ச்சியையும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் எப்படி ஒன்றாக பார்க்க முடியும்..., எதோ இடிக்குதே தல
நல்லா இருக்கு அருண் !! தொடர்ந்து எழுதுங்க!!!
// பேநா மூடி said...
பரிணாம வளர்ச்சியையும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் எப்படி ஒன்றாக பார்க்க முடியும்..., எதோ இடிக்குதே தல//
மாற்றம் அல்லது வளர்ச்சி குறித்து எழுதியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் அது நடைபெறுகிறது என்பதைக் குறித்துள்ளார்.
பொருள்களின் மாற்றம், மொழி மாற்றம் ஆகியவற்றை உள்ளது சிறத்தல் எனும் உதாரணத்திற்காகவே முன் வைக்கிறேன்!
இலகுவாக புரிந்து கொள்ளவும், சமகால உதாரணமும் கடின தன்மை கொடுக்காது என நினைத்தேன்!
ஆனால் நம் நண்பர்களுக்கு விசயம் முக்கியமல்ல, உதாரணங்களே முக்கியம்!
உதாரணங்களில் நான் வைத்த உள்குத்து அவை அனைத்தும் மனிதன் பயன்படுத்தியது, அவைகளை உருவாக்கியது மனிதன்!
பரிணாம வளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல், அது உடல்ரீதியாக தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, அறிவுரீதியாகவும் இருக்கலாம்!
மனித வடிவமெடுத்தும் இன்னும் பலர் அறிவை பயன்படுத்தாமல் இருப்பது கவலை தரும் விசயம்!
மனிதனின் அடுத்தகட்ட பரிணாமவளர்ச்சி பற்றி என் கணிப்பு, மிகுந்த அளவு அறிவை பயன்படுத்துபவர்கள் தற்போதைய மனிதனை போல் மேல் நிலையிலும், குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் தற்போதைய குரங்களை போல் கூண்டுக்குள்ளும் அடைக்கப்படலாம்!
கடைசி பாரா கற்பனை மட்டுமே!
நடக்கலாம், நடக்காமலும் போகலாம்!
//இத்தனைப் பேர்களுக்கும் எப்படி பதில் எழுதி இன்னமும் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள்?
கேள்விக் கணை வந்து பாயுதே!//
அவர்களது கேள்விகள் எனக்கு பதிலை தேடும் ஆர்வத்தை தூண்டுகிறது! என் வாழ்வின் சிறப்பான தருணமாக நான் இதை உணர்கிறேன்!
பரிணாம வளர்ச்சி பற்றி பேசினாலே நண்பர்களின் முதல் கேள்வி இப்பொழுது ஏன் குரங்கு மனிதனாகவில்லை என்பது! இது ஆத்திகவாதிகள் மட்டும் கேட்கும் கேள்வியல்ல, கடவுள் மறுப்பாளர்களும் என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள், தவறில்லை, நமக்கு ஆரம்பம் எல்லாமே கேள்வி ஞானம் தானே, அதன் பின் தொடர்ச்சியாக அதை பற்றி அறிய முயற்சி செய்தால் தானே உண்மையின் அதிகபடியான சாத்தியகூறுகளை அறியமுடியும்!//
இந்த ஞானம் ஏன் கடவுள் விசயத்தில் இல்லை? கடவுள் இருந்தாலும் இருப்பார்.ஆனால் நமக்கு அவரை புரிந்து கொள்ளும் அளவு அறிவு வளரவில்லை என ஏன் யோசிக்க முடியவில்லை?
//இந்த ஞானம் ஏன் கடவுள் விசயத்தில் இல்லை? கடவுள் இருந்தாலும் இருப்பார்.ஆனால் நமக்கு அவரை புரிந்து கொள்ளும் அளவு அறிவு வளரவில்லை என ஏன் யோசிக்க முடியவில்லை? //
எனக்கு வளரவில்லை தான், உங்களுக்கு தான் வளர்ந்திருக்குல்ல, கடவுளை தான் காட்டுங்களேன்! உண்மை என்று இங்கு நான் எதையும் உறுதி செய்யவில்லை!
நான் சிந்திக்க சொன்னது சாத்தியகூறுகளை தான்!
நான் பரிணாமத்தை பற்றி எழுதுகிறேன், நீங்கள் கடவுள் எங்கே என்று எழுதுங்கள்!
பரினாம வளர்ச்சி-கதை எல்லாம் தசாவதாரம் ராமர் படங்கள்,அவதார கதைகளை படித்தாலே சுலபமாக புரிந்துகொள்ளலாம்.இந்தியன் ஒண்ணும் தெரியாதவன் சாமி கும்பிடத்தான் லாயக்கு என நினைக்க வேண்டாம் .வெளினாட்டு விஞ்ஞானி சொன்னது அப்படியே வேத வாக்காக எடுத்து கொள்ளும் அறிவாளிகள்? இந்திய முன்னோர்கள் அறிவாற்றல் யோசித்து கூட பார்ப்பதில்லை
//பரினாம வளர்ச்சி-கதை எல்லாம் தசாவதாரம் ராமர் படங்கள்,அவதார கதைகளை படித்தாலே சுலபமாக புரிந்துகொள்ளலாம்.இந்தியன் ஒண்ணும் தெரியாதவன் சாமி கும்பிடத்தான் லாயக்கு என நினைக்க வேண்டாம் .வெளினாட்டு விஞ்ஞானி சொன்னது அப்படியே வேத வாக்காக எடுத்து கொள்ளும் அறிவாளிகள்? இந்திய முன்னோர்கள் அறிவாற்றல் யோசித்து கூட பார்ப்பதில்லை //
தசாவதாரம் படத்தில் அப்படி ஒன்றும் நான் பார்த்தாக நினைவில்லை! இந்து மதத்திற்கும் பரிணாம வளர்சிக்கும் உள்ள தொடர்பை பதிவாக இட்டால் நானும் சக நண்பர்களும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்!
இந்திய முன்னோர்கள் என்று யாரை சொல்கிறீர்கள், சிந்து சமவெளியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்களையா!?
தகவலுக்காக!
தசாவதார கதை ஆரியர்களுடயது!
அவர்கள் கொண்டு வந்ததே விஷ்ணு!
சான்று விஷ்ணு என்பதே ஒரு சமஸ்கிருத வார்த்தை!
//மனிதம் குடி போதையினால் தான் அழிந்திட்டு இருக்காம்.....என்னுடைய விருப்பமும் மனிதம் காக்கபட வேண்டும் என்பதே! //
நான் எங்கேயும் என் செயலை நியாயபடுத்தியதில்லை நண்பரே!
நான் குடிக்கிறேன், குடித்து கொண்டிருக்கிறேன், குறைத்து விட்டேன், நிறுத்திவிட்டேன் என விளம்பரபடுத்தி கொள்வதும் இல்லை!
தனிபட்ட விசயமாக இருந்தாலும் என் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறைக்கு நன்றி! நீங்களும் காபி, டீ குடிப்பதை நிறுத்திவிடுங்கள், அவைகளும் உடலுக்கு கேடு தான்.
நீங்களும் காபி, டீ குடிப்பதை நிறுத்திவிடுங்கள், அவைகளும் உடலுக்கு கேடு தான்.//
காற்றில் மாசு அதிகமாகிவிட்டது ..எல்லோரும் மூச்சு விடுவதை நிறுத்தி விடுங்கள்.அதுவும் உடலுக்கு கேடு தான் ஹி..ஹி
//காற்றில் மாசு அதிகமாகிவிட்டது ..எல்லோரும் மூச்சு விடுவதை நிறுத்தி விடுங்கள்.அதுவும் உடலுக்கு கேடு தான் ஹி..ஹி//
வாங்க, செத்து செத்து விளையாடுவோம்!
//மனிதனின் அடுத்தகட்ட பரிணாமவளர்ச்சி பற்றி என் கணிப்பு, மிகுந்த அளவு அறிவை பயன்படுத்துபவர்கள் தற்போதைய மனிதனை போல் மேல் நிலையிலும், குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் தற்போதைய குரங்களை போல் கூண்டுக்குள்ளும் அடைக்கப்படலாம்!//
வேறு நிலையில், வேறு வகையில், இது நடைபெறுவதாய் நான் நினைக்கிறேன். அது குறித்து இங்கு பேசினால், பதிவின் விவாதம் வேறு தளத்திற்குச் சென்றுவிடும். பிறிதொரு சமயம் பேசுவோம்.
//வேறு நிலையில், வேறு வகையில், இது நடைபெறுவதாய் நான் நினைக்கிறேன். அது குறித்து இங்கு பேசினால், பதிவின் விவாதம் வேறு தளத்திற்குச் சென்றுவிடும். பிறிதொரு சமயம் பேசுவோம். //
நானும் அதை தான் குறிப்பிட வந்தேன் நண்பரே! இப்பவே அப்படி தான் பலர் இருக்கிறார்கள் என்றால் யார் நம்ப தயாராய் இருக்கிறார்கள்!
//தசாவதாரம் படத்தில் அப்படி ஒன்றும் நான் பார்த்தாக நினைவில்லை! இந்து மதத்திற்கும் பரிணாம வளர்சிக்கும் உள்ள தொடர்பை பதிவாக இட்டால் நானும் சக நண்பர்களும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்!
இந்திய முன்னோர்கள் என்று யாரை சொல்கிறீர்கள், சிந்து சமவெளியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்களையா!?
தகவலுக்காக!
தசாவதார கதை ஆரியர்களுடயது!
அவர்கள் கொண்டு வந்ததே விஷ்ணு!
சான்று விஷ்ணு என்பதே ஒரு சமஸ்கிருத வார்த்தை//
தசாவதாரத்தை மீன் (நீரில் வாழ்வன), ஆமை (நிலத்திலும் நீரிலும் வாழ்வன), பன்றி (நிலத்தில் வாழும் மிருகம்), நரசிம்மம் (விலங்கும் மனிதனும் கலந்தது), வாமணன் (குள்ளமான மனிதன்), பரசுராமன் (உலோக ஆயுதம் தரித்த மனிதன்), ராமன் (வில் அம்பு தரித்த மனிதன், வேட்டையாடிதல் தொழில்), பலராமன் (கலப்பை தரித்த மனிதன், உழவுத்தொழில்), கிருஷ்ணன் (சக்ரயுதம் தரித்த மனிதன்), கல்கி (மேலும் முன்னேறிய மனிதன்). இப்படியாக தசாவதார தெய்வங்களை பரிணாம கோட்பாட்டுடன் ஒப்பீடுசெய்து பார்க்கிறார்கள் சிலர். என்னதான் அது பொருந்தி வந்தாலும். நான் அப்பவே சொன்னேன் தானே எனபது போலத்தான் இது. இதற்கு மேல் தொடர்ந்தால் விவாதம் வழிமாறும்.
//உதாரணங்களில் நான் வைத்த உள்குத்து அவை அனைத்தும் மனிதன் பயன்படுத்தியது, அவைகளை உருவாக்கியது மனிதன்!//
விவாதத்தில் உதாரணம் மிக கவனமாக கொடுங்கள். இந்த பதிவில் வள்ளுவர். போன பதிவில் மத தீவிரவாதத்தில் ராஜீவ் கொலை பற்றி சொன்னது போல, தேவையற்ற உதாரணம் விவாதத்தை திசை திருப்பும்.
அதே போல குறிப்புகள் அதிகம் இருந்தால் தான், விவாதிக்க இருக்கும். தெகா பரிணாமம் பற்றி அவரது துறையில் நன்றாக அறிந்திருப்பவர். கல்வெட்டு தெளிவான கருத்துகளை முன்வைப்பவர். அவர்கள் சுட்டிகளைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்றால். நீங்கள் மேலும் கொஞ்சம் படித்துவிட்டு விவாதித்தால் விவாதம் மொன்னையாக இருக்காது. நீங்கள் கேள்வி மட்டுமே அதிகமாக கேட்பதாக தோன்றுகிறது. இது என்னுடைய விமர்சனம் மட்டுமே. மற்றபடி நீங்கள் சொல்லவந்த கருத்தில் மாறுபடவில்லை. விவாதம் என்றால் வினவு, கல்வெட்டு, தருமி பதிவினைப் பாருங்கள். அவர்கள் கேள்வி கேட்பதை விட பதில் அதிகமாக சொல்வார்கள்.
அன்பான நண்பர் திரு வால்,
முதல் தவறு - இயற்க்கை அறிவியலில் பரிணாம கருத்தை முதல் முதலில் வெளியிட்டவர் டார்வின் அல்லர். Jean Baptist Lamarck, Geffroy saint Hillarie, Compte De Buffon போன்ற பலர் இதற்கு அடித்தளம் இட்டு விட்டார்கள்!
இரண்டாவது தவறு - Evolution by Natutal selection என்ற ஒன்றை உலகிற்கு வெளியிட்டவர் டார்வின் மற்றும் அன்று! Alfred Russel Wallace (அவரும் இங்கிலாந்து
காரர்தான்) உடன் சேர்ந்துதான் இதை டார்வின் உலகிற்கு அறிமுகம் செய்தார்! வாலஸ் independent ஆக இதை கண்டுபிடுத்து அதை டார்வினிடமே கடுதாசியில் சொன்னவுடன், டார்வின் அவருக்கு பல வருடங்கள் முன்னரே இதை கண்டுபிடித்தாலும், பெரிய மனதுடன் அவருக்கும் அதில் ஒரு பங்களித்தார்!
மூன்றாவது தவறு - நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் பரிணாமம் என்பது ஏதோ ஒரு improvement போல இருப்பதாக கட்டப்படுகிறது! இது தவறு! Evolution by natural selection இல் improvement என்பது ஒன்றும் இல்லை! அந்த சூழ்நிலைக்கு தேவையான வடிவும், திறன் வெற்றிபெறுகிறது!
நான்காவது தவறு (அல்லது குறை) - Darwininan Natural selection என்பதை mendilian Genetics உடன் ஒன்று சேர்ந்து இப்பொழுது முற்றிலுமாக நிரூபிக்கப்பட்ட neo Darwinism என்ற ஒன்றாக அமைந்து வருடங்கள் பல ஆகிவிட்டன! அதைப்பற்றி நீங்கள் எழுதினால்தான் நீங்கள் சொல்லு வந்ததற்கு ஒரு முழுமையான வடிவம் கிடைக்கும்!
உங்களுக்கு இந்த விடயத்தில் தேர்ச்சி இல்லை என்பதை சொன்னதையும் படித்தேன்! அப்படியானால், நீங்கள் பரிணாம் பற்றி எழுதுவது பல அரைகுறைகளை
உர்ச்சாகப்படுத்தும்! ஏனென்றால் Darwinian Natural Selection ஐ misrepresent செய்வது மிக சுலபம்! அரைகுறையாக புரிந்து கொண்டு கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க
முடியாமல் திணறுவதும் மிக சுலபம்! So, சொல்லவதற்கு மன்னிக்கவும், விபரமாக படித்து வந்து எழுதவும்!
பரிணாம வளர்ச்சி என்ன என்பதை சற்றும் புரியாமல் மறு மொழிகள் இட்ட சிலருக்கு Stephen J Gould என்ற அமெரிக்க naturalist எழுதிய ஒரு சில பத்திகளை கீழே இடுகிறேன்!
In the American vernacular, "theory" often means "imperfect fact"—part of a hierarchy of confidence running downhill from fact to theory to hypothesis to guess. Thus creationists can (and do) argue: evolution is "only" a theory, and intense debate now rages about many aspects of the theory. If evolution is less than a fact, and scientists can't even make up their minds about the theory, then what confidence can we have in it? Indeed, President Reagan echoed this argument before an evangelical group in Dallas when he said (in what I devoutly hope was campaign rhetoric): "Well, it is a theory. It is a scientific theory only, and it has in recent years been challenged in the world of science—that is, not believed in the scientific community to be as infallible as it once was."
Well, evolution is a theory. It is also a fact. And facts and theories are different things, not rungs in a hierarchy of increasing certainty. Facts are the world's data. Theories are structures of ideas that explain and interpret facts. Facts do not go away when scientists debate rival theories to explain them. Einstein's theory of gravitation replaced Newton's, but apples did not suspend themselves in mid-air, pending the outcome. And humans evolved from apelike ancestors whether they did so by Darwin's proposed mechanism or by some other, yet to be discovered.
Moreover, "fact" does not mean "absolute certainty." The final proofs of logic and mathematics flow deductively from stated premises and achieve certainty only because they are not about the empirical world. Evolutionists make no claim for perpetual truth, though creationists often do (and then attack us for a style of argument that they themselves favor). In science, "fact" can only mean "confirmed to such a degree that it would be perverse to withhold provisional assent." I suppose that apples might start to rise tomorrow, but the possibility does not merit equal time in physics classrooms.
Evolutionists have been clear about this distinction between fact and theory from the very beginning, if only because we have always acknowledged how far we are from completely understanding the mechanisms (theory) by which evolution (fact) occurred. Darwin continually emphasized the difference between his two great and separate accomplishments: establishing the fact of evolution, and proposing a theory—natural selection—to explain the mechanism of evolution. He wrote in The Descent of Man: "I had two distinct objects in view; firstly, to show that species had not been separately created, and secondly, that natural selection had been the chief agent of change. . . . Hence if I have erred in . . . having exaggerated its [natural selection's] power . . . I have at least, as I hope, done good service in aiding to overthrow the dogma of separate creations."
இதை மொழி பெயர்க்க எனக்கு இப்பொழுது நேரமில்லை, முடிந்தால் செய்கிறேன்!
But the point is that, Darwinian Natural selection and evolution ஒரு மிக சக்தி வாய்ந்த விளக்கம்! இதை விட ஒரு நல்ல mechaniam ஐ யாரும் இதுவரை இட்டதில்லை! இட்டால், ஆராய்ந்து, அறிந்து சொல்லலாம், டார்வினின் விளக்கம் சரி இல்லை என்று! ஆனால் பாருங்கள் சுமார் நூற்றி முப்பது வருடங்களுக்கு மேல ஆகிவிட்டது Origin of Species வெளிவந்து! ஒன்றும் மாறவில்லை! அன்றிலிருந்து Biology இல்வந்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும் டார்வினின் கொட்ட்பாடிர்க்கு வலு சேர்த்ததே ஒழிய அதை கரைக்க முடியவில்லை!!!
Professor Daniel Dennet மிக அழகாக சொன்னார், The theory of Natural selection is like an universal acid which can really cut through all known philosophies and explanation concerning life!
அதை விட அழகாக சொன்னவர் Theodossis Dobzhansky என்ற ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி - " Nothing in Biology makes sense if not seen in the light of evolution"
மனிதனும் biologyக்கு உள்ளே இருப்பதால் மனிதனைப்பற்றி எல்லாமே அதன் மூலமாக தெளிவடையலாம்!
மேலும் எழுதுகிறேன், நேரம் கிடைக்கும் பொழுது!
நன்றி
@ Mr.No
நீங்கள் எவ்வளவு விஞ்ஞானிகள் பேரை சொன்னாலும்...அவர்கள் ஆராய்ச்சியை சொன்னாலும் ...இந்த பதிவின் முக்கியமான ஒரு நோக்கம், அது உண்மையா பொய்யா ..அதன் சாத்திய கூறுகளை ஒரு தனி மனிதனா எப்படி ஆராய்வது என்பதாக தான் நினைக்கிறேன் .... என்னுடைய புரிதல்.
பகுத்தறிவாளிகள்...வேதத்தை மட்டும் அல்ல...விஞ்ஞானத்தையும் கண்ண மூடிட்டு நம்ப மாட்டார்கள்.....அப்படின்னு இந்த பதிவு சொல்ல முயற்சிகிறது .....
@வால் ...முயற்சிக்கு பாராட்டுகள்...
அன்பான நண்பர் திரு சாமுவேல்,
உங்கள் சம்மந்தம் இல்லாத, உளறலான பின்னூடத்தை பற்றி சொல்வதற்கு முன், ஒன்றை மட்டும் முதலில் சொல்ல விரும்புகிறேன்!
நீங்கள் எழுதியது //பகுத்தறிவாளிகள்...வேதத்தை மட்டும் அல்ல...விஞ்ஞானத்தையும் கண்ண மூடிட்டு நம்ப மாட்டார்கள்.....அப்படின்னு இந்த பதிவு சொல்ல முயற்சிகிறது .....//
முதலில், அது என்ன சார் "பகுத்தறிவாதிகள்"??? அது போதாதென்று இந்த ஞானி கூறுகிறார், விஞ்ஞானத்தை கண் மூடி நம்ப மாட்டார்கள் என்று??
இதிலிருந்து உங்களுக்கும் விஞ்ஞானம் என்றால் என்ன என்ற புரிதலுக்கும் உள்ள சில ஆயிரம் மைல் இடைவெளிகள் நன்றாக தெரிகிறது!!! You neither seem to know what Science is nor how it works!!!
பகுத்தறிவுவாதி என்றா ஒரு இடைச்சொருகல் வேறு!! இந்த தமிழ் பதிவர்களுக்கு இந்த கப்சாவை ஒரு தடவையாவது சொல்ல முடியவில்லை என்றால் என்னமோ தவறோ செய்து விட்டதாக ஒரு உணர்வு!! அதான் கொஞ்சம் ஏமாந்தால் இந்த பகுத்தறிவுவாதி சொல்! நல்ல வேளை, இந்த முற்போக்கு, பிற்போக்கு என்று ஆரம்பிக்காமல் விட்டீர்களே!
இந்த அபத்தமான அலங்கோல சொல்லாடலில் ஆராய்ச்சி உண்மையா பொய்யா என்று கண்டுபிடக்கதான் இந்த விவாதம் என்பது அண்ணனின் கூற்று! என்ன சார், Boyle's law வை நீங்கள் விவாதம் செய்துதான் சரியா தவறா என்று முடிவுகட்ட போகிறீர்களா?? அல்லது Gay Lussacs law வை நம்பாமல், பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உண்மை என்று சொல்ல போகிறீர்களா???
நீங்கள் இப்படி கொட்டுவதை பார்த்தால் எனக்கு அன்பான அண்ணன் திரு கோவி கண்ணன் என்பவறின் நினைவுதான் வருகிறது ! கொஞ்சம் நாளாகவே அவரின் பக்கம் போகாமல் இருக்கிறேன், நீங்கள் வந்து ஞாபகப்படுத்திவிட்டீர்கள்!!
நன்றி
//பகுத்தறிவாளிகள்...வேதத்தை மட்டும் அல்ல...விஞ்ஞானத்தையும் கண்ண மூடிட்டு நம்ப மாட்டார்கள்.....அப்படின்னு இந்த பதிவு சொல்ல முயற்சிகிறது .....
//
விஞானம் இல்லீங்க எந்த ஒரு விசயத்தையும் கண்மூடித்தனமா நம்பக் கூடாது...வாழ்த்துக்கள் வால்....தொடருங்கள்..
Mr.NO
எனக்கு விஞ்ஞானத்துக்கும்...எனக்கும் நாத்திகத்துக்கும் / பகுத்தறிவாளர் கும் ரொம்ப தூரம்.....
நான் அப்படி என்ன எழுதினேன்னு நீங்க இவ்வளவு கோபம் படரீங்கனு புரியலை....இந்த பதிவின் சாரம்சத்தை தான் சொன்னேன்...அவர் என்ன சொல்ல வராரானு அப்படின்ற என்னுடைய புரிதலை சொன்னேன்....
அவர் எழுதியது சரியா, தப்பா ..? அது முற்றிலும் வேற விஷயம், அதை என்னுடைய பின்னூட்டத்தில் சொல்ல வரலை.
கோவியர் பதிவிலும், வால் பதிவுலும் ...நிறைய நாட்களாவே எதிர் கருத்துக்கள் சொல்லிட்டு வருபவன்....நான் எதுக்குங்க 'பகுத்தறிவாளர்' பற்றி பெருமையா பேசணும்.....
மீண்டும் படித்து பாருங்க // விஞ்ஞானத்தையும் கண்ண மூடிட்டு நம்ப மாட்டார்கள்.....அப்படின்னு இந்த பதிவு சொல்ல முயற்சிகிறது ... ////
நான் இப்படி எழுதிருந்தால் உங்கள் கோபத்திற்கு ஒரு நியாயம் இருந்திருக்கும் // .....அப்படின்னு இந்த பதிவு தெளிவாக சொல்கிறது... ////
Mr.NO
//இந்த அபத்தமான அலங்கோல சொல்லாடலில் ஆராய்ச்சி உண்மையா பொய்யா என்று கண்டுபிடக்கதான் இந்த விவாதம் என்பது அண்ணனின் கூற்று! என்ன சார், Boyle's law வை நீங்கள் விவாதம் செய்துதான் சரியா தவறா என்று முடிவுகட்ட போகிறீர்களா?? அல்லது Gay Lussacs law வை நம்பாமல், பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உண்மை என்று சொல்ல போகிறீர்களா???///
இந்த கேள்விய இப்ப கேட்கறீங்க ? அதான் பதிவில் தெளிவா //......உள்ள உண்மையின் சாத்தியகூறுகளை அலசுவோம்// தெளிவா போட்டுருகாரே
.....உங்களுடைய முதல் பின்னூட்டத்தில் இந்த கேள்வியை கேட்டுருக்க வேண்டும்....அதை விட்டுட்டு விஞ்ஞானிகள் பேரை எழுதி கொட்டி விட்டீர்கள்.
Mr.NO
//இந்த அபத்தமான அலங்கோல சொல்லாடலில் ஆராய்ச்சி உண்மையா பொய்யா என்று கண்டுபிடக்கதான் இந்த விவாதம் என்பது அண்ணனின் கூற்று! என்ன சார், Boyle's law வை நீங்கள் விவாதம் செய்துதான் சரியா தவறா என்று முடிவுகட்ட போகிறீர்களா?? அல்லது Gay Lussacs law வை நம்பாமல், பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உண்மை என்று சொல்ல போகிறீர்களா???///
இந்த கேள்விய இப்ப கேட்கறீங்க ? அதான் பதிவில் தெளிவா //......உள்ள உண்மையின் சாத்தியகூறுகளை அலசுவோம்// தெளிவா போட்டுருகாரே .....உங்களுடைய முதல் பின்னூட்டத்தில் இந்த கேள்வியை கேட்டுருக்க வேண்டும்....அதை விட்டுட்டு விஞ்ஞானிகள் பேரை எழுதி கொட்டி விட்டீர்கள்...
//என்ன சார், Boyle's law வை நீங்கள் விவாதம் செய்துதான் சரியா தவறா என்று முடிவுகட்ட போகிறீர்களா?? //
y not ?? and y not samuel/vaal??
பரிணாம பற்றிய நல்ல தொடக்கம்...
நண்பர் வால் பையன்,
அருமையான தொடக்கம். யதார்த்தமாகவும் எளிமையாகவும் இருக்கிறது.
நானும் பரிணாமம் குறித்து சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் உங்கள் அளவுக்கு எளிமையாக இருக்குமா? என்பது ஐயமே.
செங்கொடி
http://senkodi.wordpress.com/2008/12/11/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/
http://senkodi.wordpress.com/2009/01/02/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/
http://senkodi.wordpress.com/2009/01/09/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/
Post a Comment