படிக்கும் காலத்திலேயே ஆங்கில புத்தகம் தவிர மற்ற புத்தகங்கள் அனைத்தின் மீதும் எனக்கு பற்று அதிகம், புத்தகம் வாங்கியவுடம் முதலில் தமிழ் உரைநடையில் இருக்கும் உரையாடல் வடிவ பாடம், அறிவியலில் இயற்பியல் தவிர்த்து இரண்டு பாடங்களும் படித்து விடுவேன். வரலாறு, புவியியல் சொல்லவே வேண்டியதில்லை அப்படியே முன்னாடியே கொஞ்சம் படிப்பதனால் என்னால் நல்ல மதிப்பெண்கள் படிக்கும் வரை எடுக்க முடிந்தது, ஆங்கிலம் மட்டுமே கொஞ்சம் கசப்பான பாடம், அதையும் தமிழில் எழுதி வைத்து படித்தாவது தேர்ச்சி அடைந்து விடுவேன்!
இதுவல்லாது புத்தகத்தின் மீது மேலும் ஆசையை தூண்ட வைத்ததது அம்புலிமாமா, பூந்தளிர், சிறுவர்மலர்!. ஒன்பதாவதுடன் படிப்பை நிறுத்திய பிறகு வேலைக்கு போனேன், அங்கே வந்த வருமானம் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என அடுத்த கட்ட வாசகத்துக்கு மாற்றியது, ஆனந்தவிகடன், குமுதத்தில் இருந்த ஒரு பக்க கதைகள், சிறுகதைகள் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது, கிரைம்நாவலில் ஆரம்பித்து ராஜேஸ்குமார், பி.கே.பி, சுபா என பயணித்து பாலகுமாரன், சுஜாதா என நிறுத்தியது! சுஜாதா பாதித்த அளவு பாலகுமாரன் பாதிக்கவில்லை, சிறுவயதில் இருந்தே நாத்திகன் என்பது காரணமாக இருக்கலாம்!
புத்தக வடிவில் இல்லாவிட்டாலும், என்னை follow செய்யும் நண்பர்களின் ப்லாக்கை நான் follow செய்து படித்து வருகிறேன்!, வீட்டில் கிடைக்கும் நேரங்களில் பத்து பத்து பக்கமாக எதாவது ஒரு புத்தகம் வாசிக்கபட்டு தான் வருகிறது, ஆனாலும் நண்பர்களின் வாசிப்பனுபவம் முன்னால் நானெல்லாம் தூசிக்கு தான் சமம்! சக வலைப்பதிவர் லேகா, புத்த்கத்திலேயே விழித்து, புத்தகத்திலேயே உண்டு, புத்தகத்திலேயே உறங்கி புத்தகத்திலேயே வாழ்பவர். ஜ்வோய்ராம் சுந்தர், செல்வேந்திரன், வெயிலான், வடகரைவேலன், பரிசல், கும்க்கி என நான் பார்த்து ஆச்சர்யபடும் புத்தகப்புழுக்கள் நிறைய! என்னை முதன் முறை பார்க்க வந்தது போது கும்க்கி ஒரு மூட்டை நிறைய புத்தகம் கொண்டு வந்தார்! என் மூஞ்சை பார்த்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஒரு புத்தகம் கூட தரவில்லை!
சுயசொறிதல் போதும்!, ஆனாலும் எதுக்கு இதுன்னு சொல்லனும்ல, எனக்கு கொஞ்சமேனும் அறிவு இருக்குன்னு யாராவது நம்பக்கூடும் எனில் அது அனைத்தும் புத்தகத்தின் ஆரம்பக்கட்ட உந்துதல் தான்!(நான் புத்தகத்தை மட்டுமே நம்புவதில்லை)
எங்கள் ஊரில் இந்த வருட புத்தகதிருவிழா ஆரம்பிக்க இருக்கிறது! வழக்கம் போலவே ஆர்வமுள்ள மற்றும் இனிமேல் ஆர்வம் பொங்க போகிற நண்பர்கள் மறக்காமல் வந்து பயனடைய வேண்டும் என்பது எங்கள் ஆசை!, உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் சேர்த்து வைக்கும் பொருளாதார செல்வங்கள் மதிப்பிழந்து போய்விடலாம், அறிவு செல்வம் என்றும் அழியாதது!, உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து ஈரோடு வலைப்பதிவர் நண்பர்கள்!
சிறப்பு அழைப்பாளர்கள்(பேச்சாளர்கள்) பற்றி அறிய!
கடைகள் இருக்கும் இடம் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றி அறிய
(கடை எண்ணில் மவுஸை வைத்தால் உரிமையாளர் பெயர் தெரியும்)
குழுமமாக வர இருக்கும் நண்பர்கள் முன்கூட்டியே தகவல் கொடுத்தால் ”தங்க” அறை வசதி ஏற்பாடு செய்து வைக்க ஏதுவாக இருக்கும்!
68 வாங்கிகட்டி கொண்டது:
ஈரோடு பதிவர்கள் சார்பாக நானும் அனைவரையும் வரவேற்கிறேன்.
நம்ம ஊரு திருவிழா...தங்க என்ற வரிகள் அண்டர் லைன் பன்ணி இருக்காங்கப்பா.சோடாப்புட்டி கண்ணாடி,தயிர் சாதம்,எல்லாம் எஸ்கேப் ஆயிடுங்க..மாட்டிகிட்டா ஊறுகாய் ஆயிடுவிங்கப்பு
///சுயசொறிதல் போதும்!, ஆனாலும் எதுக்கு இதுன்னு சொல்லனும்ல, எனக்கு கொஞ்சமேனும் அறிவு இருக்குன்னு யாராவது நம்பக்கூடும் எனில் அது அனைத்தும் புத்தகத்தின் ஆரம்பக்கட்ட உந்துதல் தான்!(நான் புத்தகத்தை மட்டுமே நம்புவதில்லை)///
நிச்சயம் எனக்கு உங்கள் தன்னடக்கம் பிடித்திருக்கிறது ..
அதைவிட உங்கள் அளவுக்கு தெரிந்து கொள்ளவே எனக்கு இன்னும் 2 அல்லது 3
வருடங்கள் வரை ஆகும் .. இவை அனைத்தும் உங்களது ப்ளாக்ல் நீங்கள் எழுதும் பரிணாமம் போன்ற தொடர்களிலேயே தெரிகிறது .. மேலும் மதம் பற்றிய உங்களின் வாசிப்புத் திறனும் பிரமிக்க வைக்கிறது ..!!
வந்திட்டா போச்சு...
நம்ம ஊர்ல நடக்குது ....!!
மொத்த ஸ்டால்களின் விபரம் மற்றும் பங்கேற்கும் பதிப்பகங்களின் விபரங்கள் அடங்கிய எக்ஸல் ஃபைலை டவுண்லோடு செய்ய
http://erodebookfestival.com/bool_stall_detail.html
///அறிவியலில் இயற்பியல் தவிர்த்து இரண்டு பாடங்களும் படித்து விடுவேன்.//
எனக்கு பிடிச்ச சப்ஜெக்ட ஒதுக்கிடீகளே தல, இதுக்கு என் கண்டனங்கள்.
தல... அழைப்புக்கு நன்றி ...
வர்ற சண்டே முடிஞ்சா வர்றேன் ...
நிச்சயம் ஒண்ணும் இல்ல ...
நாமெல்லாம் மனம் போல் வாழ்வு ...
அப்புறம் ...
இன்ஷா அல்லாஹ் ன்னு ஒரு கவித கிறுக்கியிருக்கேன்..
ஒரு எட்டு வந்துட்டு போங்களேன் தல ...
http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.html
நல்ல செய்தி.
//ஆங்கிலம் மட்டுமே கொஞ்சம் கசப்பான பாடம்///
கொஞ்ச முயற்சி எடுத்தா , அத நம்ம பின்னாடி வாலாட்டிகிட்டு வருது தல...
//காமிக்ஸ் என அடுத்த கட்ட வாசகத்துக்கு மாற்றியது, ஆனந்தவிகடன், குமுதத்தில் இருந்த ஒரு பக்க கதைகள், சிறுகதைகள் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது, கிரைம்நாவலில் ஆரம்பித்து ராஜேஸ்குமார், பி.கே.பி, சுபா என பயணித்து பாலகுமாரன், சுஜாதா என நிறுத்தியது! சுஜாதா பாதித்த அளவு பாலகுமாரன் பாதிக்கவில்லை, ///
சேம் பிளட்... என்ன, அதுகப்புறன் ஒருசில ஆங்கில எழுத்துக்கலும் அறிமுகமாயிருச்சி..
/// உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் சேர்த்து வைக்கும் பொருளாதார செல்வங்கள் மதிப்பிழந்து போய்விடலாம், அறிவு செல்வம் என்றும் அழியாதது!///
ஆமா வால்ஸ், சூப்பரா சொல்லிருக்கீங்க...
ஃபிரீயா கமெண்ச் போடுரமாதிரியான பதிவுக்கு நன்றி.:)
உங்க மத்த பதிவுகளும் ரொம்ப பிடிக்கும். ஒதிங்கி நின்னு, கருத்து மோதல்களை வேடிக்கை பாத்துட்டு போயிருவேன். அதனால தெரிஞ்சிகிட்ட தகவல்கள் ஜாஸ்தி தல. அதுக்கும் நன்றி.
//இதுவல்லாது புத்தகத்தின் மீது மேலும் ஆசையை தூண்ட வைத்ததது அம்புலிமாமா, பூந்தளிர், சிறுவர்மலர்!//
சிறு வயது ஞாபகங்களை தூண்டும் பதிவு!
பகிர்விற்கு நன்றிங்க...
அறிவுத்திருவிழா.. அழைப்பு அருமை....!
வாசிப்போர் அனைவருமே யோசிப்போர்.....!
அறிவுத்திருவிழா.. அழைப்பு அருமை....!
வாசிப்போர் அனைவருமே யோசிப்போர்.....!
என் வாழ்க்கையில் நான் மிஸ் பண்ணுவதாக ஏங்கும் நிகழ்வுகளில், நம்ம ஊர்களில் நடக்கும் புத்தகத் திருழாக்கள் முக்கியமானவைகள். ஹும்ம்ம்.....நல்லா .... இருங்கோ! என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா!
//ஜ்வோய்ராம் சுந்தர், செல்வேந்திரன், வெயிலான், வடகரைவேலன், பரிசல், கும்க்கி என நான் பார்த்து ஆச்சர்யபடும் புத்தகப்புழுக்கள் நிறைய! //
யோவ்! அவுங்கள்ளாம் என்னய்யா பெருசா புத்தகம் படிச்சு கிழிச்சுட்டாங்க!
நான்லாம் படிச்ச புத்தகம் சேத்து வெச்சிருந்தா பழய தலமை செயலகம் ரொம்பிருக்கும்!
யோவ் ஆறேழு வருசமா சீடி வந்துருச்சு இல்லாங்காட்டி இப்ப கூட தெனம் ரெண்டு புக்கு படிக்காம தூங்க மாட்டேன் தெரியுமா!
புத்தகம் வங்க விரும்புபவர்களுக்கு, பயனுள்ள நல்ல தகவல்.
//சுஜாதா பாதித்த அளவு பாலகுமாரன் பாதிக்கவில்லை,//
ஆமா பொம்பள பெரு வெச்சாதான உமக்கு பாதிக்கும்!
//உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் சேர்த்து வைக்கும் பொருளாதார செல்வங்கள் மதிப்பிழந்து போய்விடலாம்,//
நம்ம வாரிசு களுக்கு காலி பாட்டில் தான் சொத்து!
//"அறிவை வளர்க்க ஒரு திருவிழா!"//
வாரா வாரம் ஆராவாரம்! அடுத்த வாரம் எத வளர்க்க தல விழா எடுக்கறது!
//ஆங்கிலம் மட்டுமே கொஞ்சம் கசப்பான பாடம், அதையும் தமிழில் எழுதி வைத்து படித்தாவது தேர்ச்சி அடைந்து விடுவேன்!///
அதுவுமில்லைனா படத்துக்கு போயாவது தெரிஞ்சிக்க மாட்டோம்!
//லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என அடுத்த கட்ட வாசகத்துக்கு மாற்றியது, //
முல்லை, பருவகாலம்லாம் எங்க காணோம்!
//புத்தக வடிவில் இல்லாவிட்டாலும், என்னை follow செய்யும் நண்பர்களின் ப்லாக்கை நான் follow செய்து படித்து வருகிறேன்!,//
ஒவ்வொண்ணும் தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்க வேண்டியவை!
// வலைப்பதிவர் லேகா, புத்த்கத்திலேயே விழித்து, புத்தகத்திலேயே உண்டு, புத்தகத்திலேயே உறங்கி புத்தகத்திலேயே வாழ்பவர்.//
அவ்வளொ பெரிய புக்கா! குரான் ஒரிஜினல் வெர்சனா இருக்குமோ!
//(நான் புத்தகத்தை மட்டுமே நம்புவதில்லை)//
அப்பறம்?
அருமைங்க தல....
/// ராஜன் said...
யோவ் ஆறேழு வருசமா சீடி வந்துருச்சு இல்லாங்காட்டி இப்ப கூட தெனம் ரெண்டு புக்கு படிக்காம தூங்க மாட்டேன் தெரியுமா!///
தலைப்பு மட்டுமா அண்ணா ...!!
//தலைப்பு மட்டுமா அண்ணா ...!!
//
படம் மட்டுமான்னு கேட்டாலும் அர்த்தமிருக்கு!
பய புள்லைக்கி மேட்டரே வெளங்கல போல!
//”தங்க” அறை//
அப்படின்னா என்னாங்க?
அனைவரையும் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக வரவேற்கிறேன்
தொடக்க வரிகளை பார்த்தவுடன் சற்று கிலியடித்தது. இரண்டு நாளாக மனதிற்குள் இந்த வாசிப்பு எங்கிருந்து உருவானது என்று ஓடிக் கொண்டுருக்கும் வரிகள்.
சேம் சேம்.
இன்றைக்கு மட்டும் சைவ சாப்பாடா?
ராஜன் கூட கூட்டு கறிகளை விளாசிகட்டுவது இங்கிருந்தே தெரியுது?
//சுஜாதா பாதித்த அளவு பாலகுமாரன் பாதிக்கவில்லை, சிறுவயதில் இருந்தே நாத்திகன் என்பது காரணமாக இருக்கலாம்!//
சுஜாதா நாத்திகரா?
நல்ல பதிவு.
//பய புள்லைக்கி மேட்டரே வெளங்கல போல!//
ஹய்யோ ஹய்யோ ... நான் புத்தகத்தோட தலைப்ப மட்டுமா படிபீங்கன்னு கேட்டேன் ..!!
//சுஜாதா நாத்திகரா?
//
அவரும் மகர நெடுங்குழை காதன ஓதற கேங்குதான்!
//ராஜன் கூட கூட்டு கறிகளை விளாசிகட்டுவது இங்கிருந்தே தெரியுது? //
தெரிஞ்சிருச்சா! அத்தனயும் தெரிஞ்சிருச்சா ... இச்சா இச்சா
//ஹய்யோ ஹய்யோ ... நான் புத்தகத்தோட தலைப்ப மட்டுமா படிபீங்கன்னு கேட்டேன் ..!! //
அய்யோ அய்யோ! நாம்படிக்கற புத்தகத்துக்கு அட்டைய மொதல்ல கிழிக்கணுமப்பா! இல்லாட்டி இஸ்கூல்ல மாட்டிக்கணும்! யாராச்சும் இந்த கொழந்தைக்கி ஃபர்ஸ்ட்ல இருது சொல்லிக்குடுங்கப்பா
நல்ல பகிர்வு.
//ஈரோடு பதிவர்கள் சார்பாக நானும் அனைவரையும் வரவேற்கிறேன்.//
வழிமொழிகிறேன்
ஹையா, சூப்பர் சூப்பர் ... சென்னை புத்தகத் திருவிழாவுக்கு போக முடியலையேன்னு வருத்தப்பட்டேன்.. நம்மூருல நடக்கற நேரத்துல ஊருக்கு வர்றேன், கண்டிப்பா அங்க போவேன்.. பதிவர்கள் யாரையாச்சும் பார்க்க முடிஞ்சா ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன்..
அருமை....!
வாழ்த்துகள் அருண். அறிவை வளர்ப்போம், அறிவை பரப்புவோம்.
ராஜன் said...
யோவ்! அவுங்கள்ளாம் என்னய்யா பெருசா புத்தகம் படிச்சு கிழிச்சுட்டாங்க!
நான்லாம் படிச்ச புத்தகம் சேத்து வெச்சிருந்தா பழய தலமை செயலகம் ரொம்பிருக்கும்!
யோவ் ஆறேழு வருசமா சீடி வந்துருச்சு இல்லாங்காட்டி இப்ப கூட தெனம் ரெண்டு புக்கு படிக்காம தூங்க மாட்டேன் தெரியுமா! |||||
தும் ததா....( எப்பூடி நாங்களும் சொல்வோம்ல)
பொஸ்தவ மூட்டைக்குள்ற ஒளிச்சு வச்ச திராவக பாட்டிலை மட்டும் கண்டுபிடிச்சு எடுத்தத விட்டுட்டீங்க...
:))
ரூம் போட்டுற வேண்டீதுதான்.
சொந்த பந்தத்துக்கெல்லாம் சொல்லிவிட்ருங்க...அட...வாமுவ சொன்னேன் வாலூ.
//என்னை முதன் முறை பார்க்க வந்தது போது கும்க்கி ஒரு மூட்டை நிறைய புத்தகம் கொண்டு வந்தார்! என் மூஞ்சை பார்த்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஒரு புத்தகம் கூட தரவில்லை!
//ஹா ஹா
வாழ்த்துக்கள் வால்!!
//.. க.பாலாசி said...
ஈரோடு பதிவர்கள் சார்பாக நானும் அனைவரையும் வரவேற்கிறேன். ..//
நானும் வரவேற்பு சொல்லிக்கறேங்க..
//.. பய புள்லைக்கி மேட்டரே வெளங்கல போல! ..//
பையன் கொஞ்சம் புதுசுதான்..
நான் வேணா உங்களப்பத்தி சொல்லிடட்டுமா ராஜன்..!!
பதிவை இட்லியில் இணைக்கலியா..???!!!
//பதிவை இட்லியில் இணைக்கலியா..???!!! //
தோசைல இனச்சிடலாம் தல
//ராஜன் said...
//பதிவை இட்லியில் இணைக்கலியா..???!!! //
தோசைல இனச்சிடலாம் தல///
தல, உண்மையிலேயே, இந்த பதில் உங்க கிட்ட இருந்து வரும்னு, நினைச்சேன்.அதனாலதான் இடையில( நீங்க நினைக்கிற இடை இல்லதல!!) ”ன்” விட்டுட்டேன்:) ஹஹஹஹா
அனைவருக்கும் வாழ்த்துகள் தல
நல்ல திரு விழா... தல..
புத்தகத்திருவிழா பதிவர் கூடுமிடமாகவும் அமையும்!!வாழ்த்துக்கள் அருண்!!
திருவிழா கலைகட்ட வாழ்த்துக்கள்.
//இதுவல்லாது புத்தகத்தின் மீது மேலும் ஆசையை தூண்ட வைத்ததது அம்புலிமாமா, பூந்தளிர், சிறுவர்மலர்!//
..... :-)
// ராஜன் //
நீங்க படிக்கிற அந்த "....." புஸ்தகத்துக்கு ஸ்டால் போட்டுருக்காங்களா தல ???
நாங்களும் ஒரு அறிவாலயம் -அளவுக்கு படிக்கணும். அப்புறம் செல்வகுமார் க்கு சொல்லித் தரனும் !!
ஹூம் ......ஓரு நல்ல புஸ்தக பதிவிலயும் அசைவம் போட்டு சாப்பிட ராஜனை விட்டா ஆளில்ல :)
மிக்க நன்றி நண்பரே அழைப்பிற்கு . சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்
நல்ல செய்தி...
பகிர்விற்கு நன்றி..
innum ethanai natkal onbathavadhu endru solli unga thannadakathai katta porenga arun...haiya nanum varava thiruvizhavukku....
பூந்தளிர் , அம்புலிமாமா , லயன் காமிக்ஸ் , ராணி காமிக்ஸ் , ராஜேஸ்குமார் , பட்டுக்கோட்டை பிரபாகர் , சுஜாதா, பாலகுமாரன் , கல்கி , சாண்டில்யன் ....... உங்களது வரிசை அருமை , நானும் அப்படியே , வயதிக்கு ஏத்த சுவாரசியத்தை கொடுத்து படிக்க தூண்டுபவர்கள்
ராஜன் said...
//பதிவை இட்லியில் இணைக்கலியா..???!!! //
தோசைல இனச்சிடலாம் தல///
அப்ப சட்னி , சாம்பார் ????
அம்மா தல அது என்னா பேரு இன்டலி
// நண்பர்கள் முன்கூட்டியே தகவல் கொடுத்தால் ”தங்க” அறை வசதி ஏற்பாடு செய்து வைக்க ஏதுவாக இருக்கும்!//
தல தங்குறது யாரு காசுல.அத சொல்லவே இல்ல.அப்பறம் பஸ்க்கு கூட காசு இல்லனே..
நல்ல செய்தி தோழர்.
(இருந்தாலும் எங்க ஊர் ஜனவரித் திருவிழா மாதிரி வருமா? ரொம்பப் பெரிசாக்கும்)
madurai ponnu said...
// நண்பர்கள் முன்கூட்டியே தகவல் கொடுத்தால் ”தங்க” அறை வசதி ஏற்பாடு செய்து வைக்க ஏதுவாக இருக்கும்!//
தல தங்குறது யாரு காசுல.அத சொல்லவே இல்ல.அப்பறம் பஸ்க்கு கூட காசு இல்லனே..///
காசு இல்லையென்றால் விமானத்தில் விதவுட்டில் வரவும்
நீங்க நெஜமாவே ஒன்பது வரை தான் படிசீங்களா? சும்மா சொல்லறீங்கன்னு நினைசுகிட்டு இருந்தேன்.
வாழ்க்கையை விட சிறந்த பாடம் இருக்க முடியுமா என்ன?
வாழ்த்துக்கள்.
வணக்கம் வால்,
அப்ப அருட்பெரும் ஜோதி லாட்ஞ் அவ்வள்வு தானா!!எங்களுக்கு எல்லாம் அழைப்பு இல்லையா?இது மண்னின் மனிதர்களுக்கு செய்யும் துரோகம்!!!
வாழ்த்துகள் அருண், தங்களின் இந்தப் பதிவு யூத்புல் விகடனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, தொடருங்கள் உங்கள் பயணத்தை
தொடர்பிற்கு
http://youthful.vikatan.com/youth/NYouth/Blogs.asp
உண்டியலும், ஈரோடு புத்தகத் திருவிழாவும், தொடர்பிற்கு:
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10196:2010-08-04-02-55-16&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139
Post a Comment