அடுத்த வாரிசு!

தருமி அய்யா, பரிசல், அப்துல்லா, ஜீவன் வரிசையில்(ரஜினி, கமலெல்லாம் இவர்களை விட பிரபலமா என்ன?) நானும் இரு பெண் குழந்தைக்கு தகப்பன் என்ற பெருமையை அடைந்து விட்டேன்!

டாக்டர் அளித்திருந்த தேதி ஆகஸ்ட் 19! ஆனால் ஆகஸ்ட் 20 மதியம் வரை வலி என்ற சுவடே இல்லை, மூன்று மணியளவில் ப்ளாடர் உடைந்து விட்டதாக எனக்கு போன் வந்தது, அப்பா ஆட்டோவில் கூட்டிவரச்சொல்லி நான் முன்கூட்டியே மருத்துவமனை சென்று தயார் படுத்திவிட்டேன்!, அவர்கள் வரும்பொழது அனைத்தும் தயாராக இருந்தது, ஆனால் வந்திறங்கிய என் மனைவி சிரித்து கொண்டே இறங்கினாள்! துளியும் வலியில்லை! குழந்தை பிறப்பதற்குண்டான எந்தவித அறிகுறியும் அவளுக்கு தெரியவில்லை, பின் டாக்டர் சில மருத்துகள் கொடுத்து அறையில் தங்க வைத்து விட்டார், இரவு 11 மணிக்குள் பிரசவம் ஆகாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தான் வழி என்று தகவலும் சொல்லிவிட்டார்!

செலவை பற்றிக்கூட கவலையில்லை, தாயும் சேயும் நலமாக இருந்தால் போதும் என்பது தான் என் எண்ணம், சரியாக 11 மணிக்கு தான் வலியே தொடங்கியது, விட்டு விட்டு 12.30 வரை தொடர்ச்சியான வலி, அதற்கே எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிட்டது.... ம்ம் சொல்ல மறந்துட்டேனே! வர்ஷா பிறந்தது சென்னை RSRM அரசு மருத்துவமனை, அங்கே கூட, அட்டெண்டர் இருக்க அனுமதியில்லை, அதனால் எனக்கு பிரசவவலி என்றால் இந்த அளவுக்கு கடினமாக இருக்கும் எனத் தெரியாது!, 12.30 க்கு மேல் என்ன ஆச்சோ தெரியல, மொத்த மருத்துவமனையும் இடிந்து விழுபது போல் கத்தல்! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! ஓடிப்போய் நர்ஸ்களை எழுப்பி வரச்சொன்னென், அவர்களோ வெகு அலட்சியமாக நல்லா வலிக்கட்டும் வர்றோம்னு சொன்னாங்க!செம கோவம் எனக்கு! அந்த கதறலை நேரில் பார்த்தவனுக்கு தான் தெரியும், ஒரு தாயின் பங்களிப்பு, ஆயுள் முழுவதும் உழைப்பது கூட அதற்கு சமமாக இருக்காது, அதுவும் என்னை போல் செய்யும் வேலையை கொண்டாட்டமாக செய்பவனுக்கு ஒரு ஆயுளே பத்தாது!, தொடர்ச்சியான நச்சரிப்புக்கு பின் நர்ஸ் எழுத்து வந்து, சிறிது பரிசோதனைக்கு பின் உள்ளே அழைத்து சென்று விட்டார், சிறுது நேரத்தில் டாக்டரும் வர நான் டென்ஷனில் வெளியே வந்து நின்று கொண்டேன்!, வர்ஷா பிறந்த போது இருந்ததை விட இம்முறை அடைமழை, அனுபவமிக்க தோழர் ஒருவர் எனக்க்ய் ஆறுதல் சொல்லி கொண்டிருந்தார்! 1.10 க்கு பெண் குழந்தை பிறந்தது, சுகப்பிரசவமாக! ஒரு இயற்கை விரும்பியின் மகள்களும் இயற்கை விரும்பியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!சமூகம் என்ற நாலு நாசக்கார பயல்களை உறுப்பினராக கொண்ட குப்பைதொட்டி வழக்கம் போல் தன் வேலையை ஆரம்பித்தது, திரும்பவும் பெண்குழந்தையா என்றவர்களிடம் என் விருப்பமும் அது தான் என்றேன், சிலர் அமைதியாக சென்றார்கள், சிலர் இருந்தாலும் என்று இழுத்தார்கள்!, ஆண்குழந்தையோ, பெண்குழந்தையோ படிக்கும் வரை படிக்கவைப்பது என் கடமை! வரதட்சணை கொடுத்து கல்யாணம் செய்து வைக்க நினைப்பவன் தான் வருத்தப்படனும், நான் எப்படி வரதட்சனை வாங்காமல் கல்யாணம் செய்து கொண்டேனோ அதே போல் தான் என் மகள்கள் திருமணமும் நடக்கும், மேலும் நான் அவர்களை காதல் திருமணம் செய்து கொள்ளவே ஊக்குவிப்பேன் என்றேன்! மனதுக்குள் பைத்தியகாரன் என்று திட்டி செல்வது எனக்கு கேட்டது!சேனை வைக்க வேண்டும் என ஆசைப்பட்ட எனது அம்மாவை அழுத்தமாக நிராகரித்தேன், வேறு பழுத்தபழங்கள் எதுவும் அச்சமயத்தில் அருகில் இல்லாததால் பெரிதான டென்ஷனுக்கு வேலையில்லை, ராசி, நட்சத்திரம், லக்னம், நல்ல நேரம், ராகுகாலம் எதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது உங்களுக்கு தெரியும்! க,கே,கு என்ற எழுத்தில் பெயர் வர ஒன்று சொல்லுங்களேன் என எண்கணிதத்தில் நம்பிக்கையுடய நண்பர் ஒரு கேட்டதற்க்கு ”கே”வில் ஆரம்பிக்கும் கெட்டவார்த்தை ஒன்றைச்சொல்லி அவர் இன்று வரை என்னுடம் பேசுவதில்லை!, என் மகளுக்கு பெயர் தமிழில் தான் வைப்பேன் என்றில்லை, என் விருப்பத்திற்கு வைப்பேன், நிச்சயமாக வெட்டி நம்பிக்கைகள் இல்லாமல்!.


போனிலும்,டுவிட்டரிலும், மெயிலிலும் வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி!


இந்த போட்டோவில இருக்குற யூத்தப்பார்த்தா ரெண்டு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுது!?

187 வாங்கிகட்டி கொண்டது:

madurai ponnu said...

தல குட்டிம்மா கிட்ட கேட்டதா சொல்லுங்க

கும்மி said...

//இந்த போட்டோவில இருக்குற யூத்தப்பார்த்தா ரெண்டு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுது!?//

இது எதிர் பதிவு மாதிரிதான் தெரியுது.

எறும்பு said...

பொண்ணு உங்கள மாதிரி இல்லாம அழகா இருக்கு

;))

madurai ponnu said...

செல்ல குட்டி அழகா இருக்கு .தல கடைசி போட்டோல யாரோ இருக்காங்க.

எறும்பு said...

சொல்ல மறந்துட்டேன்....

வாலின் வால்தனத்துக்கு
வா(ல்)ழ்த்துக்கள்

:)

எறும்பு said...

Expecting the same every year

:)

Anonymous said...

ஏன் தலையில் கைவச்சு உக்காந்திருக்கீங்க?

K.MURALI said...

வாழ்த்துக்கள்.

மார்கண்டேயன் said...

// இந்த போட்டோவில இருக்குற யூத்தப்பார்த்தா ரெண்டு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுது!? //

இல்ல தாத்தா, அது வந்து, இந்த வயசுல கூட உங்களுக்கு மேக்கப் ரொம்ப நல்ல ஒர்க் அவுட் ஆகுது தாத்தா, எப்பிடியோ அறுபதாம் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே கொழந்த பொறந்தது ரொம்ப சந்தோசம் தாத்தா, பாட்டிய நல்ல கவனிச்சுகோங்க தாத்தா . . .

செந்தழல் ரவி said...

குட்டி பாப்பா செம க்யூட்.

Vee said...
This comment has been removed by the author.
Vee said...

வாழ்த்துகள்.

dheva said...

Congratsssssssssssss bozzzzzzzzzzzz!

அகில் பூங்குன்றன் said...

சின்ன குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துகள்.... பொண்ணுக்கும் அப்பாவிற்கும் ஒரே மாதம் பிறந்தநாட்கள்... வாழ்த்துக்கள்.

என்ன பெயர் குழந்தைக்கு.

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துகள் வால் :)

கார்க்கி said...

வாழ்த்துகள் தல..

கீப் இட் அப்னு சொல்ல முடியல..

ரெண்டு போதுமில்ல?? :)))

பனங்காட்டு நரி said...

தல ,

பாப்பா செம அழகு ............,வாழ்த்துக்கள் ..

R Gopi said...

வாழ்த்துக்கள்!!!!

\\தருமி அய்யா, பரிசல், அப்துல்லா, லக்கி வரிசையில்(ரஜினி, கமலெல்லாம் இவர்களை விட பிரபலமா என்ன?)\\

அதானே?

\\எறும்பு said... பொண்ணு உங்கள மாதிரி இல்லாம அழகா இருக்கு\\

எனக்கும் அப்படித்தான் தோணுது:)

அஞ்சாவது போட்டோல இருக்குற அந்தக் கைப்புள்ள யாரு:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துகள்

VISA said...

வாழ்த்துக்கள் தோழரே.

அகில் பூங்குன்றன் said...

என் பெண்ணிற்கு சில பெயர்கள் தெரிவு செய்திருந்தேன். பாருங்கள் தங்களுக்கு உபயோகபடுமா என்று

கயலெழினி
கவின்முல்லை
கயலெழிலி
கயழெழில்
கவினெழில்
செந்திரு

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
virutcham said...

வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

//பொண்ணுக்கும் அப்பாவிற்கும் ஒரே மாதம் பிறந்தநாட்கள்... வாழ்த்துக்கள்.//

எனது பிறந்தநாள் ஏப்ரல் 14 தல!
வர்ஷாவுக்கு போன மாதம் 24

தாரணி பிரியா said...

வாழ்த்துகள் வால் :)

கும்க்கி said...

வால்ஸ்..

ம்..ம்.. இன்னும் ஏழெட்டு பெத்துக்க வாழ்த்துக்கள்.

ஜெட்லி... said...

சந்தோசம் அண்ணே...

சௌந்தர் said...

வாங்க குட்டி ராணி வாழ்த்துக்கள் தல

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..

ஆ.ஞானசேகரன் said...

நண்பா. வாழ்த்துகள்....

குட்டீஸ்க்கு என் முத்தங்கள்

வழிப்போக்கன் - யோகேஷ் said...

Congrats..........

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் தல..... :)

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் தல..:-)))

முகிலன் said...

வாழ்த்துகள் வால்.

நானும் பிரசவத்தின் போது என் மனைவியுடன் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன்.. பெண்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்.

இன்னுமொரு பெண் பிறந்ததற்கு மீண்டும் ஒரு வாழ்த்து - (பெண் குழந்தையில்லாத வயிறெரியும் ஒரு தகப்பன்).

Mahilan said...

There is a very good name from thirukkural. Its called 'Anichcham".
Its the sensitive flower.

அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள்.குழந்தை அழகா இருக்கா. என்ன பேர் வச்சாலும் சரி ஆனா கூப்பிட ஈசியா இருப்பது போல இருக்கட்டும்!

ஆமா விஜி சொன்ன மாதிரி ஏன் தலையில கைய வச்சுட்டீங்க?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

வாழ்த்துக்கள் தல..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாலு.. சூப்பரா இருக்கா குட்டிப் பாப்பா..!

அமைதிச்சாரல் said...

வாழ்த்துக்கள் சகோ.

Kishore said...

வாழ்த்துகள் வால் :)

ஜாக்கி சேகர் said...

வாழ்த்துக்கள் வால்..குட்டிப்பாப்பாவுக்கு என் நெஞ்சார்ந்த ஆசிகள்...

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் வால்!!! குட்டீம்மா ஃபோட்டோ அருமை! முக்கியமா அந்த முதல் ஃபோட்டோ.

(அதுசரி.. லக்கிக்கு ஒரு பொண்ணுதானே பாஸ்? அவரு இன்னும் நம்ம லிஸ்ட்ல வரலியே...)

வால்பையன் said...

//லக்கிக்கு ஒரு பொண்ணுதானே பாஸ்? அவரு இன்னும் நம்ம லிஸ்ட்ல வரலியே//


அப்படியா, நான் ரெண்டு பொண்ணுன்ல நினைச்சேன்! சரி அதை மாத்தி ஜீவன் பெயரை சேர்த்துடலாம் தல!

புருனோ Bruno said...

வாழ்த்துக்கள் தல

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தாயாருக்கும்

மகள்களார்களுக்கும்

தங்களுக்கும்

கல்வெட்டு said...

.

புதிய உயிரை வரவேற்போம்.

வாழ்த்துகள் சின்ன பாப்பா. உலக அட்டூழியங்கள் யாவையும் ஏறி மிதித்துவிடடி சின்னப்பாப்பா.

தாய் , தந்தை அப்புறம் அக்காவாக பிரமோசன் ஆன மூத்த பெண் அனைவருக்கும் வாழ்த்துகள்.
..
(வால், உங்களின் தாயை சேனை வைக்கவிடாமல் விட்டது தவறு. அதற்கான ஆப்பு தனிப்பதிவாக )

Jey said...

வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ said...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

வி.பாலகுமார் said...

வாழ்த்துகள் :)

Mrs.Menagasathia said...

வாழ்த்துகள் வால்!!

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே...

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள் அருண்..!

போட்டோ அருமை...!

நியோ said...

தல ... வாழ்த்துக்கள் ... ரொம்ப சந்தோசம் ... பாப்பா கொள்ளையழகு ... பாப்பாவோட பிஞ்சு விரலை தொட எனக்கும் ஆசை ...

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் வால்:)

தோழர் மோகன் said...

வாழ்த்துக்கள் தோழர்...
குழந்தை மிகவும் அழகாக உள்ளது!!!!
// ஒரு இயற்கை விரும்பியின் மகள்களும் இயற்கை விரும்பியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!//
அருமை:)
// க,கே,கு என்ற எழுத்தில் பெயர் வர ஒன்று சொல்லுங்களேன் என எண்கணிதத்தில் நம்பிக்கையுடய நண்பர் ஒரு கேட்டதற்க்கு ”கே”வில் ஆரம்பிக்கும் கெட்டவார்த்தை ஒன்றைச்சொல்லி அவர் இன்று வரை என்னுடம் பேசுவதில்லை!//
கலக்கல் :)
// நான் அவர்களை காதல் திருமணம் செய்து கொள்ளவே ஊக்குவிப்பேன் என்றேன்!//
அருமை:)

- இரவீ - said...

வாழ்த்துகள் தல!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் தல

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்!

செல்வநாயகி said...

வாழ்த்துகள்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//(பெண் குழந்தையில்லாத வயிறெரியும் ஒரு தகப்பன்).
//

யோவ் .. என்னவோ இனிமேல வாய்ப்பே கிடைக்காத மாதிரி

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் வால்

எப்பூடி.. said...

வாழ்த்துக்கள்.

பாலராஜன்கீதா said...

//தருமி அய்யா, பரிசல், அப்துல்லா, ஜீவன் வரிசையில்(ரஜினி, கமலெல்லாம் இவர்களை விட பிரபலமா என்ன?) நானும் இரு பெண் குழந்தைக்கு தகப்பன் என்ற பெருமையை அடைந்து விட்டேன்!//
:-)
வாழ்த்துகள்

அது சரி said...

So cute!!

மீண்டும் அப்பா ஆனதுக்கு வாழ்த்துக்கள் பாஸ்.

அது சரி said...

//
எறும்பு said...
பொண்ணு உங்கள மாதிரி இல்லாம அழகா இருக்கு

;))

//

இதுக்கு ரிப்பீட்டு போட்டுக்கறேன்..:))

அ.வெற்றிவேல் said...

வாழ்த்துகள் வால்பையன்..

தாய்க்கும் சேய்க்கும் என் அன்பையும்
வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்

அன்புடன் வெற்றி

குடுகுடுப்பை said...

போனிலும்,டுவிட்டரிலும், மெயிலிலும் வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி!//

BUZZ miss aachu.

vaalthukal

No tamil font

ஹேமா said...

வாழ்த்துகள் வாழ்த்துகள்
வாழ்த்துகள் வாலு...!

ரொம்ப ரொம்ப அழகு சின்னக் குட்டி.உண்மையில் மனம்
நிறைந்த வாழ்த்துகள்.

Anonymous said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத
இ­ளமையும்
கழுபிணியிலாத உடலும் கொண்டு குழந்தை நல்வாழ்வு வாழ வாழ்த்துகள்!!!!

பா.ராஜாராம் said...

அருண்,

வாழ்த்துகள்! :-)

Balaji saravana said...

வாழ்த்துக்கள்!

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் அருண்

ரவிச்சந்திரன் said...

வாழ்த்துகள் அருண்!

//சமூகம் என்ற நாலு நாசக்கார பயல்களை உறுப்பினராக கொண்ட குப்பைதொட்டி வழக்கம் போல் தன் வேலையை ஆரம்பித்தது, திரும்பவும் பெண்குழந்தையா என்றவர்களிடம் என் விருப்பமும் அது தான் என்றேன், சிலர் அமைதியாக சென்றார்கள், சிலர் இருந்தாலும் என்று இழுத்தார்கள்!, ஆண்குழந்தையோ, பெண்குழந்தையோ படிக்கும் வரை படிக்கவைப்பது என் கடமை! வரதட்சணை கொடுத்து கல்யாணம் செய்து வைக்க நினைப்பவன் தான் வருத்தப்படனும், நான் எப்படி வரதட்சனை வாங்காமல் கல்யாணம் செய்து கொண்டேனோ அதே போல் தான் என் மகள்கள் திருமணமும் நடக்கும், மேலும் நான் அவர்களை காதல் திருமணம் செய்து கொள்ளவே ஊக்குவிப்பேன் என்றேன்! மனதுக்குள் பைத்தியகாரன் என்று திட்டி செல்வது எனக்கு கேட்டது!//

நெத்தியடி....

வாழ்க வளமுடன்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துகள் வால் .

Subankan said...

வாழ்த்துகள் தல/வால் :)

தேவன் மாயம் said...

வாழ்த்துகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

ஜெய்லானி said...

//ஆண்குழந்தையோ, பெண்குழந்தையோ படிக்கும் வரை படிக்கவைப்பது என் கடமை!//

ம்...அதை சரி வர செய்தாலே போதுமே...

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்.....வாழ்த்துக்கள்.....

காவேரி கணேஷ் said...

வாழ்த்துக்கள் வால்.

வெறும்பய said...

வாழ்த்துக்கள்.

அனு said...

வாழ்த்துக்கள் வால் சார்...

அஷீதா said...

வாழ்த்துக்கள் :)

taaru said...

வாழ்த்துக்கள் வால்.. இப்போ ரெட்டைவால்...

நிகழ்காலத்தில்... said...

//தருமி அய்யா, பரிசல், அப்துல்லா, ஜீவன் வரிசையில்(ரஜினி, கமலெல்லாம் இவர்களை விட பிரபலமா என்ன?) நானும் இரு பெண் குழந்தைக்கு தகப்பன் என்ற பெருமையை அடைந்து விட்டேன்!//

ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன், இந்த வரிசையில இவங்கெல்லாம் என்னைய விட பிரபலமா என்ன?? :)))))

Chitra said...

Congratulations!

STARWIN said...

ரொம்ப கவலையா உக்காந்திருக்க மாதிரி இருக்கு

மங்குனி அமைசர் said...

வாழ்த்துக்கள் ,
அப்புறம் எந்த "டை " தலைக்கு நல்லா இருக்கும் வால்ஸ் . ஓ... சாரி நீங்க யூத்து , அப்ப அது இல நரையா???

கண்ணா.. said...

வாழ்த்துக்கள் வால்...

யாசவி said...

வாழ்த்துக்கள் வால்

ரெண்டு பாப்பாவையும் நல்லா பர்த்துகோங்க

:)

யாசவி said...

bye the way

paapa so cute

பின்னோக்கி said...

வாழ்த்துக்கள் வால்ஸ்.

அந்த கடைசி போட்டா தவிர :) மத்ததெல்லாம் க்யூட்.

பொண்ணுங்கதாங்க கடைசி வரை நம்ம கூட பாசமா இருக்குங்க....

இனிமே உங்க பொண்ணுங்க தான் வாலுத்தனம் பண்ணனும். அதுனால வால சுத்திவெச்சுடுங்க.

gayathri said...

anna pappa rompa rompa azaga irukaga anni ketta solli suthi poda sollluga

Uma said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

gayathri said...

ரேயன் said...
//(பெண் குழந்தையில்லாத வயிறெரியும் ஒரு தகப்பன்).
//

யோவ் .. என்னவோ இனிமேல வாய்ப்பே கிடைக்காத மாதிரி


:))))))))))))))))))))))))........

ஸ்ரீ.... said...

உங்கள் குடும்பத்தின் புதுவரவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே! சமூகம் என்ற குப்பைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்வரைதான் நிம்மதி. தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். (உண்மையாகவே நீங்க யூத்....?????)

ஸ்ரீ....

mythees said...

வாழ்த்துக்கள்.

tamilmaran said...

வாழ்த்துகள்....

க.பாலாசி said...

இப்பவே ஸ்கூல்ல அட்மிஸன் வாங்கி வச்சிக்குங்க அதான் நல்லது.. வாழ்த்துக்கள்...

shortfilmindia.com said...

vaazhthukkal

cablesankar

புன்னகை தேசம். said...

வாழ்த்துகள்.

Umapathy said...

வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

வாழ்த்துகள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

ராகவேந்திரன் said...

@ வாழ்த்துக்கள் நண்பரே தங்கள் குழந்தைகள் எல்லா வளமும் பெற்று திகழ தாங்கள் நம்பும் இயற்கை அல்லது நான் நம்பும் கடவுள் எல்லா அருளையும் தந்து மகிழ்ச்சியுடன் வாழட்டும்.

பாபு said...

வாழ்த்துகள்.

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகள் வால்!

ரெண்டு போதும். இனிமேல் வாலை சுருட்டி பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

ராஜன் said...

மாமா உம்பொண்ண கொடு!

krishnakrishna said...

வாழ்த்துக்கள்

சிவாஜி said...

மிக்க சந்தோசம் அண்ணா...
குட்டிப் பாப்பாக்கும் அன்புக் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்...

ராஜன் said...

//இந்த போட்டோவில இருக்குற யூத்தப்பார்த்தா ரெண்டு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுது!?//


நல்லா என் வாய்ல வருது!

ராஜன் said...

//நானும் இரு பெண் குழந்தைக்கு தகப்பன் என்ற பெருமையை அடைந்து விட்டேன்!
//

அடடா! எப்பிடி தல சாதிச்சீங்க!

ராஜன் said...

//ஆனால் வந்திறங்கிய என் மனைவி சிரித்து கொண்டே இறங்கினாள்!//


உங்கள பாத்தா சிரிப்பு போலீஸுன்னு எல்லாருக்கும் தெரியுதே தல!

ராஜன் said...

//செலவை பற்றிக்கூட கவலையில்லை, //


ரமணா டையலாக்கா!

ராஜன் said...

//அதற்கே எனக்கு பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிட்டது.//


மறுபடியுமா!

ராஜன் said...

//ஓடிப்போய் நர்ஸ்களை எழுப்பி வரச்சொன்னென்//

அடப்பாவி! பொண்டாட்டிய பிரசவத்துக்கு அட்மிட் பண்ணிட்டு அதே ஆஸ்பத்திரி நர்ஸ 12.30க்கு எழுப்பி இருக்கியே... உன்னல்லாம் எதுல அடிக்கறது!

ராஜன் said...

//ன்னை போல் செய்யும் வேலையை கொண்டாட்டமாக செய்பவனுக்கு ஒரு ஆயுளே பத்தாது!, //

சம்பளம் கொடுக்கறவனுக்கு தான தெரியும்!

ராஜன் said...

//தொடர்ச்சியான நச்சரிப்புக்கு பின் நர்ஸ் எழுத்து வந்து, சிறிது பரிசோதனைக்கு பின் உள்ளே அழைத்து சென்று விட்டார், //ரைட்டு! சாதிச்சிட்டீங்க!

ராஜன் said...

//மேலும் நான் அவர்களை காதல் திருமணம் செய்து கொள்ளவே ஊக்குவிப்பேன் //

தேன்க் யூ மாம்ஸ்!

ராஜன் said...

பாப்பா கிட்ட ரொம்ப்ப போவதீங்க தல! பூச்சாண்டின்னு நெனச்சு பயந்துக்க போவுது!

sivaG said...

வாழ்த்துக்கள்!!!

BALA said...

வாழ்த்துகள் தல! வீட்டுக்கு வந்திருக்கும் புதிய இளவரசிக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகள்!
- பாலா&ரம்யா

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

வாழ்த்துக்கள் தல....

தினேஷ் said...

வாழ்த்துக்கள் அங்கிள் ....

மரா said...

வாழ்த்துக்கள் தல...


தோழமையுடன்
மரா

வரதராஜலு .பூ said...

வாழ்த்துக்கள் அருண்.

குட்டி பாப்பா செம அழகு.

Thangaraj said...

வாழ்த்துக்கள் தல அப்பிடியே இந்த ராஜனை தட்டி வையுஙக ஒவெர க்மெண்ட் போடுரார்

மின்னுது மின்னல் said...

வாழ்த்துகள் பாஸ் !

VELU.G said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

ஈரோடு கோடீஸ் said...

அன்பு வால்த்துக்கள்

சீனு said...

வாழ்த்துக்கள் தல. Sorry, வால்.

Normal Delivery - ரொம்ப சந்தோஷம்...

//இந்த போட்டோவில இருக்குற யூத்தப்பார்த்தா ரெண்டு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுது!?//

யாரோ உங்க ஐ.டி.ய ஹேக் பன்னிட்டாங்களா தல? ;)

Vidhoosh said...

அருண்,
வர்ஷா வருணா இருவரும் உங்கள் வாழ்கையை மென்மேலும் மகிழ்ச்சிகள் பெருக செய்யட்டும். வாழ்த்துக்கள்.

வீட்டுக்கு நடைவண்டி, மூணு சக்கர சைக்கிள், சப்பரம் எல்லாம் வந்தாச்சு போலருக்கே, இனிமேயாவது பொறுப்பா இருங்க..

அன்புடன்,
விதூஷ்.

Anonymous said...

vaira selaiyaai ponnu kolli azhagu arun....anbu muthangal aayiram..aamam idhu enna

//இந்த போட்டோவில இருக்குற யூத்தப்பார்த்தா ரெண்டு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுது!?//

hahhaa idhu kutti ponnada amma kitta solli parunga vizhum adi.....

Mohan said...

வாழ்த்துகள்!

supersubra said...

வாழ்த்துக்கள்

sasi said...

இந்த போட்டோவில இருக்குற யூத்தப்பார்த்தா ...........நாலு குழந்தைக்கு அப்பா மதிரி இருக்கு ....... இந்த டகுல்பாசா வேலை எல்லாம் எங்க கிட்ட வேணா தல

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.

Ramesh said...

வால் பாப்பா!!! வாழ்த்துக்கள்.

கலாநேசன் said...

வாழ்த்துக்கள்.

டம்பி மேவீ said...

தல வாழ்த்துக்கள் ..... எல்லோர் நலத்தையும் கேட்டதாக சொல்லவும் ...

வர்ஷா, வருணா ..... இனிமேல் இவங்களுக்கு நீங்க தான் role model ....

ஜெஸ்வந்தி said...

வாழ்த்துகள் வால்.

Ponkarthik said...

தல வாழ்த்துக்கள் :))

Rajesh said...

வாழ்த்துக்கள்...
ராஜேஷ்

கோவி.கண்ணன் said...

தங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் !

Krish_tek said...

Vaazhthukal.

R.Ravichandran said...

best wishes

தாசிஸ் அரூண் said...

வாழ்த்துக்கள் நண்பரே....

ஆனா ஒரு விஷயம் உதைக்குதே ....

பொறந்த கொழந்தைய போட்டோ எடுக்க கூடாதுன்னு சொல்ல்வாங்களே..

தாசிஸ் அரூண் said...

வாழ்த்துக்கள் நண்பரே....

ஆனா ஒரு விஷயம் உதைக்குதே ....

பொறந்த கொழந்தைய போட்டோ எடுக்க கூடாதுன்னு சொல்ல்வாங்களே..

கும்மி said...

//பொறந்த கொழந்தைய போட்டோ எடுக்க கூடாதுன்னு சொல்ல்வாங்களே.//

என் மகள் இன்குபேட்டரில் இருக்கும்போதே போட்டோ எடுத்தோம். ஒன்னும் ஆகலையே!

நிலா முகிலன் said...

வாழ்த்துக்கள் நண்பரே. என் மகன் பிறந்த போது பிரசவம் முழுக்கவே நான் அருகில் இருக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆண்கள் பாக்கியவான்கள்.

மங்குனி அமைசர் said...

தினேஷ் said...

வாழ்த்துக்கள் அங்கிள் ....///

se .,,, ithu namakku thonaama pochche , repeettu , வாழ்த்துக்கள் அங்கிள்

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள் வால்...

கொழந்த said...

வாழ்த்துக்கள் வால்

suresh said...

வாலுக்கு வால் முளைக்காமல் ஒரு மலர் கொடி மலர்ந்தது மகிழ்ச்சி.
மலரை மெட்டாக சுமந்து அழகிய மலராக ஈன்றெடுத்த கொடி (தாய் ) க்கும் ,
கொடியை சுற்றி பிணைந்து தாங்கி கொண்டிருக்கும் இந்த காதல் வண்டிற்கும் ( சரி வாலுக்கும்)
நட்பின் வாழ்த்துக்கள் .......................

முகுந்த் அம்மா said...

வாழ்த்துக்கள், எப்படி உங்கள் வீட்டில் சிறு குழந்தையை போட்டோ எடுத்து நெட்டில் போட சம்மதித்தார்கள்?

ஜில்தண்ணி - யோகேஷ் said...

இப்டி நெட்ல விட்டுபுட்டா

ஊர் கண்ணெல்லாம் பட்ருக்கும்

மறக்காம திருஷ்டி சுத்தி போடுங்க :)

Sabarinathan Arthanari said...

//ஒரு இயற்கை விரும்பியின் மகள்களும் இயற்கை விரும்பியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!//

வாழ்த்துகள் தல

butterfly Surya said...

வாழ்த்துகள் அருண்..

இன்னும் அடுத்த வாரிசு உண்டா..??

cheena (சீனா) said...

அன்பின் அருண்

ஆணென எதிர் பார்த்தேன் - பெண் - மகிழ்ச்சி. தாயும் சேயும் நலம் தானே !

//தருமி அய்யா, பரிசல், அப்துல்லா, ஜீவன் வரிசையில்(ரஜினி, கமலெல்லாம் இவர்களை விட பிரபலமா என்ன?) நானும் இரு பெண் குழந்தைக்கு தகப்பன் என்ற பெருமையை அடைந்து விட்டேன்!//

//ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன், இந்த வரிசையில இவங்கெல்லாம் என்னைய விட பிரபலமா என்ன?? :)))))//

ரிப்ப்பீட்ட்டு - ஆமா ரிப்பீட்டு........

நல்வாழ்த்துகள் வாலு
நட்புடன் சீனா

பூந்தளிர் said...

வாழ்த்துக்கள்...

யூத் ??

willi said...

வாழ்த்துக்கள் தல....

தாராபுரத்தான் said...

நலம் பல பெற்று வாழ்க.

vasu said...

வாழ்த்துக்கள்...

மோனி said...

பெண் என்பவள் மனித குலத்தின் மிகச் சரியான பாதி... வாழ்த்துகள் நண்பா ..

திருஞானசம்பத்.மா. said...

வாழ்த்துகள் வால்..


//.. இந்த போட்டோவில இருக்குற யூத்தப்பார்த்தா ரெண்டு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுது!? ..//

ஐயோ.. ஐயோ..

Karthik said...

லேட்டா பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தல. :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//தருமி அய்யா, பரிசல், அப்துல்லா, ஜீவன் வரிசையில்(ரஜினி, கமலெல்லாம் இவர்களை விட பிரபலமா என்ன?) நானும் இரு பெண் குழந்தைக்கு தகப்பன் என்ற பெருமையை அடைந்து விட்டேன்!//

எனக்கும் இரு பெண் குழந்தைகள்தான்.

//
சமூகம் என்ற நாலு நாசக்கார பயல்களை உறுப்பினராக கொண்ட குப்பைதொட்டி வழக்கம் போல் தன் வேலையை ஆரம்பித்தது//

இது பற்றி நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்!
http://ulagamahauthamar.blogspot.com/2010/08/blog-post_06.html

அலைகள் பாலா said...

வாழ்த்துக்கள் தல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் வால்ஸ்!

Pradeep said...

வாழ்த்துக்கள் சார். நானும் என் பொண்ணுக்கு நீங்க நினச்ச அதே கருத்தைதான் நினச்சேன்.

கார்பன் கூட்டாளி said...

வாழ்த்துக்கள்..

D.R.Ashok said...

வாழ்த்துக்கள் வால்அங்கிள்

பேரழகிக்கு செல்ல முத்தங்கள்

vinu said...

munnamea vaazthu sonnammaaaathiri niyabagam irrukku aathukku aaanaaalum oru doubt vazthu sonnama illaiyaaannnu,


kaasa panama oru congrats thaanea.................


vaazthukkalungooooooooooo

chandru said...

உங்கள் குழந்தை நீண்ட ஆயுளுடன் எல்லா வகை சிறப்புக்களையும் பெற்று வாழட்டும்.

ஆனாலும் என்னதான் தைரியமாக எழுதிவிட்டாலும் அந்த போட்டோ ஏதோ ஒரு விஷயத்தை சொல்வது போல் தெரிகிறதே ஏன்.

உங்களுக்கு அடுத்த குழந்தை பிறந்தாலும் பெண்குழந்தையாக இருக்க 90% வாய்ப்புகள் உண்டு. ஏன் என்று தெரிந்து கொள்ள எனது வலைத்தளத்திற்கு தவறாது வாருங்கள். அது பற்றி எழுத உள்ளேன்.

basheer said...

வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

தாயும் சேயும் நலமா?

நீங்க நல்ல மனிதன் அது உங்கள படிக்கும் போது புரியுது.

இந்த பதிவ படிக்கும் போது கொஞ்சம் உதரலா உணர்ந்தேன். அதே தருணம் எனக்கும் வெகு அருகில் காத்திருப்பதால்.

வாழ்த்துக்கள்...... மீண்டும் மீண்டும் அப்பாவாக!

ப்ரின்ஸ் said...

//ஒரு இயற்கை விரும்பியின் மகள்களும் இயற்கை விரும்பியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!//

வாழ்த்துக்கள் தலை!

//இந்த போட்டோவில இருக்குற யூத்தப்பார்த்தா ரெண்டு குழந்தைக்கு அப்பா மாதிரியா தெரியுது!?//

அதானே..

பிரதீபா said...

ஊருக்குப் போயிட்டு வந்து பாத்தா நல்ல சேதி .. சந்தோஷங்க. குட்டி உங்க கைய்யப் பிடிச்சுட்டு இருக்கற போட்டோ ரொம்ப அழகு ..
வரதட்சணை அது இதுன்னு பேசிட்டு பாப்பாவோட மொய் வசூல் எல்லாம் சைடுல அமுக்கிட்டதா கேள்விப்பட்டேன், அப்டியாங்க? :) (சும்மா தமாசு )

என்னால முடிஞ்சா
கவிநயா
மிது
ரித்து
காவ்யா
அக்ஷரா
ம்ம்.. அப்புறம், எம்பேரு கூட நல்லா இருக்கும் (நோ No stones please)

webworld said...

வாழ்த்துக்கள் அண்ணா!!!! :)

கையேடு said...

வாழ்த்துகள்ங்க அருண்.. :)

அன்பரசன் said...

வாழ்த்துகள் தல..

jothi said...

வாழ்த்துக்கள் அருண்

//மேலும் நான் அவர்களை காதல் திருமணம் செய்து கொள்ளவே ஊக்குவிப்பேன் //


ஊக்குவிற்கின்ற பெற்றோரின் குழந்தைகளுக்கு பொதுவாக காதல் திருமணம் வாய்ப்பதில்லை,.. (அதென்னவோ சண்டை போட்டு காதலிப்பதில்தான் ஒரு திரில்லிங்க் இருக்கும் போலிருக்கு,..)

அன்னு said...

ரொம்ப லேட் பதில் என்னுதுதான்னு நினைக்கிறேன். எனினும், தாயும் சேயும் நலமாக வாழ வாழ்த்துக்கள். பேர் வெச்சாச்சாண்ணா? என்ன சொல்றாங்க குட்டி தேவதைகள் ரெண்டு பேரும்?

srividya said...

do u know wat is bladder?udanjidhu nu eludhiruka....neeyellam oru blogger

வால்பையன் said...

@ஸ்ரீவித்யா

டாக்டர் சொல்லும் போது, ப்ரோக்கன்னு தான் சொன்னாங்க, அதை தான் தமிழ் படுத்தி எழுதினேன், அதுக்கு வேற எதாவது பெயர் இருக்குன்னா சொல்லுங்க தெரிஞ்சிகிறேன்!

நீயெல்லாம் ஒரு ப்ளாக்கர்னு கேட்டிருக்கிங்களே, ப்ளாக்கர் என்பது மாபெரும் தகுதியா என்ன!?

Vijaiy from colombo said...

காலை 8 மணில இருந்து இப்ப வரை ஆபீஸ்ல வேலை வால் அண்ணா ,உங்க ப்ளோக்க நோண்டும் போது உங்க குழந்தையின் சிரிப்பை பார்த்தேன் ...சோ சோ cute ......பார்த்துட்டே இருக்கலாம் நாள் fullaa .... நல்லா சுத்தி போடுங்க (நம்பிக்கை இல்லாட்டியும் சொல்ல வேண்டியது நம்ம கடமை:)))) .....குட்டிமா இப்போ என்ன பண்றாங்க ...வீட்டுல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க....உங்கள பாக்கும் போது சீக்கிரமா கல்யாணம் பண்ணனும் னு ஆசையா இருக்கு...ஆனா 20 வயசுல கல்யாணம் பண்ணினா இங்க ஜெயில்ல போட்டுடுவாங்க ...அதன் waiting ...

!

Blog Widget by LinkWithin