டிஸ்கி: மொழிநடை கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில் அமைந்து விட்டது, தயைகூர்ந்து புரியாத பத்திகளை மீண்டும் ஒருமுறை படித்து கொள்ளவும்!
*********
”வாய்மையே வெல்லும்” என்று சொல்லித்தான் இந்தியாவில் வளர்க்கப்படுகிறோம். ஆனால், இது தான் உண்மை என்ற நிலைபாடு இடம், பொருள், ஆட்களுகேற்ப மாறுபடுவது அனைவரும் அறிந்ததே. உலகில் இருமாறி கொள்கையில் உண்மையும் உள்ளது, ஒரு விடயம் உண்மை இல்லையென்றால் பொய்யாகவே நம்பப்படுகிறது, அதாவது அந்த இரண்டு பரிமானத்தை(பரிணாமம் இல்ல) தாண்டி வேறு இல்லை என்று அர்த்தம்!
உண்மை போன்று விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் விஷயம் மிக குறைவே,
அது எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதன் உண்மை தன்மை கேள்விக்குள்ளாக்க படுவதே ஆதாரப்பொருள், முடிவில்லாது முடிக்கப்படும் விவாதங்கள் இரு தன்மையிலும் நிலை கொள்கிறது, அது வாதி, பிரதிவாதிகளின் நம்பிக்கை தன்மையின் அடிப்படையில் ”முடிவில்லாத முடிவிலியாக முடிவுசெய்யபடுகிறது”(இப்பவே கண்ண கட்டுதே), ஆனாலும் அது உண்மையா, பொய்யா என்பது முடிவில் முடியாது,(மூன்றாம் பரிமானம்!?)
வாதங்களில் வாதி, பிரதிவாதியின் முன்முடிவுகளே உண்மையாக நம்பபடுகிறது, இரண்டு வாதிகளாலும் சில நேரங்களில் விட்டுகொடுக்க பட்டாலும், வாதி/பிரதிவாதியின் நிலைபாடு மாறுவதே உண்மையான உண்மையின் வெற்றி, ஆனாலும் எல்லா வாதத்திலும் இது நடக்கிறதா என்பது கேள்விகுள்ளாக்கபடவேண்டிய உண்மை, அவரவர் நம்பிக்கையை உண்மையென நம்பும் போது, உண்மையான உண்மையை உண்மை என நம்ப உண்மையாகவே சிலருக்கு தயக்கமாக இருக்கிறது, (மூச்சு வாங்குதுடா டேய்)
உண்மையில் திட/திரவ/வாயு தன்மையுள்ள நிலைப்பாடுகள்(பொருள்கள்) மட்டுமே நிருபிக்க பட தகுதியுள்ள உண்மைகளாக உள்ளன, அதை நிருபிப்பது சுலபம். நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளவை, என்றென்றும் இறுதி தன்மை இல்லாததாகவே இருக்கிறது, அவை அதிகபட்ச சாத்தியகூறுகளின் எண்ணிக்கையில் உண்மையை தக்க வைத்து கொள்ளும், சிலருக்கு குறைந்த பட்ச சாத்தியகூறுகளே போதுமானதாய் இருக்கிறது!
உண்மை, தனிமனித நம்பிக்கை மற்றும் தனிமனிதனை பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்க படுவது, ஒருவரின் முந்தய நம்பிக்கை மற்றும் அவரின் வாத நிலைப்பாட்டு தோற்றம் பற்றிய நிலைபாடு நமக்குள் ஒரு முன்முடிவுகளை தரும், அவரவர் நம்பிக்கையும், கருத்துக்களும், குணங்களை பற்றிய நம்பிக்கை தரும், ஆனால் அவையெல்லாம் உண்மை தானா?
இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா ஆல் இன் ஆல்ல இருக்குற இந்த பதிவை யாரும் நம்பாதிங்க நண்பர்களே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
51 வாங்கிகட்டி கொண்டது:
அது நம்பினா கூட ஒரு மைல்ட் டவுட் இருந்துச்சு
இப்போ கன்ஃபார்ம்டு..
அச்சச்சோ.. நான் தான் ஃபர்ஸ்ட்டா
வாலு... ஜாரிப்பா
//உண்மை போன்று விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் விஷயம் மிக குறைவே//
சரியாத்தான் சொல்லியிருக்கறீங்க....
எனக்கு தலைவலி, அதனால் என் லீவு லெட்டரை அனுப்பி வைக்கிறேன்
அதுக்கு ஒரு பதிவு போட்டுட்டீங்க. நான் 'அத' வெளில சொன்னா, 'அதுக்கும்' ஒரு பதிவு போடுவீங்களா?
(தனியா பேசுறத, 'பின்னாடி' பொதுவா பதிவா போடுறததான் பின்நவீனத்துவம் அப்படின்னு சொல்லுவாங்களா?)
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை...ஹா..ஹா
சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு பத்திரிகைகள் இருந்தன.
ஒன்றின் பெயர் ப்ராவ்தா-உண்மை என்று அர்த்தத்தில்!
இன்னொன்றின் பெயர் இஸ்வெஸ்தியா -செய்தி என்ற பொருள் தரும் வார்த்தை!
கிண்டலாகச் சொல்வார்கள் ப்ராவ்தாவில் இஸ்வெஸ்தியா இல்லை! இஸ்வெஸ்தியாவில் ப்ராவ்தா இல்லை! (உண்மையில், செய்தி இல்லை! செய்தியில் உண்மை இல்லை!)
ஆதே மாதிரி வாலும், (ஆல் இன்) ஆலும் ஆகிப் போன மாதிரி இல்லை......!!
\\இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா ஆல் இன் ஆல்ல இருக்குற இந்த பதிவை யாரும் நம்பாதிங்க நண்பர்களே! //
தமாதுண்டு மேட்டர்க்கு அம்மம் பெரிய பதிவா ??
ஹைய்யோ.........ஹைய்யோ...........
என்னது காந்தி செத்துட்டாரா
//ஆதே மாதிரி வாலும், (ஆல் இன்) ஆலும் ஆகிப் போன மாதிரி இல்லை......!!//
இதையெல்லாம் நானே கூறிக் கொண்டால் எதோ தலைக் கனம் பிடித்த தருக்கன் தடுமாறி உளறுகிறான் என இதயும் எதிர்க் கட்சிகள் ஏளனம் செய்யகூடும் !
//மொழிநடை கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில் அமைந்து விட்டது, //
ஓஹோ ! இதுதான் பின் நவீனமா? எனக்கு தெரியாம போச்சே
//இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா ஆல் இன் ஆல்ல இருக்குற இந்த பதிவை யாரும் நம்பாதிங்க நண்பர்களே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//
எனக்கு தெரிஞ்சதெல்லாம்
நேர்மை
எருமை
கருமைன்னு உலகத்துக்கே தெரியும் ! இனி என்ன கூப்பாடு போட்டாலும் யாரும் நம்ப மாட்டாங்க தல
பெண்மை என்றால் என்னன்னு இதே ஸ்டைல்ல ஒரு பதிவப் போட்டா நல்லா இருக்கும்
//பெண்மை என்றால் என்னன்னு இதே ஸ்டைல்ல ஒரு பதிவப் போட்டா நல்லா இருக்கும் //
அதெல்லாம் ஆல் இன் ஆல்ல போட்டுகோங்க!, நான் ரொம்ப சீரியஸான ஆளாக்கும்!
வாலுவின் வால்த்தனம் இதில் சற்றே தூக்கலா எனக்கு தெரியுதுப்பா:)
கண்ணு மட்டும் கட்டலை மூளை இயங்குறதே நின்னு போச்சு:-)
//
கே.ஆர்.பி.செந்தில் said...
எனக்கு தலைவலி, அதனால் என் லீவு லெட்டரை அனுப்பி வைக்கிறேன்/
//
இது நல்ல ஐடியாவா இருக்கே:-) எப்படித்தான் யோசிக்கிராங்களோப்பா:-)
//
மொழிநடை கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில் அமைந்து விட்டது
//
அப்படியா எப்படியோ படிச்சி முடிச்சி நீங்க எதிர்பார்த்த மாதிரி ஆயிட்டோம் :)
சந்தோஷமா இருங்கப்பு..... :)
ம்ம... நல்லா இருக்குங்க அருண்.
தலை சுத்துது பாஸ்...20 வருடங்களுக்கு முன் சோவியத் யூனியனில் இருந்து வந்த புத்தகத்தை படிச்ச மாதிரி இருக்கு...?அது சரி அழகு ராசா கடையில் என்ன அண்டர்வேரு ஒண்னூம் புரியல
.//தலை சுத்துது பாஸ்...20 வருடங்களுக்கு முன் சோவியத் யூனியனில் இருந்து வந்த புத்தகத்தை படிச்ச மாதிரி இருக்கு...?//
நான் வென்றுட்டன்!
யேய் வாலு,
சோத்துல டைனோசரை மறைக்க முடியாது!
தெரிஞ்சிக்கோ, புரிஞ்சிக்கோ, வயலில சொல்லாத...!
சாரி, அத வெளில னு மாத்திக்கொங்க..
.
வால்,
உண்மை , பொய் ,நல்லது , கெட்டது என்று எதுவும் இல்லை.
எல்லாம் ஆள்,இடம்,அறிந்த தகவல் சார்ந்த விசயம். உண்மை என்று நம்பியது மேலதிகத் தகவலால் பொய்யாகும். பொய் என நம்பியது மேலதிகத் தகவலால் உணண்மை என்றாகும்.
ஒருவருக்கு அல்லது ஒரு இடத்தில் நல்லது என நம்பப்படுவது மற்றவருக்கு அல்லது மற்ற ஒரு இடத்தில் கெட்டதாக் இருக்கும். இடம், வாழும் சூழலுக்கு ஏற்ப மனிதன் சில நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் உண்மை , பொய் ,நல்லது , கெட்டது என்று பிரித்துக் கொள்கிறான்.
கூடி வாழும் சமூகத்தில் பலர் நம்பும் ஒன்று அல்லது செய்யும் செயல் பெரும்பான்மை பெற்று மற்றது தவறாகப் பார்க்கப்படும். இது இயல்பானது.கலாச்சாரக் காவலர்கள் பெரும்பான்மை நம்பிக்கையைக் காக்கும் போலீஸ்.
கலாச்சாரம் என்பதே கடந்த காலம். யாரும் நிகழ்காலத்தில் காலச்சாரத்தை உண்டாக்குவது இல்லை. நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப வாழ்வது இயல்பான நிகழ்வு. ஆனால் இந்த இயல்பான ஒன்று ,நாளைய தலைமுறையால் பழங்கால கலாச்சாரமாக அறியப்படும். எதுவும் புரியாமல் அதுவே வலியுறுத்தப்படும் :-((
.
@ கல்வெட்டு
நான் எவ்ளோ அழகா குழப்பியிருக்கேன்,
நீங்க வந்து தெளிவு படுத்திட்டிங்களே!
இது சற்றே மாற்றம் செய்யபட்ட மீள்பதிவு தலைவா
:)
vaal mudiva enna solla varenga neenga?
இதுக்கேவா? 1850களில் டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும்-உடைய பின்னுரையை படிக்கவும். கொஞ்சம் முத்துது.(வருத்தம்)
//vaal mudiva enna solla varenga neenga? //
இந்த உலகத்துல எதையும் நம்ப முடியாது/முடியல
//இந்த உலகத்துல எதையும் நம்ப முடியாது/முடியல
//
முடியல அழுதுருவேன்...அவ்வ்வ்வவ்
//இந்த உலகத்துல எதையும் நம்ப முடியாது/முடியல
//
முடியல அழுதுருவேன்...அவ்வ்வ்வவ்//
அதெல்லாம் நாங்க பண்ணிகிறோம்!
சரி சரி விடுப்பா விடுப்பா
அவ்வ்வ்
யப்பா முடியல.
பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html
:)
Sir,
Please look into this site:
http://vaalpaiyyan.blogspot.com/
Initially, i thought it is your site. Please be alert.
தலைவா இது யாருடைய பிளாக் பாத்து சொல்லுங்க
உஸ் ...யப்பா..இப்பவே கண்ணை கட்டுதே...
http://vaalpaiyyan.blogspot.com/
அது சரி நமக்கு முன்னே V R சொல்லிடாரா...>>
மர உரல்ல கூழங்கல்லை போட்டு குத்தியது போல இருக்குங்க....(புரிதலின் சிக்கல்)
கொஞ்சம் எனக்கும் புரிவதுபோல எதுங்க நீங்க நல்லாயிருப்பிங்க
உங்களுக்கு மே தின வாழ்த்துக்கள்.
பரிமாணம் - பரிமானம் எதுங்க கரீக்ட்டு ?
நீங்களே விளம்பரப்படுத்திட்டீங்களே..,.
தற்செயலாய் தோன்றி
தற்செயலாய் சுழன்று
தற்செயலாய் கரையும்
இந்த பிரபஞ்சத்தின் ...
தற்செயலாய் பிறந்து
தற்செயலாய் வளர்ந்து
தற்செயலாய் இறக்கும்
மனிதம் .......
தற்செயல் குறித்து
சிந்திக்கவும் செய்கிறது
தற்செயலாய் ....
உங்கள் முந்தைய பதிவும், இந்த பதிவும் படித்தபோது தோன்றியது .....சொல்ல வேண்டுமென்று ......சொல்லிவிட்டேன்.
They were entertaining and interesting to read. From the comments I have also found some personalities. Thanks to that.
Good Job, Arun.
--
இந்த பதிவுக்கு மதுரை பொண்ணு மொத வெட்டு போடலைய ?
சேவை தேவை, அதாவது உங்கள் சேவை தேவை, ஆனால், தேவைக்கு சேவை என்று தான் ஆரம்பம், சில காலங்களில், சேவைக்கே தேவை ஏற்படுகிறது, அப்போது தேவை சேவை, இந்நிலையில் தேவை முற்படுகிறது, சேவை பின்தங்கிவிடுகிறது, தேவை பெரிதாக சேவை குறைந்து, தேவைக்காக சேவை மட்டுமே தேவையாகிவிடுகிறது, இந்நிலையில் சேவை, தேவை என்ற நிலையில் பிறழ்ந்து விடுகிறது, சேவை நிற்க, தேவை எப்போதும் தேவையாகிவிடுகிறது, தேவை குறையாதபோது சேவை குறைந்துபோகிறது, அப்போது சேவை என்ற பல சேவைகள் தேவை என்ற முடிவில்லாத தேவையில் நின்றுவிடுகிறது, அதனால் சேவை தொடராமல் தேவை தொடர்ந்துகொண்டே இருக்கிறது, அப்போது சேவை என்றவர்கள் இப்போது தேவை என்கிறார்கள், எப்போதும் தேவை என்பவர்களால் எப்போதாவது சேவை கிடைக்கிறது, எப்போதும் சேவை என்பவர்கள் எப்போதும் தேவை என்ற நிலையிலே இருக்கிறார்கள், அதானால் தேவை என்பது நிறுத்தமுடியாத சேவையாகிறது, என் செய்ய . . . தேவை மாறி மாறி தேவைப்பதுவதல் சேவை இருக்கும் இடமெல்லாம் தேவை ஏற்பட்டுப்போகிறது, இப்போது சேவை, தேவை, இதில் எது தேவை . . .
@ மார்க்கண்டேயன்
ஆணியே புடுங்க வேணாம்!
vara vara mokkaya romba podurenga ama solluputen...
உண்மை சொல்றது என்பது தான் மிகப்பெரிய பொய். எப்புடி? நாங்களும் சிந்திப்போமில்ல :)
உலக மகா பின்னூட்டம்
Iam the 50th.
வித்யாசமான பதிவு
visit
www.vaalpaiyyan.blogspot.com
நன்றி. எப்படி நண்பர் வால்பையன் உங்களால் போஸ்ட் போடுவதற்குள் கமெண்ட் அடிக்க முடிகிறது . அம்மாவின் கருவறையிலிருந்து அவசரமாக வந்துவிட்டீரோ!
Post a Comment