பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கும் அப்போது, சினிமாத்துறையில் இணைய வேண்டும் என்ற ஆசையில் சென்னையில் காலடி வைத்தேன். எனது பால்ய நண்பன் கார்த்திக்கின் மாமா சிவா அவர்கள் ஆரம்பத்தில் உதவிகள் செய்தார், அவரின் மூலமாக இயக்குனர் ராஜிவ்மேனன் அவர்களிடம் இண்டர்வியூவிற்கு போனேன், அப்பொழுது ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படம் எடுத்து கொண்டிருந்தார், அடுத்த படத்திற்கு நிச்சயமாக வாய்ப்பு தருகிறேன் என்று உறுதியளித்தார், ஆனா பாருங்க அதன் பிறகு அவர் எந்த படமும் இயக்கவில்லை!
அதன் பிறகு வேலுபிரபாகரன் போன்ற இயக்குனர்களிடம் வாய்ப்பு வந்தது, பெரிய இயக்குனர்களிடம் சேர்ந்தால் சீக்கிரமாக கற்று கொள்ளலாம் என காத்திருந்தேன், ஆனாலும் சோறு திங்காமல் இருக்க முடியாதே, அதனால் நண்பன் ராஜாவின் ஆலோசனையின் பேரில் ஹோட்டலில் வேலைக்கு சேரலாம் என முடிவு செய்தேன், அவனது சிபாரிசின் பேரில் எனக்கு தாஜ் கோரமெண்டலில் வேலை கிடைத்தது, ஒன்றரை வருடம் அங்கே வேலை செய்தேன், அதன் பிறகு சினிமாதுறையில் வாய்ப்பு தேடும் ஆர்வம் குறைந்தது, படிப்படியாக உணவகத்துறையில் ஆர்வம் அதிகமானது, ஈரோடு வந்தது லீஜார்டின் என்ற ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தேன்.
தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் அங்கே வேலை செய்தேன், ஹவுஸ்கீப்பிங்கில் 1500 ருபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து அதிலிருந்து சர்வீஸ் துறைக்கு மாறி வேலையை விட்டு நிற்கும் பொழுது கேப்டனாக வெளியே வந்தேன், வெளியே வரும்போது எனது சம்பளம் 5400 ருபாய், ஆர்வத்துடன் எதை செய்தாலும் நிச்சயம் பெரிய பலன் கிடைக்கும் என்பது அனுபவ ரீதியாக எனக்கு புரிந்தது. அப்போதே ஆரம்பத்துவிட்டது வாழ்க்கையில் கண்டிப்பாக சொந்தமாக ஒரு உணவகம் ஆரம்பிக்க வேண்டும் என்று, வாரத்தில் மூன்று முறையாவது நானும் எனது பாஸ் கார்த்திக்கும் நல்ல உணவகங்கள் தேடி சாப்பிட செல்வோம். எவையெல்லாம் மிகுதியான சுவையுடன் இருக்கிறதோ அவையெல்லாம் எனது உணவகத்தில் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என குறித்து கொள்வேன்!
சில வருடங்களாகவே ஆரம்பிக்க வேண்டும் என பேச்சு ஆரம்பித்து எனது பொருளாதார சூழ்நிலையின் காரணமாக தற்காலிகமாக திட்டம் நிறுத்தி வைக்கப்படும், சிறந்த உனவகம் அமைக்க வேண்டுமென்றால் அதற்கான செலவு தொகையும் அதிகமாக இருக்கும் என்பதால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.
என்னைப்போலவே வாழ்க்கையில் உணவகம் ஒன்றை நிறுவியே தீருவது என்ற லட்சியக்கனவில் இருந்த ஒருவரை சந்தித்த போது எனக்குள் இருந்த நெருப்பின் அழுத்தம் அதிகமாயிற்று!, இரண்டு மாத திட்ட விரிவாக்க பேச்சின் முடிவில் இன்னொரு பங்குதாரரையும் சேர்த்து கொண்டு ஆரம்பிப்பது என முடிவு செய்தோம்.
கோவை ஆர்.எஸ் புரத்தில் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த ஒரு உணவகம் விலைக்கு வருகிறது என அறிந்தோம். முன்னர் நடத்தி கொண்டிருந்தவர் அசைவம் சாப்பிடாதவர் மட்டுமல்ல, சமைக்கவும் கூடாது என நினைப்பவர், ஆனால் உணவகமோ 25 குளிர்வசதி செய்யபட்ட அறைகளும், chill out என்ற உயர்தர வசதியான பாரும் அருகில் கொண்டது, அங்கே சைவ உணவை மட்டும் கொடுத்து உணவகம் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்பதால் அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றோம்!, கிச்சனில் சில மாற்றங்கள் தேவைப்பட்டது, நாங்கள் எதிர்பார்த்த நாட்களை விட அதிக நாட்கள் அந்த வேலைக்கு எடுத்து கொண்டதால் விளம்பரத்திற்கு பெரிதாக நேரம் ஒதுக்க முடியவில்லை, முதலில் ஆரம்பித்து பின்னர் பார்த்து கொள்ளலாம் என முடிவு செய்து ஆரம்பித்து விட்டோம்.
நண்பர்கள் பலருக்கு சொல்ல முடியாமல் போனது எங்களுக்கும் வருத்தமே! தயைகூர்ந்து உங்கள் தமயனின் இந்த சிறு தவறை மன்னிக்க வேண்டுகிறேன்!, நீங்கள் இல்லாமல் எனது வளர்ச்சி சாத்தியமாகாது, உங்கள் ஆலோசனைகள் ஒவ்வொன்றும் எங்களை செம்மைப்படுத்தும், ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நண்பர்களே!
ஆர்.எஸ் புரத்திலிருந்து சுற்றுவட்டாரம் 4 கிலோ மீட்டர் வரை டோர் டெலிவரி உண்டு! 11 மணி வரை டோர் டெலிவரிக்கு ஆர்டர் செய்யலாம்!, அதற்கென்று தனியாக எந்த கட்டணமும் தற்பொழுது வசூலிப்பதில்லை. பார்ட்டி ஆர்டர்களும் எடுத்துக்கொள்ளப்படும்.
இணையத்தளம் கட்டுமான பணியில் இருக்கிறது, விரைவில் முகவரி தருகிறேன்!
நண்பர்கள் இத்தகவலை உங்களது தளத்திலும் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன், உங்கள் நண்பர்கள் கோவையில் இருக்கும் பட்சத்தில் ஒருமுறை உணவருந்த வரச்சொல்லுங்கள், மறுமுறை அவர்களை வரவைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு!
எனது எண்:9994500540
உணவக தொலைபேசி எண்: 0422- 437 6 437
171 வாங்கிகட்டி கொண்டது:
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அருண். மேன் மேலும் வளர வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் தோழரே உங்களின் வெற்றிப் பயணம் இன்னும் பல உயர்ந்த நிலையை எட்டிப் பிடிக்க எனது வாழ்த்துக்கள் . நானும் உங்களின் உணவகம் பற்றி விரைவில் ஒரு பதிவிடுகிறேன் . உணவகம் பற்றிய தகவல்களை விரைவில் வெளியிடவும் காத்திருக்கிறேன் .
சகா உணவகத்தின் பெயர் என்ன?
அட்ரெஸ் என்ன?
மிக்க நன்றி அண்ணா!
முதல் வாழ்த்தாக உங்கள் வாழ்த்து வந்ததில் மேலும் மகிழ்ச்சி!
இனி நீங்கள் கோவை வரும்பொழுதெல்லாம் நமது உணவகத்தில் தான் உங்களுக்கு சாப்பாடு!
பதிவுலகை போல ஹோட்டல் துறையிலும் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள் சார்
கூடிய சீக்கிரம் ஒரு பதிவிடுகிறேன்..
நண்பர்கள் பலர் கோவையில் உள்ளனர் வந்து கலக்க சொல்கிறேன்..
//பொன்கார்த்திக் said...
சகா உணவகத்தின் பெயர் என்ன?
அட்ரெஸ் என்ன?//
பங்குதாரர்களின் பெயர் முதல் எழுத்து, மற்றும் அவர்களின் குழந்தைகளின் முதல் எழுத்து வரும் வகையில் purva's fine dine பெயர் வைத்திருக்கிறோம்!
ஆர்.எஸ்.புரம் சிந்தாமணி பெட்ரோல் பங்கு அருகில் இருக்கு!
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அருண்..!
all the vest best thala
இந்த வார இறுதி உங்க உணவகத்தில் தான் நம்ம நண்பர்களுக்கு..
நன்றி பனித்துளி சங்கர்!
நன்றி ரஹீம் கஸாலி!
கண்டிப்பா வரச்சொல்லுங்க பொன்கார்த்திக்!
வாழ்த்துக்கள் வால் .
முயற்சி திருவினையாகட்டும், வாழ்த்துகள் :)
வாழ்த்துக்கள் அருண் ,செட்டிநாடு அசைவ சமையல்கள் எல்லாம் நல்லா இருக்கும் அதையும் உங்க உணவகத்துல கொடுங்க ,வளர்ச்சி நிச்சயம் ,விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி :)
வாழ்த்துகள் தல.
இனி நாங்கள் கோவை வரும்பொழுதெல்லாம் நமது உணவகத்தில் தான் சாப்பாடு!
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...
வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துகள்
உங்கள் தளத்தின் முகவரியை என்னுடைய தளத்தில் இணைக்கிறேன்.
மகிழ்ச்சி வால். வாழ்த்துகள். தூள் கிளப்புங்க!
வாழ்த்துகள் பிப்ரவரி முதல் டிசம்பர் வரை மாத்ந்தோரும் கோவை வருகிறேன்....சாப்பிட்டுவிட்டுச் சொல்கிறேன்.
//இணையத்தளம் கட்டுமான பணியில் இருக்கிறது, விரைவில் முகவரி தருகிறேன்!//
கண்டிப்பா குடுங்க அண்ணா .. கோயம்பதூர் வந்தா ப்ரீயா சாப்பிட்டுக்கலாம்ல .. ஹி ஹி ஹி .. ஆனா உங்கள் பயணம் உண்மைலேயே ரொம்ப நல்லா இருக்கு அண்ணா .. ராஜீவ் மேனன் , அப்புறம் வேலு பிரபாகரன் ..!
வாழ்த்துக்கள் அண்ணா ..!
Sure to visit next time.
Name and address pls.
Also add some ppictures if you have.
ALL THE BEST !!!
நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தல...
வளர வாழ்த்துக்கள்
வால் நாளைக்கு நான் சாண்ட்வெஜ் பகுதியில் இது குறித்து நிச்சயம் எழுதுகின்றேன்..
வாழ்த்துக்கள்....
erode wins in kovai. ok congrats
வந்து சாப்பிட்டுட்டு கருத்து சொல்கிறேன்.
பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கும் அப்போது, //
அப்படீன்னா 1945ன்னு சொல்லுங்க
//சினிமாத்துறையில் இணைய வேண்டும் என்ற ஆசையில் சென்னையில் காலடி வைத்தேன்.//
அப்பதான் மெட்ராஸுல சுனாமி வந்துச்சு!
//அதன் பிறகு அவர் எந்த படமும் இயக்கவில்லை!//
எப்பிடி எடுப்பார்!
//அதன் பிறகு வேலுபிரபாகரன் போன்ற இயக்குனர்களிடம் வாய்ப்பு வந்தது,//
அட ‘காதல் கதைல’ நீங்களூம் மஜா பண்ண்ற வாய்ப்பு போச்சே!
//ஒன்றரை வருடம் அங்கே வேலை செய்தேன்,//
எங்கே!!!!!
//என்னைப்போலவே வாழ்க்கையில் உணவகம் ஒன்றை நிறுவியே தீருவது என்ற லட்சியக்கனவில் இருந்த ஒருவரை சந்தித்த போது எனக்குள் இருந்த நெருப்பின் அழுத்தம் அதிகமாயிற்று!, //
வெற்றி நிச்சயம்! இது வேத சத்தியம்!
அடடா! என்ன ஒரு உயர்ந்த லச்சியம்! அதுவும் ரெண்டு பேர்த்துக்கும்!
அடுத்த படியை நேரில் கண்டேன்.நல்லா இருக்கு!நல்லா வருவீங்க.வாழ்த்துக்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் வால்ஜி...
உணவகத் தொழில் சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்
//11 மணி வரை டோர் டெலிவரிக்கு ஆர்டர் செய்யலாம்!, //
டோர் டெலிவரிங்கற பேர்ல சுத்தி இருக்கற சேட்டு ஆண்ட்டிகள உதார் பண்லாம்னு பாக்குறியா!? உள்ளயே உடமாட்டானுக
//"அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்!"//
வயசுக்கு வந்துட்டீங்களா!?
//வேலையை விட்டு நிற்கும் பொழுது கேப்டனாக வெளியே வந்தேன், //
விருத கிரி! தி வால்!
//சாண்ட்வெஜ் பகுதியில் இது குறித்து நிச்சயம் எழுதுகின்றேன்..//
பொதுக்கூட்டத்துல தனிக்கூட்டம் போடுறார்யா இவரு!
உங்களுக்கும் நான் மினிஸ்டிரில எடம் பாக்கறேன்!
வாழ்த்துகள் அருண் ,
மிக நல்ல நிலை அடைய என் வாழ்த்துகள் வால்
வாழ்த்துக்கள் வாலு..
டோர் டெலிவரியும் நல்லாருக்கு :))
வருவோம் தல
அட!பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!
ஜனவரி 15 அல்லது 16 ஆம் தேதி குடும்பத்துடன் வருகிறோம். ஹோட்டலில் சர்வீஸ் செய்ய ஆவல்.
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்!
//எனக்குள் இருந்த நெருப்பின் அழுத்தம் அதிகமாயிற்று!//
அட பாருங்களேன்.. உங்களுக்குள்ளையும் ஒரு ஃப்ப்ப்ஃபயர் இருந்திருக்கு...
எனிவே.. மென்மேலும் சிறப்படைய நல்வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் வால்
வாழ்த்துக்கள் மாமூ!.
வாலுக்கு பிடித்தமான விஷயம் என்பதினால் பதிவும் சுவையாக வந்துள்ளது.. கவனித்தீரா?
கல்லா களகட்ட வாழ்த்துக்கள் ;)
மிக்க மகிழ்ச்சி
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Congrats thala....
Seekirame saappida varren.... :)
மேன் மேலும் வளர வாழ்த்துகள்!! :-)
Congrats!!!
You are setting an example for people like you who aspire to come up in life .
Keep it up!!!
வாழ்த்துக்கள் வால்பையன். நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
மேன் மேலும் வளர வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் நண்பா!
வாழ்த்துக்கள்ங்க வால்!! கோயமுத்தூரு வரும்போது கண்டிப்பா வருவேன் (ஏற்கனவே தேடித் தேடி வகை வகையா திங்கற ஆளு நாங்கெல்லாம்) :)
வாழ்த்துக்கள்
மேலும் வளர வாழ்த்துகள்.
congrats man.
மென் மேலும் வளர வாழ்த்துகள்.
நண்பரே!!! வாழ்த்துக்கள் ... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்டீப்பாக வருவோம்... இன்னும் அடுத்த படிக்கு விரைவில் கால் வைக்க வாழ்த்துக்கள்!!1
வாழ்த்துகள் வால்!
வாழ்த்துக்கள் அருண். தொலை பேச முயன்றேன். முடியவில்லை.
நல்வாழ்த்துகள்.
கதிர் எழுதிய ஒரு ரூபாய் மீல்ஸ் கொடுக்கும் திரு.வெங்கடராமன் போன்று நீங்களும் ஏழை எளியோருக்கு உதவ ஒரு வேண்டுகோள்.
மீதியாகிற உணவை குப்பையில் கொட்டாமல் பசியில் வாடும் ஏழை சிறார் அல்லது தனித்து வாழும் முதியோருக்கு கொடுத்து உதவுங்கள்.
செய்வோருக்கு என்றென்றும் நன்றியுடன்.
மெய்ப்பட்ட கனவு ஜெயப்பட வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாலு..
நண்பனின் முன்னேற்றம் கண்டு மிக்க மகிழ்ச்சி. வேறொரு விஷயத்துக்குக்காக திட்டணும், அது பொதுவில் வேணாம், போன் பண்றேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துக்கள்...
keep going :)
வாழ்த்துகள் மாப்ளே! ஒரு நாளைக்கு ஊருக்கு வந்தா ஒரு ‘கை’ பார்த்துருவோம்
வாழ்த்துக்கள் பாஸ்
உள்ள சரக்கடிக்க அலோ பண்ணுவீங்களா :-))
@ராஜன்
சூப்பர் கமண்டுங்க :-))
தொழில், பதிவுலக நட்பு இரண்டையும் நல்லா பராமரிக்க வாழ்த்துகிறேன்..
வாழ்த்துகள் வால்
வாழ்த்துக்கள் வால்
மேல்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!
மனம் நிறைந்த சந்தோஷமும் வாழ்த்தும் வாலு.நிறைய நாளாக் காணோம்ன்னு இருந்தேன்.
உங்க சுகம் பத்தி மேவிகிட்டயும் கேக்கமுடில.நல்லது உங்க நல்ல செய்தி கேட்டு.இங்கயும் சாப்பாடு அனுப்பு வையுங்க !
All the best Mr.vaal.. I will recommend ur restaurant to all my Kovai Friends.. I wish your hotel food should be tasty and spicy like your writing...
நம்ம ஊர்ல கடை தொறந்துருக்கீங்க..வாழ்த்துக்கள் வால். எனது நண்பர்களிடம் சொல்கிறேன். கோவை வரும்போது உங்கள் உணவகம் வந்து உண்டு, உங்களையும் சந்திக்க ஆசை. என் சகோதரர் அங்கு தான் இருக்கிறார். அவரிடமும் சொல்கிறேன்.
வாழ்த்துக்கள் தல. அடுத்த முறை கோவை வந்தால் உங்கள் உணவகத்திற்கு வருகிறேன்
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அருண். மேன் மேலும் வளர வாழ்த்துகள்
Best wishes Val!
வாழ்த்துக்கள் தோழரே ...
வாழ்த்துக்கள், நாங்கள் இந்தியா வந்தால் கட்டாயம் உங்களது உணவகத்திற்கு வருகிறோம்.
வாழ்த்துகள் சகா
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தோழரே ...
இதையும் படிச்சி பாருங்க
வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்
வாழ்த்துக்கள் வால் அண்ணா..!!!! ரொம்ப சந்தோஷமா இருக்கு...!!! :) :) :)
இதுக்காகவே உங்க ஊருக்கு வரேன்..!!!
hotel name and address please.......
வாழ்த்துக்கள்.மதுரையில் அடுத்த பிரான்ச் ஆரம்பியுங்கள். பசிக்குது.
வாழ்த்துக்கள் வால் கண்டிப்பாக குடும்பத்தோடு வர்றோம்....
வாழ்த்துகள் இன்னும் சில வருடங்களில் எல்லா ஊரிலும் உங்கள் கிளைகள் இருக்கும்.......
வாழ்த்துக்கள் அருண்,மென்மேலும் வளரவேண்டும்
வாழ்த்துக்கள் அருண்.
கோவை வந்தால், நிச்சயம் உணவகத்திற்கு வருகின்றேன். :)
வாழ்த்துக்கள்.
நடா சொன்னார். கும்மி சாப்பிட்டாரா?
வாழ்த்துகள் அருண்.
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அருண். மேன் மேலும் வளர வாழ்த்துகள்.
100 வது வாழ்த்து நான்தான். அதுக்கு உங்க ஹோட்டல்ல ஏதாச்சும் சிறப்பு விருந்து உண்டா?
ரொம்ப ரொம்ப சந்தோஷமான தருணம்.. வாழ்த்துக்கள் பாஸ்.. அடிச்சி தூள் பண்ணுங்க.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி...!!!
சீறும் சிறப்புமாய் வாழ்பையா!!! கண்டிப்பாய் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன். இன்னும் கொஞ்சம் புகைப்படங்களுடன் நிறைய விவரங்களுடன் எழுதியிருக்கலாமோ ??
வாழ்க.. வாழ்க தம்பி..
உன்னுடைய இந்தத் தொழில் நீடித்து சிறப்புடன் நடந்தேறி, வாழ்க்கையில் மென்மேலும் உயர என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!
வாழ்த்துக்கள் பாஸ். அந்த சினிமா வாய்ப்பு எனக்கு பாஸ் பண்ணுங்க பாஸ். :)
வாழ்த்துக்கள் தோழரே..............
புது முயற்சி மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் வால்! ரொம்ப நாளா படிச்சிட்டு வரேன் உங்க எழுத்த... நல்லா செய்றீங்க.
நன்றி
மூர்த்தி
மென்மேலும் வளர வாழ்த்துக்கள், வால்ஸ்!
சீக்கிரம் கை நனைக்கணுமே ;-)!
எனக்குப் பதிலா ஒரு நண்பனை அனுப்புரேன் இருங்க ...
மேலும் வளர வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி, வளருங்கள்
நட்புடன்,
மார்கண்டேயன்,
http://markandaysureshkumar.blogspot.com
மேன் மேலும் வளர வாழ்த்துகள்.
மேன் மேலும் வளர வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் வால் அண்ணே ...
நீங்க சொன்ன ஏரியாவுல என்னோட நண்பர்கள் இரண்டு மூணு பேர் தங்கி இருக்காங்க, அவங்க கிட்ட சொல்லுறேன்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வால்.
உணவகத்தின் பெயரை பதிவில் போட்டுவிடுங்கள். அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
வாழ்த்துகள்! அருண்!
அன்புடன் இனிய நண்பன்.
நல்லதந்தி!
வாழ்த்துக்கள் நண்பரே ,
நானும் கோவை தான் விரைவில் வருகிறேன் என் உறவினர் ,நண்பர்களுடன் கண்டிப்பாக சொல்கிறேன் .
நட்புடன்,
கோவை சக்தி
9894014145
வெற்றியை நோக்கியே உங்கள் பாதை இனி தொடர வாழ்த்துக்கள் சகோதரா..
வாழ்த்துகள் அருண். :))
Congrats and best wishes!
post the address of the restaurant and a picture for circulation.
Congrates....
(இனி ஒவ்வொரு ஞாயிறும் பொள்ளாச்சில இருந்து கெளம்பி, போய் ஓசி சாப்பாடு சாப்டுட்டு வரவேண்டியதுதான்)
வாழ்த்துக்கள் தல ...............அதான் கொஞ்ச நாளா பிளாக் பக்கம் காணோமா ??? இனி கோவை வந்தால் நம்ம ஹோட்டல்ல தான் சாப்பாடு
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
உங்க ஹோட்டல்ல சாப்பிடுவதற்காகவே கோவை வர வேண்டும்போல் உள்ளது.வாழ்த்துகள்!
நல்வாழ்த்துகள் தலை, கோவையில் சென்னை சரவண பவன் அண்ணாச்சி போல் (தொழிஎலும் உழைப்பிலும் மட்டும்) வளர்க
வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியதற்கு எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்
கோவை வரும்பொழுது கண்டிப்பாக வருகிறேன்
நல்வாழ்த்துகள் நண்பா. மிக்க மகிழ்ச்சி.
இனி கோவை வந்தால் நேராக உங்கள் உணவகத்திற்குத்தான் வருவேன்.
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள் அருண்.
ஒரு பதிவிலேயே கிட்டதட்ட 100 வாடிக்கையாளரை பெற்று விட்டீர்கள்.வாலுத்தனம் பதிவில் மட்டும் தான் இருக்கவேண்டும்.தொழிலில் இருக்கவே கூடாது.
மிக்க மகிழ்ச்சி... மென் மேலும் வளர வாழ்த்துகள் !!!!!!!!!!
வாழ்த்துக்கள்.
All the Best!
வாழ்த்துகள் வால்
தளத்திலும் பகிர்ந்து விட்டோம். உணவகத்தில் ஒரு விருந்து உண்டா!
வாழ்த்துக்கள் நண்பரே,
நீங்கள் நிச்சயம் வெல்வீர்.உங்களின் நண்பர்களின் இந்த வாழ்த்துமழையே அதற்கு சாட்சி.
வாழ்க.எல்லா வளமும் பெற்று....
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்
வாழ்த்துகள்.
உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்
புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்
நன்றி
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
100 வது வாழ்த்து நான்தான். அதுக்கு உங்க ஹோட்டல்ல ஏதாச்சும் சிறப்பு விருந்து உண்டா?//
ரமேஷ் அண்ணே உங்களுக்கு எங்க போனாலும் விருந்து கேட்குறதே வேலையா போச்சு
ஹிஹிஹி
வாழ்த்துக்கள் வாலு :::)))))))))))))
வெற்றிப் பயண வாழ்த்துக்கள் தல!
வாழ்த்துக்கள் தல! உங்க ஹோட்டல் அட்ரஸ் சொல்லுங்க. வால் பையனுக்காக ஒரு 'வால் பேப்பர்' வைத்துள்ளேன். அனுப்பி வைக்கிறேன். லேமினேட் செய்தது மக்கள் பார்வையில் வையுங்கள். (நான் விரும்பும் இடம் கல்லாவின் பின்னே!)
நான் சமைக்க தொடங்கி ஒரு வருடம் மற்றும் ஒரு வாரம் முடியும் இன்று நீங்கள் இத்தகவலை வெளியிட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. மற்ற எல்லாத் தொழிலை விடவும் உணவகத் தொழில் சற்று மேன்மையானது என்பதும் ,கல்வியும் மருத்துவமும் இதற்குப் பின் என்பதும் என் கருத்து.எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு இதை கண்டிப்பாக சொல்கிறேன்.எல்லாம் வல்ல உழைப்பு உங்களை மேன்மேலும் சிறப்படையச் செய்யட்டும்.
All the very best!!!
வாழ்த்துக்கள்ங்க வால் பையன் :)
வாழ்த்துகள் அருண்.
வாழ்த்துக்கள் நண்பரே. Pray for your success :)
அடுத்த படிஐ அடைய வாழ்த்துக்கள்
எவளவு செய்யுறோம் இதை செய்ய மாட்டோமா....
என் பேஸ்புக்குல போட்டாச்சு...
ஆனா ஒரு கண்டிஷன் மொக்கையன் செல்வாவுக்கு வடை குடுக்க கூடாது....:]
///வாரத்தில் மூன்று முறையாவது நானும் எனது பாஸ் கார்த்திக்கும் நல்ல உணவகங்கள் தேடி சாப்பிட செல்வோம். எவையெல்லாம் மிகுதியான சுவையுடன் இருக்கிறதோ அவையெல்லாம் எனது உணவகத்தில் நிச்சயமாக இடம்பெற வேண்டும் என குறித்து கொள்வேன்!///
நீங்க சீக்கிரம் முன்னேறி விடுவிங்க...வாழ்த்துகள். நான் படித்தது Location not importat Atention very important
சாப்பிட வருபவர்களுக்கு நாவின் ருசியை ஒருமுறை நீங்கள் காட்டிவிட்டிர்கள் என்றால் அவர்கள் எங்கே இருந்தாலும் தேடிக்கொண்டு வருவார்கள். விலையைவிட ருசிதான் முக்கியம். இன்று சென்னையில் இருக்கும் சரவணாபவன் விலை அதிகம் இருந்தாலும் உணவின் தரத்திலும் ருசியிலும் அவர்களுக்கு சமாதானமும் இருக்காது. அங்கு வேலை செயும் ஆட்களும் முதலாளிமேல் மிகவும் பற்றுயுள்ளவர்கள். அதனால்தான் அந்த முதலாளியின் தனிப்பட்ட வாழ்வு சறுக்கல் இருந்தாலும் தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப்பட்டது. அதுபோல் நீங்கள் தொழிலாளி, முதலாளி என்ற பாகுபாடு இல்லாமல் நட்புடன் பழகுங்கள். நன்றி...
என் முகநூலிலும் பதிவிடுகிறேன்.
http://www.facebook.com/?ref=home#!/rkguru
My blog:
http://rkguru.blogspot.com/
வாழ்த்துக்கள் பாஸ்
அன்பின் தோழர்களே,Purva's fine Dine என்ற ஒரு பக்கம் முகநூலில் துவக்கி இருக்கிறோம், "அது நம்ம ஹோட்டல் நம்ம வலைபக்கம்" . ஆதரவு தாரீர் :-)
வாழ்த்துகள் வால்
சொந்தமாக தொழில் நடத்த வேண்டும் என்பது பலருக்கும் கனவு. மிக மிக சிலரே ஆயிரத்தில் ஒருவர் என்று கூட சொல்லலாம், அதை விடாமுயற்சியுடன் நனவாக்குகிறார்கள். அதற்கு முழு உழைப்பும் தன்னம்பிக்கையும் தேவைப்படும்.
நீங்கள் அதை சாத்தியமாக்கி இருக்கிறீர்கள். நீங்களும் உங்கள் உடன் இணைந்திருக்கும் நன்பர்களும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வால்பையன்.
சென்னைக்கு சரவண பவன், அஞ்சப்பர், கோவைக்கு அன்னபூர்ணா/கெளரிசங்கர் வரிசையில் பூர்வாசும் விரைவில் சேரட்டும். இன்னும் ஆறேழு மாதங்களில் அடுத்த கிளை திறப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் வால் அண்ணே :)
வாழ்த்துக்கள் வால் அண்ணே :)
Great! congrats Vaal.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ரொம்ப சந்தோசம் தலைவா... நாங்க எல்லோரும் உங்க பக்கம் இருக்கோம். கலக்குங்க....
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
விரைவில் குடும்பத்துடன் வருகிறேன்.
நாம போன்ல பேசுன மேட்டர் என்னாச்சு?
வாழ்த்துக்கள் அருண். நான் முதலில் ராஜன் இது பற்றி பதிவு எழுதி இருந்த போது நான் அவர் உங்களை கலாய்க்க எழுதி இருக்கிறார் என்று நினைத்தேன் :-)
தரமான உணவு வகைகளை வழங்கி அனைவரின் பாராட்டுதலை பெற வாழ்த்துக்கள். ஹோட்டல் தொழில் லாபகரமான தொழில் சுவையாக கொடுத்தீர்கள் என்றால்.... இதை நான் 14 வருடம் ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பவன் என்ற முறையில் கூறுகிறேன்.
வாடிக்கையாளர்களை மதிப்பதும் அன்புடன் நடந்து கொள்வதும்.. சுவையில் மாற்றம் இல்லாமல் இருப்பதும் மிக முக்கியமான ஒரு விசயமாகும்.
வாழ்த்துக்கள் நண்பரே!. உங்கள் தொழில் பெருக்கும். சிறப்பான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவீர்கள்.
உங்கள் ஹோட்டலுக்கு வரதான் ஆசை. ஆனால் சிலோனுல பிறந்துட்டேனே!
இந்தியா வந்தால் உங்கள் ஹோட்டலுக்கு வருவேன். தனியறை வசதி உண்டா நண்பரே!
அன்பின் வால் - மேன்மேலும் துவங்கிய தொழில் பல கிளைகளுடன் தழைத்தோங்க நல்வாழ்த்துகள். ஆமா வாரத்துல மூணு நாள் பாஸூம் நீயும் வெளிலே சாப்பிடுவீங்களா ? வூட்ல சாப்டறது இல்லையா - ஆமா அதென்ன பாஸு இப்ப வாலப் பாஸூன்னு அழைசு மறுமொழி போடறாரு. ம்ம்ம்ம்ம் - விரைவினில் வந்து உண்டு மகிழ்கிறேன்.
வாழ்த்துகள் வால்! :-)அடுத்தமுறை நாங்கள் கோவை வரும்போது பூர்வாஸில்தான் சாப்பாடு...
அடங்கொன்னியா!அப்ப இனி நீங்களும் தொழிலதிபரா?
வாழ்த்துக்கள் வால்!
அன்புமிக்க வால்பையன் அவர்களுக்கு
அநேக ஆசிகள். (நான் ஆசி வழங்கலாம். நான் 80.) தங்கள் முயற்சி பெரு வெற்றிபெற ஆண்டவன் அருள்வானாக!
வால்தனத்தை முற்றிலும் விட்டுவிட்டுத் தொழிலில் முழுக்கவனம் செலுத்துங்கள்.
ஒரு முதுகிழவன்
குடும்பத்தோட கோய்முத்தூரு வந்ததும் மொத போனி உங்க கடதான் அருண்...
வாழ்க வளமுடன்..!
அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்!
எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை
வால்பையன் வளரும் வேகம் !
இப்படி தலைப்பு கொடுத்து மறுபதிப்பு தர விருப்பம்
http://seasonsnidur.wordpress.com/2010/12/29/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/
கண்டிப்பாக அடுத்தமுறை ஊருக்கு வரும்போது உங்கள் விடுதியில் நாட்டுகோழி சாப்பிடுகிறேன்.
Post a Comment