”நாங்கள் கொள்கைக்காக உயிரைக்கூட விடுவோம்” என உதார் விடும் அளவுக்கு எங்கள் மூளை மழுங்கிவிட வில்லை(உளவியல் ரீதியாக அப்படி தான் சொல்றாங்க) , ஒரே மகளின் திருமணத்தை தன் ஆசைப்படி நடந்த ஆசைப்பட்ட ஒரு மாற்றுதிறனாளி(இதை சொல்ல வேண்டாம் என அவர்கள் கேட்டு கொண்டார்கள்- ஸாரி பங்கு) தந்தையின் சந்தோசத்திற்காக தன் விருப்பத்திற்கு மாறாக, கொள்கைக்கு மாறாக அந்த செயலை செய்ய ஒப்பு கொண்டார்!, இதை அவர் ரேவதிக்காக செய்திருந்தால் கூட நாங்களே முரண்பட்டிருப்போம், அட்லீஸ்ட் பார்பனிய மந்திரத்துக்கு!
நண்பர்களிடமேக்கூட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மனிதத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை, தனிபட்ட முறையில் அனைத்து நண்பர்களிடமும் ஒரே மாதிரி தான் நடந்து வருகிறோம்!
சூழ்நிலையை புரிந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி!
உண்மைத்தமிழன்,மணமக்கள், லக்கிலுக்,சிரிப்புபோலிஸ் ரமேஷ்,அப்துல்லா, ஜீவன், மங்குணிஅமைச்சர்.
(இந்த போட்டோ எடுத்தது நானு, எல்லாரும் பிரேமுக்குள் சிக்காததால் ரெண்டா எடுத்தேன்)
பலாபட்டறை சங்கர், என் தம்பி பிலால்(ப்ளாக்கர் அல்ல), ஜாக்கிசேகர், உண்மைத்தமிழன், மணமக்கள், லக்குலுக்.
நான், டாக்டர் ருத்ரன், மணமக்கள், டோண்டு
நான், டாக்டர் ருத்ரன், மணமக்கள், டோண்டு
மணமக்கள், கேபிள் சங்கர், பக்கத்துல இருக்குறவர் பெயர் தெரியல, அவர் ப்ளாக்கரா? (கே.ஆர்.பி.செந்தில்-நான் இன்னும் நேரில் பார்த்ததில்லை)
மாப்பிள்ளையை கடைசியா சிரிக்க வச்சு ஒரு போட்டோ :-)
79 வாங்கிகட்டி கொண்டது:
Vazhthukkal.
Me the first
//மணமக்கள், கேபிள் சங்கர், பக்கத்துல இருக்குறவர் பெயர் தெரியல, அவர் ப்ளாக்கரா?//
ஆமாங்க. அவர்தான் கே.ஆர்.பி செந்தில். நீங்க கூட கொலை வெறியோட தேடுநீங்களே அதே செந்தில்தான்(அப்பாடா கோர்த்து விட்டாச்சு)
krpsenthil.blogspot.com
Nice
முகம் தெரியாத பல ப்ளாக்கர்களை அடையாளம் காட்டிட்டீங்க..
வாழ்த்துக்கள்
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் :)
//
இந்திரா said...
முகம் தெரியாத பல ப்ளாக்கர்களை அடையாளம் காட்டிட்டீங்க..//
அய்யய்யோ நான் எதுவும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மனிச்சுக்கோங்க. என் மீது எதுவும் கொலை வெறி இல்லியே. நான் நீங்க சொன்ன மாதிரியே சரக்கு அடிக்க ஆரமிச்சிட்டேன்
பலாபட்டறை கமல் மாதிரி கெட்டப் மாத்திகிட்டே இருக்கார்..
//உண்மைத்தமிழம்//? :)
சிரிப்பு போலீஸ்.. அப்போ நீங்க யூத்தா? (எப்போமே யூத்னு பின்னூட்டம் போடாதீங்க)
அண்ணே வணக்கம், அன்றும் மறுநாளும் உங்களை சந்திக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.. தவிர்க்க முடியாத அலுவலக வேலை.. தீபாவளிக்கு நீங்கள் சென்னை வருவதாக விந்தைமனிதன் சொன்னார். அப்போது கண்டிப்பாக சந்திக்கிறேன்...
//பிரசன்னா said... பலாபட்டறை கமல் மாதிரி கெட்டப் மாத்திகிட்டே இருக்கார்..//
இத அவர்கிட்டயே கேட்டேன். ஊர் புல்லா கடனாம். அதான் மாறு வேசத்துல சுத்திக்கிட்டு இருக்காரு.
//பிரசன்னா said...
சிரிப்பு போலீஸ்.. அப்போ நீங்க யூத்தா? (எப்போமே யூத்னு பின்னூட்டம் போடாதீங்க)//
ஹிஹி என்னை ரொம்ப புகழாதீங்க. எனக்கு வெக்க வெக்கமா வருது...
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
//கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே வணக்கம், அன்றும் மறுநாளும் உங்களை சந்திக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.. தவிர்க்க முடியாத அலுவலக வேலை.. தீபாவளிக்கு நீங்கள் சென்னை வருவதாக விந்தைமனிதன் சொன்னார். அப்போது கண்டிப்பாக சந்திக்கிறேன்...//
அப்பா உங்க ரெண்டுபேருக்கும் இடைல சண்டை நடக்காதா?
சண்டையை வேடிக்கை பார்ப்போர் சங்கம்.
@ அருண் அண்ணா.
நான் பாட்டுக்கு உங்க ப்ளாக் ல மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன். சாரி.
//அருண் அண்ணா.
நான் பாட்டுக்கு உங்க ப்ளாக் ல மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன். சாரி. //
மொதல்ல அண்ணாவை கட் பண்ணுங்க, வால்னு அழைத்தால் போதும்!
நாங்க என்னமோ ரொம்ப சீரியஸான ஆள் மாதிரி மொக்கை போடுறதுக்கு ஸாரி கேக்குறிங்களே, நீங்க கண்டினியூ பண்ணுங்க மொக்கையை, அப்படியே என் நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க, உங்க நம்பர் சேவ் பண்ண மறந்துட்டேன்!
9994500540
"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 1"
சுயமரியாதைத் திருமணம் என்பதற்கு அவரவர் விருப்பம்போல் விளக்கம் கொடுத்து - விநாயகர் படம் இருப்பதாலேயே அது சுயமரியாதைத் திருமணம் அல்ல என்பது போல பேசுகின்றனர். ஆனால், சுயமரியாதைத் திருமணத்திற்கு அதை விட விரிவான பொருள் உண்டு.
சுயமரியாதைத் திருமணம் என்கிற பதத்தை தமிழ்நாட்டில் நிலைநாட்டிய பெரியாரின் கருத்தைப் பார்ப்போம்.
தந்தை பெரியாரின் விளக்கம் 1: ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
""திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச்செய்யச் செய்துகொள்ளும் காரியமேயாகும். இதைச் சிலர் - அதாவது பழைய முறைக்காரர் சடங்கு என்கிறார்கள்; புதிய முறைக்காரர் ஒப்பந்தம் என்கிறார்கள்.
சடங்கு என்று சொல்லுகின்றவர்கள் உண்மையிலேயே சடங்காகவே கருதிக் காரியங்களில் இலட்சியமில்லாமல் நடத்துகிறார்கள். அதாவது, கலியாணத்தில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் எவ்வித உரிமையும் இல்லை....மாப்பிள்ளை பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான்; பெண் மாப்பிள்ளையைப் பார்த்திருக்க மாட்டாள்....
ஆனால், சுயமரியாதைத் திருமணம் என்பது அப்படி அல்ல மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து, தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும், அர்த்தமும் பொருத்தமும் அவசியம் இல்லாமல் வெறும் சடங்கு, பழக்க வழக்கம் என்பதற்காக மாத்திரம் ஒன்றையும் செய்யக்கூடாது என்பதுமேயாகும்.""
தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935
எனவே, "ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்" என்கிற பெரியாரின் அளவுகோள் படி இங்கே விவாதிக்கப்படும் திருமணம் சுயமரியாதைத் திருமணமே ஆகும்.
//ரமேஷ்-ரொம்ப நல்லவன் (சத்தியமா)..
அய்யய்யோ நான் எதுவும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மனிச்சுக்கோங்க. //
அதெல்லாம் முடியாது.. முதல் பலி நீங்க தான்..
மாட்னடா மவனே..
//இந்திரா said...
//ரமேஷ்-ரொம்ப நல்லவன் (சத்தியமா)..
அய்யய்யோ நான் எதுவும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மனிச்சுக்கோங்க. //
அதெல்லாம் முடியாது.. முதல் பலி நீங்க தான்..
மாட்னடா மவனே..//
போட்டோ தான். பரவாஇல்லை. நான் சென்னைல இருக்குறதுதான் உங்களுக்கு தெரியாதே. நாங்கெல்லாம் எவ்ளோ பெரிய மூளைக்காரங்க. எங்ககிட்டயேவா?
//இந்திரா said...
//ரமேஷ்-ரொம்ப நல்லவன் (சத்தியமா)..
அய்யய்யோ நான் எதுவும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மனிச்சுக்கோங்க. //
அதெல்லாம் முடியாது.. முதல் பலி நீங்க தான்..
மாட்னடா மவனே..//
@ வால்
போட்டோ-வில் உள்ள பதிவர்களின் பெயரை Shuffle(Spelling சரியா) செய்து போடுங்கள். இப்ப என்ன பண்ணுவீங்க ? இப்ப என்ன பண்ணுவீங்க ?
உனக்கு ரூட் கிளீயர் ஆயிடுச்சு தல .... அடுத்து உனக்கு எப்ப கல்யாணம் ????
இப்படிக்கு
முடிந்த வரை மூன்றாம் உலகப்போரை மூட்டி விடுவோர் சங்கம்
மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
//மங்குனி அமைசர் said...
உனக்கு ரூட் கிளீயர் ஆயிடுச்சு தல .... அடுத்து உனக்கு எப்ப கல்யாணம் ????
இப்படிக்கு
முடிந்த வரை மூன்றாம் உலகப்போரை மூட்டி விடுவோர் சங்கம்//
யோவ் இந்த கமென்ட் யாருக்கு? தெளிவா சொல்லு
வால்பையன் said...
மொதல்ல அண்ணாவை கட் பண்ணுங்க, வால்னு அழைத்தால் போதும்!/////
ஹ.ஹி.ஹி..... வயச குறைக்க டிறைபன்றாராமாமா??? இனி எல்லோரானும் "தம்பி வால்பையன்" என்று அன்போடு அழைக்கப் படுவாய்
//மங்குனி அமைசர் said...
வால்பையன் said...
மொதல்ல அண்ணாவை கட் பண்ணுங்க, வால்னு அழைத்தால் போதும்!/////
ஹ.ஹி.ஹி..... வயச குறைக்க டிறைபன்றாராமாமா??? இனி எல்லோரானும் "தம்பி வால்பையன்" என்று அன்போடு அழைக்கப் படுவாய்//
hehe. public public
இந்திரா said...
//ரமேஷ்-ரொம்ப நல்லவன் (சத்தியமா)..
அய்யய்யோ நான் எதுவும் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மனிச்சுக்கோங்க. //
அதெல்லாம் முடியாது.. முதல் பலி நீங்க தான்..
மாட்னடா மவனே../////
இம்.... விடாந்திங்க மேடம் , இம் .. கரக்ட்டா கழுத்துல , இம் கரக்ட்டு அதே இடந்தான் .....நச்சுன்னு ஒரே போடு ....இம் ....ரைட்டு போடுங்க .......
...............................
ஹா.ஹா.ஹா....... ஒழிந்தான் விரோதி
ரொம்ப தேங்க்ஸ் மேடம்
//மங்குனி அமைசர் said...
வால்பையன் said...
//
எவ்ளோதான் 90 போட்டாலும் தெளிவா அசால்டா 25 போட்ட மங்குனி வாழ்க.
//மங்குனி அமைசர் said...
இம்.... விடாந்திங்க மேடம் , இம் .. கரக்ட்டா கழுத்துல , இம் கரக்ட்டு அதே இடந்தான் .....நச்சுன்னு ஒரே போடு ....இம் ....ரைட்டு போடுங்க .......
...............................
ஹா.ஹா.ஹா....... ஒழிந்தான் விரோதி
ரொம்ப தேங்க்ஸ் மேடம்//
அடப் பாவி . இவ்ளோ நாள் துரோகியை கூடவே வச்சிருந்திருக்கேனே
//மங்குனி அமைச்சர்..
இம்.... விடாந்திங்க மேடம் , இம் .. கரக்ட்டா கழுத்துல , இம் கரக்ட்டு அதே இடந்தான் .....நச்சுன்னு ஒரே போடு ....இம் ....ரைட்டு போடுங்க .......
...............................
ஹா.ஹா.ஹா....... ஒழிந்தான் விரோதி
ரொம்ப தேங்க்ஸ் மேடம்//
ம்ம் உங்க ப்ளான் படியே பண்ணிடலாம்..
அடுத்து உங்க போட்டோ இருக்குதுனு நெனக்கிறேன்..
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! படங்கள் சூப்பர்!
//
இந்திரா said...
//மங்குனி அமைச்சர்..
இம்.... விடாந்திங்க மேடம் , இம் .. கரக்ட்டா கழுத்துல , இம் கரக்ட்டு அதே இடந்தான் .....நச்சுன்னு ஒரே போடு ....இம் ....ரைட்டு போடுங்க .......
...............................
ஹா.ஹா.ஹா....... ஒழிந்தான் விரோதி
ரொம்ப தேங்க்ஸ் மேடம்//
ம்ம் உங்க ப்ளான் படியே பண்ணிடலாம்..
அடுத்து உங்க போட்டோ இருக்குதுனு நெனக்கிறேன்..//
அசிங்கப்பட்டான் அமைச்சர்
"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 2"
தந்தை பெரியாரின் விளக்கம் 2: வீண் செலவுகள் கூடாது:
""திருமணம் சம்பந்தமாகச் செலவு, மெனக்கேடு, வீண் கஷ்ட நஷ்டம் ஆகியவைப்பற்றி பழைய முறைக் கலியாணங்களில் இலட்சியமே செய்யப்படுவதில்லை. ஆடம்பரத்துக்காகவே வீண் செலவுகளைத் தகுதிக்கதிகமாகக் கடன்வாங்கியாவது செய்யப்பட்டு வருகிறது.
திருமணத்திற்காக மூன்று நாள், நான்கு நாள், ஏழு நாள் கூட மெனக்கெட்டு வெளியூர் உறவினர்களையும் தருவித்து - மெனக்கெடச் செய்து, அய்ந்துநாள் விருந்து, பத்து நாள் விருந்து என்று சாப்பாட்டுச் செலவும்; பந்தல், மேளம், சங்கீதம், ஊர்வலம், வாணம் என்பதாக வீண்காரியங்களும் - குடிகாரர்கள் குடித்த போதையில் நடப்பதுபோல் - கலியாண போதையில் சிக்கி பணம், நேரம், கழ்டம் ஆகியவை தாறுமாறாகச் செலவாக்கப்பட்டு வருகின்றன.
இரண்டு மூன்று நாள்களுக்காக - சிலர் பார்த்துப் புகழ்வதற்காக என்று செய்யப்படும் இப்படிப்பட்ட தாறுமாறான ஆடம்பரச் செலவுகள் கலியாணத் தம்பதிகள் தலையிலோ அல்லது குடும்பத்தார் தலையிலோ விழுந்து, கலியாணக் கடன்களால் வெகுநாளைக்கு அவதிப்பட வேண்டியிருப்பதால் - சில குடும்பங்கள் கலியாணச் செலவாலேயே 'பாப்பர்' ஆகி, மீளாக் கடன்காரர்களாகக் கூட ஆகவேண்டியதாகி விடுகின்றன.
இப்படிப்பட்ட கொடுமைகளும் முட்டாள்தனமான காரியங்களும் கூடாது என்பதுதான் சுயமரியாதைக் கலியாணம் என்பதன் முக்கிய அம்சமாகும்""
தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935
எனவே, "திருமணத்தில் விநாயகர் இருக்கிறாரா? இல்லையா?" என்பதைவிட திருமணத்திற்காக அளவுக்கதிகமாக செலவு செய்யப்படாமல் - "சிக்கனமாக நடத்தப்படுகிறாதா?" என்பதுதான் சுயமரியாதைத் திருமணம் என்பதற்கு தந்தை பெரியாரின் மிகமுக்கிய அளவுகோள் ஆகும்.
மணமக்களுக்கு வாழ்த்துகள்..
மற்ற நண்பர்களையும் பார்த்தாச்சு..கடைசி படம் மணமகளின் சிரிப்பு கொள்ளை அழகு...
சுட்டியை சொடுக்கி படிக்கவும்
நாத்திக சமூகத்தில் ஓர் புரட்சி திருமணம்
.....
தல,
விந்தை மனிதனும், தஞ்சாவூரானும் இருக்கும் போட்டோவை போடவில்லை.
----
அந்த வரியைத் தவிர்த்திருக்கலாம்.
"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 3"
தந்தை பெரியாரின் விளக்கம் 3: திருமணம் தெய்வீகமானது அல்ல.
""கலியாண விஷயத்தில் மணமக்களின் வாழ்க்கைச் சம்பந்தம் முக்கியமானது - இலட்சியமானது அல்லவென்றும், அதில் ஏதோ ஒரு தெய்வீகச் சம்பந்தம் இருக்கிறதென்றும்; அதுவேதான் திருமணத்தின் இலட்சியமென்றும், ஆதலால் அப்பெண்ணும் மாப்பிள்ளையும் அத் தெய்வீகச் சம்பந்தத்திற்காக ஒருவர் குற்றங்களையும் அநீதிகளையும் மற்றவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதிலும் சிறப்பாக மாப்பிள்ளை செய்யும் கொடுமைகளையும் அநீதியையும் பெண் பொறுத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் மாப்பிள்ளைக்குப் பெண் அடிமையாய், பக்தியாய் இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், சுயமரியாதைக் கலியாணம் என்பது அப்படியில்லை. திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பத்தம் என்றும், அந்த ஒப்பந்தவிஷயம் பெண்ணையும் ஆணையும் பொறுத்ததே ஒழிய வேறு எவ்விதத் தெய்வீகத்திற்கோ அல்லது எவ்விதக் கட்டுப்பாட்டிற்கோ சம்பந்தப்பட்டதில்லை என்பதுமே ஆகும்""
தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935
எனவே, "திருமணம் தெய்வீகமானது அல்ல" என்கிற பெரியாரின் அளவுகோள் படி இங்கே விவாதிக்கப்படும் திருமணம் சுயமரியாதைத் திருமணமே ஆகும்.
நேரில் வந்து வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
இங்கும், மற்ற இடங்களிலும் பின்னூட்டமிட்டு, பதிவுகளிட்டு வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றிகள்.
நாங்கள் பின்னூட்டமிட விரும்பாத தளங்கள் சிலவற்றில், ஆரோக்கியமாகக் கருத்துக்களை எடுத்து வைத்த நண்பர் அருளுக்கு நன்றி.
"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 4"
தந்தை பெரியாரின் விளக்கம் 4: வாழ்விலும் சொத்திலும் சமபங்கு உரிமை உண்டு.
""பழையமுறைக் கலியாணப்படி பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை; வாழ்க்கையில் சரிபங்கு ஆதிக்க உரிமை இல்லை.
சுயமரியாதைக் கலியாணத்தில் சொத்திலும் வாழ்க்கை ஆதிக்கத்திலும் பெண்ணுக்கு ஆணைப்போலவே சரிபங்கு உரிமை இருக்கிறது என்பதுடன், இவைகளே கலியாண ஒப்பந்தத்தின் சரத்துக்களாகும்""
தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935
வாழ்த்துகள்..:-))))
"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 5"
தந்தை பெரியாரின் விளக்கம் 5: திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கே சுதந்திரம்:
""கலியாணம் செய்துகொள்ளும் விஷயத்தில் தம்பதிகளைவிட மூன்றாவதானவர்களுக்கே சகல சுதந்திரமும் இருந்து வருகிறாது. செய்து வைப்பதற்கு ஒரு புரோகிதன் வேண்டும். இன்னின்ன மாதிரி செய் என்பதற்குப் பெற்றொர்கள், உறவினர்கள் வேண்டும். இவர்கள் சொன்னபடியெல்லாம் தம்பதிகள் நடக்க வேண்டும்.
சுயமரியாதைக் கலியாணம் என்பதில் இந்த முறையில்லை. மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களை ஒருவருக்கொருவர் சொல்லி சம்மதித்ததற்கு அறிகுறியாக மாலையிட்டுக்கொள்வது என்பதுடன் முடிவு பெற்றுவிடுகிறது.""
தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935
சுயமரியாதைத் திருமணம் குறித்து தந்தை பெரியார் பலநேரங்களில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றில் முக்கியமான 5 கருத்துகளை நான் எனது பின்னூட்டங்களில் குறிப்பிட்டுள்ளேன். அவை:
1. ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
2. வீண் செலவுகள் கூடாது.
3. திருமணம் தெய்வீகமானது அல்ல.
4. வாழ்விலும் சொத்திலும் சமபங்கு உரிமை உண்டு.
5. திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கே சுதந்திரம்.
இங்கே விவாதிக்கப்படும் திருமணம் பெரியாரின் அளவுகோள்களில், முதல் 4 அளவுகோள்களையும் நிறைவு செய்வதாகவே நான் நினைக்கிறேன். 5 ஆவது விஷயத்தில் மட்டும் பெண்வீட்டாருக்காக விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு குற்றம் அல்ல. "மனிதம்" என்றே கருதப்பட வேண்டும்.
(பல சுயமரியாதைத் திருமணங்களில் 'அய்யரில்லாமல் திருமணம்' என்கிற ஒருவிஷயத்தை மட்டும் நிறைவேற்றி - மற்றவற்றை வசதியாக விட்டுவிடுகிறார்கள்.)
எப்படிப் பார்த்தாலும் 100 க்கு 80 மதிப்பெண் பாஸ் தானே.
""தோழர்களே! நான் யாரையும் இம்மாதிரிதான் திருமணம் செய்யவேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை. சமாதானமாகத்தான் என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருகிறேன். உங்களுக்குள்ள அறிவைக்கொண்டு ஆலோசித்துப் பாருங்கள்.""
தந்தை பெரியார், விடுதலை 24.10.1948
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
////கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே வணக்கம், அன்றும் மறுநாளும் உங்களை சந்திக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.. தவிர்க்க முடியாத அலுவலக வேலை.. தீபாவளிக்கு நீங்கள் சென்னை வருவதாக விந்தைமனிதன் சொன்னார். அப்போது கண்டிப்பாக சந்திக்கிறேன்...//
அப்பா உங்க ரெண்டுபேருக்கும் இடைல சண்டை நடக்காதா?
சண்டையை வேடிக்கை பார்ப்போர் சங்கம்.//
சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம்.
அற்பவாதம் என்ற சொல்லுக்கு மிகச் சரியான விளக்கமாக அமைந்திருக்கும் இக்கட்டுரையை அற்பவாத சேற்றில் மூழ்கி முத்தெடுக்க விரும்புபவர்கள் அவசியம் படியுங்கள். கொள்கையை விட மாற்றுத்திறன் உடையவரின் கொள்கை உயர்ந்த ஒன்றாகத்தானே இருக்க முடியும். (என்னது வெள்ளையா இருக்கவன்லாம் பொய் சொல்ல மாட்டானா).
இன்றைக்கு ஐயரு எல்லாம் பாவப்பட்ட ஜென்மங்க•.. ஏம்பா அவிங்க பேர சொல்லிட்டு பார்ப்பனீயம் அது இதுன்னுட்டு கிளம்பிட்டீங்க என்றும் சொல்ல முடியும். கொள்கைக்காக உயிரக் கூட தர வேண்டாம். அப்படி தந்த எல்லாரும்தான் கேணப்பசங்க என்று கூட உளவியல் சொல்லக்கூடும். (அப்போ பகத்சிங் கூட ஒரு கேணப்பய ஆயிடுவாரு, காந்தி நல்லவரு ஆயிருவாரு)எந்த சமூகத்தின் எந்த வர்க்கத்தின் உளவியல் என்று சொல்லும் போதுதான் அதன் உண்மையான முகம் கூட வெளிப்படும்.
மனிதம் முக்கியம். பாரதி கூட அப்படித்தான். வெள்ளையரை எதிர்த்து பாடல் எழுதுவாரு. கட்டுரை எழுதுவாரு. கைதாவோம் என்பதற்காக மன்னிப்பு கடிதம் எழுதுவாரு. இத விமர்சிப்பவர்களுக்கு மனிதம் இருக்காது இல்லியா. அவரு கவிதய படிச்சிட்டு போராட போயி குடும்பத்த தவிக்க விட்டுப் போனா பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மேல் யார் மனிதத்தை காட்டுவது.
சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு ஒற்றுமை வேண்டும் என்பது பாமர ஜனங்களுக்கு கூட பொருந்தும் போது பகுத்தறிவு பேசும் நபர்களுக்கும் அது பொருந்த வேண்டும்தானே..ஊருக்கு மாத்திரம்தான் உபதேசமா
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் !!
கேள்விகுறியில் வந்திருக்கும் அனானி,
ராஜன் பார்பனீயத்தை அதரித்தாரா அல்லது ஏற்றுகொண்டாரா என்பதற்கு மட்டுமே இங்கே விளக்கம் அளிக்கப்படும்!
உம் உளரல்களுக்கு அல்ல!
உன் கொள்கை கத்திரிக்காயை நல்ல கடைதெருவாய் பார்த்து விற்க செல்லலாம்!
ராஜன் ரேவதி தம்பதியருக்கு
மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
கருத்து வேற்றுமைகள், கொள்கை குழப்பங்கள் இந்த நல் நிகழ்வில் தேவையற்றது. விவாதிக்க நேரமுண்டு.
கல்யாண ஆல்பம் பார்த்துவிட்டேன். :)
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
//ஜெயந்தி said...
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
////கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே வணக்கம், அன்றும் மறுநாளும் உங்களை சந்திக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.. தவிர்க்க முடியாத அலுவலக வேலை.. தீபாவளிக்கு நீங்கள் சென்னை வருவதாக விந்தைமனிதன் சொன்னார். அப்போது கண்டிப்பாக சந்திக்கிறேன்...//
அப்பா உங்க ரெண்டுபேருக்கும் இடைல சண்டை நடக்காதா?
சண்டையை வேடிக்கை பார்ப்போர் சங்கம்.//
சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம்.//
வேணாம்க இங்க பயங்கர கலவரமா இருக்கு. நாம வேற எங்கயாச்சும் போய் சண்டைய வேடிக்கை பாக்கலாம்
50 முதலும் நானே 50 ம் நானே. இதுக்கு ஏதாச்சும் தருவாங்களா?
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.!
அப்புறம் சில படங்கள் நம்ம போலீசுகாரர் போட்டுட்டார் .!!
கடைசி இரண்டு மட்டும் புதுசு ..!!
மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.அருமையாக தொகுத்துள்ள வாலுக்கு நன்றி
நான் நீங்க சொன்ன மாதிரியே சரக்கு அடிக்க ஆரமிச்சிட்டேன்//
அலப்பறைக்கு அளவே இல்லையா
நான் நீங்க சொன்ன மாதிரியே சரக்கு அடிக்க ஆரமிச்சிட்டேன்//
அலப்பறைக்கு அளவே இல்லையா
மணமக்கள், கேபிள் சங்கர், பக்கத்துல இருக்குறவர் பெயர் தெரியல, அவர் ப்ளாக்கரா?//
தெரியாமத்தான் கேட்டாரா
முகம் தெரியாத பல ப்ளாக்கர்களை அடையாளம் காட்டிட்டீங்க..//
ஆமாம்..இது போன்ர பதிவுகளில் தான் பலரை தெரிந்து கொள்ள முடிகிறது
wishes,
thanks for the album
மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்
அன்பின் வால்,
இந்த இடத்தில் இக்கேள்வியை கேட்பதற்கு மன்னிக்கவும்.நான் இறை மறுப்பலனும் இல்லை அதே நேரத்தில் கோவில் கோவிலாய் அலைபவனும் இல்லை.நான் உங்கள் allinall பதிவை விடாமல் வாசிப்பவன்.அதன் நகைச்சுவையும் எள்ளலும் முகத்தில் அறையும் உண்மையும் எனக்கு பிடித்த ஒன்று.
என்னுடைய கேள்வி இதுதான்.ராஜன் அவர்களின் மாமனாருக்காக அவர் தன்னுடைய கொள்கையை தளர்த்தி traditional marriage செய்தார்.காரணம் அவர் மாமனார் மனம் புன்படகூடதேன. இதே போன்ற நம்பிக்கை வாதிகளின் நாம்பிக்கயயை தான் நீங்கள் உங்கள் பதிவுகளில் கேள்விக்கு ullakkeneergal அதுவும் மிக raw வாக.ஊருக்கே புரியவைக்க முயற்சித்த உங்களால் அவரின் மாமனாருக்கு புரிய வைக்க முடியவில்லையா அல்லது விருப்பம் இல்லையா.அவரின் மாற்று திறமையை நீங்க கேடயமாக பயன் படுத்த வேண்டாம்.உங்களால் அது முடியாது என்றால் ஏன் நீங்கள் மத/கடவுள் நம்பிக்கை உடையவர்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ள்ளகியது வீண் தானே ?
நான் இறை மறுப்பாளன் தான் ஆனா சூழ்நிலை கைதியா இருந்தேன் என்று சொன்னால் நிச்சயமாக கேள்விகள் வரத்தான் செய்யும். சொந்த வழ்க்கைஈலேயே கடைபிட்க்க முடியாத கொள்கைகளைய நீங்கள் உபதேசித்தீர்கள் ?
ராஜா
vaaazhthukkal
album sooperappu
manguniya ippathaan photola paakuren :)
sirippu police sirippu thaan :)
vaals ithula konjam vithyaasamaathaan theriyureenga :)
@ raja
அவரது(ராஜன் மாமனார்) பலவீனங்களை எங்களுக்கு பலமாக பயன்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை!
நடந்தது நடந்தது தான், அதை ஒப்பு கொள்ளும் மனவலிமையும் இருக்கு, இனி வரும் விவாதங்களை வைத்து உங்களது கருத்துகளை முன்வைப்பீர்கள் என நம்புகிறேன்!
@ raja
அவரது(ராஜன் மாமனார்) பலவீனங்களை எங்களுக்கு பலமாக பயன்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை!
நடந்தது நடந்தது தான், அதை ஒப்பு கொள்ளும் மனவலிமையும் இருக்கு, இனி வரும் விவாதங்களை வைத்து உங்களது கருத்துகளை முன்வைப்பீர்கள் என நம்புகிறேன்!
வால்ஸ்,
மணமக்களுக்கு வாழ்த்துகள் !
திருமணவிழாவில் விட்டுக்கொடுப்பதெல்லாம் 'கொள்கையை கைவிடுவதற்கான அடையாளம் அல்ல' என்பதை பலர் இங்கே தெளிவாக விளக்கியுள்ளனர்.
ஆனாலும், டோண்டு இப்போது இதே திருமணத்தைக் காரணம் காட்டி, தங்களது இந்துத்வ-பார்ப்பன-மந்திரங்களுக்கு பெருமை தேட முடற்சிக்கிறார். இங்கே காண்க:
"ராஜன் திருமணம் பற்றிய விவாதம்"
http://dondu.blogspot.com/2010/10/blog-post_26.html
நான் நியாயத்தைப் பேசப்போனால் - என்னுடைய திருமணம் குறித்து கேள்வி கேட்கிறார்கள். எனது பதில் இங்கே:
"ஆம், எனது திருமணம் அய்யர், புரோகிதம், யாகம் எதுவும் இல்லாமல்தான் நடந்தது"
http://arulgreen.blogspot.com/
http://www.flickr.com/photos/53666090@N08/
டோண்டு சார் பதிவில் எனது பின்னூட்டம்: http://dondu.blogspot.com/2010/10/blog-post_26.html
அப்பா... சாமீ... தாங்க முடியலைடா கடவுளே!
திருமண மண்டபத்துக்கு எவ்வளவு செலவு? யார் வீட்டு காசு? பேண்ட் சட்டை யார் எடுத்தது? -- இதெல்லாம் ஒரு கேள்வியா....? தேவையா? ரொம்பதான் ஓவரா போரீங்க.
"இதுதான் சரி... இது தவறு" - என்று பலவிஷயங்களில் எல்லோருக்கும் ஒரு நிலைபாடு இருக்கும். சில தவிற்க முடியாத தருணங்களில் அந்த நிலைபாட்டை விட்டுக்கொடுப்பது மிகமிக இயல்பான ஒரு நிகழ்வு. இது ஏறக்குறைய எல்லோரது வாழ்விலும் நடக்கும் செயல்தான். அதற்காக அவர் தடம் புரண்டுவிட்டார் என்பது பேனைப் பெருச்சாளியாக்கி, பெருச்சாளியைப் பெருமாளாக்கும் செயல்.
இப்படி ஒன்றுமில்லாத விஷயத்திற்காக ஏன் கும்மியடிக்கிறீர்கள்? எல்லோரும் அன்னியன் பட விக்ரம் மாதிரியா வாழ்கிறீர்கள்? மனசாட்சியைத் தொட்டு பேசுங்கள்.
லஞ்சத்தை எல்லோரும்தான் எதிர்க்கிறார்கள். ஆனால் வாழ்நாளில் ஒரே ஒரு முறைக்கூட லஞ்சமே கொடுக்காமல் வாழ்ந்து வருபவர் யார்? போக்குவரத்து போலீசிடம் விதிகளை மீறி மாட்டும் போது, பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தும்போது - விதிமுறை மீறாமல் வாழ்வோர் எத்தனை பேர்?
இருசக்கர வாகனத்தில் போனால் தலைக்கவசம் அணிய வேண்டும், மகிழுந்தில் சென்றால் வார்ப்பட்டை அணிய வேண்டும், தெருவில் ஒரு குப்பயையும் போடக்கூடாது, பொது இடத்தில் புகைக்கக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லக்கூடாது, நகை வாங்கினால் வரியுடன் கூடிய பில் வாங்க வேண்டும், சொத்துவாங்கினால் முழுமையான விலையைக் காட்டி வரிக்கட்ட வேண்டும்...இப்படி ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது.
இதெல்லாம் சட்டப்படியான நிலைபாடுதான். இவை எல்லாவற்றையும் விடாப்பிடியாக நிறைவேற்றும் நியாயவான்கள் எத்தனைப் பேர்?
இதனுடனெல்லாம் ஒப்பிட்டால் - திரு. ராஜன் திருமணம் ஒரு நிலைதடுமாறிய நிகழ்வே அல்ல.
பெண்ணின் வீட்டில் "அய்யரை வைத்திருக்கிறார்கள்". பெண் வீட்டாரின் சரிசம உரிமைக்கு மதிப்பளித்து அவர் "அய்யரையோ, மந்திரத்தையோ தன்னளவில் நம்பாமல்" திருமணம் நடத்திருக்கிறது - என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் அவர் கொள்கையை விட்டுவிட்டார் என்றெல்லாம் பேசுவது பித்தலாட்டம். கணக்குக் கேட்பது கேலிக்கூத்து.
மணமக்களுக்கு வழ்த்துக்கள்...
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
கடவுள் மணமக்களுக்கு எல்லா வளங்களையும் அருளட்டும்.
:)
மணமக்களுக்கு இந்த ஈரோட்டுக்காரனின் இனிய வாழ்த்துக்கள்
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
எந்தவொரு பதிவரையும் நேரில் கண்டிராத என்னைப் போன்றவர்களுக்கு இந்தப் பதிவு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது... வால்பையன் என்றால் எதோ பால் மனம் மாறாத பொடிப்பையனாக இருப்பான் என்று நினைத்திருந்தேன்... சிரிப்பு போலீசும், மங்குனி அமைச்சரும் நிஜத்தில் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தது... இன்றுதான் அந்த வேட்கை தணிந்தது...
Email follow-up comments
எல்லா வலைபதிவர்களை பாத்துட்டேன். ரொம்ப நன்றி அருண்...
மணமக்களுக்கு வாழ்த்துகள்.
//மாப்பிள்ளையை கடைசியா சிரிக்க வச்சு ஒரு போட்டோ :-)////
ஆப்பு ஆரம்பிச்சுட்டா ஹீ எஹி
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பிரசன்னா said... பலாபட்டறை கமல் மாதிரி கெட்டப் மாத்திகிட்டே இருக்கார்..//
இத அவர்கிட்டயே கேட்டேன். ஊர் புல்லா கடனாம். அதான் மாறு வேசத்துல சுத்திக்கிட்டு இருக்காரு.//
சிரிப்பு: பிரசன்னா என்னப்பத்திக் கேட்டா நீ கமலப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்க..
என்னாதிது சின்னப்புள்ளத்தனமா?
:)
சிரிப்பு போலீசும், மங்குனி அமைச்சரும் நிஜத்தில் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தது... இன்றுதான் அந்த வேட்கை தணிந்தது..
//
இனி .அவர்களை தாளிக்கலாம்.. ஹி..ஹி
நல்ல ஜோடிப்பொருத்தம்
வாழ்க வளமுடன்!!!
வால்பையா, அப்போ உன்னோடது கொள்கை பூசணிகாயா? நீ வால்பையன் அல்ல பூல் பையன்....படிச்சாச்சா இப்ப டெலிட் பண்ணிக்கோ...
ஆமா இந்த மயித்துக்கு எல்லாம் ரோஷம் வந்திரும்...போன கமெண்ட் ஜாதிய ஆதரிப்பவனும் ஜாதிய வெறுப்பவனும் ஒரு நாயிகளுன்னு சொன்னத கண்டுக்கல...போங்கடா
போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:
""@அருள்
உங்கள் அவதூறு பின்னூட்டங்களை இனிமேலும் அலவ் செய்வதற்கில்லை. கோபம் ஒன்றும் இல்லை, ஆனால் கொசுத்தொல்லையை எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?""
http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html
போண்டா மாதவனின் நிலைமையைப் பாருங்கள்:
""@அருள்
உங்கள் அவதூறு பின்னூட்டங்களை இனிமேலும் அலவ் செய்வதற்கில்லை. கோபம் ஒன்றும் இல்லை, ஆனால் கொசுத்தொல்லையை எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?""
http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html
Post a Comment