சிறப்பு விருந்தினர்கள்!
நமது உணவகம் ஆரம்பித்து 20 நாட்கள் ஆகிவிட்டது, டிசம்பர் மாத இறுதியில்தான் இணைய இணைப்பு கிடைத்ததால் பல நண்பர்களுக்கு தகவல் கூற முடியவில்லை, டிசம்பர் 28 ஆம் தேதி எழுதிய “அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்” என்ற பதிவிற்கு பிறகுதான் பல நண்பர்களுக்கு நமது உணவகம் திறக்கப்பட்டுள்ளதே தெரிந்தது.
கோவை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் பதிவர் லதானந்த், அவர் மூலமாக அதில் விளம்பரத்திற்கு பேசலாம் என நினைத்திருந்தேன், நான் இங்கே நினைக்க, அவருக்கு விக்குச்சோ, பொறை ஏறுச்சோ தெரியல, கரைக்டா போன் பண்ணிட்டார், ”சார் இதான் விசயம்” என்று சொன்னதும், முதலில் நான் உங்கள் உணவகம் வருகிறேன் என்றார். தற்பொழுது தான் அவர் தீவிர சிகிச்சை முடித்திருப்பது நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன், ஆயினும் சொன்னது போலவே குடும்ப சகிதம் நமது உணவகத்திற்கு வருகை தந்து நமது உணவகத்தை சிறப்பித்தார்.
அனைத்து உணவுகளையும் மிகவும் ரசித்து உண்டது அவர் முகத்தில் தெரிந்தது, விரைவில் பதிவாக இடுகிறேன் என்று கூறினார்.
லதானந்த் சார் மதிய உணவை முடிக்கும் அதே வேலையில், ஈரோட்டில் இருந்து எனது பாஸ் கார்த்திக் வந்தார், அவருடன் வலையுலக இளம்புயல் சஞ்சயும். அவர்களது மதிய உணவும் நமது உணவகத்திலேயே நடந்தது.
உங்கள் வருகையால் பெருமையடைந்தேன், நன்றி நண்பர்களே!
*****************
உணவகத்தின் முகவரி
பூர்வாஸ் ஃபைன் டைன்,
#2, வெங்கிடசாமி சாலை கிழக்கு,
ஆர். எஸ். புரம்,
(சிந்தாமணி பெட்ரோல் பங்க் அருகில்)
கோயம்புத்தூர் - 641 002.
தொலைபேசி : 0422 - 4376437
பகுதிவாரியாக:
அனுபவம்,
சுயசொறிதல்,
நண்பர்கள்,
படங்கள்,
பூர்வாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
62 வாங்கிகட்டி கொண்டது:
வாழ்த்துக்கள் தல..இனி கோவை வந்தா உங்க கடை சாப்பாடுதான்
டேஸ்டுக்கு முக்கியத்துவம் கொடுக்குறவர் நீங்க..நீங்க உணவகம் ஆரம்பிச்சா...டேஸ்ட் பார்க்க ஆவலா இருக்கு
அண்ணே பார்சல் ப்ரீ உண்டா?வாழ்த்துக்கள்
டேஸ்ட் பாத்துருவோம். மென்மேலும் வளர வாழ்த்துகள்.
டேஸ்ட் பாத்துருவோம். மென்மேலும் வளர வாழ்த்துகள்.
வாழ்த்துகள். :-))))
இந்தா, நாங்களும் வந்திட்டே இருக்கம்ல?!
இனிய வாழ்த்து(க்)கள்.
இனி கோவை வரும்போது அங்கேதான் நமக்கு சாப்பாடு.
so nice to see them. I will be your customer soon :)
திறப்பு விழா அன்று சாப்பிட முடியாத கவலை இன்று நீங்கியது. :)
நல்ல சுவையான உணவுவகைகள். முட்டை பிரியாணியும் , எக் ஃப்ரைட் ரைசும் , தயிர்சாதமும் அற்புதமாக தயாரித்துக் குடுத்தார்கள். மிக திருப்தியாக சாப்பிட்டேன். தல, ஐஸ்க்ரீம் சீக்கிறம் ஏற்பாடு செய்ங்க. அது மட்டுமே குறை. நல்ல தரமான உணவுகள். தூய்மையான உணவகம். அன்பான உபசரிப்பு சீக்கிறமே பெரிய அளவில் வருவீங்க வால். வாழ்த்துகள்.
ட்விட்டரில் பார்த்துட்டு காசி அண்ணா விரைவில் வருவதாக சொல்லி இருக்கிறார். நல்லா கவனிங்க. ;)
திரு.வால்பையன்,
நேற்று முன்தினம் மலர் அங்காடியிலிருந்து வடகோவை வரும் வழியில் வண்டியோட்டியபடியே உங்கள் உணவகத்தைத் தேடியவாறு வந்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.
சில கருத்துகளைச் சொல்லலாமா?
உணவகத்தின் பெயர்ப்பலகை கட்டடத்தின் வண்ணத்தினூடே கலந்திராமல் கான்ட்ராஸ்டாக இருந்தால் எளிதில் அடையாளம் காண ஏதுவாக இருக்கும்.
உங்கள் உணவகத்தின் க்யூசீன் யாது?
இதுவும் இன்னொரு செட்டிநாடு, வட-இந்திய அல்லது சைனீஸ் பாணி எனும் பட்சத்தில் மற்றவர்களிடமிருந்து உங்கள் உணவகத்தை வேறுபடுத்தப்போவது எது? கோவைக்குப் புதுமையாக தாய்லாந்து, மெக்ஸிகன், மெடிட்டரேனியன் உணவு வகைகளை அறிமுகப்படுத்தலாமே?
உங்கள் தொழில் வளம் பெற வாழ்த்துகள்.
மென்மேலும் வளர வாழ்த்துகள் வால்
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்... வாலு..
அட, பாஸ் கார்த்திக் கோவையில் மையம் கொண்டிருக்காரா!?
வாழ்த்துகள் குரு. மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகள்.
அனுஜன்யா
கடந்த வெள்ளி இரவு, நானும் தேடினேன்! தென்படவில்லை! சிக்னல் அருகிலா?லாட்ஜ் சமீபமா? தெளிவு படுத்தவும்!
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்....
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அண்ணே பார்சல் ப்ரீ உண்டா?வாழ்த்துக்கள்//
எங்க போனாலும் இந்த போலீசுக்கு இதே வேலையா போச்சு....
இங்கயும் மாமூலா....
நடத்துங்க நடத்துங்க.....
மேலும் சிறக்கட்டும்..........
//
Indian said...
திரு.வால்பையன்,
உணவகத்தின் பெயர்ப்பலகை கட்டடத்தின் வண்ணத்தினூடே கலந்திராமல் கான்ட்ராஸ்டாக இருந்தால் எளிதில் அடையாளம் காண ஏதுவாக இருக்கும்.
//
வழிமொழிகிறேன்...
காசி வருகிறார். இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்.
கடைசி வரைக்கும் தரத்தில் கவனம் இருக்கட்டும்.
இளம்புயல் என்று இருக்கனும்
வளர ... வாழ்த்துக்கள்.
temptation kooditae iruku, early waiting to visit
அன்பின் வால் - வருகிறேன் - கோவை வருகிறேன் - சந்திப்போம் - மேன்மேலும் வளர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஜாப்பான் சிக்கன் இதுவரை சாப்பிடாததுங்க பாஸ்
நல்ல டேஸ்ட்ங்க :-))
சஞ்சு சொன்னமாதிரி ஐஸ்கிரீம் வாங்கி வைங்க பாஸ் :-))
// வழிப்போக்கன் - யோகேஷ் said...
//Indian said...
திரு.வால்பையன்,
உணவகத்தின் பெயர்ப்பலகை கட்டடத்தின் வண்ணத்தினூடே கலந்திராமல் கான்ட்ராஸ்டாக இருந்தால் எளிதில் அடையாளம் காண ஏதுவாக இருக்கும்.//
வழிமொழிகிறேன்.//
ரிப்பீட்டு
அப்படியே மெய்ன் ரோட்டிலையும் ஒரு போடு வைங்க பாஸ் :-))
வாழ்க, வளர்க . வாழ்த்துக்கள்
please join the group "Purva's fine Dine" in facebook
சூப்பர்...
வாழ்த்துகள்..
இந்தப் பதிவை படித்ததில் சென்னையில் இருந்தே விருந்து சாப்பிட்ட திருப்தி கிடைத்துவிட்டது...
தல ,கோவை வந்தா ஓ சி ல சோறு கிடைக்குமா? ஹா ஹா
சும்மா ஜோக்குக்கு சொன்னேன். கோவை வந்தா உங்க கடைக்கு வந்து பில் பே பண்ணீட்டு சாப்பிடறேன்
கோவை சாப்பாட்டுக்கடைன்னு ஒரு பதிவையும் தேத்திடறேன்( சரக்கு குறைஞ்சிடுச்சு)
யோவ்...!
வால்பையரே, ஒரு வழியாக வாழ்க்கையின் அடுத்த முன்னேற்றத்திற்கு அடிகல் நாட்டி இருக்கிறீர்கள். உங்கள் உணவகம் சிறந்த முறையில் தன் தொழிலை நடத்த, என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
ஒவ்வொருவருக்கும் தன்னை தானே நிர்வாகம் செய்யும் ஒரு வாய்ப்பை அமைத்து கொள்ளள ஆவல் எப்போதும் உண்டு. அதை நீங்கள் அடைந்திருப்பதை கேட்டு மகிழ்ச்சி.
அடுத்த முறை கோவை வரும்போது, தேடிபிடித்தாவது இவ்விடம் வந்து சேர்கிறேன்.
ஒரே ஆலோசனை - உணவகத்தின் விளம்பர தட்டிக்கு, இதை விட பிரகாசமான கண்ணை கவரும் வண்ணத்தில் தீட்டி வையுங்கள். சைவ உணவகங்களே இவ்விஷயத்தில் அக்கறை காட்டும் போது, அசைவ உணகத்திற்கு அது மிகவும் தேவை.
ஆவ்வ்வ்வ்வ்.........
வால் அண்ணே ...
நானும் உங்க கடைக்கு
ஒரு தடவை சாப்பிட வரலாமா ?
//நண்பர்களுக்கு நமது உணவகம் திறக்கப்பட்டுள்ளதே தெரிந்தது.//
எல்லாம் காந்தி கணக்கு எழுதாமல் இருந்தால் சரி
:)
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ........................
மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன். ரெஸ்டாரண்ட் ஆரம்பிப்பது என் கனவு, பார்க்கலாம் நடக்குதா இல்லையான்னு.
மணம் குணம் ஜனம் பணம்
தினம் நிறைய வாழ்த்துக்கள்.
-
கிறுக்கன்
அப்படியே கோவைக்கு ஒரு டிக்கெட்டும் எடுத்துக் குடுத்துட்டீங்கனா நல்லா இருக்குமே..
:) இனி கோவை வரும் போது இங்க விசிட் பண்ணிட வேண்டியது தான்
வாழ்த்துகள் தல :)
உமது உணவகத்தில் உணவருந்த கடல் கடந்து விரைவில் வருகிறேன் வால் பையா
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் .... பன்னாட்டு என்று பெயர்பலகை... இந்நாட்டு மக்கள் சாப்பிடும் அளவிற்கு விலை இருக்குமா? அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கானதா?
அன்புடன்
கே பழனிசாமி அன்னூர்
பூர்வாஸ்ரமத்தில புண்ணியம் செய்திருந்தா உங்க பூர்வாஸ்ல வந்து சாப்பிடற வாய்ப்பு கிடைக்கும் எங்களுக்குன்னு நம்பறேன்! வாழ்த்துக்கள்!
கோவையில் நம்ம உணவகம் உள்ளது...வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
மென்மேலும் வளர வாழ்த்துகள்...
கோவை வந்தால் பூர்வாஸ்ஸில் தான் சாப்பாடு..!!!!
அடடா! அது உங்க உணவகம்தானுங்களாண்ணா! தெரியாம போச்சே எனக்கு. போன வாரம் கிருபாவோட வந்து மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு, இருநூத்துச் சொச்சம் ரூபாயை ஒழுங்கா பில் கட்டிட்டுப் போனேனே! முன்னாடியே தெரிஞ்சிருந்தா எனக்கு அந்தப் பணம் மிச்சமாகியிருக்குமில்லீங்களாண்ணா? :)
//அடடா! அது உங்க உணவகம்தானுங்களாண்ணா! தெரியாம போச்சே எனக்கு. போன வாரம் கிருபாவோட வந்து மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு, இருநூத்துச் சொச்சம் ரூபாயை ஒழுங்கா பில் கட்டிட்டுப் போனேனே! முன்னாடியே தெரிஞ்சிருந்தா எனக்கு அந்தப் பணம் மிச்சமாகியிருக்குமில்லீங்களாண்ணா? :) //
அம்மா கூட வந்திருந்திங்களா!?
வேற ஒருத்தர் ஃப்ரெண்டு கூட வந்து முனுமுனுன்னு பேசிகிட்டே இருந்தாங்க அவுங்களா!.
டேஸ்ட் பற்றி எதாவது ஆலோசனைகள் சொல்லனுங்களா?, தோற்றம் எப்படியிருந்தது, உங்கள் நண்பர்களுக்கு சிபாரிசு பண்ணிங்களா?
அடுத்தமுறை வரும்பொழுது அறிமுகப்படுத்திகோங்க ப்ளீஸ்.
Congrats Vaals :)
அடடா நான் புனே வந்துட்டேனே ...என் அண்ணன் R .S புரத்துல தான் வேலை பார்க்கிறார். கண்டிப்பா அவர அங்க போக சொல்லுறேன்.
உங்களுக்கு பதிவுலகிலே விளம்பரம் கிடைச்சிடும்....வாழ்த்துகள்
நண்பன் வால்பயன் உண்மையிலேயே பகுத்தறிவுவாதியாக இருந்தால் தான் நடத்தும் உணவகத்தில் ஜாதி மதம் பார்ப்பவர்களும், சாமி கும்பிடுபவர்களும் உள்ளே வரக்கூடாது என்று வாசலில் போர்டு போட்டு விட்டு நடத்துங்கள். நடத்துவீர்களா? உங்கள் பகுத்தறிவு வீரத்தை காண்பிக்க இதுதான் சரியான தருணம்.
அப்படி நடத்த தைரியம் இருந்தால் இந்து கடவுளரைப் பற்றி ஏசலாம். எப்படியோ நீங்கள் அல்லா , ஏசு பற்றி பேசினால் உருட்டுக்கட்டை எடுத்து வந்து போராட அவர்களுக்கு ஒரு இடம் இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. அதுவரை நலம்.
http://picasaweb.google.com/lobamudhra/Vaalu?authkey=Gv1sRgCKPziO2jypHuTQ&feat=directlink
@ ஹிஹிஹிராம்
நான் எப்போதுமே கருத்து வேறு நட்பு வேறு என்று சொல்லி வருபவன். உங்களது பார்பனீய திமிரை தான் சாடி வருகிறேனே ஒழிய நீங்கள் பிறப்பால் பார்ப்பான் என்பதற்காக அல்ல!
வாங்க ஒருதடவை
//உங்களது பார்பனீய திமிரை தான் சாடி வருகிறேனே ஒழிய நீங்கள் பிறப்பால் பார்ப்பான் என்பதற்காக அல்ல!// இதெல்லாம் சப்பைக்கட்டு பேசு. பாப்பானை அழி, பாப்பானைஒழின்னு பேத்தறது அப்புறம் நான் பாப்பானை சொல்லலை பார்ப்பனீயத்தை சொன்னேன்னு புரூடா வுடறது. சாமி கும்பிடறவன் வேணாம் அவனால நடக்கிற பிஸ்னஸ் மட்டும் வேணும். சாமியில்லைன்னு சொல்லிக்கிட்டே கோவில் கஜானா வை கொள்ளையடிக்கும் பகுத்தறிவு வாதிகள் தானே நீங்கள்!
//பாப்பானை அழி, பாப்பானைஒழின்னு பேத்தறது//
பாப்பானை அழி, பாப்பானை ஒழின்னு நான் எங்கேயாவது சொல்லி நீங்க பார்த்துருக்கிங்களா ஹீஹ்ஹிராம்.
பார்பனியத்தை அழிக்கனும்னு சொன்னா அது பாப்பானை அழின்னு உங்களுக்கு தெரிஞ்சா மொத்த பார்பனீயத்தையும் நீங்க தான் குத்தகைக்கு எடுத்துறிக்கிங்கன்னு அர்த்தம், ஒருவேளை அது தான் உண்மைன்னா, பார்பனீயத்தை அழிப்பதற்காக பாப்பானை அழின்னு முதல் தடவையா சொல்றேன்!
எல்லார்கிட்டயும் பேசுற மாதிரி எங்கிட்ட பேசக்கூடாது ஹிஹிஹிராம்!
//எல்லார்கிட்டயும் பேசுற மாதிரி எங்கிட்ட பேசக்கூடாது ஹிஹிஹிராம்// ஆமாம் உங்களைப் பகுத்தறிவு வாதின்னு நினைச்சு பேசினது தப்பு தான். ஒத்துக்கறேன்.
உங்கள் தொழில் வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிற நபர்களில் நானும் ஒருவன்.
Post a Comment