நான் “மதுரை கிழக்கு ஆரம்ப ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்” அப்போது ஐந்தாவது படித்து கொண்டிருந்தேன்! அந்த பள்ளியில் தனித்தனி அறைகள் கிடையாது! செவ்வகமான அந்த பெரிய அறையில் ஐந்து கரும்பலகைகள், என்னுடய வகுப்பில் மொத்தமே பனிரெண்டு பேர் தான்! காட்டுகத்தலாக அந்த அறை முழுவதும் மாணவர்கள், மாணவயியரும் படிப்பது நிரம்பியிருக்கும்! மதியம் அனைவருக்கும் சத்துணவு, ஒன்றிரண்டு வசதியான மாணவர்களை தவிர அனைவருமே சத்துணவு தான்! அதில் நானும் ஒருவன்!.
எனக்கு நண்பர்கள் அனைத்து வகுப்பிலும் இருந்தனர்! மதிய விளையாட்டு, கரும்பு காட்டுக்கு செல்வது, குருவி பிடிப்பது, ஓணான் அடிப்பது, மீன் பிடிப்பது, கிணற்றில் குளிப்பது என எல்லா தரப்பிலும் நண்பர்கள்! ஒருமுறை ஒரு நண்பணின் தட்டில் கூடவே நானும் அமர்ந்து சாப்பிட்டேன்! என் தங்கை அதை என் வீட்டில் சொல்லிவிட்டாள், வீட்டில் இனிமேல் அவன் கூட அப்படி சாப்பிடக்கூடாது என்றார்கள், ஏன் என்று கேட்டதற்கு அவன் வேறு சாதி என்றார்கள், எனக்கு நண்பனாக இருக்க அவனுக்கு சாதி முக்கியமில்லை! நான் அப்படி தான் சாப்பிடுவேன் என்றேன்! அங்கே சாதி பற்றிய என்னுடய கேள்விகள் ஆரம்பமானது! இன்று வரை நான் என் குழந்தைக்கு பள்ளியில் சாதி சான்றிதழ் தரவில்லை!
முதல் இரண்டு வகுப்புகள், ஜெய்ஹிந்துபுரம் முருகன் பள்ளி, மூன்றாவது சிவகங்கை, நான்காவது பசுமலையில் விடுதியில், ஐந்தாவது தான் கருப்பாயூரணியில்! யாரும் சமாளிக்க முடியாத உங்கள் பாசையில் முடக்குவாதம் பிடித்தவனாக தான் திரிந்தேன்! ஆறாவது படிக்கும் போது தான் ஈரோடு வந்தேன்! ஒன்பதாவது வரை தான் படித்தேன்! ஏட்டு பாடம் எனக்கு திருப்தியளிக்கவில்லையா!? அல்லது ஊர்சுற்றி பழகிய எனக்கு ஒரே இடத்தில் இருக்கப்பிடிக்க வில்லையா!? என்பதெல்லாம் எனக்கு தெரியாது! ஆனால் படிப்பு ஏறவில்லை என்று மட்டும் சொல்லமுடியாது! ஐந்தாவிதிலுருந்து ஒன்பதாவது வரை நான் தான் முதல் மாணவனாக இருந்தேன்!
எனது கேள்விகளுக்கு ”சாதாரணமாக” யாரும் பதில் சொல்லி தப்பிக்க முடியாது! நான் கேட்டுகொண்டே தான் இருப்பேன்! நண்பர்களின் கேள்விகளுக்கும் விடை தேடி கொண்டே தான் இருந்தேன்! கடவுள் என்ற ஒன்றை மறுப்பதற்கு எனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது!?
இந்து மதத்தை அறிய விவேகானந்தர் வரலாறு படித்தேன், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வரலாறு படித்தேன்,, சாரதா அம்மையார் வரலாறு படித்தேன்! ஒஷோ தத்துவங்கள் படித்தேன், தம்மபதம் படித்தேன், பைபிள் படித்தேன், குரான் படித்தேன்! ஆனால் எல்லாவற்றிலும் கடவுள் என்ற சொல் பயன்படுகிறதே தவிர அவை எல்லா இடங்களிலும் ஒரு ”பொருளை” போலத்தான் பயன்படுகிறது!
கடவுள் இல்லாமல் இந்த உலகம் எப்படி தோன்றியது என்ற கேள்வியோடு நிறுத்திவிட்டால் ”நாம் கடவுள்” என்ற சொல்லாடு நம் தேடும் அறிவையும் நிறுத்திவிடுவோம்! அதனால் அதனையும் தெரிந்து கொள்ள என்னால் முடிந்த முயற்சிகள் செய்தேன்! பரிணாம வளர்ச்சியின் அடையாளங்கள் நம் கண் முன்னால் பல சான்றுகள் விட்டுப்போயிருப்பதை அறிந்தேன். அறிந்து கொண்டிருக்கிறேன், இன்னும் அறிவேன்! எத்தனையோ உயிரினங்கள் நம்மை சுற்றி, அது தான் வாழ தேவையானதை மட்டும் செய்து கொண்டிருக்கிறது! மனிதன் மட்டுமே பரிணாம வளர்ச்சியில் தற்போதைய இறுதிநிலையில் இருக்கிறான்! ஆனால் இதுவே இறுதியல்ல!
கரடி இனங்களில் அனைத்துமே மாமிசம் உண்ணும், அதற்காக அதற்கு கோரை பற்கள் உள்ளன! ஆனால் ”பாண்டாகரடி” எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள மரத்தில் வாழ பழகி இன்று மூங்கில் குருத்தை மட்டும் சாப்பிட்டு வளர்கிறது, பரிணாம வளர்ச்சியின் எச்சமாக அவற்றிற்கு இன்றும் கோரை பற்கள் உள்ளன! இன்னும் சில வருடங்களில் அது மறைந்துவிடும்! பறவைகள் அனைத்தும் முட்டையிடும், முட்டையிட காரணம் அதிக குட்டிகள் உடலுக்குள் வளர ஏற்ற உடல்வாகு இல்லை, அதனால் முட்டையாக வெளியேற்றி விட்டால் அது வெளியே வளர்ந்து கொள்ளும்! ஆனால் ப்ளாட்டிபஸ் என்ற பறவை முட்டையிட்டு பால் கொடுக்கும்! அதாவது அது பறவையினத்திலிருது நம் கண் முன்னே பாலூட்டியாக மாறி கொண்டிருக்கிறது!
இன்னும் எத்தனையோ அடுக்கி கொண்டு போக முடியும்!(தனிப்பதிவாக தொடர் எழுதுகிறேன்) கடவுள் என்ற பதமே, விஞ்ஞானத்தின் சகோதரன் என்று மெய்ஞானம் என்ற பெயரில் உன்னில் கடவுளை தேடு என்று மாறி கொண்டிருக்கிறது! ஆனால் அதித நம்பிக்கை உள்ள மதவாதிகள், தம்மையும் வளர்த்து கொள்ளாலாமல் தன் சத்ததியினரையும் வளர விடாமல் சேனை கட்டிய குதிரைகளாகவே உள்ளனர்! அவை மாற வேண்டும், மண்ணில் மனிதம் நிலைக்க வேண்டும் என்பதற்காக நான் மதவாதிகளிடம் சண்டை போட்டு கொண்டே தான் இருப்பேன்! நீங்கள் என்னை உசுப்பேத்துவது எல்லாம் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது!
**********************
சென்ற பதிவில் கடவுளின் போர் வீரர்கள் எவ்வாறு எதிர்வினை அளிப்பார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள ஒருநாள் அனானி பின்னூட்டம் ஒன்று அழிக்காமல் வைக்கப்பட்டிருந்தது! நண்பர்களுக்கு மனம் சங்கடபட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்! கடைசி வரை துணை நிற்பேன் என்று உறுதி கூறிய நண்பர்களுக்கும், தொழில் நுட்ப ரீதியாக உதவி செய்த நண்பர்களுக்கும் நன்றி! அந்த அனானி சக ப்ளாக்கர் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! விரைவில் நரியின் சாயம் வெளுக்கும்!
97 வாங்கிகட்டி கொண்டது:
ஸ்கூல் ஃபைனல் வரும்போது சாதி சான்றிதழ் கேட்பார்களே.....
''புதிய தத்துவம்''
அருமை... பாராட்டுகள் ...!
அதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாதீர்கள்
தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். பரிணாம வளர்ச்சி பற்றி ஆழமான பதிவை எதிர்பார்க்கிறேன்
எங்க சயின்ஸ் ஏரியாக்குள்ள கைய வைக்கிறீங்களே?
வாவ். ஒன்பதாவதுக்கு மேல் படிக்கவில்லையா?
உங்கள் அறிவியல் அறிவு - கோட்கள், பரிணாம வளர்ச்சி - வியக்க வைக்கிறது
கடவுள் என்பதை மனிதன் உருவாக்கிய ஒரு கருத்தியலாக மட்டுமே கருத வேண்டும்.
மனிதனின் ஆசை, தவிப்பு, பயம் இவற்றைச் சுற்றி உருவானதே கடவுள்.
ஒரே கன்புசா இருக்கு தல, கொஞ்சம் நேரம் அப்படியே வானத்த பார்த்து யோசித்தா தலை சுத்துது., சரின்னு ரோட்டை பார்த்தா (நாம செய்யிற வேலைய பார்த்து) இன்னும் பயங்கரமா சுத்துது., இன்னா பண்ணுரதுன்னே தெரியில தல ...ஒரே கன்புசா இருக்கு
அடப்பாவி மனுஷா... 5th to 9th 1st ranka.. நீதான்ய்யா திரு ஞானசம்மந்தர்.
5th to 9th நாங்க 35 to 70 rankkku தான், so you are not my level... rejected
//கடவுள் இல்லாமல் இந்த உலகம் எப்படி தோன்றியது//
படைப்பிற்கு நோக்கம் கற்பிக்க முயன்றால் அது கடவுள் கோட்பாட்டுக்குள் கொண்டுதான் விடும். படைப்பு அது சூழலால் அமைவது என்று புரிந்து கொண்டால் கடவுள் பற்றிய கேள்வியே எழாது.
//கடவுள் என்ற பதமே, விஞ்ஞானத்தின் சகோதரன் என்று மெய்ஞானம் என்ற பெயரில் உன்னில் கடவுளை தேடு என்று மாறி கொண்டிருக்கிறது!//
உன்னில் கடவுளை தேடு என்பதே உண்மை. அதுதான் சரியும் கூட வால்ண்ணா :)
//எனது கேள்விகளுக்கு ”சாதாரணமாக” யாரும் பதில் சொல்லி தப்பிக்க முடியாது!//
உண்மை...
தல! அருமையா சொல்லியிருக்கீங்க.கூடவே கொஞ்சம் நக்கலும். தொடருங்க அதிரடிகளை.
கடவுள் என்பதை மனிதன் உருவாக்கிய ஒரு கருத்தியலாக மட்டுமே கருத வேண்டும்.
மனிதனின் ஆசை, தவிப்பு, பயம் இவற்றைச் சுற்றி உருவானதே கடவுள்.
mmmmmmmmm
// வீட்டில் இனிமே அவன் கூட அப்படி சாப்பிடக்கூடாது என்றார்கள், ஏன் என்று கேட்டதற்கு அவன் வேறு சாதி என்றார்கள், எனக்கு நண்பனாக இருக்க அவனுக்கு சாதி முக்கியமில்லை! நான் அப்படி தான் சாப்பிடுவேன் என்றேன்! அங்கே சாதி பற்றிய என்னுடய கேள்விகள் ஆரம்பமானது! //
அருண்,
இது வரைக்கும் எனக்கும் நடந்திருக்கு, அதுவும் நண்பனின் அம்மாவாலேயே கேட்க்கப்பட்டது. சரியாக சொல்லனும்னா,5வது படிக்கிறப்போ, இந்திரா காந்தி சுடப்பட்ட அன்று, மதியம் பள்ளி விட்டுட்டாங்க என் நண்பன் தன் வீட்டுக்கு வான்னு சொல்லி அங்க போய்ட்டேன், எனக்கு தண்ணி தரக்கூட தயங்கினாங்க, நீயெல்லாம் இங்க தண்ணி குடிப்பியான்னு கேட்டாங்க. ஆனா சாதிய ஒரு பொருட்டா மதிக்கல .இன்னி வரைக்கும் யாரையும் கேட்டதுமில்ல..:))
-------
அடுத்து நான் ஏன் பிறந்தேனா??
:))
//நீங்கள் என்னை உசுப்பேத்துவது எல்லாம் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது!//
அடப்பாவி மனுசா.....
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்
உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்க தல......
:-)
உங்க எண்ணமும்... தெளிவாத்தான் இருக்கு,
யாரையும் காயப்படுத்தாத எந்த கோட்பாடும் காலம் கடந்தேனும்...மக்களை எட்டும்.
பதிவில் வெப்பம் இருந்தாலும்..... மனம் ஏற்கிறது..... நானும் ஒரு இறைபற்றாளன்
அந்த பக்தகேடி !, யாரு?
Platypus ஒரு பாலூட்டி; அது பறவையே இல்லை. அதே போல் பறைவைகள் முட்டை இடுவதும் அநேகமான reptiles முட்டை இடுவதும், அவை இரண்டுமே ஒரே பொதுவான reptile முன்னோடியில் இருந்து கூற்படைந்ததால்தான். மற்றும்படி உங்கள் கருத்து சிறந்தது!
ஏம்பா .. இப்படி பிஞ்சிலே பழுத்துர்ரீங்க ..?!
மேலும் வளர வாழ்த்துக்கள்
"நான் ஏன் நாத்திகனானேன்!"
நாங்க கேக்கவே இல்லையே வால்ஸ்!
நாத்திகனா அல்லது ஆத்திகனா இருக்கறது தனிமனிதர், அனுபவங்கள் சார்ந்தது. அதுல எந்தப் பிரச்சினையும் இல்லவே இல்லை!
இரவும் பகலும் மாறி மாறி வர்ற மாதிரித் தான், கருத்து மாறுபட்டு இருப்பதும்!
ஆனாக்க, சமீப காலமா, உங்களோடது, ஆல் இன் ஆல் ரெண்டு பேர் பதிவுகளிலும், கொஞ்சம் ஆபாசமான வார்த்தைப் பிரயோகம் இருப்பதை தவிர்த்துக் கொள்ளலாமே!
அதுக்கென்ன இப்போ.
//Platypus ஒரு பாலூட்டி; அது பறவையே இல்லை. அதே போல் பறைவைகள் முட்டை இடுவதும் அநேகமான reptiles முட்டை இடுவதும், அவை இரண்டுமே ஒரே பொதுவான reptile முன்னோடியில் இருந்து கூற்படைந்ததால்தான். மற்றும்படி உங்கள் கருத்து சிறந்தது! //
சுரேஷ்!
அவை பாலூட்டிகளாக தற்போது அழைக்கபடுவதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை! ஆனால் அதன் உடலமைப்பு வாத்து இனத்தை சேர்ந்தது என நமக்கு அப்பட்டமாக காட்டுகிறது!
http://en.wikipedia.org/wiki/Echidna
இதை பாருங்கள்,
முட்டையிட்டு பால் கொடுக்கும் விலங்கு! ஊர்வனவற்றில் பல்லி, சில பாம்பினங்கள் முட்டையிடுகிறது ஆனால் பால் கொடுப்பதில்லை, அதன் அடுத்த கட்டமாக இந்த முள்ளம்பன்றி போன்ற விலங்கு நமக்கு ஆதாரமாக இருக்கிறது!
இவை போன்று இன்னும் பல பல ஆதாரங்கள் இருக்கின்றன! உங்களுக்கு தெரிந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே!
//http://en.wikipedia.org/wiki/Echidna//
நன்றி தெக்கட்டியான்!
உங்கள் கடவுள் பற்றிய பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.
எதிர்பார்க்கிறேன்...
ம்ம்... நாட்டில் பிரச்சினைகள் எல்லாம் ஓய்ந்து போய்விட்டது.
நல்லதொரு அனுபவம். டார்வின் நமது கண்களைத் திறக்க முனைந்தார், ஆனால் அகக் கண்களை அவரவர்தான் திறந்து கொள்ள வேண்டும்.
///ஸ்கூல் ஃபைனல் வரும்போது சாதி சான்றிதழ் கேட்பார்களே///
kalvettu come come come :)-
வால்ஸ்,
நான் ஏன்.... என்பது பழைய தலைப்பு. "நீங்கள் ஏன் நாத்திகர் ஆகவில்லை" என்று தொடர் எழுத போகிறேன்.
//நாட்டில் பிரச்சினைகள் எல்லாம் ஓய்ந்து போய்விட்டது//
கடவுள், மதம் இவை இல்லாவிட்டாலே, நாட்டில் உள்ள பல பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.
//கடவுளின் போர் வீரர்கள் எவ்வாறு எதிர்வினை அளிப்பார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள ஒருநாள் அனானி பின்னூட்டம் ஒன்று அழிக்காமல் வைக்கப்பட்டிருந்தது! //
கடவுளின் போர் வீரர்களில் இருவகையுண்டு. முதலாவது, தேய்ந்து போன கேசட் போல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்பவர்கள் (தருமி அவர்களுடைய பதிவின் பின்னூட்டங்களில் இவர்களை நிறைய பார்க்கலாம்). இரண்டாவது, தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் சாபம், வசை சொல்பவர்கள்.
//கடவுள், மதம் இவை இல்லாவிட்டாலே, நாட்டில் உள்ள பல பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும். //
மனிதர்கள் மனிதர்களாக இருந்தாலன்றி நாட்டில் ஒருபோதும் பிரச்சினைகள் ஓயாது. நான் மனிதன் என எவரும் தன்னை அடையாளப்படுத்துவதில்லை, மனிதன் என்றால் யார் என்பது குறித்து பலருக்கும் ஒரு தெளிவு இருப்பதில்லை. கடவுள் மதங்கள் தவிர்த்து பல நாடுகளின் பிரச்சினை என்னவெனப் பார்த்தீர்களேயானால் பொருளாதாரம்!
நான் “மதுரை கிழக்கு ஆரம்ப ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்” அப்போது ஐந்தாவது படித்து கொண்டிருந்தேன்! ///////
இப்ப ?
//கடவுளின் போர் வீரர்களில் இருவகையுண்டு. முதலாவது, தேய்ந்து போன கேசட் போல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்பவர்கள் (தருமி அவர்களுடைய பதிவின் பின்னூட்டங்களில் இவர்களை நிறைய பார்க்கலாம்). இரண்டாவது, தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் சாபம், வசை சொல்பவர்கள்.//
ஏன் இரண்டோடு நிறுத்திவிட்டீர்கள், எப்பொழுது சக மனிதரோடு இணக்கமாக வாழும் சூழலை நாம் ஏற்படுத்தாது போனோமோ அப்பொழுதே வாழ்க்கையில் அநாவசியமான போர் அவசியமாகிப் போய்விட்டது போல. கடவுளின் போர் வீரர்கள், மற்றும் கடவுளுக்கு எதிரான போர் வீரர்கள் இவர்களுக்கு மத்தியில் மிதிபடுவது மனிதம் தான்.
&& கடவுள் மதங்கள் தவிர்த்து பல நாடுகளின் பிரச்சினை என்னவெனப் பார்த்தீர்களேயானால் பொருளாதாரம்&&
தங்கத் தகடு வேய்ந்த கோவில்கள்,சிறிய மனமுடைய் பக்தர்கள் காசு போடும் பெரிய உண்டியல்கள், ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஹஜ் பயணங்கள், அடுத்தவன் காசை ஆட்டைய போட்ட பாதிரியார்கள், கடன் வாங்க வைக்கும் புனித யாத்திரைகள். இந்த விடயங்கள் நீங்க கேள்விப்பட்டிருப்பிங்க. பார்த்திருப்பிங்க. மதத்திற்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் தொடர்பு உண்டு. மனிதன் கடவுளை, மதத்தை தவறாக புரிந்துகொண்டான் என்று நீங்கள் சொல்லுவீர்களேயானால், அப்படி தவறாகப் புரிந்து கொண்டவர்களே இங்கு அதிகம்.
இப்படியே பேசிட்டு இருங்க, ஒரு நாளைக்கு சுவாமி வாலானந்தா ஆகப்போறீங்க :))
&&எப்பொழுது சக மனிதரோடு இணக்கமாக வாழும் சூழலை நாம் ஏற்படுத்தாது போனோமோ அப்பொழுதே வாழ்க்கையில் அநாவசியமான போர் அவசியமாகிப் போய்விட்டது போல.&&
நாத்திகர்கள் உலகில் வெறும் 5% தான் இருப்பார்கள்.(இன்னும் குறைவாகவும் இருக்கலாம்). இப்போது சொல்லுங்கள் உலகிலுள்ள பிரச்சனைக்கு யார் காரணம் இறைமறுப்பாளர்களா?
/இப்படியே பேசிட்டு இருங்க, ஒரு நாளைக்கு சுவாமி வாலானந்தா ஆகப்போறீங்க :))/
அவர் இப்பவே அரை வாலானன்டாவாத் தான் இருக்கார்! கூட்டாளி ஒருத்தர் புடிச்சுகிட்டு மிச்சப் பாதியாக இருக்காரே தெரியாதா?
சுவாமி வாலானந்தா வாழ்க! வாழ்க!
ஆத்திகம்-நாத்திகம் என்பதெல்லாம் வெறும் சொற்களாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல கடவுள் என்ற சொல்லையும் ஆராயமல் விட்டுவிடவேண்டும்.
நாம் எப்படி வாழ்கிறோம்? நம் உறவு சக மனிதர்களோடி எப்படி இருக்கிறது?
இதைவைத்துத்தான் எல்லாம் அமைகிறது.
ஒருவன் வாழ்க்கை கேடானதாக இருக்கிறது. ஆனால் அவன் கடவுள் நம்பிக்கையுடையவன். தேவ்நாதனைப்போல.
இன்னொருவன் வாழ்க்கை உலகம் மெச்சும்வழியில் உள்ள்து. ஆனால் அவன் நாத்திகன்.பெர்னார்டு ஷா.
இருவருள், முன்னவனே உண்மை ஆத்திகன். பின்னவன் உண்மையில் ஒரு நாத்திகன்.
கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வி இல்லை. வாழ்க்கையே நிர்ணயிக்கிறது எது கடவுளுக்கு உகந்த வாழ்க்கை என்பதை. இது என்னைப்போன்ற ஆத்திகனின் பார்வை.
நான் மேலே எழுதிய்வற்றை ‘ஆத்திகன்’ ’க்டவுள்’ என்ற் சொற்களை நீக்கிவிட்டுப்பார்த்தால் இதுவே நாத்திகனின் பார்வையும் ஆகும்.
யாரும் முழுக்கமுழுக்க நல்லவராக இருக்க முடியாது. அதே நேரத்தில் முழுக்கமுழுக்க கெட்டவராக இருக்க விழைந்து அதை நியாயப்படுத்தக்கூடாது. வாழ்க்கை ஒரு தட்டுதடுமாறி சொல்லும் ஒரு பயணம். கூடியவரை நல்லவனாக இருக்க் முயற்சி செய்ய யாராலும் முடியும். நாத்திகர்கள் வென்றிருக்கிறார்கள். ஆத்திகரும் வென்றிருக்கிறார்கள். உலகம் இருவருக்கும் பொது. இருவரும் தத்தம் வழிகளில் வாழலாம் and leave the world with a life well lived!
இக்கணிப்பின் படி, கடவுள் இருக்கிறாரா என்று ஆராயத்த்தேவையில்லை.
நாத்திகன் கடவுள் இல்ல என்றத நம்பறான், ஆத்திகன் கடவுள் இருக்குன்னு நம்பறான். அடிப்படையில் இரண்டுபேரும் நம்பிக்கைவாதிகளே. இருவரும் ஒருவரே. நம்பிக்கை என்பது மனதின் ஒரு நிறுவனமே.
இதை பற்றி மேலும் ஆழ்ந்து புரிந்துகொள்ள தொடர்ந்து என் ப்ளாக் படியுங்கள். Donations are welcome :)) (சீரியஸாதாம்ப்பா சொல்லறன்)
//ஸ்கூல் ஃபைனல் வரும்போது சாதி சான்றிதழ் கேட்பார்களே.....// அமுதா கிருஷ்ணா கேட்கமாட்டார்கள். நம் குழந்தைகளை சாதி, மதமற்றவர்கள் என்று சேர்ப்பதற்கு அரசு GO உள்ளது. ஆனால் பல பள்ளி நிர்வாகிகளுக்கு இந்த விசயம் தெரியாது. அதனால் இப்படி ஒரு கருத்து இருக்கிறது.
ஆன்மீகத்திற்கு ஞானப்பால் சம்பந்தன் போல இறைமறுப்பிற்கு வால்பையன் போலும். சின்ன வயதிலேயே கேள்விகள் தோன்றி இந்த அளவு வரை கொண்டு வந்திருக்கிறது என்பது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.
அதுகூட பரவாயில்லை, பின்னூட்டங்களில் பொதுவில் வரவேற்பு அதிகம் இருப்பது இன்னொரு ஆச்சரியம். நாம நினைக்கிற அளவுக்கு வெளியில் ஆன்மீகம் இல்லையோ என்னவோ?
//ஆன்மீகத்திற்கு ஞானப்பால் சம்பந்தன் போல இறைமறுப்பிற்கு வால்பையன் போலும்.//
ஹல்லோ வினவு என்னை ஏன் காப்பி அடிச்சீங்க.. இரண்டு நாள் முன்னாடி இரவு எம்.ஜி.நகரில் தேடினேன்.. சிக்கவில்லை நீர்.
அங்கே பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு சாதிச் சான்றிதழ் தேவை என்று எனது நண்பர் ஒருவர் கூறினாரே? நாத்திகன் என்பவர் யார் என்று குறிப்பிட முடியுமா? ஏனெனில்,
Atheist - believes that there is no God
Agnostic - believes that existence or non-existence of God cant to proven
ஒரு நாத்திகன் தான் ஏன் நாத்திகனானேன் என விளக்கத் தேவையில்லை.
அதேபோல ஒரு ஆத்திகனும் செய்யத்தேவையில்லை.
உலகம் (அதாவது நல்லவர்கள்) மனிதர்களைத்தான் பார்க்கும்.
அது போதும்.
(My two feebacks is nothing but the summary of my discussions with a RC bishop. Isnt it surprising? Exactly.
True believers love you - no matter you Believer or Disbelieve!
They dont insiste You should believe. No conditions apply)
அண்ணண் வால் ஒரு 5 ரவுண்டுக்கப்புறம் ஞானபார்வையும் தேவபாஷையும் வரும் என்பது எங்களுக்கு தானே தெரியும்
அருமை...
நான் நாத்திகனில்லை, ஆனாலும் எனக்கும் பதில் தெரியா பல கேள்விகள் கடவுளை பற்றி இருக்கின்றன
நான் கடவுள் மறுப்பாளன் அல்ல. இருந்தாலும் தங்களது பதிவு மனிதத்தை சிந்திக்க வைக்கும் பதிவு.
இதே அனானி சித்தூர்.முருகேசன் வலைப்பதிவில் இதே மாதிரி பின்னூட்டம் பார்த்தேன்
விஜய்
//ஹல்லோ வினவு என்னை ஏன் காப்பி அடிச்சீங்க.. இரண்டு நாள் முன்னாடி இரவு எம்.ஜி.நகரில் தேடினேன்.. சிக்கவில்லை நீர்.// நீங்க டி.ஆர் அசோக்கா இல்லை டாக்டர் அசோக்கா?
நல்லவிசயத்திற்கு காப்பி அடிக்கலாமே அசோக்? அப்புறம் எம்.ஜி.ஆர் நகர் கூட்டத்திற்கு வந்தவர் வினவு செல்பேசிக்கு அழைத்திருக்கலாமே. உங்களை சந்திக்க முடியாமல் போனதில் வருத்தம்தான்.
இருக்கட்டும். பின்னூட்டம் சீராக போய்க்கொண்டிருக்கும்போது ஏன் ரவுண்டு, ஞானபாசையெல்லாம் எதற்கு அசோக்?
/// கரடி இனங்களில் அனைத்துமே மாமிசம் உண்ணும், அதற்காக அதற்கு கோரை பற்கள் உள்ளன! ஆனால் ”பாண்டாகரடி” எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள மரத்தில் வாழ பழகி இன்று மூங்கில் குருத்தை மட்டும் சாப்பிட்டு வளர்கிறது, பரிணாம வளர்ச்சியின் எச்சமாக அவற்றிற்கு இன்றும் கோரை பற்கள் உள்ளன!///
தலைவா! நான் கரடியெல்லாம் பொதுவா வெஜிட்டேரியன்னு நெனச்சேன்! அப்படித்தான் இங்கேயும் சொல்றாங்க??
*** Although most bears are vegetarians their habitats are plentifully supplied with plants and fruits for only five or six months of the year. Therefore, in order to survive they become predators and scavengers. There is little doubt that all bears would prefer a high-meat diet. Forest bears are not physically equipped to take down a large mammal; and since they are unable to find enough rodents and carrion, they must become omnivorous. Only the polar bear has solved the problem by learning to prey on seals.***
//நீங்கள் என்னை உசுப்பேத்துவது எல்லாம் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது!//
இதுக்குதான் எதையும் தாங்கும் இதயம் என்று பெயர். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
Cell (செல்) என்று மூன்று பகுதி பிபிசி டாக்குமெண்டரி உள்ளது. அவசியம் பார்க்கவும்....
உயிரினை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் ஏறக்குறைய 100 சதவிகிததை தொட்டு விட்டதை அறியலாம்
அப்படியே டார்வின் பற்றிய ஒரு டாக்குமெண்டரியும் உள்ளது.
மை டெஸ்டிங் - 1 2 3
தம்பி மஞ்சள் முகம் ராஜன் எங்கு இருந்தாலும் ஆடுகளத்து வரும் படி
கேட்டுக்கொள்கிறோம்.
"அடுத்து நான் ஏன் பிறந்தேனா??"
இல்ல 【♫ஷங்கர்..】 நல்லவன் வாழ்வான்.
அண்ணா,
//விவேகானந்தர் வரலாறு படித்தேன், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வரலாறு படித்தேன்// நான்படித்த அனுபவத்தில் சொல்கிறேன் தப்பா நினைக்காததிங்க ஏன்ன நானும் முருகன் ஸ்கூல்க்கு பக்கத்து ஸ்கூல்ல தான் படுச்சேன்.
நீங்க கடவுள தேடி படிக்கிறதுக்கு பதிலா அதுல சொல்ற நல்லவிஷயத்தை மட்டும் எடுத்து வாழ்ந்தாலே போதுமே. அதற்குத்தானே இத்தனை உவமேயங்கள். உள்பொருள் அறிந்த பின் ஏன் மொழிப்பிழைகளை பார்க்க வேண்டும்? மொழிப்பிழை தான் உங்கள் குறைஎன்றால் ஏன் உட்பொருளை விவாதிக்க வேண்டும்?
உட்பொருள் - நல்ல வாழ்க்கை முறை (மூடநம்பிக்கை நீங்கலாக)
மொழிப்பிழை - (நமக்குப்புரியாத) ஏதோவொரு காரணத்தால் ஏற்பட்ட கடவுளின் வடிவங்கள்
அடுத்து வர வாய்ப்பிருந்தால் வருகிறேன்.
தல, நீங்க ஏன் ஒரு புது மதம் உருவாக்ககூடாது?
//நீங்கள் என்னை உசுப்பேத்துவது எல்லாம் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது!// அருமையா சொல்லியிருக்கீங்க தல....
உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்க
Val,
You are great.. hatsoff to you.
You are among the rare intellects who have FULLY read Geeta, Quran, Bible, Osho..etc.. I feel it needs lot of motivation...
I have bought English version of Geeta (forced to buy).. but I have not even read few pages from it. Similarly I have been given(?) Bibles... never read that too... I am yet to see a Quran Book.
சுவராசியம், பரிணாம வளர்ச்சி பற்றி எழுதுங்கள் தல.
அனாயாசமான எழுத்து நடை,இன்னும் வாசிக்கலாம்னு உணர்வை தருகிறது,தொடர்வோம்.
// மெய்ஞானம் என்ற பெயரில் உன்னில் கடவுளை தேடு என்று மாறி கொண்டிருக்கிறது! //
உண்மை.
எந்த ஒன்றும் மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் வரைதான், அது வளர்ச்சியடைகின்றது. மாற்றுக்கருத்துக்கள் இல்லாத போது, அது அரைகுறையாக இருந்தாலும் முடிவடையும். எந்த ஒன்றும் ஆராய்ந்த பிறகே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்துப் பரிமாணங்களும் கிடைக்கும். உங்களுடைய கருத்துக்கள் தொடரட்டும். நன்றி வால்ஸ்.
(என்ன இப்ப எல்லாம் நம்ம பிளாக் பக்கம் வருவது இல்லை. போரடிக்கும் வகையில் உள்ளதா?)
//நீங்கள் என்னை உசுப்பேத்துவது எல்லாம் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது!//
தல இதுதான் நமக்கு ஊக்க மருந்துன்னு சொல்லிட்டிங்க...நான் முன்னமே உங்க கூட கைக்கோத்தாச்சு...
சிக்கலான களத்தில் மிக நாகரீகமான எழுத்துக்கள். மறுப்பு கொள்கை உடையவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவச பட்டு எல்லை மீறுவார்கள். தங்களின் நடை பண்பான ராஜ நடை. தங்களின் எழுத்துப்பணி தொடர எல்லாம்வல்ல "இறைவனை" வேண்டிக்கொள்கிறேன்.
பொறுமையாகவே வாசித்தேன்.
புரிய வைத்தலும் அழகுதான்.
நல்ல பதிவு..துணிவும் பிடிச்சிருக்கு அருண்...
முகிலன் said...
வாவ். ஒன்பதாவதுக்கு மேல் படிக்கவில்லையா?
உங்கள் அறிவியல் அறிவு - கோட்கள், பரிணாம வளர்ச்சி - வியக்க வைக்கிறது
நானும் வியந்துக்கொண்டிருக்கேன்...
Keep Going.!
இரண்டாம் மூன்றாம் முறைகள் வாசித்து எழுத்துப்பிழைகளை குறையுங்கள், உங்கள் கருத்துக்கு வலிவு கிடைக்கும் வால். மேலும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய இடங்களிலெல்லாம் ஆச்சரியக்குறி ஏன்?
உங்கள் தளத்தை அவ்வளவு எளிதில் திறக்க விடாத வண்ணம்
http://www.amitjain.co.in/pageview.php என்கிற ஒரு கோடிங் @ நிரல் எதிர்ப்பு வேலை செய்கிறது.
அதை முடிந்தால் தூக்கிடுங்க வாஜ்ஜாரே..
//தம்பி மஞ்சள் முகம் ராஜன் எங்கு இருந்தாலும் ஆடுகளத்து வரும் படி//
மஞ்ச யெல்லோ மஞ்சத் தமிழன் நான் உலகத்த ரட்சிக்க வந்த கடவுளும் நான்தான் !
என்ன வெல்ல எவனுமிங்கில்ல ! அனானிங்கல்லாம் என்னோட செல்லப் புள்ள !
//முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய இடங்களிலெல்லாம் ஆச்சரியக்குறி ஏன்?//
முடிவில்லாத வியப்பெனக் கொள்க !
//அவர் இப்பவே அரை வாலானன்டாவாத் தான் இருக்கார்! கூட்டாளி ஒருத்தர் புடிச்சுகிட்டு மிச்சப் பாதியாக இருக்காரே தெரியாதா?//
வாலண்டைன சொல்றீங்களா ? உங்களுக்கு லவ் மூடு ஸ்டாட் ஆயிடிச்சு போல
//உலகம் (அதாவது நல்லவர்கள்)//
உலகத்துக்கு புது அர்த்தமே குடுத்துட்டாரு அண்ணன் ! ஆமா சார் நீங்க உ .த பதிவுல மீட் பண்ணினோமே அவர் தான
///மனிதம் நிலைக்க வேண்டும் என்பதற்காக நான் மதவாதிகளிடம் சண்டை போட்டு கொண்டே தான் இருப்பேன்///
சண்டை தானே மனிதத்தைக் கெடுக்கிறது. உங்களைப் போன்ற நடுநிலையாளர்களாவது சண்டை போடாமல் அன்பும் கருனையும் கொண்ட வார்த்தைகளாலேயே எழுதுங்களேன். மனிதம் வளரும் என்ற நம்பிக்கையாவது உண்டாகும்.
//சண்டை தானே மனிதத்தைக் கெடுக்கிறது. உங்களைப் போன்ற நடுநிலையாளர்களாவது சண்டை போடாமல் அன்பும் கருனையும் கொண்ட வார்த்தைகளாலேயே எழுதுங்களேன். மனிதம் வளரும் என்ற நம்பிக்கையாவது உண்டாகும். //
நாங்கள் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னம் காட்டுபவர்கள் அல்ல நண்பா. மதம் ஒழிந்தால் மனிதம் வளர களம் உண்டாகும் மதம் கொண்ட மிருகத்திடம் மூர்க்கம் தவிர எதையும் எதிர் பார்க்கஇயலாது
சூப்பர்.. கலக்கறிங்க..
நாகரீகமான எழுத்துக்கள்.
:))
//பின்னூட்டம் சீராக போய்க்கொண்டிருக்கும்போது ஏன் ரவுண்டு, ஞானபாசையெல்லாம் எதற்கு அசோக்?//
வால்ல கேட்டுட்டுதான் போட்டேன் வினவு... உங்க செல் நம்பர் தெரியாதுங்கனா... அன்னைக்கி ருத்ரன் சாரையும் மிஸ் பண்ணிட்டேன் :(
மதிய விளையாட்டு, கரும்பு காட்டுக்கு செல்வது, குருவி பிடிப்பது, ஓணான் அடிப்பது, மீன் பிடிப்பது, கிணற்றில் குளிப்பது என எல்லா தரப்பிலும் நண்பர்கள்! //
மதுரையில இதெல்லாம் பாஸிபிளா... எனக்குத் தெரியாம போச்சே. மிஸ் பண்ணிட்டேன்!
இன்று வரை நான் என் குழந்தைக்கு பள்ளியில் சாதி சான்றிதழ் தரவில்லை! //
பெருமையாய் உள்ளது நண்பா.
விஞ்ஞானத்தின் சகோதரன் என்று மெய்ஞானம் என்ற பெயரில் உன்னில் கடவுளை தேடு என்று மாறி கொண்டிருக்கிறது //
அதே தான் வால்.
உங்களின் வாசிப்பனுபவம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது வால்.
//மதிய விளையாட்டு, கரும்பு காட்டுக்கு செல்வது, குருவி பிடிப்பது, ஓணான் அடிப்பது, மீன் பிடிப்பது, கிணற்றில் குளிப்பது என எல்லா தரப்பிலும் நண்பர்கள்!//
இதுக்கு நாம ஜோடி சேர்ந்துக்கலாம்:)
அப்பா ராஜன், ஓவர் க்ராஸ்டாக்கா இருக்கே! உங்க கிட்ட பேசினா மட்டும் நீங்க பேசுங்க. சரியா. தல இருக்க வாலாடக்கூடாது. தல பதில் சொல்லட்டும். சொன்னா கேளுங்க நண்பா!
//நான் கேட்டுகொண்டே தான் இருப்பேன்///
இந்த கேள்வி கேட்கும் குணம் ஒன்று மட்டும் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். கூடவே விதண்டாவாதமும் கொஞ்சம் இருக்கு.
தேடுதல் தொடரட்டும். இந்தப் புள்ளியில் ஆரம்பித்தது தான் என் தேடல்களும். போகும் பாதைகள் வேறு வேறு என்றாலும் எல்லையில் காணப்போவது ஒன்றுதான் :) விரைவில் சென்றடைய வாழ்த்துக்கள்.
@vaal payyan
natthigana irukarathu unga istam unga nambikai. eppa nenga athai publica solrengalao appa 4 vithamana comments varum. athai etthukara pakkuvam vendum. neegan ivlo boosk padichenga, adhi sankarar eluthina pala books iruku athaium padichu parunga unga kelvigaluku vilakam kidaikum. intha ulagathile, science ella visaythukum vilakam tara mudiyathu
//உங்க செல் நம்பர் தெரியாதுங்கனா... //
வினவின் முகப்பு பக்கத்திலேயே செல்பேசி எண் உள்ளது அசோக்..
தேங்கஸ் வினவு :)
//அப்பா ராஜன், ஓவர் க்ராஸ்டாக்கா இருக்கே! உங்க கிட்ட பேசினா மட்டும் நீங்க பேசுங்க. சரியா. தல இருக்க வாலாடக்கூடாது. தல பதில் சொல்லட்டும். சொன்னா கேளுங்க நண்பா! //
என் கமென்ட படிக்க அவ்வளவு கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்கலாம் ! உங்களுக்கு வேணாம் வால் பையன் தலையா இருக்கலாம். எனக்கு இல்ல என் தல என் கழுத்துல தான் இருக்கு !
//உங்க கிட்ட பேசினா மட்டும் நீங்க பேசுங்க//
அப்பிடி எல்லாம் என்னால இருக்க முடியாது நான் அப்பிடிதான் குறுக்க பூந்து பேசுவேன் !
மனிதனை காப்பற்ற கடவுள் வந்த காலம் பொய், இப்பொது கடவுளை காப்பாற்றும் வலையை மனிதன் செய்ய தொடங்கி விட்டான்.
//மனிதன் மட்டுமே பரிணாம வளர்ச்சியில் தற்போதைய இறுதிநிலையில் இருக்கிறான்(?)
நாம் நாகரிகதீன் மாதியானத்தில் இருக்கிறாம், இரவை அடிய கடவுளை கடத்து வர வேண்டும்.
katavul namaku thevai avlothan.
கடவுள் பற்றிய நமது பாதைகள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.
//இன்று வரை நான் என் குழந்தைக்கு பள்ளியில் சாதி சான்றிதழ் தரவில்லை!//
இந்த விஷயத்திற்காக உங்களைப் பாராட்டுகிறேன். எனக்கு இதில் சில சந்தேகங்கள் உண்டு. ஒரு தனிமடல் ப்ளீஸ். மின்னஞ்சல் முகவரி: kvraja [at] gmail [dot] com
//நான் ஏன் நாத்திகனானேன்!//
நாங்க கேக்கவேயில்லையே?
கல்வி வேறு. அறிவு வேறு என்பதற்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணம் தல!
தொடரட்டும் உங்கள் அரும்பணி! வாழ்த்துக்கள்!
வால்...
ஆரம்பத்தல் ஜாதி பற்றிய ஆரம்பித்தநீங்கள் திடீரென்ற் நாத்திகம் பற்றியும் பரிணம வளர்ச்சி பற்றியும் பேச ஆரம்பிச்சுட்டீங்க... ஒன்றுக்கொன்று முரணாக இருக்குதே வால்.
ஆனாலும் இந்த டார்வினின் பரிணாம வளர்ச்சிபற்றியய கருத்தில் கூட இன்னும் தீர்வு காணப்படவில்லை... திடீரென்று பரிணாம வளர்ச்சி எப்படி நின்னுப்போச்சு...? குரங்குகள் குரங்குகளாவே பிறந்து செத்துப்போகிறது, ஏன் மனிதனாக மாறவில்லை... விடைக்கிடைக்காத கேள்விகள்...
http://www.youtube.com/watch?v=vioZf4TjoUI&feature=related
http://www.youtube.com/watch?v=ZQ6ficvJODQ&feature=PlayList&p=185F0A0053B35A70&playnext=1&playnext_from=PL&index=37
எதுவெல்லாம் இயற்கையோ அதுவெல்லாம் கடவுள்.எதுவெல்லாம் மனிதன் புரிந்து கொள்ள முடியா கனவாய் உள்ளதோ அதுவெல்லாம் கடவுள்
உங்கள் அறிவியல் அறிவு - கோட்கள், பரிணாம வளர்ச்சி - வியக்க வைக்கிறது//;-))
இந்து மதத்தை அறிய விவேகானந்தர் வரலாறு படித்தேன், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் வரலாறு படித்தேன்,, சாரதா அம்மையார் வரலாறு படித்தேன்! ஒஷோ தத்துவங்கள் படித்தேன், தம்மபதம் படித்தேன், பைபிள் படித்தேன், குரான் படித்தேன்! ஆனால் எல்லாவற்றிலும் கடவுள் என்ற சொல் பயன்படுகிறதே தவிர அவை எல்லா இடங்களிலும் ஒரு ”பொருளை” போலத்தான் பயன்படுகிறது!//
நம்ப முடியவில்லை..அது சம்பந்தமான நிறைய குறிப்பு,கருத்துக்களை கொடுத்து அதை நீங்கஃள் எந்த இடத்தில் எப்படி மறுக்கிறீர்கள் என புரியும்படி ஒரு பதிவு இடுவீர்கள் எர்ன நம்புகிறேன்..உதாரனமாக கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூலில் இந்து மதம் ஒவ்வொரு சாச்திற சம்பிரதாயங்களிலும் எவ்வாறு அறிவுப்பூர்வமானதாக உள்ளது என வீளக்கி இருப்பார் இதுவரை அக்கருத்தை மறுக்க ஆள் இல்லை ..கடவுள் என்பதை பூதமாக பார்க்கும் கூட்டம் உள்ளது..கடவூளை காக்கும் சக்தியாக பார்ப்பவர்கள் உள்ளனர்..கடவுளை ஒரு துணையாக,நன்பனாக பார்ப்பவர்கள் உண்டு. உங்களை விட பிரமாதமாக சிந்திதவர்கள் சித்தர்கள்.சித்தர்கள் பாடல்கள் படியுங்கள் ,,பட்டவர்த்தனமாக எழுதி வைத்துள்ளனர்...திக்கற்றவனுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுப்பது கடவுள் என்ற பொருளெ.உங்களை போன்ற அதி புத்திசாலிகளுக்கு ! கடவுள் முட்டாள்தனத்தின் மொத்த உருவமாக தெரியலாம்.ஆனால் கடவுள் நம்பிக்கையின் சக்தி.பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கயில் எப்படி ஈழத்தமிழனும் ,நாமும் அவர் வருவார் ஈழம் மலரும் எண்ற நம்பிக்கயில் ஆறுதல் படுகிறோமோ அது போன்ற மெல்லிய தன்னம்பிக்கை கருவி ...நன்பன்,கடவுள்...
எனது கேள்விகளுக்கு ”சாதாரணமாக” யாரும் பதில் சொல்லி தப்பிக்க முடியாது! நான் கேட்டுகொண்டே தான் இருப்பேன்! நண்பர்களின் கேள்விகளுக்கும் விடை தேடி கொண்டே தான் இருந்தேன்!
......... Impressed! Keep going!
Hi. I love Your post. I love Sachin the Master.
Have a look @ here too.
Anjali Tendulkar Rare Photos
//நான் ஏன் நாத்திகனானேன்!//
நாங்க கேக்கவேயில்லையே?
பின்ன எதுக்கு இங்கிட்டு(இந்த பிளாக்கிற்கு)வந்தீய?ஏம்ப்பு நாங்கேட்டது சரிதான?
இறைநம்பிக்கை, இயற்பொருள் நம்பிக்கை, இரண்டும் சுயசார்பானது, இந்த இரண்டினையும், இன்னொருவர் மீது இறைந்து, ஆதிக்கத்தின் பிடியில் இருக்கவேண்டும் என்கிற அடிப்படையான ஆணிவேரினை, அருண் அவர்கள் ஆணித்தரமாக அசைத்துள்ளதை அனைத்து பதிவுகளிலும் அறிய முடிகிறது,
அவரின் அஞ்சாநெஞ்சத்தின் அனைத்து வார்த்தைகளும் ஆதிக்க வெறி கொண்டோரை சாடுபவை,
பொதுவாக மேற்கூறிய இருசாரார் மூலம் எந்த குழப்பமும் வருவதில்லை,
இவர்களுடன் சுய லாபத்திற்காக இணைந்த இயல்பற்றோர் மூலம் அனைத்து குழப்பங்களும் வருகிறது.,
அத்தகையோரையும், அதன் சூழ்நிலைகளையும் நீங்கள் அவசியம் அடையாளம் காட்டி, அன்பர்களுக்கு விழிப்புணர்வூட்டி, அறியாமையை அகற்றவேண்டும் ஆழ்ந்து, அகன்று ஆய்ந்த பார்வையில்.
ஆக்கங்களுக்கு அன்பான வாழ்த்துகள்.
Post a Comment