இது என்னுடய 351 ஆவது பதிவு, போன பதிவையே குவியலாக எழுதத்தான் நினைத்தேன், பாலோயர்ஸ் 1000 பூர்த்தியானதும் குவியல் எழுதிக்கொள்ளலாம் என சின்ன ப்ரேக் விட்டாச்சு!, 700 பாலோயர்ஸ் வந்ததிலிருந்தே பழைய ஆபிஸில் ட்ரீட் கொடுக்க முடியவில்லை, 1000க்கு மெகா ட்ரீட் கேட்டிருந்தார்கள். தயாராக இருக்கவும், விரைவில் ட்ரீட் கொடுக்கிறேன். கோவை நண்பர்கள் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டால் உள்ளூரில் சந்திக்க வசதியாக இருக்கும், இப்ப தான் நான் கோவைவாசியாகி விட்டேனே!(இந்த பதிவு எழுதும் பொழுது 999 பாலோயர்ஸ்)
மூன்று மாத காலம் இணையத்தில் தொடர்ச்சியாக இருக்க முடியாததால் என்னை பின்தொடரும் பல நண்பர்களை நானும் பின் தொடர முடியவில்லை, நண்பர்கள் உங்களது தள முகவரியை தெரியப்படுத்தவும், கண்டிப்பாக அதில் பாலோயர்ஸ் ஆப்சன் வையுங்கள், நான் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 800 க்கு மேல் போய்விட்டது, 300 க்கு மேல் டைரக்டாக பாலோயர் ஆகமுடியாது, உங்களிடம் பாலோயர் ஆப்சன் இருந்தால் தான் முடியும்!, நான் உங்களுக்கு பாலோயர் என்றால் எனக்கு பதிவை மின்னஞ்சலாக அனுப்புவதை தவிர்க்கவும்.
*******************
எக்ஸ் அல்லது பழைய ப்ளாக்கர் ஒருவருடன் ஒரு குழுமத்தில் கருத்து மோதல், குழுமத்தில் சேர்க்க நான் ஒருவரை சிபாரிசி செய்ய, அந்த நபரை தனிப்பட்ட முறையில் பிடிக்காது என்ற காரணத்திற்காக விடாப்பிடியாக சேர்க்கக்கூடாது என நின்றார், கருத்து மோதல் என்று வந்துவிட்டால் நான் வயது வித்தியாசம் எல்லாம் பார்ப்பதில்லை, அங்கேயும் அதையே செய்தேன், கருத்தோடு மனிதனையும் சேர்ந்து பார்த்து கருத்தோடு மனிதனையும் சேர்த்து வெறுக்கும் பழக்கம் போல அவருக்கு.
பின்பு ஒருமுறை நான் ஒரு ”நிறுவனத்தின்”(இயக்கம்னும் சொல்லலாம்) உளவாளி என புரளியை கிளப்பிவிட்டார், வேறு யாரோ அவருக்கு அம்மாதிரி சொல்லியிருப்பாங்க போலன்னு நினைச்சு எந்த நாய் சொன்னாலும் நம்பிவிடுவதா என கேட்க, நான் அவரை சொன்னதாக நினைத்து கொண்டார் போலும்!.
இன்று நண்பர் ஒருவர் அவரிடம் பேசி கொண்டிருக்கையில் அவரிடம் அலைபேசியை வாங்கி, வாங்க நம்ம உணவகத்திற்கு என்றேன், ”இடம் பார்த்தது தெரியும், திறக்கப்போறது தெரியும், திறந்தது தெரியும், ஆனா கண்டிப்பா வரமாட்டேன்” என்றார்!
சொம்பு நசுங்கியே இருந்தா பார்க்க நல்லாவா இருக்கும், பக்கத்துல ஒரு டிங்கரிங் பட்டறை கூடவா இல்லை என கேட்க தோன்றியது!, நண்பரின் அலைபேசி எனக்கு புதிது, நான் அணைக்க தெரியாமல் விட, அவர் கேட்டு கொண்டே இருந்திருக்கிறார்!. ஐ லைக் தட் மேனர்ஸ்!
****************
சினிமா பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது(இணையத்தில் கூட), புத்தகம் படித்து சில மாதங்கள் ஆகிவிட்டது, கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் தான், விமர்சனம் பகுதியை நிரப்ப முடியும்!
***************
நம்ம நண்பர்கள்கிட்ட பிடிச்ச விசயம் என்னான்னா ரொம்ப வெளிப்படையா இருக்குறது, சும்மா பேருக்கு நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு போகாம, ஒவ்வொன்றையும் அதன் தனிதனியாக பாராட்டியும், விமர்சித்தும் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள், கோவை பதிவர் சந்திப்பு, டுவிட்டர் நண்பர்கள் சந்திப்பு என நடக்கும் பட்சத்தில் நிச்சயமாக கலந்து கொள்ள நினைக்கிறேன், அப்படி எதாவது ஏற்பாடு பண்ணுங்கப்பா!
************
தத்துவம்(நானா ஜிந்தித்தது)
நான் எங்கேயும் தோற்பதில்லை, ஏனென்றால் உங்களை வெற்றியடைய அனுமதிப்பதே நான் தான்!
************
கவிதை(மாதிரி)
முடிவுறாத இரவொன்றை
உனக்குப் பரிசளித்து
உன் மிக நீண்ட கனவாய்
நான் மாற வேண்டும்
62 வாங்கிகட்டி கொண்டது:
1000 க்கு வாழ்த்துகள் தல.
--
ரெண்டாவது விஷயம் ஒன்னும் புரியலே. ராஜன் எல்ப் மீ.
1000 க்கு வாழ்த்துக்கள்.......
நான் 1000 த்தில் ஒருவன்.
ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள் தல
ஆஆஆஆஆஆயிரமா..வாழ்த்துக்கள் அருண்.
ஆஹா,, நாந்தான் அந்த ஆயிரம் :))
1001 நான். ரெண்டாவது விஷயத்தின் நதிமூலம் என்ன ? வேர் ஈஸ் தட் குழுமம் ?
ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள்
vaazthukkal thala :)
வாழ்த்துகள் வால்
வாழ்த்துகள் வால் அண்ணா... எப்போ சென்னை வருவீங்க...?? அப்போ கண்டிப்பா உங்கள பாத்துடனும்...
1000 பாலோயருக்கு வாழ்த்துக்கள் வால்...300 பதிவுக்கு 1000 பெரிய விஷயம்.. பாருங்க நான் 700க்கு மேல எழுதியாச்சு..இன்னும் நொண்டிக்கினே இருக்கேன்...
கோவைக்கு வந்து உங்க ஓட்டலில் சாப்பிடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..
வாழ்த்துக்கள் வால்... அந்த மேனர் எனக்கும் பிடித்தது... !
ஆயிரத்திற்கு நல்வாழ்த்துகள் வால்.
1000 வாலாவுக்கு வாழ்த்துக்கள்.
விரைவில் 2000, 3000, 50000 வாலாவாக வால்த்துக்கள்
அடுத்த மாசம் கோவை வருகிறேன் .. கண்டிப்பா மீட் பண்ணுவோம் .
ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள்.
சொக்கா...... ஒண்ணா? ரெண்டா? ஆயிரம் ஃபாலோயர்ஸாமே........
// நான் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 800 க்கு மேல் போய்விட்டது, 300 க்கு மேல் டைரக்டாக பாலோயர் ஆகமுடியாது, உங்களிடம் பாலோயர் ஆப்சன் இருந்தால் தான் முடியும்! //
இதே சிக்கல் எனக்கும் இருக்கிறது... இதன்காரணமாகவே வேர்டுபிரஸ் வலைப்பூ வைத்திருப்பவர்களை பின்தொடர முடிவதில்லை... இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா...
Congratulations! :-)
வாழ்த்துக்கள் நண்பரே
தொடர்ந்து மென்மேலும் சிறக்க வேண்டும்
வாழ்த்துக்கள் வால்ஸ் :)
ஒரு ஆயிரம் பல்லாயிரமாக வாழ்த்துக்கள்....
கனவு மெய்ப்பட வேண்டும்..
வால்த்துக்கள் தல...
சீக்கிரமாவே கோவையில் சந்திப்போம்... :-)
- 1000 -
கண்கள் பனிக்கின்றன ...
இதயம் இளிக்கிறது ..
கைகள் நடுங்குகின்றன .
ங்கொய்யாலே..
சரக்கு வாங்கி வை-மதியம் வரேன் :-)
அந்த ஆயிரத்தில் ஒருவனான என் வாழ்த்துக்களும்..
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்...
..//இது என்னுடய 351 ஆவது பதிவு//..
அடங்கொக்கா மக்கா ..
350 கிழி கிழிச்சிருக்கே .
மக்களும் தாங்கியிருக்காங்க பாரேன்
..//போன பதிவையே குவியலாக எழுதத்தான் நினைத்தேன்//..
நீ எழுதுன 350-மே குவியல்தானே ?
..//தயாராக இருக்கவும், விரைவில் ட்ரீட் கொடுக்கிறேன். கோவை நண்பர்கள் உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டால் உள்ளூரில் சந்திக்க வசதியாக இருக்கும்//..
வெளியூர் நண்பர்கள் அறிமுகப்படுத்திக்கிட்டா - உள்ளூர்ல சந்திக்க மாட்டியா?
..//இப்ப தான் நான் கோவைவாசியாகி விட்டேனே!//..
சரி நான் வேற ஊருக்கு கெளம்புறேன்
..//நான் உங்களுக்கு பாலோயர் என்றால் எனக்கு பதிவை மின்னஞ்சலாக அனுப்புவதை தவிர்க்கவும்.//..
எதுல அனுப்புனாலும் படிக்கப் போறதில்லைங்குறியா பங்கு ?
..//எக்ஸ் அல்லது பழைய ப்ளாக்கர் ஒருவருடன் ஒரு குழுமத்தில் கருத்து மோதல்//..
எக்ஸ்-ன்னு வந்துட்டாலே மோதல் ஆரம்பிச்சிடுதுபா :-))
..//கருத்து மோதல் என்று வந்துவிட்டால் நான் வயது வித்தியாசம் எல்லாம் பார்ப்பதில்லை//..
எச்சூஸ் மீ
உங்களுக்கு என்ன வயசு சார் ?
..//சொம்பு நசுங்கியே இருந்தா பார்க்க நல்லாவா இருக்கும், பக்கத்துல ஒரு டிங்கரிங் பட்டறை கூடவா இல்லை என கேட்க தோன்றியது!, நண்பரின் அலைபேசி எனக்கு புதிது, நான் அணைக்க தெரியாமல் விட, அவர் கேட்டு கொண்டே இருந்திருக்கிறார்!//..
எதை கேட்டுக்கிட்டே இருந்தார்??
..//சினிமா பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது(இணையத்தில் கூட), புத்தகம் படித்து சில மாதங்கள் ஆகிவிட்டது, கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் தான், விமர்சனம் பகுதியை நிரப்ப முடியும்!//..
இனி இது வேறயா ????
..//நம்ம நண்பர்கள்கிட்ட பிடிச்ச விசயம் என்னான்னா ரொம்ப வெளிப்படையா இருக்குறது, சும்மா பேருக்கு நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு போகாம, ஒவ்வொன்றையும் அதன் தனிதனியாக பாராட்டியும், விமர்சித்தும் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்,//..
ங்கொய்யால - இதை கவனிக்காம
நான் தனித்தனியா கமெண்ட் போட்டுட்டு இருக்கேனே :-(((
..//கோவை பதிவர் சந்திப்பு, டுவிட்டர் நண்பர்கள் சந்திப்பு என நடக்கும் பட்சத்தில் நிச்சயமாக கலந்து கொள்ள நினைக்கிறேன், அப்படி எதாவது ஏற்பாடு பண்ணுங்கப்பா!//..
லாலி ரோடு பெட்ரோல் பங்க கடை
ஓகே-வா?
தத்துவம்(நானா ஜிந்தித்தது)
ஜிந்தித்ததாலா ?
ஜின் - தித்தித்ததாலா ??
..//முடிவுறாத இரவொன்றை
உனக்குப் பரிசளித்து
உன் மிக நீண்ட கனவாய்
நான் மாற வேண்டும்//..
தீராத சரக்கு பாட்டில் ஒன்றை
உனக்குப் பரிசளித்து
அதை எல்லாம் நானே குடித்து
மட்டையாக வேண்டும்
1000த்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்
பாஸ் டிரீட் எப்போ :-))
இது மகா மெகா டிரீட்டா இருக்கனும் பாத்துங்குங்க
1000க்கு வாழ்த்துக்கள்
1000 துக்கு 1000 வாழ்த்துக்கள் தல ...............
அது பிறவி மாற்றுதிரனாளி சோம்பா இருக்கப் போகுது .......... நாம ஒன்னியும் பண்ண முடியாது .....ஹி.ஹி.ஹி.......
நல்லா இருக்குங்க....
//ஜாக்கி சேகர் said...//
அண்ணன் எல்லாப் பொதுக்கூட்டதுலயும் ஒரு தனிக்கூட்டம் போட்டுடறார்ப்பா!
//ரெண்டாவது விஷயம் ஒன்னும் புரியலே. ராஜன் எல்ப் மீ.//
ஹௌ கேன் ஐ! ;-)
வாழ்த்துகள் தல :)
வாழ்த்துகள் தல :)
//எக்ஸ் அல்லது பழைய ப்ளாக்கர் ஒருவருடன் ஒரு குழுமத்தில் கருத்து மோதல்//
யார்கூடதான் ஒரண்ட இழுக்கல நாம!
//மோதல் என்று வந்துவிட்டால் நான் வயது வித்தியாசம் எல்லாம் பார்ப்பதில்லை, //
நாம் தான் காதல்லயே வயசு வித்யாசம் பாக்கறதில்லயே! மோதல்ல எதுக்கு!?
//பின்பு ஒருமுறை நான் ஒரு ”நிறுவனத்தின்”(இயக்கம்னும் சொல்லலாம்) உளவாளி//
சீ ஐ ஏ உளவாளி ஜேம்ஸ் பாண்டா தல நீயு!
//முடிவுறாத இரவொன்றை
உனக்குப் பரிசளித்து
உன் மிக நீண்ட கனவாய்
நான் மாற வேண்டும்//
அடுப்புல எதோ கருகற வாசனை வருது! அதப் போயிப் பாருமய்யா!
வாழ்த்துகள் வாலு
ஆயிரம் ஃபாலோயர்ஸாமே.. அந்த ட்ரீட்ல என்னையும் சேர்த்துக்குங்க.. ஹி..ஹி..
விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை
வாழ்த்துகள் அருண். மிக்க மகிழ்ச்சி.
1000த்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்,
பாஸ் டிரீட் எப்போ :-))
இது மகா மெகா டிரீட்டா இருக்கனும் பாத்துங்குங்க
ஆயிரத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா..
தத்துவம் நல்ல இருக்கு .. ஹி ஹி
வாழ்த்துகள் வால்.
வாழ்த்துக்கள் தல...!
1000 க்கு வாழ்த்துகள்
யோவ்.. வால்.. கவிதை நிஜமாகவே நல்லாயிருக்குதுய்யா.!!
வாழ்த்துக்கள் பாஸ்!
Post a Comment