கிரிக்கெட் ஸ்டெம்பை அவன் கையில் எடுக்கும் போது தெரிந்து விட்டது, நிச்சயம் இது சமாதானத்தில் முடியப்போவதில்லை என்று, பின்னாலே மீதி இருந்த இரண்டு ஸ்டிக்கையும் இரு தடியர்கள் உருவினார்கள், என்னை நோக்கி முன்னேற தொடங்கினார்கள், நான் சாவகாசமாக அப்போது தான் செய்யது பீடியை வழித்து கொண்டிருந்தேன், எனது அப்போதைய கடுப்பெல்லாம் கொஞ்சநாளா செய்யது பீடி உள்ளே தூள் இல்லாமல் வெறும் இலை மட்டும் சுற்றி வருவது தான், எவ்ளோ இழுத்தாலும் புகையே வரமாட்டிங்குது!, அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேன் தைரியங்கீறது என்ன தெரியுமா, பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது!.
பசுமலை ஸ்கூல் கிரவுண்டில் ஞாயிற்றுகிழமை பசங்கெல்லாம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம், அன்றைய நாள் ஜீவாநகர் பசங்க கூட பெட்மேட்ச் வேற, எல்லாரும் ரொமப் சின்சியரா ஆஜர் ஆகியிருந்தோம், நான் கூட ஒரே ஒரு குவாட்டர் மட்டும் தான் குடித்திருந்தேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள், கொஞ்சம் சீரியஸ் மேட்ச் என்பதால் பக்கத்தில் விளையாடி கொண்டிருந்த பசங்ககிட்ட பேசி வேறு பக்கம் விளையாட சொல்லியிருந்தோம், அப்படியும் ஒரு லோக்கல் குரூப் விளையாடியது, நாங்க டோர்னமெண்ட் விளையாடுறோம், கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாதிங்க, நாங்க ஒரு மேட்ச் முடிஞ்சதும் போயிருவோம் என்றும் சொல்லியிருந்தோம், ஆனாலும் அவர்கள் அடித்த பந்து ஒன்று நம்ம சைடு பையன் முகத்தில் பட்டு விட்டது!
தற்காப்போ, தாக்குதலோ நமது உடல் வலிமை நமது வெற்றியை நிர்ணயிப்பதில்லை, நமது மனவலிமை தான் அதை தீர்மானிக்கும். நெருங்கி வரும் அவன் நிச்சயம் ஸ்டெப்பால் என்னை தாக்குவான் என்று தெரியும், நான்கு அடி இடைவெளியில் நெருங்கும் பொழுது தான் கடைசி இழுப்பு முடித்து பீடியை எரிந்தேன், அவன் என்னிடம் எதுவும் பேச விரும்பவில்லை, வந்ததும் ஸ்டிக்கை என்னை நோக்கி வீசினான், ஸ்டிக் அவன் முதுகு போய் திரும்புவதற்குல் எனது வ்லது கால் அவனது நெஞ்சில் உதைத்தது, பின்னிருந்த இருவர் மீதும் மோதி கீழே விழந்தான், அவன் பின்னால் ஆயுதம் இல்லாத நால்வர் என்னை நெருங்கி கொண்டிருந்தனர்.
அது கார்க் பால், பந்து பட்ட வேகத்தில் அவனது கன்னம் கன்னிபோய் சிவந்து விட்டது, நான் பர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தேன், பாயிண்டில் நின்று கொண்டிருந்த அவன் அப்படியே சுருண்டு விழுந்தான், எனக்கு சரியான கோவம், நேரா போய் பேட்டிங்க் பிடித்தவனை கீழே தள்ளி அவன் பேட்டை புடிங்கி வீசினேன், ஸ்டிக்கை எல்லாம் புடுங்கி வீசிவிட்டு ஒருத்தனும் இங்கே விளையாடக்கூடாது என துரத்தினேன், அவர்கள் லோக்கல் பசங்க என்பதால் அப்பவே துள்ள ஆரம்பித்தார்கள், முன் நின்றவனின் செவளில் விட்ட அறையில் அனைவரும் கொஞ்சம் பின்னாடி போனார்கள், இருங்கடா வர்றோம் என்ற சென்றவர்கள்..............
கோவம் வந்தால் என்ன செய்கிறோம் என்று தெரியாது, நான் இந்த கணத்தில் கொஞ்சம் நிதானம் இழந்துவிட்டேன் என்று தான் சொல்லனும், நான் வீசிய கையை ஒருவன் குனிந்து லாவகமாக தப்பித்த போது தான் தெரிந்தது அது. ஒரு மைக்ரோ செகண்ட் யோசனைக்கு பின் முதலில் தடுத்தாட தீர்மானித்தேன், தற்காப்பு கலை பற்றி தெரியாத அவர்கள் எனது முகத்தில் தாக்கி என்னை நிலைகொள்ள செய்யவே முயற்சித்துகொண்டு இருந்தார்கள், அப்பர் ப்ளாக் லாவகமாக வரும் என்பதால் தடுப்பதற்கு வெகு சுலபமாக இருந்தது, மேலும் கொஞ்சம் இலகுவாக கிடைக்கும் கையை அப்படியே மடக்கி கக்கத்தில் சிக்க வைத்து அவனது அல்லையில் சராமாரியான பஞ்சுகள் விட வசதியாக இருந்தது, அல்லைன்னா தெரியுமுல்ல இடுப்புக்கு சற்றே மேல் இருக்கும் பகுதி, அங்கிருக்கும் முடிவு நெஞ்செலுப்பு பலம் குறைந்தது, ஊமையடியாக இருக்கும், வலி உயிர் போகும், நாலு மாசத்துக்கு வலி குறையாது.
பாலனை பத்தி சொல்லலையே, குண்டா அழகா இருப்பான், பிரச்சனைன்னு தெரிஞ்சதும் டாய் டூய்ன்னு சவுண்ட் விட்டுகிட்டு இருந்தான், இருங்கடா வர்றோம்னு சொல்லிட்டு போனவனுங்க போய் கொஞ்சம் பெரிய பசங்களை கூட்டிகிட்டு வரவும் அப்படியே பின்னாடி போக ஆரம்பிச்சிட்டான், எனக்கு பின்னாடி நின்னது ஜெயபாண்டியும், தெளலத்தும். மத்ததெல்லாம் ரொம்ப சின்ன பசங்க. தூரமாக நின்று அவர்களுக்குள் பேசி கொண்டிருந்தனர், அதில் ஒருவன் என்னை கைகாட்டி எதோ சொல்லி கொண்டிருப்பது தெரிந்தது, அதன் பின் அவர்கள் ஸ்டெம்பை கையில் எடுக்கும் போது தெரிந்தது இது சமாதானத்தில் முடியப்போவதில்லை என்று!
மைக்ரி கிக்கை போல் காலை உயர்த்தி அப்படியே இடது பாதத்தை திருப்பி சைடு கிக்காக உதைப்பது எனக்கு சுலபமாக வரும். மைக்ரி கிக்கைவிட சைடுகிக்கில் பலம் அதிகமாக இருங்கும் என்பது என் நம்பிக்கை, இரண்டு கைகளும் தடுப்பதற்கு இருக்கும் பொழுது கிடைக்கும் கணப்பொழுதில் காலை பயன்படுத்தி தாக்குவதில் குறியாக இருந்தேன், இன்னர் அப்பர் ப்ளாக் முடித்து அதே கையில் உராகன் அட்டாக் கொடுக்கலாம், ஆனால் அது ரொம்ப டேஞ்சரான அட்டாக், நெற்றி பொட்டில் கைமுஷ்டியை மடக்கி தாக்குவது, மடக்கி என்றால் சாதரணமாக இல்லை.
உங்க கை முஷ்டியை மடக்கி பாருங்கள், எவ்வளவு வலிமையா இருக்கு, ரைட்டு இப்ப நான் சொல்ற மாதிரி மடக்குங்க, முதலில் உள்ளங்கை தெரியும் அளவுக்கு கையை விரியுங்க, உள்ளங்கையிலிருந்து விரல் தொடங்கும் இடத்தில் ரேகை மாதிரி இருக்கு தெரியுதா, ரைட்டு அதே தான், முஷ்டியை மடக்கும் பொழுது உங்கள் விரல் அந்த ரேகைக்குள் முடிந்து விடனும், எந்த விரலும் உள்ளங்கையை தொடாமல் பார்த்துங்கோங்க, இப்ப எப்படி இருக்கு பவர், அதே தான் அந்த முஷ்டியை கொண்டு தாக்கினால் அடி எப்படி விழும் தெரியுமுல்ல!
பிறப்புறுப்பில் தாக்குவது தற்காப்பிற்காக பெண்கள் செய்வது, என் வாழ்நாளில் ஒரே ஒரு முறை அப்படியே சண்டையில் தாக்க நினைத்தேன், கடைசி நொடியில் உணர்ந்து கால் முட்டியை அடிவயிற்றில் இறக்கினேன், அதற்கே ஹம்மா என்ற சத்தத்துடன் சுருண்டான், தாக்குவதை விட தடுப்பதில் இருக்கும் தேர்ச்சியே நம்மை நீண்ட நேரம் அசராமல் களத்தில் வைத்திருக்கும், சண்டை போடுறது தேவையில்லாதது தான், தற்காப்பு அவசியம் இல்லையா!
பெருசா போச்சு, அதுனால தொடரலாம்!