D-16

முதல் படத்திலேயே நல்லதொரு கதை களத்தை தேர்வு செய்ததிற்கும், அலுப்பு தட்டாத திரை கதை அமைத்ததற்கும் கார்திக் நரேனுக்கு பாராட்டுகள்.

ஸ்டேண்ட்லி குப்ரிப்னு ஒரு டைரக்டர். 20ஆம் நூற்றாண்டின் முக்கியமான இயக்குனர். இவரோட கிளாக் ஒர்க் ஆரஞ்ச் படம் மிக நுண்ணிய உளவியல் நுணர்வலைகளை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. டாம் குரூஸ் நடித்த ஐஸ் வைட் ஷட் என்ற படமும் இவர் எடுத்தார். இவர் படங்கள் பெரும்பாலும் புகழ்பெற்ற நாவலை படமாக்கியது தான்.

ஐஸ் வைட் ஷட். போகிற போக்கில் இலுமினாட்டிகள் வாழ்க்கையை தொட்டு செல்வது போல இருக்கும். 10 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு காட்சி முடியும் போது எதோ சஸ்பென்ஸ் வைப்பது போல் காட்சியை முடிப்பார். அடுத்த காட்சியில் அந்த சஸ்பென்ஸ் என்னான்னு கூட சொல்ல மாட்டாங்க. படிக்கும் நாவலை சுவாரஸ்யபடுத்த அந்த எழுத்தாளர் எழுதியதை அப்படியே காட்சி படுத்தி சொதப்பினார்னே சொல்லலாம். இதை அந்த படம் பார்க்கும் போதே எழுதினேன்.

துருவங்கள் 16 படமும் அம்மாதிரியான காட்சிகள் நிறைந்தது. எல்லார் மீதும் சந்தேகம் வரும்னு காட்டப்பட்ட காட்சியில் அனைத்தும் ரகுமானின் பார்வைன்னு கடைசியில் சொன்னாலும் லாஜிக்கலி அது செட்டாகல. ஆரம்பத்தில் காரில் இருந்து முகமூடி அணிந்து செல்லும் கொலைகாரனை காட்ட தேவையில்லை. அது குழப்ப முடிச்சு. அதை அவிழ்க்கவும் இல்லை.



ரகுமானின் மகன் தான் கொலைகாரன் என்பது ஒரு புறம் இருக்கட்டும். மனோ தானாக முன்வந்து விபத்து பற்றியும்,, பிணம் காணமல் போனது பற்றியும் சொல்லுவான். விபத்து மோட்டார் வாகன சட்டப்படி அபராதத்தில் முடியலாம். குற்றத்தை மறைத்ததிற்கு தண்டனை கிடைக்கலாம். ஆனால் ஒரு போலீஸாக ரகுமான் நினைத்திருந்தால் விபத்தில் சிக்கிய கிரிஷின் நண்பனை கொலையாளி ஆக்கியிருக்கலாம். அவன் உடம்பு குளத்தில் தான் கிடக்கு. விபத்து நடத்ததற்கு அவர்களை ப்ளாக் மெயில் பண்ணிய பேப்பர் போடும் ஆள் சாட்சி போதும்.

கடைசி வரை கொலையாளி கிடைக்கவேயில்லை என்று பெரும்பாலும் கோப்புகள் விடப்படாது. எதாவது ஒருவகையில் கேஸை முடிக்கத்தான் பார்ப்பாங்க. அதை முடிக்க அருமையான லூப்ஹோல் கிடைத்தபோதும் ஏன் ரகுமான் அதை செய்யாமல் கடைசி வரை குற்ற உணர்வோடு வாழ்ந்த் சாகனும்.

-நான் இப்படியெல்லாம் ஒரு படத்தை விமர்ச்சிக்க மாட்டேன். ஆனாலும் எழுதனும்னு தோணுச்சு

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin