புரோட்டின்+காய்கறி=எடை குறையும்
புரோட்டின்+கார்ப்(மாவுசத்து)=எடை கூடும்
புரோட்டீன்+கொழுப்பு=எடை சமமாக இருக்கும்
இது தான் யூனிவர்சல் டயட் ஃபார்முலா
விவசாயத்தில் மனிதன் இறங்கி 10000 வருசம் ஆச்சு, இப்ப இருந்து கார்ப் எடுத்துகிறான். இன்னுமா உடம்புக்கு ஒத்துக்கலன்னு நானும் ஆராய்ச்சி பண்ணேன்.
கடந்த நூறு வருசத்துக்கு முன்னாடி வரை பெரிதாக நோய் நொடியில்லை. முதலில் குக்கர்னு ஒன்னை கண்டுபிடிச்சு ஸ்டார்சை வடிக்காமல் அப்படியே எடுத்து உடம்பில் குளுகோஸ் சேர்த்தது சர்க்கரை நோயின் முதல் அழைப்பு. கூடவே ஜங்க் புட்.
தெரியாத சில விசயங்கள் டயட் பத்தி:
பொதுவா நாம கொழுப்பை எதிர்ப்போம். ஆனா கொழுப்பு எடுத்துக்கொள்வது செல்களுக்கு நல்லது. உடல் விட்டமின் டி தயாரிக்கவும். ஆண்களுக்கு டெஸ்ட்ரோன். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரக்கவும் உதவும்.
கருவளரச்சிக்கு கொழுப்பு சத்து மிக அவசியம். கொழுப்பு சத்து குறைபாட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்
உங்கள் உடம்பில் கொழுப்பே இல்லைனா உங்க உடல் செல்கள் அழிந்துவிடும். அதுக்கு சாப்பாடே அதுவும். புரதமும் தான்
இதய ஆரோக்கிய ஆராய்ச்சி செய்த அமெரிக்க மருத்துவ குழு ஒன்று நாளொன்றுக்கு குறைந்தது 300 மில்லிகிராம் கொழுப்பு மனிதனுக்கு தேவை என்கிறது. நன்கு வளர்ந்த கோழி முட்டையில் 185 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது
கடல் வாழ் உயிரினங்கள் மனித உடலுக்கு நல்லது. அதில் தேவையான கொழுப்பு சத்துகள் உள்ளன.
குறைய அளவு கொழுப்பு எடுத்துக்கொள்ள பிராய்லர் கோழி சாப்பிடுவார்கள். தேவையான அளவுக்கு தோலுடன் சாப்பிடுங்கள்
விலங்குகளின் ஈரலில் இரும்புசத்தும், கொழுப்பும் நிறைந்துள்ளது. விலங்குகளின் ஆர்கனில் தான் அதிக கொழுப்பும் புரதமும் உள்ளது. 100 கிராம் ஈரலில் 331 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது.
கெட்ட கொழுப்பும் உள்ளது. அது பதபடுத்தப்பட்ட ரிபைண்ட் ஆயிலில் தான் அதிகம் உள்ளது. 200mg/Dl அளவிற்கு மேல் இருப்பது ஆபத்து. இயற்கை எண்ணைய்களை பயன்படுத்த வேண்டும்
நார்சத்து உடலுக்கு அத்தியாவிசய உணவு அல்ல. உடல் அதை எடுத்துக்கொள்ளவும் செய்யாது.ஆனால் பிற கசடுகளை வெளியே கொண்டு வரும் மலமிழக்கியாக அது மட்டுமே பயன்படும்
நமது உணவு செரிமான மண்டலம் 28 அடி நீளமானது. அதில் பிற உணவுகள் இலகுவாக பயணம் செய்ய நார்சத்து உதவுகிறது.
25 திருந்து 35 கிராம் வரை நார்சத்து உடலுக்கு எடுத்துக்கொள்வது நல்லது.
நார்சத்து காய்கறிகளில் மட்டுமே உள்ளது.
காய்கறிகளும், புரதமுமே மனிதர்களுக்கு முக்கிய உணவு. இருந்தாலும் பசிக்கு கிடைக்கிறதை சாப்பிடுங்க. நானும் அப்படிதான். மிதமான உடற்பயிற்சியாவது செய்து உடலில் குளுகோஸ் சேருவதை தவிருங்கள்
0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment