காதல்!

உயிரற்ற ஒரு பொம்மையுடன் பேசிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும், கட்டிபிடித்து உறங்கும் பால்யத்தில் ஆரம்பித்தது நம் நிபந்தனையற்ற காதல்.
எது காதல்? அதன் எல்லை என்ன? அதன் வரையறை என்ன? போன்ற எந்த அளவுகோளுக்குளும் சிக்காமல் சாதி, மதம், மொழி, இனம் யாவும் கடந்து மனிதம் ஒன்றை மட்டும் பேசுவதே காதல். அது உணர்வுபூர்வமானதா அல்லது மூளையின் ரசாயன மாற்றமா? எதுவாக இருந்தால் என்ன? அந்த அனுபவம் கிடைக்குமா ஏங்கும் கோடி கணக்கான உயிர்களில் நானும் ஒருவன் தான்.

நான் இல்லையென்று சொன்னாலும் உலகில் 99.99% காதல் தோற்றத்தின் ஈர்ப்பில் தான் ஆரம்பிக்கிறது. அந்த ஈர்ப்பு 4 மாதங்களுக்கு மேலும் தொடர்ந்து இருந்தால் அதை காதல் எனலாம். ஈர்ப்பில் தோன்றிய காதலாக இருந்தாலும் தக்கவைத்துக்கொள்ள நிச்சயம் ஆளுமை வேண்டும். அப்படி இல்லாத காதலில் ஒருபக்க ஆளுமை அதிகமாக இருக்கும். ஒருவர் ஆல்ஃபாவகவும். ஒருவர் ஃபீட்டாவகவும் இருப்பார்/. உலகில் முக்கால்வாசி தம்பதியர்கள் இப்படி தான். ஆனாலும் அவர்கள் இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள்.

காதலின் பாலபாடமே நிபந்தனையற்ற காதல் தான். ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும். தவறுகளோ, நிராகரிப்புகளோ பெரிதாக தோன்றாது. சிறிது நாட்கள் ஆனப்பின் ஆண்களுக்கு நீ எனக்கு மட்டுமே சொந்தம் என்ற பொஸிசிவ்நெஸ்ஸும், பெண்களுக்கு குறை கண்டுபிடிக்கும் குணமும் வந்து விடும். காதலிக்கும் பொழுது வரும் சண்டை ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள நமக்கு கிடைக்கும் வாய்ப்பு. மூணு முறைக்கு மேல் சண்டையின் போது உனக்கும் எனக்கும் ஒத்து வராது என சொல்வீர்களேயானல் நீங்கள் பிரிந்து விடதலே நலம். இருவருக்கும் இருக்கும் காதலை விட உங்கள் ஈகோ தான் உங்களை ஆள்கிறது.

ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராபதி போன்ற சங்க காதலில் இருந்து சமீபத்தில் பார்த்த டைட்டானிக் காதலுக்கு வந்தாலும் ஒரு தனி மனிதன் தன் காதலே சிறந்தது என்பான். அந்த காதல் கல்யாணம் என்ற கமீட்மெண்டில் நுழையும் போது சாதல் ஆகிறது. அவனது சிறந்த காதல் தியாகமாக மாறிவிடும். விவாதத்தின் பொழுது நாம் காதலித்த பொழுதில் என்ற வார்த்தை வரும். அப்படியானால் அவர்கள் இப்பொழுது காதலிக்கவில்லை.

திருமண உறவுகள் உடையகாரணமே இதுதான். கல்யாணத்திற்கு பிறகு எங்க போயிடுவா கழுதை என்ற அலட்சியபோக்கு. நான் என்ன வேணும்னாலும் தெள்ளவாரிதனம் பண்ணுவேன். நீ அடங்கிதான் இருக்கனும் என்ற ஆணவ போக்கு பெண்களை வெளியே கொண்டு வருகிறது. காதலிக்கும் பொழுது நேரம் காலம் இல்லாமல் மணிக்கணக்காக பேசும் காதலன். கணவன் போஸ்டிங் வந்ததும் ஏன் சும்மா சும்மா போன் பண்ணி தொல்லை பண்ற எங்கிறான்.

உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் படிக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தார்/ அவரது தீஸிசை சப்மிட் பண்ணுவதற்கு முன்னரே அவருக்கு வாதம் வந்து கழுத்துக்கு கீழ் செயல் இழந்து போயிற்று. ஆயினும் அந்த பெண் அவரை திருமணம் செய்துக்கொண்டார்.  அவர்களுக்கு மூன்று குழந்தைகள் முதல் குழந்தையின் ஆசியருடன் அவரது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு மூன்றாவது குழந்தை அந்த ஆசிரியருக்கு பிறந்ததாகவே சந்தேகப்பட்டனர். ஆனாலும் ஸ்டீபன் எதுவும் கேட்கவில்லை.  அவரை கவனிக்க வந்த பெண் இவர் ஆளுமையில் காதல் கொள்ளவும் தன் மனைவியை அழைத்து இனி உன்னுடன் பயணிக்க முடியாது என விவாகரத்து வழங்கிவிடுவார். ஒரு வருடம் கழித்து அவர் அந்த ஆசிரியரை திருமணம் செய்து கொள்வார்.



ஒரு காதல் பயணிக்க தோற்றமும், ஆளுமையும் மட்டுமே போதாது. புரிதலும், அர்பணிப்பும், தேவைகளும் பூர்த்தியும் தேவைபடும் என்பதை உணர்த்தியது அவரது வாழ்க்கை. அவர் சமாதானம் செய்திருக்கலாம். அல்லது அந்த ஆசிரியருடன் தொடர்பை துண்டிக்க செய்திருக்கலாம். ஆனால் ஸ்டீபன் அவர் மனைவி மேல் வைத்திருந்த காதலே அவருக்கு விவாகரத்து கொடுக்கவந்தது. துணைக்கு தெரியாமல் செய்வது கள்ளகாதல் என்றால் உங்கள் பெற்றோருக்கு தெரியாமல் செய்வதும் கள்ளகாதல் தான். சமூகம் ஒழுக்கசீலர்கள் வேசம் போடும். ஆனால் அவர்களுக்கும் தெரியும். இது இயற்கையான உணர்வு. நமக்கும் ஏற்பட்டுள்ளது என்று.

தனி மனித உணர்வுகள் சார்ந்த புரிதல்களை ஏற்படுத்த உங்களுக்கு சில தோல்விகள் தேவையென்றால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுகொள்ளப்படாத தோல்வி உங்களுக்கு இயலாமையை ஏற்படுத்தும். காதலே போலிதனம் என்பீர்கள். உலகில் இருக்கும் பெண்களெல்லாம் சாபம் என்பீர்கள். நம்மை சுயபரிசோதனை செய்தும், மறுசீரமைக்க வாய்ப்பு கிடைத்தும். தம்மை நியாயபடுத்தி பிறர் மேல் எப்போதும் குறை சொல்லிகொண்டிருக்கும் மனிதம் அடுத்த படிக்கு நகரவே நகராது. மாற்றம் நம்மில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். என்னுடம் பயணித்த பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தேன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன்.

பெண்ணுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க வேண்டியதில்லை. அது அவர்களிடமே உள்ளது. அதை நீங்கள் பறிக்காமல் இருந்தாலே போதும். ஆனாலும் பெண்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்பதிலேயே வாழ்வை செலவிடுகின்றனர். நீங்கள் ஆண் என்பதை உங்கள் மட்டுமே தீர்மானிக்கமுடியாது. ஒரு பெண் உங்களிடம் பாதுகாப்பை உணராமல் உங்கள் ஆண்மை முழுமையடையாது. பெண்ணின் சுதந்திரபோக்கு சில வலிகளை தருவது போல் இருக்கலாம். ஆனால் எனக்கு நேர்ந்த ப்ரேக் அப் என் திமிரையும் ஆணவத்தையும் சுக்கல் சுக்கலாக உடைத்து எரிந்தது.

காதல் அழகான உணர்வு. அங்கிகாரம், நம்பிக்கை. நீ பேசினாலே போதும் எதையும் செய்வேன் என்று யானை பலம் தரும். நிபந்தனையற்ற காதலை செலுத்துங்கள். நீங்கள் என்ன பெற்றாலும் அன்பொன்றை மட்டுமே பதிலாக திருப்பி கொடுங்கள். கற்காலம், இரும்பு யுகம் தாண்டி நாம் காதல் காலத்தில் வாழ்துக்கொண்டிருக்கிறோம். அன்பு ஒன்றே வன்முறைக்கு மாற்று. இந்த உலகம் அன்பினால் இயங்கப்படவேண்டும். ஆதலினால் காதல் செய்வீர்

இனிய அவளும் நானும் தினவாழ்த்துகள்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin