என்று தணியும் இந்த சாதி வெறி!

உடுமலைபேட்டை சம்பவத்தின் போதே முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆணவ கொலைக்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும் என குரல் எழுப்பினர். அரசியல் கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் தீவிரமாக போராட்டம் நடத்தினர். மற்ற கட்சிகளின் வாயில் இருந்து ஆணவ கொலை என்ற வார்த்தை கூட வரவில்லை. இடதுசாரிகளில் சிலர் விடுதலை சிறுத்தைகள் உடன் இருந்தனர். தா.பாண்டியன் போன்ற ஆட்கள் சிலர் “மாண்புமிகு, புரட்சிதலைவி அம்மா” அவர்கள் நல்லா செய்வாங்க, நல்லா செய்வாங்கன்னு தேய்ச்ச ரிக்கார்ட் மாதிரி சொல்லி அந்தம்மா போற வரைக்கும் நல்லா வச்சு செஞ்சுட்டு போச்சு.

திமுக ஆதரவாளர்கள் முன் வைக்கும் முக்கிய கொள்கை சமூகநீதி திமுக காப்பாற்றும் என்பது. ஆனால் திமுகவும் சாதி பார்த்து தான் தேர்தலை சந்திக்கிறது. அதே சமூக நீதியை 65% இடஒதுக்கீடு கொடுத்து ஜெயலலிதா பெயர் எடுத்துட்டு போயிட்டார். வார்டு கவுன்சிலரில் இருந்து எம்.பி வரை தேர்தெடுக்கப்படுவது சாதியே. என் கட்சி கொள்கை இது. இதற்கு முன் ஆட்சியில் இருந்தபொழுது நான் இதெல்லாம் செய்தேன் என்று சொல்லி ஓட்டு வாங்கினால் அதில் பெருமை இருக்கிறது. என் சாதிகாரன் ஓட்டு போட்டதினால் வெற்றி பெற்றேன் என்பது என்னை பொறுத்தவரை கேவலத்திலும் கேவலம். சந்தேகமா இருந்தா தனியரசு மாதிரி ஆட்களை கொங்கு மண்டலம் தாண்டி தேர்தலில் நிற்க சொல்லுங்க பார்க்கலாம். சினிமா பிரபலம் என்றாலும் சரத்குமாருக்கு ஓட்டு கேட்கவும் சாதி தேவைபடுகிறது.

எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லாதது இந்த சாதி என்ற அடையாளம். நான் நெற்றியில் பிறந்தவர் அதனால் பிராமணன், அவன் மார்பில் பிறந்தவன் அதனால் சத்ரியன், இவன் வயிற்றில் பிறந்தவன் அதனால் சூத்திரன் என்று பார்பனர்களால் எழுதபட்டு பார்பனனல்லாத மனு என்ற பார்பன அடிவருடியால் ஏற்கபட்டது தான் இந்த சாதிய அடுக்கு. அதனால் தான் சூத்திரன் என்று பார்ப்பனர்களால் பட்டம் கொடுக்கப்பட்டவன் கூட நாங்கள் பேண்ட பரம்பரை என்று சத்ரிய பட்டம் வாங்க அல்லாடிகிட்டு இருக்கான். அவன் ஆசை சூத்திரன் தோளில் ஏறி உட்கார வேண்டும் என்பது. ஆனால் ஏற்கனவே பார்ப்பான் அவன் தோளில் உட்காந்து அவன் காதில் செய்து கொண்டு இருக்கிறான் என்பது அவனுக்கு சொன்னாலும் புரியாது.



உடற்கூறுகள் அடிப்படையில் நமக்கு மதமும் கிடையாது சாதியும் கிடையாது. மதம் எப்படி ஒரு கொள்கை அடிப்படையில் கட்டமைக்க பட்ட அமைப்போ அப்படியே தான் சாதியும் நம்மிடம் திணிக்கப்பட்ட ஒன்று. இங்கே எவன் ரத்தமும் ஆப்ரிக்காகாரனுக்கும் பொருந்தலாம். அமெரிக்காகாரனுக்கும் பொருந்தலாம். இந்தியா என்ற பொந்து மத பொறும்பான்மை கொண்ட நாட்டில் மட்டும் தான் இந்த சாதிய கொடுமைகள். முழுமையான இந்துநாடு என அறிவித்துக்கொண்ட நேபாளில் கூட சாதிய கொடுமைகள் இல்லை.

பார்பனிய ஆதிக்கத்திற்கு பிறகு தான் சாதிய வேற்றுமைகள் அதிகம் பார்க்கப்பட்டது. பார்பனியர்களின் தூண்டுதலின் பேரிலே தொழில் ரீதியாக சில பிரிவினரை ஒடுக்கி ஒடுக்கி தாழ்த்தபட்டவர்கள் ஆக்கினார்கள். 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த அடுக்குமுறை தாங்க முடியாமல் பலர் இஸ்லாமிற்கும், கிறிஸ்தவமதத்திற்கும் மாறினார்கள். அவர்களை இழுத்த ஒரே கொள்கை மனித இனம் ஆதாம், ஏவாளில் இருந்து தொடங்கியது. நாம் அனைவரும் உறவினர்களே. இன்றும் தொழுகை இடங்களில் பொருளாதார வேறுபாடு கூட இல்லாமல் அவர்கள் அருகில் அமர்ந்து தொழ முடியும். வஹாபிகளின் ஆதிக்கத்திற்கு முன்னர் வரை இஸ்லாமியர்கள் உலகமெல்லாம் அமைதியாக தான் இருந்தனர். சென்ற நூற்றாண்டு ஆஃப்கான் படத்தை பார்த்தால் உங்களால் நம்பவே முடியாது.

இன்று ஆஃப்கான் மாதிரியான பிற்போக்கு, தட்டையான அடிப்படை வாதம் கொண்ட நாடுகளின் நிலமை உங்களுக்கு தெரியும். சோற்றிற்கு வழியில்லாமல் வேறு நாடு தேடி அகதிகளாக போகும் நிலமை. நான் சில ஆண்டுகளாகவே எச்சரித்து வருகிறேன். இந்தியாவில் அடிப்படைவாதத்தின் குரல் அதிகமாக கேட்கின்றது. முதலில் நாம் இந்துகள், மதம் மாற வேண்டாம் பிற மதத்தை வெட்டுங்கள் என ஒலிக்கும். பிறகு சாதி இந்துகள் தான் கோவிலுக்குள் போகனும். தலித்துகளை வெட்டுங்கள் என ஒலிக்கும். அடிப்படைவாதம் தலைதூக்கிய இடத்தில் எல்லாம் விதவைகளின் கதறலும் அப்பாவிகளின் ரத்தமே அடையாளமாக நிற்கிறது.

உங்கள் கொள்கை எதன் அடிப்படையில் வேண்டுமானாலும் இருக்கலாம். சக மனிதனை சாதிய அடையாளத்துடன் பார்ப்பீர்களேயானால் நீங்கள் மனித இனமே அல்ல. மிகவும் கேவலமான ஈனபிறவிகள் என்பதில் மாற்று கருத்து இல்லை. எல்லா நாளுமே குனித்துக்கொண்டே இருக்கமாட்டார்கள். அவர்கள் எழும் அன்று நீங்கள் இருக்கமாட்டீர்கள்

#வால்பையன்!

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin