அழகு!

உங்ககிட்ட ஒன்னு கேட்கவா?

கேளு

நீங்க அழகா இருந்தா தான் பேசுவிங்களா?

என்ன கேள்வி இது, நீ பேச ஆரம்பிக்கும் போது நீ ஆணா, பொண்ணான்னு கூட
எனக்கு தெரியாது. நான் போய் அழகெல்லாம் பார்த்துகிட்டு இருப்பனா?

இல்ல. எங்கண்ணன் அழகா இருந்தா தான் பேசுவான். அதான் கேட்டேன்.

அழகான்னா என்னான்னு சொல்லவா

சொல்லுங்க
**

மனிதர்கள் உட்பட உயிரினங்கள் 99% சரிபாதி தோற்றஒழுங்கு உடையவர்கள். அதாவது உயிரனத்தின் வலப்புறமும், இடப்புறமும் ஒரே மாதிரி இருக்கும். நெருக்கமா பழகாம நம்மால் மனிதர்களை தவிர பிற விலங்குகளை சட்டுன்னு அடையாளம் கண்டுபிடிக்கமுடியாது. ஏன்னா அவைகள் சரிபாதி தோற்றஒழுங்கில் ரொம்ப சரியா இருக்கும். மனிதர்கள் 100க்கு 5 பேருக்கு மட்டும் தான் அப்படி இருக்கும்.

அதை தான் அழகுன்னு சொல்லி இந்த விளம்பர உலகம் நம்மை நம்ப வச்சிகிட்டு இருக்கு. அழகு என்பதை ஒரு கவர்ச்சியா பயன்படுத்துறாங்க. மீதி 95% என்ன பிரச்சனைன்னா வலதுபுறத்துக்கும், இடதுபுறத்துக்கும் சின்ன வித்தியாசம் இருக்கும். அது என்னான்னு ஒரு ஆண்கிட்டகேட்டா உடனே மார்பகம்னு சொல்லுவான். உண்மையில் அதுயில்ல. நுரையிரல் சமமா இரு பக்கம் இருந்தாலும் இடப்புறம் இருக்கும் இதயத்தின் அழுத்தத்தால் மார்பகம் தோற்றத்தில் சின்னதா வித்தியாசம் தெரியாது. நான் சொல்ல வந்ததும் அதில்ல.

நம்ம முகத்தில் முக்கிய கண்ணில் வலதுக்கும், இடதுக்கும் வித்தியாசம் இருக்கும். ஒன்னு சின்னதாகவோ அல்லது கொஞ்சம் மேல் நோக்கியோ. அதுக்கு காரணம் நாம குழந்தையா பிறக்கும் போது இப்ப இருப்பது மாதிரி முழுமையான மண்டை ஓடு நமக்கு இருக்காது. சின்ன சின்ன செதில்கள் மாதிரி முழுமையடையாம இருக்கும் . நாம படுக்கும் முறை இல்லைனா எதாவது ஒரு பக்கத்தில் ஏற்படும் அழுத்தும் லேசா தோற்ற மாறுதல் ஏற்படுத்தும். ஆனா அது ஒரு  பிரச்சனையே இல்ல

அழகுன்னா இது தான்னு விளம்பர உலகம் ஏற்படுத்தி வச்சிரும் பிம்பம் தான் பலரோட தாழ்வு மனப்பான்மைக்கு காரணம். கிளியோபட்ரா உலகத்திலேயே பேரழகின்னு சொல்வாங்க, ஆனா அவளோட ஆளுமை தான் அவளை இன்னும் பேச வச்சுகிட்டு இருக்கு. ஆட்சி கையை விட்டு போயிறக்கூடாதுன்னு சகோதரனையே கல்யாணம் பண்ணிகிட்டா. அந்த காலத்தில் அதெல்லாம் சகஜம் தான். ஆனா அவளோட அழகு அவளை காப்பாத்தல. கடைசிய தன்னை பாம்பை கடிக்கவிட்டு தற்கொலை பண்ணிகிட்டா.

ஒருவரை அழகா இருக்குறதா நீ நினைச்சா, அந்த ரசனை உனக்கு பிடிச்சிருந்தா அவுங்களோட பழகாதன்னு உளவியல் சொல்லுது. ஏன்னா ஒருவருடன் நீ பழக ஆரம்பிச்சதும் அவங்களோட தோற்ற பிம்பம் மறைந்து அவுங்களோட ஆளுமை உனக்குள் குடி போயிரும். அவுங்க கேரக்டரை நீ எடை போட ஆரம்பிப்ப.கருத்து வேறுபாடுகள் வரும். நீ ஒரு காலத்தில் செம அழகுன்னு நினைச்சிகிட்டு இருந்த ஆள் இப்ப கிறுக்கன் மாதிரி தெரியலாம். அதை வேற யாரிடமும் சொன்னா அவுங்க உன்னை தப்பா நினைக்கலாம். ஏன்னா இந்த உலகம் தோற்றத்திற்கும், நடத்தைக்கும் சம்பந்தம் இருக்குன்னு நம்பிகிட்டு இருக்கு.

தோற்றம் நிரத்தமானதல்ல. ஆனால் பர்சனாலிடின்னு சொல்ற ஆளுமை என்னைக்கும் உனக்கே சொந்தம். என்னை விட சிறந்தவள் உலகம் இல்லைன்னு நம்பிக்கையோட எந்த ஒன்றையும் செய்யும் போது அதில் நேர்த்தி இருக்கும். ஈடுபாடு இருக்கும். அப்ப இந்த உலகத்துக்கே நீ பேரழகியா தெரிவ. எதிர்மறை எண்ணங்களும், தாழ்வு மனப்பான்மையும் நீ தோற்ற ஒழுங்கில் 100% சரியா இருந்தாலும் உன்னை அழகியா காட்டாது.

எப்பவும் நம்பிக்கையோட இரு. உன்னைவிட பேரழகி உலகில் யாரும் இருக்கமாட்டாங்க.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin