சுதந்திரம் என்றால் என்ன?

MEL B ஸ்பைஸ் கேர்ஸ் இசை குழுவில் முக்கிய உறுப்பினர்.
அட்வெஞ்சர் வித் செலிபிரட்டிஸ் நிகழ்ச்சியில் பியர் கிரில்லுடன் கலந்துகொண்டார். நான் அம்மாதிரி பார்த்த நிகழ்ச்சியில் இது தான் பெஸ்ட் என்பேன். காரணம் அவுங்க பண்ண அட்வெஞ்சர் இல்ல. மெல்பி பகிர்ந்துகிட்ட சில விசயங்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க வரும் முன் தன் அம்மாவை சில வருடங்கள் கழித்து சென்று பார்த்ததாக கூறினார். அம்மாக்கள் பெண் குழந்தைகள் மேல் குற்றம் கண்டுபிடுத்துக்கொண்டே இருப்பார்கள். என் அம்மாவும் அப்படி தான். ஒருநாள் வாக்குவாதம் முற்றி வெளியே வந்தவள் இன்று தான் சந்திந்தேன் என்றார்.

உங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் தானே. ஒவ்வொருக்கும் ஒரு அப்பா இல்லையா!? அவர்களை பற்றி சொல்லுங்கள் என்றார் பியர்கிர்ல்ஸ்.
மூன்று பெண்களுக்கும் ஒரே பார்வை கொடுக்கும், அதிக நேரம் ஒதுக்கனும் என்றதில் ஒரு தாயாக முதிர்ச்சி தெரிந்தது.

முதல் குழந்தையின் அப்பா ஸ்பைஸ் கேர்ல்ஸ் இசைகுழுவில் இருந்தவர். இரண்டாவது குழந்தையின் அப்பா புகழ்பெற்ற ஹாலிவுட் காமெடி நடிகர் எடி மர்ஃபி. டாக்டர் டூலிட்டில், த நட்டி புரபசர் படத்தில் நாயகனாக நடித்தவர். தன்னை விட அதிக வயது மூத்தவர். அவருடன் இருந்த ரிலேசன்ஷிப் ஒரு அட்வெஞ்சர் மாதிரின்னு சிலாகிச்சார். மூன்றாவது குழந்தை இப்பொழது ரிலேஷன்ஷிப்பில் இருப்பவருக்கு பிறந்தது.

அந்த ரிலேசன்ஷிப் பற்றி பேசும் போது. அய்யோ தவறான ஆளுடன் ரிலேசன்ஷிப் வச்சுகிட்டமேன்னு பேச்சில் எந்த அருவருப்பும் இல்லை. அதெல்லாம் எனக்கு கிடைத்த அனுபவம் என்பது போல் ஒரு தெளிவு. நான் வாழ்வது என் வாழ்க்கை அதை எனக்காக வாழுறேன் என்ற தெளிவு.



மேலைநாட்டு கலாச்சாரம் என்று ஒதுக்குவது. ஒரு பெண்ணின் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள இயலா ஆணாதிக்க மனபான்மையால் தான் முடியும். இயற்கையில் அவளும் ஒரு பெண். ஸ்பைஸ் கேர்ல்ஸ் அனைவரும் ஒரே லட்சியத்துடன் இருந்தோம். அதை விட முக்கியம் நாங்கள் அனைவரும் இந்த உலகத்தால் நிராகரிக்கபட்டோம் என்றார்.

சுயமாக முடிவு எடுக்கக்கூட அனுமதிக்காத சமூகத்தை கலாச்சாரம் என்ற கம்பளி போர்த்தி பெண்களை வேக வைத்து அதில் பெருமை அடையும் சமூகம் இது. கல்வி, வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் இல்லை. இதையெல்லாம் விட பெரிதாக இருக்கும் பிரச்சனை குழு மனபான்மை. நீ பாட்டுக்கு அவனை போய் கல்யாணம் பண்ணிகிட்டியே. இனி நம்ம சாதி ஜனங்க முகத்தில் நான் எப்படி முழிப்பேன்னு கொலை பண்ணிட்டு அதை நியாயபடுத்தும் சீழ்பிடித்த சமூகம்.

சுதந்திரம் என்பது அனைவரும் சமமாக ஒரே போல் இருக்க வேண்டும். ஆண், பெண் பாகுபாடு, சாதிய வித்தியாசங்கள். மத பெரும்பான்மைகள் பார்க்கும் நாட்டை தயவுசெய்து சுதந்திர நாடு என சொல்லாதீர்கள்

(பியர் கிரில்ஸை ஜெல்லிமீன் கொட்டியதும் அவருக்கு அவசர சிகிச்சையாக கொட்டிய இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும். பியர் கிரில்ஸிடம் ஸ்டாக் இல்லைன்னு மெல்பி உதவி செய்தார். அந்த விடியோ இது. முழு விடியோ முதல் கமெண்டில் இருக்கு)

https://www.youtube.com/watch?v=GWBnoLFYdcU

3 வாங்கிகட்டி கொண்டது:

தருமி said...

photographer எங்க இருப்பார்?

வால்பையன் said...

ரெண்டு விடியோகிராபர் மற்றும் அவசரத்துக்கு ஒரு மெடிக்கல் குழு இருப்பாங்க.
ரொம்ப முடியாத பட்சத்தில் அவங்க உதவி கேட்கலாம்

மெல் பி ஓப்பனா சொன்ன கருத்துகளுக்காக தான் இந்த பதிவு

தருமி said...

மெல் பி ஓப்பனா சொன்ன கருத்து .... வியப்போடு வாசித்தேன்.

!

Blog Widget by LinkWithin