செக்ஸ்!

malenaன்னு ஒரு படம். மோனிகா பெலுசி நடிச்சு இத்தாலி மொழியில் வந்தது. அந்த படத்தில் ஒரு டீன் ஏன் பையனுக்கு மோனிகா மேல கிரஸ். ஒருநாள் அவன் ரூமில் ஃப்ரிங் கட்டலில் படுத்துகிட்டு ஆவேசமா சுயமைதுனம் பண்ணிகிட்டு இருப்பான். வெளிய அவன் அம்மா என்னமோ எதோன்னு பயந்துருவாங்க, அவனுக்கு பேய் பிடிச்சிருச்சுன்னு சாமியாரை கூப்பிட்டு மந்திரிப்பாங்க. ஆனா அவனோட அப்பா, அவனுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியும்னு கூட்டிட்டு போய் விபச்சார விடுதியில் விட்டு போய் பண்ணிட்டு வான்னு சொல்லுவார்.

இந்தியாவில் இப்படி ஒரு காட்சி வச்சா அவ்ளோ தான். சிறு வயதில் மணம் முடிந்து விதவையாகி படும் கஷ்டத்தை வாட்டர் என்ற பெயரில் தீபா மேத்தா எடுத்த படம் இந்தியாவில் இன்னும் தடையில் இருக்கு. அதான் நம்ம கலாச்சாரம்.  நான் எட்டாவது படிக்கும் போது வாத்தியார் சந்திரகுமார் உங்களில் யார் சுயமைதுனம் செய்விங்கன்னு கேட்டார். நானும் ஒவ்வொரு கிளாஸ்லயும் ரெண்டு வருசம் உட்காந்துட்டு வரும் ஆனந்தும் மட்டும் கைதூக்கினோம். ஒரு சர்வே என்ன சொல்லுதுன்னா ஆண்களில் 98% பேர் சுயமைதுனம் செய்வாங்க. 2% பேர் செய்யலன்னு பொய் சொல்வாங்க.

இயற்கையின் உந்துதலை கொலை குற்றம் போல் கட்டமைத்து வைத்திருப்பது தான் இன்று சிறு குழந்தைகளை கொல்லும் அளவுக்கு போகுது. விந்து கெட்டவன் நொந்து சாவன். ஒரு துளி விந்து நூறு துளி ரத்தம்னு கிளப்பிவிட்டது எல்லாமே பொய் தான். விந்தில் 98% புரோட்டீன் தாதுகளும் 2% விந்தணுக்களும் மட்டுமே உள்ளது. அதற்கும் ரத்ததிற்கும் சம்பந்தமேயில்ல. சாப்பாட்டில் புரோட்டீன் எடுத்துகிட்டாலே போதும்.

ஆதி மனிதர்களில் யாரும் இடத்திற்காக சண்டை போட்ருக்க மாட்டாங்க. அவுங்க சண்டை பெண்ணுக்காகவும், உணவுக்காகவும் தான் இருந்திருக்கும். இப்ப தான் நாடு பிடி சண்டையெல்லாம். மத்திம காலங்களில் பெண் பருவம் அடைந்தவுடன் கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க, ஏன்னா அதே வயதில் ஆணுக்கும் செக்ஸ்க்கு ரெடி ஆகிடுவான். உடற்கூறு அறிவியல் என்ன சொல்லுதுன்னா சிறு வயதில் குழந்தை பேறுக்கு உங்கள் உடலும் மனமும் தேவையான பக்குவம் அடைந்திருக்காது. குழந்தைபேறு உயிர் இழப்பில் முடியலாம். ஆகவே தான் பெண்ணுக்கு திருமண வயது 21ன்னு பிக்ஸ் பண்ணாங்க. ஆனா அதுக்கு முன்னாடி செக்ஸ் வச்சிகிட்டா செத்து போயிருவன்னு எந்த அறிவியலும் சொல்லல.



உடல் உறவுக்கு தகுதியடைந்த ஆண் சிங்கம், பெண் சிங்கத்தை தேடும். குடும்பமாக இருக்கும் பெண் சிங்கங்கள் கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தை விரட்டி விடனும் அல்லது கொல்லனும் என்பது அதற்கு உடல் உறவுக்கு வைத்திருக்கும் போட்டி. பருவகாலத்தை அடையும் ஆண் யானை அந்த நேரத்தில் ஏகப்பட்ட டெஸ்ட்ரோஜன் சுரந்து மதம் கொண்டு அலையும். மனிதர்களும் மன உளைச்சல், வேலை பளு, தூக்கமின்மை போன்ற சகலத்துக்கும் நிவாரணி செக்ஸ் என்கிறது அறிவியல். ஆனா சமூகம் செக்ஸ் என்றாலே கெட்ட வார்த்தை. அதை பத்தி பேசினாலே சமூகவிரோதி பட்டம் கொடுக்கிறது.

சிறார்களில் ஆண், பெண் இரு பாலருமே பாலியல் தொந்தரவிற்கு ஆளாகிறார்கள். அவை பெரும்பாலும் வீட்டிற்குள் இருக்கும் உறவினர்களாலயே நடக்கிறது என்பது பெரும் கொடுமை. அதிலும் பெரும் கொடுமை அவைகளை பெரும்பாலும் செய்வது 55 வயது கடந்த ஆண்கள். மெனோபாஸ் ஆனவுடன் பெண்கள் செக்ஸ் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆண்களால் சாகும் வரை இனப்பெருக்கம் செய்ய முடியும். ஒரு மணி நேர கவுன்சிலிங் மூலம் பெண்களை கன்வின்ஸ் பண்ண முடியும். இந்த வயசிலும் அலையுறானேன்னு பெண் நினைப்பாள்னு விட்டு கடைசியில் குழந்தைகளை தொந்தரவு செய்கிறார்கள்.

ஊடகங்களிலும், இணையத்திலும் பாலியல் சம்பந்தமாக நிறைய காண கிடைக்கிறது. அவைகள் உடல் உறவு காட்சிகள் மட்டும் அல்ல. அதை ஆழமாக புரிந்துக்கொள்ள முடியளவில் கூட. ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு அனிருத் ஸ்கேண்டல் தான் வேண்டும். அவளை நம்பி தன்னை கொடுத்த பெண்ணை விடியோ எடுத்து ஒரு சைக்கோ வெளியிடுகிறானேன்னு கோவம் வராது. அது நிச்சயமாக தனிமனித உரிமை மீறல். என்னை கேட்காமல் என்னை போட்டோ எடுத்து வெளியிடுவது கூட அநாகரிகம் தான். ஆனால் இன்றைய ஆண்களுக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருப்பதே பெருமைக்கிறிய விசயம். அதும் அவளுடன் உறவு வைத்துக்கொண்டால் அதை தண்டோரா போட்டு பெருமையடைய வேண்டும்.

செக்ஸ் என்பது ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் இயைந்து நான் உன்னை எவ்ளோ காதலிக்கிறேன் என்பதை காட்டும் உன்னத செயல். ஐந்தறிவு மிருகங்கள் போல் நடந்து கொள்வது நீ எனக்கு அடிமை நான் உன்னை என்ன வேணும்னாலும் செய்வேன் என நடந்துகொள்வது. இதற்கு முழு காரணமும் நம்மை சுற்றியுள்ள சமூகம் தான். பெண் குழந்தைகளை படிக்கவைப்பதில்ல. ஆணுக்கு ஏராள சலுகைகள் என ஆரம்பத்தில் இருந்தே அவனை உயர் பிறவி போல் நடத்தி அவனுக்கு ஆணாதிக்கத்தை ஊட்டி விடுகிறார்கள்.

முன்பின் தெரியாத ஒருவனை இன்று முதல் இவன் தான் உன் கணவன் என கல்யாணம் செய்து வைத்து அன்று இரவே அவன் இச்சைக்கு படுக்கையில் இசைந்துகொடுக்க சொல்வதும் இந்த சமூகம் தான். அதே பெண் ஒருவனை காதலித்துவிட்டால் மறுப்பது கொலை வரை கூட செல்கிறது. சிறார் பாலியல் வன்முறையோ. காதல் மறுத்ததால் கொலையோ, வன் கலவியோ இவை அனைத்திற்கும் நம்மை சுற்றி இருக்கும் சமூகமே காரணமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் வளர்ந்த எருமைமாடுகளை சக மனிதரை மனிர்களாக மதிக்க இந்த சமூகம் சொல்லிக்கொடுக்க வேண்டும்

2 வாங்கிகட்டி கொண்டது:

எம் அப்துல் காதர் said...

Super தல!

தனிமரம் said...

சிறப்பான பகிர்வு தல!

!

Blog Widget by LinkWithin