ஒரு விவாத களத்தை தொடங்கி வைப்போம்.
நீட் என்பது மருத்துவ படிப்பில் நுழைய மத்திய அரசு அமைத்திருக்கும் பொது நுழைவு தேர்வு. இது ஒரு தேசிய பிரச்சனை. தமிழக அரசு எதிர்க்கிறது ஆனால் கூட்டத்தில் தனியாக மாற்று குரல் கேட்பது போலல்லவா ஒலிக்கிறது.
என்ன செய்திருக்க வேண்டும் தமிழக முதல்வர். அனைத்து மாநில முதல்வர்களிடம் பேசி பொது தடைக்கு உதவி கோரியிருக்க வேண்டும். தமிழகத்தை விட படிப்பில் பின் தங்கிய மாநிலங்கள் உள்ளன. ஆனால் நீட் தேர்வுக்கு தமிழகம் மட்டுமே அதை எதிர்த்து சட்ட வரைவு கொண்டு வந்துள்ளது.
தமிழக அரசின் வாதம். நான் ஒரு முட்டாபயன்னு தாங்களே ஒத்துக்கொள்வது போல் உள்ளது. எங்களிடம் போதிய கல்வி கட்டுமானம் இல்லை என்பது ஒரு அரசு சொல்கிறது. நீங்கள் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் கேட்பீர்கள் என குற்றசாட்டு வைக்கிறது. இது ஹிந்தியை திணிக்கும் முயற்சி!? எங்கிறது.
மத்திய அரசு விளக்கம். +1 மற்றும் +2 வகுப்பு பாடத்தில் இருந்தும் மேலும் அடிப்படை பொது கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். உங்கள் தாய்மொழியில் அல்லது விருப்ப மொழியில் எழுத வழி செய்யப்படும். இது கல்வியின் தரம் உயரவே வழிசெய்யும்.
நமக்கு என்ன தோணுதுன்னா.
அரசுக்கு என்ன தான் அழுத்தம் கொடுத்தாலும் அது அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த போவதில்லை. தனியார் பள்ளிகளுக்கு கட்டுபாடுகளும் விதிக்கப்போவதில்லை. ஒரு முறை தமிழக அரசு நீட் தேர்வு தேவையில்லைன்னு மசோதா நிறைவேற்ற மறுபக்கம் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டு மாணவ/மாணவியர் பயிற்சி வகுப்புக்கு போய்கிட்டு இருக்காங்க.
நான் ஒன்பதாவது மட்டுமே படித்து பள்ளிக்கு போக மாட்டேன்னு சொன்ன காரணம் இந்த படிப்பை வச்சிகிட்டு என்னால் ஒரு வடை கூட சுட முடியாது என்பதால் தான். இன்றும் அப்படியே தான் இருக்கு. ஆக தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ/மாணவியர் எளிதாக நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கு போக அதிக வாய்ப்புள்ளது.
சில காவி ஞானசூனியங்கள் அப்துல்கலாம் அரசு பள்ளியில் படித்து ஜனாதிபதி ஆகலையா? ஏன் நீட் தேர்வை எதிர்க்கனும்னு பேசுறாங்க. கலாம் காலத்தில் எங்கேயாவது தனியார் பள்ளிகள் இருந்ததான்னு புரியல பாருங்க. அதான் ஞானசூனியன்னு சொன்னேன்.
விவாதகளம் இருவருக்கும்
நீட் ஆதரவாளர்களுக்கும்
எதிர்ப்பாளர்களுக்கும்
ஏன் ஆதிரிக்கிறோம்
ஏன் எதிர்க்கிறோம்னு உங்க பாயிண்டை எடுத்து வையுங்க
#வால்பையன்
0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment