அதிமுக இனி?

அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவராக ஜெயலலிதா அடையாளம் காட்டியது ஓ.பன்னீர்செல்வத்தை தான். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் ஜெயலலிதாவிற்கு அடுத்ததாக சட்டமன்றத்தில் துறை சார்ந்த அறிவிப்புகள் படிப்பதும் ஓ.பி.எஸ் மட்டும் தான். ஜெயலலிதாவிற்கு அடுத்த அமைச்சராக நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தார். மற்ற அமைச்சர்களை எதுவும் அறிவிப்புகள் செய்யவிட வில்லை ஜெயலலிதா. 110 பிரிவின் கீழ் அவரே அனைத்து துறைகளுக்கும் அறிவிப்பை வழங்குவார். மற்ற துறை அமைச்சர்களுக்கு வேலையே எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினால் அதை கேட்கும் தகுதி உங்களுக்கு இல்லை என்று சத்தம் போடுவது மட்டுமே.

அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களாக தங்களை நினைத்துக்கொண்டிருப்பவர்களில் மூத்த அரசியல்வாதிகளான பொன்னையன். செங்கோட்டையன் முக்கியமானவர்கள். அதில் எம்.ஜி.ஆர் காலத்து ஆட்களை மன்னார்குடி கும்பல் தனிமை படுத்தியே வைத்திருந்தது. தற்சமயம் கூட செங்கோட்டையன் அமைச்சர் பதவி இல்லாமல் தான் இருக்கிறார். தனிபட்ட முறையில் இரண்டு முறை ஓ.பி.எஸ் முதலைச்சராக இருந்தபொழுது மற்ற துறை வாரியான அமைச்சர்களின் திறனை அறிந்திருப்பார். அவருக்கு சுயமாக முடிவு எடுக்கும் அதிகாரம் கொடுத்தால் நிச்சயம் அமைச்சரவை மாற்றப்படும். காரணம் தற்பொழுது அமைச்சர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஓ.பி.எஸ் உட்பட மன்னார்குடி கும்பல் கை காட்டியதே.

ஓ/பி.எஸ் மத்திய அரசுடன் இனக்காக இருக்கிறார். அவர்களுன் ஓ.பி.எஸுடன் நெருக்கமாக இருப்பது போன்று சமீபமாக குற்றசாட்டு எழுந்தது. ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களையும் ஓ.பி.எஸ் அனுமதி வழங்கிவிட்டார் ஆனால் அவருக்கு வேற என்ன வழி இருக்கமுடியும். ஓ.பி.எஸ் இடத்தில் யார் இருந்தாலும் அதை தான் செய்வார்கள். மற்ற கட்சிகள் சசிகலாவிற்கு ஆதரவு அளிக்க காரணமே பாஜக எதிர்ப்பு தான். ஆனால் சசிகலா எல்லாரையும் விட பாஜகவுடன் நெருக்கமாக இருப்பார் என்பது ஏன் அவர்களுக்கு உறைக்க வில்லை.

75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபொழுதும். இறந்து 60 நாட்கள் ஆனபொழுதும். ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக பொதுநல வழக்கு போட்ட பொழுதும் பேசாத மருத்துவமனை வட்டாரம் இப்பொழுது பேச காரணம். ஜெயலலிதா சாவிற்கு சசிகலா தான் காரணம் என்று பொதுமக்கள் மத்தியில் இருக்கும் நெகடிவ் இமேஜை உடைக்க நினைக்கிறார்கள்.

எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் நமக்கு இதற்கு மேல் உயர் பொறுப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இருக்கும் பதவியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா போன்ற ஒரு ஆளுமையின் இடத்தை நிச்சயம் சசிகலாவால் நிரப்ப முடியாது. பேக் சீட் ட்ரைவ் செய்யப்போகும் நடராஜனால் கூட அது முடியாது.

ஜெயலலிதா விட்டு சென்றது கடனில் தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தை. அதை சரி செய்யவே இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம். சசிகலா பதவி ஏற்றால் தன் இமேஜை உயர்த்திக்கொள்ள இன்னும் பல இலவசங்கள் அறிவிக்கலாம். தமிழகம் மேலும் கடனில் மூழ்கும். நாடும் நாட்டு மக்களும் நாசமா தான் போகனும்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin