ரசிகன் = தொண்டன் = பக்தன்

நான் ஒன்றும் உலகைத்திருத்த வந்த ஞானப்பிறவி அல்ல, எனது விவாதங்களை எனது கருத்துகளுடனான சுயபரிசோதனையாகத் தான் எடுத்து கொள்கிறேன், ஆரம்பத்தில் இருந்தே பொதுபுத்திகெதிரான எனது விவாதங்கள் அனைத்தும் அப்படியே, ஆயினும் அயர்ச்சி தரும் விசயம் என்னவென்றால் நாம் ரஜினிக்கு எதிராக பேசினால் கமல் ரசிகன் என்று முத்திரை குத்தப்படுவோம், தி.மு.க விற்கு எதிராக பேசினால் அ.தி.மு.க காரன் என முத்திரை குத்தப்படுவோம், இஸ்லாத்துக்கு எதிராக பேசினால் ஆர்.எஸ்.எஸ் என முத்திரை குத்தப்படுவோம்!, விவாதத்தின் மையத்தை தொட்டு விவாதிப்பவர்கள் மிக குறைவாக இருப்பது ஆரோக்கியமான சூழல் இல்லை, விவாதிப்பவர்கள் சற்றே அதை கவனத்தில் கொள்க!

நான் தியேட்டருக்கு செல்வது அரிது என்பது சினிமா மீதான வெறுப்பினால் அல்ல, அந்த பொழுதுபோக்கு சாதனத்தில் பொழுதை போக்க எனக்கு போதுமான பொழுது இல்லாததே காரணம். செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு வரை எனக்கு தெரியாது, நாளை நான் எந்திரன் படத்துக்கு போவேன் என்று. 10 மணி காட்சிக்கு ஒன்பது மணிக்கு சொல்கிறான் பிலால் ”டிக்கெட் இருக்கு வாங்க”ன்னு, வரலைன்னு சொல்லி பார்த்தேன், அப்படின்னா டிக்கெட்டை கிழித்து போடுவதை தவிர வேறு வழியில்லை என்கிறான், சரி போய் தான் பார்ப்போமே என்று கிளம்பி தியேட்டருக்குள் உள்ளே சென்று அமரும் போது வசீகரன், சிட்டியை அறிமுகப்படுத்தும் காட்சி ஓடி கொண்டிருக்கிறது.



முன் சென்ற காட்சிகளை இழந்தது குறித்து எனக்கு எந்த வருத்தமுமில்லை, தமிழ் சினிமாவை கடைசியில் பார்த்தாலும் புரியும் என்ன நடந்திருக்குமென்று, ஒருமுறை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன், நான் சினிமா பார்க்கும் நேரம் இரவு ஒரு மணிக்கு மேல் தான், எந்த தொந்தரவும் இல்லாமல் முழு ஈடுபாட்டுடன் எதையும் செய்ய எனக்கு பிடிக்கும். ஆனால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில் சினிமா பார்ப்பது விருப்பமில்லாத இடத்தில் வழுக்கட்டாயமாக அமர்ந்திருப்பது போல் உணர்வை தந்தது, அருகில் இருந்த குடிமகன் காலையிலே சுதி ஏற்றி கொண்டு வந்து என் காதை பஞ்சராக்கினார், கவனிக்க இவையெல்லாம் சாதாரணமான விசயமாக இருக்கலாம், எனக்கு வித்தியாசமாக தோன்றக்காரணம் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது இதுவே முதல் முறை எனக்கு!



படத்தை பற்றிய என்னுடய கருத்தை கிரியின் பதிவில் சொல்லிவிட்டேன், பொழுது போக்கு சித்திரம் பொழுதை போக்க உதவியது என்று, ஆனால் நல்லதொரு விவாதம் அமையும் பொருட்டு அங்கே ஏன் நமக்கு தலைவன் தேவை என்றால் ஒருவர் கிரிக்கெட்டுக்கு கேப்டன் மாதிரி எங்களுக்கு ரஜினி என்கிறார்!, தலைவன் என்று ஒருவன் தனியாக இல்லை என்பதே என் கருத்து, இரண்டு நபர்களில் ஒருவர் அதிக எடையுடன் இருக்கிறார், அவரால் மற்றொருவரை விட அதிக எடை தூக்க முடியும் என்றால் அதுவே அவரது கடமையும் ஆகிறது, தன்னால் செய்ய முடிந்ததை ஒருவர் செய்வது நிச்சயமாக கடமை தான், மற்றொருவர் தூக்க வேண்டியதையும் சேர்த்து அவரே தூக்கினால் சொல்லலாம், தலைவண்டா நீன்னு! அப்படி ஒரு தலைவனாவது காட்டுங்களேன் நான் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்!

புரட்சிகர கருத்தை சொல்லிவிட்டார் என்பதற்காக ஒருவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவது, புணர்ச்சிக்கும், விழிப்புணர்ச்சிக்கும் வித்தியாசமில்லாத செயலாக தான் எனக்கு படுகிறது. பிறக்கும் போதே யாரும் எதையும் கற்று கொண்டு பிறப்பதில்லை, வாழ்க்கை கற்று தருவதை தான் நாம் பயன்படுத்தி கொள்கிறோம், சில நேரங்களில் சிலரது அனுபவங்களையும் பயன்படுத்தி கொள்கிறோம். அவையும் கற்றலில் தான் சேரும், ஆனால் தொண்டனாக தான் இருப்பேன் என அடம்பிடிப்பது உண்மையில் கொள்கைரீதியாகவா அல்லது கூட்டத்துடன் தம்மையும் இணைத்து கொள்ளும் உளவியல் பிரச்சனையா என தெரியவில்லை!



மனிதனுகென்று அடிப்படை நேர்மை இருக்கிறது, அதில் முக்கியமானது தான் செய்தது தவறு என்று உணரும் பட்சத்தில் அதை ஒப்பு கொள்வது அடுத்து மற்றவர் செய்தது தவறு என உணரும் பட்சத்தில் அதற்கு கண்டனம் தெரிவிப்பது, தொண்டைமான்களிடம் அடிப்படை நேர்மையை ஒருபொழுதும் எதிர்பார்க்க முடியாது, நாங்கள் அப்படியில்லை என்று சில இயக்க தோழர்கள் சொன்னாலும் அவர்கள் மனசாட்சிக்கும் தெரியும் அவர்களும் சில நேரங்களில் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று. மாவோ, ஸ்டாலின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தும் ஒருவர் ராமன் படத்துக்கு மரியாதை செலுத்துவதை ஏன் என்று கேட்கும் தகுதியை இழக்கிறார்!, நாங்கள் ஒன்றும் அவர்களை கடவுளாக வணங்கவில்லையே என ஒரு இயக்கத்தோழர் சொல்கிறார், இயக்கத்”தலைவர்கள்” புகழ் பாடுவதும், கடவுளுக்கு ”போற்றி” பாடுவதும் ஒன்று தான் என்று அவர்களுக்கு எப்படி புரியவைப்பது!..



நான் ஏன் சாதியை மறுக்கிறேன், அது பிரிவினையை தூண்டுவதால்

அதே தான் மதத்திற்கும், அதே வேலையை தான் செய்கிறது கட்சியும், ரசிகர் மன்றங்களும்.

பக்தனுக்கு கடவுள்

தொண்டனுக்கு தலைவன்

ரசிகனுக்கு நடிகன்

அவர்களது ஆதர்ஷநாயகர்களை பற்றி ஏதேனும் கேள்வி கேட்டுவிட்டால் அவர்களது பதில் திரும்ப கேள்வி கேட்பதாகவே இருக்கிறது, அதுவும் ”நீ என்னாத்த புடிங்கின” என்ற கேள்வியெல்லாம் பக்தகோடிகளின் பொதுபுத்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது!

மனிதனை கசட்டு அடையாளங்கள் இல்லாமல் மனிதனாக பார்க்கும் ஆவல் இப்படியெல்லாம் என்னை எழுத வைக்கிறது!

*************
கிழட்டுபய, சின்ன பொண்ணோடு ஆடுறான் போன்ற விமர்சனங்களை இவ்விடத்தில் நான் வன்மையாக கண்டிக்கிறேன், தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் கழிப்பறை வாசகங்கள் போன்றது அது. ரஜினி ஒரு நடிகர், நடிப்பு அவரது தொழில் அதை அவர் செவ்வனே செய்யும் பொழுது அது நாட்டுக்கு தேவையா, சமுதாயத்திற்கு நீ என்ன செய்தாய் போன்ற கேள்விகள் விளம்பரபிரியத்தனமாக தெரியுது!, மேலும் அது கொள்கைரீதியான விமர்சனமா அல்லது மற்றொரு நடிகரின் பால் இருக்கும் பிரியமா என்னுடமிடத்தில் பொதுபுத்தி வருகிறது!

விவாதிக்கலாமா!

67 வாங்கிகட்டி கொண்டது:

dheva said...

//கிழட்டுபய, சின்ன பொண்ணோடு ஆடுறான் போன்ற விமர்சனங்களை இவ்விடத்தில் நான் வன்மையாக கண்டிக்கிறேன், தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் கழிப்பறை வாசகங்கள் போன்றது அது. ரஜினி ஒரு நடிகர், நடிப்பு அவரது தொழில் அதை அவர் செவ்வனே செய்யும் பொழது அது நாட்டுக்கு தேவையா, சமுதாயத்திற்கு நீ என்ன செய்தாய் போன்ற கேள்விகள் விளம்பரபிரியத்தனமாக தெரியுது!, மேலும் அது கொள்கைரீதியான விமர்சனமா அல்லது மற்றொரு நடிகரின் பால் இருக்கும் பிரியமா என்னுடமிடத்தில் பொதுபுத்தி வருகிறது!//

ஓண்ணுமே இல்ல.. தல.. கண்ண மூடிகிட்டு சொல்றேன்..செம..!!!!!!!

சங்ககிரி ரமேஷ் said...

good one arun...

Sorry, by mistake I cast a minus vote:(

வால்பையன் said...

நான் என்ன தேர்தல்லயா தல நிக்கிறேன், எந்த ஓட்டா இருந்தா என்ன? நமக்கு தேவை கருத்துகள் தானே!

எல் கே said...

vaal, ungaludaya sirantha pathivugalil ithuvum ondru... i agree with you esp in the last segment

எஸ்.கே said...

//பக்தனுக்கு கடவுள்
தொண்டனுக்கு தலைவன்
ரசிகனுக்கு நடிகன்// நல்ல ஒப்பீடு! சூப்பரா எழுதியிருக்கீங்க!

மங்குனி அமைச்சர் said...

அதுவும் ”நீ என்னாத்த புடிங்கின” என்ற கேள்வியெல்லாம் பக்தகோடிகளின் பொதுபுத்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது!////

இதெல்லாம் மாற இன்னும் நிறைய நாள் ஆகும் தல

Mythees said...

:)

மங்குனி அமைச்சர் said...

நல்ல கட்டுரை தல , இங்கு எல்லாம் உணர்வு பூர்வமாக முடிவெடுக்கப் படுகிறது , புத்திப் பூர்வமாக எப்பொழுது முடிவெடுக்க ஆரம்பிக்கப் படுகிறதோ , அப்பொழுதுதான் மாற்றங்கள்வரும்

மங்குனி அமைச்சர் said...

எப்படியோ சைக்கிள் கேப்புல படம் பாத்துட்டா , இம் ....... அதும் முதல் நாள் முதல் சோ பாத்திட்டு வந்து லோள்ளபாரு, எகத்தாளத்த பாரு ..............

கல்வெட்டு said...

.

சினிமா - இரசிகன்
கட்சித் - தொண்டன்
கதைபுக் - வாசகன்
மதத்தை முகத்தில் பூசிக்கொள்பவன்
அறிஞர்களின் கருத்தைஎடுத்துக்கொள்ளாமல் படத்தை தூக்கித்திரிபவன்
...இப்படி

யாரையாவது தொழாவிட்டால் ஜன்னிவந்துவிடும் என்ற நிலையில் இருப்பவர்களை என்ன செய்வது?

**

வால் நீங்கள் மிகச்சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

இங்கே இரசினி என்பவர் நடிகர். செருப்பு தைப்பது கக்கூஸ் கழுவுவது கதைபுக் எழுதுவது போல ஒரு தொழில். நாம் கொடுக்கும் காசுக்கு டான்ஸாடி பொழுதைப் போக்க உதவுபவர்.

என்னசெய்தாலும் போக்கமுடியாத மிச்சமிருக்கும் பொழுதுகளைப் போக்க இது போன்ற கலைஞர்களிடம் (கலை / கூத்து)காசு கொடுத்து பொழுதைப் போக்கி வரலாம்.

அதைத்தாண்டி ஒன்றும் இல்லை அதிவேக பிழைப்பிற்கான முயற்சியில் பல நேரம் நாம் காணத்தவறும் நுண்ணிய உணர்வுகளை அல்லது வாழ்வின் அடுத்த பக்கங்களை காட்சிபப்டுத்தி கதைசொல்லும் கதை சொல்லிகள் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொள்பவர்கள் பாக்கியவான்கள். அவர்களிடம் போக்கும் பொழுது சிலநேரம் நம்மை உள்நோக்கி பார்க்கஉதவும் பொழுதும் போகும்.

சில நேரங்களில் அலுப்பு தெரியாமல் இருக்க அஞ்சால் அலுப்பு மருந்தோ அல்லது குவாட்டரோ அடித்து மட்டையாவது போல இது போன்ற படங்களும் தேவைதான். இல்லை என்றால் வாழ்க்கை சுவராசியமாக இருக்காது.

**

எந்திரன் படவிசயத்தில் பெரிய பிரச்சனை சன் டீவியின் ஏகபோக விளையாட்டுதான். அதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒன்றும் இல்லை.

ஒருவேளை இராமேஸ்வர மீனவனுக்காக இவனுகள் காவடி எடுத்தால் அது மேட்டர். வழக்கமான ஆட்டு மந்தைகளின் பாலபிசேகம் போன்றவை தமிழனுக்கு புதியது அல்ல.

**

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியா கருத்துக்கள் வால்ஸ்! மக்களைச் சிந்திக்க விடாமல் வைத்திருப்பதில் அரசியல்வாதிகளுக்கப்புறம், சினிமாவே பெரும் பங்கு வகிக்கிறது

Unknown said...

//நாம் ரஜினிக்கு எதிராக பேசினால் கமல் ரசிகன் என்று முத்திரை குத்தப்படுவோம், தி.மு.க விற்கு எதிராக பேசினால் அ.தி.மு.க காரன் என முத்திரை குத்தப்படுவோம், இஸ்லாத்துக்கு எதிராக பேசினால் ஆர்.எஸ்.எஸ் என முத்திரை குத்தப்படுவோம்!,//

very well said, vaal.
உங்களோட டிட்டோ திங்கிங்தான் என்னோடதும், இந்த பதிவைப் பொறுத்தவரை!

ஜில்தண்ணி said...

அத்தனையும் அப்பட்டமான உண்மைகள் வால்ஸ் :)

நையாண்டி நைனா said...

இங்கே வாலை புகழ்பவர்களை மற்றும் ஒத்த கருத்துன்னு சொல்பவர்களை வன்மையாக கண்டிக்குறேன்.
பின்னே என்ன? நம்ம தல மன்னிச்சிக்கோங்க... வாலு.. அவர்கள் விவாதிக்கலாமான்னு தானே கேட்டு பதிவு போட்டிருக்காரு... வந்து விவாதீங்க... விவாதீங்க விவாதீங்க...

சூனா பானா.. பஞ்சாயத்து தொடங்கிருசுடா...

சௌந்தர் said...

கிழட்டுபய, சின்ன பொண்ணோடு ஆடுறான் போன்ற விமர்சனங்களை இவ்விடத்தில் நான் வன்மையாக கண்டிக்கிறேன், தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் கழிப்பறை வாசகங்கள் போன்றது அது. ரஜினி ஒரு நடிகர், நடிப்பு அவரது தொழில் அதை அவர் செவ்வனே செய்யும் பொழது அது நாட்டுக்கு தேவையா, சமுதாயத்திற்கு நீ என்ன செய்தாய் போன்ற கேள்விகள் விளம்பரபிரியத்தனமாக தெரியுது!////

ரொம்ப சரியா சொன்னிங்க அவர் வேலையை அவர் பார்கிறார்

செல்வா said...

//கிழட்டுபய, சின்ன பொண்ணோடு ஆடுறான் போன்ற விமர்சனங்களை இவ்விடத்தில் நான் வன்மையாக கண்டிக்கிறேன், தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் கழிப்பறை வாசகங்கள் போன்றது அது. ரஜினி ஒரு நடிகர், நடிப்பு அவரது தொழில் அதை அவர் செவ்வனே செய்யும் பொழது அது நாட்டுக்கு தேவையா, சமுதாயத்திற்கு நீ என்ன செய்தாய் போன்ற கேள்விகள் விளம்பரபிரியத்தனமாக தெரியுது!, //

அவரது தொழிலை அவர் செய்யும் போது அது நாட்டுக்குத் தேவையா சமுதாயத்திற்கு தேவையா என்பது போன்ற கேள்விகள் கேட்பது முட்டாள்தனமானதே.! அவரது தொழில் அது .. அதை அவர் செய்கிறார்.!
அருமையான கட்டுரை எழுதிருக்கீங்க ..!!

கிரி said...

அருண் நல்லா இருக்கு! :-) நான் என் கருத்துகளை கூறி விட்டேன்.. வேறு யாராவது கேள்வி கேட்டால் திரும்ப வருகிறேன் (நேரமில்லை)

அருண் எப்போதும் என் விவாதம் நாகரீகமாகவே இருக்கும்... ஏற்றுக்கொள்வீர்கள் தானே! :-) ரஜினி ரசிகன் என்பதால் எப்போதும் கண்மூடித்தனமாக ரஜினியை ஆதரிப்பதில்லை.

Unknown said...

//ரஜினி ஒரு நடிகர், நடிப்பு அவரது தொழில் அதை அவர் செவ்வனே செய்யும் பொழது அது நாட்டுக்கு தேவையா, சமுதாயத்திற்கு நீ என்ன செய்தாய் போன்ற கேள்விகள் விளம்பரபிரியத்தனமாக தெரியுது!,//

அவருண்டு அவர் வேலை உண்டு என்கிற வரையில் அவரிடம் கேள்விகள் கேட்பது தவறுதான்.

தன்னுடைய மக்கள் செல்வாக்கை பயன்படுத்தும் பொழுது வெறும் ஆட்டம் பாட்டு அல்லாமல் நீ என்ன செய்தாய் மக்களுக்காக என்ற கேள்விகள் எழுவதுதான் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அழகு.

priyamudanprabu said...

நடிகனை நடிகனாய் பார்த்தால் சரி
இங்கெ ஏதோ தேவதுதனை போல் பார்ப்பதுதான் கமெடி
நல்ல பதிவு

priyamudanprabu said...

மெயில்

அருண் பிரசாத் said...

கடைசி பத்தி டாப் பாஸ்

வால்பையன் said...

//தன்னுடைய மக்கள் செல்வாக்கை பயன்படுத்தும் பொழுது வெறும் ஆட்டம் பாட்டு அல்லாமல் நீ என்ன செய்தாய் மக்களுக்காக என்ற கேள்விகள் எழுவதுதான் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அழகு.//


எல்லாவிதத்திலும் யாரையாவது சார்ந்து தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. யார் யாரை பயன்படுத்தி கொள்வது என்பது தான் இன்றைய போட்டா போட்டி!, முக்கியமாக அரசியல் அதை தான் செய்கிறது!, ரசிகனை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் பட்சத்தில் என்ன செய்தாய் எமக்கு என கேள்வி கேட்கலாம்! தப்பில்லை.

Unknown said...

நல்ல பதிவு. நன்றி.

VISA said...

நல்லா வந்திருக்கு கட்டுரை. கொஞ்சம் கியர மாத்தி உள்ள போய் அலசிர்யிருக்கலாம். சரி விடுங்க.

Radhakrishnan said...

//மனிதனை கசட்டு அடையாளங்கள் இல்லாமல் மனிதனாக பார்க்கும் ஆவல் இப்படியெல்லாம் என்னை எழுத வைக்கிறது!//

மிகவும் அருமையான பதிவு அருண்.

கலக்கல் பதிவு.

ரசிகர்களில், தொண்டர்களில், பக்தர்களில் தங்களைப் போன்றே சிந்திப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Radhakrishnan said...

//மனிதனை கசட்டு அடையாளங்கள் இல்லாமல் மனிதனாக பார்க்கும் ஆவல் இப்படியெல்லாம் என்னை எழுத வைக்கிறது!//

மிகவும் அருமையான பதிவு அருண்.

கலக்கல் பதிவு.

ரசிகர்களில், தொண்டர்களில், பக்தர்களில் தங்களைப் போன்றே சிந்திப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Radhakrishnan said...

ஒரு தடவை பதிந்தது என நினைத்தால் ஒய்யாரமாக இரண்டு தடவை பதிந்து இருக்கிறது.

இரண்டு வாக்குகள் அளிக்க வாய்ப்பு உண்டா?

Unknown said...

அருமையா எழுதிருக்கீங்க !!

நசரேயன் said...

//கிழட்டுபய, சின்ன பொண்ணோடு ஆடுறான் போன்ற விமர்சனங்களை இவ்விடத்தில் நான் வன்மையாக
கண்டிக்கிறேன்//

நானும்

Anonymous said...

புரட்சிகர கருத்தை சொல்லிவிட்டார் என்பதற்காக ஒருவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவது, புணர்ச்சிக்கும், விழிப்புணர்ச்சிக்கும் வித்தியாசமில்லாத செயலாக தான் எனக்கு படுகிறது.


அருமை....

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_14.html

RAVI said...

//மாவோ, ஸ்டாலின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தும் ஒருவர் ராமன் படத்துக்கு மரியாதை செலுத்துவதை ஏன் என்று கேட்கும் தகுதியை இழக்கிறார்!//

இந்த வரிகள்ல ”நீ எங்கயோ போயிட்ட” - வால்தல.

தனி காட்டு ராஜா said...

சிந்தனை அருமை :)

இராயர் said...

##தமிழ் சினிமாவை கடைசியில் பார்த்தாலும் புரியும் என்ன நடந்திருக்குமென்று, ஒருமுறை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்###

சரியா சொன்னிங்க தல

ராவணன் said...

''நான் எனது ரசிகன்''

''நான் எனது தொண்டன்''

''நான் எனது பகதன்''

இதில் ஏதும் தவறுள்ளதா?

முக்கியமானதை எழுத மறந்துவிட்டேன்..

"நான் எனது கடவுள்''

Anonymous said...

எந்திரன் இங்கு முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் பார்க்கப்பட்டுள்ளது தெளிவான கருத்துக்களோடு...சொல்லிக்கொள்ளத்தான் 21ம் நூற்றாண்டு பெரும்பாலான எண்ணங்கள் இன்னும் மாறாமல்....

Rajasurian said...

அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் :)

sriram said...

வாலு
இடுகை நீ எழுதினதா இல்ல மண்டபத்தில யாராவது எழுதிக் கொடுத்ததா??
அட்டகாசமா இருக்கு..
விவாதிக்க ஒண்ணுமேயில்ல, அப்படியே வழி மொழிகிறேன்.
எழுத்தில் முதிர்ச்சி தெரிகிறது.. வாழ்த்துக்கள்.

ஈரோடு இங்கர்சால்னு பட்டம் தர்றேன் வாங்கிக்கிறியா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Thekkikattan|தெகா said...

வால்ஸ்,

இந்தப் பதிவில தர்க்கம் பண்ண ஒண்ணுமே இல்ல. சுருட்டிப் பிடிச்சா மொட்டத் தலையில மசிரே இல்லாம பிடிக்க முயற்சி பண்ணுறமாதிரியா இருக்கும் சில பதிவுகள். அந்த ரகம் இந்தப் பதிவு - :)

எதனையாவது ஒட்டியே இருந்தா அதுக்கு சப்பை கட்டுறதுக்கு காரணம் தேடியே நம்மோட உள்ளுணர்வை, நுண் உணர்வுகளை ‘மரத்துப்’ போக வைச்சிடுவோங்கிறது உறுதி.

நல்லவேளை அதில இருந்து தப்பிச்சு வெளியில நிக்கிறீங்களேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான். இல்லன்னா நீங்களும் பால் பொட்டலத்த பல்லால கடிச்சி பீச்ச்ச்ச்ச்ச்ச்ச்சி அடிச்சிருப்பீங்க ;)

நல்ல பதிவு!

வால்பையன் said...

//ஈரோடு இங்கர்சால்னு பட்டம் தர்றேன் வாங்கிக்கிறியா??//

இங்கர்சால் யாரு தல, எழுத்தாளரா? நம்ம சாரு ரேஞ்சுக்கு எழுதுவாரா!?

Jayadev Das said...

நீங்கள் சொல்லியிருப்பதில் பெரும்பாலானவற்றுடன் நான் ஒத்துப் போனாலும், சிலவற்றை நிராகரிக்க வேண்டியுள்ளது. தலைவனே தேவையில்லை என்பது போல் எழுதியுள்ளீர்கள். வழி நடத்திச் செல்ல, நம்மைப் பாதுகாக்க நிச்சயம் தலைமை தேவை. அந்த தலைமை யார், எப்படியிருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. ஆட்டை தீனி போட்டு, நோய் போன்றவற்றிலிருந்து காப்பாற்றி கடைசியாக கசாப்பு போடுகிறானே அது போல இருக்கக் கூடாது. விவரமறியாத குழந்தைகளை தகப்பன் எப்படி பாதுகாக்கிறது போல இருக்க வேண்டும். இப்போது நடப்பது முன்னர் சொன்னது போல நடக்கும் ஆட்சி. தமிழன் தனது தலைவனை சினிமாவில் கூத்தடுபவர்களிடம் தேடுகிறான், நீங்கள் சொன்னது போல //இங்கே நடிகர் என்பவர் செருப்பு தைப்பது கக்கூஸ் கழுவுவது கதைபுக் எழுதுவது போல ஒரு தொழில் செய்பவர். நாம் கொடுக்கும் காசுக்கு டான்ஸாடி பொழுதைப் போக்க உதவுபவர்.// என்ற உண்மை தமிழனுக்கு எப்போது விளங்குமோ தெரியவில்லை. ஐந்து வருடமும் எந்த அயோக்கியத்தனம் வேண்டுமானாலும் செய்துவிட்டு தேர்தல் சமயத்தில் கொஞ்சம் காசை அள்ளிவிட்டு, சோறு போட்டு, சாராயத்தை ஊற்றி விட்டால் ஒட்டு போடுவான் தமிழன் என்று நினைக்குமளவுக்கு கேவலமான நிலையில் இன்று தமிழன் இருக்கிறான். என்று வரும் விடிவு காலம்?

Jayadev Das said...

.

வால்பையன் said...

// வழி நடத்திச் செல்ல, நம்மைப் பாதுகாக்க நிச்சயம் தலைமை தேவை.//

எதுக்கு வழி நடத்தனும், நாமாக செல்ல நமக்கு சுய அறிவு இல்லையா!?
ந்ம்மை எதுக்கு இன்னொருவர் பாதுகாக்கனும், நம்மால் நம்மை பாதுகாக்க முடியாதா!?

இந்த பாதுகாப்பற்ற தன்மை தான் எதாவது கூட்டத்தொடு நம்மை இணைப்பது, அது கட்சியாகவும் இருக்கலாம், ரசிகர் மன்றமாகவும் இருக்கலாம்!

Kris said...

அடிப்படை கேள்வி: இந்த தல தல -ன்னு சொல்றிங்களே அதுக்கு அர்த்தம் என்னப்பா? "தறுதல" யா? இல்ல தலைவா வா? முட்டாள் தனமா ஒரு தனிமனிதனை வழிபடுவதை நானும் எதிர்க்கிறேன். அனால் தனி மனிதர்களின் வரலாறும் முக்கியம். மரியாதை செய்வதற்கும் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளதாக கருதுகிறேன். என்னதான் புத்தகத்தில் படித்தாலும் தி.க வின் போக்கு பிடிக்காவிட்டாலும் பெரியார் சிலையை பார்த்தால் மரியாதை வருகிறது. இது தவறா?

வால்பையன் said...

//அடிப்படை கேள்வி: இந்த தல தல -ன்னு சொல்றிங்களே அதுக்கு அர்த்தம் என்னப்பா? "தறுதல" யா? இல்ல தலைவா வா? முட்டாள் தனமா ஒரு தனிமனிதனை வழிபடுவதை நானும் எதிர்க்கிறேன். அனால் தனி மனிதர்களின் வரலாறும் முக்கியம். மரியாதை செய்வதற்கும் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளதாக கருதுகிறேன். என்னதான் புத்தகத்தில் படித்தாலும் தி.க வின் போக்கு பிடிக்காவிட்டாலும் பெரியார் சிலையை பார்த்தால் மரியாதை வருகிறது. இது தவறா? //


டே, மாப்ளன்னு கூப்பிடுவதால் தங்கையை கட்டி கொடுத்தாயா என கேட்க முடியாது அல்லவா! அதே போல் தான் இந்த தல, ரெண்டாவது நான் வால் என்பதால் லாஜிக்காக தல என்று அழைக்கிறேன்!

உடற்கூறான தலையை குறிக்கும் சொல் அது!

பெரியார் மீது மட்டுமல்ல, எனக்கு எல்லார் மீதும் மரியாதை உண்டு, நீங்கள் சொல்வது போல் நானும் வழிபடுவதை தான் சாடுகிறேன்!

Unknown said...

இந்த ஜென்மங்கள் எல்லாம் திருந்த மாட்டங்கே.
good thoughts bro... keep write to awarnes of our tamil makkal.

உமர் | Umar said...

குவியலை எதிர்பார்த்தேன். 904 க்கு வாழ்த்துகள்.

----
எந்திரன் திரைப்படத்தில் இரண்டு விஷயங்கள் விவாதத்திற்குரியவை. சன் டிவியின் ஏகபோகம், ரோபோட்டிக்ஸ் விதிகளுக்கு முரணான கதை. இவற்றைப் பற்றி பேசிய பதிவுகளிலெல்லாம், கருத்தைப் பற்றி பேசாமல், ரஜினிக்கு எதிராக எழுதிவிட்டார்களே என்று சாமியாடிய ரஜினி ரசிகர்கள், இந்தப் பதிவில் வந்து சூப்பர் பதிவு என்று கூறியிருக்கின்றனரே. இந்தப் பதிவே அவர்களின் பக்தியை பற்றியது என்பதை படிக்கவில்லையா? இல்லை விவாதத்திற்கு தயாராயில்லையா? இல்லை ஒருவேளை திருந்திவிட்டார்களா?

.

Gnana Prakash said...

அருமை நண்பரே

கல்வெட்டு said...

.

Jayadeva said...
// வழி நடத்திச் செல்ல, நம்மைப் பாதுகாக்க நிச்சயம் தலைமை தேவை.//

வால்பையன் said...
//எதுக்கு வழி நடத்தனும், நாமாக செல்ல நமக்கு சுய அறிவு இல்லையா!?
ந்ம்மை எதுக்கு இன்னொருவர் பாதுகாக்கனும், நம்மால் நம்மை பாதுகாக்க முடியாதா!?//

வால்,Jayadeva

இங்கே தலைமை(பாஸ்) என்பதைவிட வழிகாட்டியின் (லீடர்) தேவைதான் அதிகம். மனிதன் ஒரு சமூக பிராணி (மற்ற பெரும்பாலான விலங்கினங்கள் போலவே) சமூகமாக வாழும் எல்லா விலங்குகளுக்கும் ஒரு சமூகக்கட்டுப்பாடு இருக்கும். அதை பெருசுகள் சொல்லித்தரும்.

நடப்பதில் இருந்து குண்டிகழுவுவதுவரை ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள்தான் சொல்லிதருகிறார்கள். அது போல நிச்சயம் ஒரு வழிகாட்டி வேண்டும். சரியாகச் சொல்ல வேன்டும் என்றால் ஆங்கிலத்தில் "மென்டோர்"

மென்டோரைத் தேர்ந்தெடுப்பதிலும் வழிகாட்டுதல் தேவை. அது இல்லாமையால்தான் கதை எழுதுபவன், கூத்தாடுபவன், சாமியாடுபவன் என்று எதையாவது தேர்ந்தெடுத்து பலியாகிறார்கள். கதை எழுதுபவனும், கூத்தாடுபவனும், சாமியாடுபவனும் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் "மென்டோர்" ஆக இருக்கத் தகுதியானவர்களா என்பதுதான் கேள்வி.

**
33 உயிர்களைக் காப்பாற்ற திட்டம்போட்டு அவசர காலங்களில் வழிகாட்டியாக இருந்தவருக்கும் இராமேஸ்வரத்தில் என்ன நடக்கிற‌து என்றே தெரியாத அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத அல்லது தெரிந்தும் சும்மா இருக்கும் ஒருவருக்கும் இருக்கும் வித்தியாசம் , மக்கள் விரும்பியோ விரும்பாமலோ அவர்களைப் பாதிக்கிறது.

வழிகாட்டுதல்/ "மென்டோர்" என்பது விலங்குகளின் அவசியத்தேவை.

அறிவியலார்கள் (கையேடு போன்றவர்கள்) மேலும் விளக்கலாம்.

*

Unknown said...

நீண்ட நாட்கள் களைத்து
லேட்டா பதிவு போட்டாலும்
நான் லேட்டா கமெண்ட்ஸ் போட்டாலும்
கலை ரசனையுடன்
உங்கள் கருத்துக்களை
தெளிவாக எழுதி இருக்கீங்க
இப்படிக்கு
ஒரு தீவிர வாசகன்...

Unknown said...

50...
:)

hiuhiuw said...

//நான் ஒன்றும் உலகைத்திருத்த வந்த ஞானப்பிறவி அல்ல, //

என்ன ஒரு பெருந்தன்மை!


வால் சாமிக்கு அரோகரா

Anonymous said...

இடுகையின் தாமதம் பற்றிய கேள்விகளை மறக்கடிக்கும் பதிவு.
யாரையும் சாராத சீண்டாத எழுத்துக்கள் தான்.
ஆனாலும் கடைசி வாக்கியங்களில் “எனக்கெதற்கு ரஜினி ரசிகர்களின் வம்பு“ என வால் நினைத்துவிட்டாரோ?

hiuhiuw said...

//போக்க எனக்கு போதுமான பொழுது இல்லாததே காரணம். //

வேல வெட்டி இல்ல; நான் பிஸியான புள்ள!

hiuhiuw said...

//ஒருவர் கிரிக்கெட்டுக்கு கேப்டன் மாதிரி எங்களுக்கு ரஜினி என்கிறார்!,//


தமிழகத்துக்கு தன்னிகரில்லாத கேப்டன்! எங்கள் பிளேக் எம் ஜியார் மட்டுமே!

hiuhiuw said...

//பிறக்கும் போதே யாரும் எதையும் கற்று கொண்டு பிறப்பதில்லை,//

ஆமா தல! எனக்கே 9ம் கிளாசுலதான் எல்லா வெவரமும் தெரிஞ்சுது! (அவ்வ்வ்வ்!)

தமிழ் திரு said...

// புணர்ச்சிக்கும், விழிப்புணர்ச்சிக்கும் வித்தியாசமில்லாத செயலாக //

ரசிக்கும்படி உள்ள வரி ....

எல்லோரும் சிந்தித்தால் இந்த தலைவர் தொண்டர் பிரச்னை இல்லை ....

நல்ல கருத்துக்கள் ...வாழ்த்துகள் !!!

தருமி said...

//மனிதனை கசட்டு அடையாளங்கள் இல்லாமல் மனிதனாக பார்க்கும் ஆவல் இப்படியெல்லாம் என்னை எழுத வைக்கிறது!//

நல்லா இருக்கு

Riyas said...

எந்திரனைப்பற்றி ரஜினியை பற்றி சொல்லிய விஷயங்களை நானும் ஏற்றுக்கொள்கிறேன்..வால்.
ஆனால் தலைவன் ஒருவன் தேவையில்லை எனும் கருத்தோடு உடன்பட மறுக்கிறேன்.. ஒரு சமூகம் கட்டுகோப்பாக சீராக இயங்க ஒரு தலைமை கட்டாயம் தேவை. நீங்கள் சொல்வது போல் எல்லோருக்கும் சுயபுத்தி இருக்கிறதுதான். ஆனால் ஒவ்வோர் சிந்தனையும் ஓரே மாதிரியில்லயே..தனியே முடிவெடுப்பதில் தவறில்லை ஆனால் பொது என்ற ஒன்று வரும்போது இவ்வாறு வெவ்வேறுபட்ட சிந்தனைகொண்டவர்களை கொள்கையுடையவர்களை ஒரே நோக்கில் செலுத்த நிச்சயம் தலைமை தேவை.. ஆனால் அது யாராக இருக்கவேண்டும் என்ன தகுதியிருக்கவேண்டும் என்பதில்தான் பிரச்சினை.. சினிமா நடிகர்களை தலைவா என்பதும் ரசிகர் மன்றம் உருவாக்குவதும் நானும் விரும்பாத ஒன்று.

Jayadev Das said...

//ஆனால் தலைவன் ஒருவன் தேவையில்லை எனும் கருத்தோடு உடன்பட மறுக்கிறேன்.. ஒரு சமூகம் கட்டுகோப்பாக சீராக இயங்க ஒரு தலைமை கட்டாயம் தேவை. நீங்கள் சொல்வது போல் எல்லோருக்கும் சுயபுத்தி இருக்கிறதுதான். ஆனால் ஒவ்வோர் சிந்தனையும் ஓரே மாதிரியில்லயே..தனியே முடிவெடுப்பதில் தவறில்லை ஆனால் பொது என்ற ஒன்று வரும்போது இவ்வாறு வெவ்வேறுபட்ட சிந்தனைகொண்டவர்களை கொள்கையுடையவர்களை ஒரே நோக்கில் செலுத்த நிச்சயம் தலைமை தேவை.. ஆனால் அது யாராக இருக்கவேண்டும் என்ன தகுதியிருக்கவேண்டும் என்பதில்தான் பிரச்சினை.. சினிமா நடிகர்களை தலைவா என்பதும் ரசிகர் மன்றம் உருவாக்குவதும் நானும் விரும்பாத ஒன்று. // நான் மனதில் நினைத்ததை அப்படியே எழுதியுள்ளீர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.-ஜெயதேவ் தாஸ்.

சீனு said...

//அயர்ச்சி தரும் விசயம் என்னவென்றால் நாம் ரஜினிக்கு எதிராக பேசினால் கமல் ரசிகன் என்று முத்திரை குத்தப்படுவோம், தி.மு.க விற்கு எதிராக பேசினால் அ.தி.மு.க காரன் என முத்திரை குத்தப்படுவோம், இஸ்லாத்துக்கு எதிராக பேசினால் ஆர்.எஸ்.எஸ் என முத்திரை குத்தப்படுவோம்!,//

என்னங்க இது. இத்தனை நாளா நீங்களும் இதே தான் செஞ்சுகிட்டிருந்தீங்க. இப்ப மட்டும் வலிக்குது போல... :)

virutcham said...

தலைவன் என்று சொல்லுவதை எல்லாம் தாண்டி தெய்வமாக்கும் அபத்தங்களாக அபிஷேகம் ஆரத்தி, அலகு குத்தல், தேர் இழுத்தல் என்று என்ன வெல்லாமோ அரங்கேறியது. பல வருடமாக ரஜினி படத்தை முதல் காட்சியில் பார்த்துவிடும் ஒருவர் சொன்னது, பால் அபிஷேகம் மட்டும் ரொம்ப காலமா நடிக்கிற விஷயம். ஆனா இப்போதையக் கூத்து வியாபார நோக்கில் செய்யப் படுவது.
ஒரு பக்கம் நிஜம் என்று நிகழ்ச்சி நடத்தி கடவுள் சார்ந்த மூட நம்பிக்கைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதாக சொல்லிக் கொள்ளும் அதே தொ.கா இப்படி ஒரு நடிகரை காட்சிப் பொருளாக்கி ...
அதுக்கும் ஒரு நிஜம் நிகழ்ச்சி எதிர்காலத்தில் நடத்துவாங்களோ.

எல்லோரும் போய் புள்ளைக் குட்டிங்களைப் படிக்க வையுங்க இல்லை இல்லை முதல்ல நீங்க படிங்கன்னு சொல்லனும்னு தோணுது.

marimuthu said...

எந்த சினிமாவும் யாருக்கும் படிப்பினை சொல்ல எடுப்பதில்லை! பணம்! பணம் ஒன்றே பிரதானம்! அந்த அளவில் எந்திரன் வெற்றிப்படம்! பணம் பணத்தோடு சேர்ந்து விட்டது! பாலபிஷேகம் பண்ணும் பாமரனின் வீட்டில் குழந்தை பாலுக்கு அழுகிறது!

Maximum India said...

எப்போதும் துணிச்சலாக கருத்துக்களை வெளியிடும் உங்களின் இந்த பதிவு சற்று நெருடலையே ஏற்படுத்துகிறது. கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வது, காவடி எடுப்பது, தனிநபரை கடவுள் ரேஞ்சுக்கு புகழ் பாடுவது போன்ற செயல்களை கண்டிக்காமல் ரஜினி ரசிகர்களுடன் மோதல் வேண்டாம் என்ற நிலையை நீங்கள் எடுத்திருப்பதை உங்கள் பதிவின் இறுதி வாக்கியங்கள் காட்டுகின்றன.

ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்பதிலோ, தன்னுடைய படங்களை வர்த்தக ரீதியாக வெற்றி பெற செய்வதில் வல்லவர் என்பதிலோ எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இவற்றை தாண்டி எழுப்பப் படும் தனிநபர் துதிகளை சந்தோசமாக ஏற்றுக் கொள்பவர்கள் விமர்சனங்களை மட்டும் எதிர்ப்பது வேடிக்கையான ஒன்றுதான். அதே போல திரைப்படங்களை திரைப்படங்களாக மட்டும் பார்க்காமல் அவற்றின் மூலம் நாட்டுக்கு நல்லது செய்வதாக பெருமை அடித்துக் கொள்பவர்கள் திரைப்படங்களின் கேடுகள் பற்றி எழும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

"Politically Correct" என்ற நிலையை எடுக்காமல் யதார்த்தமான கருத்துக்களை துணிச்சலாக சொல்லும் வால் பதிவுகளையே நான் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி!

Chandru said...

ஏதோ கச்சேரி பிரமாதமா நடக்கப் போகுதுன்னு பார்த்தா எல்லாக் கலைஞர்களும் ஒத்துப் பெட்டியுடன் வந்து ஊதிக் கொண்டிருக்கிறார்கள்.ஓரிருவரைத் தவிர. இதைத்தான் ரசிகன் செண்டிமெண்ட் என்பது.பரவாயில்லை நீங்களும் அந்த அந்த சுகத்தை அனுபவிக்கிறீர்கள்
உடம்பு பூரா மூளையாய் இருந்தால் அதற்கு பெயர் ”புழு” அல்லது _____ஏதோஒன்று என்றுதான் அர்த்தம்.சத்தியமாக மனிதனாக இருக்கமுடியாது.
ஆனா தலைக்குள்ள இருக்கிற மூளையை அடையாளம் கானத்தெரியாமல் தலைக்கு மேல இருக்கிற மயிர மூளைன்னு சிலதுகள் தப்பா நிணைக்கும் போதுதான் பிரச்னை.
ஏதோ கூப்பிட்டீங்கன்னு வந்தேன். அதுக்காக இந்த ”ஒத்துகள்” ”தல”க்கு எதிரின்னு கடிக்காம இருந்தாச் சரி

அருள் said...

Jayadeva said...
// வழி நடத்திச் செல்ல, நம்மைப் பாதுகாக்க நிச்சயம் தலைமை தேவை.//

வால்பையன் said...
//எதுக்கு வழி நடத்தனும், நாமாக செல்ல நமக்கு சுய அறிவு இல்லையா!?
ந்ம்மை எதுக்கு இன்னொருவர் பாதுகாக்கனும், நம்மால் நம்மை பாதுகாக்க முடியாதா!?//

கல்வெட்டு said...
// //மனிதன் ஒரு சமூக பிராணி (மற்ற பெரும்பாலான விலங்கினங்கள் போலவே) சமூகமாக வாழும் எல்லா விலங்குகளுக்கும் ஒரு சமூகக்கட்டுப்பாடு இருக்கும்.// //

"மனிதனுக்கு தலைமை தேவை - மனிதன் ஒரு சமூக விலங்கு" என்கிற கல்வெட்டு, Jayadeva கருத்துக்கள் சரியானவையே.

இதில் "நம்மை எதுக்கு இன்னொருவர் பாதுகாக்கனும், நம்மால் நம்மை பாதுகாக்க முடியாதா!?" என்கிற வால்பையனின் கேள்வி முரண்பாடாக இருக்கிறது.

உண்மையாகப் பார்த்தால்: "நம்மை நாமே பாதுகாப்பது" என்பதே ஒருதலைமை மூலமாகத்தான் நடக்கிறது. மக்கள் வாக்களிப்பதன் மூலம் அமையும் அரசாங்கம் மக்களை பாதுகாக்கிறது. அதிகாரம் மக்களிடமிருந்து சென்றாலும் அதனை ஒரு தலைமைதான் செயலாக்குகிறாது.

எந்த ஒரு நாட்டிலும் அரசாங்கம் என்பது ஒரு அரசுத் தலைமையின் மூலமாகத்தான் நடக்கிறது. அந்த தலைமை இல்லாது போனால், அதாவது அரசாங்கம் என்கிற அமைப்பு இல்லாதுபோனால் - சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, பணம், வங்கி, கல்விச்சாலைகள், சாலைகள், மின்சாரம், போக்குவரத்து, குடிநீர், குப்பை நீக்கம், நீதிவழங்குதல் என்கிற எதுவுமே இல்லாது போய்விடும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் - தலைமை இல்லாவிட்டால் மனித வாழ்வே இல்லை.

Unknown said...

இதை படிக்கும் பொது எனக்கு ஒரு படம் நாபகம் வருது அந்த படத்தின் பேரு பையா அதில் ஹீரோ ஓடும் பஸ்ஸில் தான் ஏறுவார் ... என்ன அருமை அரசாங்கம் சொல்லுது ஓடும் பஸ்ஸில் ஏறாதே என்று அனல் நமது ஹீரோக்கள் அதற்க்கு எதிராக ஓடும் பஸ்ஸில் ஏறு என்று மக்களை நல்வளிபடுதுகிரர்கள் ... வாழ்க தமிழ் சினிமா .... சமுதாய பொறுப்பு என்று கொஞ்சமாவது வேணும் .. இது போல் பணம் சம்பாதிப்பதற்கு ....*%^*^*&.

ANAND said...

கிழட்டுபய, சின்ன பொண்ணோடு ஆடுறான் போன்ற விமர்சனங்களை இவ்விடத்தில் நான் வன்மையாக கண்டிக்கிறேன், தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் கழிப்பறை வாசகங்கள் போன்றது அது. ரஜினி ஒரு நடிகர், நடிப்பு அவரது தொழில் அதை அவர் செவ்வனே செய்யும் பொழுது அது நாட்டுக்கு தேவையா, சமுதாயத்திற்கு நீ என்ன செய்தாய் போன்ற கேள்விகள் விளம்பரபிரியத்தனமாக தெரியுது!, மேலும் அது கொள்கைரீதியான விமர்சனமா அல்லது மற்றொரு நடிகரின் பால் இருக்கும் பிரியமா என்னுடமிடத்தில் பொதுபுத்தி வருகிறது!

!

Blog Widget by LinkWithin