உலகின் அழகிய மணமகன்!

ராஜன் திருமணம் குறித்து டோண்டு பதிவில் புகைப்படத்துடன் எழுதியிருந்தார், எதிர்பார்த்தது போலவே எங்களது கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திராணியற்று எங்கேயாவது வாய்ப்பு கிடைக்குமா என தேடியலைந்த மதவாதிகளுக்கு உச்சியில் ஏறி கொண்டது, புதிதாக திருமணமானரை தொந்தரவு செய்ய வேண்டாமே என நானும் கும்மியும் காத்து கொண்டிருந்தோம்! இந்த இடைவெளிக்குள் அவர்களை போலவே பதில் சொல்ல முடியாமல் அசிங்க கமெண்டுகளும், போன் மிரட்டல்களும் விடும் கோழைகள் என்று நினைத்து விட்டார்கள் போல, ஸ்டேட்டஸ் வச்சு பதிவு எழுத கும்பலே ரெடியாகிகிட்டு இருக்கு!

முக்கியமாக மனைவிமார்களை பர்தாவுக்குள் அடைத்து வைக்கும் ஆணாதிக்க சமூகம் ராஜனை கேள்வி கேட்க துடித்து கொண்டிருக்கிறார்கள், காரணம் உங்களுக்கே தெரியும் நமது கேள்விகளால் மூக்குடைபட்டவர்களில் அவர்கள் தான் அதிகம், அவர்களை போலவே ராஜனையும் ஆணாதிக்கவாதி என நினைத்து விட்டார்கள் போல, ”தேவையென்றால் மனைவியை அடி” என்று வேதத்தில் சொன்ன மதத்தில் பிறந்த கும்மி கூட ஒப்பு கொள்ள மாட்டார் ராஜனுக்கு ஆணாதிக்கம் இருக்கு என்றால்!

ராஜன் கடவுள் மறுப்பாளனாக இருந்தால் அவரது காதலியும் கடவுள் மறுப்பாளராக தான் இருக்க வேண்டும் என சட்டம் இருக்குதா அய்யா, இல்லை ”நான் கவுண்டன் அதுனால கவுண்டச்சியை தான் கட்டுவேன்” நான் கம்யூனிஸ்டு அதனால் ஒரு கம்யூனிஸ்டை தான் கட்டுவேன்” என உதார் விட ராஜன் என்ன இயந்திரமா, யாரை திருமணம் செய்ய வேண்டும் அப்பெண்ணுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என உத்தரவிட நீங்கள் யார்!?

இப்பிரச்சனை குறித்து நாங்கள் பத்திரிக்கை வந்த போதே பேசிவிட்டோம்.

உங்களது கொள்கையையும், காதலையும் விட தாயில்லாமல் இருபது வருடங்களுக்கு மேல் ஒரே பெண்ணை வளர்த்த தந்தைக்கு மகளின் வாழ்கையின் மேல் ஆயிரம் கனவுகள் இருக்கும், மேலும் விவாதங்களின் மூலம் புரியவைக்க நமக்கு நேர அவகாசமும் கிடையாது, நிச்சயம் மதவாதிகளுக்கு இது அவுல் தான், இருக்கட்டும் நண்பா, உன்னை நாங்களறிவோம், ஒரு வயதான தந்தைக்காக சில நிமிடங்கள் கொள்கையை விட்டுக்கொடுப்பதால் யார் உயிரும் போய்விடாது என அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்ததே நானும் கும்மியும் தான், வந்து கேளுங்க நாங்க பதில் சொல்றோம் உங்கள் கேள்விகளுக்கு, உங்களை போல் நூறு பேரை வரிசையாக நிற்க வைத்து விவாதிக்க எங்களிடம் திறமையும் இருக்கு, தூக்கி வாயில் போட்டு ஏப்பமிட தெம்பும் இருக்கு, நாங்கள் ஒன்றும் ஒழிந்து இந்த கல்யாணத்தை நடத்தவில்லை, ஊரறிய ப்ளாக்கில் எழுதி வருவபர்கள் யாரையும் மனங்கோணாதபடி நடந்து தான் அனுப்பினோம்!

இறைமறுப்பு என்பது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முதல்வாதம், பார்பணியம் தீண்டாமைகெதிரான வாதம், அதை வெகு தீவிரமாக செய்து வரும் நாங்கள் எங்கேயும் தனிப்பட்ட முறையில் தனிநபரை தாக்கியோ அல்லது விரோதம் பாராட்டியோ நடந்து கொண்டதில்லை, பதில் சொல்ல முடியாமல் அனானியாக வந்து சீண்டிய மொள்ளமாறிகளுக்கு தான் ராஜனும் காட்டமாக பதிலளித்திருக்கிறார், எந்த விவாதத்த்திற்கும் முன்முடிவுகளோடு மனிதர்களை அணுகும் பழக்கம் எங்களுக்கில்லை!

நாங்கள் எந்த கட்சியையோ, எந்த இயக்கத்தையோ, எந்த சங்கத்தையோ சாராதவர்கள் அதே போல் நாங்கள் இதுவரை கூட்டம் சேர்த்ததும் கிடையாது, எங்களது நண்பர்களுக்குள்ளும் பலதரபட்ட விவாதங்களை முன்வைத்து அனைவரும் தத்தம் தனித்தன்மையுடன் இருக்கவே முன்மொழிகிறோம், எவனுக்கும் கூழைகும்பிடு போடுவதோ, யார் தோளிலும் ஏறி அமர வேண்டிய அவசியமோ எங்களுக்கில்லை/தேவையுமில்லை.

ராஜனை பற்றி எங்களுக்கு தெரியும், எங்களை விட நன்கறிந்த ரேவதிக்கு தெரியும், முரண்பாடில்லாத மற்றொரு சகமனிதனை உலகில் பார்க்க முடியாது, என் தாய், தந்தை ஆத்திகர்களாக இருப்பதால் நான் அவர்களை கவனிக்க மாட்டேன் என்றோ, உங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை என சொல்லும் அளவுக்கு கொள்கை வெறிபிடித்த மிருகமோ நாங்கள் அல்ல!, நாங்கள் முன்வைப்பது மதத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் இருக்கும் மனித விரோதங்களை, அவை என்றென்றும் தொடரும்!

உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நான் இருக்கிறேன்.

பங்காளி இன் ஹேப்பி மூட், சிங்கத்தை சீண்டாதிங்க.


*************
இது ராஜன் திருமணம் குறித்து கேள்விகள் கேட்டவர்களுக்கு விளக்கப் பதிவு மட்டுமே, எனது பயண கட்டுரையும், புகைப்படங்களும் தனியாக வரும்!

140 வாங்கிகட்டி கொண்டது:

கும்மி said...

நண்பா, உன்னை நாங்களறிவோம்!

மதுரை பொண்ணு said...

அது என்னங்க தல வர வர ஸ்மார்ட் ஆகிட்டே போறீங்க.. கிப்ட் ஒன்னும் கொண்டு போகல போல.பக்கதுல கொண்டு கிப்ட் கொண்டு வந்தவரோட சைடு காப்புல போட்டோ எடுத்துக்கிடீங்க

கும்மி said...

//கிப்ட் ஒன்னும் கொண்டு போகல போல.//

எங்க வீட்டு கல்யாணத்துக்கு நாங்களேவா கிப்ட் கொண்டு போவோம்?

dheva said...

தல.. சிம்ளி சூப்பர்...!

மதவாதிகளுகு அது பிழைப்பு...!

மதவாதம் என்ற தட்டை பறித்தால் கையில் பிச்சை ஏந்த வேண்டிவரும்...!

ராஜனுக்கு வாழ்த்துக்கள் .... தெளிவான கட்டுரை சமைத்த உங்களுக்கும்!

கலாநேசன் said...

பொறுமையான விளக்கம். ராஜனுக்கு வாழ்த்துக்கள்.

செந்தழல் ரவி said...

மூக்குன்னு ஒன்னு இருந்திருந்தா அது உடைஞ்சிருக்காது ???

நேசமித்ரன் said...

பெரும் பிரியத்திற்குரிய ராஜன் - ரேவதி தம்பதியர் பல்லாண்டு சீர் மிக வாழ என் வாழ்த்துகள்

பட்டாபட்டி.. said...

மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

அய்யனார் said...

வாழ்த்துகள் ராஜன் - ரேவதி

Anonymous said...

புதுமணதம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்..

//மதுரை பொண்ணு said...

அது என்னங்க தல வர வர ஸ்மார்ட் ஆகிட்டே போறீங்க.. //

ஆமாம் என்ன அருண் ரகசியம்..

கனவுகள் விற்பவன் said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...

தல..போட்டோ timing பாத்தீங்களா?
20-10-2010 , 20:20...சூப்பர்ல...!!!

ஏழர said...

மணமக்களுக்கும், இப்பதிவை வாசிப்பவர்களுக்கும் இக் கட்டுரையை பரிந்துரை செய்கிறேன்

http://www.vinavu.com/2010/07/30/momemts-of-joy/

கன்கொன் || Kangon said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.... :-)

ராம்ஜி_யாஹூ said...

சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி ராஜன் ஏற்பாடு செய்தது தான் என நான் அனுமானம் செய்து எழுதுகிறேன். அந்த நிகழ்வில் இறைவன் படத்தை அகற்றி பெரியார் வீரமணி படங்களை வைத்த௪ இருக்கலாமே.

கும்மி said...

//சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி ராஜன் ஏற்பாடு செய்தது தான் என நான் அனுமானம் செய்து எழுதுகிறேன்//

உங்கள் அனுமானம் தவறு.

//அந்த நிகழ்வில் இறைவன் படத்தை அகற்றி பெரியார் வீரமணி படங்களை வைத்த௪ இருக்கலாமே//

நாங்கள் திகவினர் அல்ல; இறைமறுப்பாளர்கள்.

அருள் said...

டோண்டு சார் பதிவில் எனது பின்னூட்டம்:

ராம்ஜி_யாஹூ said...

// //மணப்பெண்ணின் நெற்றியில் பொட்டை பார்த்த நண்பருக்கு, மேலே சுவரில் மாறியிருக்கும் பிள்ளையார் படம் கண்ணில் தெரிய வில்லை போல. பகுத்தறிவு எல்லாம் பதிவுலகோடு சரி, கடவுள் மறுப்பு கொள்கை எல்லாம் கணினி திரையோடு சரி போல.// //

தாறுமாறு said...

// //கல்யாண பத்திரிகைல சுப முகூர்த்தம் 7.30 9.00ன்னு போட்டிருந்ததே கவனிக்கல? பொட்ட கவனிச்சவங்க இத கவனிக்கனுமே? நார்மலா உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்.// //

NO said...

// //புரட்சி பேசும் அவர், தன்னுடைய சொந்த விடயத்தில் சுப முகுர்த்தம் பார்த்து சடங்குகள் நடத்தினால் அதை விட hypocrisy எதுவும் கிடையாது. தன்னின் பகுத்தறிவு மற்றும் புரட்சி நிலை எப்பேர்பட்ட ஏமாற்று வேலை என்று அவரே காட்டிவிட்டார்! அதாவது உருக்கு மட்டும்தான் உபதேசம். போடுவது எல்லாம் வெளிவேஷம்!// //

திராவிட வயிற்றுப்போக்குக் கழகம் said...

// //அதர் சைடுல இருந்து இதுக்கு ஏதாச்சும் பதில் இருக்கா ? இந்த ஐ.செகண்டு இட்டு, ஐ. தர்டு இட்டு என்று ஜிங்க்ஜக் தட்டிய வெண்ணவெட்டி எவனாவது வருகிறானா இல்ல தட்டியதோட சரியா ?// //

""இந்த தருணத்தில் இதை சொல்லிகாட்டுவது நாகரீகம் இல்லை"" என்று கூறி - வரவேற்பில் 'மணமகள் பொட்டுவைப்பது, சுவற்றில் பிள்ளையார், சுபமுகூர்த்தம்' என்பனவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனோடு தொடர்புடையவர்களின் பதில் என்னவென்று தெரியவில்லை. (மறுநாள் திருமணம் எவ்வாறு நடந்தது என்பது குறித்தும் தெரியாது).

உண்மையாக நடந்தது என்ன? என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை இதுவெல்லாம் உண்மை எனில், என்னைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சிக்கலோ, நடக்கக்கூடாததோ அல்ல.

திரிகரண சுத்தி - "அதாவது மனம், சொல், செயல்" ஆகிய மூன்று நிலைகளிலும் மனிதன் ஒரே நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அதேசமயம் வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் - "நினைப்புக்கும் பிழைப்பிற்கும்" இடையே முரண்பாடுகள் தோன்றியவாறுதான் இருக்கும். அதுதான் இயல்பு.

உலகின் மாபெரும் சாதனைகள், மாபெரும் வெற்றிகள், மாபெரும் புரட்சிகள் எல்லாமும் முதலில் ஒரு "நினைப்பாக (கொள்கையாக)" இருந்து, அதன்பிறகுதான் "பிழைப்பாக (நடைமுறையாக)" மாறின.

விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் அரசாங்கம் தேவையில்லை என்றுதான் கருதினர் - ஆனாலும், அதே பிரிட்டிஷாரின் சட்டங்களுக்கு கீழ் அவர்களது அரசிற்கு கட்டுப்பட்டுதான் வாழ்ந்தார்கள். இன்று ஈழத்தில் மிகப்பெரும்பாலான தமிழர்கள் சிங்கள அரசை விரும்பவில்லை. ஆனாலும், அந்த அரசின் நிருவாகத்தில்தான் வாழ்கிறார்கள். இதுதான் நினைப்புக்கும் (கொள்கை) பிழைப்பிற்கும் (நடைமுறை) இடையேயான முரண்பாடு.

வேறுவழியின்றி இன்று ஒரு நடைமுறையை நாம் ஏற்கிறோம் என்பதற்காக அதுதான் நமது கொள்கை என்று ஆகிவிடாது. மாறாக, அதனை ஒருநாள் தூக்கி எறிவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறோம் என்பதே உண்மையாகும். ஒருவேளை அந்த ஒருநாள் நமது வாழ்நாளில் நடக்காமல் கூட போகலாம். "ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று பாடிய பாரதியார் விடுதலைப்பெற்ற இந்தியாவை காணவில்லை. மார்க்சீயத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் வாழ்நாளில் உலகின் ஒரு நாடும் கம்யூனிச நாடாக ஆகவில்லை. அதற்காக அவர்கள் கொள்கை வெற்றியடையவில்லை என்று கூறிவிட முடியுமா?

கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, இந்துமத மறுப்பு என்பதெல்லாம் ஒருவரது கொள்கையாக இருக்கலாம் (நான் திரு ராஜன் அவர்களைக் குறிப்பிடவில்லை). ஆனால், திருமணம் என்பது தனிப்பட்ட விஷயம் அல்ல. அதில் இருவீட்டார் இருக்கிறார்கள். அந்த வீடுகளுக்குள் பல குடும்ப அங்கத்தினர் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் சில விருப்பம், சில நம்பிக்கை இருக்கலாம். அவை மணமகன்/மணமகளின் தனிப்பட்ட கொள்கை, விருப்பத்திற்கு எதிரானதாக இருந்தாலும் கூட, அவற்றையும் மதிப்பதே நல்ல நடைமுறையாக இருக்கும் - அடுத்தவர் விருப்பத்திற்கு வளைந்து கொடுப்பதும் நல்ல பண்புதான்.

நமது கொள்கையை நமக்கானவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களையும் நம்வழிக்கு மாற்ற முயற்சிக்கலாம். ஆனால் எவரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. திருமணம் போன்ற வாழ்வில் ஒருமுறை நடக்கும் நிகழ்வுகளில், வீட்டின் பெரியோர்களுக்கும், நமது மதிப்புக்குரியவர்களுக்கும் கட்டுப்படுவதே சிறந்தது - அது நமக்கு பிடிக்காத செயலாக இருப்பினும் கூட.

(குறிப்பு: எனது கருத்துகள் பொதுவாகக் கூறப்பட்டுள்ளன. திரு. ராஜன் திருமணம் குறித்து அல்ல. அங்கு நடந்த உண்மை நிகழ்வு குறித்து எனக்குத் தெரியாது)

UFO said...

//சில நிமிடங்கள் கொள்கையை விட்டுக்கொடுப்பதால் யார் உயிரும் போய்விடாது //---???

எந்த நிமிடங்கள் அவை?

காலை?

இரவு?

ஆனால், அடிக்கடி வருமே?

ஹி.. ஹி.. ஹி..

வினவு said...

முதலில் மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

அடுத்து வால்பையனுக்கு கண்டனங்கள்!

//”நான் கவுண்டன் அதுனால கவுண்டச்சியை தான் கட்டுவேன்” நான் கம்யூனிஸ்டு அதனால் ஒரு கம்யூனிஸ்டை தான் கட்டுவேன்” என உதார் விட ராஜன் என்ன இயந்திரமா,//

வால்பையன் நீங்கள் ராஜனை உயர்த்திக் கூற விரும்பியதற்காக கம்யூனிஸ்டுகளை கேவலமாக சாதி வெறி பிடித்த கவுண்டர்களோடும், இயந்திரமாகவும் ஒப்பிட்டு கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

கம்யூனிஸ்டுகளில் பல வகையினர் இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் அமைப்பு சார்ந்தே இங்கே குறிப்பிடுகிறோம். புரட்சி, சமூக நலனுக்காக தங்களது சொந்த வாழ்க்கை, வேலை, திருமணம், குழந்தை, படிப்பு அனைத்தையும் அமைத்துக் கொள்ளும் செயல் இயந்திரத்தனமானதல்ல. அது பொது நலனுக்காக சுயநலனை விட்டுக்கொடுக்கும் உயர்ந்த பண்பு.

பொதுநலனுக்காக எனது சுயநலத்தை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்றுதான் சமூகத்தில் பலரும் வாழ்கிறார்கள். அதுதான் இழிவானது. மற்றபடி இங்கே நாங்கள் குறிப்பிடும் விவாதம் வால்பையன் தெரிவித்திருக்கும் கருத்தை ஒட்டித்தானே ஒழிய ராஜனைப்பற்றியது அல்ல என்பதால் பிரிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

UFO said...

//"உலகின் அழகிய மணமகன்!"//

மணமகன் மட்டும்தானா?

அப்போ என் தங்கை என்ன பாவம் பண்ணினார்?

கும்மி said...

@UFO
//மணமகன் மட்டும்தானா?//

அண்ணாத்தே! பதிவே ராஜனைப் பற்றிதான். அதனால்தான் மணமகன் என்று குறிப்பிட்டிருக்கின்றோம்.

UFO said...

////////////////////////////

dondu(#11168674346665545885) said...

ஒரு தன்னிலை விளக்கம்:

ராஜன் சம்பந்தமான பகுத்தறிவு கேள்விகளை கமெண்ட் ஏதும் இல்லாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஏனெனில் நான் மண்டபத்திற்கு சென்றதுமே சம்பிரதாயத் திருமணம்தான் அது என்பதை உணர்ந்து கொண்டேன். வால்பையன் மற்றும் ராஜன் எனக்கு நண்பர்கள், ஆகவே நான் அவர்களை இது சம்பந்தமாக தோண்டித் துருவி கேள்விகள் எல்லாம் கேட்கவில்லை.

வால்பையனுக்கு ஃபோன் போட்டு கேட்டதற்கு அவர் அடுத்த நாள் திருமண முகூர்த்தம் சமயத்தில் ஐயரால், ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திர உச்சாடனங்களுடன், எல்லா சம்பிரதாயங்களுடனும் நடந்ததை உறுதி செய்தார்.

ராஜனின் தாய் தந்தை இப்போது உயிருடன் இல்லை. மணமகள் அவரது பெற்றோருக்கு ஒரே பெண். இது காதல் திருமணம். பெண்ணின் தந்தையின் விருப்பத்துக்கு ராஜன் மதிப்பளித்தார் என்பதுதான் நிஜம்.

ராஜன் பெரியவர்களது விருப்பத்துக்கு பணிந்து போனது எனக்கு பிடித்தது. அவ்வளவே. அவர் வயதில் மிகவும் சிறியவர். மெதுவாக யதார்த்தங்கலை புரிந்து கொள்வார். அவருக்கும் அவர் மனைவிக்கும் என் ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
////////////////

வினவு said...

///உங்கள் அனுமானம் தவறு.///

//அந்த நிகழ்வில் இறைவன் படத்தை அகற்றி பெரியார் வீரமணி படங்களை வைத்த௪ இருக்கலாமே//

///நாங்கள் திகவினர் அல்ல; இறைமறுப்பாளர்கள்.///

கும்மி,

வீரமணி வேண்டுமானால் தி.கவுக்கு சொந்தமாக இருக்கும் தகுதி படைத்தவர். பெரியார் என்பவர் தி.கவுக்கு மட்டுமல்ல, தமிழகம் ஏன் இந்தியாவில் உள்ள எல்லா சூத்திர பஞ்சம மக்களுக்கும் சொந்தமானவர்.

கும்மி said...

@வினவு
//பெரியார் என்பவர் தி.கவுக்கு மட்டுமல்ல, தமிழகம் ஏன் இந்தியாவில் உள்ள எல்லா சூத்திர பஞ்சம மக்களுக்கும் சொந்தமானவர்.
//

பெரியாரை நாங்கள் மதிக்கின்றோம். அவருடைய போராட்டங்களை இன்னும் பரவலாக்குகின்றோம். ஆனால், அவரையும் கடவுளாக மாற்ற சிலர் நடப்பது போல், நாங்கள் நடப்பதில்லை.

கும்மி said...

@வினவு
//வால்பையன் நீங்கள் ராஜனை உயர்த்திக் கூற விரும்பியதற்காக கம்யூனிஸ்டுகளை கேவலமாக சாதி வெறி பிடித்த கவுண்டர்களோடும், இயந்திரமாகவும் ஒப்பிட்டு கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
//

யாரையும் கேவலப்படுத்தும் நோக்கில் நாங்கள் எழுதவில்லை. சாதி விட்டு மணமுடிக்க மறுப்பவர்களை அடையாளப்படுத்தவே அந்த சாதியின் பெயரும் கூட கூறப்பட்டுள்ளது.

UFO said...

\\\\\ஐயா... ஒரு கிறிஸ்டின் அல்லது ஒரு முஸ்லிம் ஒரு இந்துவை தாலி கட்டி கெட்டிமேளம் கொட்டி அக்னி சாட்சியாய் திருமணம் செய்துகொண்டாலும் இதைத்தான் சொல்வீர்களா? 'ஏன் அவருக்கு அவர் நம்பிக்கைக்கு ஒத்துபோற கிருத்துவ/முஸ்லிம் பெண்ணோ கிடைக்கவில்லையா' என்பீர்கள் அல்லவா? அதேபோல இந்த தமிழ்நாட்டில் ஒரு நாத்திகபெண் கூடவா ராஜனுக்கு கிடைக்கவில்லை?
\\\\\\\

---இங்கே சாதாரண முஸ்லிம்/கிறிஸ்டினா இருந்தா கூட பரவாயில்லை... ... அதுவும் எப்போதும் மதப்பிரச்சாரம் செய்து கொண்டு... மத்த மதமெல்லாம் கேவலம்... என்னுது மட்டுமே ஒசத்தி... எல்ல்லாரும் என் மதத்துக்கு வந்துடுங்கன்னு சொல்ற ஒரு முஸ்லிம்/கிறிஸ்டின் என்றால் கொஸ்டின் கேட்காம என்ன பண்றது?

////ராஜன் கடவுள் மறுப்பாளனாக இருந்தால் அவரது காதலியும் கடவுள் மறுப்பாளராக தான் இருக்க வேண்டும் என சட்டம் இருக்குதா அய்யா, இல்லை ”நான் கவுண்டன் அதுனால கவுண்டச்சியை தான் கட்டுவேன்” நான் கம்யூனிஸ்டு அதனால் ஒரு கம்யூனிஸ்டை தான் கட்டுவேன்” என உதார் விட ராஜன் என்ன இயந்திரமா, யாரை திருமணம் செய்ய வேண்டும் அப்பெண்ணுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என உத்தரவிட நீங்கள் யார்!?///

---சுத்த பினாத்தல்...

புலால் உண்ணக்கூடாதுன்னு சொன்ன காந்தி மட்டன் பிரியாணி ரவுண்டு கட்டுனா அது கேள்வி கேட்கப்படும்.

பிலால் சாப்பிட்டா நோ கொஸ்டின்.

ஊருக்கெல்லாம் பிரம்மச்சர்யம் போதிக்கும் சாமியார் நித்யானந்தம் விபச்சாரம் செய்தால் "நித்யா டவுசர் கிழிச்சி போச்சு... டும் டும் டும்..." என்று பதிவு போடலாம்...

ஆனால், அதையே ரஜனீஷ் செய்தால் நோ கொஸ்டின்....

இப்போ புரிஞ்சிருக்குமே...?

"ராஜன் நாத்திக டவுசர் கிழிஞ்சு போச்சு டும் டும் டும்..."---என்று?

வினவு said...

//பெரியாரை நாங்கள் மதிக்கின்றோம். அவருடைய போராட்டங்களை இன்னும் பரவலாக்குகின்றோம். ஆனால், அவரையும் கடவுளாக மாற்ற சிலர் நடப்பது போல், நாங்கள் நடப்பதில்லை.//

கும்மி

பெரியாருக்கு தமிழ்நாட்டில் எங்கும் கோவில், கும்பாபிஷேகம், பூசை நடப்பதாக தெரியவில்லை. நமது வீட்டில் நமது முன்னோர்களது படங்களை நினைவுக்காக மாட்டி வைத்திருப்பதும், அதற்கு மாலை சூடுவதும் சரியென்றால் தமிழ் மக்கள் பெருமைபடத்தக்க முன்னோரான பெரியாரது படத்தை மாட்டுவது சரிதானே?

உண்மையில் நீங்கள் எந்த அரசியல் தலைவர் படத்தையும் எங்கேயும் மாட்டலாம். ஆனால் பெரியாரது படத்தை மாட்டினால் பல எதிர்ப்புகள் வருவது நிச்சயம். ஏனெனில் பெரியாரது உருவக் குறியூடு கூட பார்ப்பனிய எதிர்ப்பைக் கொண்டிருக்கிறது என்பது யதார்த்தமான உண்மைதான்.

UFO said...

//பெரியாரை நாங்கள் மதிக்கின்றோம். அவருடைய போராட்டங்களை இன்னும் பரவலாக்குகின்றோம். ஆனால், அவரையும் கடவுளாக மாற்ற சிலர் நடப்பது போல், நாங்கள் நடப்பதில்லை.//
---அப்போ அந்த விநாயகர் போட்டோ?

வினவு said...

//யாரையும் கேவலப்படுத்தும் நோக்கில் நாங்கள் எழுதவில்லை. சாதி விட்டு மணமுடிக்க மறுப்பவர்களை அடையாளப்படுத்தவே அந்த சாதியின் பெயரும் கூட கூறப்பட்டுள்ளது.//

கும்மி
நீங்கள் இப்படி சப்பை கட்டுவது வருத்தமளிக்கிறது. "நான் ஒரு கம்யூனிஸ்டு அதனால் ஒரு கம்யூனிஸ்டைத்தான் மணம்முடிப்பேன் என்று சொல்வதற்கு ராஜன் ஒரு இயந்திரமா"
என்ற வரிக்கு என்ன பொருள்?

UFO said...

///வால்பையனுக்கு ஃபோன் போட்டு கேட்டதற்கு அவர் அடுத்த நாள் திருமண முகூர்த்தம் சமயத்தில் ஐயரால், ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திர உச்சாடனங்களுடன், எல்லா சம்பிரதாயங்களுடனும் நடந்ததை உறுதி செய்தார்.///--வாக்குமூலம் by டோண்டு.

கும்மி said...

@வினவு
//ஏனெனில் பெரியாரது உருவக் குறியூடு கூட பார்ப்பனிய எதிர்ப்பைக் கொண்டிருக்கிறது என்பது யதார்த்தமான உண்மைதான். //

வழிமொழிகின்றேன்.

ஆனால், சீர்திருத்தவாதிகளின் வழிமுறைகளைப் பற்றி பேசி அவற்றை முன்னெடுப்பதை விடுத்து, அவர்களையும் தெய்வமாக்கும் முயற்சிகள்தானே நடைபெறுகின்றன. இங்கே சில ஜாதித் தலைவர்களே, சில பத்தாண்டுகளுக்குள் தெய்வங்கள் ஆக்கப்பட்டு விட்டனரே. பெரியாரையும் அத்தகைய சுழலுக்குள் விடக் கூடாது என்னுதான் எண்ணுகின்றோம்.

கும்மி said...

@வினவு

//"நான் ஒரு கம்யூனிஸ்டு அதனால் ஒரு கம்யூனிஸ்டைத்தான் மணம்முடிப்பேன் என்று சொல்வதற்கு ராஜன் ஒரு இயந்திரமா"
என்ற வரிக்கு என்ன பொருள்? //

தான் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது சொந்த விருப்பம். சாதியோ, இயக்கமோ அதனை தீர்மானிக்கக்கூடாது என்பதுதான் அந்தப் பத்தியின் பொருள். தனித் தனி வார்த்தைகளை எடுத்து எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். அப்படி செய்ய மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

UFO said...

////மதநம்பிக்கை சார்ந்த விஷயங்களை எள்ளி நகையாடவோ, பிரமதத்தவரின் கடவுள்களை அசிங்கமாய் ஏசவோ, அடுத்தவருக்கு நாத்திகம் போதிக்கவோ, கடவுள் மறுப்பை பற்றி எழுதவோ இனி அந்த 'அழுக்கு ராஜாவுக்கு' எந்த ஒரு சிறு தகுதியும் அருகதையும் இல்லை. இனி மற்றவர் முன்னிலையில் முழிக்க வெட்கி தலை குனிய வேண்டும் அந்த ஆல் இன் ஆல். போலி நாத்திகவாதி. ஊருக்கு உபதேசம். போடுறது எல்லாம் வெளிவேஷம்.////---இனி எப்படி எழுதமுடியும்...? வீட்டம்மா கோச்சுக்குவாங்களே...? வீட்டம்மா வீட்டேல்யும் கோச்சுக்குவாங்களே...?

அட டா... போலி நாத்திகம் கந்தல் கந்தல் ஆகி காற்றில் பஞ்சு பஞ்சாய் பறக்கிறதே...!

சரி... சரி... 'பிள்ளையாரை பத்தி மட்டும் இனிமே அசிங்கமா எழுத மாட்டேன்'னு சமாதானம் சொல்லுவாரோ ராஜன்... அங்கே... சொல்லட்டும்... சொல்லட்டும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
வினவு said...

//இங்கே சில ஜாதித் தலைவர்களே, சில பத்தாண்டுகளுக்குள் தெய்வங்கள் ஆக்கப்பட்டு விட்டனரே. பெரியாரையும் அத்தகைய சுழலுக்குள் விடக் கூடாது என்னுதான் எண்ணுகின்றோம்.//

கும்மி
எப்போதும் தவறான உவமைகளை தவறாகவே ஒப்பீடு செய்கிறீர்கள். மற்ற தலைவர்களெல்லாம் சாதிக்காரர்களாக மாற்றப்பட்டார்கள் என்பதை பெரியாருக்கு எப்படி ஒப்பீடு செய்ய முடியும்?

உங்கள் அலுவலகத்திலோ, வீட்டிலோ, இல்லை திருமணமண்டபத்திலோ பெரியார் படத்தை மாட்டிவிட்டு பாருங்கள், என்ன நடக்குமென்று? பெரியாரை பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்ட எவரும் முடியளவு கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதே நேரம் இங்கே தி.க வீரமணி கும்பலின் அக்கப்போரை நான் மறுக்கவில்லை. அது வேறு இது வேறு

கும்மி said...

//இனி எப்படி எழுதமுடியும்...?//

இன்னும் தீவிரமாக எழுதுவார். இன்னும் சில நாட்கள் வேண்டுமானால் நீங்கள் கனவுலகில் சஞ்சரிக்கலாம்.

UFO said...

கும்மி...

தலைக்கு மேல பல கிலோமீட்டர் போன பின்னாடி வீண் வெட்டியாய் இனி பேச ஒன்றும் இல்லை...

கல்யாண போட்டோவில ஸ்டைலா டக் இன் பண்ணிக்கிட்டு இளிச்சுக்கிட்டு போஸ் கொடுக்குறதிலே உள்ள அக்கறைய கொஞ்சமாச்சும் உங்க சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இருப்பது போல பாத்துக்குங்க...

தட்ஸ் ஆல்...

பை... பை...

கும்மி said...

@வினவு
நான் திக வீரமணி கும்பலின் அக்கப்போரைதான் ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றேன்.

பெரியாரின் சீர்திருத்தங்களை நாம் எப்பொழுதுமே மறுதலித்ததில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விடுங்க பாஸ். மணமக்களை வாழ்த்துவோம்.

VISA said...

வால்...எனக்கு பதிவின் தலைப்பு பிடித்திருக்கிறது :)
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

விஜய்கோபால்சாமி said...

வால் அண்ணா, ராஜனை மஞ்சள் கலர் ப்ரொபைல் போட்டோவில் பார்த்துப் பார்த்து போர் அடிச்சிருச்சு. கல்யாணத்திலையும் மஞ்சள் பேக்ரவுண்டா :))

வினவு said...

//தான் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது சொந்த விருப்பம். சாதியோ, இயக்கமோ அதனை தீர்மானிக்கக்கூடாது என்பதுதான் அந்தப் பத்தியின் பொருள்.//

கும்மி

தான் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது சொந்த விருப்பம் என்ற உங்களது தேய்ந்து போன பொன்மொழி அலுப்பூட்டுகிறது. சரி, நானும் உதாரணங்களுடனே பேசுகிறேன்.

ஒரு ஐ.ஏ.எஸ் கலெக்டர் தான் காதலிப்பதாக இருந்தால் ஒரு ஐ.ஏ.எஸ்ஐயோ, இல்லை ஒரு ஐ.பி.எஸ்ஸையோதான் காதலிப்பான். அவன் மறந்தும் கூட மலத்தை அள்ளும் அருந்ததி இனப்பெண்ணை காதலிக்கமாட்டான். இதுதான் உங்களது விருப்பத்தின் இலட்சணம். அதாவது சாதி மறுத்தாலும் கூட தங்களது வர்க்கம், பணம், அந்தஸ்துக்கு பொருத்தமாகத்தான் எல்லோரும் காதலிக்கிறார்கள். அது கூட உங்களுக்கு புரியவில்லை என்பதற்கு வருத்தப்படுகிறேன்.


ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஏழை, பணக்காரன், நடுத்தரவர்க்கம் என்ற வர்க்க சமூகத்தில்தான். ஆகவே நீங்கள் சாதியை விட்டாலும் வர்க்கத்தை விடமுடியாது. உங்களது காதல் கூட அதற்கு அடிபணிந்த்துதான்.


எனில் இத்தகைய வர்க்க காதல் கம்யூனிஸ்டுகளின் திருமணத்தை விட எப்படி உயர்ந்த்து என்பதை நீங்கள்தான் விள்க்கவேண்டும்.

விஜய்கோபால்சாமி said...

ஆனா தலை, வர வர ஃபேஸ்ல நெறைய மெச்சூரிட்டி தெரியுது. #அப்சர்வேஷன்

அருள் said...

வினவு said...

// //நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஏழை, பணக்காரன், நடுத்தரவர்க்கம் என்ற வர்க்க சமூகத்தில்தான். ஆகவே நீங்கள் சாதியை விட்டாலும் வர்க்கத்தை விடமுடியாது. உங்களது காதல் கூட அதற்கு அடிபணிந்த்துதான்.
எனில் இத்தகைய வர்க்க காதல் கம்யூனிஸ்டுகளின் திருமணத்தை விட எப்படி உயர்ந்த்து என்பதை நீங்கள்தான் விள்க்கவேண்டும்.// //

திருமணத்திற்கு ஆணும் பெண்ணும்தான் தேவை. (விதிவிலக்காக பெண்ணும் பெண்ணும் - ஆணும் ஆணும் திருமணம் செய்துகோண்டாலும் ஒன்றும் குடிமூழ்கிவிடாது).

இதில் சாதி பார்த்து/பார்க்காமல், வர்க்கம் பார்த்து/பார்க்காமல் என்பதற்கெல்லாம் என்ன வேலை?

பெண்ணின் பெற்றோருக்காக ராஜன் அவரது கொள்கையை விட்டுவிடவில்லை. இருவீட்டார் நிகழ்வில் தன்பக்கத்தை வலியுறுத்தாமல் விட்டுக்கொடுத்திருக்கிறார். இது சரியான செயல்தான். தனது விருப்பத்தை திணித்திருந்தால்தான் அது மனிதஉரிமை மீறலாக ஆகியிருக்கும்.

இது ஒரு பெரிய பிரச்சினை என்று பேசுவது விதண்டாவாதம்.

வினவு said...

கும்மி,

இங்கே சிலர் குறிப்பிட்டுள்ளது போல ராஜன் திருமணம் புரோகிதர், சடங்கு, தாலி சகிதம் நடந்தது என்பது உண்மையா? அப்படி இருக்காது என்ற நம்பிக்கையோடும் கேட்கிறேன்.

அருள் said...

UFO said...

// //கல்யாண போட்டோவில ஸ்டைலா டக் இன் பண்ணிக்கிட்டு இளிச்சுக்கிட்டு போஸ் கொடுக்குறதிலே உள்ள அக்கறைய கொஞ்சமாச்சும் உங்க சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இருப்பது போல பாத்துக்குங்க// //

"ஒரு வயதான தந்தைக்காக சில நிமிடங்கள் கொள்கையை விட்டுக்கொடுப்பதால் யார் உயிரும் போய்விடாது என அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்ததே நானும் கும்மியும் தான்" என்று வால்பையன் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது மிகச்சரியான காரணமாகவே தெரிகிறது.

பெண்ணின் தந்தைக்காக தனது நிலைபாட்டை தன்னுடைய திருமணத்தில் விட்டுக்கொடுப்பது "சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாத" செயலா?

"ஆணும் பெண்ணும் சரி சமம்" என்று பேசுவதும் ஒரு உயர்ந்த கொள்கைதான். அதுபோல "கடவுள் மறுப்பு மூடநம்பிக்கை எதிர்ப்பு" என்பதும் ஒரு உயர்வான கொள்கைதான் - இந்த இரண்டு நிலைபாட்டிற்கும் இடையே முரண்பாடு வரும்போது - தனிநபர் அளவிலான் கொள்கையை விட அடுத்தவர் தொடர்புடைய கொள்கைக்கு - அதாவது பெண்ணின் தந்தைக்கு மதிப்பளித்தல், அவரது விருப்பத்திற்கேற்ப நடத்தல் என்பதுதான் சரியான செயல்.

அதைத்தான் அவரும் செய்திருக்கிறார்.

UFO said...

///இங்கே சிலர் குறிப்பிட்டுள்ளது போல ராஜன் திருமணம் புரோகிதர், சடங்கு, தாலி சகிதம் நடந்தது என்பது உண்மையா? அப்படி இருக்காது என்ற நம்பிக்கையோடும் கேட்கிறேன்.//---ஐயோ பாவம் வினவு... என்ன ஒரு நப்பாசை? அதை டாக்குட்டரூ. ருத்ரனிடம் கேளுங்களேன்...வினவு???

UFO said...

மிஸ்டர். அருள்...
இதை படிக்கலையா தாங்கள்?
//////////////
UFO said...

//சில நிமிடங்கள் கொள்கையை விட்டுக்கொடுப்பதால் யார் உயிரும் போய்விடாது //---???

எந்த நிமிடங்கள் அவை?

காலை?

இரவு?

ஆனால், அடிக்கடி வருமே?

ஹி.. ஹி.. ஹி..

October 24, 2010 9:40 PM
////////////////////

---புரியலையா? இதுக்குமேல விளக்கமா எழுத எனக்கு வராது.

கும்மி said...

@வினவு
சாப்பிடச் சென்றிருந்தேன். அதனால், உடனடியாக பதிலளிக்க இயலவில்லை.

//தான் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது சொந்த விருப்பம் என்ற உங்களது தேய்ந்து போன பொன்மொழி அலுப்பூட்டுகிறது//

வர்க்கம் கடந்து இணையைத் தீர்மானிக்கும் சிந்தனையை வளர்க்கவேண்டும்; திணிக்கக்கூடாது என்று கூறுகின்றேன். ராஜனின் பின்புலம் குறித்தோ, ரேவதியின் பின்புலம் குறித்தோ பொதுவெளியில் உரையாட நான் விரும்பவில்லை. நாளை மாலை, அழைக்கின்றேன். விரிவாக பேசலாம்.

//அதாவது சாதி மறுத்தாலும் கூட தங்களது வர்க்கம், பணம், அந்தஸ்துக்கு பொருத்தமாகத்தான் எல்லோரும் காதலிக்கிறார்கள். அது கூட உங்களுக்கு புரியவில்லை என்பதற்கு வருத்தப்படுகிறேன்.//

நீங்களும், உதாரணத்தோடு பேசியதால், நானும் ஒரு உதாரணத்தை கூறுகின்றேன். என் திருமணத்திற்கு, என் பெற்றோரிடம் நான் முன்வைத்த நிபந்தனைகளுள் ஒன்று, பெண் அநாதையாகவோ, விதவையாகவோ அல்லது மாற்றுத் திறனாளியாகவோ இருக்கவேண்டும் என்பதாகும். என்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டனர். :-)

நான், என்னுடைய அல்லது என்னுடைய குடும்பத்தின் பொருளாதார அல்லது வர்க்கம் சார்ந்த நிலையில் உள்ள பெண்ணை தேடவில்லையே. இதுபோன்ற சிந்தனைகளை வளர்க்கவேண்டும் என்று விரும்புகின்றேன்.

வினவு said...

//திருமணத்திற்கு ஆணும் பெண்ணும்தான் தேவை.//

அருள்
உங்களது இந்த எளிய உண்மை கூட இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு தெரியாமல் திருமணம், காதல் தொடர்பாக எத்தனை பிரச்சினைகள், மனஸ்தாபங்கள், கொலைகள்....

உங்களைப் போன்றவர்கள் அப்துல்கலாம் போல இந்தியா முழுவதும் சுற்றி வந்து திருமணம் குறித்த உங்களது கண்டுபிடிப்பை விளக்கினால் நாடு சிறப்புறும்.

கும்மி said...

//கல்யாண போட்டோவில ஸ்டைலா டக் இன் பண்ணிக்கிட்டு இளிச்சுக்கிட்டு போஸ் கொடுக்குறதிலே //

'நம்ம' மதத்துல, தொப்புள் முதல் முழங்கால் வரையிலான பகுதிகள் மறைக்கப்பட வேண்டும் என்றுதானே கூறப்பட்டுள்ளது? ஒரு வேளை, டக் இன் பண்ணினா, அந்த விதிய பின்பற்றாததா ஆயிருமா?

அருள் said...

UFO said...

// //
//சில நிமிடங்கள் கொள்கையை விட்டுக்கொடுப்பதால் யார் உயிரும் போய்விடாது //---???

எந்த நிமிடங்கள் அவை? காலை? இரவு? ஆனால், அடிக்கடி வருமே? ஹி.. ஹி.. ஹி..
// //

சில நிமிடங்கள் கொள்கையை விட்டுக்கொடுத்தல் என்பது தவறான பதம்.

அவர் கொள்கையை விட்டுவிடவில்லை, தனது நிலைபாட்டை வலியுறுத்தாமல் விட்டுக்கொடுத்திருக்கிறார் - அதுவும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாதவகையில்.

நாத்திகரான பெரியார் தான் கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்து கணக்கு வழக்குகளை சரியாக பராமரித்து வந்தார் என்பது வரலாறு. அதற்காக அவர் கொள்கையை விட்டுக்கொடுத்ததாகக் கூறமுடியுமா?

அதுபோலத்தான் இதுவும்.

ராம்ஜி_யாஹூ said...

கணினி திரையில் கை வலிக்கும் அளவிற்கு கடவுள் மறுப்பு கொள்கைகள், கோட்பாடுகளை எழுதி விட்டு

சொந்த வாழ்க்கை என்ற உடன் கணபதியின் படத்தை வைப்பதும் அருளை வேண்டுவதும் முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது\

UFO said...

////என் திருமணத்திற்கு, என் பெற்றோரிடம் நான் முன்வைத்த நிபந்தனைகளுள் ஒன்று, பெண் அநாதையாகவோ, விதவையாகவோ அல்லது மாற்றுத் திறனாளியாகவோ இருக்கவேண்டும் என்பதாகும். என்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டனர்.:-)////
---இறைநாடினால், அதுபோல் நிக்காஹ் நடந்தா நல்ல விஷயம்தான்...

ஆனால்...,

////உங்களது கொள்கையையும், காதலையும் விட தாயில்லாமல் இருபது வருடங்களுக்கு மேல் ஒரே பெண்ணை வளர்த்த தந்தைக்கு மகளின் வாழ்கையின் மேல் ஆயிரம் கனவுகள் இருக்கும்////


///ஒரு வயதான தந்தைக்காக சில நிமிடங்கள் கொள்கையை விட்டுக்கொடுப்பதால் யார் உயிரும் போய்விடாது என அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்ததே நானும் கும்மியும் தான்///

எங்கேயோ இடிக்குதே...!!!

கும்மி said...

//இறைநாடினால், அதுபோல் நிக்காஹ் நடந்தா நல்ல விஷயம்தான்..//

எனக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடைபெற்றுவிட்டது.

//எங்கேயோ இடிக்குதே...!!! //

எங்கும் இடிக்கவில்லை. நான் சண்டையிட்டது எனது பெற்றோரோடு. ராஜனுக்கு பெற்றோர் தற்பொழுது இல்லை. பெண் வீட்டாரோடு, சில நிமிட நிகழ்வுகளுக்காக முரண்டு பிடிக்கவேண்டாம் என்பதுதான் நிலைப்பாடு.

கும்மி said...

//சொந்த வாழ்க்கை என்ற உடன் கணபதியின் படத்தை வைப்பதும் அருளை வேண்டுவதும் முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது\//

ராஜன் அந்தப் படங்களை வைக்கவும் சொல்லவில்லை; வணங்கவுமில்லை; அருளை வேண்டவுமில்லை.

பெண் வீட்டார் செய்திருந்த அலங்காரம் அது. அவர் தன்னுடைய கொள்கையில் எவ்வித மாற்றங்களும் கொள்ளவில்லை.

Sabarinathan Arthanari said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

மண வீட்டிலும் அரசியல் மேடை போடும் அரசியல் வியாபாரிகளுடன் / வியாதிகளிடம் தயவு செய்து விவாதத்தை தவிருங்கள்.

Sabarinathan Arthanari said...

Follow up...

UFO said...

என்ன வினவூ...

"உலகின் அழகிய மணமக்கள்"... 'புரட்சி' திருமணத்தில் மேலே போட்டோ புள்ளையார் ருத்ரனுக்கு ஆசி வழங்க நம்ம டாகுட்டரு. ருத்ரன் மணமக்களுக்கு பெரிய்ய்ய கிஃப்ட் கொடுத்து ஆசி வழங்க...

கடைசியில் அவர் உங்களிடம் என்ன சொன்னார்னு சொல்லாமலே போயிட்டீகளே வினவு...!

Sabarinathan Arthanari said...

//காரணம் உங்களுக்கே தெரியும் நமது கேள்விகளால் மூக்குடைபட்டவர்களில் அவர்கள் தான் அதிகம், //

காரணம் அது அல்ல வால்பையன்.

இன்று சாதி மத இன ஏற்ற தாழ்வுகளை நியாயப்படுத்துவதை வெளிப்படையாக யாரும் செய்வதில்லை. அவற்றிற்கு எதிரான பிரச்சாரம் சமுதாய சீர்திருத்த முயற்சியாக ஒரு சமுதாயம் ஏற்று கொள்கிறது.

ஆனால் சிலர் தங்களது வழிமுறைகளை பிறர் கேள்வி கேட்பதை கூட அனுமதிப்பதில்லை.

தங்களுடைய முட்டாள் தனத்தை வெளிப்படுத்தி விட்டு தாங்களே அவமானப்படுவதற்கு நல்ல கருத்துக்களை முன் வைப்பவர்கள் என்ன செய்ய இயலும் ?

அருள் said...

கும்மி said...

// //சில நிமிட நிகழ்வுகளுக்காக முரண்டு பிடிக்கவேண்டாம் என்பதுதான் நிலைப்பாடு.// //

பெண் வீட்டாரின் விருப்பத்தை நிறைவேற்றியதுதான் சரி.

திரு. ராஜன் பெண்வீட்டாரின் கோரிக்கையை எதிர்த்திருந்தால் அது பெண்ணுரிமைக்கும் மனிதஉரிமைக்கும் எதிரானது ஆகாதா?

ஆண்களுக்கு மட்டும்தான் தனது திருமணத்தை எப்படி நடத்தவேண்டும் என்கிற கனவு இருக்குமா? பெண்வீட்டாருக்கு அப்படி ஒருகனவு (அது மூடநம்பிக்கையாக இருந்தாலும்கூட) இருக்கக்கூடாதா?

அல்லது, ஒரு திருமண நிகழ்வை விட இந்த சிக்கல் பெரிய பிரச்சினையா? இது தனிமனித/குடும்ப நிகழ்வு; அதனை எப்படி நடத்தினால் மற்றவர்களுக்கு என்ன?

Sabarinathan Arthanari said...

//என் தாய், தந்தை ஆத்திகர்களாக இருப்பதால் நான் அவர்களை கவனிக்க மாட்டேன் என்றோ, உங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை என சொல்லும் அளவுக்கு கொள்கை வெறிபிடித்த மிருகமோ நாங்கள் அல்ல!, நாங்கள் முன்வைப்பது மதத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் இருக்கும் மனித விரோதங்களை, அவை என்றென்றும் தொடரும்!//

கொள்கை முரண்பாடுகளில் இருந்தாலும் தனிமனித வெறுப்பை வெளிப்படுத்தாமல் இருப்பது தான் பண்பாடு.

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் :)

thamilan said...

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வால் கும்கி ராஜன்

உங்களுக்கும் எனக்கும் கொள்கை ரீதியாக வேருபாடு இருந்தாலும் உங்கள் மூவரின் மீதும் எனக்கு ஒரு மதிப்பு இருந்தது தன்னுடைய கொள்கையில் பிடிப்புடன் இருப்பவர்கள் எதர்க்கும் விலை போக மாட்டார்கள் கொள்கையா குடும்பமா என்று வந்தால் கொள்கைக்காக குடும்பத்தையே துறப்பவர்கள் என்று.

நீங்கள் என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் அது சப்பைக்கட்டுவதாகவே.

நன்றி.

கடவுள் புண்ணியத்தில் மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.


.

UFO said...

///யாரை திருமணம் செய்ய வேண்டும் அப்பெண்ணுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என உத்தரவிட நீங்கள் யார்!?///

--- ஆயிரத்து நானூறு வருஷத்துக்கு முந்தி நடந்த கண்ணால் காணாத கல்யானத்தை எல்லாம் நோண்டி நொண்டி நோகாம பதிவு போட தெரியுது...???

ஆனால்,

"நேத்து காந்தி எப்படிய்யா மட்டன் பிரியாணி வெளுத்து வாங்குனார்?"

"பெரியார் ஏன்யா பூணூல் போட்டுக்கிட்டார்?"

அதுமாதிரி...

"நாத்திக ராஜன் எப்படியா, அப்டியே ஹிந்து முறைப்படி சடங்கு கல்யாணம் பண்ணினார்"னு கேட்க கூடாதா?

சூப்பர் ஞாயம்பா உங்களது...!

நாத்திகர்கள் யாருக்கு பயப்பட வேண்டும்? கொள்கையா மண்ணா? யாருக்கும் எப்போது எதற்காகவும் விட்டுக்கொடுப்பதுதானே நாத்திகம்?

Yet another a solid proof of an selfish opportunist.

UFO said...

@ அருள்

///திரு. ராஜன் பெண்வீட்டாரின் கோரிக்கையை எதிர்த்திருந்தால் அது பெண்ணுரிமைக்கும் மனிதஉரிமைக்கும் எதிரானது ஆகாதா?

ஆண்களுக்கு மட்டும்தான் தனது திருமணத்தை எப்படி நடத்தவேண்டும் என்கிற கனவு இருக்குமா? பெண்வீட்டாருக்கு அப்படி ஒருகனவு (அது மூடநம்பிக்கையாக இருந்தாலும்கூட) இருக்கக்கூடாதா?///

நீங்க உண்மையிலேயே சீரியஸா எழுதுகிறீர்களா? அல்லது இந்த அழுக்கு ராஜாக்களை 'போட்டு வாங்குறீங்களா'? வஞ்சபுகழ்ச்சியோ?

கும்மி said...

//யாருக்கும் எப்போது எதற்காகவும் விட்டுக்கொடுப்பதுதானே நாத்திகம்?//

ஆமாம், உறவுகள் மேம்பட சில நேரங்களில் விட்டுக்கொடுக்கவும் நாத்திகர்கள் முன்வருவார்கள். ஆனால், மூடநம்பிக்கை என்று தெரிந்தாலும் மாற்றிக்கொள்ள முன்வர மாட்டார்கள் இந்த ஆத்திகர்கள்.

கும்மி said...

//Yet another a solid proof of an selfish opportunist.//

Wrong usage of articles.

UFO said...

///மூடநம்பிக்கை என்று தெரிந்தாலும் மாற்றிக்கொள்ள முன்வர மாட்டார்கள் இந்த ஆத்திகர்கள்.///

இது நல்லா இருக்கா?

///மூடநம்பிக்கை என்று தெரிந்தாலும் மாற்றிக்கொள்ள முன்வருவார்கள் இந்த நாத்திகர்கள்.///

இது நல்லா இருக்கா?

முந்தயது நிலை மாறவில்லை.
பிந்தையது தவறு என்று தெரிந்தும் நிலை மாறுவது.
எது மோசம், வெட்கக்கேடு?
-----------------------------------

that 'an' is not for selfish but put for opportunist!

ராஜனை a selfish... என்று சொல்லலாம்.

an opportunist என்றும் சொல்லலாம்.

a selfish and an opportunist என்றும் சொல்லலாம்.

சேர்த்து சொன்னால்....?

//Yet another a solid proof of an selfish opportunist.//
--என்று சொல்லவேண்டும் என்றுதான் நான் articles படித்துள்ளேன்.

எனக்கு எட்டாவதில் இங்கிலீஷ் கிராமர் சொல்லிக்கொடுத்த அழகிரிசாமி சார்... எங்கே சார் போனீங்க?

கும்மி said...

@UFO
என்னமோ போங்க. எல்லா இடத்திலையும் மாத்துற மாதிரி இங்கயும் மாத்த முயற்சி பண்ணுறீங்க. ஆனா ஒன்னும் நடக்க மாட்டேங்குது.

நல்லா பாருங்க. நாத்திகர்கள் மாற்றிக்கொள்வார்கள் என்று எழுதவில்லை; விட்டுக்கொடுப்பார்கள் என்றுதான் கூறியுள்ளேன். ப்ளீஸ் rephrase your question.

----
அண்ணா, நீங்க selfish அப்படிங்கறத adjective ஆகத்தான் பயன்படுத்தியிருக்கீங்க. noun ஆகவோ pronoun ஆகவோ பயன்படுத்தல. பாவம் அழகிரிசாமி சார்.. நீங்க article தப்பா பயன்படுத்துனதுக்கு அவர் என்ன பண்ணுவாரு?

ஏழர said...

பார்ப்பனிய அடையாளங்களை சுமந்த சிவராமனுக்கு பார்ப்பனியத்தை விமரிசனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது என்று எழுதிய தெளிவும், பார்ப்பனிய விழுமியங்களுக்காக என் கால் மயிறுகூட வணங்காது என்ற உறுதியும் வால்பையனிடம் கரைந்து போய் ஒரு தோல்வி மனப்பான்மையில் எழுதப்பட்டுள்ளதை போல் உள்ளது இந்த பதிவு.

சப்பைகட்டுகளை தவிரத்த ஒரு நேர்மையான பரிசீலனையே இந்த நேரத்தின் தேவை.

கலகலப்ரியா said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்..

||ராஜன் கடவுள் மறுப்பாளனாக இருந்தால் அவரது காதலியும் கடவுள் மறுப்பாளராக தான் இருக்க வேண்டும் என சட்டம் இருக்குதா அய்யா, ||

:-)... ஆமாம்... கொள்கைக்காக காதலையும் காதலியையும் தூக்கிக் குப்பையில் போட்டு.. பொது நலத்துக்காக... எங்கயாவது கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள மங்கை இருக்காளா என்று வலை வீசித் தேடிக் கண்டுபிடித்து... கட்டாயமாகவாவது மணந்து கொள்ள வேண்டும்.. அப்புறம் மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம... கடனே.. சிவனே.. அல்லாவே... கிறிஸ்துவே.. என்று காலத்தைக் கழிக்க வேண்டும்.. யாராவது உப்புமா எப்படிக் கிளறுவது என்று ரெஸிபி கொடுத்த மாதிரிக் கொடுத்திருப்பாங்க... அதைப் படித்துக் கொள்ளிக்கட்டையை எடுத்துக் காது குடைந்து கொள்ள வேண்டும்..

இதிலும்... அந்தப் பெண் ஏழையாகவோ.. அல்லது குறைபாடுள்ள பெண்ணாகவோ இருந்தால் இன்னும் வசதி... இதே தலைப்பைப் போட்டு புரட்சி செய்யலாம்... விளம்பரக் கம்பனிகளுக்குக் கொண்டாட்டம்தான் போங்கோ..

___________________

ஏன் வால்பையன் இவ்ளோ விளக்கம்.. அவங்க அவங்க, அவங்க வாழ்க்கைய வாழ்றாங்க... மத்தவங்களுக்கு வயித்துவலின்னா கசாயம் சாப்டட்டு...

இந்து இந்துவையும்... ஏதோ ஒரு ஜாதிக்காரன் அதே ஜாதிக்காரனையும்... கட்டிக்கனும்.. வெளில விட்டுடாதீங்கைய்யான்னு சொல்ற மாதிரி இருக்கு... இந்த--- சரி விடுங்க கல்யாணத்துக்கு வாழ்த்திட்டு அமங்கலமா பேசுவானேன்...

லதாமகன் said...

ராஜன் - ரேவதி தம்பதியர் பல்லாண்டு சீர் மிக வாழ வாழ்த்துகள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் ராஜன் - ரேவதி

Super Iyer said...

என்ன கலகலப்ரியா இப்படி சொல்லிட்டேளே.. ஏதோ மொக்கையாவோ, புரிஞ்சும் புரியாத கவிதையாவோ எழுதிண்டிருந்தா இவாள ஏன் எல்லாரும் இப்படி கேக்கப்போறா? கக்கூஸ் செவுத்துல எழுதுற மாதிரி

''பாப்பார பசதேசி, சிவபெருமான் விட்ட குசு, குரான்ல குஜிலி கும்பா, ஃபக் யூ ஜீசஸ்''

அப்பிடீன்னெல்லாம் எழுதிட்டு
கொஞ்சம் கூட சூடு சுரணையில்லாம ஐயர் கையில தாலி வாங்கி கட்டினா ஊரே காறித் துப்புமா துப்பாதா? அதான் இங்க நடன்திண்டிருக்கு.

புரியாதவாயெல்லாம் செத்த அந்தப்பக்கம் போறேளா? யூ.எஃப்.ஓ , நீங்க நடத்துங்கோ ..இந்த அம்பி நோ எங்க?

கலகலப்ரியா said...

||Super Iyer said...
என்ன கலகலப்ரியா இப்படி சொல்லிட்டேளே.. ஏதோ மொக்கையாவோ, புரிஞ்சும் புரியாத கவிதையாவோ எழுதிண்டிருந்தா இவாள ஏன் எல்லாரும் இப்படி கேக்கப்போறா? கக்கூஸ் செவுத்துல எழுதுற மாதிரி

''பாப்பார பசதேசி, சிவபெருமான் விட்ட குசு, குரான்ல குஜிலி கும்பா, ஃபக் யூ ஜீசஸ்''

அப்பிடீன்னெல்லாம் எழுதிட்டு
கொஞ்சம் கூட சூடு சுரணையில்லாம ஐயர் கையில தாலி வாங்கி கட்டினா ஊரே காறித் துப்புமா துப்பாதா? அதான் இங்க நடன்திண்டிருக்கு.

புரியாதவாயெல்லாம் செத்த அந்தப்பக்கம் போறேளா? யூ.எஃப்.ஓ , நீங்க நடத்துங்கோ ..இந்த அம்பி நோ எங்க?||

ஆகா... மொக்கை சர்ட்டிஃபிகேட் கொடுக்கற சங்கத்தில இருந்து வரேளா.. ப்ரமாதம்.. இப்போ என்ன சொல்ல வரேள்... நேக்குத் தோணறத நான் சொல்றதுக்கு சங்கத்ல உள்ளவாள் கிட்ட எல்லாம் பர்மிஷன் வாங்கணுமோ...

நீங்க பேஷா உங்க சங்கக் கச்சேரிய நடத்துங்கோ... நாங்க ஓரமா தனி ஆவர்த்தனம் வாசிச்சுட்டு போயிண்டே இருக்கோம்... என்ன சொல்றேள்..

வானம்பாடிகள் said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

/ ஒரு வயதான தந்தைக்காக சில நிமிடங்கள் கொள்கையை விட்டுக்கொடுப்பதால் யார் உயிரும் போய்விடாது என அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்ததே நானும் கும்மியும் தான்/

இப்படியே இருந்தாலும் பெரிய விஷயம்தான். அதைவிட அவரின் சுதந்திரம் அவருடையது என்ற மதிப்பளித்தது புரியாதவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டிய அவசியமேயில்லை. எதுலதான் மூக்க நுழைக்கறதுன்னு விவஸ்தையில்லையா.

Super Iyer said...

ப்ரியா, நீங்க என்ன தப்பா புரிஞ்சுண்டேள், நான் உங்களை பத்தி பேசல. இவா பார்ப்பார பரதேசி திட்டினதாலதான் நான் வாண்டடா பிராமின் பாஷையிலேயே எழுதறேன்
உங்களுக்கு பிடிக்காதவாயெல்லாம் இவாள எதிர்த்து பின்னூட்டம் போட்டதுனால நீங்க இவாளுக்கு சப்போர்ட் பண்றேள்னு நினைக்கிறேன். அது உங்க இஷ்டம்.

வானம்பாடிகள் அண்ணா. இவா எதுலயெல்லாம் மூக்க நுழைச்சான்னு நீங்க பாக்காததா.. நம்மவாள நாக்கே கூசிப்போற அளவுக்கு எழுதியும் பேசியும் வந்தவாளுக்கு தாலி எடுத்துக்கொடுக்க மட்டும் அந்தனன் வேணுமோ, நீங்களே சொல்லுங்கோ?

கலகலப்ரியா said...

||Super Iyer said...
ப்ரியா, நீங்க என்ன தப்பா புரிஞ்சுண்டேள், நான் உங்களை பத்தி பேசல. இவா பார்ப்பார பரதேசி திட்டினதாலதான் நான் வாண்டடா பிராமின் பாஷையிலேயே எழுதறேன்
உங்களுக்கு பிடிக்காதவாயெல்லாம் இவாள எதிர்த்து பின்னூட்டம் போட்டதுனால நீங்க இவாளுக்கு சப்போர்ட் பண்றேள்னு நினைக்கிறேன். அது உங்க இஷ்டம்||

நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணலை... ஆனா இங்க யாரும் இப்டி ஆர்க்கியூ பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்தது...

இப்போ... ராஜன் அவங்க வைஃப்ஃப எதிர்த்து... இல்ல நான் நாத்திக முறையிலதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா அது ரொம்ப பேஷான விஷயமோ...

அதுக்காக அவங்க கொள்கை எல்லாம் கொள்ளில போச்சுன்னு அர்த்தமோ...

அவங்க ஆத்துக்காரிக்கு அவா சார்ந்தவாளுக்கு மரியாத கொடுத்தது தப்போ...

அது அப்டி பிடிவாதமா பண்ணா... ஆகா நீதான்யா மனுஷன்னு அவா... இவா எல்லாம் போற்றுவாளோ...

அதுக்காகவே... லோகம் என்ன சொல்லும்கிறதுக்காகவே அப்டி பண்ணனுமோ...

என்னோட ஒரு நண்பர் கூட நாத்திகர்தான்... விபூதி வச்சுக்கவே மாட்டேன்னு சொல்லிண்டிருப்பார்... இப்போ... சில வருஷம் முன்னாடி கல்யாணம் நடந்திச்சு... பளிச்சுன்னு விபூதி வச்சுண்டு போட்டோ எடுத்து அனுப்பினார்... அதுக்காக... ஆகா மாட்டிண்டாருன்னு விழுந்து விழுந்து சிரிக்கறதா...

அவங்க நிலமை புரியாதா...

ஏன் இப்டி..?!

Super Iyer said...

ஆனா இங்க யாரும் இப்டி ஆர்க்கியூ பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்தது...

ஆகா மாட்டிண்டாருன்னு விழுந்து விழுந்து சிரிக்கறதா...
அவங்க நிலமை புரியாதா...
ஏன் இப்டி..?!

ப்ரியா, இன்னிக்கு இவளோ பேசறேளே, எப்ப ஆத்தீகர்கள் தப்பு செய்யுவான்னு கண்ணுல வெளக்கென்ணை ஊத்திண்டு காத்திருந்து
உடனே பாப்பார பரதேசி, ஹிந்து மதம் கேவலம், ஜீஸஸ், நபி எல்லாம் மட்டமானவான்னு இவா எழுதும் போது நீங்கெல்லாம் எங்க போனேள்?

யாரு இல்லேன்னா என்ன
பகவான்னு ஒருத்தன் இருக்கான். இவாளோட போலி முற்போக்கு முகமுடிய எவளோ சீக்கிரம் கிழிச்சான் பாத்தேளா? இனிமே எந்த மூஞ்சிய வச்சுண்டு பார்ப்பானை திட்டுவா?

கலகலப்ரியா said...

||
ப்ரியா, இன்னிக்கு இவளோ பேசறேளே, எப்ப ஆத்தீகர்கள் தப்பு செய்யுவான்னு கண்ணுல வெளக்கென்ணை ஊத்திண்டு காத்திருந்து
உடனே பாப்பார பரதேசி, ஹிந்து மதம் கேவலம், ஜீஸஸ், நபி எல்லாம் மட்டமானவான்னு இவா எழுதும் போது நீங்கெல்லாம் எங்க போனேள்?

யாரு இல்லேன்னா என்ன
பகவான்னு ஒருத்தன் இருக்கான். இவாளோட போலி முற்போக்கு முகமுடிய எவளோ சீக்கிரம் கிழிச்சான் பாத்தேளா? இனிமே எந்த மூஞ்சிய வச்சுண்டு பார்ப்பானை திட்டுவா?||

lol... ரொம்ப்ப்ப்ப நன்னாருக்கு... நான் இங்க இந்தப் போஸ்ட் படிச்சுட்டு நான் என்ன நினைக்கறேன்னு சொன்னா... ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு இப்டித்தான் இது நடந்திச்சு நீங்க எங்க போயிருந்தீங்கன்னு கேள்வி எழுப்பறா...

இப்டித்தான் கொஞ்ச நாள் முன்னாடி... ஏதோ கவிதை போட்டியே... இதுக்கு எதும் சொல்லலயேன்னு எதுக்கோ யாரோ கேட்டாங்க...

சங்கர் சாரோட ரோபோ ரேஞ்சுக்கு... 10000980 புக்ஸ் ஒரு செகண்ட்ல படிச்சுட்டு.. ஒவ்வொரு லைனா நான் நாட்டாமை பண்ணனுமோ...

ம்ம்... நடக்கட்டு நடக்கட்டு...

fa said...

மொதல்ல மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள், அப்பாலே UFO நம்ம கேக்க வந்ததே எல்லாம் கேட்டுட்டாறு அதனால நான் கேட்டு எடத அடைக்க விரும்பல. கண்டின்யு பண்ணுங்க.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ..........,

Super Iyer said...

ப்ரியா ||இப்டி ஆர்க்கியூ பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்தது...|| இது நீங்கதானே கேட்டேள். ஏன் ஆர்கியு பண்ணிணேன்னு பதில் சொல்லிட்டேன். மத்தபடி நீங்க பர்சனலா இவாளை எதிரக்கனும்னு நான் எதிர்பார்க்கல.

|| fa - மொதல்ல மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்||

இதை சொல்ல மறந்துட்டேனே.
பஹவான் அனுக்கிரகத்தால நன்னா இருங்கோ.

வானம்பாடிகள் said...

Super Iyer said...


//வானம்பாடிகள் அண்ணா. இவா எதுலயெல்லாம் மூக்க நுழைச்சான்னு நீங்க பாக்காததா.. நம்மவாள நாக்கே கூசிப்போற அளவுக்கு எழுதியும் பேசியும் வந்தவாளுக்கு தாலி எடுத்துக்கொடுக்க மட்டும் அந்தனன் வேணுமோ, நீங்களே சொல்லுங்கோ?//

அதாருங்காணும் நம்மவா? அவசியம்னா நானே சேர்ந்து திட்டுவேனே. ஒரு அப்பாவோட ஆசைக்கு குழந்தைகள் ஒத்துப்பட்டுப் போனா உமக்கு எங்கங்காணும் வலிக்கறது.பெரியவாள மதிக்காதன்னு அந்தணன் சொன்னான்னா திட்டினா போறாது ஓய். ஜோலியப் பாரும்.

Super Iyer said...

||ஒரு அப்பாவோட ஆசைக்கு குழந்தைகள் ஒத்துப்பட்டுப் போனா உமக்கு எங்கங்காணும் வலிக்கறது.||

அண்ணா நீங்க என்ன தப்பா புரிஞ்சுண்டேள். இப்பவாச்சும் இவாளுக்கு நல்லபுத்தி வந்துதேன்னுதான் சந்தோஷப்படறேன். அதே வேளேல இவா நம்மவாளையும் மத்தவாளையும் பேசினதுக்கெல்லாம் இப்போ கூலி கிடைகறது. அதுல நேக்கு சந்தோஷம்தான். நீங்க பெரியவா உங்க அளவுக்கு நேக்கு பெரிய மனிசில்ல

வானம்பாடிகள் said...

/அண்ணா நீங்க என்ன தப்பா புரிஞ்சுண்டேள். இப்பவாச்சும் இவாளுக்கு நல்லபுத்தி வந்துதேன்னுதான் சந்தோஷப்படறேன். அதே வேளேல இவா நம்மவாளையும் மத்தவாளையும் பேசினதுக்கெல்லாம் இப்போ கூலி கிடைகறது. அதுல நேக்கு சந்தோஷம்தான். நீங்க பெரியவா உங்க அளவுக்கு நேக்கு பெரிய மனிசில்ல/

பேத்தப்படாது. தட்சிணை சாஸ்திரின்னா வாங்கிண்டிருப்பர். என்னத்த கூலி கிடைக்கிறது. நீர் சூப்பர் ஐய்யரோ என்னமோ நான் விரல் சூப்புர பாப்பா இல்லை. பெரிய மனசுல்லாம் அவசியமில்லை. சின்னப் புத்தியில்லாம இருந்தா போறாதான்னா? ஒங்களுக்குத் தெரியாததா?

siva said...

நாந்தான் பிர்ச்டுன்னு சொன்ன அடிவிழும்

மணமக்கள் வாழ்க பல்லாண்டு...

வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் ...

அருண் அண்ணே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,,, போட்டோவில...

டம்பி மேவீ said...

ராஜன் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள் ....

மனிதன் தன்னுடைய கருத்தை காப்பாற்ற எத்தனை தூரத்திற்கும் போவான் என்று சில பின்னூட்டங்கள் காட்டுகிறது.

ஐய்யா இறை தூதர்களே ..... ஒரு இறை மறுப்பரின் திருமணதிற்கு வாழ்த்து சொல்ல கூடாவா உங்கள் மதம், கடவுள் நம்பிக்கை etc etc கற்று தரவில்லை ???? அத்தனை கருது வெறியர்களாக மாறிவிட்டீர்களா

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் ராஜன்.....
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாமல் போனது வருத்தமே. விரைவில் சந்திப்போம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

Anonymous said...

ராஜன்,ரேவதிக்கு - இனிய திருமண வாழ்த்துக்கள்.

அவங்க வாழ்க்கை-ல ரொம்ப சந்தோஷமா இருக்குற நாட்கள் இப்ப... இப்பவே இந்த கேள்வி-எல்லாம் கேட்கணுமா?... கொஞ்சம் பொறுக்க மாட்டீகளோ?...

All is fair in Love and War - படிச்சதில்லையா?...

கொஞ்சம் wait பண்ணுங்க. ராஜன் வந்த உடனே அவர் கிட்டே கேளுங்க :)

Anonymous said...

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்.

//தமிழரசி//
//மதுரைப் பொண்ணு//

--- அது என்னங்க தல வர வர ஸ்மார்ட் ஆகிட்டே போறீங்க.. //

அப்டினா இதுவரைக்கும் ஸ்மார்ட் இல்லனு சொல்றாங்களா??
அருண் நோட் த பாய்ண்ட்..

வரட்டுமா??
ஏதோ என்னால முடிஞ்சது.

UFO said...

@ டம்பி மேவீ
///மனிதன் தன்னுடைய கருத்தை காப்பாற்ற எத்தனை தூரத்திற்கும் போவான் என்று சில பின்னூட்டங்கள் காட்டுகிறது.

ஐய்யா இறை தூதர்களே ..... ஒரு இறை மறுப்பரின் திருமணதிற்கு வாழ்த்து சொல்ல கூடாவா உங்கள் மதம், கடவுள் நம்பிக்கை etc etc கற்று தரவில்லை ???? அத்தனை கருது வெறியர்களாக மாறிவிட்டீர்களா///---என் மற்றும் பிற மத சகோதரர்களின் நம்பிக்கைகளை அழகிய முறையில் ஆதாரபூர்வமாக கேள்வி கேட்கட்டும் தப்பில்லை... அசிங்கமாக ஆபாசமாக படிக்கவே கூசும்படி அருவருக்கத்தக்கவகையில், 'நான் ஒரு நாத்திகன் இது என்னுடைய freedom of speech' என்று இஷ்டத்துக்கு வரைமுறை இல்லாமல் எழுதியது சரியா? அதை கேள்விகேட்டால் புத்தியில் நன்றாக உரைக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் இதுதானே? பின்னர் எப்போது கேள்வி கேட்பது? பின்னர் கலப்பிரியா சொல்றது மாதிரி...//ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு இப்டித்தான் இது நடந்திச்சு...//... என்றல்லவா விஷயம் ஆறிப்போய் விடும்?

மற்றபடி தான் சொன்ன கருத்துக்களுக்கு மாற்றமாக நடந்து கொண்டது முழுக்க ராஜனின் freedom of life-தான். ஆனால், தன்னுடைய மனமாற்றத்தை உணர்ந்து இதுவரை அசிங்கமாய் எழுதியதற்கு மன்னிப்பு கேட்கட்டும். அப்புறம் ரொம்ப பர்சனலாய் என்மீது அபாண்டமாய் பழி போட்டதற்கு தனியாக என்னிடம் மன்னிப்பு கேட்கட்டும். அப்போதுதான் ராஜன் எனக்கு சகோதரன். அதுவரை எனிமி. எனிமிக்கேல்லாம் வாழ்த்து சொல்வதாய் இல்லை. இது 'அழகிய மணமகனுகுக்கான பதிவு' மனமகளுக்கானது இல்லை'என்று கும்மி என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார். அதனால்தான் சகோதரி ரேவதி அவர்களுக்கு அவருக்கான பதிவில் வாழ்த்து சொல்லலாம் என்று இருந்துவிட்டேன்.

ஆனால், அப்படி ஒரு பதிவு வருமோ வராதோ... அதனால்... சொல்கிறேன்...

"என் இனிய சகோதரி 'உலகின் அழகிய மணமகள்' ரேவதி அவர்களுக்கு என் இதயம் கணிந்த திருமண வாழ்த்துக்கள்".

Uma said...

ராஜன் ரேவதிக்கு மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள். ஊரில் இல்லாததால் கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்.

D.R.Ashok said...

மனமக்களுக்கு வாழ்த்துகள்

Happy Life :)

சந்தனமுல்லை said...

அப்போ , கடவுள் மறுப்பெல்லாம் மத்த மத கடவுள்களுக்குத் தானா.... பிள்ளையாருக்குக் கிடையாதா.. ஓகே..ரைட்...!


மணமக்களுக்கு வாழ்த்துகள்! :-‍)

ரஹீம் கஸாலி said...

மத மாச்சர்யங்களை புறந்தள்ளிவிட்டு இப்போது நாம் செய்யவேண்டியது வாழ்த்துக்கள் தானே தவிர வசவு அல்ல....வாழ்க மணமக்கள்.

Haana said...

எனக்கு ஒன்று புரிய வில்லை. கடவுள் மறுப்பாளன் என்றால் கோவில் இருக்கும் சந்து பக்கம் கூட செல்ல கூடாதா...நண்பர்களுடைய உணர்வுகளுக்கும் மதிப்பு தர கூடாதா.....நானும் கடவுள் மறுப்பாளன் தான்...ஆனால் அதற்காக நான் தங்கி இருக்கும் அறையில் எனது நண்பர்கள் சுவற்றில் ஒட்டி இருக்கும் திருமால் போட்டோவை கிழிக்க சொல்கிறீர்களா....அல்லது அவர்களுடனான எனது நட்பை முறிக்க சொல்கிறீர்களா....

மங்குனி அமைசர் said...

உள்ளேன் ஐய்யா

vasanth said...

மணமக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று சிலர் கோபப்படுகின்றனர். எதற்கு வாழ்த்து தெரிவிக்க சொல்கிறார்கள்? ராஜன் எப்படி பட்டவர் என்று அவரது இறைமறுப்பு பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை பார்த்தால் தெரியும்.

மிக வக்கிரமாக பேசக்கூடிய, நாகரிகமற்ற ஒருவரை நம்பி கழுத்தை நீட்டிய அந்த பெண்ணை பார்த்து பரிதாபப்படுவதா அல்லது இந்த கேவலமான நபருக்கு வாழ்த்து தெரிவிப்பதா?

வாழ்த்து தெரிவிக்க சொல்பவர்கள், ராஜன் போன்ற ஒருவருக்கு தங்கள் வீட்டு பெண்ணை மணமுடித்து கொடுப்போமா என்று யோசிக்கவேண்டும்.......

ராஜன ஒரு மனுசனா கூட நினைக்கல...இதுல அவருக்கு வாழ்த்து ஒரு கேடா...

mythees said...

:)

sakthi said...

மணமக்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துக்கள்!!!

? said...

கொஞ்ச நேரம் கொள்கய விட்டுக் கொடுத்தா குறைஞ்சா போவீங்க• மற்றவர்கள் கொள்கைக்கு நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதுதான் மனித பண்பு. எனக்கு மாற்றுத்திறனாளி, விதவை, மறுமணம் ஓகே.இப்படித்தான் பொண்ணு வேணும். ஆனால் அம்மா விரும்பியதால் தாலி. இதால குடியா முழுகிப் போச்சு. தாலி ஏன் மணமகன் கட்டல என்று கேட்டால் நீங்க எல்லாம் பெண்ணியவாதியா..நான் ஒன்றும் ஆணாதிக்கவாதி இல்லீயே. அப்படித்தான் இருப்பேன் என சொல்கிறீர்களா.. அப்படின்னா நீங்கதான் நிரூபிக்கணும் (உபயம் பிரம் ஷோபாசக்தி).

கொலுசு போடக்கூடாதா.. இது சுதந்திரம்க• யாருக்குனு கேக்குறீங்களா. அது காதலுக்கு முக்கியங்க• ஏங்க இதெல்லாம் பொண்ணு நடமாட்டத்த கண்காணிக்கிற ஆண் வக்கிர மனநிலை என்றால் உங்கள மனநல மருத்துவரிடம்தான் கூப்பிட்டு போக வேண்டும். வரதட்சணையா சே.. அருவெருப்பா இருக்கு. இரண்டு பேரும் சேர்ந்து ஒரே ஒரு வீடு வாங்கணும். அதுக்கு தக்க சம்பளம் வாங்குற பொண்ணத்தானங்க கட்ட முடியும். பூ கூட வைக்க கூடாதா.. சத்தியமா அது மணமகன் விருப்பம் இல்லீங்க• மணமகள் விருப்பங்க•. காதல் ஏங்க வருது. அதுக்கு வர்க்க சாயம் பூசலாம்ணு பாக்குறீங்க• காதல் இறைநம்பிக்கை மாதிரி அத யாரும் விளக்கம் கேக்க கூடாதுங்க•

பொண்ணு கோவிலுக்கு போகும் அது அந்த அம்மாவோட ஜனநாயக உரிம• பசங்கள எப்படி வளர்ப்போம்னு கேக்குறீங்களா. பாதி ஜனநாயகம் இருக்கதால அவரு பாதி பாதி அர்த்தநாரீஸ்வர பாணில வளர்வாரு. நான் தமிழ் மீடியம் சேக்க சொலவேன். அவங்க இங்லீசு மீடியம் சேக்க சொல்வாங்க• அப்போ என்ன செய்யணும்னு சொல்றீங்களா. அந்த பையனோட சுதந்திரம்க அது. அவங்களுக்காக நான் கோவிலுக்கு போனா அது தப்பா. என் கருத்துக்காக சமூகத்திலதாங்க போராடணும், வீட்டுல போராடுறது என்னோட சுதந்திரம்க• ஊருக்குத்தான் உபதேசம்னு யாராச்சும் ரோட்டுல போற வாறவனெல்லாம் கேட்டால், ஒன்னு அவன் எதாவுத இயந்திரகதியிலான இயக்கத்தில் இருக்கணும் இல்ல பாப்பானா இருக்கணும். கருணாநிதியவே இந்த ஓட்டு ஓட்டுறாங்க• நம்மள விட்டுவப்பாங்களா

? said...

கொஞ்ச நேரம் கொள்கய விட்டுக் கொடுத்தா குறைஞ்சா போவீங்க• மற்றவர்கள் கொள்கைக்கு நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதுதான் மனித பண்பு. எனக்கு மாற்றுத்திறனாளி, விதவை, மறுமணம் ஓகே.இப்படித்தான் பொண்ணு வேணும். ஆனால் அம்மா விரும்பியதால் தாலி. இதால குடியா முழுகிப் போச்சு. தாலி ஏன் மணமகன் கட்டல என்று கேட்டால் நீங்க எல்லாம் பெண்ணியவாதியா..நான் ஒன்றும் ஆணாதிக்கவாதி இல்லீயே. அப்படித்தான் இருப்பேன் என சொல்கிறீர்களா.. அப்படின்னா நீங்கதான் நிரூபிக்கணும் (உபயம் பிரம் ஷோபாசக்தி).

கொலுசு போடக்கூடாதா.. இது சுதந்திரம்க• யாருக்குனு கேக்குறீங்களா. அது காதலுக்கு முக்கியங்க• ஏங்க இதெல்லாம் பொண்ணு நடமாட்டத்த கண்காணிக்கிற ஆண் வக்கிர மனநிலை என்றால் உங்கள மனநல மருத்துவரிடம்தான் கூப்பிட்டு போக வேண்டும். வரதட்சணையா சே.. அருவெருப்பா இருக்கு. இரண்டு பேரும் சேர்ந்து ஒரே ஒரு வீடு வாங்கணும். அதுக்கு தக்க சம்பளம் வாங்குற பொண்ணத்தானங்க கட்ட முடியும். பூ கூட வைக்க கூடாதா.. சத்தியமா அது மணமகன் விருப்பம் இல்லீங்க• மணமகள் விருப்பங்க•. காதல் ஏங்க வருது. அதுக்கு வர்க்க சாயம் பூசலாம்ணு பாக்குறீங்க• காதல் இறைநம்பிக்கை மாதிரி அத யாரும் விளக்கம் கேக்க கூடாதுங்க•

? said...

பொண்ணு கோவிலுக்கு போகும் அது அந்த அம்மாவோட ஜனநாயக உரிம• பசங்கள எப்படி வளர்ப்போம்னு கேக்குறீங்களா. பாதி ஜனநாயகம் இருக்கதால அவரு பாதி பாதி அர்த்தநாரீஸ்வர பாணில வளர்வாரு. நான் தமிழ் மீடியம் சேக்க சொலவேன். அவங்க இங்லீசு மீடியம் சேக்க சொல்வாங்க• அப்போ என்ன செய்யணும்னு சொல்றீங்களா. அந்த பையனோட சுதந்திரம்க அது. அவங்களுக்காக நான் கோவிலுக்கு போனா அது தப்பா. என் கருத்துக்காக சமூகத்திலதாங்க போராடணும், வீட்டுல போராடுறது என்னோட சுதந்திரம்க• ஊருக்குத்தான் உபதேசம்னு யாராச்சும் ரோட்டுல போற வாறவனெல்லாம் கேட்டால், ஒன்னு அவன் எதாவுத இயந்திரகதியிலான இயக்கத்தில் இருக்கணும் இல்ல பாப்பானா இருக்கணும். கருணாநிதியவே இந்த ஓட்டு ஓட்டுறாங்க• நம்மள விட்டுவப்பாங்களா

? said...

எல்லா நேரமும் கொள்கய காப்பத்தணும்னு சொன்னா போர் அடிக்குதுங்க. அதே மாதிரிதான் எப்போவும் நேர்மையா இருக்கணுமாம். காதல் இல் கூட நேர்மையா இருக்கணுமாம். இப்போ கூட பாருங்க நான் அப்படி இருக்க கூடாதாம்க• அப்படி நேர்மை என்ற சொல்லே ஜனநாயக உரிமைய தனிமனித சுதந்திரத்த பாதிக்கிறதா இருக்கதால இத யார் யார் எல்லாம் வலியுறுத்திறாங்களோ அவிங்க எல்லாம் பிற்போக்கு வாதிகள் என அறிவிக்க வேணும்க‌

அப்பாவுக்காக திருநீறு பூசலாம். மனைவிக்காக கோவிலுக்கு போகலாம். மனைவிக்காக பெரியார் புத்தகங்கள அவிங்க இருக்கும்போது படிக்காம இருக்கலாம். அரசியல் பேசாம இருக்கலாம். அவங்க மனம் புண்படாம இருக்துக்காக சோதிடம் பார்க்கலாம். நமக்கு இதுல எல்லாம் நம்பிக்கை கிடையாது என இணையத்தில் வந்து கும்மி அடிக்கலாம். அப்பா பட்ட கஷ்டத்திற்காக கொஞ்சம் சம்பந்தியா விரும்பி கொடுக்கும் ரொக்க பணத்த வாங்கிக்கலாம். தீபாவளிக்கு பொங்கலுக்கு மாமனார் வீட்டில் வழங்கும் சின்ன தங்க அன்பளிப்புகள வாகனத்த விட்டை வாங்கி கொள்ளலாம்

ராஜன் said...

நம்பிக்கைநாணயம்கைராசி


ராஜன் & கோ!

தரம், நிரந்தரம்!

(அவ்வ்வ்வ்!)

Dr.Rudhran said...

நேரில் மட்டுமின்றி இங்கேயும் என் வாழ்த்துகள்.
நண்பர் மணவிழா படம் அனுப்பினால் பதிவில் இங்கே இருக்கும் சிலவற்றுக்காவது பதிலளிக்கிறேன்.

? said...

நல்ல வேளை
முதலில் கலந்து கொண்டிருக்கலாம் என்றுதான் நினைத்தேன். அப்படி கலந்து கொண்டு விமர்சித்திருந்தால் பலரது மனதையும் புண்படுத்திய பாவி ஆகி இருப்பேன்.

UFO said...

/////////
நம்பிக்கைநாணயம்கைராசி


ராஜன் & கோ!

தரம், நிரந்தரம்!

(அவ்வ்வ்வ்!)
///////////////

----இவ்வளவு நடந்த பின்னும் இப்டின்னா...

ம்ஹூம்... இனி இது தேறாத கேஸ்...!

[[[[[[ Blogger vasanth said...
மணமக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று சிலர் கோபப்......
.........இதுல அவருக்கு வாழ்த்து ஒரு கேடா...
October 25, 2010 12:35 PM]]]]]]

ஏங்க வசந்த் என்னைவிட ராஜனை ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க போல..!

அருள் said...

ஏழர said...

// //பார்ப்பனிய அடையாளங்களை சுமந்த சிவராமனுக்கு பார்ப்பனியத்தை விமரிசனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது என்று எழுதிய தெளிவும், பார்ப்பனிய விழுமியங்களுக்காக என் கால் மயிறுகூட வணங்காது என்ற உறுதியும் வால்பையனிடம் கரைந்து போய் ஒரு தோல்வி மனப்பான்மையில் எழுதப்பட்டுள்ளதை போல் உள்ளது இந்த பதிவு.

சப்பைகட்டுகளை தவிரத்த ஒரு நேர்மையான பரிசீலனையே இந்த நேரத்தின் தேவை.// //

இதுல நேர்மையான பரிசீலனை என்றால் என்ன? ஒன்றுமே புரியவில்லையே?

அதுதான் திரு. ராஜன் சார்பாக பேசுபவர்கள் - ராஜன் கொள்கை எதையும் கைவிடவில்லை, அவர் கடவுள் நம்பிக்கையாளராகவோ, பார்ப்பன அடிவருடியாகவோ மாறவில்லை.

பெண்வீட்டாரின் விருப்பத்திற்கேற்ப தனது நிலைபாட்டை கொஞ்சம் விட்டுக்கொடுத்திருக்கிறார்.' என்கிறார்களே. இதில் என்ன பெரிய குற்றத்தைக் கண்டீர்கள்? என்ன கோள்கை நழுவலைக் கண்டுபிடித்தீர்கள்? எதுவும் இல்லை.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"

என்று படித்ததில்லையா? நமது வறட்டுத்தனமான பிடிவாதத்தைவிட மற்றவர்கள் மீது நாம் வைக்கும் அன்பே உயர்வானது.

ஏழர said...

அருள்,முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு பதிலான வால்பையனின் பதிவைப்பற்றிய எனது கருத்தின் ஒரு அம்சத்தை மட்டும் எழுதியிருக்கிறேன். மற்றபடி ராஜனுடைய மணவிழாவை நான் இங்கே மதிப்பீடு செய்யவில்லை.

நந்தா ஆண்டாள்மகன் said...

சரியான விளக்கம், தலைப்பு சூப்பர்

அருள் said...

Super Iyer said...

// //யாரு இல்லேன்னா என்ன பகவான்னு ஒருத்தன் இருக்கான். இவாளோட போலி முற்போக்கு முகமுடிய எவளோ சீக்கிரம் கிழிச்சான் பாத்தேளா? இனிமே எந்த மூஞ்சிய வச்சுண்டு பார்ப்பானை திட்டுவா?// //

அளவுக்கு மீறின ஆசைதான் போங்கோ!

இருவீட்டு நிகழ்வொன்றில் தனது விருப்பத்தை விட்டுக்கொடுப்பது "போலி முற்போக்கு முகமூடி" கிழியும் நிகழ்வா? அப்படி செய்வதால் பார்ப்பானைத் திட்டக்கூடாதென்று ஆகிவிடுமா? எதையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப திரித்துப்பார்க்காதீர்.

காவல் நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் "ஆயுத பூசை - சரசுவதி பூசை" கொண்டாடும் கேவலம் நடக்கும் நாடு இது. இதுபோன்ற பொது இடங்களிலும் பொது விழாக்களிலும் மதத்தை/மூடநம்பிக்கையை ஓரங்கட்டினால் அதுவே போதுமானது.

திருமணம் போன்ற தனிமனித நிகழ்வுகளை அவர்வர் விருப்பம் போல நடக்க விடுங்கள். காலப்போக்கில் அதுவும் மாறும்.

பாட்டாளி மக்கள் கட்சியில் ஒரு நல்ல பழக்கம் பின்பற்றப்படுகிறது. கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா போன்ற தலைவர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் நடக்கும் திருமணத்தில் - தாலியும் தமிழ் பாரம்பாரியமும் உண்டு. ஆனால், அய்யரும் யாகமும் புரோகிதமும் இல்லை.

தலைவர்கள் உறுதிமொழியை வாசிக்க மணமக்களின் பெற்றொர் தாலி எடுத்துக்கொடுக்க, அய்யரோ மந்திரங்களோ இல்லாமல் திருமணம் நடக்கும். அதேசமயம் தலைவர்கள் தலைமையேற்காத திருமணங்கள் அவரவர் விருப்பபடி, மந்திரம் யாகத்துடன் நடக்கலாம்.

அதாவது, கட்சித் தலைவர்கள் தலைமையில் கட்சி விழாவாக நடக்கும் திருமணங்கள் கட்சி கொள்கைப்படி பகுத்தறிவு திருமணமாக நடக்கின்றன. ஆனால், கட்சி விழாவாக நடக்காமல் தனிப்பட்ட குடும்ப விழாவாக நடக்கும் திருமணங்களில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை.

ஹைதர் அலி said...
This comment has been removed by the author.
ஹைதர் அலி said...

முதலில் மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

அடுத்து வால்பையனுக்கு கண்டனங்கள்!
////முக்கியமாக மனைவிமார்களை பர்தாவுக்குள் அடைத்து வைக்கும் ஆணாதிக்க சமூகம்///
அது என்ன மனைவிமார்கள் ஒ மேப்புடியான் பாசையில் பல கல்யாணம் பன்னுற துலுக்க பயல்கன்னு அர்த்தமாணே வேளங்கிரும்

குடுகுடுப்பை said...

நண்பர் ராஜன் மற்றும் ரேவதிக்கு வாழ்த்துகள்.

முட்டாள்களோடு வாதிடாதீர்கள் என்ற டோண்டுவின் வாசகம் எனக்குப் பிடித்த ஒன்று அந்த வகையில் நண்பர் கும்மி சரியாக அடையாளம் கண்டு செயல்படுகிறார்.

நாத்திகம் என்பது பிறர் மேல் திணிக்கப்பட்டால் அதுவும் ஒரு விதத்தில் மதமே,பெண்ணின் அப்பாவின் மேல் அதனைச்செய்யாத நண்பர்கள் மிக உயர்ந்தவர்களாகவே தெரிகிறார்கள்.

கலகலப்ரியா said...

||குடுகுடுப்பை said...

நாத்திகம் என்பது பிறர் மேல் திணிக்கப்பட்டால் அதுவும் ஒரு விதத்தில் மதமே,பெண்ணின் அப்பாவின் மேல் அதனைச்செய்யாத நண்பர்கள் மிக உயர்ந்தவர்களாகவே தெரிகிறார்கள்.||

நச்-ன்னு இருக்கு குகு... ஐ லைக் இட்...

தக்காளி said...

ரேவதியும் ராஜனையும் குறை சொல்ல உங்களுக்கு என்ன துணிவு இருக்கிறது? நீங்கள் எல்லாம் வலைப்பூவில் எழுதுவது போல் தான் வாழ்கையில் நடந்து கொண்டிருகிறீர்களா ?வெட்கமாக இல்லை? ஜாதி வெறி பிடித்தவர்களே ... நீங்கள் ஏன் ஒரு உழவன் பயிரிட்ட அரிசியை ஏன் உங்கள் ஜாதியில் உள்ளவர்களை பயிரிட சொல்ல வேண்டியது தானே?
வசந்த் என் தோழியை பார்த்து நீங்கள் ஒன்றும் பரிதாபம் கொள்ள தேவை இல்லை.. அவள் உங்கள் வீட்டின் முன்னால் வந்து நிற்கபோவது இல்லை ... நீங்கள் என்ன மஹா புருஷனா? நீங்கள் என்ன இயந்திரமா? மனித உணர்வே இல்லாத இயந்திரங்கள் வாழ்த்த தேவை இல்லை...

குடுகுடுப்பை said...

மூன்று கிழவர்களுடன் மணமக்கள்
இருக்கும் போட்டோ போட்டதற்கும் தலைப்புக்கு எதாச்சும் சம்பந்தம் இருக்கா?

நகைச்சுவைக்காக மட்டுமே இந்தப்பின்னூட்டம், சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்.

UFO said...

@ திரு. அருள்...
////"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"

என்று படித்ததில்லையா? நமது வறட்டுத்தனமான பிடிவாதத்தைவிட மற்றவர்கள் மீது நாம் வைக்கும் அன்பே உயர்வானது.////---அப்படியாங்க அருள்... அப்போ இதையும் படிங்க...வினைத்திட்பம் - Chapter 67

661 -
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.


664 -
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

666 -
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

669 -
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.

last but not least...

670 -
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.

எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது. ('எவரை உலகம் மதிக்காது' என்று விளக்கவுரை வேண்டுமா என்ன?)

கும்மி said...

@UFO
எப்போதும் குர் ஆன்லேர்ந்து காப்பி பேஸ்ட் பண்ணுவீங்க. இப்ப என்ன, திடீர்ன்னு திருக்குறள்ளேர்ந்து? ஒங்களுக்கே போரடிச்சிருச்சா?

அருள் said...

UFO said...

// //
"மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது".

"இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்."
// //

நீங்களே பாருங்க...மற்றவருக்காக தனது நிலைபாட்டை விட்டுக் கொடுப்பதற்கும் "மனத்தில் உறுதி" "துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாத துணிவு" வேண்டும்.

? said...

திருமணத்திற்கு வந்த ஒரு கிழட்டு பாப்பான் சொல்லி கேட்டது

இவாள்லாம் நல்லா பிளாக்ல எழுதுவா .. ஆனா ஒரு பிளாக் மெயில்ல விழுந்துருவா.. இந்தக் காலத்து பிள்ளையாண்டால்லாம் ரொம்ப சமத்து.

ஆளானப்பட்ட நாயக்கரே கடசி காலத்துல வீட்ல பிள்ளையார வச்சிண்டுருந்தாருண்ணேனே பாத்தீளா இவா அத நிரூபிச்சிட்டா

ஆச்சாரத்துக்கு ஆச்சாரம். அந்தப் பக்கமா கொஞ்சம் வீச்சாரம்..

அது சரி(18185106603874041862) said...

ராஜன் ரேவதி தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.

பெரியாருக்கும் ராஜாஜிக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. ராஜாஜி பார்ப்பனர் தான். அதிலும் குல்லுக பட்டர் என்று விமர்சிக்கப்பட்டவர். (அது வேறு கதை)

பெரியார் ஏதோ ஒரு மடத்துக்கு போய் அங்கு பூசப்பட்ட விபூதியை மரியாதை காரணமாக அழிக்காமலே வைத்திருந்தார் என்று எங்கோ படித்த ஞாபகம்.

முதலின் மனிதன் அதன் பின்னரே இசங்கள். மனிதன் இல்லாமல் எதை வைத்து இசத்தை நடத்துவது? மனிதனுக்கு மதிப்பளிக்காத எந்த இசமும் அழிந்து போகும்.

வலையில் இப்படி எல்லாம் விமர்சனம் வரும் என்று ராஜனுக்கும் தெரிந்தே இருக்கும் என்றே நினைக்கிறேன். இருந்தும், நான் மாப்பிள்ளை, நான் சொல்வதை தான் கேக்கணும் என்று சொல்லாமல் பெண் வீட்டுப் பக்கத்தையும் மதித்து இருப்பதே ராஜன் யார் என்பதற்கு உதாரணம்.

இதனால் எல்லாம் ராஜனின் கொள்கை மாறும் என்று நான் நினைக்கவில்லை.

மீண்டும் வாழ்த்துக்கள்.

K.MURALI said...

follow up

கார்பன் கூட்டாளி said...

நண்பர் திரு ராஜன்,

திருமண வாழ்த்துக்கள்,

எந்த கொள்கையிலும் இருப்பவர்களுக்கு அதன் அடித்தளத்தை நிரூபிப்பதில் திருமணமே முதலில் இருக்கும், அதுவும் திரு ராஜன் போல் மற்ற கொள்கைகளை காரமாக விமர்சிப்பவர்கள் திருமணத்தில் சமாதானம் கூடாது, தானே அப்படி இருக்கும் பட்சத்தில் பிறருடைய கொள்கைகளை (அதில் திருமணமும் அடங்கும்) விமர்சித்தல் சரியா என்பதை திரு ராஜன் அவர்களே விளக்க வேண்டும்.

ஒப்புக்கு பதிவு போடுவதை நிறுத்திவிட்டு தானும் ஏற்று கொள்ள கூடிய செய்திகளை பதிவாக கொடுத்தல் அதில் அர்த்தம் இருக்கும் என நினைகிறேன்.

atheists said...

வால்பையனின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியது...

நாத்திக சமூகத்தில் ஒரு புரட்சி திருமணம்...

http://athikkadayan.blogspot.com/2010/10/blog-post_26.html

அருள் said...

? said...

// //ஆளானப்பட்ட நாயக்கரே கடசி காலத்துல வீட்ல பிள்ளையார வச்சிண்டுருந்தாருண்ணேனே பாத்தீளா இவா அத நிரூபிச்சிட்டா// //

சும்மாச்சும் அள்ளி விடப்படாது...ஓய்!

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 1"

சுயமரியாதைத் திருமணம் என்பதற்கு அவரவர் விருப்பம்போல் விளக்கம் கொடுத்து - விநாயகர் படம் இருப்பதாலேயே அது சுயமரியாதைத் திருமணம் அல்ல என்பது போல பேசுகின்றனர். ஆனால், சுயமரியாதைத் திருமணத்திற்கு அதை விட விரிவான பொருள் உண்டு.

சுயமரியாதைத் திருமணம் என்கிற பதத்தை தமிழ்நாட்டில் நிலைநாட்டிய பெரியாரின் கருத்தைப் பார்ப்போம்.

தந்தை பெரியாரின் விளக்கம் 1: ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

""திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச்செய்யச் செய்துகொள்ளும் காரியமேயாகும். இதைச் சிலர் - அதாவது பழைய முறைக்காரர் சடங்கு என்கிறார்கள்; புதிய முறைக்காரர் ஒப்பந்தம் என்கிறார்கள்.

சடங்கு என்று சொல்லுகின்றவர்கள் உண்மையிலேயே சடங்காகவே கருதிக் காரியங்களில் இலட்சியமில்லாமல் நடத்துகிறார்கள். அதாவது, கலியாணத்தில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் எவ்வித உரிமையும் இல்லை....மாப்பிள்ளை பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான்; பெண் மாப்பிள்ளையைப் பார்த்திருக்க மாட்டாள்....

ஆனால், சுயமரியாதைத் திருமணம் என்பது அப்படி அல்ல மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து, தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும், அர்த்தமும் பொருத்தமும் அவசியம் இல்லாமல் வெறும் சடங்கு, பழக்க வழக்கம் என்பதற்காக மாத்திரம் ஒன்றையும் செய்யக்கூடாது என்பதுமேயாகும்.""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

எனவே, "ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்" என்கிற பெரியாரின் அளவுகோள் படி இங்கே விவாதிக்கப்படும் திருமணம் சுயமரியாதைத் திருமணமே ஆகும்.

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 2"

தந்தை பெரியாரின் விளக்கம் 2: வீண் செலவுகள் கூடாது:

""திருமணம் சம்பந்தமாகச் செலவு, மெனக்கேடு, வீண் கஷ்ட நஷ்டம் ஆகியவைப்பற்றி பழைய முறைக் கலியாணங்களில் இலட்சியமே செய்யப்படுவதில்லை. ஆடம்பரத்துக்காகவே வீண் செலவுகளைத் தகுதிக்கதிகமாகக் கடன்வாங்கியாவது செய்யப்பட்டு வருகிறது.

திருமணத்திற்காக மூன்று நாள், நான்கு நாள், ஏழு நாள் கூட மெனக்கெட்டு வெளியூர் உறவினர்களையும் தருவித்து - மெனக்கெடச் செய்து, அய்ந்துநாள் விருந்து, பத்து நாள் விருந்து என்று சாப்பாட்டுச் செலவும்; பந்தல், மேளம், சங்கீதம், ஊர்வலம், வாணம் என்பதாக வீண்காரியங்களும் - குடிகாரர்கள் குடித்த போதையில் நடப்பதுபோல் - கலியாண போதையில் சிக்கி பணம், நேரம், கழ்டம் ஆகியவை தாறுமாறாகச் செலவாக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு மூன்று நாள்களுக்காக - சிலர் பார்த்துப் புகழ்வதற்காக என்று செய்யப்படும் இப்படிப்பட்ட தாறுமாறான ஆடம்பரச் செலவுகள் கலியாணத் தம்பதிகள் தலையிலோ அல்லது குடும்பத்தார் தலையிலோ விழுந்து, கலியாணக் கடன்களால் வெகுநாளைக்கு அவதிப்பட வேண்டியிருப்பதால் - சில குடும்பங்கள் கலியாணச் செலவாலேயே 'பாப்பர்' ஆகி, மீளாக் கடன்காரர்களாகக் கூட ஆகவேண்டியதாகி விடுகின்றன.

இப்படிப்பட்ட கொடுமைகளும் முட்டாள்தனமான காரியங்களும் கூடாது என்பதுதான் சுயமரியாதைக் கலியாணம் என்பதன் முக்கிய அம்சமாகும்""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

எனவே, "திருமணத்தில் விநாயகர் இருக்கிறாரா? இல்லையா?" என்பதைவிட திருமணத்திற்காக அளவுக்கதிகமாக செலவு செய்யப்படாமல் - "சிக்கனமாக நடத்தப்படுகிறாதா?" என்பதுதான் சுயமரியாதைத் திருமணம் என்பதற்கு தந்தை பெரியாரின் மிகமுக்கிய அளவுகோள் ஆகும்.

பயணமும் எண்ணங்களும் said...

வாழ்த்துகள் மணமக்களுக்கு..


-----------------------
கண் இழந்து சித்திரம் வரைவது கடினம் என்பதை இப்போது புரிந்திருக்கலாம்...


அதை அடுத்தவர் மீது ( மதம் மீது )வ் இனி abuse செய்து திணிக்க முற்படும்போதும் யோசிக்கலாம்...

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 3"

தந்தை பெரியாரின் விளக்கம் 3: திருமணம் தெய்வீகமானது அல்ல.

""கலியாண விஷயத்தில் மணமக்களின் வாழ்க்கைச் சம்பந்தம் முக்கியமானது - இலட்சியமானது அல்லவென்றும், அதில் ஏதோ ஒரு தெய்வீகச் சம்பந்தம் இருக்கிறதென்றும்; அதுவேதான் திருமணத்தின் இலட்சியமென்றும், ஆதலால் அப்பெண்ணும் மாப்பிள்ளையும் அத் தெய்வீகச் சம்பந்தத்திற்காக ஒருவர் குற்றங்களையும் அநீதிகளையும் மற்றவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதிலும் சிறப்பாக மாப்பிள்ளை செய்யும் கொடுமைகளையும் அநீதியையும் பெண் பொறுத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் மாப்பிள்ளைக்குப் பெண் அடிமையாய், பக்தியாய் இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், சுயமரியாதைக் கலியாணம் என்பது அப்படியில்லை. திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பத்தம் என்றும், அந்த ஒப்பந்தவிஷயம் பெண்ணையும் ஆணையும் பொறுத்ததே ஒழிய வேறு எவ்விதத் தெய்வீகத்திற்கோ அல்லது எவ்விதக் கட்டுப்பாட்டிற்கோ சம்பந்தப்பட்டதில்லை என்பதுமே ஆகும்""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

எனவே, "திருமணம் தெய்வீகமானது அல்ல" என்கிற பெரியாரின் அளவுகோள் படி இங்கே விவாதிக்கப்படும் திருமணம் சுயமரியாதைத் திருமணமே ஆகும்.

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 4"

தந்தை பெரியாரின் விளக்கம் 4: வாழ்விலும் சொத்திலும் சமபங்கு உரிமை உண்டு.

""பழையமுறைக் கலியாணப்படி பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை; வாழ்க்கையில் சரிபங்கு ஆதிக்க உரிமை இல்லை.

சுயமரியாதைக் கலியாணத்தில் சொத்திலும் வாழ்க்கை ஆதிக்கத்திலும் பெண்ணுக்கு ஆணைப்போலவே சரிபங்கு உரிமை இருக்கிறது என்பதுடன், இவைகளே கலியாண ஒப்பந்தத்தின் சரத்துக்களாகும்""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

அருள் said...

"சுயமரியாதைத் திருமணம் - விளக்கம் 5"

தந்தை பெரியாரின் விளக்கம் 5: திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கே சுதந்திரம்:

""கலியாணம் செய்துகொள்ளும் விஷயத்தில் தம்பதிகளைவிட மூன்றாவதானவர்களுக்கே சகல சுதந்திரமும் இருந்து வருகிறாது. செய்து வைப்பதற்கு ஒரு புரோகிதன் வேண்டும். இன்னின்ன மாதிரி செய் என்பதற்குப் பெற்றொர்கள், உறவினர்கள் வேண்டும். இவர்கள் சொன்னபடியெல்லாம் தம்பதிகள் நடக்க வேண்டும்.

சுயமரியாதைக் கலியாணம் என்பதில் இந்த முறையில்லை. மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களை ஒருவருக்கொருவர் சொல்லி சம்மதித்ததற்கு அறிகுறியாக மாலையிட்டுக்கொள்வது என்பதுடன் முடிவு பெற்றுவிடுகிறது.""

தந்தை பெரியார், குடிஅரசு 12.5.1935

சுயமரியாதைத் திருமணம் குறித்து தந்தை பெரியார் பலநேரங்களில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றில் முக்கியமான 5 கருத்துகளை நான் எனது பின்னூட்டங்களில் குறிப்பிட்டுள்ளேன். அவை:

1. ஆணும் பெண்ணும் அறிந்தவர்களாக இருந்து தாமே துணையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

2. வீண் செலவுகள் கூடாது.

3. திருமணம் தெய்வீகமானது அல்ல.

4. வாழ்விலும் சொத்திலும் சமபங்கு உரிமை உண்டு.

5. திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கே சுதந்திரம்.

இங்கே விவாதிக்கப்படும் திருமணம் பெரியாரின் அளவுகோள்களில், முதல் 4 அளவுகோள்களையும் நிறைவு செய்வதாகவே நான் நினைக்கிறேன். 5 ஆவது விஷயத்தில் மட்டும் பெண்வீட்டாருக்காக விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு குற்றம் அல்ல. "மனிதம்" என்றே கருதப்பட வேண்டும்.

(பல சுயமரியாதைத் திருமணங்களில் 'அய்யரில்லாமல் திருமணம்' என்கிற ஒருவிஷயத்தை மட்டும் நிறைவேற்றி - மற்றவற்றை வசதியாக விட்டுவிடுகிறார்கள்.)

எப்படிப் பார்த்தாலும் 100 க்கு 80 மதிப்பெண் பாஸ் தானே.

""தோழர்களே! நான் யாரையும் இம்மாதிரிதான் திருமணம் செய்யவேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை. சமாதானமாகத்தான் என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருகிறேன். உங்களுக்குள்ள அறிவைக்கொண்டு ஆலோசித்துப் பாருங்கள்.""

தந்தை பெரியார், விடுதலை 24.10.1948

moulefrite said...

முதலில் மணம்க்களுக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்,

முதலில் நான் ஒரு கடவுள் மறுப்பாளன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

திரு ராஜன் அவர்களின் காட்டமான கடவுள் மரறுப்பில் நான் மனம் ம்கிழ்ந்திருக்கிறேன்,,

அவை எல்லாவற்றுக்கும் நான் இப்பொது வெட்கப்படுகிறேன், கும்மியொ வால்பையன் சொல்லும் ச்மாதானத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
பழாய் போன பகுத்தறிவு அதை ஏற்றுகொள்ள மறுக்கிறது

UFO வின் கேள்வி கனைகள் எனக்கு ஞயமாக படுகிறது ( நான் மனசாட்சிக்கு கட்டபட்டவன் சாமியோ)ராஜனின் பதிவுகள் எவ்வளவு காட்டமானவை என்று எல்லோருக்கும் தெரியும்

அப்படி பட்டவர் புரோகிதரை கொண்டு திருமணம் முடித்தார் என்பதையொ பிள்ளையாரை படத்தை மாட்டிக்கொண்டார் என்பதையோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
மற்றவரின் [ பெண்ணின் தந்தை}
கொள்கைக்கு மதிப்பளித்தர்ர் என்பதை
எற்றுக்கொண்டால் எத்தனையோ [எனக்கு தெரிந்து] மற்றவர்களின் கொள்கைக்கு மதிபளித்துதான் கடவுளை வழிப்படுகிறார்கள்

இதிலிருந்து ஒன்று திடமாய் தெரிகிறது..கடவுள் மறுப்பளனோ மதவாதியோ தனக்கு சாதகமாய் ஒரு கொள்கை அமையுமாயின் அதை பயன்படுத்தி கொள்ள தயங்க மாட்டார்கள் எனபதை திரு ராஜன் அவர்களின் திருமணம் என்க்கு அட்சரசுத்தமாக விளக்கியுள்ளது

மொத்ததத்தில் மனிதன் பலகினமானவனே

நான் இங்கே விவாதிக்க வரவில்லை
காரணம் விவாத்மென்றாலே அத்ற்கு முடிவே இல்லை [அதைதான் கும்மியும் வால்பையனும் UFOவும்
செய்து கொண்டிருகிறார்கள்]
ஆனால் கருத்து ப்றிமாற்றத்துக்கு ஒரு
முடிவுண்டு மரியதையுமுண்டு நான் அதைதான் செய்து இருக்கிறேன்

I Don't come here for arguments but for discussion
Bcause in discussion we consider others opinion and take it for us if they got reason
I consider UFO has got reason

கடசியாக ஒன்று என்க்கு கடவுளும்
வேண்டாம் கடவுள் மறுப்பும் வேண்டாம் கடைசிவரை மனிதனாகவே இருந்துவிட்டு போகிறேன்

ப.செல்வக்குமார் said...

// என் தாய், தந்தை ஆத்திகர்களாக இருப்பதால் நான் அவர்களை கவனிக்க மாட்டேன் என்றோ, உங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை என சொல்லும் அளவுக்கு கொள்கை வெறிபிடித்த மிருகமோ நாங்கள் அல்ல!//

அருமை அண்ணா.., அழகான கட்டுரை .. நமது கொள்கைகள் அடுத்தவருடைய மனதினைப் பாதிக்காத வண்ணம் இருப்பதே அழகு ,,!! மணமக்களுக்கு வாழ்த்துகள் அண்ணா ..!!

அருள் said...

திருமணவிழாவில் விட்டுக்கொடுப்பதெல்லாம் 'கொள்கையை கைவிடுவதற்கான அடையாளம் அல்ல' என்பதை பலர் இங்கே தெளிவாக விளக்கியுள்ளனர்.

ஆனாலும், டோண்டு இப்போது இதே திருமணத்தைக் காரணம் காட்டி, தங்களது இந்துத்வ-பார்ப்பன-மந்திரங்களுக்கு பெருமை தேட முடற்சிக்கிறார். இங்கே காண்க:

"ராஜன் திருமணம் பற்றிய விவாதம்"

http://dondu.blogspot.com/2010/10/blog-post_26.html

நான் நியாயத்தைப் பேசப்போனால் - என்னுடைய திருமணம் குறித்து கேள்வி கேட்கிறார்கள். எனது பதில் இங்கே:

"ஆம், எனது திருமணம் அய்யர், புரோகிதம், யாகம் எதுவும் இல்லாமல்தான் நடந்தது"

http://arulgreen.blogspot.com/

http://www.flickr.com/photos/53666090@N08/

பயணமும் எண்ணங்களும் said...

இதிலிருந்து ஒன்று திடமாய் தெரிகிறது..கடவுள் மறுப்பளனோ மதவாதியோ தனக்கு சாதகமாய் ஒரு கொள்கை அமையுமாயின் அதை பயன்படுத்தி கொள்ள தயங்க மாட்டார்கள்

------------------
நிதர்சனம்

Anonymous said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஒரு விஷயத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அதை எந்த கொம்பங்களுகாகவும் மாற்ற வேண்டாம். அவன்கள் ஆதிகவாதி அல்லது நாத்திகவாதியாக இருக்கட்டும்.

பிறகு, இந்த புரட்சிவியாதிகளை கண்டுகொள்ளாதீர்கள், அவர்களை, மன்னிக்கவும், அவன்களை மதித்து பதிலும் அளிக்காதீர்கள். ஆதலால் அந்த எழுத்து புணர்ச்சிவாதிகள் எதையாவது புணர்ந்து விட்டு போகட்டும். உதவி செய்ய முடிந்தால் செய்யவும் இல்லையென்றால் விட்டுவிடவும். நீங்கள் உங்கள் ஈகோவுகாக வலியச்சென்று புரட்சி செய்கிறேன் பேர்வழி என்று கோமாளித்தனங்கள் செய்யவேண்டாம். நக்கீரன், போலீஸ் போன்ற இதழ்களை போலதான் பாதி பேர் செய்தி கட்டுரைகள் எழுதிகிறான்கள்.

வானம் said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்.
இல்வாழ்க்கையா,கொள்கையா என்று வந்தபோது இராஜன் கொள்கையை தள்ளி வைத்திருக்கிறார்,அது அவரது தனிப்பட்ட முடிவு. அதனை அவரது பதிவில் விவாதிக்கலாம்.
அந்த முடிவுக்கு நீங்கள் முட்டுக்கொடுத்ததில் உங்கள் முகமூடி கழன்றுவிட்டது. இந்தத்தளத்தில் பலரையும் நீங்கள் மிகவும் அநாகரீகமான முறையில் விமர்சித்து வினை மற்றும் எதிவினையாற்றியபோது உங்களுக்கு சற்று அதீத கொள்கைப்பிடிப்பு என தவறாகக்கருதிவிட்டேன்.
உங்கள் நண்பரை உயர்த்துவதற்காக நீங்கள் எழுதிய வரிகள்..
//அவர் இயந்திரமல்ல..//
//நாங்கள் கொள்கை வெறி பிடித்த மிருகமல்ல..//
உங்கள் சப்பைக்கட்டுக்கு ஏன் இந்த வரிகள்?
உங்கள் சிந்தனைப்படி தன் தந்தையின் வேண்டுகோளின்படி மன்னிப்புக்கடிதம் கொடுக்காமல் தூக்குமேடையேறிய பகத்சிங் ஒரு வெறி பிடித்த மிருகம். அனைவரின் வேண்டுகோளையும் நிராகரித்து சொகுசான அமைச்சர் பதவியை விடுத்து பொலிவியாவுக்கு போரடச்சென்று உயிர்நீத்த சே குவேரா ஒரு வெறி பிடித்த மிருகம்.உங்கள் கண்ணோட்டம் சிறப்பாக இருக்கிறது.
நீங்கள் கேவலமாக விமர்சித்த பலபேர் தங்களின் பெற்றோருக்காகவோ அல்லது மனைவி,குழந்தைகளுக்காகவோ அந்தச்செயலை செய்திருக்கக்கூடும் என்ற நினைப்பு வந்ததேயில்லையா?

!

Blog Widget by LinkWithin