முஸ்கி: என் வாழ்வில் நடந்த இந்த அனுபவத்தை பகிரலாமா வேண்டாமா என பல நாட்கள் யோசித்திருக்கிறேன், இது போல் மற்றொரு முறை நடக்க வாய்ப்பேயில்லை அதே போல் மற்றவர்களுக்கு நடக்குமா என்பதும் சந்தேகமே!. படிச்சிட்டு வெளியே யார்கிட்டயும் சொல்லிறாதிங்க ப்ளீஸ்!
******
எங்களது அலுவலகத்திற்கு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள், தமிழ்நாடு தவிர்த்து உள்ளவர்கள், வங்கி மூலமாக கணக்கு தொடர்பும், தமிழ்நாட்டில் உள்ளவர்களை நேரில் பார்த்தும் பேசிக்கொள்வேம்! ஒரு வெள்ளி இரவு மதுரையில் நடக்க இருக்கும் வாடிக்கையாளர் சந்திப்பிற்கு செல்ல ஆயத்தமாகி, நிலையம் சென்று பேருந்தில் அமர்ந்தேன், மணி ஒன்றுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன், எனக்கு கடிகாரம் கட்டும் பழக்கம் இல்லாததாலும், அந்த நேரம் அலைபேசியை எடுத்து மணி பார்க்க சலிப்பாக இருந்ததாலும் சரியாக தெரியவில்லை, ஆச்சர்யமாக அன்று கூட்டமே இல்லை. என்னையும் சேர்ந்து மொத்தமே பேருந்தில் 8 பேர் தான் அமர்ந்திருந்தோம், நான் முன்வாசலுக்கு சற்றே பின்னே மூன்று பேர் அமரும் சீட்டில் சன்னல் ஓர இடத்தில் அமர்ந்திருந்தேன்!, இரவு பயணம் என்பதால் தூங்குவதற்கு வசதியாக, இருபது நிமிட காத்திருப்புக்கு பின் ஓட்டுனர் வண்டியை எடுக்க, நடத்துனர் தோள்பையை குலுக்க எனது மதுரை பயணம் இனிதே ஆரம்பித்தது!
அன்னைக்குன்னு பார்த்து எனக்கு பயங்கர அசதியா இருந்தது, சன்னலில் தலை சாய்ந்து லேசாக கண்ணயர்ந்தேன், பேருந்து என்னை குலுக்கி குலுக்கி தாலாட்டுப் பாடி கொண்டிருந்தது, தீடிரென்று தாலாட்டு நின்று விட்ட உணர்வு, வழியில் எங்கேயோ நிற்கிறோம், ஆனால் கிளம்பி வெகுநேரமும் ஆகவில்லை.. வாசல் பக்கம் அப்படியே நோட்டம் விட்டேன், இருபது வயது மதிக்கதக்க சுடிதார் அணிந்த ஒரு பெண் ஏறினாள், மங்கலான ஒளியில் அது வெளீர்நிற சுடிதார் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது, துப்பட்டாவை தலையோடு மூடியிருந்தாள், ஏறியவள் சுற்றும் முற்றும் பார்த்து நேராக என்னை நோக்கி வந்தாள், என்னை கடந்து செல்லப்போகும் அவளை தொடர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என சின்ன மனப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது, அதற்கு வேலையே இல்லாமல் அவள் நான் இருந்த இருக்கைக்கு முன் வந்து நின்றாள்.
இங்க உட்கார்ந்துக்கலாமா!...
உண்மையில் அவள் என்னுடம் தான் பேசிகிறாளா என சந்தேகம் எனக்கு, சுற்றும் முற்றும் பார்த்த போது தான் கவனித்தேன், மீதி இருந்தவர்கள் சீட்டில் கால் நீட்டி படுத்திருந்தார்கள், ஒரு தலையும் தெரியவில்லை, ஒருவேளை தனிமை விரும்பாமல் கேட்கிறாளோ இல்லை கதைகளில் வருமே மோகினிப்பேய், கன்னி!?ஆண்களை ஆசை காட்டி மயக்கி கொண்டு போய் என்னன்னமோ செய்யுமாம். குமார்மாமா, அது உண்மை எனவும் ஒருமுறை சைக்கிளில் ஒரு பெண்ணுக்கு லிஃப்ட் கொடுத்து மயிரிழையில் உயிர்தப்பியதாகவும் சொல்வார்!. சைக்கிள், மோகினி,லிஃப்ட் தவிர அவர் சொல்லும் பொழுது திரைக்கதை அடிக்கடி மாறும், பயத்தில் உளருகிராரோ என நினைத்து கொள்வேன்!
அவள் இன்னும் என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாள்.
ம்ம்!.... உட்காருங்க... என்றேன்.
அவளிடம் எந்த உபகரணமும் இல்லை, பெண்கள் சின்ன தோள்பை வைத்து கொள்வார்களே அது கூட இல்லை, ஒருவேளை முன்போகும் பஸ்ஸில் அதை தொலைத்திருப்பாளோ என யோசித்து கொண்டிருந்தேன்.
நீங்க மதுரைக்கா போறிங்க..... என்றாள்.
ஆமாங்க,.. நீங்க? உரையாடல் நாகரிகத்திற்காக கேட்டு வைத்தேன்.
அங்க போயிட்டு அப்புறம் ஊருக்கு போகனும்... என்றாள்.
ஓஓஓ.. என அமைதியானேன். நானே பேச்சை தொடர சங்கட்டமாய் இருந்தது. ப்ளீஸ் நம்புங்க எனக்கு அவ்வளவா பொண்ணுங்க கிட்ட பேசி பழக்கமில்ல, உங்களுக்கே தெரியும் எனக்கு ரெண்டு தம்பிங்க மட்டும் தான். படிச்சது கூட பசங்க மட்டும் படிக்கிற பள்ளின்னு! தீடிர்னு ஒரு பொண்ணு பக்கத்துல உட்கார்ந்து பேசினால் நான் எப்படி பேசுறது, விசாரனை கைதி மாதிரி தொண்டை வறண்டு கொண்டிருந்தது, ஒரு உண்மைய சொல்லட்டுமா, அவ இன்னும் பேசமாட்டாளான்னு எனக்குள் ஒரு ஆர்வம் இருந்தது!
என்பக்கமாய் திரும்பி, என் கண்ணை பார்த்து கேட்டாள்!
ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா!?
தொடரும்!.........................................
81 வாங்கிகட்டி கொண்டது:
சரி யார்கிட்டேயும் சொல்லல!
சாயங்காலம் வாங்கித் தர்ற டீக்காக.
என்னைய சஸ்பென்ஸ் சட்டுபுட்டுன்னு சொல்லு
கண்ணாடி போட்டுக்கிட்டுத்தானே போனீங்க!
||சுற்றும் முற்றும் பார்த்து நேராக என்னை நோக்கி வந்தாள்||
பார்த்தவுடனே தெரிஞ்சுருச்சா!
இதை நம்பனுமா நாங்க?
||அவ்வளவா பொண்ணுங்க கிட்ட பேசி பழக்கமில்ல||
அப்படியே சாரு மாதிரியே!
||விசாரனை கைதி மாதிரி தொண்டை வறண்டு கொண்டிருந்தது,||
ஓ... விசாரனைக் கைதியா வேற இருந்தீங்களா!
சொல்ல்ல்ல்ல்ல்லவேயில்ல்ல்ல்ல
||இது போல் மற்றொரு முறை நடக்க வாய்ப்பேயில்லை||
அதெப்படி ஒரு தடவை நடந்தது அப்படியே இன்னொரு முறை நடக்கும்
சினிமாவா ரீபிளே பண்ண!!??
//ஓ... விசாரனைக் கைதியா வேற இருந்தீங்களா!//
அப்ப நானா தான் உளரிட்டேனா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//ஓ... விசாரனைக் கைதியா வேற இருந்தீங்களா!//
கதிர் full form ல இருக்க மாதிரி தெரியுது. நடத்துங்க. நடத்துங்க.
வாலுக்கு ஆப்பு வேற எங்கயும் இல்ல, அதே பில்டிங்க்லதான் ;-)
||பகிரலாமா வேண்டாமா என பல நாட்கள் யோசித்திருக்கிறேன்||
பகிரலாமான்னு யோசிச்சிருக்க மாட்டீங்க... இத எப்படி இடுகையா தேத்துறதுன்னுதான் ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்க!
//இத எப்படி இடுகையா தேத்துறதுன்னுதான் ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்க! //
இங்க ரூம் போட்டது அதுக்குதானா? சொல்லவே இல்லை?
\\ஓட்டுனர் வண்டியை எடுக்க\\
\\நடத்துனர் தோள்பையை குலுக்க\\
அட...
என்னாஆஆஆஆ ரைமிங்கு
நோட் பண்ணுங்கப்பா!
நோட் பண்ணுங்கப்பா!!
||எனக்கு கடிகாரம் கட்டும் பழக்கம் இல்லாததாலும்||
கடிகாரம் எங்கே தொலைச்சிங்கன்னு ஒரு இடுகை போடுங்க!
||மதுரையில் நடக்க இருக்கும் வாடிக்கையாளர் சந்திப்பிற்கு செல்ல ||
பாஸ், கார்த்தி பாஸ்..
பயபுள்ள எல்லா ஊருக்கும் ஒழுங்கா போய்ச் சேர்ந்துதான்னு ஒரு விசாரனைக் கமிசன் வைங்க!
||என்னையும் சேர்ந்து மொத்தமே பேருந்தில் 8 பேர் தான் அமர்ந்திருந்தோம்||
நீங்க வர்றீங்கன்னாவே ஒரு பயம் இருக்கும்ல!
அதனாலதான் வரல போல!
||பேருந்து என்னை குலுக்கி குலுக்கி தாலாட்டுப் பாடி கொண்டிருந்தது,||
ரொம்ப லொங்கடா பஸ்ஸோ.
இம்புட்டு பெரிய உருவத்த தூக்கி
அப்ப்ப்ப்புறம் குலுக்கி குலுக்கி தாலாட்டறதுன்னா!!!!
||நான் முன்வாசலுக்கு சற்றே பின்னே மூன்று பேர் அமரும் சீட்டில் சன்னல் ஓர இடத்தில் அமர்ந்திருந்தேன்||
ங்கொய்யாலே
பகுத்தறிவு அது இதுன்னு பேசிப்புட்டு
வாஸ்து பார்த்து உட்கார்ரத பாரேன்!
//வாசல் பக்கம் அப்படியே நோட்டம் விட்டேன், இருபது வயது மதிக்கதக்க சுடிதார் அணிந்த ஒரு பெண் ஏறினாள், மங்கலான ஒளியில் அது வெளீர்நிற சுடிதார் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது, துப்பட்டாவை தலையோடு மூடியிருந்தாள், ஏறியவள் சுற்றும் முற்றும் பார்த்து நேராக என்னை நோக்கி வந்தாள், என்னை கடந்து செல்லப்போகும் அவளை தொடர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என சின்ன மனப்போராட்டம் //
அப்புறம் ஏன் இந்த சீன்
பேச்சை தொடர சங்கட்டமாய் இருந்தது. ப்ளீஸ் நம்புங்க எனக்கு அவ்வளவா பொண்ணுங்க கிட்ட பேசி பழக்கமில்ல, உங்களுக்கே தெரியும் எனக்கு ரெண்டு தம்பிங்க மட்டும் தான். படிச்சது கூட பசங்க மட்டும் படிக்கிற பள்ளின்னு! தீடிர்னு ஒரு பொண்ணு பக்கத்துல உட்கார்ந்து பேசினால் நான் எப்படி பேசுறது//
||அவள் நான் இருந்த இருக்கைக்கு முன் வந்து நின்றாள்.||
ஹேய்ய்ய்ய்ய்...
பார்த்தீங்களா,
வாஸ்து வொர்க்கவுட் ஆயிடுச்சுல்ல!!!!
||ஒரு தலையும் தெரியவில்லை||
பின்ன வாலு மட்டும் தெரிஞ்சுதோ!
//ஒரு உண்மைய சொல்லட்டுமா, அவ இன்னும் பேசமாட்டாளான்னு எனக்குள் ஒரு ஆர்வம் இருந்தது!//
சொன்னதிலேயே இதான் உண்மை
மொத்தம் எத்தன பாகம் வரும்னு தெரிஞ்சா... தொடர்ந்து படிக்கறதா வேணாமான்னு டிசைட் பண்ணலாம்...
//பகுத்தறிவு அது இதுன்னு பேசிப்புட்டு
வாஸ்து பார்த்து உட்கார்ரத பாரேன்! //
அது செண்டர் சீட் தல, ரொம்ப குலுங்காதுன்னு உட்கார்ந்தேன்!
||கதைகளில் வருமே மோகினிப்பேய், கன்னி!?||
என்ன தல..
நீங்க போய் இதெல்லாம் நம்பலாமா!
ஏம்பா யாராவது வந்து பேய், பிசாசை நம்பிய வால்பையனின் மூடத்தன டவுசரை கிழியுங்களேன்!
கதிர் அண்ணனையே கும்மி அடிக்க வைத்த "வால்" வாழ்க
//அந்த நேரம் அலைபேசியை எடுத்து மணி பார்க்க சலிப்பாக இருந்ததாலும்//
இதுக்கு மட்டும் சலிப்பாம்
அப்புறம் பேசவாஙளான்னு எதிர்ப்பார்த்தாராம்...வேணாம் அருண் இதெல்லாம் சரியில்லை
// ஒரு தலையும் தெரியவில்லை, ஒருவேளை தனிமை விரும்பாமல் கேட்கிறாளோ இல்லை கதைகளில் வருமே மோகினிப்பேய், கன்னி!?ஆண்களை ஆசை காட்டி மயக்கி கொண்டு போய் என்னன்னமோ செய்யுமாம். குமார்மாமா,//
பேய்க்கு பிசாசை ரொம்ப பிடிக்குமாம். அதனால இருக்குமோ?
//என்பக்கமாய் திரும்பி, என் கண்ணை பார்த்து கேட்டாள்!
ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா!?//
நீங்க வேற சீட்ல போய் உக்காருங்க அப்டின்னுதான சொன்னா?
//பேருந்து என்னை குலுக்கி குலுக்கி தாலாட்டுப் பாடி கொண்டிருந்தது/
என்ன பாட்டுன்னு தெரியுமா?
//என்பக்கமாய் திரும்பி, என் கண்ணை பார்த்து கேட்டாள்!
ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா!?//
பர்ஸ் தொலைஞ்சி போச்சு. எனக்கு ஒரு டிக்கெட் எடுக்குறீங்களா சித்தப்பா(இப்படிதான கேட்டா?)
||ப்ளீஸ் நம்புங்க ||
இதுக்கு ஒரு பின்னூட்டம் போட நினைத்தேன்.
வால் கொலை முயற்சி விடுத்தலாம்.. பின்-வாங்கிட்டேன்
போச்சுடா. திரும்ப சூப்பர் ஐயர் வந்து பகவான் கூலி குடுத்துட்டார்னு அலப்பறை பண்ணப்போறார்:))
||படிச்சது கூட பசங்க மட்டும் படிக்கிற பள்ளின்னு||
நல்ல வேளை நெறைய பச்சப் புள்ளைக தப்பிச்சுதுக
// ஈரோடு கதிர் said...
||கதைகளில் வருமே மோகினிப்பேய், கன்னி!?||
என்ன தல..
நீங்க போய் இதெல்லாம் நம்பலாமா!
ஏம்பா யாராவது வந்து பேய், பிசாசை நம்பிய வால்பையனின் மூடத்தன டவுசரை கிழியுங்களேன்!///
அவர் பேன்ட் தான் போட்டிருக்கார். அதனால அவர என்ன பண்றது?
||என்பக்கமாய் திரும்பி, என் கண்ணை பார்த்து கேட்டாள்!||
மூனு விரல் நீட்டி
இது எத்தனைன்னு தானே கேட்டுச்சு!
//"பயப்படுதல் அல்லது பயங்காட்டுதல்!...."//
அந்த பொண்ணு உங்களை Close-up ல பாத்துடுச்சா?
||ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா!?||
அடச்சே
அந்தப் பொண்ணு முந்திக்கிச்சா!
வால், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
//உண்மையில் அவள் என்னுடம் தான் பேசிகிறாளா என சந்தேகம் எனக்கு,//
கட்டிங் அடிச்சா அப்படித்தான் தோணும்...
@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
முதல்ல பேண்ட்-அ முழங்கால் வரைக்கும் கிழிச்சு டவுசராக்கி அப்புறம் கிழிச்சுக்கட்டும்
விடுங்க பாஸ்
அது கிழிக்கிறவங்க வேலை
//ஈரோடு கதிர் said...
@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
முதல்ல பேண்ட்-அ முழங்கால் வரைக்கும் கிழிச்சு டவுசராக்கி அப்புறம் கிழிச்சுக்கட்டும்
விடுங்க பாஸ்
அது கிழிக்கிறவங்க வேலை///
இது நல்ல ஐடியா. இருங்க கிழிச்சிட்டு வரேன்
||எறும்பு said...
கதிர் அண்ணனையே கும்மி அடிக்க வைத்த "வால்" வாழ்க||
@@ எறும்பு
இன்னிக்கு வால் பல இடங்களில் நடத்திய போராட்டங்களுக்கான என்னுடைய அன்பளிப்புதான் இந்த கும்மி!
வா’ல்’க வால் பகுத்தறிவு போராட்டம்
ஆஹா தல, பேயெல்லாம் கூட மடக்கி இருக்கீங்களா?
ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா!?
//
ஓ பண்ணலாமே... என்னன்னு சொன்னா பண்ணிடலாம்...
///என்பக்கமாய் திரும்பி, என் கண்ணை பார்த்து கேட்டாள்!
ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா!?////
பண்ணிடுவோம் பண்ணிடுவோம்....!
தொடரும் போட்டதால அடுத்த பதிவுக்குத்தேன் வோட்டு...
தல , அன்னைக்கு தலைக்கு டை அடிச்சு இருந்திங்களா ??? ஏன்னா அத வச்சு எனக்கு நிறைய டவுட்டு இருக்கு அதான் கேட்டேன்
கும்மி said...
இதை நம்பனுமா நாங்க?////
அட விடுங்க கும்மி , ஏதோ அவரு மனசு கொஞ்சம் சந்தோசப் பட்டுட்டு போகட்டுமே , நம்புறது மாதிரி நடிச்சாவது வையுங்க
கும்மி said...
//ஓ... விசாரனைக் கைதியா வேற இருந்தீங்களா!//
கதிர் full form ல இருக்க மாதிரி தெரியுது. நடத்துங்க. நடத்துங்க.
வாலுக்கு ஆப்பு வேற எங்கயும் இல்ல, அதே பில்டிங்க்லதான் ;-)////
இதுக்கு பேரு தான் சொந்தத்திலே சூனியம் வச்சுகிர்ரதுன்னு சொல்லுவாங்களே அது இதுதானோ .
தல அந்த பொண்ணுக்கு கால் இருந்ததான்னு பாத்தியா ????
இந்த மாதிரி நேரத்துல கால் இருக்கான்னு பாத்து கன்பார்ம் பண்ணிக்கிரனும் .. அப்புறம்தான் பேச்சு குடுக்கணும், அதான் நமக்கு சேப்ட்டி
come on sagaa..
தொடருங்க தொடருங்க ..
அப்புறம் மணி பார்க்க பிடிக்கலாமா ஆனா அந்த பொண்ணு போட்டிருந்த சுடிதார் மட்டும் வெளிர்நிற சுடிதாராம்ல ...!ஆனா இவருக்கு பொண்ணுங்க அப்படின்னா அலர்ஜியாமா ..? சரி நம்பிக்கிறேன் அண்ணா ..!!
என்பக்கமாய் திரும்பி, என் கண்ணை பார்த்து கேட்டாள்!
....கண்ணையா கேட்டாள்? ஹா,ஹா,ஹா,ஹா...
ஏங்க....நல்லா சுவாரஷ்யமா போயிட்டு இருக்கையில...இப்படி தொடரும்ன்னு போட்டுட்டீங்களே....இது உங்களுக்கே நியாயமா? அட...சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்கப்பா...
அந்த பொண்ணு என்ன சொல்லுச்சுன்னு தெரிஞ்சுக்கத்தான்...ஹி...ஹி....
இது என்ன தொடர்தையா..
அப்ப நான் வரல்ல..
அன்பின் வாலு /r
கத சஸ்பென்ஸ் ஓக்கே - ஒடனே தொடரவேண்டியது தானே ! ஆமா கதிர் என்ன இவ்வளவு கும்மி அடிக்கிறாரு - ஏதேனும் ஒப்பந்தமா ????? ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகல் வாலு - நட்புடன் சீனா
என்னை கடந்து செல்லப்போகும் அவளை தொடர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என சின்ன மனப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது,
நம்பிட்டேன் பா
ஊம்.. அப்புறம்.. கால் வலிச்சிருக்குமே...
யோவ் தல வாலு, நான் சொன்ன கதையை அப்படியே எழுதுவதாக எண்ணமா?
நடக்கட்டும்...நடக்கட்டும்...
ஆனா..நானும் எழுதுவேனே...
//என்பக்கமாய் திரும்பி, என் கண்ணை பார்த்து கேட்டாள்!
ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா!?//
என்ன பஸ் டிக்கெட் எடுக்கச்சொல்லி கேட்டங்களா?
ஒருமுறை சைக்கிளில் ஒரு பெண்ணுக்கு லிஃப்ட் கொடுத்து மயிரிழையில் உயிர்தப்பியதாகவும் சொல்வார்!//
இந்த கதை எல்லா ஊருக்கும் பொதுவானதோ?! எனது சின்ன வயதில், கேள்விப்பட்ட கதைகளில் இதுவும் ஒன்று.
என்னங்க பாஸ் சீரியல் அதிகமா பாப்பிங்களோ இப்படி தொடரும்னு போட்டுட்டிங்க
விளங்காத ஆளையா நீரு சட்டுபுட்டுனு கதைய சொல்லுவிரா அது என்ன தொடரும்?
thaththa vayasula irukkaravar pakkaththil utkarana antha ponnukku enna thayakkam?
அங்கிள், தாத்தா வயசுல இருக்கற உங்க பக்கத்தில் உட்கார அந்த பொண்ணுக்கு என்ன தயக்கம்? சரி உங்களுக்கு நடுக்கம் வர வயசுதானே இது? கூல் அங்கிள்.
நீங்க தொடரும் போட்டிருக்கீங்க, ஆனா இன்னிக்கு நிறைய பேரு ஒரு முடிவோட தான் இருக்காங்க போல !! :)
டக்குனு மேட்டருக்கு வராம சஸ்பென்ஸ் என்ன வேண்டி கிடக்கு?அந்த பொண்ணு ஒரு மேட்டரா?
அந்த டிக்கெட்டுக்கு நீங்க டிக்கெட் எடுத்தீங்களாக்கும்?
எங்க எல்லோர் கமெண்டையும் கதிர் போட்டுட்டார். சரி அப்புறம் என்னாச்சு?
அவளா? அதுவா?
\\ப்ளீஸ் நம்புங்க எனக்கு அவ்வளவா பொண்ணுங்க கிட்ட பேசி பழக்கமில்ல //
நம்ம ஒரே நல்ல பயக்கம் வவுறு முட்ட வேலிமுட்டிய குடிச்சிட்டு ரோட்டோரம் மலச்சாக்கடையில் நெளிஞ்சிகினு பகுத்தறிவு வாந்தி எடுக்கிறது தான்..சத்தியமாங்க.
இப்பிடி சீக்கிரமே தொடரும் போட்டா எப்பிடி?
பின்னூட்டங்கள் ரசிக்கும்படி இருக்கு. எல்லாரும் ஒரு ஃபார்ம்லதான் இருக்காங்க போல!!
நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு அந்த பொண்ணு தப்பா நெனச்சிடுச்சு போல..
இதன் முடிவு சுவாரசியமா இருக்குமா இல்ல சப்புன்னு முடிச்சிருவிங்களா?
இந்த பதிவு வாலோடதா.. இல்ல கதிரோடதா? ஒரே confusion....;)
தொழில்நுட்ப பதிவில் முன்னிலை வகிக்கும் சசியின் வலைப்பக்கம் புறக்கணிக்கப்படுகிறது ,,சுதந்திர இலவச தளம் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தானா ,,, நடுநிலையாளர் என்றால் ஏன் சசியின் வலைப்பக்கம் அதில் வரவில்லை ..நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்
நண்பர்களே இதை பற்றி ஒவ்வொருவரும் பதிவாக போட்டு அவருக்கு நம் அஆதரவை தெரிவிக்கலாம் .
ரெண்டாவது பாகத்துல எதாவது மொக்கையா எழுதி எல்லாருக்கும் தொப்பி கொடுப்பீங்க தானே...
முக்கிய குறிப்பு:
http://ravidreams.net/forum/topic.php?id=104&replies=4#post-549
forward the above link to all of your contacts.
அப்பறம் என்ன ஆச்சி?
என்ன கதை அவ்வளவு தானா
மீதி கதை எங்க... சீக்கிரம் சொல்லுங்க.....
Post a Comment