கமாக்கதைகள்(இடம் மாறிய கால்) 4(69)

எச்சரிக்கை: கதையில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சில வார்த்தைகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்! பிடிக்காத பட்சத்தில் முதல் பேராவிலேயே விலகி செல்க!

******



இல்ல, நீ என்னை ஏமாத்திட்ட, உன்னை போல் ஒரு தேவிடியா கூட குடும்பம் நடத்தியதுக்காக நான் வெட்க்கப்படுறேன் என்று கத்தி கொண்டிருந்தான் பவிழன், எப்படியும் சண்டை ஆரம்பித்து வெகு நேரம் ஆகியிருக்கும் போல, அழுது அழுது வீங்கிய கண்களுடன் நான்கு போல் வளைந்து கட்டிலில் படுத்திருந்தாள் வசந்தி!, இன்னும் விசும்பல் சத்தம் அவளிடம் இருந்து வந்து கொண்டிருந்தது, சூனியத்தை வெறித்த பார்வையுடன் படுத்திருந்தாள், பவிழன் எச்சில் சாரல் தெரிக்க இன்னும் கத்தி கொண்டு தான் இருந்தான்!

சிங்கப்பூரில் ஒரு கஸ்டமருக்கு, வசந்தி வேலை செய்த நிறுவனம் செய்து கொடுத்த மென்பொருள் மொத்தமாக செயலிழக்க, அதை சரி செய்யும் பொருட்டு வசந்தி அங்கே செல்ல வேண்டியிருந்தது, வேலை அதிகம் இழுத்ததால் திரும்பி வர மூன்று நாள் ஆகிவிட்டது! வந்த இரவே நடக்கும் சண்டை தான் இது!, வசந்தியை சிங்கப்பூரில் பவிழனின் நண்பன் பார்த்திருக்கான், எதேட்சையாக அவன் பவிழனுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டான்! இதில் பவிழனுக்கு கோவம் என்னவென்றால் வசந்தியுடன் அவளது பாஸும் இருந்தது தான்!

வசந்தியின் முதலாளி கோவர்த்தனை பவிழனுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆகாது!, அவனை பற்றி வசந்தி பேசும் பொழுதெல்லாம் எரிந்து விழுந்து கொண்டே தான் இருப்பான்!, இப்பொழுது அவனுடன் தனியாக மூன்று நாட்கள் சிங்கப்பூரில் இருந்து விட்டு வந்திருக்கிறாள், போகும் போது கூட சொல்லவில்லை கோவர்த்தனும் உடன் வருகிறான் என்று! கேட்டால் தீடிரென்று உடன் வரும் பெண் வரமுடியாமல் போய் விட்டதால் கோவர்த்தன் வர வேண்டியதாயிற்று என்று கதை விடுகிறாள்!

வார்த்தைக்கு வார்த்தை தேவிடியா தேவிடியா என்று திட்டி கொண்டே இருந்தான் பவிழன்,ஏண்டி இப்படி கொழுப்பெடுத்து அழையுற, உனகெல்லாம் எதுக்கு புருஷன், அப்படியே ஊர்மேயப்போக வேண்டியது தானே!, சிரிச்சி சிரிச்சு கம்பெனியில் எவனையும் விட்டு வச்சிருக்க மாட்ட! ஓவர்டைம்னு சொல்றதெல்லாம் எவன் கூட போய் படுக்குறதுக்கோ, அதுனால தான் வீட்ல நீ பொண்டாட்டியாவே நடந்துகிறதில்ல என்று கத்தி கொண்டே இருந்தான்!.

ஒரு புருஷனா உனக்கு என்னாடி குறை வச்சேன் என்றதும் வசந்தி சட்டென்று எழுந்தாள், கலைந்திருந்த தலைமுடியை அள்ளி முடித்து!

புருசனா, அதை சொல்ல உனக்கு வெட்கமாயில்ல, நைட்டு வீட்டை பாத்துகிறவன் தான் புருஷன்னா அதுக்கு வாட்ச்மேனே போதுமே!, நீ மட்டுமா சம்பாதிக்கிற , நானும் தான் சம்பாதிக்கிறேன்!, உடம்பு சுகத்துக்கு அடிமையாகி பொம்பளை ஊர்மேய போயுறவான்னு நினைச்சியா!, வெளியே போரவ மட்டும் தேவிடியா இல்ல, நேரம், காலம் பார்க்காமல் உனக்காக கூப்பிட்ட நேரமெல்லாம் படுத்து, உணர்ச்சிகளை மழுங்கடித்து, சரி புருஷன் சந்தோசமா இருந்தா போதும்னு நினைக்கிறோம் பாரு, நாங்க தேவிடியா தான்!

அஞ்சு அறிவு இருக்குற மிருகத்துக்குக்கூட காதல் இருக்கு, நீ என்னைக்காவது என்னை காதலோடு தொட்டிருக்கியா! உனக்கு என் உடம்பு தான் வேணும், என் மனசை பத்தி கவலையேயில்லை!, காதலை வெளிப்படுத்த இந்த உலகில் செக்ஸை விட சிறந்த ஒன்னு இருக்காது, ஆனா வெறும் உடம்பு உரசலா நீ செக்ஸை கொச்சை படுத்தின, அப்பல்லாம் சும்மா இருந்தேன் பாரு, நான் தேவிடியா தான்!, நீ முக்கி முக்கி மூச்சிறைக்க பண்றதை கையடக்க வைப்ரேட்டர் பண்ணிட்டு போயிரும்! அப்புறம் எதுக்கு புருஷன்னு நீ!, ஆனாலும் உனக்காக கூப்பிட்ட நேரமெல்லாம் வந்து படுத்தேன் பார்த்தியா நன் தேவிடியா தான்!

ஒரு பொண்ணு தப்பு பண்றதுக்காக சிங்கப்பூர் வரை போக வேண்டியதில்லை, அவ நினைச்சா உன்னை பக்கத்துல தூங்க வச்சிகிட்டே தப்பு பண்ணலாம்! ஆனாலும் காதலுக்குன்னு ஒரு மரியாதை கொடுத்து இருக்கோம் பாரு, நாங்க தேவிடியா தான்!, புருஷன் முழுசா சுகம் கொடுத்தா தான் அவன் கூட வாழ முடியும்னா இன்னைக்கு எவளும் அவ புருஷன் கூட வாழ மாட்டா! அவ எதிர் பாக்குறது உன் உடம்பை இல்ல, உன் மனசை! காதலை, முழு அன்பை ஆனா உங்களுக்கு எதுவும் தேவையில்ல, இந்த சதையும் தோலும் போதும்!, அதுக்கு எதுக்கு எங்களுக்கு உயிரு! செத்த பிணம் போல் வாழ்றதுக்கு நிஜமாவே செத்து போகலாமே!

ராமாயண காலத்திலிருந்து பெண்களை சந்தேகப்பட்டுகிட்டு தானே இருக்கிங்க!, நீங்க ஒருத்தி கூட படுத்து எழுந்து வந்தாலும் உங்க பேரு அதே ஆம்பளை தான், ஆனா ஒரு பொம்பளை ஒருத்தனை பார்த்து லேசா சிரிச்சிட்டாலே அவ தேவிடியா! இதுவரைக்கும் நான் உனக்கு பொண்டாட்டியா இருந்தேன்னு நினைச்சியா.... இல்ல! நீ சொன்ன மாதிரி தேவிடியாவா தான் இருந்தேன்!, காசுக்கு பதிலா புருஷன்ற பேர்ல கமீட்மெண்ட், இனிமெ எனக்கு அது தேவையில்ல! இந்த நிமிசத்துலருந்து நீ யாரோ நான் யாரோ! குட்பை!

சொல்லிவிட்டு வாசலை நோக்கி வேகமாக நடந்தாள் வசந்தி!


*****

டிஸ்கி: இது நிச்சயமாக புனைவு தான்! ஆனால் நாட்டில் இருக்கும் முக்கால்வாசி ஆண்களை குறிக்கும் என்பதால்! யாரையும் பஞ்சாயத்துக்கு கூட்டிகிட்டு வரமுடியாதே!

60 வாங்கிகட்டி கொண்டது:

sakthi said...

வால்:::)))

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்ஸ்!

புனைவின் நீதி என்னவோ?

பின்னோக்கி said...

எதாவது பாலசந்தர் படம் பார்த்தீர்களா ?

நசரேயன் said...

சரி .. சரி

அ.முத்து பிரகாஷ் said...

ம்ம் ... உண்மை தான் ... ஆனால் சுடவில்லை ..

தமிழ் பொண்ணு said...

கதையின் கருத்துக்கள் அருமை.இது போன்ற ஆண்களிடம் வாழ்வதும் ஒன்றுதான் வீட்டை விட்டு போவதும் ஒன்று தான்.ஆனால் கதைக்கு வேண்டுமானாலும் இந்த முடிவு சரியாக படலாம் ஆனால் நிஜத்தில் பெண்கள் அனைத்தையும் சகித்து கொண்டு தான் வாழ்கின்றனர்.

வாழ்வை தியாகம் செய்யவேண்டியது தான்.ஆனால் இது போன்ற ஆண்களுக்கு அல்ல.

JaY Reborn @ Jaes said...

மிக அருமை குருவே . . .
சரியான பாடம் !!!
ஆனால் அநியாயமா ரெண்டு பேரையும் பிரிச்சிட்டீங்களே !!!
சின்னதா பஞ்சாயத்து பண்ணியிருக்கலாம்.....
சேர்த்து வைக்கிற வழிய பாருங்க....!

vinthaimanithan said...

//காதலை வெளிப்படுத்த இந்த உலகில் செக்ஸை விட சிறந்த ஒன்னு இருக்காது//

//நீ முக்கி முக்கி மூச்சிறைக்க பண்றதை கையடக்க வைப்ரேட்டர் பண்ணிட்டு போயிரும்!//

நச் வரிகள் தல! ஆங்காங்கே மின்னல் பளிச்சிடுகின்றது.... கொஞ்ச நாள் ஊறப்போட்டு எழுதியிருந்தா டாப்பா வந்திருக்கும் இன்னும்கூட.....

இப்போ என்னமோ பாடம் நடத்துறா மாதிரி ஒரு ஃபீலிங்.

வால்பையன் said...

//சின்னதா பஞ்சாயத்து பண்ணியிருக்கலாம்.....//


ங்கொய்யால, என் கையிலேயே சொம்பா!

தமிழ் பொண்ணு said...

சும்மா பாலோவப்க்காக..

கொல்லான் said...

//எதேட்சையாக அவன் பவிழனுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டான்!//
என்ன பொழப்பு இது வால்?

மந்திரன் said...

//ஆனால் நாட்டில் இருக்கும் முக்கால்வாசி ஆண்களை குறிக்கும்//
மீதி கால் வாசி ஆண்கள் பேச்சுலர்ஸ் .. அதானே

வால்பையன் said...

//ஆனால் நாட்டில் இருக்கும் முக்கால்வாசி ஆண்களை குறிக்கும்//
மீதி கால் வாசி ஆண்கள் பேச்சுலர்ஸ் .. அதானே //

எவனும் இங்கே பேச்சுலர் கிடையாது!
அவனவன் தன் கையே தனக்குதவின்னு வாழ்ந்து கிட்டு இருக்கான்!

அந்த கால்வாசி, உண்மையான லவ்வர்ஸ், காதலை வெளிப்படுத்த செக்ஸை பயன்படுத்துபவர்கள்!

seethag said...

வால் ரொம்பவும் மகிழ்ச்சி.இப்படி கடை ezuthiyatharkku .தமிழில் orgasm ஒரு வார்த்தை இல்லாதபோது வீறு என்னத்தை சொல்ல.Surya Ki Antim Kiran Se Surya Ki Pehli Kiran Tak (Hindi). Surendra Verma.translation of this story in tamil ,published by cre-A is wonderful.

cheena (சீனா) said...

அன்பின் வால்

நான் இதெல்லாம் படிக்கல = சும்மா எழுதுனது வாலாச்சேன்னு வந்தேன் - அவ்ளோ தான் - கத எழுதறதுலேயும் தெறம பளீச்சிடுது வாலு - நல்லார்ருப்பா
நட்புடன் சீனா

எல் கே said...

வாலு, உன் பதிவுல எனக்கு ரொம்பப் பிடிச்சப் பதிவு இதுதான்

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

தல புனைவு நல்ல இருந்தது...!

Anonymous said...

எல்லாப் பெண்களால் தைரியமாக கேட்க முடியாததை கதையில் படித்ததே அப்படி பட்ட ஒரு ஆணை பழிவாங்கிய திருப்தி இதை படித்தவுடன்...

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//
அஞ்சு அறிவு இருக்குற மிருகத்துக்குக்கூட காதல் இருக்கு, நீ என்னைக்காவது என்னை காதலோடு தொட்டிருக்கியா! உனக்கு என் உடம்பு தான் வேணும், என் மனசை பத்தி கவலையேயில்லை!, காதலை வெளிப்படுத்த இந்த உலகில் செக்ஸை விட சிறந்த ஒன்னு இருக்காது, ஆனா வெறும் உடம்பு உரசலா நீ செக்ஸை கொச்சை படுத்தின, அப்பல்லாம் சும்மா இருந்தேன் பாரு, நான் தேவிடியா தான்!, //

இப்படி கேட்க முடியாமல் எத்தனை வசந்திகளோ வெறும் வதந்திகளில் சிக்கிக் கொண்டு வாழ்க்கையை தொலைத்து..வசந்தி எடுத்த முடிவு எல்லாரும் எடுக்க தயங்குவது சமூகத்துக்கு பயந்தா இல்லை குழந்தைகள் என்ற பந்தத்துக்கு கட்டுப்பட்டா?

Anonymous said...

//இல்ல, நீ என்னை ஏமாத்திட்ட, உன்னை போல் ஒரு தேவிடியா கூட குடும்பம் நடத்தியதுக்காக நான் வெட்க்கப்படுறேன் //

வெட்கப்படுவது ஏன் செத்து தொலைந்திருக்கலாமே? அட ஆமாம் என்று சொன்னால் என்ன செய்வான்?

Anonymous said...

கதை பிடிச்சிருக்கு அருண்...அந்த வார்த்தை கதைக்கு தேவைப்பட்டாலும் நீங்க குறைச்சி இருக்கலாம் உண்மையாவே ஒரு பெண்ணை திட்டறது போல இருந்ததால் கண் கலங்கிடுச்சி எனக்கு..அந்த கதாபாத்திரம் அந்த வார்த்தையை சதாரணமா உபயோகித்து இருக்கலாம் ஆனால் ரொம்ப கடும் வார்த்தையா தான் நினைக்க முடிந்தது....


//எச்சரிக்கை: கதையில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சில வார்த்தைகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்! பிடிக்காத பட்சத்தில் முதல் பேராவிலேயே விலகி செல்க!//

நீங்க எச்சரிக்கை விடுத்த பட்சத்தில் எல்லாம் விலகமுடியாது

hiuhiuw said...

தல! பஸ்ஸ மூடி வெச்சுட்டு இங்க திறந்து விட்டுட்டீங்களா?

hiuhiuw said...

யோவ்! மெசேஜ் சொல்ற கதைக்கு கிளூ கிளூ டைட்ட்டில் கொடுத்து பசங்கள ஏமாத்தப்பாக்கறயா?

hiuhiuw said...

பவிழன்! வாவ்! புதுசா வெக்கறதுதான் அதுக்காக இப்பிடியா?!

hiuhiuw said...

ஆமா தல!நீங்க கூட வெளிநாடு போவணும்னீங்களே! கெளம்பல!

hiuhiuw said...

இது யார் மேல வந்த காண்டுல புனைஞ்சது?

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

பலரது வாழ்வின் பிரதிபலிப்பு புனைவில் தெரிகிறது. ஆனாலும் நிஜத்தில் எந்த அளவு சாத்தியம் என்பது கேள்விக்குறியே..

சமூகம், உடன்பிறந்தோர் மற்றும் தனது குழந்தைகளின் எதிர்காலம், எதிர்காலத்தில் தனக்கான பாதுகாப்பு போன்ற காரணங்களாலேயே வாழ்வின் போக்கினை சகித்துக்கொள்கின்றனர்.
இந்த வசந்தி அதுபற்றி யோசிக்கவில்லையெனினும் பெரும்பாலான வசந்திக்களுக்கு உள்குமுறல் மட்டுமே சாத்தியம்.

குறிப்பிட்ட வார்த்தையை அடிக்கடி
உபயோகப்படுத்தியிருப்பதை
தவிர்த்திருக்கலாமே..

அதைவிடுத்துப் பார்த்தால்..
சூடான புனைவு.. பலரை சுடக்கூடும்.

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு , இந்த ஒரு மாசமாகவே வாலோட போக்குல ஏதோ மற்றம் தெரியுது , அது என்னான்னு யாருக்காச்சும் தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன் , பிளீஸ் .........

Jey said...

//பிடிக்காத பட்சத்தில் முதல் பேராவிலேயே விலகி செல்க!//

எல்லாரையும் படிக்க வைக்கிற , சைக்காலஜி தெரிஞ்சி வச்சிருக்கீங்க தல.

//ஆனால் நாட்டில் இருக்கும் முக்கால்வாசி ஆண்களை குறிக்கும் என்பதால்!//

முக்கால்வாசிப் பேர் இப்படி இருக்காங்களா?. ரைட்டு.

கண்டிக்க வேண்டியதுதான்.

"ராஜா" said...

////எதேட்சையாக அவன் பவிழனுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டான்!//

என்ன பொழப்பு இது வால்?

ரூட் போட்டு பாத்திருப்பான் மடிச்சிருக்காது... போட்டு குடுத்திருப்பான் ...

குட்டிப்பையா|Kutipaiya said...

tamizh sonadha repeatuu -

//எல்லாப் பெண்களால் தைரியமாக கேட்க முடியாததை கதையில் படித்ததே அப்படி பட்ட ஒரு ஆணை பழிவாங்கிய திருப்தி இதை படித்தவுடன்//

தமயந்தி said...

அற்புதமான பதிவு...

லதானந்த் said...

அந்த வசந்திக்கு அர்ஜண்டா ஆறுதல், தேறுதல் எல்லாம் சொல்லியே ஆகணும்போல ஒரே நமநமப்பா இருக்குது.

மதன்செந்தில் said...

வால் பையன், சமுதாய கருத்துள்ள கதை அதற்கு ஏன் காமகதை என்று தலைப்பு??.. அருமை நண்பரே..

www.narumugai.com

வால்பையன் said...

//அந்த வசந்திக்கு அர்ஜண்டா ஆறுதல், தேறுதல் எல்லாம் சொல்லியே ஆகணும்போல ஒரே நமநமப்பா இருக்குது. //


அதெல்லாம் நான் பாத்துகிறேன் சார்!
நீங்க ஆசிர்வாதம் மட்டும் பண்ணுங்க போதும்!

வால்பையன் said...

//வால் பையன், சமுதாய கருத்துள்ள கதை அதற்கு ஏன் காமகதை என்று தலைப்பு??.. அருமை நண்பரே..

www.narumugai.com //


காமம் என்பதை ஏன் தப்பாவே பாக்குறிங்க!

காதலை வெளிப்படுத்த வேற நல்ல வழி சொல்லுங்க பார்க்கலாம்!

கிஃப்ட் வாங்கி தர்றது தான் காதலா?
அப்போ பணக்காரன் மட்டுமே காதலில் இருப்பான்!

கவிதை எழுதுவது தான் காதலா?
அப்போ கவிஞர்களுக்கு மட்டும் தான் காதலி இருப்பா!

ஒவ்வொரு ஸ்பரிசத்திலும் காதல் வெளிப்படும்!, காதலின் இன்னொரு உருவம் தான் காமம்!

அது தடுமாறுவதை தான் தலைப்பில் இடம்மாறி சொல்லியிருக்கிறேன்!

லதானந்த் said...

இந்த மாதிரி கேஸ்களுக்கு என்ர ஆசீர்வாதமும், பரிவும், மாற்று ஆலோசனைகளும், வழிமுறைகளும்,எப்போதும் உண்டு.

வால்பையன் said...

//இந்த மாதிரி கேஸ்களுக்கு என்ர ஆசீர்வாதமும், பரிவும், மாற்று ஆலோசனைகளும், வழிமுறைகளும்,எப்போதும் உண்டு. //


எல்லா டிபார்மெண்டையும் நீங்களே பார்த்து களைச்சி போயிருப்பிங்க!
அதுனால ஆசிர்வாதம் மட்டும் பண்ணுங்க!

kumar said...

பெண்களுக்கு என்று ஒரு மனது இருக்கிறது. அதை ஏன் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை.
ஒரு பெண் குடும்பம் என்னும் பந்ததுகிள்ள நுளைம்போது ஆயிரம் கனவுகளோட நுழையறா.
பொதுவாக ஆனா இருந்தாலும் சரி பெண்ணை இருந்தாலும் சரி ஒவ்வொருத்தரோட மனசை
புரிஞ்சுக்கணும். அப்பதான் குடும்பம் கடைசிவரைகும் நல்ல போகும். இல்லேன்னா அழிந்து போகும்.
பொதுவா உங்கள் மனைவியோ இல்லை எந்த பெண்ணா இருந்தாலும் சரி அவுங்ககிட்ட நாலு வார்த்தை
அன்பா பேசுங்க. அவுங்களுக்கு அப்படியே மகிழ்ந்து போவாங்க. அதுமட்டும் இல்லாம உங்களுக்ககாக அவ உயிரையே கொடுப்பா. அதுமட்டும் இல்ல ஒரு குடும்பத்துல கணவன் மனைவி இரண்டுபேரும் வேலைக்கு போகும்போது காலைல உங்க மனைவியோட வேலைல கொஞ்சம் நீங்களும் பகிர்ந்துகிட்டு சென்ஜீங்கனா அவளுக்கு உங்கமேல அளவுகடந்த அன்பு இருக்கும். அவல ஆபீஸ்ல எந்த மன்மதனும் வந்தாலும் ஒன்னும் அசைக்க முடியாது. ஏன் அவ பாஸ் கூட தொடமுடியாது. அவ நெருப்பு மாதிரி இருப்பா. வேலையே வேணாம் என்று சொல்லி விடுவாள். இத்தனைக்கும் காரணம் நீங்கள் கட்டும் அன்பு. நீங்கள் காலைல ஆபீஸ் செல்லும்போது அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்திட்டு போங்க அவ பூரிசுபோயடுவா. ஈவ்னிங் வந்தவுடன் நான் உன்னை நேசிகிறேண்டா செல்லம் என்று சொல்லுங்கள் அவள் மனது சொர்கத்தில் மிதக்கும். எவ்வளவு உடல் அசதியா இருந்தாலும் அவ உங்களுக்கு வகை வகை யா சமைச்சு போடுவா. என்ன கணவன் மார்களே புரிந்ததா. கல்யாணம் செய்துகொள்ள போகின்றவங்களும் இதை மனதில் வைத்து கொள்ளுங்கள். முக்கியமான விஷயம் உங்கள் மனைவி அழகா இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீ ரொம்ப அழக இருக்கேடா என்று கூரிபாருங்கள் அப்புறம் புரியும்.

சரி நண்பர்களே
மீண்டும் சந்திப்போம்

by

kumarmvasanth@gmail.com

kumar said...

பெண்களுக்கு என்று ஒரு மனது இருக்கிறது. அதை ஏன் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை.
ஒரு பெண் குடும்பம் என்னும் பந்ததுகிள்ள நுளைம்போது ஆயிரம் கனவுகளோட நுழையறா.
பொதுவாக ஆனா இருந்தாலும் சரி பெண்ணை இருந்தாலும் சரி ஒவ்வொருத்தரோட மனசை
புரிஞ்சுக்கணும். அப்பதான் குடும்பம் கடைசிவரைகும் நல்ல போகும். இல்லேன்னா அழிந்து போகும்.
பொதுவா உங்கள் மனைவியோ இல்லை எந்த பெண்ணா இருந்தாலும் சரி அவுங்ககிட்ட நாலு வார்த்தை
அன்பா பேசுங்க. அவுங்களுக்கு அப்படியே மகிழ்ந்து போவாங்க. அதுமட்டும் இல்லாம உங்களுக்ககாக அவ உயிரையே கொடுப்பா. அதுமட்டும் இல்ல ஒரு குடும்பத்துல கணவன் மனைவி இரண்டுபேரும் வேலைக்கு போகும்போது காலைல உங்க மனைவியோட வேலைல கொஞ்சம் நீங்களும் பகிர்ந்துகிட்டு சென்ஜீங்கனா அவளுக்கு உங்கமேல அளவுகடந்த அன்பு இருக்கும். அவல ஆபீஸ்ல எந்த மன்மதனும் வந்தாலும் ஒன்னும் அசைக்க முடியாது. ஏன் அவ பாஸ் கூட தொடமுடியாது. அவ நெருப்பு மாதிரி இருப்பா. வேலையே வேணாம் என்று சொல்லி விடுவாள். இத்தனைக்கும் காரணம் நீங்கள் கட்டும் அன்பு. நீங்கள் காலைல ஆபீஸ் செல்லும்போது அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்திட்டு போங்க அவ பூரிசுபோயடுவா. ஈவ்னிங் வந்தவுடன் நான் உன்னை நேசிகிறேண்டா செல்லம் என்று சொல்லுங்கள் அவள் மனது சொர்கத்தில் மிதக்கும். எவ்வளவு உடல் அசதியா இருந்தாலும் அவ உங்களுக்கு வகை வகை யா சமைச்சு போடுவா. என்ன கணவன் மார்களே புரிந்ததா. கல்யாணம் செய்துகொள்ள போகின்றவங்களும் இதை மனதில் வைத்து கொள்ளுங்கள். முக்கியமான விஷயம் உங்கள் மனைவி அழகா இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீ ரொம்ப அழக இருக்கேடா என்று கூரிபாருங்கள் அப்புறம் புரியும்.

சரி நண்பர்களே
மீண்டும் சந்திப்போம்

இளைய கவி said...

வூட்டுக்கு வூடு வாசப்படிதான் போல என்னா மச்சி ???

அன்பரசன் said...

தல ரொம்ப சூடான ஒரு கதைய கொடுத்திறுக்கீங்க..

ஆ.ஞானசேகரன் said...

நண்பா... அருமையான கதை ஓட்டம்

ராவணன் said...

பேசாம வசந்தியை மீண்டும் சிங்கப்பூருக்கே வரசொல்லுங்கள்.அந்த மென்பொருள் இன்னும் சரியாகவில்லை.
வசந்தி வந்தால்தான் சரியாகும் போல...

இது எப்படி?

School of Energy Sciences, MKU said...

Super Val, nice narration.

அலைகள் பாலா said...

//எவனும் இங்கே பேச்சுலர் கிடையாது!
அவனவன் தன் கையே தனக்குதவின்னு வாழ்ந்து கிட்டு இருக்கான்!//

இது உண்மை 95% தல.

thiyaa said...

கருத்துக்கள் அருமை

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆனா ஒரு பொம்பளை ஒருத்தனை பார்த்து லேசா சிரிச்சிட்டாலே அவ தேவிடியா!

---------------

நச்

Anonymous said...

add subscribe via email gadget for your blog so that readers will receive your new posts in their email inbox

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html

Anonymous said...

add subscribe via email gadget for your blog so that readers will receive your new posts in their email inbox

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாலு! வால்!

:)))

லதானந்த் said...

வசந்தியை ஆசிரமத்தில் உடனடியாக அட்மிட் பண்ணவும்

vasu said...

//காமம் என்பதை ஏன் தப்பாவே பாக்குறிங்க!

காதலை வெளிப்படுத்த வேற நல்ல வழி சொல்லுங்க பார்க்கலாம்!

கிஃப்ட் வாங்கி தர்றது தான் காதலா?
அப்போ பணக்காரன் மட்டுமே காதலில் இருப்பான்!

கவிதை எழுதுவது தான் காதலா?
அப்போ கவிஞர்களுக்கு மட்டும் தான் காதலி இருப்பா!

ஒவ்வொரு ஸ்பரிசத்திலும் காதல் வெளிப்படும்!, காதலின் இன்னொரு உருவம் தான் காமம்!

அது தடுமாறுவதை தான் தலைப்பில் இடம்மாறி சொல்லியிருக்கிறேன்!//

:-))

தனி காட்டு ராஜா said...

////எவனும் இங்கே பேச்சுலர் கிடையாது!
அவனவன் தன் கையே தனக்குதவின்னு வாழ்ந்து கிட்டு இருக்கான்!

அந்த கால்வாசி, உண்மையான லவ்வர்ஸ், காதலை வெளிப்படுத்த செக்ஸை பயன்படுத்துபவர்கள்!////

அது .................



இந்த எலவுக்கு தான் Living Together லைப் வாழலாம் -நு சொன்னா ஒரு பயலும் கேக்க மாட்டேன்கராணுக .....
குடும்பம் என்பதே கொடுக்கல் வாங்கல் வியாபார அமைப்பு தான் ....
வியாபாரம் லாபத்துல ஓடுற வரைக்கும் ஒரு பிரச்சினையும் வராது ....
நட்டம் வந்துட்டா தான் பிரச்சினையே ....

chinnathambi said...

அருமை குமார்

மதன் said...

//எவனும் இங்கே பேச்சுலர் கிடையாது!
அவனவன் தன் கையே தனக்குதவின்னு வாழ்ந்து கிட்டு இருக்கான்!
//

ஹாஹா ஏன் இப்படி என்ன தான் அது உண்மைனாலும் இப்படியா பப்ளிக்குட்டி பண்றது.. :)))), நல்ல கதை ம்ம்ம் புனைவுகள் சமயத்தில் உண்மையை சொல்லும்.

jaiganesh said...

simply super and powerfull.

sundar said...

Super boss! great narration,baghraj raj padam paartha effectu! simply superb ithu verum padhivu illa paadam! thanks neraya edhir paakuren! vazhtthukal!

!

Blog Widget by LinkWithin