உண்மை எல்லா நேரமும் கசப்பதில்லை!

சமீபத்தில், சில வருடங்களுக்கு முன் என்று வைத்து கொள்ளுங்களேன், அந்த வயதுக்கே உரிய குணங்களுடன் ஊர் சுற்றுவதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தேன். அம்மாதிரியான நேரத்தில் எங்களின் உறவினர் ஒருவருக்கு திருமணம் வந்தது, என் அம்மா தான் சென்றிருந்தார்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் என்றாலே அனைவரும் கும்பலாக அமர்ந்து கொண்டு மற்றவர்களின் குடும்ப நிலையை விசாரிப்பதே காலம்காலமாக நடந்து வரும் வழக்கம். அங்கேயும் அது தான் நடந்திருக்கிறது, என் அம்மாவின் முறை வருகையில் “இளையது ரெண்டும் நல்லாத்தான் இருக்கு, இந்த மூத்தது தான் அடங்காம திரியுதுன்னு” கம்பேனி சீக்ரெட்டை போட்டுடைத்தார்.

என் அம்மாவின் சித்தி மதுரையில் ஓய்வு பெற்ற ஆசிரியர், அவரது மகன்(எனக்கு மாமா) சென்னையில் ஸ்டூடியோ வைத்திருக்காராம் அதற்கு என்னை வேலைக்கு வர சொல்லியிருக்கிறார்கள். நானும் ஆரம்பத்தில் மறுத்து பார்த்தேன் பிறகு சென்னை என்பதால் உள்ளூர ஒரு ஆசை, போய் தான் பார்ப்போமே என்று, ஒரு சுபயோக(அவர்களுக்கு)தினத்தில் என்னை ரயிலேற்றி சென்னை அனுப்பினார்கள், சென்னைக்கு பல முறை விடுமுறையில் சென்றிருந்தாலும் இம்முறை தொழில் நிமித்தம் செல்வதால் மனதுக்குள் ஒரு பெரியமனுஷத்தனம் வந்தது, சிறு கர்வத்துடன் எனது பாதங்களை தரையில் வைத்தேன்.

போட்டோ எடுத்தல், வீடியோ எடுத்தல், பிரிண்ட் போடுதல் பற்றியதை தொழில் சார்ந்த வேறு ஒரு பதிவில் பார்த்து கொள்ளலாம், இங்கே நேரடியாக விசயதிற்கு வருகிறேன். அந்த ஸ்டூடியோ பொறுத்தவரை எனக்கு வெளி நிகழ்ச்சிகள் எடுப்பது தான் வேலை, அங்கேயே இருந்தாலும் கடைக்கு வரும் நபர்களை போட்டொ எடுப்பது அலமேலு என்ற பெண் தான். நான் சும்மா தான் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பேன். மாலை ஆறு மணிக்கு அந்த அம்மணி பேக்கை எடுத்து கொண்டு கிளம்பி விடுவார், எனது மாமாவும் அந்த நேரத்தில் வந்து விடுவார்.

ஒரு நாள் மாலை நேரம், வானம் லேசாக தூறி கொண்டிருந்தது, ஆடையை மீறி குளிர் தோலில் உறைத்தது, ஒரு சுகவாசியாக உணர்ந்த தருணம், அதை அனுபவிக்க ஒரு தம் அடிக்கலாமே என்று தோன்றியது, கீழே சென்று சிகரெட்டும் வாங்கி வந்தேன், ஸ்டூடியோவுக்கு முன் உள்ள பால்கனியில் பற்ற வைத்து சுதந்திர வானில் புகையை ஊதி கொண்டிருந்தேன்,
”நீங்கள் சிகரெட் பிடிப்பிங்களா” என்று பின்னால் இருந்து ஒரு குரல் -அலமேலு

அந்த வயதிலெல்லாம் சிகரெட் என்பது நானும் பெரிய மனுசன் ஆகிட்டேன் என்று உலகுக்கு உணர்த்த பயன்படும் ஒரு வஸ்த்து அதனால் மிடுக்காக ஆமாம் என்று சொல்லிவிட்டேன்.

அரைமணி நேரத்தில் எனது மாமாவும் வந்து விட்டார், நான் வெளியேவே நின்று கொண்டிருந்தேன், அலமேலு எல்லாத்தையும் போட்டு கொடுத்திருக்கிறாள், எனக்கு அது தெரியாது, ஒருவேளை கேட்டால் என்ன சொல்வது என்ற முன் ஒத்திகை எதுவும் இல்லாமால் தேமே என்று தான் இருந்தேன்.

ஒரு எட்டு மணி இருக்கும், என் மாமா என்னை அழைத்தார், எதிரில் அமர சொன்னார்.
சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்ற்கு வந்தார்,
“நீ சிகரெட் குடிப்பியா?”

புரிந்துவிட்டது எனக்கு! சண்டாளி போட்டு கொடுத்துவிட்டாள். எப்படி தப்பிப்பது என யோசிக்க கூட நேரமில்லை பதில் சொல்லியே ஆகவேண்டும்.

”ஆமாம் மாமா குடிப்பேன்”

”எப்போதிருந்து”

”ஸ்கூல் படிக்கும் போது பழகிட்டேன்”

”நாம சாப்பிடுற பொருள்கள்லேயே உரம்ங்கிற பேருல விசத்தை கலந்துற்ரானுங்க, இதுல இது வேற தேவையா விட்டுடு என்னா”

”சரிங்க மாமா”(சிறிது மெளனம்)
”நீங்க சிகரெட் குடிச்சிருக்கிங்களா மாமா”

”என்ன இப்படி கேட்டுபிட்டா
காலேஜ் படிக்கும் போது நான் போடாத ஆட்டமில்லை”

”எப்போ மாமா விட்டிங்க”

”28 வயசுல எல்லா பழகத்தையும் விட்டுட்டேன்”

”ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா”

சிறிது நேரம் அங்கே மயான அமைதி நிலவியது

திடிரென ”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு” என்றார்


இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியவே இல்லை நண்பர்களே, நான் எதாவது தப்பா சொல்லிடேனா!


(தொடரும்)

72 வாங்கிகட்டி கொண்டது:

சின்னப் பையன் said...

me the 1st???

சின்னப் பையன் said...

yesssssssssssssssssssssss

சின்னப் பையன் said...

//கொள்ளுங்களேன், அந்த வயதுக்கே உரிய குணங்களுடன் ஊர் சுற்றுவதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தேன். //

இப்போ திருந்திட்டீங்களா?????

சின்னப் பையன் said...

//”ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா”

சிறிது நேரம் அங்கே மயான அமைதி நிலவியது//

சரியான டென்ஷன் ஆயிருப்பாரு மாமா!!!!!

:-))))))))))))

தமிழ் அமுதன் said...

தப்பா ஒன்னும் தெரியல!

ஆனா? மாமாகிட்ட அப்படி சொல்லாம இருந்து இருக்கலாம்!!!

குசும்பன் said...

//சிறு கர்வத்துடன் எனது பாதங்களை தரையில் வைத்தேன்.//

ஆங் இப்பதான் புரியுது சென்னையில் ஒரு இடத்தில் தனுஷ்கோடியில் இராமர் பாதத்தை பார்பதுபோல், சென்னையில் பயங்கரக்கூட்டம் வால்பையன் பாதம்பட்ட இடம் என்று! அது உங்கள் பாதம்தானா?

குசும்பன் said...

//போட்டோ எடுத்தல், வீடியோ எடுத்தல், பிரிண்ட் போடுதல் பற்றியதை தொழில் சார்ந்த வேறு ஒரு பதிவில் பார்த்து கொள்ளலாம்//

அப்ப எனக்கு நீங்க காம்பெட்டிட்டரா? அப்படி என்றால் இனி பழக்கவழக்கம் கட்!

குசும்பன் said...

//திடிரென ”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு” என்றார்//

அலமேலுவுக்கு நிக் நேம் மெட்ராஸா இருக்கும் போல! :)))

குசும்பன் said...

//(தொடரும்)//

இதுக்கு எதுக்குய்யா தொடரும் இந்த தொடர்கதை எழுத்தாளர்கள் தொல்லை தாங்கமுடியலைடா சாமி!!!:))

rapp said...

ஹா ஹா ஹா, நல்லாத்தான் கேட்டிருக்கீங்க:):):)

rapp said...

//அந்த வயதுக்கே உரிய குணங்களுடன் ஊர் சுற்றுவதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தேன்//

இப்போ:):):)

கார்க்கிபவா said...

28 வயசே ஆகலையா அப்போ டோண்டுவின் சமீபத்தில்னு சொல்லுங்க

தமிழன்-கறுப்பி... said...

\\
சமீபத்தில், சில வருடங்களுக்கு முன் என்று வைத்து கொள்ளுங்களேன், அந்த வயதுக்கே உரிய குணங்களுடன் ஊர் சுற்றுவதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தேன்.
\\

சமீபமா?! சில வருடமா?! ஆரம்பமே பொய்யாயிருக்கே ...

ராசா அதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு அப்படின்னு எழுதிருக்கணும்..;)

தமிழன்-கறுப்பி... said...

குசும்பன் said...
\\
//திடிரென ”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு” என்றார்//

அலமேலுவுக்கு நிக் நேம் மெட்ராஸா இருக்கும் போல! :)))
\\

இப்படில்லாம் யோசிக்க உங்களால மட்டுந்தான் முடியும் தெய்வமே...:)

Maximum India said...

//”ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா”//

சரியான கேள்வி.

அறிவுரை சொல்வதற்கு முன் யோசித்து சொல்ல வேண்டும்.

நன்றி

நட்புடன் ஜமால் said...

\\"உண்மை எல்லா நேரமும் கசப்பதில்லை!"\\

அருமையா சொன்னீங்க

Vidhya Chandrasekaran said...

\\”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு”\\

நீங்க போயும் புண்ணியம் இல்லாம போச்சே:)

நட்புடன் ஜமால் said...

\\மனதுக்குள் ஒரு பெரியமனுஷத்தனம் வந்தது, சிறு கர்வத்துடன் எனது பாதங்களை தரையில் வைத்தேன்.\\

அருமை நண்பரே.

உள்ளது உள்ளபடி

ராஜ நடராஜன் said...

தண்ணி அடிக்கிற ஆளுகளக் கூட தோஸ்த் பண்ணிக்கலாம்.ஏன்னா சொல்றதெல்லாம் உண்மையாயிருக்கும்.இந்த சிகரெட் அடிச்சிட்டு கண்ணுக்குள்ள பொகைய விடற ஆளுக இருக்காகளே!

நட்புடன் ஜமால் said...

நீங்க கேட்டது சரிதான் நண்பரே.

கேள்விகளை கேட்டுத்தான் பழகி இருக்கிறார்கள்,

பதில் சொல்லி பழகவில்லை

anujanya said...

நல்ல சுவாரஸ்யம். நீங்க கேட்டதுல ஏதும் தப்பில்ல. ஆனா உங்க மாமா தீர்க்க தரிசி. சென்னை வாசிகளைக் காப்பாற்றி இருக்கிறார். அவருக்குச் சென்னைப் பதிவர்கள் பெரிதும் கடன் பட்டிருக்கிறார்கள் :)

அனுஜன்யா

எம்.எம்.அப்துல்லா said...

//அந்த வயதுக்கே உரிய குணங்களுடன் ஊர் சுற்றுவதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தேன். //

நா இப்பவும் அதுதான் பண்ணுறேன்
:))))

M.Rishan Shareef said...

வால்பையா, நீங்க சிகரெட் கூடக் குடிப்பீங்களா? :(

சரி..இப்பதான் 38 வயசாயிடுச்சே..சிகரெட்டை விட்டாச்சா? :)

cheena (சீனா) said...

வாலு - நல்லாத்தான் இருக்கு - சென்னை விசயம் - தொடர்ந்து படிப்ப்பொம்

இப்ப 28 ஆச்சா இல்லையா - இன்னும் அன்புமணி சொல்றதக் கேக்க மாட்டேங்குறியே !

ம்ம்ம்ம்ம்ம் - விட்டுடுப்பா

வெண்பூ said...

//
அனுஜன்யா said...
நல்ல சுவாரஸ்யம். நீங்க கேட்டதுல ஏதும் தப்பில்ல. ஆனா உங்க மாமா தீர்க்க தரிசி. சென்னை வாசிகளைக் காப்பாற்றி இருக்கிறார். அவருக்குச் சென்னைப் பதிவர்கள் பெரிதும் கடன் பட்டிருக்கிறார்கள் :)
//

அடுத்த பதிவர் சந்திப்புல அவரோட மாமாவை கூப்பிட்டு ஒரு பாராட்டுவிழா நடத்திற வேண்டியதுதான்.. :)))

மங்களூர் சிவா said...

//
ஆனா உங்க மாமா தீர்க்க தரிசி. சென்னை வாசிகளைக் காப்பாற்றி இருக்கிறார். அவருக்குச் சென்னைப் பதிவர்கள் பெரிதும் கடன் பட்டிருக்கிறார்கள்
//


//திடிரென ”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு” என்றார்//

அலமேலுவுக்கு நிக் நேம் மெட்ராஸா இருக்கும் போல! :)))
//

:)))))))))

கிரி said...

//ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா//

ஹி ஹி ஹி ஹி

அருண் உங்க லோகோ சூப்பர்.. :-)

RAMYA said...

//
”நீங்கள் சிகரெட் பிடிப்பிங்களா” என்று பின்னால் இருந்து ஒரு குரல் -அலமேலு

அந்த வயதிலெல்லாம் சிகரெட் என்பது நானும் பெரிய மனுசன் ஆகிட்டேன் என்று உலகுக்கு உணர்த்த பயன்படும் ஒரு வஸ்த்து அதனால் மிடுக்காக ஆமாம் என்று சொல்லிவிட்டேன்.
//

உள்ளது உள்ளபடியே
சொல்லி இருக்கீங்க !!
இருக்கட்டும் இருக்கட்டும்

RAMYA said...

//
அரைமணி நேரத்தில் எனது மாமாவும் வந்து விட்டார், நான் வெளியேவே நின்று கொண்டிருந்தேன், அலமேலு எல்லாத்தையும் போட்டு கொடுத்திருக்கிறாள், எனக்கு அது தெரியாது, ஒருவேளை கேட்டால் என்ன சொல்வது என்ற முன் ஒத்திகை எதுவும் இல்லாமால் தேமே என்று தான் இருந்தேன்.
//

கச்சிதமா காரியத்தை
முடிச்சு இருக்காங்க அலமேலு
weldone அலமேலு!!!

RAMYA said...

//”ஸ்கூல் படிக்கும் போது பழகிட்டேன்”

”நாம சாப்பிடுற பொருள்கள்லேயே உரம்ங்கிற பேருல விசத்தை கலந்துற்ரானுங்க, இதுல இது வேற தேவையா விட்டுடு என்னா”
//

ஸ்கூல் படிக்கும் போதேவா???

மாமா ரொம்ப நல்லவரு சரியான படி
அட்வைஸ் பண்ணி இருக்காறு.

RAMYA said...

//
இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியவே இல்லை நண்பர்களே, நான் எதாவது தப்பா சொல்லிடேனா!
//

ச்சே!! ச்சே!! தப்பா ஒண்ணுமே இல்லை.

உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கீங்க.

ஆனா மாமா கிட்டே சொல்லாமே
விட்டிருக்கலாம் ஜீவன் சொன்ன மாதிரி.

அ.மு.செய்யது said...

அப்ப உங்க மாமாவுக்கு உங்கள பத்தி முன்னாடியே தெரியாதா ???

அ.மு.செய்யது said...

அப்ப உங்க மாமாவுக்கு உங்கள பத்தி முன்னாடியே தெரியாதா ???

அ.மு.செய்யது said...

இப்ப 28 வயசு மேலே ஆயிருச்சே...சிகரெட்ட விட்டுடீங்களா ??

Kumky said...

விளையும் பொருள் முளையிலேயே தெரி்யுதுன்னு அனுப்பிவிட்டிருப்பார்..
மாம்ஸ் தீர்கதரிசி...
பாவம் ஈரோடு் மக்கள்ஸ்..

அ.மு.செய்யது said...

ஆமா..இதுக்கு ஏன் விவாதம்னு வேற லேபிள் வச்சீங்க..

அ.மு.செய்யது said...

//வெண்பூ said...
//
அனுஜன்யா said...
நல்ல சுவாரஸ்யம். நீங்க கேட்டதுல ஏதும் தப்பில்ல. ஆனா உங்க மாமா தீர்க்க தரிசி. சென்னை வாசிகளைக் காப்பாற்றி இருக்கிறார். அவருக்குச் சென்னைப் பதிவர்கள் பெரிதும் கடன் பட்டிருக்கிறார்கள் :)
//

அடுத்த பதிவர் சந்திப்புல அவரோட மாமாவை கூப்பிட்டு ஒரு பாராட்டுவிழா நடத்திற வேண்டியதுதான்.. :)))
//

இதுக்கு ஒரு பெரிய ரீப்ப்பீட்ட்ட்ட்டு.

dondu(#11168674346665545885) said...

//சமீபமா?! சில வருடமா?! ஆரம்பமே பொய்யாயிருக்கே ...

ராசா அதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு அப்படின்னு எழுதிருக்கணும்..//
நீங்க வேற, வால்பையனே சமீபத்துல 1978-ல்லதானே பிறந்திருக்கார்! :)

அன்புடன்,
டோண்டு ராகவன்

அ.மு.செய்யது said...

சென்னையை காப்பாற்றிய அந்த அலமேலு அக்காவுக்கு சென்னைப் பதிவர்வட்டத்தின்
சார்பாக நாளை ஒரு மலர்மாலையும் பொன்னாடையும் பார்சல் செய்ய
முன்மொழிகிறேன்.

பரிசல்காரன் said...

நல்ல பதிவு..

நல்ல தலைப்பு!!!

Mahesh said...

//அந்த வயதுக்கே உரிய குணங்களுடன் ஊர் சுற்றுவதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தேன். //

சே... நான் இன்னும் எப்ப அந்த வயசுக்கு வந்து.. எப்ப ஊர் சுத்தறது? இன்னும் வருசங்க கெடக்கு...:(

Mahesh said...

//ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா//

ஆயிடும்... ஆயிடும்... கூடிய சீகிரம் உங்களுக்கு ஆயிடும்... அதுக்கு ஒரு பத்து வருசத்துகுப் பிறகு எனக்கும் ஆகும்.

Anonymous said...

//ஆனா உங்க மாமா தீர்க்க தரிசி. சென்னை வாசிகளைக் காப்பாற்றி இருக்கிறார். அவருக்குச் சென்னைப் பதிவர்கள் பெரிதும் கடன் பட்டிருக்கிறார்கள் :)//

அனுஜன்யா சொன்னதுதான் சரி.

Saminathan said...

உண்மை எப்பவுமே கசக்கும் பாஸ்...

மங்களூர் சிவா said...

@டோண்டூ சார்

சமீபத்தில் 1968 ஆக இருக்கும் சரி பார்க்கவும்.

ஆச்சர்ய குறி இல்லை அதனால இது சீடியஸ் பின்னூட்டம்

SUBBU said...

// நான் எதாவது தப்பா சொல்லிடேனா!
//
நல்லா கேக்குராங்கப்பா டீட்டய்லு :))

SUBBU said...

//”ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா”// :))))

SUBBU said...

50 போட்டாச்சி

Unknown said...

// “இளையது ரெண்டும் நல்லாத்தான் இருக்கு, இந்த மூத்தது தான் அடங்காம திரியுதுன்னு” கம்பேனி சீக்ரெட்டை போட்டுடைத்தார். //




யோவ் வெங்காயம் .... பின்ன நீ என்ன அம்பானிக்கு பி. ஏ வாவா வேல பாக்குற .... இன்னமும் கேவலமா சொல்லியிருக்கனும் .. உங்க அம்மா ரொம்ப டீசண்டா இருக்குகட்டுமுன்னு உட்டுட்டாங்க ... நானா இருந்தானா அசிங்க அசிங்கமா சொல்லியிருப்பேன் ......



// என் அம்மாவின் சித்தி மதுரையில் ஓய்வு பெற்ற ஆசிரியர், அவரது மகன்(எனக்கு மாமா) சென்னையில் ஸ்டூடியோ வைத்திருக்காராம் அதற்கு என்னை வேலைக்கு வர சொல்லியிருக்கிறார்கள். //



அவங்களுக்கு ஏழ்ட்ர சனி ஆரம்பிக்கப் போகுதுன்னு எந்த ஜோசியனும் சொல்லல போல .......




// நானும் ஆரம்பத்தில் மறுத்து பார்த்தேன் பிறகு சென்னை என்பதால் உள்ளூர ஒரு ஆசை, போய் தான் பார்ப்போமே என்று, ஒரு சுபயோக(அவர்களுக்கு)தினத்தில் என்னை ரயிலேற்றி சென்னை அனுப்பினார்கள் //




அன்னைக்கு உங்க வீட்டுல எல்லோருக்கும் பயங்கர சந்தோசமாமே .... அடுத்தநாளு கெடா வெட்டி, ஊரையே கூப்புட்டு விருந்து வெச்சாங்கலாமா...???!!???......





// சென்னைக்கு பல முறை விடுமுறையில் சென்றிருந்தாலும் இம்முறை தொழில் நிமித்தம் செல்வதால் மனதுக்குள் ஒரு பெரியமனுஷத்தனம் வந்தது, சிறு கர்வத்துடன் எனது பாதங்களை தரையில் வைத்தேன். //




" சென்னைக்கு சனி பெயர்ச்சி " ...




// போட்டோ எடுத்தல், வீடியோ எடுத்தல், பிரிண்ட் போடுதல் பற்றியதை தொழில் சார்ந்த வேறு ஒரு பதிவில் பார்த்து கொள்ளலாம், இங்கே நேரடியாக விசயதிற்கு வருகிறேன். //



போனதும் லயிட்டு புடிக்கிற வேல கொடுத்தத சொல்லவே இல்ல .............





// அந்த ஸ்டூடியோ பொறுத்தவரை எனக்கு வெளி நிகழ்ச்சிகள் எடுப்பது தான் வேலை //




ஆமா.... ஆமா .... வெளியில போன டீ வாங்கி குடுக்க டீபாய் கூடவே வேணும் ......




// அங்கேயே இருந்தாலும் கடைக்கு வரும் நபர்களை போட்டொ எடுப்பது அலமேலு என்ற பெண் தான். //





அக .. அக ... இப்போதான் விஷயத்துக்கே வந்திருக்க ..............




// நான் சும்மா தான் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பேன் //




யார ...???????




// மாலை ஆறு மணிக்கு அந்த அம்மணி பேக்கை எடுத்து கொண்டு கிளம்பி விடுவார் //




ஆமா .. ஆமா .. நீஎல்லா பிஞ்சுலேயே பழுத்த பன்னாட .... அந்த அம்முனி உஷாராத்தான் இருந்திருக்குது ......




// எனது மாமாவும் அந்த நேரத்தில் வந்து விடுவார். //




ஆமா .. ஆமா .. கல்லாவ காப்பாதனுமே .......




// ஒரு நாள் மாலை நேரம், வானம் லேசாக தூறி கொண்டிருந்தது, ஆடையை மீறி குளிர் தோலில் உறைத்தது, //




யாரோட ஆடைய ........???!!!!??? ......




// அந்த வயதிலெல்லாம் சிகரெட் என்பது நானும் பெரிய மனுசன் ஆகிட்டேன் என்று உலகுக்கு உணர்த்த பயன்படும் ஒரு வஸ்த்து அதனால் மிடுக்காக ஆமாம் என்று சொல்லிவிட்டேன். //




நொரஈரல் கருகி போனதுக்கப்புறம் தெரியும் .... நீ ரொம்ப பெரிய மனுசன்னு ..........





// அலமேலு எல்லாத்தையும் போட்டு கொடுத்திருக்கிறாள் //


யோவ் என்னய்யா இந்த எடத்துல டபுள் மீனிங் மாதிரி தெரியுது ......





// ”28 வயசுல எல்லா பழகத்தையும் விட்டுட்டேன்”

”ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா”

சிறிது நேரம் அங்கே மயான அமைதி நிலவியது ////




மொக்க ஜோக்கு ..... சிரிப்பே வல்ல ..........





/// திடிரென ”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு” என்றார் ///





" ஈரோட்டுக்கு சனி பெயர்ச்சி " ...





// (தொடரும்) //



சனி பெயச்சி தொடரும் .... சென்னைக்கா ... ஈரோட்டுக்கா.... ' ன்னு தெரியல .....

Anonymous said...

//இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியவே இல்லை நண்பர்களே, நான் எதாவது தப்பா சொல்லிடேனா!//
-----------------------------------
நல்லாத்தான்யா சொல்லி இருக்கான்

சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு??

நல்லா கேக்கரான்யா டீட்டைலு ............

என்ன வில்லத்தனம் (சின்ன வயசுல!!!!??)

Tech Shankar said...

நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு

Tech Shankar said...

semma dialog
kettum pattanam po appadimbanga
neenga pattanathai kedukka poneengalaakkum

Tech Shankar said...

Please do not smoke

வால்பையன் said...

//ச்சின்னப் பையன் said...

//கொள்ளுங்களேன், அந்த வயதுக்கே உரிய குணங்களுடன் ஊர் சுற்றுவதையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தேன். //

இப்போ திருந்திட்டீங்களா?????//

அந்த மாதிரி கெட்ட பழக்கமெல்லாம் நமக்கு கிடையாதே!

வால்பையன் said...

ஜீவன் said...

தப்பா ஒன்னும் தெரியல!

ஆனா? மாமாகிட்ட அப்படி சொல்லாம இருந்து இருக்கலாம்!!!//

உரிமை பிரச்சனைன்னு வந்த பிறகு மாமாவ இருந்தா என்ன, பெரியப்பாவா இருந்தா என்னா தலைவா?

வால்பையன் said...

//குசும்பன் said...

//திடிரென ”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு” என்றார்//

அலமேலுவுக்கு நிக் நேம் மெட்ராஸா இருக்கும் போல! )//

மாஸ்டர்பீஸ் கமெண்ட்!
அலமேலு அப்படி சொல்லிகிற மாதிரி பிகரா இருந்தா தான் சொல்லியிருப்பேனே!
டீச்சர் ட்ரைனிங் முடிச்சிட்டு, எத பேசினாலும் புரிஞ்சதா, தெரிஞ்சதான்னு உயிர வாங்கிடுவா!

வால்பையன் said...

நன்றி தமிழன் கறுப்பி

நன்றி ராப்
ரொம்ப நாளா ஆளையே காணோமே

நன்றி கார்க்கி
ஆமா நான் ரொம்ப சின்னபையன்

Maximum India said...

//”ஆனா எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா”//

சரியான கேள்வி.

அறிவுரை சொல்வதற்கு முன் யோசித்து சொல்ல வேண்டும்.//

அதே அதே அதே
ஒருவேளை அவருக்கு எந்த பழக்கமும் இல்லாதிருந்தால் நான் திருந்தியிருப்பேனோ என்னவோ

வால்பையன் said...

நன்றி ஜமால்

நன்றி வித்யா
ஏன் நீங்க சென்னை போயிட்டிங்களா?

நன்றி ராஜநடராஜன்
அப்படியே ஞாபகம் வச்சிருக்கிங்களே

நன்றி அனுஜன்யா
என்ன கொலைவெறி

நன்றி அப்துல்லா

வால்பையன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...

வால்பையா, நீங்க சிகரெட் கூடக் குடிப்பீங்களா? :(

சரி..இப்பதான் 38 வயசாயிடுச்சே..சிகரெட்டை விட்டாச்சா? :)//

ரிஷான் உங்க வயச யார் கேட்டாங்க!
நான் இன்னும் குழந்தை தான் ஊருக்கே தெரியுமே

வால்பையன் said...

cheena (சீனா) said...

வாலு - நல்லாத்தான் இருக்கு - சென்னை விசயம் - தொடர்ந்து படிப்ப்பொம்//

ரொம்ப நன்றி சார்
நீங்க ஒருத்தர் தான் தொடர எதிர்பார்க்கிறிங்க

வால்பையன் said...

நன்றி வெண்பூ
பாராட்டு விழாவுக்கு நான் வரலாமா?

நன்றி மங்களூர் சிவா

நன்றி கிரி
அருண் உங்க லோகோ சூப்பர்.. :-)

இது அந்தமானில் இருக்கும் நண்பர் பாலசந்தர் செய்து கொடுத்தது
அடுத்த பதிவில் எழுத வேண்டும்

நன்றி ரம்யா
நமகு எப்பவுமே உள்ளது தான் வெளியே வரும்

நன்றி செய்யது
தெரியாது, நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்தோம்

வால்பையன் said...

அ.மு.செய்யது said...

இப்ப 28 வயசு மேலே ஆயிருச்சே...சிகரெட்ட விட்டுடீங்களா ??//

நானும் ரொம்ப வருசமா காத்துகிட்டு இருக்கேன், வந்தே தொலைக்க மாட்டிங்குது

வால்பையன் said...

கும்க்கி said...

விளையும் பொருள் முளையிலேயே தெரி்யுதுன்னு அனுப்பிவிட்டிருப்பார்..
மாம்ஸ் தீர்கதரிசி...
பாவம் ஈரோடு் மக்கள்ஸ்..//

ரொம்ப வாருனிங்கன்ன
கிருஷ்னகிரியில வந்து டேரா போட்டுருவேன்

வால்பையன் said...

அ.மு.செய்யது said...

ஆமா..இதுக்கு ஏன் விவாதம்னு வேற லேபிள் வச்சீங்க..//

நானும் எங்க மாமாவும் பண்ணுனது விவாதம் இல்லையா?

வால்பையன் said...

dondu(#11168674346665545885) said...

//சமீபமா?! சில வருடமா?! ஆரம்பமே பொய்யாயிருக்கே ...

ராசா அதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு அப்படின்னு எழுதிருக்கணும்..//
நீங்க வேற, வால்பையனே சமீபத்துல 1978-ல்லதானே பிறந்திருக்கார்! :)//

சார் இப்படி கம்பேனி ரகசியத்தை வெளியே சொல்லாதிங்க!
நான் பிறந்தது 1988 பத்து வருசம் சேர்த்து சொல்லிட்டிங்க

வால்பையன் said...

//பரிசல்காரன் said...
நல்ல பதிவு..
நல்ல தலைப்பு!!!//

கசப்பதில்லைன்னு போட்டு கசப்பான அனுபவத்தை எழுதினேன்.
காரணம் இப்படி படிக்காமல் பின்னுட்டம் யார் போடுறாங்கன்னு தெரிஞ்சிக்கத்தான்

வால்பையன் said...

நன்றி மகேஷ்
இளமை திரும்பாது

நன்றி வேலன் அண்ணாச்சி

நன்றி ஈரவெங்காயம்

மங்களூர் சிவா said...
@டோண்டூ சார்
சமீபத்தில் 1968 ஆக இருக்கும் சரி பார்க்கவும்.//

டோண்டு சார் உங்க வயச சொன்னாருன்னு நினைச்சிங்களா?

வால்பையன் said...

நன்றி சுப்பு

நன்றி மாதேஷ்
வழக்கம் போல கலக்கல் கமெண்ட்ஸ்

நன்றி கோபி
வில்லனே தான்

நன்றி தமிழ்நெஞ்சம்

தமிழ்நெஞ்சம் said...

Please do not smoke//

எனக்கு இன்னும் 28 வயசு ஆகலையே மாமா

:)

Poornima Saravana kumar said...

//இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியவே இல்லை நண்பர்களே, நான் எதாவது தப்பா சொல்லிடேனா!
//

இல்லை இல்லை இல்லவே இல்லை !!!!!!!

Poornima Saravana kumar said...

//நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு//

சரியான கணிப்பு :)

பாபு said...

”நீ இங்கே இருந்தா மெட்ராஸையே கெடுத்துருவ, உடனே ஊருக்கு கிளம்பு/
அந்த மாதிரி நேரத்துல கூட எவ்வளவு நாசூக்கா பதில் சொல்லியிருக்காருங்க பாருங்க

Unknown said...

இப்பொழுதுதான் உங்க வலைக்கு வந்துள்ளோம் .கமெண்டுகளை
மெதுவாக எழுதலாம் என்று உள்ளோம்

!

Blog Widget by LinkWithin