மொக்க கவுஜ!


உழைப்பு உயர்வைத் தரும்,
உயர்வு புகழைத் தரும்,
புகழ் பணத்தை தரும்,
பணம் திமிரைத் தரும்,
திமிர் ஆணவத்தைத் தரும்,
ஆணவம் அழிவைத் தரும்

அதனால் உழைப்பை எதிர்ப்போம்.

இவண் ரெஸ்டு எடுத்து,
ரெஸ்டு எடுத்து
டயர்டாணவர்கள் சங்கம்.

ஈரோடு கிளை
தலைவர் :நந்து f/o நிலா
செயலாளர்! :வால்பையன்

சிங்கை கிளை
தலைவர் :நட்புடன் ஜமால்
செயலாளர் :நிஜமா நல்லவன்

சென்னை கிளை
தலைவர் :புதுகை அப்துல்லா
செயலாலர் :வெண்பூ

உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள்

59 வாங்கிகட்டி கொண்டது:

சென்ஷி said...

Me the First :-)

narsim said...

naaanu???

வால்பையன் said...

//narsim said...

naaanu???//


அப்துல்லா அண்ணன் ரொம்ப பிஸியாக இருக்குற மாதிரி சீன் போட்டால் அந்த பதவி உங்களுக்கு தான்

A N A N T H E N said...

பொருத்தமான தலைப்பு

நட்புடன் ஜமால் said...

அண்ணா ... ஆஆஆஆஆஆ

நையாண்டி நைனா said...

மும்பைலே ஒரு பிராஞ்சு போட்டு, எனக்கும் ஒரு போசுட்ட்டூ... பிளீசு...

ஜோதிபாரதி said...

தேர்ந்தெடுக்கப் பட்ட
சிங்கை கிளைக் கல(ழ)க நிர்வாகிகள் நட்புடன் ஜமால், நிஜமாநல்லவன் ஆகியோருக்கு வாழ்த்துகள்!

சென்னை தலைமைக் கல(ழ)கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர் நாயகன் புதுகை அப்துல்லா, சிறுகதைச் சிற்பி வெண்பூ ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

ஈரோடு கிளைக் கல(ழ)கத்தைச் சேர்ந்த வாலு சாரு, நந்து f/o நிலா ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

நான் ஆதவன் said...

தலீவர் வாள்க....தலீவர் வாள்க

நம்மளயையும் சேர்த்துக்கங்கப்பா..ஹ்ஹீம்

ஜோசப் பால்ராஜ் said...

சிங்கை நிர்வாகிகளாக எங்கள் அன்பு அண்ணண் ஜமாலையும், நிஜமா(???) நல்லவரையும் நியமித்த தலைமை கழகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை கிளைக்கு எங்கள் பாசமிகு அண்ணண் அப்துல்லாவை நியமித்த செய்தி சர்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போல் உள்ளது( பத்தாம்புல படிச்சது, நானும் வேற எங்க தான் இத உபயோகிக்கிறது?)

ஈரோட்டில் வால்பையன் என்பவரை நியமித்ததை கண்டிக்கிறோம். அவர் ஒழுங்காக ரெஸ்ட் எடுக்க தெரியாதவர், இப்பதவிக்கு தகுதியே இல்லாதவர் .

ச்சின்னப் பையன் said...

நானு... நானு......????

நட்புடன் ஜமால் said...

ஜோதிபாரதி அண்ணேன் வால்பையன் விளக்கேற்ற நல்லா எண்ணை வார்க்கிறியளே ...

ஜீவன் said...

எனக்கு எதாவது ஒரு பதவி தராட்டி அவ்ளோதான்

சாகும் வரை ரெஸ்ட் எடுக்கும் போராட்டம் வெடிக்கும் ஆமா!!!

தமிழன்-கறுப்பி... said...

நல்லா இருங்க அண்ணே...

வால்பையன் said...

// நட்புடன் ஜமால் said...

ஜோதிபாரதி அண்ணேன் வால்பையன் விளக்கேற்ற நல்லா எண்ணை வார்க்கிறியளே ...//

நீங்கள் வேலை செய்யும் லட்சணத்தை உங்கள் வாயாலேயே ஒருமுறை ஒப்புகொண்டீர்கள் மறவாதீர்கள்.

வால்பையன் said...

// ச்சின்னப் பையன் said...

நானு... நானு......????//

நெக்ஸ்டு
ரெஸ்டு தான்!
நீங்க தாங்க அகில உலக தலைவரே!

ஜோதிபாரதி said...

//நட்புடன் ஜமால் said...
ஜோதிபாரதி அண்ணேன் வால்பையன் விளக்கேற்ற நல்லா எண்ணை வார்க்கிறியளே ...
//

மாத்திச் சொல்றியளே!
வாலு எண்ணெய் ஊற்றினார், நான் பத்த வச்சேன் அப்படின்னு சொல்லுங்கோ!
வாய் கொழரலாம், ஆனா வாக்கு மாறப்படாது!
எல்லாம் பப்ளிஷ் பன்றதுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டதுல வந்த வெனை!

கைண்ட்லி, எனக்கு ஒரு மெம்பெர்ஷிப் போட்டு கொடுங்க சாமியோவ்!

வால்பையன் said...

//ஜீவன் said...

எனக்கு எதாவது ஒரு பதவி தராட்டி அவ்ளோதான்

சாகும் வரை ரெஸ்ட் எடுக்கும் போராட்டம் வெடிக்கும் ஆமா!!!//

ச்சின்னபையனுக்கு போட்டியாகவா?
ஏற்கனவே அவர் அதை தான் செய்து கொண்டிருக்கிறார்.

வால்பையன் said...

//கைண்ட்லி, எனக்கு ஒரு மெம்பெர்ஷிப் போட்டு கொடுங்க சாமியோவ்!//


எல்லாம் சிங்கை தலைவர் ஜமால் கையில் தான் இருக்கிறது

நிஜமா நல்லவன் said...

என்னோட ப்ளாக் ப்ரோபைல் பாருங்கப்பா....நானெல்லாம் ஓடா தேஞ்சி போய் கிடக்கேன்....என்னைய வச்சி காமடியா.....ஆனாலும் எனக்கும் ஒரு பதவி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி....பதவிக்கு ஆளாளுக்கு அடிச்சுக்குறாங்க....சும்மா வர்ற பதவியை வேணாம்னு சொல்ல முடியுமா?

நிஜமா நல்லவன் said...

தொழிலதிபர் நந்துவை வெறும் கிளை கழக தலைவராக நியமித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.....அவரோட தகுதிக்கு அகில உலக தலைவர் பதவி ஒன்றை புதிதாக ஏற்படுத்தி கொடுக்குமாறு வாலை அதிகார தோரணையுடன் (எவ்ளோ நாளைக்கு தான் பணிவா கேக்குறது) கேட்டு கொள்கிறேன்!

நிஜமா நல்லவன் said...

வாலோட வாலில் நெருப்பை பத்த வச்சது யாரு?

Mahesh said...

ரெஸ்ட் எடுத்தே டயர்டா? அந்த டயர்டுக்கு ரெஸ்ட் எடுத்து அதுல டயர்ட் ஆகி அதுக்கு ரெஸ்ட் எடுத்து..... சே ரொம்ப டயர்டா இருக்கு. என்னையும் சேத்துக்கோங்க.... ஜமால் அண்ணன் கிட்ட போய் கேடு ஜாயிண் பண்ண டயர்டா இருக்கு... யாராவது என்னயும் சேத்து விடுங்களேன் !!

கார்க்கி said...

என்னை விட்டுட்டிங்களே சகா.. உடனே பதவி கொடுத்து அத பதிவுல இணைச்சுடுங்க. இதுக்காக இன்னொரு தடவ பின்னூட்டம் போட முடியாது. பி காஸ் ஐ ஆம் டயர்ட் யூ நோ

தாமிரா said...

Mahesh said...
ரெஸ்ட் எடுத்தே டயர்டா? அந்த டயர்டுக்கு ரெஸ்ட் எடுத்து அதுல டயர்ட் ஆகி அதுக்கு ரெஸ்ட் எடுத்து..... சே ரொம்ப டயர்டா இருக்கு.
// ரசித்தேன்.

ஹிஹி ஜூப்பர் கவுஜ.!

பரிசல்காரன் said...

அருகிலேயே இருக்கும் எனக்கு எந்தப் பதவியையும் கொடுக்காததை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க ஆசைதான். எவன்போய் பந்தல் போட்டு ஒக்கார்ந்து ஆரம்பிக்கறதுன்னு சோம்பேறித்தனமா இருக்கு. அதுனால விடறேன்!!!

T.V.Radhakrishnan said...

என்னைவிட இவற்றில் திறமை குறைந்தவர்களுக்கு பதவி அளித்ததை கண்டித்து....ஆவ்.......கொர்...கொர்...கொர்...

வித்யா said...

எங்க என் பதவி எங்க என் பதவி:))

Maximum India said...

//இவண் ரெஸ்டு எடுத்து,
ரெஸ்டு எடுத்து
டயர்டாணவர்கள் சங்கம்.//

சூப்பரப்பு! :)

நந்து f/o நிலா said...

வாலு போஸ்ட்ட விட கமெண்ட்ஸ் கலக்குதுய்யா...

சங்கத்துக்கு தோதான சிங்கங்கள் எத்தனை எத்தனை? எல்லோரையும் சீக்கிரம் சங்கத்துல சேத்துங்க.எல்லா வேலைக்கும் என்னை எதிர் பாக்காதீங்க.

i feel so tired, வரட்டுமா?

அ.மு.செய்யது said...

எனக்கு ஒரு ஆபிஸ்பாய் போஸ்ட் கொடுங்க தலைவா !!!!!

Arun Kumar said...

ரொம்ப ரெஸ்ட் எடுத்தா களைப்பு வராதா?

தாரணி பிரியா said...

கோவை கிளை என்னாச்சு? கிளை ஆரம்பிக்க எல்லாம் நாங்க சோம்பேறித்தனம் படமாட்டோம். தொடர்ந்து நடத்ததான் ..........

மணிகண்டன் said...

நான் தமிழன் வால்பையன். யாரும் எனக்கு பதவி தரணும்ன்னு எதிர்பார்க்க மாட்டேன். நானே ஐரோப்பாவின் செயலாளர், பொருளாளர்.

புதியவன் said...

//உழைப்பு உயர்வைத் தரும்,
உயர்வு புகழைத் தரும்,
புகழ் பணத்தை தரும்,
பணம் திமிரைத் தரும்,
திமிர் ஆணவத்தைத் தரும்,
ஆணவம் அழிவைத் தரும்

அதனால் உழைப்பை எதிர்ப்போம்.//

கவுஜ அருமை...

புதியவன் said...

//இவண் ரெஸ்டு எடுத்து,
ரெஸ்டு எடுத்து
டயர்டாணவர்கள் சங்கம்.//

இது கலக்கல்...

புதியவன் said...

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

சிங்கை கிளையின் தலைவர் நட்புடன் ஜமால் மற்றும் செயலாளர் நிஜமா நல்லவன் ஆகியோருக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்...

Anonymous said...

கோ ப சே பதவி எனக்கு தந்தா நானும் தயார் :-)
நாடோடி மன்னன் :-)

tamil cinema said...

பதவி ஏதாச்சும் உண்டா?

தமிழ்நெஞ்சம் said...

ஆஆஆஆஆஆ

தமிழ்நெஞ்சம் said...

Heavy Competion.. .. ..

தமிழ்நெஞ்சம் said...

கவிதை+லொல்லு=கவுஜ

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டம் போட டயர்டா இருக்கு

vettriselvan said...

வித்தியாசமான சங்கமாயிருக்கே. இந்த சங்கத்துக்கு நான் தான் கொள்கைப் பரப்புச் செயலாளர். அதாவது கொ.ப.செ.

Invólucro said...

Good Blog!!!
Involucro

Invólucro said...

Good Blog!!!
Involucro

வெண்பூ said...

செம கவுஜ வால்.. ரொம்ப நாள் கழிச்சி ஒரு மொக்க போட்டிருக்கீங்க (பின்ன உங்களுக்கு பின்னூட்ட சண்டை போடவே நேரம் சரியா இருக்கு..).. :)))

வெண்பூ said...

என்னய்யா இது? எல்லாரும் எனக்கு பதவி குடு, என்னை சங்கத்துல சேத்துக்கன்னு சொல்லிகிட்டு.. சங்கத்துல ரெஸ்ட் எடுக்கவே நமக்கு நேரம் பத்தல, இதுல புது உறுப்பினர் சேர்க்குறத எல்லாம் யாரு பாக்குறது.. சரி சரி (ஒரு கொட்டாவி விட்டுக்கேறேன் இருங்க). எல்லாரும் லைன்ல நின்னு நீங்களா எதுனா அப்ளிகேஷன் எழுதி குடுத்துட்டு போய் அப்படி ஒரு ஓரமா உக்காந்து ரெஸ்ட் எடுத்துகுங்க.

தலீவர் வர்ற நேரமாச்சு, அவருக்கு கதவுக்கு பக்கத்த்துலயே ஒரு இடம் குடுத்துடுங்க.. ரொம்ப தூரம் நடந்தா டயர்ட் ஆயிடுவோம் பாருங்க..

சொல்லரசன் said...

நல்ல கவிதையாக இருக்கிறதே என்று நினைத்து படிக்கையில்..... ஜந்தாவது வரியில் தெரிந்தது இது ஒரு மொக்கை என்று.சரி பின்னுட்டத்திற்கு வந்தால் உலக மகாமொக்கை பட்டாளமே இருக்கிறார்கள்.
வாழக உங்கள் கல[ழ]கம்,வளர்க உங்கள் தொண்டு.

தமிழ்நெஞ்சம் said...

juper.. super ஜூப்பர்.

/ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டம் போட டயர்டா இருக்கு

கோவி.கண்ணன் said...

//சிங்கை கிளை
தலைவர் :நட்புடன் ஜமால்
செயலாளர் :நிஜமா நல்லவன்//

எங்க ஜமாலைப் பார்த்தால் உங்களுக்கெல்லாம் கிண்டலாப் போச்சா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

நன்றி சென்ஷி

நன்றி நர்சிம்

நன்றி ஆனந்தன்

நன்றி ஜமால்

நன்றி நையாண்டி நைனா
எடுத்துகோங்க! கேக்காதிங்க!

நன்றி ஜோதிபாரதி

நன்றி நான் ஆதவன்

நன்றி ஜோதிபாரதி
//ஈரோட்டில் வால்பையன் என்பவரை நியமித்ததை கண்டிக்கிறோம்.//

இதுக்கு ஸ்பெஷல் நன்னி

வால்பையன் said...

நன்றி ச்சின்னபையன்

நன்றி ஜீவன்
சபாஷ் சரியான போட்டி

நன்றி தமிழன்-கறுப்பி

நன்றி நிஜமா நல்லவன்
//வாலோட வாலில் நெருப்பை பத்த வச்சது யாரு?//
யார்கிட்டயும் சொல்லாதிங்க! ஜோசப் பால்ராஜ் அண்ணாச்சி தான் உங்கள இழுத்துவிட சொன்னார்

நன்றி மகேஷ்

நன்றி கார்க்கி
உங்க கதை தான் ஹைதராபாத்துக்கே தெரியுமே!

வால்பையன் said...

நன்றி தாமிரா

நன்றி பரிசல்
வேலை டவுசர் கிழியும் அளவுக்குன்னு சொன்னாங்களே!

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி வித்யா

நன்றி மோகன்பிரபு
மும்பை தொகுதி வேணுமா உங்களுக்கு

நன்றி நந்து அண்ணா
சரியான தலைமை தான்

நன்றி செய்யது

நன்றி அருண்குமார்

நன்றி தாரணிபிரியா
கோவை பொறுப்பு அங்கிள் சஞ்சயிடம் உள்ளது, கேட்டு பெற்று கொள்ளவும்

நன்றி மணிகண்டன்

வால்பையன் said...

நன்றி புதியவன்

நன்றி நாடோடிமன்னன்

நன்றி தமிழ்சினிமா

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி வெற்றிசெல்வன்

//Invólucro said...

Good Blog!!!
Involucro//

இவுங்க யாருன்னு தெரியலையே

வால்பையன் said...

நன்றி வெண்பூ
சண்டையெல்லாம் நீங்க வேடிக்கை பார்த்துகிட்டு தான் இருக்கிங்களா?

நன்றி சொல்லரசன்

நன்றி கோவி கண்ணன்
உங்களுக்கு தான் பதவி தருவதாக இருந்தது, நீங்கள் பிஸியாக சுற்றுலாவில் இருந்தீர்கள். பிஸி என்ற வார்த்தைகே நாங்கள் எதிரி என்பதால் உங்களுக்கு பதவி கட்

RAMYA said...

உங்கள் சங்கத்திலே நானும் உறப்பினர்
ஆகுறேன், கட்டணம் எவ்வளவு??

தினச் சந்தா அல்லது மாதச்சந்தா
இல்லே வருடச்சந்தாவா???

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
எனக்கு ஒரு ஆபிஸ்பாய் போஸ்ட் கொடுங்க தலைவா !!!!!

//

கண்டிப்பா இந்த பதவியை
கொடுத்திடுங்க வால்பையன்
இல்லேன்னா ரொம்ப கஷ்டம்
ஆட்டோவை வீட்டுக்கு அனுப்புவாரு
அப்பப்பா எனக்கு ஒரே tired ஆ இருக்கே!!

சிங்கள் டீ கிடைக்குமா?

எம்.எம்.அப்துல்லா said...

இந்த பதிவ படிச்சவுடனேயே பின்னூட்டம் போட நினைச்சேன்...கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்ததால இப்பதான் முடுஞ்சுச்சு

அண்ணே வாலு....ரொம்ப லொல்லு ஜாஸ்த்தி ஆகுது :)))))))))

ஸ்ரீராம் said...

என்னையும் சேத்துக்கோங்கபா..

!

Blog Widget by LinkWithin