150. சைலன்ஸ்! நன்றி சொல்லும் நேரமிது!

வழக்கொழிந்த சொற்கள்,வழகொழிந்த பொருள்கள் தேடும் நாம் வழகொழிந்த பழக்கங்களை தேட மறந்து விட்டோம். அதில் ஒன்று தான் நன்றி சொல்லுதல். என்னுடய இந்த 150 தாவது பதிவை நன்றி சொல்ல பயன்படுத்தி கொள்கிறேன்.

நண்பர் ஒருவரின் நம்பரை சாட்டில் வாங்கி போன் செய்தால், “என்ன பேசுரதுன்னே தெரியல, பெப்ஸி உமா கூட பேசுற மாதிரி இருக்குங்கிறார்”. எனக்கு கூச்சமும், வெட்கமுமாக இருக்கிறது.
நம்புங்க நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லை, அதே நேரம் ஒருவரை இம்மாதிரியாக பாராட்டுவது அவருக்கு தலைகணம் உருவாக காரணமாக ஆகிவிடலாம், தயவுசெய்து இம்மதிரியெல்லாம் பேசி அவர்களை செலிபிரட்டி ஆக்கி குழியில் தள்ளி விடாதீர்கள்.
*************************

2007 நவம்பர் மாதம் ப்ளாக் ஆரம்பித்தேன், ஆனந்தவிகடன் மூலம் தெரிந்த ப்ளாக்குகள் படித்து, பின் தமிழ்மணம் அறிந்து நானும் அதில் இணைந்து இன்று 150 வது பதிவை எழுதி கொண்டிருக்கிறேன்.

வந்த புதிதில் என்ன எழுதுவதென்றே தெரியாது, ஏகப்பட்ட எழுத்து பிழைகள் வேறு, ப்ளாக்கை எதற்காக பயன்படுத்தலாம் என்ற வரைமுறை இல்லாமல் சகட்டுமேனிக்கு பதிவுகள் இருக்கும்,
ஒரே ஒரு போஸ்டர் மட்டுமே போட்டு இன்றும் அதை ஒரு பதிவாக கணக்கு காட்டி கொண்டிருக்கிறேன். இடையில் ஏற்பட்ட திருப்பம் மட்டும் இல்லையென்றால் ப்ளாக்கின் மேல் சலிப்பு ஏற்பட்டு என்றோ விலகியிருப்பேன்.

அந்த திருப்பம்!

சாதரணமாக எல்லாருடய பதிவிலும் கும்மிகளை அடித்து கொண்டிருந்த நான் முதன் முதலாக கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தேன். தி.மு.க கட்சியின் மீது எனக்கு எந்த வித தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை, அதே போல் எந்த கட்சியின் மீது மதிப்பு இல்லை. அந்த காரணத்தால் நடுநிலைவாதியாக என்னை நினைத்து கொண்டு நண்பர் எழுதிய தி.மு.க ஆதரவு பதிவுக்கு எதிராக பின்னூட்டம் இட்டேன். அந்த பிரச்சனை எங்கங்கோ போய், ஒன்றுக்கும் உதவாத என்னை தமிழ்மணம் முழுதும் பிரபலபடுத்தியது, இன்று வால்பையன் என்று ஒருவன் பதிவு எழுதுவது உங்களுக்கு தெரியுமென்றால் அந்த பதிவரே காரணம் எனது நன்றிக்காக, அவர் எது பட்டாலும் சரி(சந்தோசம், வருத்தம் அந்த மாதிரி) உண்மை உண்மை தானே!
தோழர் லக்கிலுக்(யுவகிருஷ்னா) அவர்களுக்கு,

வலையுலகில் நான் முதன் முதல் பார்த்தது இவரைத்தான், தோற்றம் தான் வயதான மாதிரி இருந்தாலும், என்னை விட இளமையான கருத்துகளை உடையவர், வயதாகி விட்டால் நாத்திகம் குறைந்து ஆத்திகம் தொடங்கி விடும் என்று கூற்றுக்கு இன்றும் சவால் விட்டு கொண்டிருப்பவர், நாத்திக விசயத்தில் எனது மானசீக குரு ஐயா தருமி அவர்களுக்கு,

வலையுலகில் இவரை போல் வேறு யாரையும் நான் இந்த அளவுக்கு வம்புக்கு இழுத்ததில்லை, ஆனாலும் அலைபேசியில் அழைத்து “சுகர் எப்படியிருக்கு” ”வாக்கிங் போகிறாயா” என்று ஒரு தந்தையின் ஸ்தானத்தில் எனக்கு அறிவுரை வழங்கும் டோண்டு ஐயா அவர்களுக்கு,

நானும் இருக்கிறேன் என்று ஆங்காங்கே பின்னூட்டம் இட்டு கொண்டிருந்த பொழுது, நீ தான் ஆசிரியர் என்று ஒரு பொறுப்பற்றவனுக்கு பொறுப்பை கொடுத்து வலையுலகில் மேலும் என்னை பிரகாசிக்க வைத்த ஐயா சீனா அவர்களுக்கு,

கள விவாததிற்கு முன் சில விசயங்களை உறுதி படுத்தி கொள்ள என்நேரம் அழைத்தாலும் முகம் சுழிக்காமல் பதிலளிக்கும் அண்ணன் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களுக்கு,

வெகுஜன பத்திரிக்கைகளில் பல சிறுகதைகள் எழுதியவர், அரசு பணியில் பெரிய பொறுப்பில் இருப்பவர்(இன்று கூட தொலைக்காட்சியில் வந்தார்) என்ற தலைகணம் சிறிதும் இல்லாமல்,
“வாலு அடுத்த தடவை நானே உனக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்குவேன்” என்று சபை இறுக்கத்தை குறைக்கும் அங்கிள் லதானந்த் அவர்களுக்கு,

எங்கே எழுதிய பதிவுகளை படித்து அறிவை வளர்த்து கொள்ளாமல் போய் விடுவானோ என்று, எப்போது பதிவெழுதினாலும் உடனே சாட்டில் சுட்டி கொடுக்கும்(எனக்கு மட்டும் தானா?)
அன்பர் அபிஅப்பா அவர்களுக்கு,

இலக்கியத்தில் நான் தொட கூட முடியாத(தெரிஞ்சா தானே தொடறதுக்கு)தூரத்தில் இருந்தாலும் சாட்டில், பத்து வருடம் பழகிய நண்பனை போல் அரட்டை அடிக்கும் நண்பர் அய்யனார் அவர்களுக்கு,

பதிவுலகில் நகைச்சுவை மன்னர் என்று பெயர் இருந்தாலும், என் சாட்டில் வந்து “உனது பதிவு நல்லாருக்கு வால்” என்று பாராட்டும் அண்ணன்(இல்லை அங்கிளா யாராவது சொல்லுங்கப்பா) குசும்பன் அவர்களுக்கு,

எனக்கு உடன்பிறந்த மூத்த சகோதரன் இல்லை என்று குறையை தீர்த்து வைத்த அண்ணன் ரமேஷ் வைத்யா அவர்களுக்கு,

அலைபேசியில் அழைத்து “உங்களை கலாய்த்து கொள்ளட்டுமா” என்று அனுமதி கேட்டால், இப்படி அந்நியபடுத்திட்டிங்களே வால்ன்னு வருத்தப்படும் அண்ணன் தாமிரா அவர்களுக்கு,

காக்டெயில் என்று பெயரில் நீங்கள் எழுதலாம் என்று இருந்தீர்களாமே, நான் வேண்டுமானால் பெயரை மாற்றி கொள்ளட்டுமா என்று விட்டு கொடுத்தலின் விளிம்புக்கு செல்லும் அன்பு சகா கார்க்கி அவர்களுக்கு,

நமது வலையுலகில் அடுத்த வெகுஜன பத்திரிக்கை நட்சத்திரம் என்ற முத்திரை இருந்தும் சிறிதும் அலட்டல் இல்லாமல் அதே அன்போடு பழகும் அண்ணன் பரிசல் அவர்களுக்கு,

என்நேரமாக இருந்தாலும்(விடியற்காலை 5 மணியானலும்) ரயில் நிலையம் வந்து அழைத்து செல்ல காத்திருக்கும் நண்பர், ஆனால் அவரது வேலையை பார்த்தால் இவருக்கு கீழ் ஆயிரகணக்கில் இருக்கிறார்கள். இம்மாதிரியான ஆட்களை பார்க்கும் பொழுது தலைகணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் மனிதரே இல்லை, அந்த மாமனிதர் அண்ணன் நர்சிம் அவர்களுக்கு,

என்னிடம் கருத்து மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும், யாரேனும் என்னிடம் தனி மனித தாக்குதல் மேற்கொண்டால், ”வால் எனது உடன்பிறவா சகோதரன் என்று சண்டைக்கு நிற்கும் இன்னொரு உடன்பிறவா அண்ணன் கணேஷ்(வீணாப்போனவன்னு பெயர் வச்சிக்கிட்டா எப்படி சொல்றது) அவர்களுக்கு,

”அழைத்து” கூகுள் விளம்பரம் எப்படி வைப்பது!, எம்மாதிரியான முறைகளை மேற்கொண்டால் சம்பாரிக்கலாம் என்று சகமனிதனும் சம்பாரிக்கனும் என்று நினைக்கும் நண்பர் ஜிம்ஷா அவர்களுக்கு,

எங்கேயோ நான் பின்னூட்டமாக நான் போட்ட எனது அலைபேசி நம்பரில் தொடர்பு கொண்டு, எனது பதிவுகளில் எனக்கே தெரியாத நுண்ணரசியலை விவரிக்கும் தோழி ரம்யா அவர்களுக்கு,

பதிவுலகில் மன உளைச்சளில் இருந்த நேரத்தில் தினமும் யாஹூ சாட்டில் எனக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்த தோழி கபீஷ் அவர்களுக்கு,

சர்ச்சைகுறிய பதிவுகள் எழுதும் முன்னர், எனது எதிரணியனியரிடமிருந்து எம்மாதிரியான கேள்வி கணைகள் வரலாம் என தெரிந்து கொள்ள சோதனை சாவடியாக பயன்படுத்தி கொள்ளத்தான் அழைக்கிறான் என்று கூட தெரியாத பச்சை(கருப்பு) குழந்தை அண்ணன் கும்கி அவர்களுக்கு,

எனக்கு பின் எழுத வந்தாலும், ப்ளாக் என்பதை எப்படி பயன்படுத்த வேண்டுமென பல பேருக்கு முன்மாதிரியாக இருக்கும் நண்பர் மோகன்பிரபு(மேக்ஸிமம் இந்தியா) அவர்களுக்கு,

மென்பொருளாலானலும் சரி, சினிமா பாட்டானலும் சரி தேடி கிடைக்கவிட்டால் ஒரு வார்த்தை சொன்னால் போதும், அது எங்கிருந்தாலும் தேடி தந்து ஆச்சர்யமூட்டும் நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களுக்கு,

அமெரிக்காவில் இருந்தாலும் மாதம் ஒருமுறை அழைத்து நலம் விசாரிக்கும் அண்ணன் அமரபாரதி அவர்களுக்கு,

தமிழ்நெஞ்சம் பதிவில் லோகோ நல்லாருக்கு, நானும் செய்யனும் என்று தான் சொல்லியிருந்தேன், மறுநாளே எனது மெயிலுக்கு தற்போது இருக்கும் லோகோவை செய்து அனுப்பி வைத்த நண்பர் பாலசந்தர் அவர்களுக்கு,

நொடிந்த நேரத்தில் நான் இருக்கேனடா உனக்கு என்று பின்னூட்டம் அளித்து ஊக்கமளித்த டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு,

பிரச்சனை வரும்பொதெல்லாம் அவதாரம் எடுக்கும் எனது அன்பு நண்பர் ப்ளீச்சிங் பவுடர் அவர்களுக்கு,

கூடவே, யார் எதை சொன்னாலும் நான் உன் கூடவே இருக்கிறேன் வால் என்று அலைபேசியில் அழைத்து சொல்லும் அண்ணன் நல்லதந்தி அவர்களுக்கு,

ஒரு தொழிலதிபர் என்ற மமதை கொஞ்சம் கூட இல்லாமல் என்னை போன்ற வெட்டிகள் செய்யும் போனுகெல்லாம் பொறுமையாக பதில் சொல்லும் அங்கிள் சஞ்சய் அவர்களுக்கு,

காலை, மதியம், இரவு என்று ஒரு பொழுதும் விடாமல் சாப்பிடிங்களா என நலம் விசாரிக்கும் சகோதரி பூர்ணிமாசரண் அவர்களுக்கு,

எனது கருத்துரிமைக்காக உடன் நின்ற சகோதரர்கள், நட்புடன் ஜமால் மற்றும் அ.மு.செய்யது அவர்களுக்கு,

எங்கேயேனும் நானும் ஒரு எழுத்தாளன் என்ற தலைக்கணம் வந்து விட கூடாது என ஒரு வரி விடாமல் என்னை கலாய்த்து என் ஆணவத்தை போக்கும் நண்பர் லவ்டேல் மேடி அவர்களுக்கு,

சிங்கையில் இருந்து போன் செய்து நலம் விசாரிக்கும் அண்ணன் நிஜமா நல்லவன் அவர்களுக்கு,

தனியாக திரட்டி ஒன்றை ஆரம்பித்து என்னையும் மதித்து அதில் இணைத்து(பதிவை மட்டும் தான்) ஆலோசனைகள் கேட்கும் நண்பர் மோகன்ராஜ் அவர்களுக்கு,

கவிதைன்னா என்னான்னே தெரியாம கிறுக்கறதையெல்லாம் நல்லாருக்குன்னு சொன்னதோடு மட்டுமில்லாமல் இன்றும் என்னை குரு என்று அழைத்து நெளிய வைக்கும் நண்பர் அனுஜன்யா அவர்களுக்கு,

”என்ன வாங்கி வர வால்”(உங்கள் அன்பே பல கோடிக்கு சமம்) என்று உரிமையோடு விசாரிக்கும் அண்ணன் ராகவன் நைஜிரியா அவர்களுக்கு,

எங்கேயேனும் தவறாக பின்னூட்டம் இட்டிருந்தால் அழைத்து அன்போடு கடிந்து கொள்ளும் அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு,

என்னை போன்ற சிறுவனையும் அண்ணே என்று அழைத்து மரியாதைக்கே இலக்கணம் கற்று கொடுக்கும் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களுக்கு,

பெங்களுர் வரும் போது(நீங்கள் அங்கே இருக்கும் போது) எனக்காக நேரம் ஒதுக்கி, நான் பக்கத்து டேபிளில் ஆம்லேட் எடுப்பதையெல்லாம் பொறுத்து கொள்ளும் அண்ணன் செந்தழல் ரவி அவர்களுக்கு

அங்கிருந்து அப்படியே அனுப்பி விடாமல் பேருந்து நிலையம் வரை வந்து அனுப்பி விட்டு மறுநாள் நல்லபடியாக பிரயாணம் அமைந்ததா என நலம் விசாரிக்கும் நண்பர் பெங்களூர் அருண் அவர்களுக்கு,


அருகிலேயே இருந்து கொண்டு நான் எழுதுவது முதல், எழுந்து நிற்பது வரை செம்மை படுத்தும் எனது வலையுலக ஆசான் அண்ணன் நந்து f/o நிலா அவர்களுக்கு,

பின்னூட்ட புயலாலும், வாழ்த்து மழையாலும் என்னை திக்குமுக்காட வைக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும்,

எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு சம்பளமும் கொடுத்து, ஒரு கணிணியும் கொடுத்து பதிவெழுதவும், கும்மி அடிக்கவும் அனுமதி அளித்திருக்கும் எனது நண்பர் கார்த்திக் அவர்களுக்கு,

வெறும் நன்றி என்ற வார்த்தையில் முடித்தால் எனக்கு சோறு இறங்காது, தூக்கம் வராது.
ஒரு மனிதனை துன்பத்துகுள்ளாக்குவது நிராகரிப்பு,
அவனையே மகிழ்ச்சிக்குளாக்குவது அங்கிகாரம்.
எனது கருத்துகளுக்கும் அங்கிகாரம் அளித்த உங்களுக்கு, எனது மகிழ்ச்சியில் பொங்கும் கண்ணீரால் பாதபூஜை செய்ய வேண்டும்.


நான் எங்கேயேனும் உங்களை மிகைபடுத்தி பாராட்டியிருக்கிறேன் என்று நினைப்பீர்களேயானால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் மிகை பட்ட மதிப்புக்கு அது ஒன்றும் கூடியதல்ல!

111 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் அமுதன் said...

me tha 1 st

நந்து f/o நிலா said...

//எழுதுவது முதல், எழுந்து நிற்பது வரை செம்மை படுத்தும் எனது வலையுலக ஆசான்//

கோத்து உட்டாச்சா?

நீதான் இத்தனைக்கும் காரணமான்னு என் வீட்டுக்கு எத்தனை ஆட்டோ வரபோவுதோ?

சந்தோசமாய்யா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

vaazhthukkal vaalpaiyan. mannikkavum thamizhil ezhutha mudiyavillai.system error.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் 150 ஆவது பதிவுக்கு

அருண் said...

வாழ்த்துக்கள் வாலு. 1500 பதிவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அருண்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் நண்பரே ...

நாமக்கல் சிபி said...

150 க்கு வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

//எங்கே எழுதிய பதிவுகளை படித்து அறிவை வளர்த்து கொள்ளாமல் போய் விடுவானோ என்று, எப்போது பதிவெழுதினாலும் உடனே சாட்டில் சுட்டி கொடுக்கும்(எனக்கு மட்டும் தானா?)//

நான் கூட அவருக்கு நன்றி சொல்லணும் இந்த விஷயத்திலே!

:))

நட்புடன் ஜமால் said...

\\ஒரு மனிதனை துன்பத்துகுள்ளாக்குவது நிராகரிப்பு,
அவனையே மகிழ்ச்சிக்குளாக்குவது அங்கிகாரம்.\\

மிக அழகா சொன்னீங்க நண்பரே ...

cheena (சீனா) said...

அன்பின் வால்,

நூற்றி ஐமபதாவது பதிவிற்கு நல்வாழ்த்துகள்

இத்தனை நல்லவர்களையும் நினைவில் வைத்திருந்து நன்றி கூறும் நற்பண்பு பாராட்டுக்குரியது வால்.

அருமை அருமை - மனக் நெகிழ்கிறது-வால்

நட்புடன் ஜமால் said...

மிக மிக இளைய பதிவரான எங்களையும் சுட்டி கொடுத்து, அதுவும் உங்கள் 150ஆவது பதிவில் ...

மிக்க நன்றி நண்பரே ...

Kumky said...

முல்லா தினசரி., ஒரு கழுதய கூட்டிட்டு., தனது நாட்டு பார்டர்ல உள்ள சோதனைசாவடிய.,கடந்து போய்ட்டேயிருப்பாராம்.
சோதனை சாவடில இருந்தவங்களுக்கு., முல்லா கூட்டிவர கழுதமேல ஒன்னுமே இல்லியே எதுக்கு தினசரி வெறும் கழுதய கூட்டிட்டு போறாருன்னு ஆச்சரியமா இருக்குமாம்.
அப்பாலிக்கா சோதனை சாவடில வேளை பாக்குற ஒருத்தர், ஆச்சரியம் தாங்க முடியாம முல்லாவ வீட்டுல சந்திச்சு “அப்படி என்னதான் கடத்தல் பண்ணுறீங்க..எங்களால ஒன்னியும் கண்டுபிடிக்கவே முடியல”அப்பிடின்னு கேட்டாராம்.
அதுக்கு முல்லா”தினசரி ஒரு கழுதயத்தாம் கடத்துறேன்” என்றாராம்.
இப்பிடி ஆகிப்போச்சு நம்ம கதை “இல்லியா வால்?”

அமர பாரதி said...

நன்றிக்கு நன்றி வால் தம்பி.

அ.மு.செய்யது said...

நெகிழ வைத்து விட்டீர்கள்....

அட போங்கப்பா..

Kumky said...

எப்பிடியோ அடிச்சு பிடிச்சு கட்டிபொறண்டு விழுந்து எழுந்து திட்டி திட்டாம உதை விட்டு விடாம வாங்கி வாங்காம குடிச்சி நடிச்சி மொரண்டு பிடிச்சி பிடிக்காம 150 போட்டு தள்ளிட்டிங்க...
வாழ்த்துக்கள்...வாலய்...

narsim said...

150க்கு வாழ்(ல்)த்துக்கள்!!தொடர்ந்து கலக்குங்க சகா.. ராவா..

அ.மு.செய்யது said...

ஒன்னே லெக் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்...

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
மிக மிக இளைய பதிவரான எங்களையும் சுட்டி கொடுத்து, அதுவும் உங்கள் 150ஆவது பதிவில் ...

மிக்க நன்றி நண்பரே ...
//

காப்பி பேஸ்டு போட்டுக்கறேன்.

Kumky said...

நந்து வூட்டு அட்ரஸ் மட்டும் கொடுங்க.....நெறய பேருக்கு தேவைப்படும்.

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் நண்பரே.

அ.மு.செய்யது said...

//அ.மு.செய்யது said...
ஒன்னே லெக் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்...
//

சாரி..ஒன்று ரூம் செஞ்சுரி வாழ்த்துகள்.

எம்.எம்.அப்துல்லா said...

//எனக்கு சோறு இறங்காது //

அது என்னண்ணே உங்களுக்கு சரக்கெல்லாம் இறங்குது!சைடிஸ் எல்லாம் இறங்குது! சோறு மட்டும் இறங்க மாட்டேங்குது?

:)

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் வாலு அண்ணே. நானெல்லாம் எப்ப 150 வர்றது? உங்கள மாதிரி நம்ப ஆளுங்கள பார்த்து நம்ம எழுதுன மாதிரி சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் :)

அ.மு.செய்யது said...

//என்னை போன்ற சிறுவனையும் //

சர்ச்சைக்குரிய வரிகள்.

எம்.எம்.அப்துல்லா said...

// அ.மு.செய்யது said...
//என்னை போன்ற சிறுவனையும் //

சர்ச்சைக்குரிய வரிகள்.

//

கரெக்ட் சைய்யது அண்ணே :)

எம்.எம்.அப்துல்லா said...

ஆமா வாலு பிளீச்சிங்பவுடர்ங்குற பேர்ல நீங்க எழுதுனதையும் சேர்த்தா 150 மேல வருமே??

(ஏதோ நம்பளால முடிஞ்சது...கொளுத்திப் போடுவோம்)

:))

எம்.எம்.அப்துல்லா said...

செய்யது அன்ணே ஆன்லைன்ல இருக்கீங்களா? ஃபீரி தான? நூறு போடுவோமா இங்க??

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

உங்களுக்கு இவ்வளவு நண்பர்களா (நலம் விரும்பிகளா) என்று ஒரு நிமிடம் வியப்பாக இருந்தாலும், உங்களுடைய நல்ல குணத்திற்கும் நல்ல மனதிற்கும் இன்னும் பல நண்பர்கள் (நலம் விரும்பிகள்) இருக்க நீங்கள் தகுதியானவர் என்றே கருதுகிறேன்.

என்னுடைய பெயரையும் உள்ளே வைத்ததற்கு நன்றி.

இன்னும் பல நல்ல பதிவுகள் நீங்கள் இட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். உங்களுக்கு எல்லா நன்மைகளையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். (உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் பரவாயில்லை. எங்களுக்கு இருக்குல்லே?).

மீண்டுமொரு முறை 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

//உங்களுக்கு எல்லா நன்மைகளையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். (உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் பரவாயில்லை. எங்களுக்கு இருக்குல்லே?).
//

ரிப்பிட்டிக்கிறேன்.

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...
செய்யது அன்ணே ஆன்லைன்ல இருக்கீங்களா? ஃபீரி தான? நூறு போடுவோமா இங்க??
//

இருக்கோம்ணே...

நீங்க இருக்கிஹ‌ளா..

அ.மு.செய்யது said...

// அ.மு.செய்யது said...
//என்னை போன்ற சிறுவனையும் //

சர்ச்சைக்குரிய வரிகள்.

//

கரெக்ட் சைய்யது அண்ணே :)
//

அண்ண‌னா !!! இது அத‌ விட‌ ச‌ர்ச்சைய‌ கிள‌ப்பும் போல‌கீதே..

அ.மு.செய்யது said...

//பெங்களுர் வரும் போது(நீங்கள் அங்கே இருக்கும் போது) எனக்காக நேரம் ஒதுக்கி, நான் பக்கத்து டேபிளில் ஆம்லேட் எடுப்பதையெல்லாம் பொறுத்து கொள்ளும் அண்ணன் செந்தழல் ரவி அவர்களுக்கு//

ஓஹ்.இவரு மட்டும் ஏன் உங்கள பின்னூட்டத்தில பொறட்டி எடுக்குறாருன்னு
இப்ப தான் பிரியிது.

அ.மு.செய்யது said...

//எனது கருத்துகளுக்கும் அங்கிகாரம் அளித்த உங்களுக்கு, எனது மகிழ்ச்சியில் பொங்கும் கண்ணீரால் பாதபூஜை செய்ய வேண்டும்.
//

எழுத்துக்களில் ஒருவித "தெளிவு" இருக்கிறதே...?!?!?!?!?

சின்னப் பையன் said...

வாழ்த்துகள் 150 ஆவது பதிவுக்கு...

ஆ.ஞானசேகரன் said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

இராகவன் நைஜிரியா said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வால்.

இராகவன் நைஜிரியா said...

// சாதரணமாக எல்லாருடய பதிவிலும் கும்மிகளை அடித்து கொண்டிருந்த நான் //

அது சாதாரண கும்மியா... கொலைவெறி கும்மியல்லவா...

இராகவன் நைஜிரியா said...

// “என்ன பேசுரதுன்னே தெரியல, பெப்ஸி உமா கூட பேசுற மாதிரி இருக்குங்கிறார்”. எனக்கு கூச்சமும், வெட்கமுமாக இருக்கிறது.//

கூச்சமும், வெட்கமுமாக இருக்கிறது...

பொய் சொல்வதற்கு அளவே இல்லையா...

இராகவன் நைஜிரியா said...

// 2007 நவம்பர் மாதம் ப்ளாக் ஆரம்பித்தேன் //

ஆ....ரம்பம்..... அப்படின்னு நினைச்சு ஆரம்பிச்சீங்களா

இராகவன் நைஜிரியா said...

// ப்ளாக்கை எதற்காக பயன்படுத்தலாம் என்ற வரைமுறை இல்லாமல் //

அப்படி எதாவது வரை முறை இருக்குங்களா என்ன...

நமக்கு தெரிஞ்சு எதுவும் கிடையாதுங்க

இராகவன் நைஜிரியா said...

// ஒரே ஒரு போஸ்டர் மட்டுமே போட்டு //

இதுல போஸ்டர் வேறயா...

வெரிகுட்.. வெரிகுட்... கீப் இட் அப்..

இராகவன் நைஜிரியா said...

// இடையில் ஏற்பட்ட திருப்பம் மட்டும் இல்லையென்றால் ப்ளாக்கின் மேல் சலிப்பு ஏற்பட்டு என்றோ விலகியிருப்பேன். //

யூ மீன் டர்னிங் பாயிண்ட்...

வெரி இண்டரஸ்டிங்....

இராகவன் நைஜிரியா said...

//
வெறும் நன்றி என்ற வார்த்தையில் முடித்தால் எனக்கு சோறு இறங்காது, தூக்கம் வராது.//

பாலும் கசந்த்தடி, படுக்கையும் நொந்ததடி என்று ஆகிவிடுமா?

இராகவன் நைஜிரியா said...

// ஒரு மனிதனை துன்பத்துகுள்ளாக்குவது நிராகரிப்பு,
அவனையே மகிழ்ச்சிக்குளாக்குவது அங்கிகாரம்.//

சரியாகச் சொன்னீர்கள் வால்...

அங்கீகாரம் முக்கியம்

இராகவன் நைஜிரியா said...

// எனது கருத்துகளுக்கும் அங்கிகாரம் அளித்த உங்களுக்கு, எனது மகிழ்ச்சியில் பொங்கும் கண்ணீரால் பாதபூஜை செய்ய வேண்டும். //

தி இஸ் டூ மச் வால்... நாம் நண்பர்கள். நண்பர்களுக்குள் வருத்தம் தெரிவித்தலும், நன்றி நவிலுதலும் கிடையாதப்பா..

இராகவன் நைஜிரியா said...

//
நான் எங்கேயேனும் உங்களை மிகைபடுத்தி பாராட்டியிருக்கிறேன் என்று நினைப்பீர்களேயானால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் மிகை பட்ட மதிப்புக்கு அது ஒன்றும் கூடியதல்ல! //

ஒரு கதைக்கோ, கவிதைக்கோ, கட்டுரைக்கோ அதன் கடைசி வரி, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உங்களின் கடைசி வரி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இராகவன் நைஜிரியா said...

// //அ.மு.செய்யது said...
ஒன்னே லெக் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்...
//

என்னாது இது தப்பு, தப்பா சொல்லிகிட்டு...ஒன்னே ரூம் செஞ்சுரி அடிச்சு இருக்கார்.

இராகவன் நைஜிரியா said...

// எம்.எம்.அப்துல்லா said...

// அ.மு.செய்யது said...
//என்னை போன்ற சிறுவனையும் //

சர்ச்சைக்குரிய வரிகள்.

//

கரெக்ட் சைய்யது அண்ணே :)//

ஆமாம் கரெக்ட் செய்யது & அப்துல்லா அண்ணன்களே...

நான் டபுள் ரிப்பீட் போட்டுகிறேன்

இராகவன் நைஜிரியா said...

// அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
மிக மிக இளைய பதிவரான எங்களையும் சுட்டி கொடுத்து, அதுவும் உங்கள் 150ஆவது பதிவில் ...

மிக்க நன்றி நண்பரே ...
//

காப்பி பேஸ்டு போட்டுக்கறேன்.//

நானும் இத காப்பி பேஸ்ட் போட்டுகிறேன்.

இராகவன் நைஜிரியா said...

அப்படி, இப்படின்னு, இந்த நெட் படுத்தினாலும்,

நம்ம வாலின் 150 வது பதிப்புக்கு

நான் தான் 50 வது பின்னூட்டம்.


ஹா....ஹா....ஹா....

வீணாபோனவன் said...

வாழ்த்துக்கள் அருண். உங்களது நண்பர்கள் வட்டாரம் இன்னும் விரிவடையட்டும்.

-வீணாபோனவன்.

Mahesh said...

அந்த கடேசி வரி ஒண்ணு போதுமே...

அட்டகாசமான நன்றி நவிலல் பத்திரம் !!

கிரி said...

அருண் கலக்கல்.

கும்மி பதிவுகளை குறைத்து நல்ல பதிவுகளை தொடர்ந்து தர வாழ்த்துக்கள்

புதியவன் said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

வினோத் கெளதம் said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் சகா.. நெகிழ வச்சீட்டிங்க

குசும்பன் said...

150க்கு வாழ்த்துக்கள்!

//எழுந்து நிற்பது வரை செம்மை படுத்தும் எனது வலையுலக //

அவரு எழவே ஒரு ஆள் ஹல்ப் செய்யனும் இதுல அவரு உங்களுக்கா?
என்ன கொடுமை இது:)))

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள் வால்:)

priya said...

வாழ்த்துக்கள் நண்பா! தொடரட்டும் உங்கள் பணி.

ers said...

என்னையும் இணைத்ததற்கு நன்றி வால். அத்துடன் இதயம் கணிந்த வாழ்த்துக்கள்.

Bleachingpowder said...

நமக்கு இத்தனை நண்பர்களா தல :))))

பதிவுலக தர்மபடி சொல்லனும்னா, நீங்க இதுவரை எழுதியதுலேயே இது தான் உங்க மாஸ்டர் பீஸ் ;)

Arun Kumar said...

150 அடிச்சத்துக்கு வாழ்த்துக்கள் வால்:)
என்னையும் குறிப்பிட்டதற்க்கு special நன்றி

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழ்த்துகள் நண்பரே....

வினோத் கெளதம் said...

I hav 1 doubt
Bleaching Powder = Tail..

நிஜமா நல்லவன் said...

150 க்கு வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

நன்றிக்கு நன்றி வால்!

நிஜமா நல்லவன் said...

/ குசும்பன் said...

150க்கு வாழ்த்துக்கள்!

//எழுந்து நிற்பது வரை செம்மை படுத்தும் எனது வலையுலக //

அவரு எழவே ஒரு ஆள் ஹல்ப் செய்யனும் இதுல அவரு உங்களுக்கா?
என்ன கொடுமை இது:)))/


ஹா...ஹா...இதை கண்டிப்பா வழி மொழியனும்....:)

KARTHIK said...

// எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு சம்பளமும் கொடுத்து, ஒரு கணிணியும் கொடுத்து பதிவெழுதவும், கும்மி அடிக்கவும் அனுமதி அளித்திருக்கும்//

இதுக்கு நீங்க நாலு அடி அடிச்சிருக்கலாம் பாஸ்.

//எழுதுவது முதல், எழுந்து நிற்பது வரை செம்மை படுத்தும் எனது வலையுலக ஆசான்

கோத்து உட்டாச்சா? //

என்னத்த கோத்துடுராங்க உங்கள

இதெல்லாம் என்னணா ....மண வான்ல நட்சதிரமா ஜொலிக்க வெச்சு அழகு பாக்கதுடிக்குர உங்க நல்ல மனசுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமில்லைணா.

KARTHIK said...

// vinoth gowtham said...

I hav 1 doubt
Bleaching Powder = Tail..//

அதே டவுட்டுதாங்க எனக்கும்.

Bleaching powderகிட்ட வால் இருக்கா இல்லையான்னு தெரியாது.

ஆனா வால்கிட்ட BP இருக்கு

KARTHIK said...

150 அடிச்சத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்

Poornima Saravana kumar said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்:)

தேவன் மாயம் said...

007 நவம்பர் மாதம் ப்ளாக் ஆரம்பித்தேன், ஆனந்தவிகடன் மூலம் தெரிந்த ப்ளாக்குகள் படித்து, பின் தமிழ்மணம் அறிந்து நானும் அதில் இணைந்து இன்று 150 வது பதிவை எழுதி கொண்டிருக்கிறேன்.//

வாழ்த்துக்கள்!!!

தேவன் மாயம் said...

எனது கருத்துரிமைக்காக உடன் நின்ற சகோதரர்கள், நட்புடன் ஜமால் மற்றும் அ.மு.செய்யது அவர்களுக்கு,//

ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்தவிதம் அருமை

கலை அக்கா said...

தன் பாதங்கள் மூலம் குடித்த நீருக்கு பிரதியுபகாரமாக தன் தலையில் நீரை அதுவும் சுவைமிகுந்த இளநீராக தாங்கி திருப்பித்தரும் தென்னையை விட உயர்ந்து விட்டீர்கள் தங்களின் நன்றி உணர்வினை வெளிப்படித்திய விதத்தில் !!

கலை அக்கா said...

நூற்றி ஐமபதாவது பதிவிற்கு நல்வாழ்த்துகள்!!

RAMYA said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வால்ஸ்.

RAMYA said...

\\ஒரு மனிதனை துன்பத்துகுள்ளாக்குவது நிராகரிப்பு,
அவனையே மகிழ்ச்சிக்குளாக்குவது அங்கிகாரம்.\\


இது மிகப் பெரிய விஷயம்
மேலெழுந்த வாரியாக படித்தால்
ச்சே என்றிருக்கும்.

உண்மையை உள்வாங்கிப் பார்த்தால்தான் வலி தெரியும்.

அருமையாச் சொல்லி இருக்கீங்க நண்பரே!!

RAMYA said...

அன்பின் வால்ஸ்,

எனக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

எனக்கு ஒரு அறிமுகம் கொடுத்ததை படித்தவுடன் மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் வந்து விட்டது.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் இங்கு கூற முடியும்.

இங்கு அடையாளம் காட்டப்பட்ட
எல்லோரின் சார்பாகவும், என் சார்பாகவும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

RAMYA said...

நன்றி நவிலுதல் கூட......

அழகான எழுத்து நடையுடனும்,
இவ்வளவு திறன் கொண்டதாகவும், மனம் நிறைந்த நிறைவுடனும் யோசிக்க முடியுமா ???

உயர்ந்த உள்ளம் கொண்ட வெகு சிலரில்
நீங்களும் ஒருவர் வால்ஸ்.

இதை புகழ்ச்சி என்று எண்ண வேண்டாம் நன்றி என்ற இந்த சொல்,
வழக்கொழிந்த சொல்லாகி விடுமோ
என்று நான் பயந்த நேரத்தில்,

சிலர் அதை நிருபித்த நேரத்தில்,
நீங்களும் அந்த சிலரில் ஒருவர்
என்று நிரூபித்து விட்டீர்கள் வால்ஸ்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாழ்த்துகள் வால்.

anujanya said...

நூற்று ஐம்பதுக்கு வாழ்த்துகள் குரு. இன்னும் நிறைய எழுதுங்க. நீங்க உங்க எதிர்-கவிதைகளைச் சேர்த்தால், இருநூறு ஆகிவிடும் :))

பின் தொடர்பவர்களும் நூறைத் தாண்டிவிடும் சீக்கிரமே. 'பெரிய' பதிவர்தான். You are rocking.

அனுஜன்யா

அபி அப்பா said...

நன்றி சொல்வதை கூட இப்படிஅழகா சொல்லமுடியுமா வாலு? ரொம்ப நல்லா இருக்கு இந்த பதிவு!இன்னும் பல ஆயிரம் பதிவு எழுதி தமிழை அடுத்த கட்டத்துக்கு தள்ளிகிட்டு போக வாழ்த்துக்கள்!(யாரு தமிழ்ன்னு கேக்க கூடாது)

SUBBU said...

வாழ்த்துகள் Thala :))))

Unknown said...

// சைலன்ஸ்! நன்றி சொல்லும் நேரமிது! ///



யோவ் வாலு .... யாருக்குயா ........ !! டாஸ்மார்க் கடகாரனுக்கா...??? அதுக்கு முன்னாடி ச்ச்கூலு படிக்கும்போது கட்டலு கட ஆயாகிட்ட முட்டாய் திருடி தின்னியே....... , அந்த யூத் ' க்கு உன்னூட மொதல் நன்றி சொல்லு .......




// என்ன பேசுரதுன்னே தெரியல, பெப்ஸி உமா கூட பேசுற மாதிரி இருக்குங்கிறார்”. //




நல்ல வேலைக்கு , உன்ன அவரு நேருல பாத்திருந்தாருனா ....!!! நின்ன எடத்துலயே நாண்டுகிட்டு செத்திருப்பாரு .........




// எனக்கு கூச்சமும், வெட்கமுமாக இருக்கிறது. //




யோவ் வெண்ண .... இதெல்லாம் உனக்கு எதுக்குயா ........!!!!




// நம்புங்க நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லை, //




இது ஊரருஞ்ச உண்ம ..... !!!! இத நீ சொல்லித்தான் எல்லாருக்கும் தெரியனும்கிறது இல்ல .................!!!



// வந்த புதிதில் என்ன எழுதுவதென்றே தெரியாது, ஏகப்பட்ட எழுத்து பிழைகள் வேறு, ப்ளாக்கை எதற்காக பயன்படுத்தலாம் என்ற வரைமுறை இல்லாமல் சகட்டுமேனிக்கு பதிவுகள் இருக்கும், //



இப்ப மட்டும் உம்பட பதிவுல என்ன வாழுது .......!!! அதே கன்றாவிதான் .........!!!



// இடையில் ஏற்பட்ட திருப்பம் மட்டும் இல்லையென்றால் ப்ளாக்கின் மேல் சலிப்பு ஏற்பட்டு என்றோ விலகியிருப்பேன். //



திருப்பம் இல்லாம இருந்திருந்துனா , ஊரு உருப்புடியா இருதிருக்கும் ...........




// அதே போல் எந்த கட்சியின் மீது மதிப்பு இல்லை //



அடேய் சான்சூய் மண்டையா ......!! உம்மேல யாருக்காச்சும் மதிப்பு இருக்குதான்னு பாருடா......!!!!



// “வாலு அடுத்த தடவை நானே உனக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்குவேன்” என்று சபை இறுக்கத்தை குறைக்கும் அங்கிள் லதானந்த் அவர்களுக்கு, //




ஹ.. ஹ. ஹ .. ஹ... ஹா ...!! யோவ் வெங்காயம் ....!! நல்ல கூத்துயா ..........!!!!




// என்று பாராட்டும் அண்ணன்(இல்லை அங்கிளா யாராவது சொல்லுங்கப்பா) குசும்பன் அவர்களுக்கு, //




இல்லபா .......!!! அவுரு அங்கிள் ..!!!! அண்ணா சொல்லாத ...!!! தப்பு ..!! தப்பு ..!!!




// எங்கேயேனும் நானும் ஒரு எழுத்தாளன் என்ற தலைக்கணம் வந்து விட கூடாது என ஒரு வரி விடாமல் என்னை கலாய்த்து என் ஆணவத்தை போக்கும் நண்பர் லவ்டேல் மேடி அவர்களுக்கு, //


செருப்புலையே அடுச்சுபோட்ட போ ........ !!!



// என்னை போன்ற சிறுவனையும் அண்ணே என்று அழைத்து மரியாதைக்கே இலக்கணம் கற்று கொடுக்கும் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்களுக்கு, //




அவுரு எல்லார்த்தையும் அண்ணே..!!!! அண்ணே..!!!! சொல்றதுக்காக அவரோட வயச கொறிக்க முடியாது .......,


அவுரு கும்பன் அங்கிள விட...... பெத்த அங்கிள் .........!!!!!



// அருகிலேயே இருந்து கொண்டு நான் எழுதுவது முதல், எழுந்து நிற்பது வரை செம்மை படுத்தும் எனது வலையுலக ஆசான் அண்ணன் நந்து f/o நிலா அவர்களுக்கு, //



நோ கமண்ட்ஸ் ............


// பின்னூட்ட புயலாலும், வாழ்த்து மழையாலும் என்னை திக்குமுக்காட வைக்கும் எனது அனைத்து நண்பர்களுக்கும், //


பின்ன ...... !!!! சரக்கடுச்சா ........ , திகைக்கு முக்கு என்ன ... எட்டு திக்கும் காபரே ஆடுவ நீ ..!!!!



// எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு சம்பளமும் கொடுத்து, ஒரு கணிணியும் கொடுத்து பதிவெழுதவும், கும்மி அடிக்கவும் அனுமதி அளித்திருக்கும் எனது நண்பர் கார்த்திக் அவர்களுக்கு, ////



ஹ .. ஹ .... ஹ ஹ..... ஹா .....!!!!


ஹையோ..!!!


ஹையோ..!!!



ஹ .. ஹ .... ஹ ஹ..... ஹா .....!!!!


ஐயோ ..!!!! சாமி ....!! சிரிப்பு தாங்க முடியிளிங்கோவ் ..!!!!!

" இவர் ஒரு நகைச்சுவை பதிவு எழுத்தாளர் எனபது இந்த வரியில் தெரிகிறது ....!!! "


இதக்கு ஒரு சிறந்த பொன்மொழி ........

" ஊராமூட்டு நெய்யி ......!! எம்பொண்டாட்டி கய்யி .....!! " ..............




//வெறும் நன்றி என்ற வார்த்தையில் முடித்தால் எனக்கு சோறு இறங்காது //



ஆமா...!! ஆமா..!!! சரக்கு மட்டும்தே யரங்கும் ......!!!!!!!!





// எனது கருத்துகளுக்கும் அங்கிகாரம் அளித்த உங்களுக்கு, எனது மகிழ்ச்சியில் பொங்கும் கண்ணீரால் பாதபூஜை செய்ய வேண்டும். //


அடேய் பிளாஷ் மண்டையா ....!! இப்பிடியெல்லாம் சாமியாராடம் பேசுனா ...... ,

உன்ன சும்மா உட்டுற முடியுமா.....??

இன்னமும் உன்ன பின்நூட்டத்தால நாரு... நாரா ..... டருச்சாக்குல ...!!!! எம்பேரு

லவ்டேல் மேடி ...... இல்லடா........!!!!!!



// அதே நேரம் ஒருவரை இம்மாதிரியாக பாராட்டுவது அவருக்கு தலைகணம் உருவாக காரணமாக ஆகிவிடலாம், தயவுசெய்து இம்மதிரியெல்லாம் பேசி அவர்களை செலிபிரட்டி ஆக்கி குழியில் தள்ளி விடாதீர்கள். //


அடேய் ..... டூம் லைட் மண்டையா ....!! அப்பறம் எதுக்குடா ... இன்னாவரைக்கும்

எங்களையெல்லாம் செலிபிரட்டி ஆக்கி குழியில தள்ளுன ..........

ரவி said...

100 !!!

ers said...

300 அடிக்க வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

அருண்..

யாரையாவது விட்டுவிடுவேன் என்பதால் பெயர் சொல்லாமல் எல்லாருக்கும் நன்றி’ன்னு எழுதாம ஒவ்வொருத்தருக்கும் ஸ்பெஷலா சொன்னீங்க பாருங்க... அங்கதான் ஃப்ளாட் ஆகாம ”நிக்கறீங்க” நீங்க! நல்ல பதிவு... சூப்பரா வந்திருக்கு.

ஆனா நீங்களே சொல்லிகிட்ட மாதிரி.. ச்சே... ஸாரி.. ப்ளீச்சிங் பவுடர் சொல்ற மாதிரி இது மாஸ்டர் பீஸெல்லாம் இல்ல. அது நிறைய இருக்கு. முக்கியமா உங்க அரசியல்ரீதியான விவாதங்கள். உடன்பாடு, உடன்பாடின்மையைத் தவிர்த்து நல்ல எழுத்து அதுல இருக்கு!

இன்னைக்குதான் அதப் பத்தி உங்க ஆசான்கிட்ட பேசிகிட்டிருந்தேன்!

ரௌத்ரன் said...

யப்பாடி...150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வால்பையன்...முதல் தடவயா உங்க ஏரியாவுக்கு வரேன்..கிறுகிறுங்குது..

கார்த்திக்...என்னங்க நடக்குது இங்க?

dondu(#11168674346665545885) said...

//வலையுலகில் இவரை போல் வேறு யாரையும் நான் இந்த அளவுக்கு வம்புக்கு இழுத்ததில்லை, ஆனாலும் அலைபேசியில் அழைத்து “சுகர் எப்படியிருக்கு” ”வாக்கிங் போகிறாயா” என்று ஒரு தந்தையின் ஸ்தானத்தில் எனக்கு அறிவுரை வழங்கும் டோண்டு ஐயா அவர்களுக்கு,//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெண்பூ said...

அதுக்குள்ள 150 பதிவா.. வாழ்த்துக்கள் & பாராட்டுகள்.. நல்ல பதிவும் கூட, நான் என்னிக்காவது 100வது பதிவு எழுதுனா (அது ஆகும் இன்னும் ரெண்டு மூணு வருசம்..:)))) இதை அப்படியே காப்பி எடுத்து கொஞ்சம் கொஞ்சம் டிங்கரிங் பண்ணி போட்டுடலாம்.. 200க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

Thamira said...

150க்கு வாழ்த்துகள் வால்.! நன்றி லிஸ்ட்டில் என் பெயரும் இருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.. அதற்கு பதில் நன்றி.!

மேவி... said...

valthukkal tholare

மேவி... said...

ella pinnottam matrum munnottamthirkkum oru periye

repeat.........

பொதுஜனம் said...

நிஜமாகவே பெரிய வால் உள்ளது. உங்கள் நடுநிலையான தலையால் நல்ல வால் வளர்ந்துள்ளது.ஊடகங்கள் மூலம் தொடர் ஆதரவு பெறுவது கொஞ்சம் கஷ்டம். தொடர்ந்து படிக்கும் ஆவலை உருவாக்குவதால் தான் வாலும் நீள்கிறது. நூற்றி ஐம்பதாவது பதிவு முடிந்து ராவணன் முன் பெரிய வால் இருக்கையில் கம்பீரமாகஅமர்ந்துள்ள உங்களுக்கு இந்த அணிலின் வாழ்த்துக்கள்.

♫சோம்பேறி♫ said...

வால் நட்சத்திரத்திற்கு என் வாழ்த்துக்கள்.

CA Venkatesh Krishnan said...

நூத்தி ஐம்பது பதிவுகள்லாம் உங்களுக்கு ரொம்ப கம்மிண்ணே!

ஆயிரத்தைன்னூறுக்கு இப்படி ஃபீல் பண்ணுங்க!

வாழ்த்துக்கள்.

selventhiran said...

என்னைப் பகைச்சுக்கிட்டு வாழ்ந்துற முடியும்னு நீங்க நம்புறீங்களா...

தருமி said...

பொறாமையா இருக்குப்பா! எம்புட்டு ஆளுகள சம்பாரிச்சிருக்கீங்க.
நல்லா இருங்க ..

தருமி said...

//எங்கே எழுதிய பதிவுகளை படித்து அறிவை வளர்த்து கொள்ளாமல் போய் விடுவானோ என்று, எப்போது பதிவெழுதினாலும் உடனே சாட்டில் சுட்டி கொடுக்கும்(எனக்கு மட்டும் தானா?)//

உங்கள் மாதிரி ஆளுகளுக்குத்தான். எங்களுக்கெல்லாமே அனுப்புறாரு .. ம்.. ம்.. அதுக்கும் கொடுப்பினை வேணும்லா ...

தருமி said...

150க்கு 100 வது பின்னூட்டம் நானா .. அடடே!

மீண்டும் ...

நல்லா இருங்க ...(டே!)

கோவி.கண்ணன் said...

வாலு தலைப்புல 150 ஐப் பார்த்ததும், எதோ முகத்தல் அளவை 'மிலி' பற்றிய பாடமாக இருக்கும் என்று வந்தேன்.


வாழ்த்துகள் !

விரைவில் 500 அடிக்க வாழ்த்துகள், அதன் பிறகு 1, 2 என லிட்டர் கணக்கில் அடிக்க வாழ்த்துகள் !

Tech Shankar said...

Congrats Buddy

Suresh said...

150th post a kalakunga, neenga sekirama 1000 adika valthukal :-) Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

யாத்ரா said...

பிரம்மிப்பா இருக்குங்க, எவ்வளவு பெரிய வட்டம்

Anonymous said...

வாழ்த்துக்கள் "வால்" உங்கள் கலாய்ப்புகளை வெகுவாக ரசிப்பவன் நான், நேரப்பற்றாகுறையினால் அடிக்கடி பின்னூட்டம் இட முடியவில்லை,

நீவிர் நூறாண்டு கலாய்க்க வாழ்த்துகிறேன்

வால்பையன் said...

நன்றி ஜீவன்

//நந்து f/o நிலா said...
கோத்து உட்டாச்சா?
நீதான் இத்தனைக்கும் காரணமான்னு என் வீட்டுக்கு எத்தனை ஆட்டோ வரபோவுதோ?
சந்தோசமாய்யா?//

இதுக்கே ஆட்டோ வருமா?
இன்னும் உங்க அருமை பெருமையெல்லாம் எம்புட்டு பாட வேண்டியிருக்கு

நன்றி ஸ்ரீதர்

நன்றி ராதாகிரிஷ்னன்

நன்றி அருண்

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி நாமக்கல் சிபி

நன்றி சீனா ஐயா

நன்றி கும்கி
கற்பூரம் மாதிரி கப்புன்னு புடிச்சிட்டிங்களே

வால்பையன் said...

நன்றி அமரபாரதி

நன்றி அ.மு.செய்யது

நன்றி நர்சிம்

நன்றி பாலராஜன்கீதா
நாம் திருப்பூரில் சந்தித்திருக்கிறோம்

நன்றி அப்துல்லா அண்ணே

நன்றி மோகன்பிரபு

நன்றி ச்சின்னபையன்

நன்றி ஞானசேகரன்

நன்றி இராகவன் நைஜீரியா
கும்மி போட்டு தாக்கிடிங்களே

நன்றி கணேஷ் (வீணாப்போனவன்)

நன்றி மகேஷ்

நன்றி கிரி

நன்றி புதியவன்

நன்றி வினோத் கெளதம்

நன்றி கார்க்கி

வால்பையன் said...

நன்றி குசும்பன்
எஅங்க தலைவரை வாருனதுக்கு நன்ர்டி கிடையாது, என் ப்ளாக் வந்ததுக்கு நன்றி

நன்றி வித்யா

நன்றி பிரியா

நன்றி தமிழ்சினிமா

நன்றி ப்ளீச்சிங் பவுடர்
சோதனை கால்த்தில் தோள் கொடுத்த நண்பர்களை மறக்க முடியுமா?

நன்றி அருண்குமார்

நன்றி விக்ணேஷ்வரன்

நன்றி நிஜமா நல்லவன்

நன்றி கார்த்திக்(பாஸ்)

நன்றி பூர்ணிமா சரண்

நன்றி தேவன் குமார்

நன்றி கலை அக்கா

வால்பையன் said...

நன்றி ரம்யா
கடைசி பாராவை மறுக்கா ஒருக்கா படிங்க

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி அனுஜன்யா
நீங்க குரு நான் வால்

நன்றி அபிஅப்பா

நன்றி சுப்பு

வால்பையன் said...

என் அன்பு செல்வமே லவ்டேல் மேடி
என்னவென்று நன்றி சொல்வேன்.
உங்கள் பாராட்டுகள் தான் மிக முக்கியம் எனக்கு.

வால்பையன் said...

நன்றி செந்தழல் ரவி

நன்றி பரிசல்காரன்

நன்றி ரௌத்ரன்

நன்றி டோண்டு
ஏன் அழுவுறிங்க, ஆனந்த கண்ணிரா?

நன்றி வெண்பூ

நன்றி தாமிரா

நன்றி MayVee

நன்றி பொதுஜனம்

நன்றி சோம்பேறி

நன்றி இளைய பல்லவன்

நன்றி செல்வேந்திரன்
தல மன்ன்னிச்சுகோங்க!
அடுத்த பதிவுல சேத்துடுறேன்.

நன்றி தருமி

நன்றி கோவி.கண்ணன்

நன்றி சுரேஷ்

நன்றி யாத்ரா

நன்றி கே.ஆர்.பி.செந்தில்

!

Blog Widget by LinkWithin