காணவில்லை!

37 வாங்கிகட்டி கொண்டது:

வால்பையன் said...

நாலு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் பார்த்திருக்கிறேன், இங்கே தான் எங்கேயாவது வேலிகாத்தான் முள் செடியில கூடி கட்டி இருப்பாரு,

இப்பெல்லாம் எங்கேயுமே காணோம்,
நான் பாக்கனும் போல இருக்கு யாராச்சும் பார்த்தா கொஞ்சம் வர சொல்றிங்களா?

இங்கணம்.
இயற்கை விரும்பி.....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தொழில்நுட்ப வசதிகளை அனுபவிக்க நாம் கொடுக்கும் விலைகளில் இதுவும் ஒன்று.

வெற்றி said...

அடடா, எங்க ஊர்ல நெரய இருக்கே.

ரவி said...

http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t8222.html

அடைக்கலங்குருவி என்று சொல்வோம், உங்க ஊரில் என்ன பெயர் ??

முந்தின பின்னூட்டம் காணல

ரவி said...

என்னுடைய பழைய பதிவு இங்கே க்ளிக்

ரவி said...

முன்பெல்லாம் கிராமத்து வீடுகளெங்கும் காணக்கிடைக்ககூடிய ஒரு விடயம், அடைக்கலங்குருவிக்கூடு...கூரை வீடு,பனைவாரை அடித்த ஓட்டு வீடு,செங்கல் சுவர் மச்சு வீடு என்று எந்த வீடாக இருந்தாலும் மேக்கால ரூம், கிழக்கால ரூம் என்று எல்லாவிடங்களிலும் வாகான இடமாய்ப்பார்த்து கூடுகட்டியிருக்கும்...



அது கூடுகட்டும் அழகே தனி...காய்ந்த புல்,சின்ன வைக்கோல், ஏதோ ஒரு செடியின் காய்ந்த சருகு, கொஞ்சம் இறுக்கமான சின்ன குச்சி என்று எதாவது ஒன்றை அலகில் வைத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் குறையும் நேரம் பார்த்து முற்றத்தின் இரும்பு கம்பியிலோ, சுவர் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்பமரத்து மூன்றாவது கிளையிலோ சுறுசுறுப்பாக தலையை ஆட்டி ஆட்டி சின்னக்கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும்...

பாட்டி வெற்றிலைப்பாக்கு இடிக்கும் சத்தமோ, மோர் சிலுப்பும் சத்தமோ, வியர்வையோடு தாத்தா வந்தமரும் சத்தமோ, ஜெனரேட்டர் இஞ்சின் ஓடும் சத்தமோ, ட்ராக்டர் ட்ரெய்லர் மாட்டும் சத்தமோ அதை தொந்தரவு செயததாக நினைவில்லை...தான் உண்டு தன் வேலை உண்டு என்று கருமமே கண்ணாக கூண்டு கட்டுவது, தான் என்ன வேலை செய்கிறோம் என்று இந்த மனிதனுக்கு தெரியுமோ தெரியாதோ என்பது பற்றி கவலை இன்றி கூட்டின் வாசலிலோ, உள்ளோ அமர்ந்திருப்பது...

முட்டை போட்டு குஞ்சு வைத்து, அந்த குஞ்சுகளுக்கு எங்கிருந்தோ பிடித்துவந்த புழுவோ, பூச்சியோ, கீச் கீச்ச் சப்தங்களுக்கு மத்தியில் ஊட்டி, வெளியே கோழிகளுக்கு போட்டிருக்கும் கம்போ கேவுறோ தனக்கொன்று பொறுக்கிக்கொண்டு உத்திரத்தில் சத்தமிட்டுக்கொண்டோ, சில நேரங்களில் சத்தமில்லாமலோ உட்கார்ந்திருக்கும்...

இன்றைக்கு அடைக்கலங்குருவிகள் இல்லை...

ஆமாம்...அழிக்கப்பட்டுவிட்டன...தானாக அல்ல...அழித்தொழிக்கப்பட்டுவிட்டன...

நீங்கள் கடைசியாக அடைக்கலங்குருவியை எப்போது பார்த்தீர்கள் ? கிராமமோ, நகரமோ...மனிதர்களை தன்னுடைய தோழர்களாக நினைத்து, அவர்களிடம் அடைக்கலம் தேடிவந்தவை இந்த அடைக்கலங்குருவிகள்..

மனிதன் கட்டும் வீட்டில் நாமும் நமது வீட்டை கட்டிக்கொள்வோம்...அவனால் நமக்கு தீங்கில்லை...நன்மையே...என்று உள்ளத்தால் சிந்தித்து மனிதனிடம் அடைக்கலம் தேடிவந்ததனாலேயே இதன் பெயரை அடைக்கலம் குருவிகள் என்று அழைத்தோம்...

இன்றைக்கு அதே மனிதன் அடைக்கலங்குருவிகளை, வேரோடு, வேரடி மண்ணோடு அழித்தொழிக்கும் பணியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிட்டான்...

புதிர் வைக்கும் எண்ணம் இல்லை எனக்கு....நான் நெஞ்சார ரசித்து பார்த்த அடைக்கலம் குருவிகளை இனிமேல் பார்ப்பேனா என்ற கேள்வி கத்தி போல் இதயத்தை ஊடுருவித்தாக்குகிறது...

ஆம்...அடைக்கலம் குருவிகள் ஆண்மையிழந்துவிட்டன...இனி உங்கள் வீட்டில் அடைக்கலம் குருவி கூடுகட்ட வாய்ப்பில்லை...முட்டையிடவோ குஞ்சு பொரிக்கவோ வாய்ப்பில்லை...

இயற்கை உரங்களை விடுத்து அதிக மகசூலுக்காக செயற்கை உரங்களை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்தது சரிதான்...ஆனால் இப்போது உரங்கள் இட்டும் அதன் மேலே அமர்ந்து பயிர்களை நாசம் செய்யக்கூடியதாக பூச்சிகள் திடம் பெற்றுவிட்டன...இதனால் தமிழக விவசாயிகள் அதிக வீரியம் உள்ள உரங்களை கடந்த அய்ந்தாண்டுகளாக பயன்படுத்த தொடங்கி, அதன் மூலம் புல், பூண்டு, வைக்கோல் என்று எல்லா தாவரங்களிலும் அதன் பாதிப்பு...இதன் மூலம் பொதுவாக கிராமங்களில் இருக்கும் அடைக்கலம் குருவிகள் இனவிருத்தி செய்யும் தகுதியை இழந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன...

இந்த பதிவை எழுதும்போது கீச் கீச் என்று எங்கோ ஒரு ஓசை...அது அடைக்கலம் குருவியாக கண்டிப்பாக இருக்கக்கூடும்...இனிவரும் சந்ததிகள் இந்த ஓசையை கேட்கமுடியாமலே கூட போய்விடக்கூடும்...!!! மனது கனமாகிறது...!!!!!!

ரவி said...

அப்படியே நமது ஈழத்து சகோதர்களுக்காகவும் கொஞ்சம் கவலைப்பட்டு ஒரு பதிவிடவும்

மேவி... said...

:-((

Thamira said...

:(

Maximum India said...

மும்பையில் மித்தி நதி கரையோரம் உள்ள சதுப்பு நில காட்டிற்குள் நிறைய பறவைகள் (குருவிகளையும் சேர்த்து) இருக்கின்றன.

பார்க்க விருப்பப் பட்டால் மும்பை வரவும்:)

நட்புடன் ஜமால் said...

மிக அழகு நண்பரே ...

அருமையான விடயம்.

அழகா சொல்லியிருக்கீங்க ...

ரவி said...

///மிக அழகு நண்பரே ...

அருமையான விடயம்.

அழகா சொல்லியிருக்கீங்க ...////

is this kind of template ?

மணிகண்டன் said...

அழகா விவரிச்சு இருக்கீங்க. குருவி கூடு கட்டரதே ஒரு அழகு தான் !

குருவிய சாகடிக்காம இதே கான்செப்ட் கொசுவுக்கு கொண்டு வந்துட்டா, மக்களுக்கு வரும் வியாதியாவது குறையும் !

நல்லவேளையா, இதே மாதிரி மூட்ட பூச்சி சுத்தமா அழிஞ்சிடுச்சு. எப்படின்னு யாருக்கும் தெரியாது. எங்க ஊர்ல (திருச்சி) இருந்த முருகன் டாக்கீஸ் மூடினதுனாலதான்னு மக்கள் சொல்லுவாங்க.

அ.மு.செய்யது said...

என்னங்க ஆச்சு உங்களுக்கு இன்னிக்கு...

அ.மு.செய்யது said...

அழகான‌ ப‌ட‌ம்...ப‌ட‌த்தை ம‌ட்டும் தானே பார்க்க‌முடிகிற‌து.

சிம்பா said...

வால்'s வணக்கம்,

என்ன ஆச்சு நண்பரே.. இதுக்கு தான் தனியா உக்காந்து கச்சேரி நடத்த கூடாதுன்னு சொல்றது..

ஆனாலும் ஒரு படத்த போட்டு பல எண்ணங்களை குப்பை தட்ட வச்சுடீங்க...

Poornima Saravana kumar said...

ஆஹா!! அழகான படம்:)

Poornima Saravana kumar said...

என் சிறிய வயதில் பார்த்தது... ம்ம்ம்ம் எனக்கு என் சிறு வயதிற்க்கு போவனும் போல இருக்கு:(((((

புதியவன் said...

அருமை...ஒரு படத்தை போட்டு ஒரு பாடத்தையே நடத்திவிட்டீர்கள்...

Tech Shankar said...

சூப்பர் அருண் சார். நல்லா இருக்கு
கவிதை, கவிதை...

RAMYA said...

பேசாமல் பேச வைத்திருக்கிறது
உங்களின் இந்த பதிவு
படம் அருமையோ அருமை!!

RAMYA said...

//
இப்பெல்லாம் எங்கேயுமே காணோம்,
நான் பாக்கனும் போல இருக்கு யாராச்சும் பார்த்தா கொஞ்சம் வர சொல்றிங்களா?
//

யாராச்சும் சொல்லி அவங்க
உங்களை பார்க்க வந்தால்
நானும் ரொம்ப கேட்டதாகச்
சொல்லுங்கள், முடிந்தால்
என்னையும் வந்து பார்க்கச் சொல்லுங்களேன்.

இவர்களும் நாம் ரசிக்கும் நண்பர்களே!!!

RAMYA said...

செலவே இல்லாமல் உழைப்பு மட்டும்
மூலதனமாக வைத்து ஒரு அருமையான வீடு
(அதான் குருவிக் கூடு)

அதில் தனக்கே தனக்கு என்று
அமைத்த வசதிகள்.

இன்றெல்லாம் உடகார்ந்து பார்த்தாலும்
அலுக்காது வால்ஸ்.

நாம அதை தொடக் கூடாதாம்.

குருவிக் குஞ்சு கீழே விழுந்து விட்டால்
அதை நாம் கைகளில் எடுக்கக்
கூடாது என்று சொல்லுவார்கள்.

அது உண்மையா, இல்லையா என்று
எனக்கு தெரியாது,

நான் கையில் எடுத்து ரசிப்பேன்.

உங்களின் ஏக்கம் தத்ரூபமாக
தெரிந்தது. விரைவில் குருவியார்
வர வேண்டும், நீங்கள் காண வேண்டும்.

எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்!!

அசோசியேட் said...

நம்முடைய சந்ததியர்க்கு எதை விட்டு செல்வோமோ ? மனது கனக்கிறது நண்பரே !

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு! வால் பையன்....

நந்து f/o நிலா said...
This comment has been removed by the author.
நந்து f/o நிலா said...

வால் யாராச்சும் கான்க்ரீட் காடுகளில் வசிக்கும் மக்கள்ஸ் சிட்டுகுருவியே அழிஞ்சுடுச்சுன்னு சொன்னா பாவம் அவங்களுக்கு அதை பார்க்க வாய்ப்பில்லை ஒத்துக்கலாம். நமக்குமா?

நம்ம விவசாயிகள் தாணிய பயர்களே பயிர் செய்யாமல் விட்டதால சிட்டுகுருவிகள்ளாம் குறைந்து இருந்துச்சு. ஆனா இப்போ வேலைக்கு ஆள் கிடைக்காத விவசாயிங்க சோளம் கம்புன்னு விதைச்சுட்ட்டு அக்கடான்னு இருக்காங்க. பாருங்க ஏகப்பட்ட சிட்டுகுருவிங்க

அட என் வீட்ட சுத்தி குறைந்தது 50 சிட்டு குருவியாச்சும் சுத்துது.

சாம்பிள்க்கு http://www.flickr.com/photos/nilanandhu/2885849208/

g said...

நான் நிறைய சொல்லவேண்டும் என்று நினைத்துவந்தேன். எல்லாவற்றையும் செந்தழலாரே சொல்லிவிட்டார். அறிவியல் வளர வளர இப்படி ஒவ்வொரு ஜீவராசியாக காணாமல் போவது திண்ணம். இறுதியில் மனிதனும் காணாமல் போவான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

gayathri said...

நல்லாயிருக்கு! வால் பையன்....

KARTHIK said...

// ஆனா இப்போ வேலைக்கு ஆள் கிடைக்காத விவசாயிங்க சோளம் கம்புன்னு விதைச்சுட்ட்டு அக்கடான்னு இருக்காங்க. பாருங்க ஏகப்பட்ட சிட்டுகுருவிங்க.//

இவரு நான் சிட்டுக்குருவிய பாத்தே பல வருசம் ஆச்சுன்னு சொல்லுராரு.மேட் இன் இங்லாண்டு அப்படித்தான் பேசுவாரு.

இதுவும் குருவிதானுங்க

Anonymous said...

வருத்தத்துடன் குருவி :

அடேய் ஷ்டெப்புனி மண்டையா ..........!!!!! விஜய்யோட படத்துக்கு என் பேர வெச்சு என் வம்சத்தையே அசிங்கம் பண்நீட்டாங்கன்னு நானே நொந்துபோய் பேமிலியோட சரக்கட்ச்சிட்டு வரதுக்குள்ள , காணவில்லைன்னு கண்ட .... கண்ட ..... எடத்துல மொக்க பதிவ போட்டு ..... ,,,,, அதுவுமில்லாம ஏதோ குருட்டு கம்முனாட்டி என் பொண்டாட்டிய கன்றாவியா எடுத்த போட்டாவ போட்டு என் டோட்டல் பேமிலிய டேமேஜ்
பன்னீட்டியேடா ......... !!!!

அடேய் பேரிக்கா தலையா ..... ஒரு நாள் இல்லாம ஒரு நாள் உன் மூஞ்சியில கக்கா போயி ... , உன்ன பப்பி சேம் .... ஆக்குல எம் பேரு குருவி இல்லடா....... !!!!!!!

Unknown said...

படம் மிகவும் அருமையாக உள்ளது அருண்....!!! இந்த புகைப்படத்தை யார் எடுத்தது .யார் ....? எனது பாராட்டை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் ...........!!! மிக்க நன்றி .... இது ஒரு நல்ல பதிவு .....

Anonymous said...

// குருவி
அதுவுமில்லாம ஏதோ குருட்டு கம்முனாட்டி என் பொண்டாட்டிய கன்றாவியா எடுத்த போட்டாவ போட்டு என் டோட்டல் பேமிலிய டேமேஜ்//

அடேய் அந்தபோட்டோவ எடுத்தவன் பேரு அந்தப்போட்டவுலையே இருக்கு பாத்துக்கா முடிஞ்சா தேடிப்போயி திட்டிட்டு வா

// உன்ன பப்பி சேம் .... ஆக்குல எம் பேரு குருவி இல்லடா.....//

சரியா சொன்னட மொக்க.

Anonymous said...

// குருவி நெம்பர் 2 said...


சரியா சொன்னட மொக்க. //



வாடி என் வெண்கல சக்களத்தி ....... !!!! போன வருஷம் பக்கத்து கூட்டு கருங்குருவி குருட்டு கருவாயனோட ஓடிப்போன ஓடுகாலிதானடி நீ.........
அந்த கருமாண்டி பய ஒரு ஆண்டி டெரர் ஆச்சேடி ...... அவன்கோட ஒரு குளிக்காத வால்குருவி ஒன்னு இருக்குமேடி ........... அடியே ஓடுகாலி ஒருஞ்சிருக்கி........ எங்கடி வந்த இப்போ ....!!!!!!!

புதுகை.அப்துல்லா said...

:(((((((((((((((

வால்பையன் said...

//ஸ்ரீதர் said...

தொழில்நுட்ப வசதிகளை அனுபவிக்க நாம் கொடுக்கும் விலைகளில் இதுவும் ஒன்று.//

உண்மைத்தான்,
நகரம் பெருக, உயிர்கள் சுருங்குகின்றன
************************

தேனியார் said...

அடடா, எங்க ஊர்ல நெரய இருக்கே.//

இங்கிட்டு ரெண்ட அனுப்பி வையுங்க!

******************************

நன்றி தமிழ்பிரியன்

***************************

செந்தழல் ரவி said...

http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t8222.html

அடைக்கலங்குருவி என்று சொல்வோம், உங்க ஊரில் என்ன பெயர் ??//

சிட்டுகுருவி என்று சொல்லுவோம்.
உங்கள் பதிவை ஏற்கனவே படித்திருக்கிறேன்.

**************************

செந்தழல் ரவி said...

அப்படியே நமது ஈழத்து சகோதர்களுக்காகவும் கொஞ்சம் கவலைப்பட்டு ஒரு பதிவிடவும்//

மனதுக்குள் வருத்தமுண்டு,
பதிவிட விருப்பமில்லை, ஆக்கபூர்வமாக எதாவது செய்ய அழையுங்கள் வருகிறேன்

வால்பையன் said...

நன்றி மாவீ

நன்றி தாமிரா

நன்றி மோகன்பிரபு
மும்பையில் இருக்கிறதா ஆச்சர்யம் தான்.

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி மணிகண்டன்
சுத்தமில்லாத இடங்களில் மூட்டைபூச்சி வர வாய்ப்புண்டு.

நன்றி அ.மு.செய்யது
ஒரு சோகம் தான்

நன்றி சிம்பா

நன்றி பூர்னிமா சரண்

நன்றி புதியவன்

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி ரம்யா

நன்றி அசோசியேட்

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி நந்து f/o நிலா

நன்றி ஜிம்ஷா

நன்றி gayathri

நன்றி கார்த்திக்

நன்றி லவ்டேல் மேடி

நன்றி புதுகை.அப்துல்லா

!

Blog Widget by LinkWithin