கேட்டதில் பிடித்தது!!!.......

நதி எங்கே வளையும்!
கரை ரெண்டும் அறியும்!

மதி எங்கே அலையும்!
ஆகாயம் அறியும்!

விதை எங்கே விளையும்!
அது யாருக்கு தெரியும்!

அதை அறிந்து சொல்லவும் வழியில்லை
அதை அறிந்தால் அதன் பெயர் விதியில்லை!

*************

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை

உழைக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷம் இல்லை

எட்டு நாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பை பற்றி நினைப்பதுமில்லை

அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்ந்ததில்லை!

***********************
நேற்று இரவு கேட்ட பாடல்!
பிடித்திருந்தது
அதற்காக விதியை நம்புபவன் என்று நினைக்காதீர்கள்
பிடித்தது....



கடைசி இரண்டு வரிக்காக!

34 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

நல்ல வரிகளா இருக்கே ...

நட்புடன் ஜமால் said...

\\விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை\\

மிக அருமையான வரிகள்

நட்புடன் ஜமால் said...

கிடைத்த பாத்திரத்தை விரும்பிவிட்டால் வாழ்க்கை சுவையாக இருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// உழைக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷம் இல்லை//

ஆமாங்க... கிடைத்ததை எண்ணி சந்தோஷப் பட்டால் வாழ்க்கை ரொம்ப இனிக்குமுங்க

வெற்றி said...

அருமையா இருக்கே. எங்கே கேட்டீங்க?

ஆ.ஞானசேகரன் said...

//உழைக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷம் இல்லை//
நல்ல வரிகள், உழைக்கனும் பின் புசிக்குனும் இதுதான் வாழ்கையின் எதார்த்தம்.. மேலும் இங்கேயும் பாருங்களே ஒரு முறை
http://aammaappa.blogspot.com/2009/02/blog-post_08.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல வரிகள்...

வலையும்ன்னு இருக்கேன்னு தமிழ்மணத்தில் பார்த்துட்டு வந்தேன்.. அதுக்குள்ள திருத்தப்பட்டுவிட்டது :)

எம்.எம்.அப்துல்லா said...

//அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்ந்ததில்லை//

அப்ப 70 வயது ஆயுள் கொண்டவன் 23 நிமிடம் வாழ்வதில்லை :)

எம்.எம்.அப்துல்லா said...

என்னாமாரி மேட்டர் சொல்லுறீங்கோ...அப்பியும் நம்ப கணக்குபிள்ளை புத்தி போகமாட்டேங்குது :)))

rapp said...

கை துறுதுறுங்குதே இதை இங்க பதிவு பண்ண உங்களை பதில் கவுஜ எழுதி
பாராட்ட.

அ.மு.செய்யது said...

ஆஹா..ஆஹா....மனச டச் பண்ணிட்டீங்க..

அ.மு.செய்யது said...

சோலைக்கு என்ன ஒரு கவலை..
எப்போதும் பறவைகள் அழுவதில்லை..

சூரியனில் என்றும் இரவு இல்லை.
எப்போதும் சுவர்க்கத்துக்கு தடையும் இல்லை.

வைர‌முத்துவின் வ‌ரிக‌ள் நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌.

சின்னப் பையன் said...

//விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
//

அதனால்தான் நான் கைக்குக் கிடைத்த ஏதோவொரு பாத்திரத்தில் சமைத்து விடுவேன்...

ஹிஹி...

புதியவன் said...

//எட்டு நாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பை பற்றி நினைப்பதுமில்லை

அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்ந்ததில்லை!//

மிகவும் பிடித்த வரிகள்...

கிரி said...

அருண் ஒண்ணும் சொல்றதுக்கில்லை ;-)

வீணாபோனவன் said...

இந்த படம் வந்த நாள்முதல் இன்றுவரை இந்த பாடலை கேட்கிறேன்..கேட்டுகின்னே இருக்கேன் (கவலை வரும்போது மட்டும் :-( விரும்பி யாரும் பிறந்ததில்லை, விரும்பிய பாத்திரம் கிடைப்பதும் இல்லை (ச்சினபையா நல்லா கேழுங்க) சறுக்கும் வாழ்வில் சந்தோஷம் இல்லை...(ஆனால், பாடலை பாடியவர் ஏதோ அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தது போல் பாடியிருக்கிறார்.) நல்ல வரிகள்... சரி அதவிடுங்க.. இன்னைக்கு வெள்ளி 13ம் நாள்... வாங்க படத்திற்கு :-)

இதோ அந்த பாடலின் YouTube லின்க்: http://www.youtube.com/watch?v=uGixpYkGAPs

-இப்படியும்,
வீணாபோனவன்.

பரிசல்காரன் said...

இதப் கேட்டுட்டுதான் ‘அங்க’ போனீகளா?

பரிசல்காரன் said...

// rapp said...

கை துறுதுறுங்குதே இதை இங்க பதிவு பண்ண உங்களை பதில் கவுஜ எழுதி
பாராட்ட.

//
யாருங்க இது.. ஆபீசரா? நல்லா இருக்கீங்களா?

Anonymous said...

அதற்காக விதியை நம்புபவன் என்று நினைக்காதீர்கள்
பிடித்தது....


கடைசி இரண்டு வரிக்காக!
----------------------------------
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

- இரவீ - said...

பாட்டோட கடைசி இரண்டுவரியா ...
உங்களோட அந்த ரெண்டு வரியா ???

பி .கு: அருமையான பாடல் வரிகள்.

உண்மைத்தமிழன் said...

என்ன பாடல் இது..?

எந்தத் திரைப்படம்..?

சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்தால் விதியும், மதியும் ஒன்றுதான். இவர்களே உதாரணம் என்பது போல் தெரியும்..)))))))))))))))))

SUBBU said...

நல்லாகீதுபா :))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான வரிகள்

Tech Shankar said...

Nadhi engE vaLaiyum?
karai reNdum aRiyum
madhi engE alaiyum?
aagaayam aRiyum
vidhi engE viLaiyum?
adhu yaarukkuth theriyum

adhai aRindhu sollavum madhi illai
madhi irundhaal adhan pEr vidhi illai (nadhi)

virumbi yaarum piRappadhum illai
virumbiya paaththiram kidaippadhum illai
pidikkum vaazkkai amaindhadhum illai
salikkum manadhil sandhOsham illai

ettu naaL vaazhum pattaampoochi
iRappaip paRRi ninaippathum illai
arupathu vayadhu aayuL koNdavan
irubadhu nimidam vaazhvadhum illai

naaLai enbadhai vidhiyidam koduththu
indru enbadhai eduththu nadaththu
kaNNeer thuLiyai kazhaRRi eduththu
punnagai aNindhu pOrai nadaththu (nadhi)

kanavu kaaNbadhu kaNgaLin urimai
kanavu kalaippadhu kaalaththin urimai
sidhaindha kanavai sErththu sErththu
araNmaNai kattudhal avaravar thiramai

ovvoru nodiyilum unnadham kaaNbadhu
ulagil pirandha uyirgaLin urimai
niRaindha vaazhvu nEraadhirundhaal
vandhadhil niRaivadhu vaazhvin kadamai

naaLai enbadhai vidhiyidam koduththu
indru enbadhai eduththu nadaththu
kaNNeer thuLiyai kazhaRRi eduththu
punnagai aNindhu pOrai nadaththu (nadhi)

Uyirodu Uyiraga - Ajith Movie

Unknown said...

// கேட்டதில் பிடித்தது //


யோவ் வாலு .... என்னையா .... இப்பிடியெல்லாம் எழுத ஆரபிச்சுட்ட ....

நீயெல்லாம் ஈபட எழுத கூடாது ...... டைடில மாத்து ..

" மப்பு போட்டதில் பிடித்தது..... "



// நதி எங்கே வளையும்! //

அது எங்க வளஞ்சா உணகென்னயா ..... உனக்கு தேவ மிக்ஷிங்குக்கு பாக்கியட் தண்ணி .... அதுக்கு எதுக்கையா இப்புடி பெனாதுற .........




// கரை ரெண்டும் அறியும்! //


ஆமா ... ஆமா ... அந்த ரெண்டு கரையும் ... நானும் உங்க மொதலாளி கார்த்தியும் தான் ( ரகசிய கனவுகள் ) ........ எங்களுக்குத்தான் தெரியும் உன் கெப்பாசிட்டி .........



// மதி எங்கே அலையும்! //


நீ தண்ணி போடுறதுக்கு முன்னாடியா .... இல்ல ..... போட்டதுக்கு அப்புறமா .....



// ஆகாயம் அறியும்! //

அடங்கு ... அடங்கு ... அது எங்களுக்கே தெரியும் .....


// விதை எங்கே விளையும்! //


உம்பட விதி நம்ம டாஸ்மார்க்ல தான் வெலையும் ..........



// அது யாருக்கு தெரியும்! //


யோவ் வெண்ண .. எத்தனதடவையா சொல்றது ... எங்குளுக்கு தெரியுமுன்னு ....





// அதை அறிந்து சொல்லவும் வழியில்லை //


ஏன் இல்ல .. உங்க ஊட்டுல இருந்து நேர் வழி டாஸ்மார்க்குதான் போகுது .....


// அதை அறிந்தால் அதன் பெயர் விதியில்லை! //


ஆமா .. ஆமா .. அது பேரு விதி இல்ல ... ஓல்டு மங்கு ......



// விரும்பி யாரும் பிறப்பதுமில்லை //


ஆமா .... ஆமா .... பொரந்துட்டாலும் ....... சொல்லிக்க முடியல .......


// விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை //


எதுக்கு .. நாலு ஊட்டுல சோறு வாகரதுக்குகா ... போதும் .. போதும்.... இதுவே உனக்கு கம்பெர்டபெலா இருக்குது ......




// உழைக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி ///


அத உழைக்கரவங்க என்னனும்யா ... உனக்கெதுகுயா இந்த வேண்டாத வேல .....



// சலிக்கும் மனதில் சந்தோஷம் இல்லை //


நீ தண்ணிய போட்டுட்டு கொஞ்ச நேரம் வித்த காட்டுனைனாவே சலிக்கிற மனசுல சந்தோசம் வரும் .................



// எட்டு நாள் வாழும் பட்டாம் பூச்சி //


உக்காந்து எண்ணிகிட்டு இருந்தியாக்கும் .........



// இறப்பை பற்றி நினைப்பதுமில்லை //


நீயும் அது மாதிரிதான ......


// அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்ந்ததில்லை! //


சரக்கு அடுச்சு முடுச்சுட்டு என்னமா வாழ்ற நீ .. அது போதாதா உனக்கு .......




// நேற்று இரவு கேட்ட பாடல்! //


இந்த பாட்டுதான ....


ஏ.. தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நா ........


ஏ.. தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நா ........




// பிடித்திருந்தது ..... //


எது இந்த பட்டா ........




// அதற்காக விதியை நம்புபவன் என்று நினைக்காதீர்கள் //


நீயே நெனச்சுக்க வேண்டியதுதான் ........




// பிடித்தது....



கடைசி இரண்டு வரிக்காக! //



பாட்டுலதான ..... ஆமா ... ஆமா .........





அதெல்லாம் இருகுட்டும் கண்ணு ........

இந்த கவுஜைய எங்க சுட்ட .......

cheena (சீனா) said...

அருண், அருமையான தத்துவப் பாடல் - நல்ல்லாவே இருக்கு

ers said...

உழைக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷம் இல்லை....

இந்த பாட்டு எந்த படத்தில வருது...

வால்பையன் said...

நன்றி ஜமால்!

நன்றி இராகவன் நைஜீரியா

நன்றி தேனியார்

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி முத்துலட்சுமி கயல்விழி

நன்றி அப்துல்லா அண்ணே

நன்றி ராப்
இன்னும் எழுதலையா

நன்றி அ.மு.செய்யது

நன்றி ஜோதிபாரதி
சீக்கிரம் எழுதுகிறேன்.

நன்றி ச்சின்னபையன்

நன்றி புதியவன்

நன்றி கிரி
ஒண்ணும் சொல்லாம இருக்கிறதுக்கு

நன்றி வீணாப்போனவன்
வீடியோவுக்கு நன்றி

நன்றி பரிசல்
அதே தான், ஆனால் வழக்கம் போலவே

நன்றி கோபி

நன்றி ரவீ
பாட்டோட இரண்டு வரிகள்

நன்றி உண்மைத்தமிழன்
படம் உயிரோடு உயிராக
பாட்டு படத்தில் இல்லை

நன்றி சுப்பு

நன்றி ராதாகிருஷ்னன்

நன்றி தமிழ்நெஞ்சம்
கூடுதல் நன்றி முழுப்பாடலுக்காக

மிக்க நன்றி மாதேஷ்
என் ஆணவம் ஒழிந்தது
கர்வம் கரைந்தது

நன்றி சீனா ஐயா

நன்றி தமிழ்சினிமா
படம் உயிரோடு உயிராக
பாட்டு படத்தில் இல்லை


அடுத்த பதிவிற்கு விரல்கள் அழைப்பதால் அங்கே சந்திப்போம்!

gayathri said...

நட்புடன் ஜமால் said...
கிடைத்த பாத்திரத்தை விரும்பிவிட்டால் வாழ்க்கை சுவையாக இருக்கும்.

rrrrrrrrreeeeeeeeeeeetppppppeeeetttuu

gayathri said...

அடுத்த பதிவிற்கு விரல்கள் அழைப்பதால் அங்கே சந்திப்போம்!
ok angaye santeppom

லிங்காபுரம் சிவா said...

//தேனியார் said...
அருமையா இருக்கே. எங்கே கேட்டீங்க?//

repetu....

லிங்காபுரம் சிவா said...

//ச்சின்னப் பையன் said...
//விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
//

அதனால்தான் நான் கைக்குக் கிடைத்த ஏதோவொரு பாத்திரத்தில் சமைத்து விடுவேன்...

ஹிஹி...//

சின்ன பயனுக்கு யப்பவுமே குரும்பு தான்

கலை அக்கா said...

//எட்டு நாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பை பற்றி நினைப்பதுமில்லை

அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்ந்ததில்லை//

வாழ்க்கையின் நிலையாமை யை மிக அற்புதமாக விளக்கும் வரிகள் . இதனை சுவைக்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி!

கலை அக்கா said...
This comment has been removed by the author.

!

Blog Widget by LinkWithin