சோதிடம் என்னும் புருடா....

சோதிடம் அறிவியல் தான் என வாதிடுபவர்களுக்காக பிரபஞ்ச அறிவியலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
இந்த பூமியில் உள்ள உயிர்கள், இந்த பூமி, சூரியமண்டலம், மொத்த பிரபஞ்சமும் ஒற்றை புள்ளியில் இருந்து ஆரம்பித்தது தான். உலோகத்தை உடைத்தால் அது தனிமமாகும். தனிமத்தை உடைந்தால் அது எல்க்ட்ரான், புரோட்டான், நியூரான்ல போய் நிற்கும், உதாரணத்துக்கு நாம் பயன்படுத்தும் சமையல் உப்பு சோடியமும், குளோரைடும் இணைந்த உலோகம்.
ஒரு முன்னோட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் மிண்ணுவை உடைத்து குவார்க் என்றார்கள். அதையும் உடைத்துப்பார்க்க தான் நியீட்ரினோ ஆராய்ச்சியெல்லாம். அது எதோ சக்லெட் கம்பெனிக்கு நினைச்சிக்காதிங்க, அந்த நியீட்ரனோ ஆராய்ச்சியில் அணுக்கள் வெற்றிடத்தை உருவாக்கி மீண்டும் ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டு மொத்த பிரசஞ்மும் அழிவது தான் சிங்குலாரடி தியரி
நான் சொல்லும் மிண்ணனு எவ்வளவு சிறியது என நீங்கள் கற்பனை செய்ய வேண்டுமென்றால். கரு முட்டையில் சேரும் ஒரு விந்தணுவில் சுமார் 40எம்பி டேடா உள்ளது. நார்மல் மனிதனுக்கு வெளிவரும் விந்தணுவில் 15,875 ஜிபி டேடா உள்ளது, அது என் லேப்டாப் போல் 50 லேப்டாபுக்கு சமம். 70 கிலோ எடை கொண்ட ஒரு மனிதனை எரித்தால் 10 கிலோ கூட சாம்பல் கிடைக்காது, ஏன்?
நம் உடலில் 70% நீர் மூலகூறுகள் உள்ளது என படிச்சிருப்பீர்கள், அவை ஆவியாகி இந்த பிரபஞ்சத்தில் கலந்து மீண்டும் அணுக்கள் இணைந்து வேறு ஒன்றுக்கு உணவாகும்
பிரபஞ்ச அறிவியலின் படி. ஒரு கிரகம் ஒரு உயிரின் எதிர்காலத்தையோ, கூட இருப்பவர்களின் எதிர்காலத்தையோ தீர்மானிக்காது, ஒரு மனிதனின் குணம், அறிவு, உடல்மொழி, ஆர்வம் ஆகியவை நம் பெற்றோரின் ஜீன் வழியே கடத்தப்படுவதும், நம் வாழும் சூழலுமே ஆகும்,
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு விதி உள்ளது. அதை சோதிடம் சொல்கிறது என்பது தான் சோதிடர்களின் வாதம். மங்கோலியர்கள் வாழ்ந்த பொழுது பூமியின் 10% மனிதர்களை கொன்றுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே ஜாதகமா? முதல் மற்றும் இரண்டாம் உலக போரில் இறந்தவர்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் பிறந்தார்களா? ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்கள், ராஜபக்‌ஷேவால் கொல்லப்பட்ட தமிழர்களின் ஜாதகம் நமக்கு சொல்வது என்ன?


டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் பூமியின் ஒரு நாள் என்பது 22 மணி நேரம் என ஆராய்ச்சி குறிப்புகள் சொல்லுது. இருப்பதலெ சோம்பேறி கிரகம் புதன், அதன் ஒரு நாள், அதன் ஒரு வருடத்தை விட நீளம், பூமியின் ஒரு நாள் 24 மணி நேரம், ஒரு வருடம் 365 நாள். அந்த கிரகத்தை புத்தி கிரகம் எங்கிறார்கள். பூமியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருடம். 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருசம் கிடையாது. சோதிடர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பலன்களை மாற்றி கொள்கிறார்களா?
நெப்டியூன் கிரகத்தை தவிர மற்ற கோள்கள் நேர்கோட்டில் வர வல்லவை அப்படி நடக்கும் பொழுது அது சோதிடர்களுக்கு தெரியுமா? அதனால் இவர்கள் சொல்லும் கதிர் மறைக்கப்படுமே. அப்பொழுது இவர்கள் சொன்ன பலனுக்கு அர்த்தம் எங்கே போகும். புதனை விட பெரிய துணை கிரகங்கள் வியாழனுக்கு உண்டு, அந்த கதிர்கள் யாருக்கு வேலை செய்துக்கொண்டு இருக்கிறது?
சோதிடம் ஒரு உளவியல். ஏனெனில் நீங்கள் திருப்தியாக வாழ்கிறார்களா என கேட்டால் ஆம் என்று சொல்வீர்கள் ஆனால் நமது உள்ளுணர்சி நம்மை அடுத்தப்படிக்கு தள்ளிகொண்டே இருக்கும், அதனால் அடுத்து என்ன நடக்கும் என அறிய ஆசைப்பட்ட மனிதன் அல்லது ஒரு குழுமம் தங்கள் வாழ்வியலை வைத்து உருவாக்கியதே இப்போதும் இவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் சோதிடம்
இந்த பூமியில் முட்டாள் என்று யாரும் இல்லை, ஆனால் பொதுபுத்தியில் படித்து நல்ல மார்க் வாங்கினால் தான் புத்திசாலி இல்லையென்றால் முட்டாள் என அர்த்தம். நான் ஒம்பது வரை தான் படித்தேன். நமக்கு எதில் ஆர்வம், நமது தேடல் என்ன என்பதை தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமை இங்கே பலருக்கு உண்டு. அதனால் பெற்றோர் திணிப்பில் ஆர்வம் இல்லாத துறைக்கு செல்கிறார்கள். தோல்வி அடைகிறார்கள். அதற்கு ஜாதகத்தை காரணம் காட்டுகிறார்கள்.
இந்த உலகம் எவ்வளவு பெரியது என ஏற்கனவே சொல்லியுள்ளேன், இங்கே நாகரிக மனிதன் கால்பதிக்காத இடங்கள் உண்டு, வெளி உலகம் அறியாத பழங்குடிகள் உண்டு, நாகரிக மனிதனை விட பழங்குடிகள் இயற்கையை நன்கு அறிவார்கள். எப்பொழுது மழை வரும், எப்பொழுது புயல் என்று. தரையில் காது வைத்து உயிரினங்கள் நிலநடுக்கத்தை முன்பே அறிவது போல் நம் முன்னோர்கள் இயற்கை சூழல் மாறுவதை கொண்டு மழை, புயலை கணித்தார்கள். வருடா வருடம் அதே பருவ சூழல் தொடர்வதால் அதை பஞ்சாங்கம் என கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். தெரியாம தனமா ஒன்னு ஹிட் ஆனா பார்த்தியானு படங்கள் பகிரப்படும், ஏம்பா மீதி நாளுக்கு ஒன்னுமே எழுதலையான்னு நீங்கள் கேட்காமல் இருக்கும் வரை ஜோதிடமும், சோதிடர்களும் வாழ்வார்கள்
சந்திரயான் என்பது சந்திரனுக்கு நாம் அணுப்பிய ராக்கெட், ஆனாலும் இன்றும் சந்திரபுத்தி இவர்களுக்கு ரொம்ப குஷ்டம் தான், மங்கள்யான் என்பது நாம் செவ்வாய்க்கு அனுப்பிய ராக்கெட். ஆனாலும் செவ்வாய் தோசம் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் நடக்காது என ஒதுக்கி வைக்கிறோம், வயோஜர்2 என்ற செயற்கைகோள் நம் சூரியமண்டலையே தாண்டி சென்று விட்டது. ஆனாலும் மனிதன் 12 கட்டத்திற்குள் தன் வாழ்க்கை தேடிக்கொண்டிருக்கிறான்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin