சாதி என்னும் சாக்கடை.....

என்னோட 40 வருட அனுபவத்தில் சாதியை ஒழிக்க அதிக சாத்தியகூறுகள் உள்ள வாய்ப்பா நான் பார்த்தது.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பில் இருந்து விடுபடனும், காதல் திருமணத்தை ஆதரித்தாலே சாதி கலப்பு ஏற்பட்டு சாதி கொஞ்சம் கொஞ்சமாக மறையும்

அப்படியும் சலுகை கிடைக்கும் சாதி அல்லது ஆதிக்க சாதியை தன் குழந்தைகளுக்கு அடையாள படுத்துவாங்க என்ற வாதம் நான் பார்த்த வரை சொற்பம் தான், அதை விதிவிலக்கு லிஸ்டில் தான் வைக்க முடியும்

சாதி மறுப்பு திருமணங்களுக்கு கேரள அரசு சலுகைகள் கொடுத்தது போல் இந்தியா முழுக்க கொடுக்கனும். கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு அரசு தனி ஒதுக்கீடு கொடுத்தால் 40 வயசுக்கு மேலயும் மொட்டபசங்களா திரியும் சாதி வெறியர்கள் இறங்கி வர வாய்ப்புருக்கும்னு நம்புறேன்



வெளிநாட்டில் சாதி இல்லையான்னு குடும்ப பெயர்களை தூக்கிட்டு வர்றது தான் அவங்க சாதிய பற்றும், வெறியும் தான் பூனைகுட்டி மாதிரி எட்டி பார்க்குமே தவிர, அது சாதியத்தை நியாயப்படுத்தாது

சமுத்துவபுரம் மாதிரி திமுக முன்னெடுத்த விசயங்களை இந்தியா முழுக்க அமுல் படுத்தலாம். பொதுவா ஆதிக்கசாதியினருக்கு இருக்கும் நிலைப்பாடு, ஒடுக்கப்பட்டவர்கள் அந்த சாதி அடையாளத்தால் சலுகை பெறுகிறார்கள் என்பதே.

இங்கே ஒடுக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தையை நம்மால் விலக்கமுடியவில்லை, இன்றும் ஒடுக்கப்படுவது தான் அவர்கள் சலுகையை மறுக்காமல் இருக்க காரணம், அவர்களும் சக மனிதர்களாக மதிக்கப்பட்டால் அவர்களே சலுகையை தவிர்ப்பார்கள் என்று தான் நினைக்கிறேன்

ஒரு குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட பழக்குவது போல், நீச்சல் அடிக்க கற்றுகொடுப்பது போல் அவர்கள் வாழ்க்கையை வாழ அவர்களுக்கு கல்வி கொடுத்தாலே போதும், கடைசி வரைக்கும் என் கண்களால் தான் நீ உலகத்தை பார்க்கனும் என்பது அடிமை சமூகம் தான்

அங்கே பெண்ணரிமையும் இருக்காது. சமத்துவமும் இருக்காது


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin