கேள்வி:
ஆன்மீகம் என்றாலே ஏன் உங்களுக்கு எட்டிகாய் மாதிரி கசக்குது?
பதில்:
ஆன்மீகம் என்றால் என்னன்னு நான் ஒரு கட்டுரையே எழுதியிருக்கேன், என்னோட ப்ளாக்கில் ஆன்மீகம்னு டைப் பண்ணி தேடினா கிடைக்கும், ஆன்மீகம், ஜோதிடம் ரெண்டுமே உளவியல் ரீதியான தற்காலிக ஆற்றுபடுத்தும் ஒரு விசயம்.
உதாரணத்துக்கு உங்களுக்கு ஆறு மாசத்துக்கு டைம் சரியில்லன்னு ஜோதிடம் சொன்னா, பல்லை கடிச்சிட்டு ஆறு மாசத்தை ஓட்டிருவோம்னு செயல்படுவிங்க, ஆனா ஆறு மாதம் கழித்தும் உங்க நிலை அப்படியே தான் இருக்கும், ஆனாலும் அந்த ஆறு மாசம் மன உளைச்சல் அதிகம் ஆகாம பார்த்துகுவது தான் இந்த உளவியல்
ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை கூட அப்படி தான். வாழ்க்கை என்பது நீர்வழி பயணம் மாதிரி, அதில் முயற்சி என்பது துடுப்பு, உங்கள் பயணத்தை என் போல் துடுப்பு போட்டு நான் போக வேண்டிய பாதையை நான் தீர்மானிக்கனுமா அல்லது அது போற போக்கில் போகட்டும்னு விட்றனுமா. கடவுள் நம்பிக்கை என்பது எல்லா பாரத்தையும் உன் தலையில் வச்சிட்டேன் நீ பார்த்துக்க கடவுளே என்பதாகும்
ஐந்து கிலோ எடை கொண்ட ஒரு பொருளை உங்கள் வலது கரத்தால் தூக்குறிங்க, அதே பொருளை உங்கள் இடது கரத்தால் தூக்குறிங்க, ஐந்து கிலோ இடது கரத்தால் தூக்கும் பொழுது அதிகமாகிருமா என்ன? ஆனால் ஏன் அதே பொருள் எடை அதிகமா தெரியுது. வலது கரத்தின் பழக்கம் உங்களுக்கு இலகுவா தெரிந்த ஒன்று அதிகம் பயன்படுத்தாத இடது கரத்தில் எடை அதிகமா தெரியுது
வலது கரம் என்ற பழக்கம் தான் உங்களுக்கு திணிக்கப்பட்ட நம்பிக்கை, இடதுகரம் தான் ரியாலிடி. ஆன்மீகமோ, கடவுள் நம்பிக்கையோ, ஜோதிடமோ உங்களுக்கு தற்கால ஆற்றுபடுத்துனராக இருக்கலாமே ஒழிய அது நிரந்தமில்லை, இல்லை நான் இப்படியே தான் இருப்பேன்னா நான் உங்கள் மேல் வழக்கெல்லாம் போட முடியாது. உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்னு நீங்க தான் தீர்மானிக்கனும்
நீ கடவுளை நம்புறியான்னு ஒருத்தன்கிட்ட கேட்டாங்களாம், அவன் ஆமாம்னு சொன்னானாம், நீ ஒற்றை கொம்புள்ள யூனிகார்ன் குதிரையை நம்புறியான்னு கேட்டாங்களாம், அவன் இல்லைன்னு சொன்னானான், ஏன்னு கேட்டதுக்கு அவன் நான் அந்த குதிரையை பார்த்ததில்லைன்னு சொன்னானாம்
இந்த கதையில் நீங்கள் யாருன்னு நீங்களே சிந்தியுங்கள்

0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment